You are on page 1of 21

ஆக்கம்; இராமகிருஷ்ணன் த/பெ அப்புடு

டிண்டிஸ் இடைநிலைப்பள்ளி
காலை அழகு

 வெள்ளி  முளைப்பினிலே -  அழகு


 துள்ளுது வான்பரப்பில்! -  சிறு
 புள்ளின ஓசையிலே -  அழகு
 பொங்கி வழியுதடி!

 காலைப்  பிறப்பினிலே-  அழகு


 கண்ணைக் கவருதடி!-  சிறு
 சோலைக் கலகலப்பில்-  அழகு
 சொரியுது உள்ளத்திலே!
 
சேவல்  அழைப்பினிலே- அழகு
 சிந்தையை  அள்ளுதடி!  மன
  ஆவல் அழித்துவிட்டால் -  அழ
 கானது நம்முடைமை!

 தாமரை மொட்டுக்குள்ளே - அழகு


 தங்கிக் கிடக்குதடி! -  கதிர்
சாமரை வீச்சினிலே -  விரிந்து
 சஞ்சலம் போக்குதடி!

 வீடு துலக்கும்பெண்கள் -  குளிர்முகம்


 வீசும் ஒளியழகில்-  வான்
 நாடு விட்டுநகரும் -  முழுமதி
 நாணி  முகம்வெளுத்தே !

கவிஞர்  வாணிதாசன் 
பாடுபொருள் : இயற்கை

மையக்கரு : காலைப் பொழுதின் அழகு


கேள்வி :
கவிஞர் வாணிதாசனின் ‘காலை அழகு’
எனும் கவிதையின் வழி வெளிப்படுத்தியுள்ள
தெரிநிலை மற்றும் புதை நிலை கருத்தை
ஆராய்க.
முன்னுரை
‘காலை அழகு’ எனும் கவிதையைப் படைத்தவர் கவிஞர்
வாணிதாசன் ஆவார். இக்கவிதையானது கவிதை பொழில் எனும்
கவிதை தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதையின்
கருப்பொருள் காலைப் பொழுதின் அழகு என்பதாகும்.
இப்போது இக்கவிதையின் தெரிநிலை மற்றும் புதைநிலை
கருத்துக்களை இப்போது  ஒவ்வொரு கண்ணி வாயிலாகக்
காண்போம்.
 கண்ணி 1 கண்ணி 1
வெள்ளி  முளைப்பினிலே -  அழகு  பொழுது விடியும் வேளையில்
சுக்கிரனின்( வெள்ளி) ஒளியுடன் வானம்
 துள்ளுது வான்பரப்பில்! -  சிறு
அழகாக காட்சியளிக்கின்றது. பறவைகள்
 புள்ளின ஓசையிலே -  அழகு எழுப்பும் ஒலி காலை அழகுக்கு
 பொங்கி வழியுதடி! மெருகூட்டுகிறது.

புதை நிலை
 இயற்கையைப் போற்றுவோம்
கண்ணி 2  கண்ணி 2
காலைப்  பிறப்பினிலே-  அழகு காலை நேர இயற்கை காட்சிகள்
 கண்ணைக் கவருதடி!-  சிறு கண்களுக்கு விருந்தாக உள்ளன.
விடியலினால் சோலையில் ஏற்படும்
 சோலைக் கலகலப்பில்-  அழகு ஆரவாரங்கள் மனத்திற்கு இன்பத்தைச்
 சொரியுது உள்ளத்திலே! சேர்க்கின்றது.

புதை நிலை
 இயற்கையை இரசிக்க வேண்டும்
கண்ணி 3 கண்ணி 3

சேவல்  அழைப்பினிலே- அழகு சேவல் கூவும் அழகு எண்ணத்தை


ஈர்க்கின்றது. இயற்கையை விருப்பு
 சிந்தையை  அள்ளுதடி!  மன வெறுப்பு இன்றி அணுகினால் வாழ்க்கை
 ஆவல் அழித்துவிட்டால் -  அழ இன்பமாக இருக்கும்.
 கானது நம்முடைமை!
புதை நிலை
 இயற்கையோடு இயைந்து வாழ
வேண்டும்
கண்ணி 4 கண்ணி 4
தாமரை மொட்டுக்குள்ளே - அழகு தாமரை மொட்டின்  உள்ளே அழகு
 தங்கிக் கிடக்குதடி! -  கதிர் மறைந்திருக்கிறது. சூரிய ஒளிபட்டுத் தாமரை
மொட்டுகள் மலரும் போது அதன் அழகு
சாமரை வீச்சினிலே -  விரிந்து வெளிப்பட்டு மனக்கலக்கத்தைப்
 சஞ்சலம் போக்குதடி! போக்குகிறது.

புதை நிலை
 இயற்கையோடு வாழ்ந்தால் மன
அமைதியும் ஆரோகியமும் பெருகும்.
கண்ணி 5 கண்ணி 5

வீடு துலக்கும்பெண்கள் -  குளிர்முகம் காலையில் வீட்டைச் சுத்தம் செய்யும்


பெண்களின் முகங்கள் பொலிவாகக்
 வீசும் ஒளியழகில்-  வான் காணப்படுகின்றன அம்முகங்களைக் கண்டு
 நாடு விட்டுநகரும் -  முழுமதி வானில் உலவும் நிலவும் கூட
வெட்கப்பட்டு மறைகிறது. 
 நாணி  முகம்வெளுத்தே !

புதை நிலை
 பெண்கள் வீட்டுக் கடமைகளை
இன்முகத்துடன் செய்வர்
கவிஞர் வாணிதாசனின் ‘காலை அழகு’ எனும் கவிதையின் வழி காணப்படும் நயங்களை
இப்போது  ஒவ்வொரு கண்ணி வாயிலாகக் காண்போம்

 கண்ணி 1
வெள்ளி  முளைப்பினிலே -  அழகு
 துள்ளுது வான்பரப்பில்! -  சிறு மோனை
 புள்ளின ஓசையிலே -  அழகு கவிதையின் தொடக்கத்தில்,  முதலெழுத்து ஓசையால் ஒன்றி
 பொங்கி வழியுதடி! வருவதே  மோனை ஆகும். அடிகளில் மோனை வருதல்
அடிமோனை எனவும்,  சீர்களில் மோனை வருதல் சீர்மோனை
எனவும் பெயர் பெறும்.  இதில் பின்வரும்  எடுத்துக்காட்டு சீர்
ஓசைநயம் மோனைக்குச் சான்றாகின்றது. 
எதுகை
கவிதையின் தொடக்கச்  சீர்களின் முதல்  எழுத்தின் அளவும்  இரண்டாம்
புள்ளின - பொங்கி
எழுத்தின் ஓசையும் ஒன்றி வருவது எதுகை ஆகும்.  அடிகளில் எதுகை வருதல்
அடி எதுகை எனவும் சீர்களில் எதுகை வருதல் சீர் எதுகை எனவும் பெயர்
பெறும்.  இதில் பின்வரும்  எடுத்துக்காட்டு அடி எதுகைக்குச் சான்றாகின்றது. இயைபு
வெள்ளி – புள்ளின சீர்களின் இறுதி அசை ஒன்றி வருவது இயைபு ஆகும். கவிதை
அடியில் இறுதியிலிருந்து இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதாகும். 
இதனை பின்வரும் எடுத்துக்காட்டு வழி அறியலாம்.

அழகு-அழகு
அணி நயம்
பின்வரு நிலை அணி
ஒரு கவிதையில் முன்னர் வந்த சொல்லே திரும்ப
வரினும் அல்லது முன்னர் வந்த பொருளே பின்னர்
திரும்ப வரினும் அது பின்வருநிலையணி ஆகும்.
 இதனைப் பின்வரும் எடுத்துக்காட்டு வழி
அறியலாம்.

 அழகு - அழகு
கண்ணி 2 சந்தம்
காலைப்  பிறப்பினிலே-  அழகு சொற்களில் உள்ள ஒலிக் கூறுகள் -  ஓசை பகுதிகள் ஒரே
தாள் அளவுக்குப் பொருந்த அமைவதே  சந்தமாகும்.
கண்ணைக் கவருதடி!-  சிறு சீர்களில் ஒப்பிடும் சொற்களின் எழுத்துக்கள் அதே
வரிசையில் அளவாலும் ஓசையாலும் ஒத்திருத்தல்
சோலைக் கலகலப்பில்-  அழகு வேண்டும்.  இதனைப் பின்வரும் உதாரணம் வழி
அறியலாம்.
சொரியுது உள்ளத்திலே!
காலைப்- சோலைக்
எதுகை
காலைப் - சோலைக்

மோனை
காலைப்- கண்ணைக்
சோலைக்- சொரியுது
கண்ணி 3 அணி நயம்
சேவல்  அழைப்பினிலே- அழகு திரிபு அணி
சிந்தையை  அள்ளுதடி!  மன சீர்களில் முதலெழுத்து மட்டும் வேறு பட்டிருக்க, 
ஆவல் அழித்துவிட்டால் -  அழ மற்றவையெல்லாம் அதே எழுத்துகளாக ஒன்றி வருவது
திரிபு அணி ஆகும்.  இதனைப் பின்வரும் எடுத்துக்காட்டு
கானது நம்முடைமை! வழி எளிதாக அறியலாம்.
சேவல் - ஆவல்
எதுகை
சேவல் - ஆவல் தற்குறிப்பேற்ற அணி
கவிஞர்  ஓர்   அஃறிணைப்  பொருளை 
மோனை உயர்திணையாக உருவகம் செய்து தன்
குறிப்பினையும்  கருத்தையும் அதன் மேல் ஏற்றிக் 
சேவல் - சிந்தையை
கூறுவதே  தற்குறிப்பேற்ற அணியாகும்.  இதனை
ஆவல் – கானது பின்வரும் உதாரணம் நன்கு உணர்த்துகின்றது

சந்தம் சேவல்  அழைப்பினிலே


சேவல் - ஆவல் மனிதர்கள் மட்டும் பிறரை அழைக்கும்
தன்மையை அஃறிணைப் பொருளுக்குக் கவிஞர்
ஏற்றி பாடியுள்ளார்.
கண்ணி 4 இயைபு
தாமரை மொட்டுக்குள்ளே - அழகு கிடக்குதடி! - போக்குதடி!
 தங்கிக் கிடக்குதடி! -  கதிர்
சாமரை வீச்சினிலே -  விரிந்து அணி நயம்

 சஞ்சலம் போக்குதடி! உருவக அணி


உவமையும்  பொருளும் வேற்றுமை இன்றி ஒன்றாக
கொள்வது உருவகம் ஆகும். உருவக அணியில்
முதலில் உவமைப்படு பொருளும் அடுத்து உவமையும்
எதுகை
வரும். இதனை பின்வரும் எடுத்துக்காட்டு வழி
தாமரை- சாமரை அறியலாம்.
சாமரை வீச்சினிலே –
மோனை மேற்காணும் வரியில் கவிஞர் சாமரை வீச்சாக சூரிய
ஒளிக்கதிர்கள் பூமியில் படர்ந்துள்ளாதாக
தாமரை- தங்கிக்
உருவகப்படுத்தியுள்ளார்.
சாமரை- சஞ்சலம் திரிபு அணி
தாமரை – சாமரை
சந்தம் தற்குறிப்பேற்ற அணி
தாமரை – சாமரை கதிர் சாமரை வீச்சினிலே
கண்ணி 5 சந்தம்
வீடு துலக்கும்பெண்கள் -  குளிர்முகம் வீடு- நாடு
 வீசும் ஒளியழகில்-  வான்
 நாடு விட்டுநகரும் -  முழுமதி அணி நயம்
 நாணி  முகம்வெளுத்தே !
உருவக அணி
எதுகை வான் நாடு – வானம் நாடாக
வீடு- நாடு
திரிபு அணி
மோனை வீடு- நாடு
வீடு – வீசும்
நாடு – நாணி
முடிவுரை

மொத்தத்தில், இக்கவிதையின் கருப்பொருளான காலைப்


பொழுதின் அழகு என்பதற்குக் கவிஞர் மிகவும் அழகாகப் பல
ஏற்புடைய துணைக் கருத்துகளைக் கையாண்டு பாடியிருப்பது
பாராட்டுக்குரியது. மேலும் அக்கருப்பொருள் தன் இலக்கை
அடைந்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
இக்கவிதையைப் படிக்கும் போதெல்லாம் என் கண் முன்
காலைப்பொழுதின் அழகான காட்சிகள் காட்சியளிப்பதே
இதற்குச் சான்று. அவ்வகையில் இக்கவிஞருக்கு நிகர்
இவரேதான்.

You might also like