You are on page 1of 14

Kasi, River Ganges and Tamil Sangam Literature

–தேவப்ரியா avgkrishnan@gmail.com

Kasi is an important pilgrimage for Indians all over for worship of Kasi Viswanath and to the
final rights for their ancestors; the reason as to why Kasi became a center for doing this is
given in 2000 year old Tamil Sngam Literature.
Sangam Literature also tells of people going to Kasi for attaining Mukthi.
Sangam Literature looks India as single nation culturally and Himalayas and River Ganges is
referred in many songs.
Sangam Literature refers to Lord. Siva as the giver of Vedas and His temple and worship in
Tamilnadu 2000 years back.
Sangam Literature shows that Tamil people gave high reverence to Vedas and had extensively
known about Ramayan, Mahabharatha and other Puranas.
Tamil Language was first written in “Tamil Brahmi” script which was developed for Sanskrit and
adopted by most Indian Languages is explained.
Tamil way of marriage and other customs have been categorized by Tholkappiyam under Vedic
tradition.
Sangam Literature, Thirukkural and Later Tamil Epic Silapathikaram very clearly confirms that
the guide for Tamils are the Sanskrit Dharma Shastras.
Tamils visit Kasi to do Srarda for their ancestors, we see People from all over India come to
Rameshwaram and Thirukkalukundram which is called Pakshi Temple
We find the link between Indic society confirmed by 2000 year old Tamil Tradion

காசியும் கங்கையும் சங்க இலக்கியங்கள்


காட்டும் பாரத ஒற்றுமையும்
இமயமலையில் இருந்து வரும் கங்கை நதிக்கரையின் காசி விசுவநாதரை
வணங்கி; கங்கை கரையில் தன் முன்னோருக்கான காரியங்கள் செய்யவும்
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வந்து செல்லும் ஒரு பண்பாட்டு
ஒற்றுமையை உறுதி செய்கிறது. இந்த பாரத ஒற்றுமையை தமிழ் சங்க
இலக்கியங்கள் மிக அருமையாகக் காட்டுகிறது. பண்டைய தமிழகத்தின்
கோவில்களில் இராமாயணக் காட்சிகள் வரையப் பட்டு இருந்தது என்பதையும்
இராமாயண, மகாபாரதம் அறிந்து இருந்தனர் எனவும் உறுதி செய்கின்றன.

அந்த கங்கையில் குளித்து தன் பாவத்தை கழுவிக்கொள்ளவும் காசியில் தன்


முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்வதும் மிக முக்கியமான கடமை என்றதும்
காசியில் மரணமடைந்தால் மோக்ஷம் நிச்சயம் என்றும் நம்புவது 2000
ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வது என்பது நாம் சங்க இலக்கியங்களில்
காணலாம்.
பண்டைக் காலம் தொட்டு தமிழர்கள் தங்கள் கல்விக்காக நாளந்தா, காசி,
பாடலிபுத்ரம் சென்றதோடு காஞ்சியில் கடிகை என கல்வி பல்கலைக் கழகம்
அமைந்து இருந்தது. நாம் இவற்றை தமிழ் ஆதாரங்களோடு காண்போம்
சங்க இலக்கியங்கள் காட்டும் பாரத ஒற்றுமை
சங்க இலக்கியங்கள் எனும் பத்துப்பாட்டு & எட்டுத்தொகை (பதினெண்மேல்
கணக்கு- பாட்டுத் தொகை) நூல்களில் பல இடங்களில் நாடு பண்பாடு ரீதியில்
ஒற்றுமையை கொண்டது என்பதை அரசனின் வட எல்லை என இமய
மலையும், தென் எல்லை வங்காளவிரிகுடா மற்றும் அரபிக் கடல் என ஒரு
பண்பாட்டு நாட்டினையே கூறுகின்றன
வட திசை எல்லை இமயம் ஆக - பதி 43-7
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் - புறம் 132-7,8
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே - புறம் 2-24
தமிழகத்தின் திருப்பரங்குன்றன்ம் மற்றும் பொதிகை மலையின் பெருமையை
இமய மலையோடு ஒப்பிட்டனர். இமய பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும் -
பரி 8/11
இமய குன்றினில் சிறந்து - பரி 8/12
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே - புறம் 2/24
சங்க இலக்கியத்தில் மிகப் பெறும் ஆறு என கங்கையை பல பாடல்களில்i கூறி
உள்ளனர்
காசியும் கங்கை பூமியில் வருதலும் காசியில் மோட்சம்
பெறுதலும்
காசி மோட்சத் தலமாக ஆவதன் காரணம் ராமபிரான் முன்னோரான பகீ ரதன்
தவம் செய்து வானுலகில் ஓடிய கங்யை பூமிக்கு கொண்டு வந்தார் எனும்
தொன்மக் கதையை நாம் புலவர் காரிகிழார் புறநானூறு -6 ம் பாடலில் பாண்டிய
மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. வாழ்த்திப் பாடும் பாடல்
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்
கீ ழது, முப்புண ரடுக்கிய முறைமுதற்கட்டின்
இப்பாடலில் கிழக்கில் இஷ்வாகு குல ராஜா சகரர்ii 60,000 மகன்களிற்கு மோட்சம்
பெற்றுத் தர வானுலகில் இருந்து ஓடி வந்த கங்கையினால் உருவான கடல்
உருவாகிய கடல் என்கிறார்.
பகீ ரதன் தவத்தால் வந்த கங்கையின் வேகம் தடுக்க சிவபெருமான் தன்
தலையில் கங்கையைத் தாங்கியமையால் அவர் தலை எப்போது ஈரமாக
இருப்பதை இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற்
போனதைக் கூறும் கலித்தொகை பாடலில்
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீ ழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ கலித்தொகை - 38)
கங்கையை பூமிக்கு கொண்டுவர மாபெரும் தவ முயற்சி செய்ததை பகீ ரதத்
தவசு எனும் மாமல்லபுரம் சிற்பத்தில்iii காணலாம்
சங்க இலக்கியத்தில் முக்தி நகர் காசி
கலித்தொகை 60 பாடலில்
தலைவியைக் கண்டு காதல் கொண்டு வருந்தும் தலைவனைப் பற்றிக் கூறிய
தோழியை தெருவில் காரணம் இல்லாமல் கலங்குபவரை எல்லாம் கண்டு நீ,
காசி நகரில் முக்தி பதம் அடையப் பல தேசத்தாரும் வந்து தங்குவர்,
முகமறியாத அவர்களுக்காக காசியில் உள்ளோர் வருந்துவத் போல நீ ஏன்
என்னிடம் சொல்கிறாய் என்கிறாள்
பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள் 10
உருகுவான் போலும் உடைந்து
தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில
நீ நின் மேல் கொள்வது எவன்
அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென 15
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ

சங்கத் தமிழர் வாழ்வியலில் இந்திய ஞான மரபும்


வேதங்களும்
சிவபெருமான் அருளியதே நான்கு பிரிவுகளும், ஆறு அங்கங்கள் கொண்ட
வேதம் புறநானூறுiv -166 சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன்
விண்ணந்தாயன் நடத்திய வேள்வி சிறப்பையும் பாடலில் ஆவூர் மூலங்கிழார்
காட்டுகிறார்
நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
5 இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்அன்ன பொய்உணர்ந்து
பொய்ஓராது மெய்கொள ீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!

நான்மறை முதுநூல் தந்த மூன்று கண் கொண்ட செல்வன் சிவபெருமான்


கோயில் கொண்டிருக்கும் ஊர் ஆலமுற்றம் என அகநானூறு-81 பாடல்
கூறுகிறாது
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, 15
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய

மூவேந்தர்கள் மூவரும் சேர்ந்து இருப்பதாக உள்ள சங்க இலக்கியப் பாடலில்


ஔவையார்v அந்த மூவேந்தர்கள் ஒன்றாக இருப்பதை வடுபேறு
ீ ஒன்றையே
குறிக்கோளாக கொண்ட அந்தணர்கள் தினம்தோறும் யாகம் வளராப்பதிலா முத்தீ
போன்று மூவேந்தர் என வாழ்த்துகிறார்.
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து 15
வயங்கி தோன்றும் மீ னினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே புறநானூறு 367 ஔவையார்

புலவர் காரிகிழார் புறநானூறு 6 ம் பாடலில் பாண்டிய மன்னன் பல்யாகசாலை


முதுகுடுமிப் பெருவழுதி. வாழ்த்திப் பாடும் பாடலில் சிவன் கோவில்கள்
இருந்தமையும், உற்சவர் ஊர்வலம் வந்ந்தமையும் உறுதி செய்கிறது
பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! 20
வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்
சிவபெருமான் ஊர்வலம் வரும்போது உன் குடை வணங்க வேண்டும்.நான்மறை
முதல்வர் உன்னிடம் கையேந்தும்போது நீ தலைவணங்க வேண்டும்.

மதுரைத் தமிழன் தினமும் அதிகாலையில் வேதகோஷம் கேட்டு விழிக்கிறான்.


பரிபாடல் திரட்டு எட்டாம் பாடலில் பாண்டிய நாட்டு மதுரையை சேர்ந்தவர்
பெருமையாகச் சொல்வதாக, சோழர் தலைநகர் உறையூரிலும், சேரர் தலைநகர்
வஞ்சி எனும் கரூரிலும் நீங்கள் சேவல் கூவ தூக்கத்தில் இருந்து
விழிக்கின்றீரிகள், மதுரையில் நாங்கள் பிராமணர்கள் நான்கு வேதங்கள்
ஓதுவதை கேட்டே அதிகாலையில் உறக்கத்தில் இருந்து எழுகிறோம் என்கிறார்.
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல 10
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஓவியங்கள் வரைந்து மண்டபத்தில் ரதி-


மன்மதன் க்தையும், இந்திரனை பூனையாகும்படி சபித்த கௌதம முனிவர்
மனைவி அகலிகை ஓவியமும் இருந்தன என பரிபாடல் - 19 கூறுகிறது
சிலர் குரங்குகுப் பலகாரம் கொடுத்தனர். சிலர் கரிய முகம் கொண்ட முசுக்
குரங்குகளுக்குக் கரும்பு கொடுத்தனர். சிலர் தெய்வப்-பிரமம் என்னும்
வணையை
ீ மீ ட்டினர். சிலர் கைவிரல்களால் தடவிக் குழல் ஊதினர். சிலர்
யாழில் இசை கூட்டினர். சிலர் வேள்வியின் சிறப்பினைப் பாராட்டினர். சிலரின்
கூரம் என்னும் இசைக்கருவியின் நரம்பு கொம்பு போல் ஒலித்தது. சிலர்
சூரியனும் சந்திரனும் தோன்றும் காட்சி கொண்ட புடைப்போவியங்களைக்
கண்டு ஆழ்ந்திருந்தனர். நுட்பம் தெரிந்த சிலர் அங்குத் தீட்டப்பட்டிருந்த ஓவியக்
காட்சியில் இவன் காமன், இவள் இரதி எனக் காட்டினர், சிலர் இவர்களைப் பற்றி
வினவ, சிலர் இவர்களது கதையை விளக்கினர். சிலர் இவன் இந்திரன், இது
பூனை, இவள் அகலிகை, இவன் கௌதமன், இது கௌதமன் சினத்தால்
கல்லாகிய சிலை, என்றெல்லாம் காட்டிக் கதையைக் கூறினர். இன்ன பல
ஓவியங்கள் எழுத்து நிலை மண்டபத்தில் இருந்தன. அவற்றை நெருங்கி
வந்தவர்கள் சுட்டிக்காட்டினர். சிலர் விளக்கம் கூறி அறிவுறுத்தினர். இவை
திருப்பரங்குன்றத்து குகையில் வடிவமைக்கப்பட்டிருந்த சோபன (அழகு)
நிலைகள். இது ஆசை கொள்ளச் செய்யும் மருகனின் மாடத்துப் பக்கம் ஆகும்.
குரங்கிணி அம்மன் கோவிலும் புறநானூறு பாடலும்
பாணர்களுக்கு அரசன் இளஞ்சேட்சென்னி தந்த நகைகளை அவர்கள் வட்டில்

எந்த அணிகலன் எங்கே அணிவது என்பது தெரியாமல் தவறாக அணிகிறார்கள்
என்பதை அரக்கன் ராவணன் சீ தையைத் தூக்கிச் சென்றபோது தன் நகைகளை
வசிட
ீ அதை அணிந்த வானரோர்களோடு புறநானூறு புலவர் பொருத்தி
பாடுகின்றார்
கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன்
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே புறநானூறு ( 378: 18-22)

நெய்தல் நில நகரம் எவ்வாறு அமைதியடைந்தது என்பதைக் கூற வந்த


சங்கப்புலவன் இவ்வாறு பாடுகிறான்.
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வழ்
ீ ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே (அகநானூறு 70: 13-17).
அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை
மீ து படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன்
ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது
அங்கு ஒலி செய்து தொந்திரவு செய்த பறவைகளைத் தம் கை ஒலி செய்து
அமைதிப்படுத்தினான். அதைப் போன்ற அமைதியை நகரம் அடைந்தது
என்கிறான்...
தமிழ் எழுத்துக்களும் வடமொழியும்
தமிழ் மொழியின் மிகத் தொன்மையான கல்வெட்டுகள் மற்றும் பானை ஓட்டுப்
பொறிப்புகள் பொமு.2 ம் நூற்றாண்டில் இருந்து கிடைத்துள்ளன. நாம் அவற்றை
முழுமையாகத் தொகுத்தால் பொஆ.700 க்குப் பின்பே தமிழில் உள்ள 30
அடிப்படை எழுத்துக்களுக்கும் உரு கிடைத்து உள்ள்து. தமிழ் உயிர்
எழுத்துக்களில் குறில் "எ-ஒ" இரண்டிற்கும் உரு இல்லை நெடில் எழுது மேலே
புள்ளி வைத்தால் அது குறில் என்பது தொல்காப்பிய சூத்திரம்

தமிழின் 12 உயிர் எழுத்துக்களில் வடமொழியில் இல்லாத குறில் "எ" "ஒ"


தமிழில் உண்டு, ஆனால் இவற்றிற்கு 17 ம் நூற்றாண்டு வரை தனி எழுத்துரு
இல்லை என்பதை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக இணையம்vi உறுதி
செய்யும். தமிழில் உயிரில் இவ்வெழுத்துக்கள் மாறியது 17 ம் நூற்றாண்டில்
ஜோசப் பெஸ்கி (வரமாமுனிவர்)
ீ பின் தான் என தெள்ளிவாகிறது.
பிராமி எழுத்துரு அடிப்படையில் வடமொழிக்கு உருவாக்கப் பட்டது, அதில்
உயிர் எழுத்தில் குற்றியல் எகரம் ஒகரம் எழுத்துக்களுக்கு உரு கிடையாது, ஏன்
எனில் வடமொழியில் இவை இல்லை. ஆனால் வர்க்க எழுத்துக்களுக்கு உரு
உண்டு. பொஆ.8 ம் நூற்றாண்டு தொல்காப்பிய சூத்திரமும் உறுதி செய்கிறது

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் " ள, ற & ன"


உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ்
எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன
பாதிரி கால்டுவெல் சுட்டிக் காட்டி உள்ளதைஎன பேராசிரியர் இன்னாசி தன்
“எழுத்தியல்: நூலில் விளக்கி உள்ளார்
இந்தியாவின் மிகவும் தொன்மையான பிராமி கல்வெட்டுகள் அசோகர்
கல்வெட்டுகள். அசோகர் புத்த மதம் இணைந்தவர் எனில் பாலி மொழியிலோ,
அல்லது பிராகிருத மொழியிலோ எழுத்துரு உருவாக்கம் எனில் இந்த இரண்டு
பாலி/ பிராகிருத மொழிகளிலும் Sibilants "ச" 3 ஒலியன்கள் இல்லை,
சம்ஸ்கிருதத்தில் மட்டுமே, அசோகர் வெவ்வேறு கல்வெட்டுகளிலும் மூன்று "ச"
ஒலியனும் அமைந்துள்ளது
தலகுண்டா கல்வெட்டில் காஞ்சிக் கடிகை

காஞ்சிபுரத்தில்,  தட்சஷீலா, நாளந்தா , விக்ரமஷிலா,   போன்ற புகழ்பெற்ற கல்வி


நிறுவனங்களைப் போலவே, ஒரு வேதாகமப் பல்கலைக்கழகமாகவும் புகழ்
பெற்றிருந்தது. காஞ்சிக் கடிகை காஞ்சிபுரத்தின் மேம்பட்ட வேதக் கல்வி மையம்
(Advanced Vedic Education Centre) என்று பரவலாக மதிக்கப்பட்டது. இஃது இந்தியாவின்
பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்களைத் தன்பால் ஈர்த்தது. நாளந்தாவில் இருந்த
புத்தமத அறிஞரும் துறவியுமானர் தர்மபால காஞ்சியில் இருந்து வந்தவர் ஆவார்.

அந்தண குடியிற் பிறந்த மயூரவர்மன் (கி.பி. 345 – 370) என்பவன் கடம்ப குலத்தைப்
பாணவாசியில் நிறுவி ஆண்டுவந்தான். காகுஸ்தவர்மன் இவனுடைய கொள்ளுப்
பேரனாவான். கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம்,  தாளகுண்டா கிராமத்தில்
உள்ள பிரணவேஸ்வரா கோவில்  வளாகத்தில் பழைய கன்னட மொழி எழுத்தில்
சம்ஸ்கிருதத்தில் 23 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.  தாளகுண்டா கல்வெட்டே
காஞ்சி கடிகையைப் பற்றி முதலில் பதிவு செய்த கல்வெட்டு என்று கருதப்படுகிறது.
(பார்வை: எபிகிராபியா இண்டிகா தொகுதி VIII எண். 5 பக். 24). இக்கல்வெட்டு
காஞ்சியில் செயல்பட்ட கடிகையைப் பற்றிப் பதிவு செய்துள்ளது.
“யஹ் ப்ரயாய பல்லவவெந்த்ர புரீம் குருனா சமம் வரீ சர்மனா, அத்ஹீஜிக்
ஹாம்சுஹ ப்ரவகனம் நிக்ஹிலம் விவேலாய தர்க்குகஹ”
மயூரசர்மன், தன்னுடைய ஆசிரியர் வரசர்மனுடன்
ீ , பல்லவேந்திரபுரி (காஞ்சிபுரம்)
நகருக்குச் சென்று சமய அறிவை எல்லாம் கற்றறிந்து கொள்ளும் ஆர்வம்
கொண்டதால், அங்கு இருந்த கல்லூரியான கடிகாவில் மாணவனாக இடம் பெற்று
விட்டான் என்று பதிவு செய்துள்ளது.
தமிழர் வாழ்வியல் திருமண முறையில் வேத ஞான மரபு
தமிழர்கள் திருமண முறையை நெறிப் படுத்திய நிலையில் களவியல்
மணத்தை வைதீக மரபில் காந்தர்வ மணம் என வரிசைப் படுத்தினர் எனத்
தொல்காப்பியம்vii உரைக்கிறது
அறனும் என்று-ஆங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காம_கூட்டம் காணும்-காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ் துணைமையோர் இயல்பே பொருள். களவியல் 5

திருமணத்திற்கு முன் காதல் களவு எனும் தொடர்பில் பலர் ஏமாற்றிட


அந்தணர்கள் திருமண சம்ஸ்காரங்களை ஏற்படுத்தினர்
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப 4 கற்பியல் -4

தமிழரின் வாழ்வியல் வழிகாட்டி சம்ஸ்கிருத நீதிநூல்கள்


கலித்தொகை – மருதக் கலி
பாடியவர் – மருதன் இளநாகனார்
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்  5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்!

கள்ளை உண்ணக் கூடாது என நீக்கின தேவர்க்கும், அதனை நீக்காத அசுரர்க்கும்,


அவ்விரண்டையும் கைக்கொண்டு அறத்தொழிலாக இன்புறுத்தும் அந்தணராகிய
வியாழன், வெள்ளி (சுக்கிரன் & குரு) இருவரும் வெவ்வேறு வகையாகச் செய்த தர்ம
சாஸ்திர நீதி நூல் கூறும் நெறியிலிருந்து பிறழாது, குழந்தையைப் பார்த்து அதற்குப்
பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில் மழையைப் பொழிந்து அருள்செய்து
பாதுகாக்கும் நல்ல ஊழான விதியை எல்லார்க்கும் தப்பாமல் கிடைக்கச் செய்தலை,
உனது செம்மையான ஆட்சியின் காரணமாக உலகத்துக்குத் தர வாய்த்த,
அணிகலன்கள் அணிந்த கொடியினை உடைய திண்ணிய தேரினையும், மணி
கட்டின கூட்டமான யானைகளையும் உடையவனே!அறத்தின் நிழலாகக்
கொண்டாய், உன் அழகிய வெண்கொற்றக்குடையின் நிழலை; அந்தக் குடையின்
நிழலுக்குப் புறம்பே நிற்பவளோ இவள்? இவளைப் பார்!
திருவள்ளுவர் ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து
அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.

மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை


ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள்
பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம
சாஸ்திரங்களை மறந்து விடுவர்..

தன் குழந்தையை கீ ரிப்பிள்ளை கொன்றுவிட்டது என ரத்தம் பார்த்து எண்ணி அதை


அடிக்க இறந்துவிட்ட தன் மனவியைப் பிரிந்து பிராமணக் கணவன் செல்லுமுன்
பாவப் பரிகாரம் கேட்க நீதி நூல் சம்ஸ்கிருத வாசகம் எழுதித் தந்த ஓலையைப்
பலரால் படிக்க இயலாது போக, கோவலன் அதைப் படித்து அந்த பார்ப்பன
பெண்ணிற்கு உதவி செய்து கணவரிடம் சேர்த்த கதை சிலப்பதிகாரத்தில்viii
வடதிசைப் பெயரு மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப் .-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை

மூத்தோர் வழிபாட்டில் காசி, ராமேஸ்வரம் மற்றும்


திருப்பரங்குன்றம்
திருவள்ளுவர் ஒரு குடும்பத்தான் முக்கியக் கடமைகள் ஐந்தில் மூத்தோருக்கு
செய்ய வேண்டிய கடன்களே முக்கியமானது என்கிறார்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. குறள் 43:இல்வாழ்க்கை.
இறந்து எமனுலகில் *தென்திசையில் வாழ்) முன்னோர், கடவுள், விருந்தினர்,
சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத்
தவறாமல் செய்வது சிறந்த கடமையாகும்.

தமிழகத்தில் உள்ள மக்கள் தங்களுடைய மூத்தோருக்கு செய்ய வேண்டிய


கடன்களை காசியிலும் கயாவிலும் சென்று சென்று முக்திக்கான வழியை
தேடுவது போல; தமிழகத்தில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றால்
அங்கே தினம் தோறும் பல வடநாட்டு மக்கள் வந்து அங்கு தன் மூத்தோருக்கு
கடன் செய்வதை காணலாம் அதாவது காசியில் காக்கை போன்ற பட்சிகள்
வருவதில்லை தன் முன்னோருக்கு போடும் பிண்டங்களை காக்குகள் உண்ண
வேண்டும் என்பதால் பட்சிகளின் கோவில் எனப்படும் திருப்பரங்குன்றத்திற்கு
வருகின்றனர்.
ராமேஸ்வரம் கோவிலிற்ககும் வடநாட்டினர் மிக அதிகமாக வந்து தங்கள்
முன்னோர் கடன்களை ஆற்றுகின்றனர்
i
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள் - பெரும் 431,432
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு - மது 696
கங்கை வாரியும் காவிரி பயனும் - பட் 190
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ - நற் 189/5
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் - நற் 369/9
மீ ன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய - பரி 16/36
சீர் மிகு பாடலி குழீ இ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ - அகம் 265/5,6
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு - புறம் 161/6,7

ii
ஆதியில் அயோத்தி நாட்டரசர் இசுவாகு குலத்து சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால்
இறைவனிடம் வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது மனைவியான சுமதிக்கு 60
ஆயிரம் குழந்தைகளும், கேசினிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தனர்.
பின்னர், அசுவமேத யாகம் செய்வதற்காக சகரர் அனுப்பிய குதிரை காணாமல் போயிற்று. 60
ஆயிரம் மகன்களும் குதிரையைத் தேடி வருகையில் கபில முனிவர் குகை வாயிலில்
குதிரை நிற்பதைக் கண்டு கபிலரே குதிரையைப் பிடித்து வைத்திருப்பதாகக் கருதி
சண்டைக்குப் போனதால் கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
இதன்பின் கேசினியின் மகன் அரசுரிமைக்கு வந்து அவருக்குப் பின்னர் அவரது மகனான
பகீ ரதன் அரசாண்டபோது தமது முன்னோர்களுக்கு நிகழ்ந்ததைத் தெரிந்துகொண்டார்.[3]
தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை
நீக்குவதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்து சிவபெருமானின் அருளுடன் கங்கை
ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீ ரதனின் முன்னோர்கள், பல
நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு வடுபேறு
ீ எனும் முக்தி
அடைந்தனர்.

iii
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE
%A9%E0%AF%8D

iv
மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி
அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே
அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய
நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி,
அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல்,
மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து
முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே!

v
வடுபேறு
ீ ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும்
முத்தீயைப் போல அழகுடன் வற்றிருக்கும்
ீ வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய
தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது
இதுவேயாகும். வானத்தில் விளங்கும் விண்மீ ன்களையும் இம்மென்ற ஒலியுடன்
பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு
விளங்குவன ஆகுக.
vi
http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051415.htm?
fbclid=IwAR3jQldRoTETieWgxPbmnaQ78bqaQvvtbhQpF1Tze8V9Z78CwjMsELc_dys

vii
மணம் எட்டாவன:- (1) அசுரம், (2) இராக்கதம், (3) பைசாசம், (4) காந்திருவம், (5) பிரமம், (6)

பிரசாபத்தியம், (7) ஆரிடம், (  தெய்வம் ஆகியனவாம்.


இவற்றுள் முதல் மூன்றான அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகியவை கைக்கிளையைச்
சாரும் என்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார்.
“முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.” – (பொருள். 102)
இன்னும், இவற்றுள் கடைசி நான்கான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகியவை
பெருந்திணையைச் சாரும் என்றும் கூறுகின்றது தொல்காப்பியம்.
“பின்னர் நான்கும் பெரும்திணை பெறுமே.” --(பொருள். 103)

viii
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரு மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவ டன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ (அடைக்கலக் காதை)

You might also like