You are on page 1of 3

அகநானூறு

(தலைவன் கூற்று)

அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்புநூல் அகநானூறு எனப்படுகிறது.


இதற் கு நெடு ந் தொ கை என் ற வேறு பெயரு ம் உண் டு . இதில் அடங்கியுள்ள
பாடல் க ள் பல் வேறு காலங் க ளில் வாழ் ந் த பல் வேறு பு லவர் க ள் பாடி ய பாடல் க ளின்
தொகுப்பாகும்.

திணை : மருதம்
துறை : வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
பாடி யவர் : நல்லாவூர் கிழார்

“உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை


பெரு ஞ் சோ ற் று அ மலை நிற் ப, நிரைகால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி,
மனை விளக்குறுத்து, மாலை தொடரி”

மிக்க இருளானது நீங்கிய அழகுடைய விடியற்காலையில் தீய கோள்களின் தொடர்பு


நீங்கப்பெற்ற வளைந்த வெண்மையான திங்களினைக் குற்றமில்லாத சிறந்த புகழை உடைய
உரோ கிணி என் ற நாள் (நட்சத்திரம்) அடைந்தது. அப்போது தம் இல்லத்தில் உளுத்தம்
பரு ப் பு டன் ச மைத் த பொங் க லு டன் (களியுடன்) மிக்க சோற்றையும் உறவினரும்
மற்றவரும் உண்ணும் ஆரவாரம் இடையறாது கேட்கின்றது. வரிசையான கால்களை உடைய
குளிர்ந்த பெரிய திருமணப் பந்தலில் புதியதாகக் கொண்டுவந்த மணலைப் பரப்பி வீட்டில்
விளக்கை ஏற்றி வைத்து மாலைகளைத் தொங்க விட்டிருந்தனர்.
தலையில் குடம் ஏந்தியவரும், பு திய அ க ன் ற வாயை உடை ய மட் பாத் திரத் தை
உடை யவரு ம் ஆ கிய திரு மண த் தை ச் செய் து வை க் கு ம் மங் க ல மு திய மக ளிர்
முன்னே தரவேண்டியவற்றையும் பின்னே தரவேண்டியவற்றையும் முறை முறையாக எடுத்துத்
தந்தனர்.

மகனைப் பெற்ற தேமலையுடைய அழகிய வயிற்றை உடைய தூய அணிகலன்கள் அணிந்த


மகளிர் நால்வர் ஒன்று கூடி நின்று ‘கற்பினின் று ம் வழு வாது , உன் க ண வனு க் கு ப் பல
உதவிக ளை ச் செய் து நின் னை மனை வியாக ப் பெற் ற உன் க ண வனை நீ பெரிது ம்
விரும்புகின்றவள் ஆவாய்!’ எனச் சொல்லி வாழ்த்தி, மங்கல நீருடன் நனைந்த இதழ்களை உடைய
பூக் க ள் க ரிய கூந் தலின் மீ து நெல்லினையும் தூவினர். திருமணம் முடிந்து பின்பு,

சுற்றத்தார் கல் என்ற ஒலியினராய் விரைந்து வந்து தலைவியை நோக்கி, ‘நீ பெரிய
மனை வாழ்க்கைக்கு உரியவளாக ஆகுக’! என்று வாழ்த்தி, என்னிடம் அவளைக் கூட்டினர். ஓ ர்
அறையில் புணர்ச்சிக்குரிய இரவில், அவள் நாணத்தால் தன் புதுப்புடவைக்குள் ஒடுங்கிக் கிடந்த
இடத்தை நான் அடைந்தேன். அவளைத் தழுவும் விருப்பத்துடன் அவள் முகத்தை
மூடியிருந்த புடவையைச் சிறிது திறந்தேன். அப்போது அவள் தன் பெண்மையால் அஞ்சிப்
பெரு மூச் செறிந் தாள் . அப்போது ‘உன் உள்ளம் எண்ணியதை மறைக்காது சொல்வாய்!’ எனப்
பின் பு வின வினே ன் . அதனால் இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையில், மானைப் போன்று
மடத்தையும் செருக்கை உடையதுமான பார்வையும், ஒடுங்கிய கூந்தலையும் உடைய மாமை
நிறத்தை உடையவள் சிவந்த மணிகள் பதித்த ஒளி பொருந்திய குழை காதில் அசைய, உள் ளம்
நிறைந்த மகிழ்ச்சியோடு விரைந்து தலை குனிந்தாள்.

துறை விளக்கம் : பரத் தை யர் சே ரியினின் று ம் வந் த தலை வன் தோ ழியை வாயிலாக
வேண்டினான்; தோழி, அதனை மறுத்தபோது அவன் முன்னர் நிகழ்ந்த ஒன்றை நினைவு கூர்ந்து
அவளுக்குச் சொல்லியது. தலைவியோடு மகிந்திருந்த தலைவன், தலைவிக்கு முன்பு நிகழ்ந்ததைச்
சொல்லியதுமாம்.

ஓரிரு சொற்களில் விடை தருக.

1. ' உழு ந் து தலை ப் பெய் த' எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?
விடை: நல்லாவூர் கிழார்

2. 'கம்பலை' பொரு ள் கூறு க .


விடை: ஆரவாரம்

3. 'வால் இழை மகளிர் நால்வர்' இதில் ‘வால் இழை’ என்பது எதனைக் குறிக்கிறது.
விடை: மங்கல அணிகலன்

4. 'பேர் இல் கிழத் தி ஆ க ' - யார் யாரிடம் கூறியது


விடை: முது மகளிர் மணமகளிடம் கூறியது

5. ‘திதலை’ என்பதன் பொருள் யாது?


விடை: தேமல்

6. உள் ளத் தில் உள் ளதை மறை க் காமல் கூறு ? என்று யார் யாரிடம் வினவியது?
விடை: தலைவன் தலைவியிடம்

7. காதில் அணியும் அணிகலன்


விடை: குழை

8. 'வதுவை ' என்ற சொல்லின் பொருள் யாது


விடை: திருமணம்
9. 'பெற் றோ ற் பெட் கு ம் பிணை யை ஆ க !' யார் யாரை வாழ்த்தியது.
விடை: முதுமகளிர் மணமகளை வாழ்த்தியது.

10. பழந் தமிழரின் திரு மண மு றை யைக் கு றிப் பிடு ம் ச ங் க இல க் கிய நூல் எது ?
விடை: அகநானூறு

11. ‘செம்முது மகளிர்’ என்பது யாரைக் குறிக்கும்


விடை: ஆண்மகனைப் பெற்ற மகளிர்.

12. திருமணத்திற்கு எது சிறந்த நாளென அகநானூறு குறிப்பிடுகின்றது.


வினை: உரோ கிணி

13. ‘கோடிக் கலிங்கம்’ என்பதன் பொருள் யாது?


விடை: பு திய ஆ டை

14. ‘உவகை ’ என் பதன் பொரு ள் யாது ?


விடை: மகிழ்ச்சி

You might also like