You are on page 1of 7

முல்லைப்பாட்டு

பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார்


நப்பூதனார்

பாடப்பட்டவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

பா வகை: அகவல்பா (ஆசிரியப்பா),

மொத்த அடிகள்: 103

திணை: முல்லைத்திணை
நிலம்- காடும் காடு சார்ந்த பகுதியும்
தெய்வம் - திருமால்,
பெரும்பொழுது - கார்காலம்
சிறு பொழுது - மாலை
உரிப்பொருள்- இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

முல்லைத் திணை - கரு:


● முல்லைத் திணையில் எழுதப்பட்ட இப்பாடலில் பாண்டிய
மன்னன் போருக்குச் சென்றுள்ளான். கார்காலம்
தொடங்குகின்றது. அரசனின் மனைவி பாண்டிமாதேவி
அரசனுடைய வரவை எதிர்பார்த்து அரண்மனையில்
காத்துக்கொண்டிருக்கின்றாள்.

● பாசறையின் அமைப்பைப் பற்றிய வருணைகள், விவரங்களை


செய்யுள் விளக்குகின்றது. ‘வஞ்சி தானே முல்லையது புறனே’
என்று தொல்காப்பியம் கூறுகின்றது (புறத்திணை இயல் 6).
மன்னனின் பாசறை நிகழ்வுகள் மூலம், இந்த முல்லைத்
திணைப் பாடலில் உள்ள வஞ்சித் திணைப் பகுதியை
அறியலாம்.

● யவனர், மிலேச்சர், பணிபுரியும் பெண்கள், நாழிகைக் கணக்கர்,


காவலர்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.

● மன்னனின் மனநிலையைப் புலவர் சிறப்பாக விவரிக்கின்றார்.


இறுதியில் போரில் வெற்றி அடைந்து மன்னன் வடு

திரும்புகின்றான். அவன் வரும் முல்லை நிலத்தில் காயா,
கொன்றை, காந்தள், கோடல் ஆகிய பூக்கள் மலர்ந்துள்ளன.
மான்கள் துள்ளி விளையாடுகின்றன.
● பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான்
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன்
கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும்
(திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான்,
பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில்
தோற்கடித்து வெற்றி பெறுகிறான் என்ற கருவை செய்யுள்
விளக்குகின்றது.

செய்யுள் விளக்கம்:

திருமால் - மழை மேகம் வருணனை:

திருமாலின் தன்மையை மழையோடு ஒப்பிட்டு


வருணிக்கின்றார்.
முகிலானது, அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து,
சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும், திருமகளை
அணைத்தவனுமாகிய வலிமையான கையை உடையவனும்,
மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது
விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமாலைப் போல் மழையை
ஒப்பிட்டு வருணிக்கின்றார். ஒலி முழங்குகின்ற குளிர்ச்சி உடைய
கடல் நீரைப் பருகி வலப் பக்கமாக எழுந்து, மலைகளை இடமாகக்
கொண்டு, விரைந்து சென்று, பெரிய மழையைப் பெய்தது. அந்த
மாலை நேரம், பிரிவுத் துன்பத்தைத் தருவதாகத் தலைவிக்கு
இருக்கின்றது.

முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்:

மாலைப் பொழுதில் பெண்கள் நிலை குறித்து வருணிக்கிறார்.


அரிய காவலுடைய பழைய ஊர் அருகில் போய், யாழ் இசையைப்
போன்று வண்டுகள் ஆரவாரிக்க, நாழியில் நெல்லுடன் கொண்ட
நறுமணமான மலர்களையுடைய முல்லைக் கொடியின்
அரும்புகளில் புதிதாக மலரும் பூக்களைத் தூவி, கடவுளைக்
கையாலே தொழுது, வயதில் மூத்த பெண்கள்
நற்சொல்லுக்காகக்(விரிச்சி) காத்து நின்றனர்.

நற்சொல் கேட்டலும் தலைவியை ஆற்றுவித்தலும்:

தலைவனின் நிலை அறிய முது பெண்டிர் ஆயர் குல மகளிடம்


நற்சொல் கேட்டு நின்றனர்.
சிறிய கயிற்றால் கட்டப்பட்ட இளம் கன்றின் வருந்தி
சுழல்கின்ற தன்மையைப் பார்த்த ஆயர் பெண், குளிரால் நடுங்கும்
தன் தோளின் மேல் கையைக் கட்டி , அங்கு இருக்கும்
கன்றுகளிடம் “கோவலர்கள் கொடிய கோலால் பின்னின்று செலுத்த,
இப்பொழுதே வருவார்கள் உங்களுடைய தாய்மார்கள்” என்றாள்.
அதைக் கேட்ட முதுபெண்டிர், “மிகவும் நல்ல சொற்களை நாங்கள்
கேட்டோம்.
நல்லவர்களின் நல்ல வாய்ச் சொல்லைக் கேட்டதனால், பகைவர்
இடத்தையெல்லாம் கவர்ந்து போரினை இனிதே முடித்து தலைவன்
வருவான். இது உண்மை. நீ உன்னுடைய துன்பத்தால் எழுந்த
வருத்தத்தினைக் களைவாயாக! மாந்தளிரின் நிறத்தினை
உடையவளே”! என மீ ண்டும் தலைவியிடம் வற்புறுத்திக் கூறவும்,
தலைவி ஆற்றாளாய் அழுது கொண்டு குவளை மலர் போன்ற
கண்களில் முத்துப் போன்று நீர்த்துளிக்க, வருத்தத்தில் இருந்தாள்.

கடல்போல் பரந்த பாசறை அமைத்தல்:

பாண்டிய மன்னனின் படையை கடலொடு புலவர் ஒப்பிடுகிறார்.


காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லைநிலக் காட்டில்
நெடுந்தொலைவிற்கு மணம் வசும்
ீ பிடவம் செடிகளையும்,
பசுமையான சிறு தூறுகளையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில்
அமைந்த அரணையும் அழித்து, காட்டிலுள்ள முள்ளால் மதிலுக்குக்
காவலாக வேலியை வளைத்து, ஒலிக்கின்ற நீரையுடைய கடல்
போல் பரந்த பாடி வட்டை
ீ அமைத்தனர். கடல் போன்ற அகன்ற
பாசறையைக் கொண்டவன் பாண்டிய மன்னன் என்று
படைத்திறத்தைப் புலவர் வருணிக்கிறார்.

பாசறையில் யானை வருணனை:

தழையால் வேயப்பட்ட கூரையுடைய ஒழுங்கான தெருவில்,


நாற்சந்தியின் முற்றத்தில், காவலாக, மதம் பாய்கின்ற
கன்னத்தையுடைய சிறிய கண்ணையுடைய யானை ஒன்று நின்றது.
உயர்ந்து வளர்ந்த கரும்பும், அதிமதுரமும், மற்றும் வயலில்
விளைந்த நெற்கதிரும் நெருக்கமாகச் சேர்த்து கட்டப்பட்ட இவற்றை
உண்ணாமல் அவற்றைத் தன் நெற்றியில் தடவி, தன்
தும்பிக்கையைத் தந்தங்களின் மீ து வைத்தது. (யானையைப்
பயிற்றும் மொழியன்றியும் வேறெதுவும் கற்காதவர்)
பிளவுபட்ட கூர்மையான கருவியான அங்குசத்தைத் தன் கையில்
கொண்ட
பாகர், வடமொழியில் யானையிடம் பேசி கவளத்தைத் தின்னுமாறு
யானைக்கு ஊட்டினர்.
பாசறையில் வரர்களின்
ீ அரண்கள்:

தவவேடமுடைய அந்தணர், தன் காவி நிறம் தோய்ந்த ஆடையை


முக்கோலை நட்டு அதன்மேல் தொங்கவிட்டிருப்பது போல, வரர்கள்

தான் செய்கின்ற நல்ல போரில் புறமுதுகிட்டு ஓடாமல்
இருப்பதற்குக் காரணமான வலிய வில்லை ஊன்றி அதன் மேல்
அம்புப் புட்டிலைத் தொங்கவிட்டனர். கூடாரம் அமைப்பதற்காக
விற்களை ஊன்றி கயிற்றால் வளைத்துக் கட்டிய இருப்பிடத்தில், பூ
வேலைப்பாடமைந்த கைவேலைக் குத்தி கேடயத்தை வரிசையாக
வைத்து வரர்கள்
ீ தங்குவதற்காக வில்லாலாகிய பல்வேறு
அரண்களை அமைத்தனர்.
வேறு வேறான பல்வேறு படைகளின் நடு விடத்தில், நீண்ட
கோல்களோடு கூடிய பல நிறம் வாய்ந்த திரைகளால் கூறுபடுத்தி,
வேறோர் தனி இடம் மன்னனுக்கென்று அமைத்தனர்.

மன்னனின் இருப்பிடத்தில் விளக்கேற்றும் பெண்கள்:

குறுகிய வளையணிந்த முன் கையினையும், கூந்தல் புரளும்


அழகிய சிறு முதுகுப்புறத்தையும் உடைய பெண்கள் இரவைப்
பகலாக்கும் வலிய பிடி அமைந்த ஒளி வசும் ீ வாளினைப் பல்வேறு
நிறமமைந்த கச்சில் சேர்த்து கட்டியிருந்தனர். பாவையின் கையிலே
இருக்கின்ற விளக்கில் நெய் குறையுந் தொறும், நெய் வார்க்கும்
குழாயினைக் கொண்டு நெய் வார்த்து, நெடுந்திரியினைக்
கொளுத்தினர்.

பாசறையில் காவலாளர் நிலை:

நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய


நடுயாமத்தில் - காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற
மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள். நீர்த்திவலையோடு வசுகின்ற ீ
காற்றுக்கு அசைவதைப் போல தலையில் தலைப்பாகையைக்
கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்,
தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு திறமையாகப்
பாதுகாவலைச் செய்தனர்.

நாழிகைக் கணக்கர்:

பொய்த்தலில்லாது நேரத்தைக் கணக்கிட்டு, இவ்வளவு என்று


கூறும் நாழிகைக் கணக்கர் மன்னனைக் கண்டு தொழுது, அவன்
புகழ் தோன்றுமாறு வாழ்த்தி, ‘அலைகடல் சூழ்ந்த உலகத்தில்
பகைவரை வெல்லுவதற்குச் செல்பவனே! உனது நாழிகை வட்டிலில்
(நேரத்தை அளந்தறியும் கருவி ) சென்றுள்ள நேரம் இவ்வளவு’
என்று அறிவித்தனர்.

யவனர் நிலை:

குதிரைச் சவுக்கினை மடக்கி வளைத்துக் கட்டியதால் புடைத்துத்


தோன்றும் நெருக்கிக் கட்டிய ஆடையும், சட்டையும் அணிந்த -
அச்சம் தரும் தோற்றமும் வலிமையான உடம்பும் வரமும்
ீ உடைய
யவனர் - புலிச்சங்கிலி தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட
பெருமை பொருந்திய (மன்னன் இருக்கும்) நல்ல இல்லத்தில்
அழகிய மணி விளக்கினை ஒளிரச் செய்தனர்.

மிலேச்சியர் நிலை:

வலிய கயிற்றால் வளைத்துக் கட்டப்பட்ட திரைச்சீலைகள்


அமைந்த இரண்டு அறைகளைக் கொண்ட மன்னனின்
பள்ளியறையில், (ஓரறையில்) செய்திகளை உடலசைவால்
தெரிவிக்கும் நாவால் உரைக்கமுடியாத சட்டையணிந்த ஆரியர்
(மிலேச்சியர்) அருகாமையில் இருந்தனர்.

பாசறையில் மன்னனின் மனநிலை:

போர் செய்வதில் கொண்ட மிக்க விருப்பத்தால், மன்னன்


பள்ளியறையில் தூக்கம் கொள்ளாது (முதல் நாள் நடைபெற்ற
போர்க்களக் காட்சிகளை நினைத்தபடியே) படுத்திருந்தான். பகைவர்
எடுத்தெறிந்த வேல் நுழைந்ததால் புண்பட்டு, பெண் யானைகளை
மறந்திருக்கின்ற ஆண் யானைகளையும், அடியுண்ட பாம்பு
துடிப்பதையும் போன்று, ஆண் யானையின் பருத்த துதிக்கை
வெட்டுப்பட்டு வழ்ந்து
ீ துடித்ததையும், தேன் ஒழுகும் வஞ்சி
மாலைக்கு வெற்றியைத் தந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்து
போர்க்களத்திலே இறந்த படைவரர்களை ீ நினைத்தும், தோலாலான
கடிவாளத்தையும் அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய
அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து உணவு உண்ணாது
வருந்தும் குதிரையைப் பற்றி சிந்தித்தும், ஒரு கையினைப்
படுக்கையின் மேல் ஊன்றி மற்றொரு கடகம் அணிந்த கையினால்
தலையைத் தாங்கி நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்
மன்னன்.

வெற்றிக்களிப்பில் வேந்தன்:

பகைவரைக் குறித்துப் படைக்கலங்களைச் செலுத்திய வலிமையான


விரலாலே, தன்னுடைய ஒளியைத் தங்கச் செய்யும் போருக்கு
அணிந்ததாகிய வஞ்சி மாலைக்கு, நல்ல வெற்றியைக்
கொடுத்தமையால் மனநிறைவு பெற்று, பகையரசர் கேட்டு நடுங்க,
வெற்றி முரசு முழங்க பாசறையில் (வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்)
இனிமையாகத் துயில் கொண்டான் மன்னன்.

பிரிவில் வருந்தும் தலைவியின் நிலை:

கண்ண ீர்த் துளிகள் வழத்


ீ தனிமைத் துயரில் வருந்திய தலைவி,
ஈண்டும் தலைவன் வரக்காணாது வருத்தத்தில் இருக்கின்றாள்.
தலைவன் வரக்காணாது துயருற்று வருந்திய தலைவியை
நெஞ்சமானது, ‘ஆற்றியிரு’ என்று சொல்லிக் கொண்டிருந்தது..
ஆனால், தலைவியோ துயரத்தை மறைக்க முடியாது வருத்தத்தில்
இருந்தாள். நீண்ட நேரம் சிந்தித்தாள். பின் தன்னைத் தேற்றிக்
கொண்டாள். கழன்று விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற
கழறாமல் அணிந்து கொண்டாள். அறிவு மயங்கியும், அவ்அறிவு
மயக்கத்தால் பெருமூச்செறிந்தும், அம்பு தைத்த மயில் போல்
நடுங்கினாள். அவளின் அணிகலன்கள் நெகிழ்ந்தன. பாவை
விளக்கின் பெரிய சுடர் எரிய, அகன்று சிறந்து உயர்ந்து விளங்கும்
ஏழு அடுக்கான அழகிய வட்டில்,
ீ கூரை கூடும் இடங்களில் மழைநீர்
அருவி போலச் சொரிந்தன. அதனால் ஏற்பட்ட இனிய பலவாகிய
முழக்கத்தினைக் கேட்டவாறே படுத்துக் கிடக்கின்றாள் தலைவி.
அத்தலைவியின் காதுகள் நிறையுமாறு ஆரவாரித்தன.

வெற்றியுடன் தலைவன் வருகை:

பகைவரை வென்று அவர்கள் விரும்புகின்ற நிலங்களைக் கவர்ந்து,


பெரிய படையோடு வெற்றிக் கொடியை உயர்த்தியபடி, வெற்றியை
அறிவிக்கும் வகையில், ஊது கொம்பும், சங்கும் முழங்கத்
திரும்புகின்றான் தலைவன்.
முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய
இலைகளைக் கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருக்கவும்,
தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன்
போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள்
அழகிய கை போல பூத்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை
நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின்
காரணமாக விளைந்த - வளைந்த கதிரினையுடைய வரகினூடே,
திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக்
குதித்து விளையாடும். இத்தகைய முல்லைநிலத்து, எதிரே
செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தை புலவர்
திறம்பட வருணிக்கிறார்.

தலைவன் தேர்ஒலி ஆரவாரித்தல்:


போர் வினையை நன்கு ஆற்றிய தலைவன் - முதிர்
காயினையுடைய வள்ளிக்கொடி படர்ந்த காடு, பின்னோக்கிச் சென்று
மறைய விரைந்து செல்லும் தேரினை விரைவாகச் செலுத்தினான்.
நெடுந்தேரில் பூட்டப்பட்டுள்ளக் குதிரையின் குளம்பொலி,
தலைவனின் வரவு பார்த்துக் காத்திருக்கும் தலைவியின் செவிகள்
நிறையுமாறு ஆரவாரித்தன.

You might also like