You are on page 1of 3

1

ரீங்காரம்
காதல்

இதோ
பறக்கின்றது பட்டாம்பூச்சி
வண்ண வண்ண சிறகுகள்
வையமெல்லாம் பறந்து வந்தாயோ?
வானளவு அளந்து வந்தாயோ?
வா இங்கே!
கேட்க வேண்டும் உன்னிடம்
தீரத
் ்துவிட்டு போ என் ஐயங்களை!

முத்த மழை பொழிந்தாளே


முப்பொழுதும் காத்தாளே
என்னழுகைக் கேட்டாலே
முகம் வாடி யுகமே சாடி
இழுத்தணைத்தாளே
அம்மா
அதுதான் முதல் காதல்
பின் எங்கிருந்து வந்தது
முதல் காதல் முத்தம்?

மிளிர்ந்திடும் பார்வையோடு
மிடுக்கெனும் மீசையோடு
கண்டிப்பும் கடமையும் ஒருசேர
கல் சிலையோ என் தந்தையென
உறுமும் குரலுக்கு அடிப்பணிந்தாலும்
உனக்கேதும் பாதகமெனில்
உருகிப்போய் உருகுலையும்
தந்தையன்றோ
மெய்காதல்
பின் எங்கிருந்து வந்தது
இந்த பொய்மான் காதல்?

ஆசை கொஞ்சம் நேசம் கொஞ்சம்


அலட்டிக் கொள்ளும் அத்தையாகட்டும்
உரிமைக் கொஞ்சம் கர்வம் கொஞ்சம்
ஊரிப்போன பெரியப்பாவாகட்டும்
பாசம் சிலநேரம் பாசாங்கு பலநேரம்
சொந்தமும் பந்தமும்
பந்தி வைத்து முந்தி பேசும்
உற்றமும் சுற்றமும்
கற்றுக் கொடுத்த காட்டிக் கொடுத்த
காதலன்றோ
உரிமைக் காதல்
பின் எங்கிருந்து வந்தது
இந்த அனுபவக் காதல்?
ஏய்…நில்லடி நீல வண்ண பட்டாம்பூச்சி!
நின்று கொஞ்சம் நிதானமாய் கேட்டு விட்டு போ!
என் காதல் சஞ்சலத்திற்கு சலனம் தீர்த்து போ!

மார்தட்டி சொல்லவும் மாசற்று போற்றவும்


இந்தியன் என தேரேற்றி புகழுரைக்கவும்
இம்மண்ணில் சஞ்சிக் கூலியென தஞ்சம் வந்திருந்தாலும் சரி
2

சமஸ்த்தானத்து சானக்யனாக சரம்புகுந்திருந்தாலும் சரி


சியாம் மரண ரயில் பாதையின் பலிகூடானாலும் சரி
ஒரு நாள் பிரதமர் துன் சம்பந்தன் பெருமையிலே
இனம் மொழி கலையெனும் ஆணிவேரிலே
நீரூற்றி ஒளிதரும் சமுதாயக் காதலன்றோ
சுயநலமற்ற நீடித்த காதல்
பின் எங்கிருந்து வந்தது
காமம் தேடும் காதல்?

Negaraku Tanah Tumpahnya Darahku


முதல் ரத்தம் சிந்திய தாய் தேசமே
பற்றுடன் பாசமும் வேகமும் வீரமும்
உயிர்த்தெழும் சத்திய பாதையில்
மூவினமோ முன்னூறு வேற்றுமையோ
ஒற்றுமையே பலம் எனும் தாரக மந்திரம்
போதுமே
ஒற்றுமையே பலம் எனும் தாரக மந்திரம்
போதுமே
தேசத்தின் மேல் கொண்ட பெருங்காதலுக்கு
ஈடுண்டோ
இதுவன்றோ வீரயுகக் காதல்
பின் எங்கிருந்து வந்தது
கள்வனின் காதல்?

என் வினாக்களை முடித்து விட்டேன்


என பறக்கத்
துடிக்காதே வண்ணத்து
மங்கையே

அந்தோ பாவம் என
தூரத்து தேசத்து மனிதனுக்கும்
கண்ணீர் கசிந்துருகும்
உள்ளம் நெகிழ்ந்து துடிக்கும்
உணர்வு நொறுங்க சிதறிப்போகும்
மானுட அன்பில் கலந்துள்ளதே
காதல்
நோயால் வாடும் முதியவரோ
பசியால் மெலியும் சிறுமியோ
பேரிடரால் துன்புறும் மக்களோ
எட்டா தூரத்தில் இருந்தாலும்
ஈட்டி நுழைந்தாற்போல்
துயரம் கொள்ளும்
மனிதநேயத்தில் அன்றோ
மனித காதல் மோட்சமுற்று கிடக்கின்றது!
பின் எங்கிருந்து வந்தது
இந்த மோகக் காதல்?

நான் என்னடி செய்தேன் கண்ணம்மா?


என்னை பிடித்து வைத்து இத்தனை
கேள்வி என்கிறாயா?

ம்ம்ம்….
காதல் வந்தால்தான்
3

பட்டாம்பூச்சி கூட்டம்
அடிவயிற்றில் பறக்கின்றதாமே?
உனக்கும் உன் கூட்டத்திற்கும்
காதலோடு என்னடி ஊடல்?

காதல் பிசாசு
காதல் ராட்சசி
காதல் மிருகம்
காதல் அவஸ்ததை ் யென
கொட்டித்தரீ ்க்கும்
காதல் கொடூரத்திற்கு
காதல் கோரத்திற்கும்
காதல் தாய்மை
காதல் தாயுமானவை
காதல் சொந்தம்
காதல் சமூகம்
காதல் தேசம்
காதல் மனிதநேயம்
அனைத்தும் நிரம்பிய
தீரா காதல் உண்டென
காவியம் பாடி காதலை வளர்த்திடு
அன்புத் தோழியே
பறக்கும் வண்ணத்து பூச்சியே - என்
அருமை காதலியே !

You might also like