You are on page 1of 21

PAPER –II

SECTION-I

PART-I [ANCIENT LITERATURE]

KURUNTHOGAI-(1-25 POEMS)

குறுந்தொகை: எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல


குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. 4 முதல் 8 அடிகளைக்
கொண்ட பாடல்களால் ஆன நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின்
தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. கடவுள்
வாழ்த்துப் பாடல் நீ ங்கலாக இதில் 401 பாடல்கள் உள்ளன. இந்த நூலில் 307,
391 ஆகிய இரண்டு பாடல்களும் 9 அடிஎளைக் கொண்டுள்ளன.
இத்தொகுப்பில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் 205 பேர். 10 பாடல்கள்
ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்களாக உள்ளன. உரையாசிரியர்கள் பலராலும்
அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே
முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது
பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது.
இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

குறிஞ்சித் திணை – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்-(145)


முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்-(90)
மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்-(45)
நெய்தற்  திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்-(71)
பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்-(50)

குறுந்தொகை: 1 திப்புத்தோளார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம்


சொன்னது, அவனுடைய கையுறையை மறுத்து.
செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்,
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
பாடல் பின்னணி:  தலைவன் செங்காந்தள் பூவைக் கையுறையாகக் கொடுத்துத்
தோழியிடம் தன் குறை கூறிய வழி, அவள் “இஃது எங்கள் மலையிடத்தும்
உள்ளதாகலின் இதனை வேண்டேம்” என்று மறுத்துக் கூறியது.

பொருளுரை:  போர்க்களம் குருதியால் செந்நிறம் ஆகும்படி அசுரர்களைக் கொன்று


அழித்த, குருதியால் சிவந்த திரண்ட அம்பையும், குருதியால் சிவந்த தந்தத்தையுடைய
யானையையும் நெழிழுமாறு அணியப்பட்ட தொடியையும் உடைய முருகக் கடவுளின்
இம்மலையானது சிவந்த காந்தள் மலர்களையுடையது.

சொற்பொருள்:  செங்களம் பட – போர்க்களம் குருதியால் செந்நிறம் ஆகும்படி, கொன்ற


அவுணர்த் தேய்த்த – அசுரர்களைக் கொன்று அழித்த, செங்கோல் அம்பின் – சிவந்த
திரண்ட அம்பையும், செங்கோட்டி யானை – சிவந்த தந்தத்தையுடைய யானை, கழல்
தொடி – நெழிழுமாறு அணிந்த தொடி, சேஎய் குன்றம் – முருகக் கடவுளின் குன்றம்,
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே – சிவந்த காந்தள் மலர்களையுடையது.

குறுந்தொகை: 2, இறையனார், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது.


கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ,
பயி்லியது கெழீ இய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

பாடல் பின்னணி:  தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் இணைந்த


பின்னர், தலைவியின் கூந்தலில் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன்
வண்டை வினவுவதின் மூலம் புலப்படுத்தி, அவளுடைய அழகைப் புகழ்கின்றான்.

பொருளுரை:  பூக்களிலே இருக்கின்ற பூந்தாதினை ஆராய்ந்து உண்ணும்


வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினையுடைய வண்டே!  நான் விரும்பியதைக்
கூறாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறுவாயாக.  என்னோடு பழகிய
நட்பினைக் கொண்டவள் என் தலைவி.  மயில் போன்ற மென்மையும் நெருக்கமான
பற்களையும் கொண்ட அவளுடைய கூந்தலிலே வசுகின்ற
ீ நறுமணத்தைப் போல, நீ
அறிந்த மலர்களிலே நறுமணமுடைய மலர்களும் உள்ளனவா?

சொற்பொருள்:  கொங்கு – பூந்தாது, தேன், தேர் வாழ்க்கை – ஆராய்ந்து உண்ணும்


வாழ்க்கை, அம் சிறை – அழகிய சிறகு, காமம் செப்பாது – நான் விரும்பியதைக்
கூறாமல்,  கண்டது மொழிமோ – நீ கண்டதைக் கூறுவாயாக, பயி்லியது கெழீ இய
நட்பின் – பயிலுதல் பொருந்திய நட்பினை உடைய (கெழீ இய- சொல்லிசை அளபெடை),
பழகிய நட்பினை உடைய, மயில் இயல் – மயிலின் தன்மை,  செறி  எயிற்று –
நெருக்கமான பற்களைக் கொண்ட,  அரிவை – இளம் பெண், கூந்தலின் நறியவும்
உளவோ- கூந்தலைப் போல நறுமணமும் உள்ளனவா, நீ அறியும் பூவே – நீ அறிந்த
மலர்களில்.

குறுந்தொகை 3, தேவகுலத்தார், குறிஞ்சித் திணை  –  தலைவி


தோழியிடம் சொன்னது.
நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே, சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பாடல் பின்னணி: தலைவியை வரையாது (திருமணம் புரியாது) இருக்கும் தலைவன்


சிறைப்புறமாக (வேலிக்கு புறத்தில்) நிற்பதை அறிந்த தோழி, அவன் வரைந்து கொள்ள
வேண்டும் என்ற எண்ணத்துடன் அவனை பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு
சிறப்புடையது என்று தோழிக்கு உணர்த்தியது.

பொருளுரை:  மலைச் சரிவில் உள்ள கரிய நிறமான கொம்புகளை உடைய குறிஞ்சிச்


செடியின் மலர்களைக் கொண்டு வண்டுகள் சிறப்பான தேனைச் செய்யும்
நாட்டையுடைய என் தலைவனொடு நான் செய்த நட்பானது, நிலத்தை விடப் பெரியது,
வானத்தை விட உயர்ந்தது, கடலை விட  அளத்தற்கரிய ஆழமுடையது.

சொற்பொருள்:   நிலத்தினும் பெரிதே -நிலத்தை விட பெரியது, வானினும் உயர்ந்தன்று


– வானத்தை விட உயர்ந்தது, நீரினும் ஆர் அளவின்றே – கடலை விட அளத்தற்கரிய
ஆழமுடையது,  சாரல் – மலைச் சரிவு,  கருங்கோல் குறிஞ்சி – கரிய நிறமான
கொம்புகளைக் கொண்ட உடைய குறிஞ்சிச் செடி, வலிமையான கொம்புகளைக்
கொண்ட குறிஞ்சிச் செடி, பூக் கொண்டு – மலர்களைக் கொண்டு,  பெரும் தேன் –
நிறையத் தேன், நிறைய தேனடைகள், இழைக்கும்  – செய்யும், நாடனொடு நட்பே –
நாடனுடைய நட்பு, குறிஞ்சி நிலத் தலைவனுடைய நட்பு.

குறுந்தொகை 4, காமஞ்சேர் குளத்தார், நெய்தற் திணை, தலைவி


தோழியிடம் சொன்னது.
நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
இமை தீய்ப்பன்ன கண்ண ீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்,
அமைவிலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  பிரிவைத் தாங்க முடியாமல் தலைவி வருந்துகின்றாள் என்று


கவலையுற்ற தோழிக்கு, ‘தலைவன் முன்பு எனக்குச் செய்த தண்ணளியை நினைத்து
ஆற்றினேன்’ என்பது புலப்படத் தலைவி சொன்னது.

பொருளுரை:  வருந்துகின்றது  என் நெஞ்சு.  வருந்துகின்றது  என் நெஞ்சு.  


இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ண ீரைத் துடைத்து  எனக்குப் பொருத்தமாக
இருந்த என் காதலர் இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார்.  வருந்துகின்றது  என்
நெஞ்சு.  அமைதற்கு அமைந்த (3) – உ. வே. சாமிநாதையர் உரை – அளவளாவதற்கு
அமைந்த,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆற்றியிருத்தற்குக் காரணமான தண்ணளி
பொருந்திய, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மனம் பொருந்திய.

சொற்பொருள்:  நோம் என் நெஞ்சே – வருந்தும் என் நெஞ்சு (ஏ – அசை நிலை), நோம்
என் நெஞ்சே – வருந்தும் என் நெஞ்சு (ஏ – அசை நிலை),  இமை – கண் இமைகள்,
தீய்ப்பன்ன – சுடுவதைப் போல்,  கண்ண ீர் தாங்கி – கண்ண ீரைத் துடைத்து, அமைதற்கு
அமைந்த – பொருத்தமாக அமைந்த, தண்ணளி செய்த, நம் காதலர் – என்னுடைய
காதலர், அமைவிலர் ஆகுதல் –  பொருந்தாதவராய் ஆகியதால், நோம் என் நெஞ்சே –
வருந்தும் என் நெஞ்சு.

குறுந்தொகை 5, நரிவெரூ உத்தலையார், நெய்தற் திணை – தலைவி


தோழியிடம் சொன்னது.
அது கொல் தோழி காம நோயே,
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்தெனப்,
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே?

பாடல் பின்னணி:  பிரிவு ஆற்றாமையால் தலைவி வருந்துதலை அறிந்து


கவலையுற்ற தோழிக்கு, தலைவி தன் கண்கள் துயிலாமையை உணர்த்தும்
வாயிலாகக் காமநோயின் கொடுமையைக் கூறியது.

பொருளுரை:   தோழி! தன்னிடத்தில் தங்கும் குருகுகள் உறங்குவதற்குக் காரணமான


இனிய நிழலை உடைய புன்னை மரம் உடையும் கடல் அலைகளின் நீர்த் திவலையால்
அரும்பும் மெல்லிய கடற்கரைத் தலைவன் என்னை விட்டுப்  பிரிந்ததால், பல
இதழுடைய தாமரை மலரைப்போன்ற தோற்றத்தையுடைய, கண்மை இட்ட எனது
கண்கள் தூங்க முடியாதவையாக ஆகி விட்டன.  இது தான் காதல் நோயின்
தன்மையோ?

சொற்பொருள்:  அது கொல் தோழி –  இந்தத் தன்மை உடையது தானா, காம நோயே –


காதல் நோய் (ஏ – அசை நிலை), வதி குருகு – வாழும் குருகுகள்,  உறங்கும் – தூங்கும், 
இன் நிழல் – இனிய நிழல்,  புன்னை – புன்னை மரம்,  நாகம், உடை திரை – உடைக்கும்
அலைகள்,  திவலை – நீர்த் திவலை,  அரும்பும் – மலரச் செய்யும்,  தீ – இனிய,  நீர் – கடல்
நீர்,  மெல்லம்புலம்பன் – கடற்கரையின் தலைவன், நெய்தல் நிலத்தின் தலைவன்,
பிரிந்தென – பிரிந்ததால், பல் இதழ் – பல இதழ்களையுடைய தாமரை மலர், உண்கண் –
மை உண்ட கண்கள்,  பாடு ஒல்லாவே – தூங்க இயலாது.

குறுந்தொகை 6, பதுமனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது.


நள்ளென்றன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி,
நனந்தலை உலகமும் துஞ்சும்,
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே!

பாடல் பின்னணி:  திருமணப் பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த


பொழுது ஆற்றாளாகிய தலைவி, நள்ளிரவில் யாவரும் துயிலவும் ‘யான்
துயின்றிலேன்’ என்று தோழியிடம் கூறியது.

பொருளுரை:  நடு இரவு இருட்டாக இருக்கின்றது.  சொற்கள் அடங்கி விட்டன.


வெறுப்பு எதுவும் இன்றி இனிமையாக மக்கள் உறங்குகின்றனர்.   அகன்ற உலகமும்
உறங்குகின்றது,  ஆனால் நான் மட்டும் உறங்காமல் இருக்கின்றேன்.

சொற்பொருள்:  நள்ளென்றன்றே யாமம் – நடு இரவு இருட்டாக இருந்தது, சொல்


அவிந்து – சொற்கள் அடங்கின,  இனிது அடங்கினரே – இனிமையாக உறங்கினர், 
மாக்கள் – மக்கள்,  முனிவு இன்றி – வெறுப்பின்றி,  நனந்தலை – அகன்ற,  உலகமும்
துஞ்சும் – உலகமும் உறங்குகின்றது, ஓர் யான் – நான் மட்டும்,  மன்ற – உறுதியாக
(தேற்றப் பொருளில் வந்தது),  துஞ்சாதேனே – உறங்காமல் இருக்கின்றேன்.

குறுந்தொகை 7, பெரும்பதுமனார், பாலைத் திணை – கண்டோர் சொன்னது.


வில்லோன் காலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர்
யார் கொல்? அளியர் தாமே, ஆரியர்
கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்,
வேய் பயில் அழுவம் முன்னியோரே.

பாடல் பின்னணி:  தலைவனும் தலைவியும் தங்கள் குடும்பத்தை விட்டு நீங்கி


உடன்போன வேளையில், எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த
சிலம்பினால்  அவ்விருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை என்று உணர்ந்து
இரங்கிக் கூறியது.

பொருளுரை:  வில்லை வைத்திருக்கும் அவன், கால்களில் கழல்களை


அணிந்திருக்கின்றான்.  வளையல் அணிந்த அவள், கால்களில் சலங்கை
அணிந்துள்ளாள்.  இந்த நல்லவர்கள் யாரோ?  பரிதாபத்திற்கு உரியவர்கள் ஆகத்
தோன்றுகின்றார்கள், ஆரியக் கழைக் கூத்தாடிகள் கயிற்றின் மேல் ஆடும்பொழுது
கொட்டப்படும் பறைக் கொட்டு போல், வசும்
ீ காற்றினால் வாகை மரங்களின் விதைக்
கூடுகள்  நடுங்கி ஒலிக்கும் இந்த மூங்கில் நிறைந்த பாலை நிலப்பரப்பில், கடந்து
செல்லும் பிறருடன் வரும் இவர்கள்!

சொற்பொருள்:  வில்லோன் – வில்லை உடையவன், காலன கழல் – கால்களில் கழல்


உள்ளது, ஏ – அசை, தொடியோள் – வளையல் அணிந்தப் பெண், மெல்லடி – சிறிய அடி,
மேலவும் – அவற்றின் மேல், சிலம்பு – சலங்கை, ஏ – அசை, கொலுசு, நல்லோர் – நல்ல
மக்கள், யார் கொல் – யார் இவர்கள், அளியர் – பரிதாபத்திற்கு உரியவர்கள், ஆரியர் –
ஆரியர்கள், கயிறாடு – கயிற்றின் மேல் ஆடுதல், பறையின் – கொட்டப்படும் பறையைப்
போல் , கால் பொர – காற்று வசுவதனால்,
ீ கலங்கி – நடுங்கி, வாகை – உழிஞ்சில், வெண்
நெற்று ஒலிக்கும் – வெள்ளை விதைக் கூடு ஒலிக்கும், வேய் பயில் – மூங்கில் நிறைந்த,
அழுவம் – பரப்பு, இங்கு அது பாலை நிலத்தை உணர்த்துகின்றது, முன்னியோர் – கடந்து
செல்ல வருபவர்கள்.

குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – பரத்தையின் கூற்று


கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம் இல் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல,
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.
பாடல் பின்னணி:  தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத்
தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது.

பொருளுரை:  வயலில் உள்ள மரத்திலிருந்து விளைந்து விழும் இனிய பழத்தை 


குளத்தில் உள்ள வாளை மீ ன்கள் கவ்வி உண்ணும் நாட்டவன், என்னுடைய வட்டில்

என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைக் கூறுவான்.  ஆனால் தன்னுடைய
வட்டில், முன்
ீ நின்றார் தம் கையையும் காலையும் தூக்கத் தூக்க, தானும் கையையும்
காலையும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் பாவையைப் போல்,
தன்னுடைய மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

சொற்பொருள்:  கழனி – வயல், மாஅத்து – மாமரத்தினது, விளைந்து உகு – பழுத்து


விழும், தீம்பழம் – இனிய பழம், பழன வாளை – குளத்தில் உள்ள வாளை மீ ன், கதூஉம் –
கவ்வி உண்ணும், ஊரன் – ஊரைச் சார்ந்தவன், எம் இல் – என்னுடைய இல்லத்தில்,
பெருமொழி கூறி – பெரிய சொற்களைக் கூறி, தம் இல் – தன்னுடைய இல்லத்தில்,
கையும் காலும் தூக்கத் தூக்கும் – பிறர் தூக்க தானும் கையையும் காலையும்  தூக்கும்,
ஆடிப் பாவை போல – கண்ணாடியில் தோன்றுகின்ற பொம்மையைப்போல், மேவன
செய்யும் – விரும்புவதைச் செய்வான், தன் புதல்வன் தாய்க்கு – தன்னுடைய
மனைவிக்கு.

குறுந்தொகை 9, கயமனார், நெய்தற் திணை –  தோழி தலைவனிடம் சொன்னது.


யாய் ஆகியவளே மாயோளே,
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே,
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன மீ ன் இருங்கழி ஓதம் மல்குதொறும் 5
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை,
நம் முன்  நாணிக் கரப்பாடும்மே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து மீ ண்ட தலைவன் வாயில் (இல்லத்தில் புகுதல்)


வேண்டிப் புகுந்தவிடத்துத் தோழி தலைவனிடம்  நீ அவளை அடைதல் எளிதெனக்
கூறுகின்றாள்.

பொருளுரை:   மாநிறமான என் தோழி மிக நல்ல பண்புடையவள்.  மூட்டுவாய்


பொருந்திய மாட்சிமையுடைய பெட்டியில் வைத்த அணியாத மலர்கள்
வாடியதைப்போல், அவளுடைய  உடம்பு வாடி விட்டது.  மீ ன் கூட்டங்கள் நிறைந்த
பெரிய உப்பு நீர்க் குளங்களில் கடல் நீர் பெருகி வருகின்ற வேளைதோறும் குவளை
மலர்கள் பசுமையான இலைகளுக்கு மேல் உயர்ந்து, குளத்தில் மூழ்கிக் குளிக்கும்
பெண்களின் கண்களைப் போல் தோன்றும் குளிர்ந்த துறையின் தலைவனின்
கொடுமையை அவள் நம்மிடம் மறைக்கின்றாள், நாணத்துடன்.

சொற்பொருள்:  யாய் ஆகியவளே – நல்ல பண்பு உடையவள்,  மாயோளே – மாமை


நிறத்தை உடையவள் (மாந்தளிர் மேனி),  மடை – மூட்டுவாய்,  மாண் – மாட்சியுடைய,
செப்பில் – பெட்டியில்,  தமிய – தனியாக,  வைகிய – வைத்த,  பெய்யாப் பூவின் –
அணியாத மலர்களைப்போல், மெய் சாயினளே – உடம்பு வாடியவள்,  பாசடை –
பசுமையான இலைகள்,  நிவந்த – மேலே,  கணைக்கால் – பெரிய காம்பு, நெய்தல் –
குவளை மலர்கள், இனமீ ன் – மீ ன் கூட்டம்,  இருங்கழி – உப்பு நீர்க் குளங்கள், ஓதம் –
வெள்ளம், மல்கு தொறும் – நிறையும் பொழுதெல்லாம், கயம் மூழ்கு மகளிர் – குளத்தில்
குளிக்கும் பெண்கள்,  கண்ணின் மானும் – கண்களைப் போன்று இருக்கும்,
தண்ணந்துறைவன் – நெய்தல் நிலத்தலைவன், கொடுமை – கொடுமை, நம் முன்  நாணி
– நம்  முன்னால் அவமானப் பட்டு,  கரப்பு ஆடும் – அதை மறைப்பாள் (கரப்பாடும்மே –
செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது).

குறுந்தொகை 10, ஓரம்போகியார், மருதத் திணை – பரத்தையிற் பிரிந்து மீ ண்ட


தலைவனிடம் தோழி சொன்னது
யாய் ஆகியளே விழவு முதலாட்டி,
பயறு போல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூமென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள், ஆகலின் நாணிய வருமே. 

பாடல் பின்னணி:  தலைவனுக்குத் தோழி வாயில் நேர்ந்தது.

பொருளுரை:  தலைவி ஆனவள் தலைவன் செல்வம் பெறுவதற்குக் காரணமாக


இருப்பவள். பயற்றின் கொத்துப் போன்ற பூங்கொத்துக்களில் உள்ள பூந்தாது தங்கள்
மேல் படும்படி உழவர்கள் வளைத்த நறுமணம் கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய
கிளைகளைக் கொண்ட காஞ்சி மரத்தையுடைய ஊரனின் கொடுமையை அவள்
மறைத்தாள் ஆதலால், இப்பொழுது அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள
வருகின்றாள்.

சொற்பொருள்:   யாய் ஆகியளே – தலைவி ஆனவள், விழவு முதலாட்டி – தலைவன்


செல்வம் பெறுவதற்குக் காரணமாக இருப்பவள், பயறு போல் இணர பைந்தாது –
பயற்றின் கொத்துப் போன்ற பூங்கொத்துக்களில் உள்ள பூந்தாது, படீஇயர் – தங்கள் மேல்
படும்படி, உழவர் வாங்கிய – உழவர்கள் வளைத்த, கமழ் பூமென் சினைக் காஞ்சி ஊரன் –
கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட காஞ்சி மரத்தையுடைய
ஊரன், கொடுமை கரந்தனள் – கொடுமையை அவள் மறைத்தாள், ஆகலின் – ஆதலால்,
நாணிய வருமே – அவன் நாணும்படி ஏற்றுக்கொள்ள வருகின்றாள்.

குறுந்தொகை 11, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தன் நெஞ்சிடம்


சொன்னது, தோழி கேட்கும்படியாக.
கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ நாடொறும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே,
எழு இனி, வாழி என் நெஞ்சே, முனாது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது 
பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.

பாடல் பின்னணி:  தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தோழி கேட்கும்படி நெஞ்சை


நோக்கிக் கூறித் தன்னுடைய துயரத்தை வெளிப்படுத்தியது.

பொருளுரை:  நீடு வாழ்வாயாக என் நெஞ்சே! சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட


ஒளியுடைய வளையல்கள் என் கை மெலிந்ததால் கழன்று, நாள்தோறும் உறங்காமல்
கலங்கி அழும் கண்களுடன் வருந்தி இங்கு வாழ்வதிலிருந்து நாம் தப்புவோம். தலைவர்
இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கு இப்பொழுது எழுவாயாக நீ! கஞ்சங் குல்லைக்
மலர்க் கண்ணியை அணிந்த வடுகரின் இடத்திற்கு முன்னே உள்ள, பல
வேல்களையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள மொழி
வேறுபட்ட நாட்டில் உள்ளவர் ஆயினும், அவர் இருக்கும் நாட்டிற்குச் செல்லுதலை
எண்ணினேன் நான்.

சொற்பொருள்:   கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ – சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட


விளக்கமுடைய வளையல்கள் கை மெலிந்ததால் நெகிழ, நாடொறும் பாடு இல கலிழும்
கண்ணொடு – நாள்தோறும் உறங்காமல் கலங்கி அழும் கண்களுடன், புலம்பி – தனித்து,
வருந்தி, ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் – இங்கு வாழ்வதிலிருந்து நாம்
தப்புவோம், ஆங்கே – தலைவர் இருக்கும் இடத்திற்கு, எழு இனி – செல்லுவதற்கு
இப்பொழுது எழுவாயாக, வாழி என் நெஞ்சே – நீடு வாழ்வாயாக என் நெஞ்சே, முனாது –
முன்னே உள்ள, பகைப்புலத்ததாகிய, குல்லைக் கண்ணி வடுகர் முனையது – கஞ்சங்
குல்லைக் கண்ணியை அணிந்த வடுகரின் இடத்தின், பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர் –
பல வேல்களையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள,
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே – அவருடைய நாட்டிற்குச் செல்லுதலை
எண்ணினேன்.

குறுந்தொகை 12, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி சொன்னது.


எறும்பி அளையின் குறும்பல் சுனைய,
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் சென்ற ஆறே!
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.

பாடல் பின்னணி:  தலைவி தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையிலள் ஆயினாள்


என்று கவலையுற்ற தோழி கேட்கும்படி தலைவி சொல்லியது.

பொருளுரை:  அவர் சென்ற பாலை நிலத்தில் எறும்பு அளைகள் போன்ற பாதைகளும்,


சிறிய பல சுனைகளும், கொல்லனின் உலைகள் போல் (சூடான) உள்ள பாறைகளில் ஏறி
வளைந்த வில்லையுடைய எயினர்கள் தங்கள் அம்புகளைக் கூர்மையாக்கும் வழிகளும்
உண்டு எனக் கூறுகின்றனர்.  அதுப்பற்றி வருந்தாது, பழிச் சொற்களைக் கூறுகின்றது,
ஆரவாரமுடைய இந்த ஊர்.

சொற்பொருள்:  எறும்பி அளையின் – எறும்பின் அளைகளைப்போல்,  குறும்பல்சுனைய


– சிறிய பல சுனைகள்,  உலைக்கல் அன்ன – கொல்லனது உலைக்கல்லைப் போல்
வெட்பமுடைய,  பாறை ஏறி – பாறை மீ து ஏறி, கொடு வில் எயினர் – வளைந்த
வில்லையுடைய எயினர்கள், கொடூர வில்லையுடைய எயினர்கள் (பாலை நிலத்தில்
பிறரை துன்புறுத்துவோர்),  பகழி மாய்க்கும் – அம்புகளைத் தீட்டும்,  கவலைத்து –
கடினமான வளைந்தப் பாதைகளில்,  என்பவர் – எனக் கூறுகின்றனர், சென்ற ஆறே –
சென்ற வழி, அது மற்று அவலம் கொள்ளாது –  என்னுடைய துன்பத்தை அறியாது, 
நொதுமல் கழறும் – பழிக்கும் சொற்கள் கூறும்,  இவ் – இந்த, அழுங்கல் ஊரே –
ஆரவாரமுடைய ஊர்.

குறுந்தொகை 13, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது.


மாசுஅறக் கழீ இய யானை போலப்,
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்,
நோய் தந்தனனே தோழி!
பசலை ஆர்ந்த, நம் குவளை அம் கண்ணே.

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவாற்றாமல் வருந்திய தன் வேறுபாடுகளை


உணர்ந்து கவன்ற தோழியிடம் தலைவி தன்னுடைய ஆற்றாமைக்குக் காரணத்தைப்
புலப்படுத்தியது.

பொருளுரை:  தோழி! பெருமழை பொழிந்ததால் மாசு நீங்கிய ஈரமான சொரசொரப்பான


கரிய பாறைக் கல்லானது, புழுதி நீங்கி சுத்தம் செய்யப்பெற்ற யானையைப் போலக்
காட்சியளித்தது. அக்கல்லின் ஒரு பக்கத்தே கூடியிருந்தான் தலைவன்.  அவன் தான்
நம்மைப் பிரிந்து துன்பம் தந்தான்.  அதனால் குவளை மலர் போன்ற என்னுடைய
அழகிய கண்களில் பசலை படர்ந்தன.

சொற்பொருள்:  மாசு அற – புழுதி இல்லாமல், கழீ இய – கழுவப்பட்ட (சொல்லிசை


அளபெடை), யானை போல – யானையைப் போல, பெரும் பெயல் – பெருமழை, உழந்த-
அலைத்த, இரும்பிணர் – கரிய சொரசொரப்பான, கரிய சருச்சரையை உடைய, துறுகல் –
பாறை, பைதல் – பசுமையான, ஈரமான,  ஒருதலை – ஒரு பக்கம், சேக்கும் – கூடும்,
நாடன் – தலைவன், நோய் தந்தனனே- நோய் தந்து விட்டனனே, பசலை ஆர்ந்த – பசலை
படர்ந்த, நம் குவளை – என்னுடைய குவளை மலர் போன்ற, அம் கண்ணே- அழகிய
கண்களில்.

குறுந்தொகை 14, தொல்கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது, தோழி


கேட்கும்படி.
அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிக தில் அம்ம, இவ்வூரே! மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.

பாடல் பின்னணி:  தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன் அத்தோழி கேட்பக்


கூறியது.

பொருளுரை:  அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்ற சிவந்த  நாக்கு அஞ்சுமாறு


நேராக விளங்கும் கூர்மையான பற்களையுடைய சில மொழிகளைப் பேசும் என்
தலைவியை யான் (மடலேறி) பெறுவேனாக.  நான் அவளைப் பெற்ற பின், இந்த ஊரார்
அதை அறிந்து கொள்ளட்டும்.  அவ்வாறு, ஊரார் பலரும் தெருவில் ‘நல்லோள் கணவன்
இவன்’ என்று கூறும் போது, நாங்கள் சிறிது நாணமடைவோம்.

சொற்பொருள்:  அமிழ்து பொதி – அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்று


(இனிமையான சொற்களைப் பேசும்), செந்நா- சிவந்த நாக்கு, அஞ்ச வந்த –
அஞ்சுவதற்குக் காரணமான, வார்ந்து இலங்கு – நேராக விளங்கும், வை எயிற்று –
கூர்மையான பற்களையுடைய, சின்மொழி அரிவையை- சில சொற்களைப் பேசும் 
பெண்ணை, (என் தலைவியை), பெறுக – பெறுவேனாக, தில் – ஓர் அசைச் சொல், அம்ம –
ஓர் அசைச் சொல், பெற்றாங்கு – பெற்ற பின், அறிக  – அறிந்து கொள்ளட்டும்,  தில் – ஓர்
அசைச் சொல், அம்ம – ஓர் அசைச் சொல், இவ்வூரே- இவ்வூரவர், மறுகில் – தெருவில்,
நல்லோள் கணவன் – நல்ல பெண்ணின் கணவன், இவன்  என்று, பல்லோர் கூற –
பலரும் சொல்ல, யாஅம்- நானும் தலைவியும், நாணுகம் – நாணமடைவோம், சிறிதே-
சிறிது.

குறுந்தொகை 15, ஔவையார், பாலைத் திணை – செவிலித்தாய் தலைவியின்


தாயிடம் சொன்னது.
பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு
தொன் மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன் மொழி போல
வாயாகின்றே தோழி, ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு 
தொகு வளை முன் கை மடந்தை நட்பே.

பாடல் பின்னணி:  செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.  

பொருளுரை:  அழகிய வரக்கழலையும்


ீ சிவந்த இலையையுடைய வெள்ளிய
வேலையும் உடைய தலைவனோடு தொக்க வளையல்களை முன்கையில் அணிந்த
உன்னுடைய மகள் கொண்ட நட்பானது, மிகப் பழைய ஆலமரத்தைக் கொண்ட பொது
இடத்தில் தங்குதலைக் கொண்டு தோன்றிய கோசர்களின் நல்ல சொற்கள்
உண்மையாவதைப் போல, மணப்பறைகள் ஆரவாரிக்க சங்குகள் ஒலிக்க திருமணம்
செய்ததால், உண்மையாகின்றது தோழி!

சொற்பொருள்:  பறைபடப் பணிலம் ஆர்ப்ப – மணப்பறைகள் ஆரவாரிக்க சங்குகள்


ஒலிக்க, இறை கொள்பு – தங்கிய, தொன் மூது ஆலத்துப் பொதியில் – மிகப் பழைய
ஆலமரத்தைக் கொண்ட பொது இடத்தில், தோன்றிய – தோன்றிய, நாலூர்க் கோசர் நன்
மொழி போல வாயாகின்றே தோழி – நான்கு ஊரில் உள்ள கோசர்களின் நல்ல சொற்கள்
உண்மையாவதைப் போல உண்மையாகின்றது தோழி, ஆய் கழல் சேயிலை வெள்
வேல் விடலையொடு – அழகிய வரக்கழலையும்
ீ சிவந்த இலையையுடைய வெள்ளிய
வேலையும் உடைய தலைவனோடு, தொகு வளை முன் கை மடந்தை நட்பே – தொக்க
வளையல்களை முன்கையில் அணிந்த நின் மகள் கொண்ட நட்பு.

குறுந்தொகை 16, சேர மன்னன் பாலை பாடிய பெருங்கடுங்கோ – பாலைத் திணை,


தோழி தலைவியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்,
செங்கால் பல்லி தன் துணை பயிரும்,
அம் கால் கள்ளியங்காடு இறந்தோரே?

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில்,


கவலையுற்ற தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்தியது.

பொருளுரை:  உன்னைப் பற்றி அவர் நினைப்பாரா தோழி, வழிப்பறி செய்யும்


கள்வர்கள் தங்கள் கூர்மையான நக முனையினால் இரும்பினால் செய்த தங்கள்
அம்புகளை செம்மைப்படுத்தும் பொருட்டு உரசும் ஓசையைப் போல்,  சிவந்த
கால்களையுடைய பல்லி தன் துணையை அழைக்கும் ஓசைத் தோன்றும் அழகிய
தண்டுகளையுடைய கள்ளிச் செடிகளைக் கொண்ட காட்டு வழிச் சென்ற நம் தலைவர்? 
உறுதியாக நினைப்பார்.

சொற்பொருள்:  உள்ளார் கொல்லோ தோழி – நினைப்பாரா தோழி, கள்வர் – வழிப்பறி


செய்யும் கள்வர்கள், பொன் புனை பகழி – இரும்பினால் செய்த அம்பு, செப்பங்
கொண்மார் – செம்மைப்படுத்தும் பொருட்டு, உகிர் நுதி – கூர்மையான நக நுனி, புரட்டும்
–  சொரியும், உரசும்,  ஓசை போல – ஓசையைப் போல, செங்கால் பல்லி – சிவந்த
கால்களையுடைய பல்லி, தன் துணை  பயிரும் – தன் துணையை அழைக்கும், அம் கால்
– அழகிய தண்டு, கள்ளியங்காடு – கள்ளிச் செடி நிறைந்த காடு, இறந்தோரே – சென்றவர்.

குறுந்தொகை 17, பேரெயில் முறுவலார், குறிஞ்சித் திணை  – தலைவன்


தோழியிடம் சொன்னது.
மாவென மடலும் ஊர்ப, பூவெனக்
குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப,
மறுகின் ஆர்க்கவும் படுப,
பிறிதும் ஆகுப, காமம் காழ்க் கொளினே.

பாடல் பின்னணி:  தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன், அத்தோழியிடம், தான்


மடலேற எண்ணியிருத்தலை உரைத்தது.உலகின்மேல் வைத்து தன் குறையைக்
கூறினான்.

பொருளுரை:  காம நோய் மிகவும் முதிர்ந்தால், பனைமடலையும் குதிரையெனக்


கொண்டு ஆண்கள் அதனை செலுத்துவார்கள், அடையாள மாலையாக குவிந்த
அரும்பையுடைய எருக்கம்பூவின் கண்ணியையும் தங்கள் தலையில் சூடுவார்கள்,
தெருவில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவார்கள். தங்கள் கருத்து
முற்றவில்லை என்றால் சாவுதற்குரிய செயலையையும் துணிந்து செய்வார்கள்.

சொற்பொருள்:  மாவென மடலும் ஊர்ப – பனைமடலையும் குதிரையெனக் கொண்டு


ஆண்கள் அதனை ஊர்வர், பூவெனக் குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப –
அடையாள மாலையாக குவிந்த அரும்பையுடைய எருக்கம்பூ கண்ணியையும் தங்கள்
தலையில் சூடுவார்கள், மறுகின் ஆர்க்கவும் படுப – தெருவில் பிறர் தம்மைக் கண்டு
ஆரவாரிக்கவும் படுவார்கள், பிறிதும் ஆகுப – தங்கள் கருத்து முற்றவில்லை என்றால்
சாவுதற்குரிய செயலையையும் துணிந்து செய்வார்கள், காமம் காழ்க் கொளினே – காம
நோய் மிகவும் முதிர்ந்தால்.

குறுந்தொகை 18, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்


சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!

பாடல் பின்னணி:  இரவில் வந்து மீ ளும் தலைவனிடம் தோழி “விரைவில் வரைந்து


கொள்ள வேண்டும்” எனக் கூறியது.

பொருளுரை:   மூங்கிலை வேலியாகக் கொண்டவிடத்தில், வேரில் பழக் குலைகள்


தொங்கும் பலா மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனே!  விரைவில் தலைவியை
மணம் செய்துகொள்ளும் காலத்தை உண்டாக்கிக் கொள்க!  உன்னைத் தவிர யாரால்
தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும்?  மலையிலே, சிறிய
கொம்புகளிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்று, 
தலைவியின் உயிரோ மிகச்சிறியது.  அவள் உன் மேல் கொண்ட விருப்பமோ பெரியது.

சொற்பொருள்:  வேரல் வேலி – மூங்கில் வேலி, வேர்க்கோள் – வேரில் பழக் குலைகள்


தொங்கும், பலவின் – பலா மரங்களையுடைய, சாரல் நாட- மலை நாட்டவனே,
செவ்வியை – வரைந்து (மணம் செய்து கொள்ளும்) கொள்ளும் காலத்தை, ஆகுமதி-
உண்டாக்கு, யார் அஃது அறிந்திசினோரே – யாரால் தலைவியின் இந்நிலையை
அறிந்துகொள்ள முடியும், சிறுகோட்டு – சிறிய கொம்பிலே, பெரும்பழம் – பெரிய
பலாப்பழம், தூங்கி ஆங்கு – தொங்கிக் கொண்டிருந்தவாறு,  இவள்- தலைவி, உயிர் தவச்
சிறிது – உயிர் மிகச் சிறியது, காமமோ பெரிதே – விருப்பமோ பெரியதே.

குறுந்தொகை 19, பரணர், மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.


எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி, வாழிய நெஞ்சே, மனை மரத்து
எல் உறு மௌவல் நாறும்
பல் இரும் கூந்தல், யாரளோ நமக்கே.

பாடல் பின்னணி:  தலைவி ஊடிய போது அவ்வூடலைத் தான் தெளியச் செய்யவும்


தெளியாளாகி அவள் பின்னும் ஊடிய காலத்தில் தவிர்ந்த நெஞ்சை நோக்கித் தலைவன்
கூறியது.

பொருளுரை:  நெஞ்சே!  வட்டு


ீ மரத்தில் படர்ந்த கொடியின் ஒளியை உடைய முல்லை
மலர்களின் நறுமணத்தையுடைய அடர்ந்த கருமையான கூந்தலை உடைய இவள் இனி
நமக்கு யாரோ! எவ்வி என்ற வள்ளல் இறந்ததால் வறுமையுற்ற யாழ் வாசிக்கும்
பாணர்களின் பொற்பூ இல்லாத வெறும் தலையானது பொலிவு இழந்ததைப் போலப்
பொலிவு இழந்து நீ வருந்துவாயாக.

சொற்பொருள்:  எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர் – எவ்வி என்ற வள்ளல்


இறந்ததால் வறுமை அடைந்த பாணர்கள், பூ இல் வறுந்தலை போல – பொற்பூ இல்லாத
வெறும் தலையைப் போல, புல்லென்று – பொலிவின்றி, இனைமதி – நீ வருந்துவாயாக,
வாழிய நெஞ்சே – நெஞ்சே, மனை மரத்து எல் உறு மௌவல் – வட்டு
ீ மரத்தில் உள்ள
ஒளியுடைய காட்டு முல்லை மலர்கள், நாறும் – நறுமணமுடைய, பல் இரும் கூந்தல் –
அடர்ந்த கருமையான கூந்தல், யாரளோ நமக்கே – அவள் நமக்கு  யார் இனி.
குறுந்தொகை 20, கோப்பெருஞ்சோழன், பாலைத் திணை – தலைவி
தோழியிடம் சொன்னது
அருளும் அன்பும் நீக்கித், துணை துறந்து,
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக,
மடவம் ஆக மடந்தை நாமே.

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, தலைவி


இவ்வாறு கூறினாள்.

பொருளுரை:  அன்பையும் அருளையும் விலக்கி விட்டு, துணையான என்னை விட்டு


விலகி, பொருளுக்காகச் செல்லும் தலைவர் அறிவுடையவர் என்றால், அவர்
அறிவுடையவராகவே இருக்கட்டும். நான் மடமையானவளாகவே இருந்து விட்டு
போகின்றேன்.

சொற்பொருள்:  அருளும் அன்பும் நீக்கி – அன்பையும் அருளையும் நீக்கி, துணை துறந்து


– துணையான என்னை மறந்து, பொருள் வயின் பிரிவோர் – செல்வம் சேர்க்க பிரியும்
தலைவர், உரவோர் ஆயின் – அறிவுடையவர் என்றால், உரவோர் உரவோர் ஆக – அவர்
அறிவுடையவராக இருக்கட்டும், மடவம் ஆக மடந்தை நாமே –  நான்
மடமையானவளாக இருந்து விட்டு போகின்றேன்.

குறுந்தொகை 21, ஓதலாந்தையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம்


சொன்னது.
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றை,
கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே.

பாடல் பின்னணி:  தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி


வருந்துவாள் என்று எண்ணிய தோழியிடம் தலைவி கூறியது. 

பொருளுரை:  காட்டில், புதிய சரக் கொன்றை மலர்கள் தழைகளின் இடையே,


வண்டுகள் தேனுக்காக விழும்படி மலர்ந்துள்ளன.  அவை, பொன் நகைகளை அணிந்த
பெண்களின் கூந்தலைப் போல் தோன்றுகின்றன.  இது மழைக் காலம் என்று
காடு கூறினாலும், நான் நம்ப மாட்டேன்.  என்னுடைய காதலர் பொய் சொல்ல மாட்டார்.
சொற்பொருள்:  வண்டு படத் ததைந்த – வண்டுகள் வந்து வழும்படி
ீ செறிந்த, கொடி –
சரங்களாக, இணர் – கொதுக்களாக, இடையிடுபு – தழைகளின் இடையே, பொன் செய்
புனை இழை – பொன்னால் செய்த நகைகள், கட்டிய மகளிர் – அணிந்த மகளிர், கதுப்பின்
தோன்றும் – கூந்தலைப் போன்று தோன்றும், புதுப் பூங் கொன்றை – புதிய கொன்றை
மலர்கள், கானம் – காடு – மழைக் காலம் என்று கூறினாலும், யானோ தேறேன் – நான்
நம்ப மாட்டேன், அவர் பொய் வழங்கலரே – அவர் பொய் சொல்ல மாட்டார்.

குறுந்தொகை 22, சேரமானெந்தை, பாலைத் திணை – தோழி தலைவியிடம்


சொன்னது.
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே? சாரல்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்ணுதல் நின்னொடுஞ்செலவே. 

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து


வருந்திய தலைவியை தோழி ஆற்றுவித்தாள்.

பொருளுரை:  மலைப்பக்கத்திற்கு அழகு தரும், இதழ்கள் வலதுபுறம் சுரிந்த, கடம்ப


மரத்தின் வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையில் உள்ள மலர்களின் நறுமணம்
போன்ற, நறுமணம் பரவிய ஒளியுடைய நெற்றியுடையவளே!  தலைவர் பிரிவார் எனக்
கருதி நீ கண்ண ீர் வடிக்கின்றாய்.  நீ இங்கே தனியாக வருந்துமாறு உன்னை விட்டு யார்
தான் பிரிவார்?  தலைவர் உன்னுடன் தான் செல்லுவார்.

சொற்பொருள்:  நீர் வார் கண்ணை – கண்ண ீர் வடிக்கும் கண்களையுடையை, நீ இவண்


ஒழிய – நீ இங்கே தனியாக இருக்க, யாரோ பிரிகிற்பவரே – உன்னை விட்டு யார் தான்
பிரிவார், சாரல் சிலம்பணி கொண்ட – மலைப்பக்கத்தில் அழகு கொண்ட, வலஞ்சுரி
மராஅத்து – வலைப்பக்கத்தே இதழ்கள் சுரிந்த கடம்ப மரத்தின் மலர்கள், வேனில் அம்
சினை – வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளை, கமழும் தேம் ஊர் – நறுமணம்
பரவிய, தேன் வண்டுகள் மொய்க்கும், ஒண்ணுதல் – ஒளியுடைய நெற்றியுடையவளே,
நின்னொடுஞ்செலவே – உன்னுடன் செல்லுவார்.

குறுந்தொகை 23, ஔவையார், குறிஞ்சித் திணை – தோழி அகவன் மகளிடம்


சொன்னது.
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே.

பாடல் பின்னணி:  தோழி அறத்தொடு நின்றது.

பொருளுரை: கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே! கடவுளை அழைத்துப்


பாடும் கட்டுவிச்சியே! சங்கு மணியால் கோர்த்த கோவையைப் போன்ற நல்ல நீண்ட
கூந்தலையுடைய கட்டுவிச்சியே! பாட்டுக்களைப் பாடுவாயாக! இன்னும் பாடுவாயாக,
அவருடைய நல்ல உயர்ந்த குன்றைப் பற்றின பாட்டை!

சொற்பொருள்: அகவன் மகளே – கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே, அகவன்


மகளே – கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே, மனவுக் கோப்பு அன்ன – சங்கு
மணியால் ஆன கோவையைப் போன்ற, நன் நெடும் கூந்தல் – நல்ல நீண்ட கூந்தல்,
அகவன் மகளே – குறி சொல்லும் கட்டுவிச்சியே, பாடுக பாட்டே – பாட்டுக்களை
பாடுவாயாக, இன்னும் பாடுக – இன்னும் பாடுவாயாக, பாட்டே – பாட்டை, அவர் நன்
நெடும் குன்றம் பாடிய பாட்டே – அவருடைய நல்ல உயர்ந்த குன்றத்தைப் பற்றின
பாட்டு.

குறுந்தொகை 24, பரணர், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது.


கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழையக் கொடியோர் நாவே, 
காதலர் அகலக் கல்லென்றவ்வே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி உரைத்தது.

பொருளுரை:   கரிய அடிப்பகுதியையுடைய வேப்ப மரத்தின் ஒளியுடைய மிகுந்த புதிய


மலர்கள் என் தலைவன் இல்லாமல் வாடிச் சென்று விடுமோ? ஆற்றங்கரையில்
முளைத்து வளர்ந்த வெள்ளை கிளைகளையுடைய அத்தி மரத்தின், ஏழு நண்டுகள்
மிதித்த ஒரு பழம் போல, நான் வருந்துமாறு கொடியவர்களின் சொற்கள் கல்லென
முழங்கின, என்னுடைய காதலர் அகன்றதால்.

சொற்பொருள்:  கருங்கால் வேம்பின் – கரிய தாளையுடைய (அடிப்பகுதியையுடைய)


வேப்ப மரத்தின், ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ – ஒளியுடைய
மிகுந்த புதிய மலர்கள் என் தலைவன் இல்லாமல் சென்று விடுமோ, ஆற்று அயல்
எழுந்த வெண்கோட்டு அதவத்து – ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளை
கிளைகளையுடைய அத்தி மரத்தின், எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – ஏழு
நண்டுகள் மிதித்த ஒரு பழம் போல, குழைய – நான் வருந்த, கொடியோர் நாவே –
கொடியவர்கள் சொற்கள், காதலர் அகல – என்னுடைய காதலர் அகன்றதால்,
கல்லென்றவ்வே – கல்லென முழங்கின.

குறுந்தொகை 25, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது 


யாரும் இல்லைத், தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.

பாடல் பின்னணி:  தலைவன் நீண்ட காலம் தன்னை மணஞ்செய்யாமல் இருத்தல்


பற்றி தலைவி வருந்தித் தோழிக்குக் கூறியது.

பொருளுரை:  தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில், அங்கே சான்றாகத்


தக்கார் யாரும் இல்லை.  என் நலத்தை நுகர்ந்த கள்வன் அவன்.  அவன் என்னிடம்
கொடுத்த உறுதி மொழியிலிருந்து தவறினால் நான் என்ன செய்வேன்?  நான் அவனோடு
இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீ னின் வருகையைப்
பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகு
மட்டுமே இருந்தது.

சொற்பொருள்:  யாரும் இல்லை – யாரும் அங்கு இல்லை, தானே கள்வன்-  அவன்


கள்வன், அக்களத்தில் இருந்தவன் அவனே, சாட்சியாக இருந்தவன் அவனே, தான் அது
பொய்ப்பின் – அவன் உறுதிமொழி பொய்யானால், யான் எவன் செய்கோ – நான் என்ன
செய்வேன்,  தினைத்தாள் அன்ன – தினையின் அடிப்பகுதியைப் போல, சிறு பசுங்கால –
சிறிய பசிய கால்கள், ஒழுகு நீர் – ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும் – விலாங்கு மீ னின்
வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு – குருகு இருந்தது, தான் மணந்த ஞான்றே
– தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில்.
குறிஞ்சித் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  Mountain – வரை, மலை, குன்று,
Mountain slope – சாரல், Mountain range – அடுக்கம், Millet – ஏனல், தினை,  இறடி, Millet field –
அவணை,  Millet stubble – இருவி, தாள், Millet spikes – குரல் (millet spikes),  Grain stubble –
தட்டை and also bamboo rattle to chase parrots, Gadgets to chase parrots – வெதிர், புனை, தட்டை,
குளிர், தழல், கவண், தினை, Mountain farmer – புனவன், Mountain dweller –  குறவன், Forest
dweller – கானவன், Mountain girl – கொடிச்சி, High platform in the millet field –  கழுது, இதண்,
மிடை, Chasing parrots –  ஓப்புதல், Fauna – யானை, குரங்கு, மஞ்ஞை (peacock), கிளி,   புலி, 
பாம்பு, பன்றி, கேழல் (wild boar), வரை ஆடு, Bee – வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி, (mountain
goat),  Waterfalls – அருவி, Springs – சுனை, Fruit trees – பலாமரம், சந்தன மரம், வேங்கை
மரம், அகில் மரம், மாமரம், Bamboo – பணை, வேய், அமை, உந்தூழ், மூங்கில்,  Flowers –
குறிஞ்சி, குவளை (Blue waterlily), காந்தள் (Glorylily), Honey – தேன், Cloud – மஞ்சு,  மழை
(word is used for both cloud and rain),  Rain – பெயல், Wild rice – ஐவனம்.

முல்லைத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் – புறவு (முல்லை நிலம்), Fauna –


இரலை மான், முயல், ஆ (பசு), கன்று, ஆடு, முயல், Rain – மழை, கார், Flowers – முல்லை,
காயா, கொன்றை, குருந்தம், தோன்றல், பித்திகம், Chariot – தேர், Charioteer – பாகன், மாரி,
Cattle herders – கோவலர், ஆயர் – Flute – குழல்.

மருதத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  Pond – வயல், பழனம், குளம்,


கயம், பொய்கை, Field – கழனி, Farmers – உழவர், அரிநர், Paddy – நெல், Trees – மாமரம்,
ஞாழல் மரம், நொச்சி மரம், காஞ்சி மரம்,  மருத மரம், Sugarcane – கரும்பு, Fauna – நீர்நாய்
(otter), எருமை, காரான் (buffalo), குருவி, கோழி, சேவல்,  முதலை, களவன் (நண்டு),
கொக்கு, வாளை மீ ன், வாகை மீ ன், கெண்டை மீ ன், ஆமை, Flowers – ஆம்பல் தாமரை.

நெய்தற் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள் –   கடல், கடற்கரை, பரதவர், மீ ன்,


சுறா, முதலை, திரை (wave), அலை, கானல் (கடற்கரை சோலை),  திமில் (boat), அம்பி
(boat), சேரி (settlement) , புன்னை, ஞாழல், Fragrant screwpines – தாழை, கைதல், கைதை, 
உப்பு, உமணர் (salt merchant), உப்பங்கழி (salty land), மணல், எக்கர் (மணல் மேடு), அலவன்
(நண்டு), அடும்பு (a creeper with beautiful pink flowers), நெய்தல் (blue waterlily), ஆம்பல் (white
waterlily), Conch – கோடு, வளை, Fishing net – வலை, Birds – குருகு, நாரை, அன்றில்.

பாலைத் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள்  –  Wasteland/wasteland path அத்தம்,


சுரம், Path – நெறி, ஆறு, Wasteland tribes – எயினர், Fauna – பல்லி, ஓதி, ஓந்தி (garden lizard),
செந்நாய், யானை, புலி,  பாதிரி (summer blooming flower), கள்ளி (cactus), Trees – யா மரம்,
ஓமை, குரவம், கோங்கு மரம்,  ஞெமை, இருப்பை மரம், வேம்பு, மூங்கில், உகாய், Eagle –
கழுகு,  Shallow grave – பதுக்கை,  பரல் கற்கள்.

You might also like