You are on page 1of 5

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

எங்கள்புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்


வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே
எங்கள்மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்
அந்தபாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான்
நாம்படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்

காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திட


ப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும்
கீதம்

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொலி


பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர
மோஹன கீதம்
நெஞ்சினிலே---நெஞ்சினில் இன்பக் கனலை
எழுப்பி நினைவளிக்கும்* கீதம்

சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மன


ம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்
கி நின்றிடவும்
ஆ--- என் சொல்வேன் மாயப்பிள்ளை வே
ய்ங்குழல் பொழி கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவி


டும் நதியில் –
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நி
ன்றான்
காலமெல்லாம்—காலமெல்லாம்
அவன் காதலை எண்ணி உருகுமே** என் உ
ள்ளம்

வேய்ங்குழல் = வேம் + குழல் (bamboo flute)

* variation நினைவழிக்கும் **Variation: உருகுமோ


ராகம்: மத்யமாவதி
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )


உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து
அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)

ஆடலை காண (கண்ணா உன் )


தில்லை அம்பலத்து இறைவனும்
தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார்
ஆதலினால் சிறு யாதவனே
ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே


அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே
மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே
பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 )
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே

குழல் ஆடிவரும் அழகா உனை


காணவரும் அடியார் எவராயினும்
கனக மணி அசையும் உனது திருநடனம்
கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது)
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்


மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்


ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்


மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு


மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு


மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க


மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்


மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ

அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்


யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்


அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்


அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்


கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்


மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

You might also like