You are on page 1of 38

¬ì¸õ: ¸¨ÄÅ¡½¢ ÀÆÉ¢ÓòÐ

சேக்கிழார்
நாயன்மார்கள்
 நாயன்மார்களில் பெண்கள்
அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். கி.பி.
3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார்
நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து
வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால்
அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.
மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய
மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற
அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்கரசியார்
என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண் ஆவார்.
திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின்
மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயன்மார்
ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார்
சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மார்களில்
ஒருவரும் ஆவார்.
பாடல் எண் : 6

செல்வம் மேவிய நாளி லிச்செயல்


   செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
   வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
   றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
   உன்னி னார்தில்லை மன்னினார்.

பொழிப்புரை :
தமக்குச் செல்வம் பெருகியிருந்த காலத்தில் இவ்வாறு அடியவர்
வழிபாட்டைச் செய்துவந்ததன்றி, துன்பத்தை விளைவிக்கும் வறுமை
உண்டாய விடத்தும், தமக்குரிய உண்மை யான பத்திமையால் இவ்வாறு
செய்வரென்பதை யாவர்க்கும் அறிவிக்கும் பொருட்டு, வளத்தால் உயர்ந்த
இவர் செல்வம் மெல்ல மெல்லக் குறைந்து நாள்தோறும் நிலைமை திரிய
விரைவில் வறுமைத் தன்மையை அடையுமாறு, தில்லைமாநகரில்
வீற்றிருந்தருளும் சிவ பெருமான் திருவுள்ளம் கொண்டருளினார்.
பாடல் எண் : 9

மாரிக் காலத் திரவினில் வைகியோர்


தாரிப் பின்றிப் பசிதலைக் கொள்வது
பாரித் தில்லம் அடைத்தபின் பண்புற
வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன்.

பொழிப்புரை :
மழைக்காலத்தில் ஓர் இரவில், தனியே இருந்து
அடக்கற்கரிய பசி மீதூர்வதை அடக்கிக் கொண்டு,
வீட்டை அடைந்து தாழிட்டுக் கொண்ட பின்னும்,
மணம் மிகத் தேன் சிந்தும் குவளை மாலையையுடைய
நாயனாரின் இல்லத்திற்குச் சிவபெருமான் விருந் தாக
வர, நாயனார் அவ்வடியவரை எதிர்கொண்டு
வரவேற்றார்.
பாடல் எண் : 12

மாது கூறுவள் மற்றொன்றும் காண்கிலேன்


ஏதி லாரும் இனித்தரு வாரில்லை
போதும் வைகிற்றுப் போமிடம் வேறிலை
தீது செய்வினை யேற்கென் செயலென்று.

பொழிப்புரை :

இதற்கு அவ்வம்மையார் விடை கூறுவாராய், அடியவரை


உண்பிப்பதற்கு வேறு வழியொன்றும் காண்கிலேன்; பிறர்
எவரும் இனிக் கொடுப்பவர்களாயும் இல்லை, காலமும்
கழிந்து நள்ளிரவாயிற்று, இவற்றையெல்லாம் விடுத்து
இனிச்சென்று தேடுதற் குரிய இடமும் வேறில்லை,
தீவினையேன் ஆகிய எனக்குமேற் கொண்டு
செயத்தக்கதும் தெரிந்திலது` என்று கூறியவர், மேலும்
எண்ணி
பாடல் எண் : 13
செல்லல் நீங்கப் பகல்வித்தி யசெந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக்கொ டுவந்தால்
வல்ல வாறமு தாக்கலும் ஆகுமற்
றல்ல தொன்றறி யேனென் றயர்வுற.
 
பொழிப்புரை :
நம் துன்பம் நீங்குமாறு இன்றைய பகற் பொழுதில்
வயலில் விதைத்திருந்த செழிப்பாக நீரில்
முளைத்தற்குரிய நெல்லைத் தாங்கள் வாரிக்
கொண்டுவந்தால், அடியேன், அதற்கேற்ற வகையில்
உணவாக்கித் தருதலுமாகும், இதுவன்றி வேறொரு
வழியில்லை` என்று வருந்தினாராக.
பாடல் எண் : 16

எண்ணு மிவ்வுல கத்தவர் யாவருந்


துண்ணெ னும்படி தோன்றமுன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம் பாம்என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து.

பொழிப்புரை :
இதனை எண்ணுகின்ற இவ்வுலகினர் யாவரும் `துண்`
என நடுக்கமுற, அவ்வாறு அவ்விருள் பெருகி முன்னே
தோன்றும் காலத்தில், மைக்குழம்பு இதுவாம் என
வெளியில் எவரும் இயங்காதவாறு இருள் மிகுந்த
நடுயாமத்தில்.
பாடல் எண் : 18

காலி னால்தட விச்சென்று கைகளால்


சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன
கோலி வாரி யிடாநிறை யக்கொண்டு
மேலெ டுத்துச் சுமந்தொல்லை மீண்டனர்.

பொழிப்புரை :
முளைத்தற்கென நெல் விட்டிருக்கும் இடத்தைக் காலால்
தடவிப் பார்த்துப் பின்பு சென்று கைகளினால் சம்பா
நெல்லின் வெள்ளிய முளைகள் நீர்வழிஒதுங்கி
இருந்தவற்றைச் சேர்த்து, வாரிக் கூடை நிறையக்
கொண்டு, தலைமீது எடுத்துச் சுமந்து கொண்டு
விரைவாகத் தம் இல்லத்திற்கு மீண்டார்.
பாடல் எண் : 20
முறித்தவை அடுப்பின் மாட்டி
    முளைவித்துப் பதமுன் கொள்ள
வறுத்தபின் அரிசி யாக்கி
    வாக்கிய உலையிற் பெய்து
வெறுப்பில்இன் அடிசி லாக்கி
   மேம்படு கற்பின் மிக்கார்
கறிக்கினி யென்செய் கோமென்
   றிறைஞ்சினார் கணவ னாரை.

பொழிப்புரை :
அம்மனையிடத்துப் பெற்ற அலக்குகளை ஒடித்து அடுப்பில் சேர்த்து,
முளை நெல் விதையை, முதற்கண் அரிசியாகும் பக்குவத்தை
அடைதற்கு வறுத்துப் பின்பு அதனைக் குத்தி அரிசியாகச் செய்து,
அவ்வரிசியை நீர் வார்த்த உலையிடத்து இட்டு, விரும்பி உண்ணக்
கூடிய இனிய திருவமுதாக்கி, பெண்டிற்குரிய நாணினும் மேம்பட்ட
கற்பிற் சிறந்த மனைவியார், `உணவொடு கூட்டி உண்ணுதற்குரிய
கறியமுதிற்கு இனியாம் என் செய்வோம்` என்று தம் கணவனாரிடம்
விண்ணப்பித்தார்.
பாடல் எண் : 21
வழிவரும் இளைப்பி னோடும்
   வருத்திய பசியி னாலே
அழிவுறும் ஐயன் என்னும்
   அன்பினிற் பொலிந்து சென்று
குழிநிரம் பாத புன்செய்க்
   குறும்பயிர் தடவிப் பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப்
    பறித்தவை கறிக்கு நல்க.

பொழிப்புரை :
வழி நடந்து வந்த இளைப்போடு, வருத்துகின்ற பசியினாலும்
மனம் வருந்தி நிற்பார் எம் ஐயன் என்னும் அன்பினால்
மீதூர்ந்தவராய், சென்று குழிகளினின்றும்
உயர்ந்துமேற்செல்லாத புன்செய் நிலத்தில் முளைத்திருக்கும்
கீரைவகைகளைத் தடவி, அக்கீரைகளில் சிலவற்றைத் தம்
பாசத்தின் வேரைக் களைவார் போலப் பறித்துக்
கறியமுதுக்குக் கொடுக்க.
பாடல் எண் : 22
மனைவியார் கொழுநர் தந்த
   மனமகிழ் கறிக ளாய்ந்து
புனலிடைக் கழுவித் தக்க
   புனிதபாத் திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு
    கறியமு தாக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து
    திருவமு தமைத்து நின்று.

பொழிப்புரை :
அம்மனைவியாரின் கணவராய நாயனார் கொடுத்த கீரைகளை,
மனம் களிக்கத்தக்க வகையில் அவற்றின் வேர் களையும்
நரம்புகளையும் களைந்து, தண்ணீரில் கழுவி, அவற்றைத்
தகுதியும் தூய்மையும் உடைய கலத்தில் (பாத்திரத்தில்) தம் கைத்
தொழிலின் திறத்தால் அவற்றை வெவ்வேறு கறியமுதாக்கி, தாம்
முன் செல்வம் பெற்ற நன்னாளில் செய்யும் பக்குவங்களை
நினைந்து வருந்தியவராகி, அவற்றைத் திருவமுதாக்கி.
பாடல் எண் : 24
அழுந்திய இடருள் நீங்கி
   அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்ட
   அமுதுசெய் தருள்க வென்று
தொழும்பனா ருரைத்த போதில்
    சோதியா யெழுந்து தோன்றச்
செழுந்திரு மனைவி யாரும்
   தொண்டருந் திகைத்து நின்றார்.

பொழிப்புரை :
`பிறவிப் பெருங்கடலில் அழுந்தி நிற்கும் அத் துன்பத்தினின்றும் நீங்கி,
அடியனேன் உய்வதற்குத் திருவுளங் கொண்ட பெரியவரே! திருவமுது
செய்தருள வேண்டும்` என்று அடி யவர், அப்பெரியவரிடத்தில்
விண்ணப்பம் செய்ய, அடியவர் வேடங் கொண்ட சிவபெருமானும்
ஒளிவடிவாய் விண்ணகத்தே தோன்ற, அவ்வரிய காட்சியைச்
செம்மையான குணங்கொண்ட அடியவரின் மனைவியாரும்,
அவ்வடியவரும் கண்டு வணங்கித் திகைத்து நின்றார்கள்.

You might also like