You are on page 1of 6

படம் : சூரியகாந்தி

இசை : எம்.எஸ். விஸ்வநாதன்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே

கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது – முரண் அணி

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்

நிழலும் கூட சிரிக்கும்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்

நிழலும் கூட சிரிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று

மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே

கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்

அந்த இரண்டில் ஒன்று சிரியதென்றால் எந்த வண்டி ஓடும்


உனைப்போல அளவோடு உறவாட வேண்டும்

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது

அது சிருமை என்பது

அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே

கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போலே தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போலே தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது

இல்லாதான் இல் வாழ்வில் நிம்மதி ஏது

இது கனவன் சொன்னது – சொல்லாடல்

இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே

கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது

படம்: பாவ மன்னிப்பு


உணர்வு: வியப்பு
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை - உருவகம்

காலங்களில் அவள் வசந்தம்


கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

காலங்களில் அவள் வசந்தம்

பறவைகளில் அவள் மணிபுறா

பாடல்களில் அவள் தாலாட்டு ஓ....

பறவைகளில் அவள் மணிபுறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல் – கற்பனை

காலங்களில் அவள் வசந்தம்


கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

காலங்களில் அவள் வசந்தம்

பால் போல் சிரிப்பது பிள்ளை

அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

பால் போல் சிரிப்பது பிள்ளை

அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

கண் போல் வளர்ப்பதில் அன்னை

கண் போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை – உவமை


காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

காலங்களில் அவள் வசந்தம்

படம்: மாலையிட்ட மங்கை - வருடம் 1958


பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
பாடி நடித்தவர்: T.R மகாலிங்கம் (நாயகி–மைனாவதி)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
இயக்கம்: G.R.நாதன்

செந்தமிழ் தேன் மொழியாள் -

"செந்தமிழ் தேன் மொழியாள் - நிலாவெனச்சிரிக்கும் மலர்க்


கொடியாள்" என்ற பாடலை உங்களுக்காக இன்று
பதிவிட்டுள்ளேன். படித்து மகிழுங்கள்!
--------------------------------------------
"விருத்தம்:
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்திவழி போனாளே
நின்றதுபோல் நின்றாள்; நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி; நிலைக்குமோ நெஞ்சம்?
மணம் பெறுமோ வாழ்வே......... – சொல்லாடல்

பாட்டு
செந்தமிழ் தேன்மொழியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலைகுனிவாள்
(செந்தமிழ்)

காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்


கற்பனை வடித்தவளோ
சேற்றினில் பிறந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்.....
(செந்தமிழ்)

மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ - விண்


மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிடச் செய்யும் மோகினியோ - அவள்....- உயர்வு நவிற்சி அணி
(செந்தமிழ்)

கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்


கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழ கெல்லாம் படைததவளோ - அவள்... – கற்பனை நயம்

(செந்தமிழ்)"

You might also like