You are on page 1of 5

கண்ணப் ப நாயனார் – வரலாறு

கண்ணப் ப நாயனார் கதை


நாகன் என் ற வேடர்கள் தலைேனுக்கும் வேட்லடயாடும் கலையிை் வதர்ச்சி
பெற் றேளான அேன் மலனவிக்கும் நீ ண்ட நாள் கழித்துெ் ஒரு மகன் பிறந் தான் .
குழந் லதெ் ெருேத்திவைவய மிகவும் ேலிலம ோய் ந்தேனாக இருந்ததாை் அேனுக்குத்
திண்ணன் என் று பெயரிட்டனர். வேடர்கள் தலைேனின் மகனை் ைோ? மிருகங் களின்
உடலிலிருந்த எடுக்கெ் ெட்ட ெற் கள் , தந்தங் கள் முதலியேற் றாை் பசய் யெ் ெட்ட
ஆெரணங் கலள அேன் மார்பிலும் இலடயிலும் அணிகைன் கைாகெ் பூண்டு
ேளர்ந்தேன் . காட்டுெ் ென் றிகளுடனும் காட்டுநாய் களுடனும் ொம் புகளுடனுவம
விலளயாடி ேளர்ந்தேன் .
திண்ணனுக்குெ் ெதினாறு ேயதானதும் ஒரு நை் ை நாள் ொர்த்து நாகன் அேனுக்கு
வேட்லடயாடும் கலைலயக் கற் றுத்தந் து ஏழு நாள் விழா எடுத்து ஊரார் அலனேரும்
கூடியிருக்கெ் பிரமாதமாக அேன் மகலன வேட்லடயாடுதலுக்கு அறிமுகெ் ெடுத்தி
எை் வைாருக்கும் சிறெ் ொக உணேளித்தான் … கசாெ் புச் சாெ் ொடு தான் , வேபறன் ன?
அன் றிலிருந்து திண்ணவன வேடர்கள் தலைேனானான் . சிை நாட்களிை் நாகனுக்கு
ேயதானதும் திண்ணன் பொறுெ் பெற் று மற் ற வேடர்கலள ேழிநடத்தவேண்டிய
கட்டம் ேந்தது.
அதிகாலையிை் சூரியன் எழும் முன் திண்ணன் அர்ச்சுனலனெ் வொை அம் பும்
விை் லுமாக ஒரு மாவீரன் வொை் வேட்லடயாடெ் புறெ் ெட்டான் . அேனுடன் ஏலனய
வேடர்களும் பசன் றனர். ஏராளமான மிருகங் கலளக் பகான் று வீழ் த்தினர். அெ் வொது
ஒரு காட்டுெ் ென் றி வேட்லடக்குத் வதாண்டியிருந்த குழிகளிலிருந் தும் வேடர்கள்
விரித்து லேத்திருந்த ேலைகளினின் றும் தெ் பிவயாடியது. மூன் று வெராை் மட்டுவம
அந்தெ் ென் றியின் வேகத்துக்கு ஈடுபகாடுத்து அலதத் துரத்த முடிந்தது – திண்ணன் ,
நாணன் , காடன் . ஆயினும் அது அேர்கள் எெ் வொதும் வேட்லடயாடும் காட்லட விட்டு
பேகுதூரம் ஓடிச்பசன் று திருக்காளஹஸ்தி மலையடிோரத்திை் ஒரு மரத்தடியிை்
நின் றது. அந் தக் காட்டுெ் பிரவதசத்திற் வக தலைேனான திண்ணன் வீராவேசத்வதாடு
முன் பசன் று அலதக் பகான் று வீழ் த்தினான் .
அெ் வொது தான் மற் ற வேடர்கலள விட்டு பேகுதூரம் ேந்துவிட்டலத மூேரும்
உணர்ந்தனர். திண்ணன் அந்தெ் ென் றிலயக் காடனிடம் பகாடுத்து மூேரும்
ெசியாறுேதற் காகச் சலமக்கச் பசான் னான் . காட்டுக்கும் மலைக்கும் அந்தெ் ெக்கம்
பொன் முகலி என் ற நதி இருெ் ெதாக நாணன் கூறவே, அேனும் திண்ணனும் தண்ணீர ்
எடுத்துேருேதற் காக அங் வக பசன் றனர். அே் ோறு காட்லடக் கடந் து பசை் லும் வொது
திண்ணன் காளஹஸ்தி மலைலயக் கண்டு ெரேசெ் ெட்டு அதனருவக பசன் றான் .
மலையுச்சியிை் குடுமித்வதேர் (சிேன் ) ஆையம் இருெ் ெதாகவும் அேலரத்
தரிசிக்கைாபமன் றும் நாணன் கூற, அதுவே சிேனின் ொற் பசை் ை திண்ணன் எடுத்த
முதை் அடியாகும் . முற் பிறவிகளிை் பசய் த நற் பசயை் களின் ெைன் , திண்ணலன
சிேபெருமானின் ொை் ஈர்க்க உதவின. அேரிடம் அேன் பகாண்ட ஈடிைா அன் ொனது
பெருபேள் ளமாகெ் பொங் கி ேளரத் பதாடங் கியது. அேனுலடய தூய அன் பும் உடன்
ேந்த நாணனும் அேலன மலைவமை் அலழத்துச் பசன் றன. உள் ளம் கேர்
கள் ேனாகிய சிேபெருமாலன அேன் காண்ெதற் கு முன் அந்தக் கள் ேவன
திண்ணனுலடய பிறெ் பின் ஆதாரமும் அேனுலடய பிறெ் புக்கும்
ோழ் க்லகக்குமிலடவயயான உறோகிய வேட்லடபயனும் கலைலயக்
களோடிவிட்டார்.
திண்ணன் அங் வக ஒர் சிேலிங் கத்லதக் கண்டான் . அந்தக் கண்பகாள் ளாக்
காட்சிலயக் கண்களினாை் ெருக, அக்காட்சியின் அருலம அேன் பநஞ் சிை் நிரம் பி
ேழிந்தது. அேன் நிலனவு தன் ேசமிை் ைாமை் வொயிற் று. அந்த அன் புெ் ெரேசத்திை்
அேலன ஆழ் த்திய சிேனிடம் ஓடிச்பசன் று கட்டிெ் பிடித்து முத்தமிட்டான் . அேன்
உடம் பின் ஒே் போரு அணுவிலும் அளவிைாெ் வெரானந்தம் பொங் கித் திலளத்தது.
அவத சமயம் அேன் கண்களிலிருந் து அருவி வொை் கண்ணீர ் ேழிந்தது.
“எம் பெருமாவன! இந்த அடர்ந்த காட்டிை் பகாடிய மிருகங் களுக்கிலடவய உன் லனக்
காக்க ஆளிை் ைாமை் இெ் ெடித் தனிலமயிை் இருக்கிறாவய? இது முலறயன் று! இது
முலறயன் று!” என் று கதறினான் . அேனுலடய விை் கீவழ விழுந்தது கூடத்
பதரியாமை் , நாணனிடம் , “யார் இெ் ெடி எம் பெருமானுக்குெ் ெச்சிலையும்
பூக்களுமாக உணேளித்திருெ் ொர்கள் ?” என் று வினவினான் . அதற் கு நாணன் , “ஒரு
முலற நான் இங் வக வேட்லடயாட ேந்தவொது ஓர் அந்தணர் அபிவேகம் பசய் து
பூச்பசாரிந்தலதக் கண்வடன் . அேர் தான் இன் றும் பசய் திருக்கவேண்டும் ” என் றான் .
திண்ணனுக்குெ் பொறுக்கவிை் லை. “எம் பெருமான் இெ் ெடித் தனிவய இருெ் ெதா?
அேருக்கு மாமிச உணவு, இலறச்சி உணேளிக்க ஆளிை் லை! அேலர எெ் ெடித்
தனிவய விட்டு ேருவேன் ? என் பசய் வேன் ? அேருக்குெ் ெசியாற நை் இலறச்சி
பகாண்டுேரவேண்டும் நான் !” என் று கூறினான் .
திண்ணன் சிேனுக்கு இலறச்சி பகாணர முற் ெடுோன் , ஆனாை் அேர்
தனிலமயிலிருெ் ெது நிலனவுக்கு ேரவும் ஓவடாடி ேந்து அேருக்குத் துலணயிருக்க
எண்ணுோன் . மீண்டும் இலறச்சி பகாணர முற் ெடுோன் , மீண்டும் ஓவடாடி ேந்து
துலணயிருெ் ொன் . இெ் ெடிவய ஒரு ெசு தன் இளம் கன் லற விட்டு அகைாதது வொை்
சிேனுக்கு முன் நின் று அேரிடமிருந் து தன் கண்கலளெ் ெறித்பதடுக்க இயைாமை்
தடுமாறினான் . ஒரு கணம் , “எம் பெருமாவன! உனக்கு மிகச்சிறந்த இலறச்சி
பகாண்டுேரெ் வொகிவறன் !” என் று உறுதிபமாழி கூறுோன் . மறுகணம் , “உன் லனத்
தனிலமயிை் விட்டு எங் ஙனம் பசை் வேன் ?” என் ொன் . பின் , “ஆனாை் நீ மிகுந்த
ெசியுடனிருெ் ெலத என் னாை் சகித்துக்பகாள் ள முடியவிை் லைவய… என் பசய் வேன் !”
என் று புைம் புோன் . கலடசியிை் தன் லனத் தாவன வதற் றிக் பகாண்டு, அலனத்தும்
உலடய சிேபெருமானுக்கு வேண்டியலதக் பகாண்டு ேந்வத தீரவேண்டுபமன் ற ஒரு
முடிவோடு பசன் றான் .
இே் வுைகிலுள் ள எை் ைாேற் றின் மீதும் உள் ள ஆலசகளலனத்தும் எரிந்துவொய்
சிேனின் மீதுள் ள ஆலச மட்டுவம அேனிடமிருக்க, திண்ணனும் நாணனும்
பொன் முகலி நதிக்கலரயிலிருந்த ஓர் அழகிய வசாலைலய ேந்தலடந்தனர்.
அெ் வொது காடன் ேந்து காட்டுெ் ென் றிலயச் சலமத்து முடித்த பசய் திலயச் பசாை் லி
மூேரும் உணேருந்தைாபமன் று அலழத்தான் . நாணன் அேனிடம் , திண்ணன்
சிேலனத் தரிசித்தபின் தான் வேடர்களின் தலைேன் என் ற உண்லமலய மறந்து
(பமய் மறந்து) அந் த எண்ணத்லதத் துறந் து, தன் லன இெ் வொது சிேனின்
அடிலமயாகவே கருதுகிறாபனன் று பசான் னான் . அலதக் வகட்டதும் காடன்
அதிர்ச்சியலடந்தான் .
திண்ணவனா எலதெ் ெற் றியும் கேலைவய இை் ைாமை் ென் றிக்கறியின்
மிகச்சுலேயாக இருக்கக்கூடிய ொகங் கலள ஒரு அம் பினாை் குத்திபயடுத்துத் தன்
ோயிலிட்டுச் சுலேத்துெ் பின் அலத ோயினின் றும் பேளியிபைடுத்துத் தான்
சுலேத்தேற் றுள் மிகச்சிறந்தலேலயத் தனிவய வசகரித்தான் . மற் ற இருேரும் ,
“இேனுக்குெ் லெத்தியம் பிடித்துவிட்டது! இலறச்சிலயச் சுலேத்தபின்
அலதபயடுத்துச் வசகரிக்கிறாவன! அேனுக்குக் நிச்சயமாகக் கடும் ெசியிருக்கும் ,
ஆனாலும் ஒரு ோர்த்லத கூடெ் வெசாமை் இருக்கிறாவன! நமக்கும் உணேளிக்க
மாட்வடபனன் கிறான் ! அேனுலடய தந் லத நாகலனயும் மற் றேர்கலளயும் அலழத்து
ேந்து என் ன பசய் ேபதன் று ொர்ெ்வொம் ” என் று அந்த இடத்லத விட்டுச் பசன் றனர்.
எந்தச் சைனமுமிை் ைாமை் , திண்ணன் இலறச்சிலயக் லகயிை் எடுத்துக்பகாண்டு,
அபிவேகம் பசய் யச் சிறிது தண்ணீலரத் தன் ோயிை் நிரெ் பிக்பகாண்டு, சிேனுக்குச்
சமர்ெ்பிக்க அழகிய மைர்கள் சிைேற் லறக் பகாய் து தன் தலையிை்
சூடிபயடுத்துக்பகாண்டு, சிேனுக்குெ் ெசிக்குவம என் பறண்ணி மலையுச்சிக்கு
விலரந் து பசன் றான் . சுயம் புோகத் வதான் றிய அந்தச் சிேலிங் கத்தின்
தலையிலிருந்த பூக்கலளத் தன் காை் களாை் கலளந்து வீசித் தன் ோயிலிருந்த
தண்ணீராை் அபிவேகம் பசய் து, தன் தலையிை் சூடி ேந்த மைர்களாை் அைங் கரித்துெ்
ெணிந்தபின் தான் சுலேத்து எடுத்து ேந்த இலறச்சிலய உணோக அளித்தான் .
அெ் ெடியும் அேனுக்குச் சமாதானமாகவிை் லை. சிேனுக்கு வமலும் உணேளிக்க
வேண்டுபமன் பறண்ணினான் .
சூரியன் அஸ்தமனமாகிெ் பொழுது சாய் ந்தது. அச்சபமன் றாை் என் னபேன் வற
அறிந்திராத வேடர்கள் தலைேன் திண்ணன் , ேனவிைங் குகள் இரவிை் ேந்து
சிேலனத் துன் புறுத்துவமா என் று அஞ் சினான் . அதனாை் அருகிவைவய தன் விை் லும்
அம் பும் உடனாகக் காேலிருந்தான் . மறுநாள் பொழுது புைரும் சமயம் சிேலன
விழுந்து ேணங் கிவிட்டு அேருக்கு மீண்டும் உணேளிெ் ெதற் காக வேட்லடயாடக்
கிளம் பினான் .
அேன் பசன் றவுடன் சிேவகாச்சாரியார் என் ற முனிேர் ேந்தார். சிேலிங் கத்துக்கு
முன் சிதறிக் கிடந்த இலறச்சிலயயும் எலும் புத் துண்டுகலளயும் கண்டு
அதிர்ச்சியலடந்தார். “இது அந் தெ் பொை் ைாத வேடர்களின்
வேலையகத்தானிருக்கும் ” என் பறண்ணிச் சன் னதிலய மிகவும் சிரத்லதயாகச்
சுத்தம் பசய் தபின் பொன் முகலியாற் றுக்குச் பசன் று நீ ராடிவிட்டு விலரந்து ேந் தார்.
பின் னர் சிேனுக்கு அபிவேகம் , அர்ச்சலன, தீொராதலன பசய் து அேருலடய
திருநாமங் கலள பமாழிந்து அந்த ஒெ் பிைாெ் ெரம் பொருலளெ் ெை முலற விழுந் து
ேணங் கிவிட்டு வீடு திரும் பினார்.
நம் அன் பு வேடன் திண்ணன் மான் கலளயும் காட்டுெ் ென் றிகலளயும் மற் ற
மிருகங் கலளயும் வேட்லடயாடி அேற் றின் இலறச்சிலய தீயிை் வேகலேத்தான் .
சிேனுக்கு மிகுந்த சுலேயுள் ள உணலேவய அளிக்கவேண்டுபமன் ெதாை் இலறச்சித்
துண்டங் கலளச் சுலேத்து அேற் றுள் மிகச்சுலேயானேற் லறவய வதர்ந்பதடுத்தான் .
அேற் லற வமலும் சுலேயுள் ளலேயாக்க அேற் றின் வமை் வதன் ோர்த்துக்
பகாடுத்தான் திண்ணன் .
தினமும் பூலசக்கு வேண்டிய பொருட்கலள எடுத்துக்பகாண்டு பிறெ் பிறெ் பிைாெ்
பெருமாலன மிகுந்த அன் புடன் ேழிெடச் பசை் ோன் . முனிேர் இட்டிருந்த மைர்கலள
அேன் காைாை் அெ் புறெ் ெடுத்தி மான் கறி, காட்டுெ் ென் றிக்கறி அளிெ் ொன் . இரவு
உறக்கத்லத மறந் து சிேலனக் காேை் காெ் ெலதவய கருத்தாகக் பகாள் ோன் .
மீண்டும் ெகலிை் சிேனுக்கு இலர வதடுேதற் காக வேட்லடயாடச் பசை் ோன் . ெகலிை்
ேழிெட ேரும் சிேவகாச்சாரியாவரா சன் னதியிை் தகாத பொருட்கள் இருெ் ெலதக்
கண்டு வேதலனெ் ெட்டு அேற் லற அெ் புறெ் ெடுத்திச் சுத்தம் பசய் து முலறெ் ெடி
ேழிெடுோர்.
இெ் ெடியாக நம் நாயனார் (திண்ணனார்) இலறேருக்கு இலறேனான
சிேபெருமாலனத் தனக்குத் பதரிந்த முலறயிை் ேழிெட்டுக் பகாண்டிருக்க,
சிேவகாச்சாரியார் இந் தெ் பிரச்சலனக்குத் தீர்வு காணவேண்டித் தவித்தார்.
இெ் ெடிபயாரு தகாத பசயலைச் பசய் ெேலன நீ தான் அலடயாளம் காட்டி அேலன
அகற் ற வேண்டுபமன் று சிேனிடம் முலறயிட்டார். நாயனாரின் பமய் யான அன் லெ
விளக்க, சிேவகாச்சாரியாரின் கனவிை் சிேன் வதான் றி, “அேலன ஒரு
குற் றோளிலயெ் வொை் எண்ணாவத! என் னுலடய அன் வெ அேலன முழுக்க
ஆக்கிரமித்துக் பகாண்டிருக்கிறது.
அேன் என் லனெ் ெற் றி மட்டுவம நிலனக்கிறான் . அேன் பசயை் கள் எனக்கு
ஆனந்தமளிக்கின் றன. அேன் ோயிலிருந் து என் வமை் அேன் துெ் பும் தண்ணீர ்
கங் லகலயவிடெ் புனிதமானது, அேன் தலையிை் சூடிக்பகாண்டுேந்து எனக்கு
அளிக்கும் மைர்கள் வதேர்களுக்கு அர்ெ்ெணிக்கெ் ெடும் மைர்கலள விடெ்
புனிதமானலே. இலேபயை் ைாம் அேனுலடய அன் பின் அலடயாளம் . நாலள அேன்
ேரும் வொது மலறந்திருந்து ொர்த்தாயானாை் அேனுலடய ெக்தியின் மகிலம
உனக்குத் பதரியும் !” அச்சமும் பிரமிெ் பும் கைந்த எண்ணங் கவளாடு
சிேவகாச்சாரியார் அன் றிரவு முழுேதும் உறங் க இயைாமை் , சூரியன் உதித்தவுடன்
பொன் முகலியாற் றுக்குச் பசன் று நீ ராடிவிட்டு காளஹஸ்தி ஈசுேரனின் சன் னதிலய
அலடந்து மலறோக இருந்து கேனித்தார்.
அன் று ஏழாேது நாள் … திண்ணனார் என் றும் வொை் அளவிைா அன் புடன் பூலசெ்
பொருட்கலளக் பகாண்டுேந்தார். பூலசக்குத் தாமதமாயிற் வற என் பறண்ணிய
திண்ணனாருக்குெ் வொகிற ேழிபயை் ைாம் அெசகுனங் கள் ெை வதான் றின.
சிேனுக்கு ஏவதனும் ஆயிற் வறா என் றஞ் சி விலரந்வதாடினார்.
சிேவகாச்சாரியாருக்குத் திண்ணனாரின் அன் லெக் காட்டுேதற் காக சிேன் தன்
முக்கண்ணிை் ஒன் றிலிருந்து இரத்தம் கசியச் பசய் தார். அலதக் கண்ட திண்ணனார்
அம் பும் விை் லும் இலறச்சியும் ஆங் காங் வக சிதற அஞ் சி அதிர்ச்சியலடந்து மிகவும்
வேதலனெ் ெட்டார். சிேனருவக ஓடிச்பசன் று குருதிலய நிறுத்த முயன் றார், ஆனாை்
அது நிற் கும் ெடியாக இை் லை.
இச்பசயலைச் பசய் த குற் றோளி யாராக இருக்குபமன் று உக்கிரமான வகாெத்துடன்
எை் ைாெ் ெக்கமும் வதடினார். மக்கலளவயா மிருகங் கலளவயா யாலரயும் அருவக
காணவிை் லை. மனமுலடந்து சன் னதிக்குத் திரும் பியேர், தன் காை் கலளக்
கட்டிக்பகாண்டு அழுதார். பிறவிெ் பிணி முதைாய எை் ைாெ் பிணிகலளயும் தீர்க்கும்
மருந்தான சிேபெருமானின் பிணிதீர்க்க மருந்து வதடிக் காற் லறெ் வொை்
மிகவிலரோகச் பசன் று காட்டிலிருந்த மூலிலககளிலிருந்து மருந் பதடுத்துக்
பகாண்டுேந்தார். அெ் ெடியும் ஒரு பிரவயாசனமுமிை் லை!
சிேன் கண்ணினின் றும் ேழியும் குருதிலய நிறுத்தமுடியாத தன் இயைாலமலய
எண்ணி ோடி ேருந்திய திண்ணனாருக்குத் திடீபரன் று ஒரு வயாசலன உதிக்க,
அம் பினாை் தன் கண்லணத் வதாண்டிபயடுத்து சிேனின் கண் இருக்குமிடத்திை்
லேத்தார். உடவன இரத்தம் ேழிேது நிற் கவும் , அவர் பபரானந் ைமதைந் து வான்
வதர குதிை்துை் ைான் செய் ை வீரெ்செயதலசயண்ணி மகிழ் ந் ைார்.
ஆனாை் சிேபெருமாவனா அேருலடய ெக்தி இலதக்காட்டிலும் எை் லையற் றது
என் ெலத நிரூபிக்க முடிபேடுத்தார். அேர் ேைது கண்ணிை் குருதி நின் றதும் இடது
கண்ணினின் று குருதி ேழியத் பதாடங் கியது. ஒரு கணம் அதிர்ச்சியலடந்த
நாயனார், “ஓ… இெ் வொது தான் இெ் பிணிக்கு மருந்து என் னபேன் று எனக்குத்
பதரியுவம… என் னிடம் இன் பனாரு கண் உள் ளதை் ைோ? அதுவே இலதத் தீர்த்து
லேக்கும் !” என் று பதளிந்தார். முன் பு வொைவே அம் பினாை் கண்லணத் வதாண்டெ்
வொனேர் அலதயும் எடுத்துவிட்டாை் கண்ணிை் ைாமை் (ொர்லேயிழந்த பின் ) எெ் ெடிச்
சிேலிங் கத்தின் கண் எங் வகயிருக்கிறது என் று வதடி லேெ் ெது என் று குழம் பி
அதற் கும் ஒரு ேழி கண்டுபிடித்தார். அேர் காலைத் தூக்கிச் சிேலிங் கத்தின் கண்
இருக்குமிடத்லதக் குறித்துக் பகாள் ேதற் காகத் தன் காை் கட்லட விரலை லேத்துக்
பகாண்டார். பின் அேர் அம் லெ எடுத்துத் தன் இன் பனாரு கண்லணத்
வதாண்டிபயடுக்க எத்தனித்தார்.
இலத விேரிக்க ோர்த்லதகவளயிை் லை. (திண்ணனார்) கண்ணெ் ெ நாயனாரும்
ெக்தியும் பேே் வேறிை் லை, இரண்டும் ஒன் வற என் று பசான் னாலும் வொதாது. இலதக்
கண்ட சிேபெருமானுக்வக பொறுக்கமுடியாமை் கண்ணெ் ெருக்குக்
காட்சியளித்தவதாடு மட்டுமை் ைாமை் “ஓ… நிை் கண்ணெ் ொ! நிை் கண்ணெ் ொ!”
என் று அேர் லககலளெ் பிடித்து நிறுத்தி மற் பறாரு கண்லணெ் ெறித்து எடுக்க
விடாமை் தடுத்தார். மலறந்திருந்து ொர்த்துக்பகாண்டிருந்த சிேவகாச்சாரியார்
கண்ணெ் ெரின் அளவிைாெ் வெரன் லெயும் அதற் கு அேருக்குக் கிட்டிய அருலளயும்
கண்டார். அெ் வெர்ெ்ெட்ட சுயநைமிற் ற அன் வெ சிேபெருமான் மிருகங் களின்
இலறச்சிலயயும் இனிய கனியாக ஏற் றுக்பகாண்டதற் குக் காரணம் .

You might also like