You are on page 1of 11

குயில் பத்து

கீ தம் இனிய குயிலே! கேட்டியேல், எங்கள் பெருமான்

பாதம் இரண்டும் வினவின், பாதாளம் ஏழினுக்கு அப்பால்;

சோதி மணி முடி சொல்லின், சொல் இறந்து நின்ற தொன்மை

ஆதி குணம் ஒன்றும் இல்லான்; அந்தம் இலான்; வரக் கூவாய்!

ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த, எவ் உருவும் தன் உரு ஆய்,

ஆர்கலி சூழ் தென் இலங்கை, அழகு அமர் வண்டோதரிக்கு,

பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை;

சீரிய வாயால், குயிலே! தென் பாண்டி நாடனை; கூவாய்!

நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும்

கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில்,

சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை,

ஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய்!

தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,

வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;

ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;

மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை; நீ வரக் கூவாய்!


சுந்தரத்து இன்பக் குயிலே! சூழ் சுடர் ஞாயிறு போல,

அந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்;

முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச்

சிந்துரச் சேவடியானை; சேவகனை; வரக் கூவாய்!

இன்பம் தருவன்; குயிலே! ஏழ் உலகும் முழுது ஆளி;

அன்பன்; அமுது அளித்து ஊறும் ஆனந்தன்; வான் வந்த தேவன்;

நன் பொன் மணிச் சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானை;

கொம்பின் மிழற்றும் குயிலே! கோகழி நாதனை; கூவாய்!

உன்னை உகப்பன்; குயிலே! உன் துணைத் தோழியும் ஆவன்,

பொன்னை அழித்த நல் மேனிப் புகழின் திகழும் அழகன்,

மன்னன், பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறை மேய

தென்னவன், சேரலன், சோழன், சீர்ப் புயங்கன், வரக் கூவாய்!

வா, இங்கே, நீ, குயில் பிள்ளாய்! மாலொடு நான்முகன் தேடி,

ஓவி, அவர் உன்னிநிற்ப, ஒண் தழல் விண் பிளந்து ஓங்கி,

மேவி, அன்று, அண்டம் கடந்து, விரி சுடர் ஆய், நின்ற மெய்யன்;

தாவி வரும் பரிப் பாகன்; தாழ் சடையோன்; வரக் கூவாய்!


கார் உடைப் பொன் திகழ் மேனி, கடி பொழில் வாழும், குயிலே!

சீர் உடைச் செம் கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன்;

பாரிடைப் பாதங்கள் காட்டி, பாசம் அறுத்து, எனை ஆண்ட

ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை; நீ, வரக் கூவாய்!

கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே! இது கேள் நீ;

அந்தணன் ஆகி வந்து, இங்கே, அழகிய சேவடி காட்டி,

`எம் தமர் ஆம் இவன்' என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும்,

செம் தழல் போல் திருமேனித் தேவர் பிரான், வரக் கூவாய்!


கீ த மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந் துந்நின்ற தொன்மை
ஆதி குணம்ஒன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய்.

பதப்பொருள் : கீ தம் இனிய குயிலே - இசை இனிமையாய் உள்ள குயிலே,


எங்கள் பெருமான் - எம்பெருமானது, பாதம் இரண்டு வினவில் - திருவடி
இரண்டும் எஙகுள்ளனவெனக் கேட்டால், பாதாளம் ஏழினுக்கு அப்பால் - அவை
கீ ழுலகம் ஏழினுக்கும் அப்பால் உள்ளன என்க, சோதி மணிமுடி சொல்லில் -
அவனது ஒளி பொருந்திய அழகிய திருமுடி எங்குள்ளது என்று சொல்லப்புகின்,
சொல் இறந்து நின்ற தொன்மை - அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற
பழமையுடையது எனப்படும், கேட்டியேல் - இவற்றைக் கேட்டாயாயின், ஆதி
குணம் ஒன்றும் இல்லான் - முதலும் குணமும் ஒன்றும் இல்லாதவனும், அந்தம்
இலான் - முடிவு இல்லாதவனுமாகிய அவனை, வரக் கூவாய் - நீ இங்கு வரும்படி
கூலி அழைப்பாயாக.

விளக்கம்: குயிலை, 'நீ இறைவனை அழைத்தற்குத் தகுதியுடையாய்'


என்பாள், 'கீ தம் இனிய குயிலே' என விளித்தாள். 'வினவில்', 'சொல்லில்'
என்றாற்போல வரும் 'செயின்' என்னும் வாய்பாட்டு எச்சங்கள் சொல்லெச்சமாக
யாதேனும் ஒரு சொல் வருவித்து முடிக்கப்படுதல் அறிக, 'அப்பால்' என்பதிலும்,
'உள்ளன' என்பது சொல்லெச்சமாய் நின்றது. 'தொன்மை' என்பது,
தொன்மையுடையது' எனப் பொருள் தந்தது ஆகுபெயர். எனவே, மணிமுடி'
என்பதற்கு 'நின்றது' என்பதே முடிபாயிற்று.

இப்பாடல்களில் ஒவ்வொர் அடியிலும் உள்ள சீர்கள் இருவகை


வெண்டளையும் பெற்று வருவன. ஆதலின், 'சொல்லிறந்துந் நின்ற' என்று
கொள்ளப்பட்டது. நகரவொற்று விரித்தல்.

இதனால், இறைவன் பெருமை கூறப்பட்டது.

1
ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன னுருவாய்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்
பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குறிலே தென்பாண்டி நாடனைக் கூவாய்.

பதப்பொருள் : குயிலே - குயிலே, ஏர் தரும் - அழகுடன் விளங்கும், ஏழுலகு


ஏத்த - ஏழுலகத்தாரும் துதிக்க, எவ்வுருவும் - எவ்வகை உருவங்களும், தன் உரு
ஆய் - தன் உருவமாகவே உடையவனாய், ஆர்கலி சூழ் - நிறைந்த
முழக்கமுடைய கடல் சூழ்ந்த, தென்னிலங்கை - தென்னிலங்கையில், அழகு
அமர் வண்டோதரிக்கு - அழகு பொருந்திய இராவணன் மனைவியாகிய
வண்டோதரிக்கு, பேரருள் - பெருங்கருணையால், இன்பம் அளித்த - இன்பத்தைக்
கொடுத்த, பெருந்துறை மேய பிரானை - திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள
பெருமானை, தென்பாண்டி நாடனை - தென்பாண்டி நாட்டையுடையவனை, சீரிய
வாயால் கூவாய் - சிறந்த உன் வாயினால் கூவி அழைப்பாயாக.

விளக்கம் : இறைவனை ஒருவனே எல்லாவுலகமுமாய்க் கலந்து


நிற்கின்றான் ஆதலின், 'எவ்வுரு வுந்தன் னுருவாய்' என்றாள். குயிலுக்கு வாய்
சிறப்புடைமையின், 'சீரிய வாயாற் குயிலே' எனப் புகழ்ந்தாள்.

வண்டோதரிக்கு இன்பம அளித்தது :

முன்னொரு நாள் திருவுத்தரகோச மங்கையில் பெருமான் இலந்தை


மரத்தடியில் முனிவர்களுக்கு ஆகமப் பொருளை அருளிக்கொண்டிருந்தான்.
அப்போது இலங்கை மன்னனது மனைவி வண்டோதரி வேண்ட, அவளது
பூசைக்கு இரங்கிப் பெருமான் முனிவர்களையும் விடுத்து, அவளுக்குக் குழந்தை
வடிவத்தில் காட்சியளித்தான். சிவபூசையில் சிறந்தவனாகிய இராவணனும்
குழந்தை வடிவத்தில் கிடந்த பெருமானைத் தூக்கி எடுத்து உச்சி மோந்து
பேரானந்தம் கொண்டான்.

இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது.

2
நீ ல வுருவிற் குறிலே நீ ள்மணி மாடம் நிலாவுங்
கோல உருவில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில்
சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய்.

பதப்பொருள் : நீல உருவில் குயிலே - நீல நிறத்தையுடைய குயிலே, நீள்


மணி மாடம் - மணிகள் பதித்த பெரிய மாடங்கள், நிலாவும் - விளங்குவதும், சீலம்
பெரிதும் இனிய - நல்லொழுக்கத்தால் மிக இனியதுமான, திருவுத்தரகோச
மங்கை உள்ளுறை கோயில் - திருவுத்தரகோச மங்கையில் பொருந்தியுள்ள
திருக்கோயிலில், கோல உருவில் - அழகிய வடிவில், திகழும் - விளங்கும்,
கொடிமங்கை - பூங்கொடி போன்ற உமாதேவியுடன், ஞாலம் விளங்க இருந்த -
உலகத்திற்கு விளக்கம் உண்டாகும்படி வற்றிருந்த,
ீ நாயகனை - தலைவனை,
வரக்கூவாய் - வரும்படி கூவி அழைப்பாயாக.

விளக்கம் : திருவுத்தரகோச மங்கை ஒழுக்கம் மிக்க பெரியோர்களை


உடைமையால், 'சீலம் பெரிதும் இனிய' என்றாள். அங்கு இறைவன்
ஆகமப்பொருளை பெரியோர்களுக்கு உபதேசித்தமையால், 'ஞாலம் விளங்க
இருந்த நாயகன்' என்றாள்.

இதனால், இறைவன் விளக்கம் தருபவன் என்பது கூறப்பட்டது.

தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ


வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
மான்பழித் தாண்டமென் ணோக்கி மணாளனை நீ வரக்
கூவாய்.

பதப்பொருள் : தேன்பழச் சோலை பயிலும் - தேன் நிறைந்த


பழங்களையுடைய சோலைகளில் சஞ்சரிக்கின்ற, சிறுகுயிலே - சிறிய
குயிலே, இது - இதனை, நீ கேள் - நீ கேட்பாயாக, வான் பழித்து -
விண்ணுலகத்தை விட்டு நீங்கி, இம்மண் புகுந்து - இம்மண்ணுலகத்து
எழுந்தருளி, மனிதரை ஆட்கொண்ட வள்ளல் - மக்களை அடிமை
கொண்ட அருளாளனும், ஊன் பழித்து - என் உடம்பினை இகழ்ந்து,
உள்ளம் புகுந்து - என் நெஞ்சினுள் புகுந்து, என் உணர்வது ஆய ஒருத்தன்
- என் உணர்வில் கலந்த ஓப்பற்றவனும், மான் பழித்து - மானினது
பார்வையை இகழ்வதாயும், ஆண்ட - ஆளும் தன்மையுடையதாயும்,
மெல் நோக்கி - இனிமையுடைதாயுமுள்ள பார்வையையுடைய
உமாதேவிக்கு, மணாளனை - நாயகனுமாகிய இறைவனை, வர நீ
கூவாய் - வரும்படியாக நீ கூவி அழைப்பாயாக.

விளக்கம் : அருளை வாரி வழங்குபவனாதலின், 'வள்ளல்' என்றும்,


அவ்வண்ணம் ஆட்கொள்வார் வேறொருவர் இல்லையாதலின்,
'ஒருத்தன்' என்றும், தேவியோடு தோன்றியே ஆட்கொள்வானாதலின்,
'மணாளன்' என்றும் பெருமானது இயல்பினை வரிசைப்படுத்திக்
கூறினாள்.

'மான் பழித்து ஆண்ட' என்பது, தேவியினது நோக்கத்தின்


கவர்ச்சியும் அருளும் இனிமையும் கூறியபடியாம்.

இதனால், இறைவனது இயல்பு கூறப்பட்டது.

சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல


அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யாணைச் சேவக னைவரக் கூவாய்.

பதப்பொருள் : சுந்தரம் - அழகிய, இன்பக்குயிலே - இனிமையைத்


தருகின்ற குயிலே, சூழ் சுடர் - சூழ்ந்த கிரணங்களையுடைய, ஞாயிறு
போல - சூரியனைப் போல, அந்தரத்தே நின்று இழிந்து -
ஆகாயத்தினின்றும் இறங்கி, இங்கு-இம்மண்ணுலகிலுள்ள, அடியவர் -
அடியார்களது, ஆசை அறுப்பான் - பற்றுகளை ஒழிப்பவனும், முந்தும் -
உலகத்திற்கு முதலும், நடுவும் - இடையும், முடிவும் ஆகிய - இறுதியும்
ஆகிய, மூவர் அறியா - பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவர்
அறியவொண்ணாத, சிந்துரச் சேவடியானை - செஞ்சாந்து போன்ற
சிவந்த திருவடியையுடையவனும், சேவகனை - வரனுமாகிய

பெருமானை, வரக் கூவாய் - வரும்படியாகக் கூவி அழைப்பாயாக.

விளக்கம் : 'சுந்தரத்து' என்றதில் உள்ளது 'அத்து' சாரியை. அடிகளை


ஆட்கொள்ள வந்த பொழுது இறைவனது திருமேனி
பேரொளியுடையதாய் இருந்தமையால், 'சூழ்சுடர் ஞாயிறு போல,
என்றார். 'முந்தும் நடுவும் முடிவும்' என்றது, படைத்துக் காத்து
அழித்தலாகிய முத்தொழிலைக் குறித்தது. குணமூர்த்திகளாகிய பிரம
விட்டுணுக்களோடு ஒருவனாய் நிற்கும் உருத்திரனும்
குணமூர்த்தியேயாதலால், நிர்க்குணனாகிய சிவபிரான் அம்மூவராலும்
அறியப்படாதவன் என்பார், 'மூவரறியாச் சிந்துரச் சேவடியான்' என்றார்.

இதனால், இறைவன் மும்மூர்த்திகளுக்கும் மேற்பட்டவன் என்பது


கூறப்பட்டது.

இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி


அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய்.

பதப்பொருள் : குயிலே - குயிலே, கொம்பில் மிழற்றும் குயிலே -


மரக்கிளையில் இருந்து கூவுகின்ற குயிலே, இன்பம் தருவன் - உனக்கு
இன்பத்தைச் செய்வேன், ஏழ் உலகும் - ஏழு உலகத்தையும், முழுது ஆளி
- முற்றும் ஆள்வோனும், அன்பன் - அன்பனும், அமுது அளித்து - இனிய -
அமுதத்தைப் பெய்து, ஊறும் ஆனந்தன் - அடியார் உள்ளத்தை
ஊறுகின்ற ஆனந்த வடிவானவனும், வான் வந்த தேவன் -
விண்ணினின்றும் எழுந்தருளின தேவனும், நல்பொன் மணிச் சுவடு
ஒத்த - உயர்ந்த பொன்னில் மாணிக்கங்களைப் பதித்தது போன்ற, நல்
பரிமேல் வருவானை - நல்ல குதிரையின்மீ து வந்தவனும்,
கோகழிநாதனை - திருப்பெருந்துறைத் தலைவனுமாகிய பெருமானை,
கூவாய் - கூவி அழைப்பாயாக.

விளக்கம்: குயிலுக்கு இன்பம் செய்தலாவது, பழம்


முதலியவற்றைத் தருதல். சித்தத்தே தித்திக்கும் தேனாதலின்,
'அமுதளித்து ஊறும் ஆனந்தன்' என்றாள். 'பொன் மணிச்சுவடு ஒத்த
நற்பரி' என்பது, பொன்னிறத்தில் சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரை
என்பதாம்.

இதனால், இறைவன் ஆனந்த வடிவாய் இருப்பான் என்பது


கூறப்பட்டது.

6
உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப் புகழின் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கள்வரக் கூவாய்.

பதப்பொருள்: குயிலே - குயிலே, உன்னை உகப்பன் - உன்னை விரும்புவேன்,


உன் துணைத் தோழியும் ஆவன் - உனக்குத் துணை புரியும் தோழியுமாவேன்,
பொன்னை அழித்த - பொன்னை வென்ற, நல் மேனி - அழகிய
திருமேனியையுடைய, புகழின் திகழும் - புகழினால் விளங்குகின்ற, அழகன் -
அழகனும், மன்னன் - (யாவர்க்கும்) அரசனும், பரிமிசை வந்த வள்ளல் -
குதிரைமேல் ஏறிவந்த அருளாளனும், பெருந்துறை மேய திருப்பெருந்துறையில்
எழுந்தருளியுள்ள, தென்னவன் - பாண்டியனும், சேரலன் - சேரனும், சோழன் -
சோழனும், சீர்ப்புயங்கன் - சிறந்த பாம்பு அணிகளையுடையவனுமாகிய
பெருமானை, வரக் கூவாய் - வரும்படியாகக் கூவி அழைப்பாயாக.

விளக்கம்: 'உன்னை உகப்பன் உன்துணைத் தோழியும் ஆவன்' என்றது,


தலைவியின் ஆற்றாமையைக் காட்டியபடி. காண்பதற்கு இனிமையானது அழகு;
கேட்பதற்கு இனிமையானது புகழ்; இரண்டையும் உடையவன் பெருமானாதலின்,
'புகழின் திகழும் அழகன்' என்றாள். 'தென்னவன் சேரலன் சோழன்' என்றது
மூவேந்தருமாய் இருந்து உலகத்தை ஆள்பவன் என்பதாம்.

இதனால், இறைவன் உலகத்தை ஆள்பவன் என்பது கூறப்பட்டது.

7
வாவிங்கே நீ குயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவி யவருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி
மேவியன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய்.

பதப்பொருள்: குயில் பிள்ளாய் - இளங்குயிலே, நீ இங்கே வா - நீ இவ்விடத்து


வருவாயாக, மாலொடு - திருமாலோடு, நான்முகன் பிரமனும், தேடி -
அடிமுடிகளைத் தேடி, ஓவி - தேடுவதை விட்டு, அவர் - அவ்விருவரும், உன்னி
நிற்ப - தன்னைத் தியானித்து நிற்கும்படி அன்று - அக்காலத்தில், ஓள் தழல் - ஒளி
மி்க்க அனற்பிழம்பாய், விண் பிளந்து ஓங்கி - ஆகாயத்தைப் பிளந்து உயர்ந்து,
மேவி - பொருந்தி, அண்டம் கடந்து - விண்ணுலகங்களையும் தாண்டி, விரி சுடர் -
பரந்த சுடர்களை விட்டுக்கொண்டு, நின்ற மெய்யன் - நின்ற உண்மைப்
பொருளானவனும், தாவி வரும் - தாவி வருகின்ற, பரிப்பாகன் - குதிரைப்
பாகனாயிருப்பவனும், தாழ்சடையோன் - நீண்ட சடையையுடையவனுமாகிய
தலைவனை, வரக் கூவாய் - வரும் படியாகக் கூவி அழைப்பாயாக.

விளக்கம் : ஒள் தழலாகப் பெருமான் தோன்றிய இடம் திருவண்ணாமலை


என்பது முன்னே கூறப்பட்டது. சுடர் என்றது தழலினின்றும தோன்றுவது
ஆதலின், தழலாய் ஓங்கிச் சுடராய் நின்றான் என்றாள். 'சுடர் விட்டுளன் எங்கள்
சோதி' என்றார் திருஞானசம்பந்தரும்.

இதனால், இறைவன் திருமேனி அனற்பிழம்பானது என்பது கூறப்பட்டது.

8
காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச் செங்கம லத்தின் திகழுரு வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீ வரக் கூவாய்.

பதப்பொருள்: கார் உடை - கரிய நிறத்தோடு, பொன் திகழ் மேனி - பொன்னைப்


போன்று ஒளி விளங்கும் உடம்பையுடைய, கடிபொழில் வாழும் - மணம் நிறைந்த
சோலையில் வாழ்கின்ற, குயிலே - குயிலே, சீர் உடை - சிறப்பினையுடைய,
செங்கமலத்தின் - செந்தாமரை போல, திகழ் - விளங்குகின்ற, உரு ஆகிய
செல்வன் - திருமேனியையுடைய செல்வனும், பாரிடை - நிலவுலகத்தில்,
பாதங்கள் காட்டி - திருவடிகளைக் காட்டி, பாசம் அறுத்து - பற்றுகளை ஒழித்து,
எனை ஆண்ட - என்னை ஆண்டருளின, ஆர் உடை - ஆத்தி மாலையையுடைய,
அம்பொனின் மேனி - அழகிய பொன் போலும் மேனியையுடைய, அமுதினை -
அமுதம் போல்பவனுமாகிய பெருமானை, வர நீ கூவாய் - வரும்படியாக நீ கூவி
அழைப்பாயாக.

விளக்கம்: பொன் திகழ் மேனி என்றது, பொன் போலும் அழகுடையது என்ற


பொருளில் வந்தது. செல்வன் என்றது அருட்செல்வத்தையுடையவன் என்றபடி.
பாசம் அறுத்து ஆண்டது திருப்பெருந்துறையில் என்க. ஆத்தி மாலை
பெருமானுடைய அடையாள மாலை.

இதனால், இறைவன் அருளாகிய செல்வத்தையுடையவன் என்பது கூறப்பட்டது.


கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண ணாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தம ராமிவ னென்றிங் கென்னையும் ஆட்கொண் டருளும்
செந்தழல் போல்திரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய்.

பதப்பொருள் : கொந்து அணவும் - பூங்கொத்துகள் நெருங்கிய, பொழில்


சோலை - பெரிதாகிய சோலையில், கூங்குயிலே - கூவுகின்ற குயிலே, நீ இது
கேள் - நீ இதனைக் கேட்பாயாக, இங்கே அந்தணன் ஆகி வந்து - இவ்வுலகில்
வேதியனாகி வந்து, அழகிய சேவடி காட்டி - அழகிய செம்மையாகிய
திருவடியைக் காட்டி, எம் தமராம் இவன் என்று - எம் அன்பரில் ஒருவனாம் இவன்
என்று, இங்கு - இவ்விடத்தில், என்னையும் ஆட்கொண்டருளும் - என்னையும்
அடிமை கொண்டருளின, செந்தழல் போல் திருமேனி - சிவந்த தீப் போலும்
திருமேனியையுடைய, தேவர் பிரான் - தேவர் பெருமான், வரக் கூவாய் -
வரும்படியாகக் கூவி அழைப்பாயாக.

விளக்கம் : பொழில் - பெரிய சோலை. ஆம் பொருள், போம் பொருள் என்பன


போல, 'கூம் குயில்' என வந்தது. 'எம்' என்றது, இறைவனைப் பன்மையாகக்
கூறியதாம். தழல் துய்மை செய்யும் இயல்பையுடையது ஆதலின், மாசு நீக்கம்
விரும்புவாள், 'செந்தழல் போல் திருமேனித் தேவர் பிரான்' என்றாள்.

இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்

You might also like