You are on page 1of 5

அகநானூறு Agananuru 163

அவள்மீது வீசும் வாடைக் காற்றுக்கு அவள் அறிவுரை கூறுகிறாள்.


1

வானமே அதரும்படியும், மலர்கள் கொட்டும்படியும் குளுமையான மழை பொழிந்தது. அப்படிப் பொழிந்த


பருவம் மாறும் கடைசி நாள்.

நான் தனியே இருக்கிறேன். பிரிந்து சென்ற அவரை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறேன். என்


வளையல்கள் என் தோளில் நிற்காமல் நழுவுகின்றன, அவர் வரவேண்டும் என்று அளவில்லா ஆசையோடு,
அவர் வரும் திசையை நோக்கி நின்றுகொண்டிருக்கிறேன். வாடைக்காற்றே! இவள் இரக்கம்
கொள்ளத்தக்கவள் என்று நீ எண்ணிப் பார்க்கவில்லை.

யானை பெருமூச்சு விடும்போது வெளிவரும் நீரத


் ்திவளை போலப் பனித்துளிகளை வீசுகிறாய். அதனால் என்
கண்ணே நடுங்குகிறது. தாமரைப் பூ கரிந்து போகிறது, இது முன்பனிக் காலம். நள்ளிரவு நேரம்.

குன்றமே நடுங்குவது போன்ற குளிரைத் தரும் வாடையே! நீ எனக்காகவே வீசிகிறாய் போலத் தெரிகிறது.

ஆற்றில் நீர் ஓடும்போது அதில் உள்ள மணல் உருண்டு ஓடுவது போல என் நெஞ்சு நெகிழ்ந்து ஓடுகிறது.
இப்படி ஓடும்படிச் செய்துவிட்டு என் கொடியவர் சென்றிருக்கும் தேசத்தில் இடைவிடாமல் வீச அங்குச்
செல்வாயாக. அங்குச் சென்றறு வீசினால், பொருளீட்டும் வினையில் முனைப்புடன் இருக்கும் அவர் உன்னால்
என்னைப் பற்றி அவர் நினைக்கவும் கூடும்.

அகநானூறு Agananuru 164


(போர் யானை)

வேந்தன் போரை முடித்துக்கொண்டால் நல்லது என்று தலைவன் நினைக்கிறான்.


1

சூரியன் தன் வெயில் கைகளால் ஈரத்தை வாங்குகிறான். எங்குமே பச்சை இல்லை. பயன்பாடு இல்லாமல்
போய்விட்டது. நிலம் வெடித்துக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறிக் காடெல்லாம் அழகு பெறும்படி இப்போது
பெருமழை பொழிகிறது.

காடெல்லாம் பூக்கள். எங்கும் வண்டுகளின் ஆரவார ஒலி. முல்லை, தோன்றி, பூக்களின் மணம் கமழ்கிறது.
அந்த மணம் காதல் வெறியை உண்டாக்குகிறது.

இப்படி அவள் நினைப்பாள்.

அவர் நிலைமை என்னவோ தெரியவில்லையே! என்று மயங்குவாள். கண்ணீர் மல்க வருந்துவாள்.


துன்பப்பட்டுக்கொண்டே வாழ்வாள். அவள் பழைய நலத்தைப் பெறும் நல்ல காலம் இது.

பகைவரின் மதில் வாயிலை ஒடித்து தந்தப் பூண் சிதைந்திருக்கும் யானையை, போரை விரும்பிக்
கட்டுத்தறியை முரிக்கும் யானையை வேந்தன் போர்தத ் ொழிலிருந்து விடுவித்தால் நல்லது.
இவ்வாறு தலைவன் நினைக்கிறான்.

அகநானூறு Agananuru 166


வேளூர்வாயில் - சங்ககாலப் பெயர்
புள்ளிருக்கு வேளூர் இக்காலப் பெயர்

பொய் சொல்லுவோரைக் கொன்று பலி கொள்ளும் தெய்வம் 


1

தென்னை மரத்தில் (நன்மரம்) கட்டியிருந்த நனைமுதிர் சாடியின் (முதிர்நத


் கள்ளுப்
பானையின்) கோப்பு (கோய்) உடைந்துவிட்டால், மழைத்துளி விழுவது போலத் தெருவெல்லாம் நடுங்கும் ஊர்
வேளூர்வாயில். அது நெல்வளம் பெருகும் பழமையான வயல்களைக் கொண்ட ஊர்.

அந்த வேளூர்வாயில் ஊரின் கோயிலில் தெய்வம் இருக்கிறதே, அந்தத் தெய்வத்துக்குத் தெளித்த


மணப்பொருள்களையும், மாலையையும் வண்டுகள் தீண்டாமல் இருக்குமே, குற்றம் செய்தவர்களைக்
கொன்று உயிர்ப் பலி கொள்ளும் அச்சம் தரும் தெய்வமாயிற்றே அது, அதன் மேல் ஆணையிட்டுச்
சொல்கிறேன் (சத்தியம் செய்து சொல்கிறேன்) நீ கடுப்போடு இருக்கும் அந்த கூந்தல்
ஒப்பனைக்காரியோடு (புனையிருங் கதுப்பு) எனக்குத் தொடர்பு இல்லை. இருக்குமாயின் அந்தத் தெய்வம்
என்னைத் தண்டிக்கட்டும் என்று சொல்லி அவள் கணவன் அவன் மனைவியைத் தேற்றுகிறான்.

அந்த மகிழ்நன் அவன் மனைவியிடம் அப்படிச் சொல்லித் அவளைத் தேற்றுகிறான் என்றால் நேற்று காவிரி
வெள்ளத்தில் (கோடு தோய் மலிர் நிறையில்) மாலை அணிந்த யானைபோல் மகிழ்ச்சித் திருமணம்
செய்துகொண்டு என்னை ஈரப்படுத்தி விளையாடினானே (உடலுறவு ஈரம்) அவன் யார்? தோழி, நீயே சொல்,
என்று பரத்தை தன் தோழியிடம் வினவுகிறாள்.

அகநானூறு Agananuru 168

இன்பத்தில் களவு வேண்டாம் என்கிறாள் தலைவி.


1

யாமப் பொழுது முழுவதும் உன்னோடு இன்பமாகக் கழித்தேன். ஆனால் என் நெஞ்சம் துன்பத்தில்
வருந்துகிறது. கண்ணீர்ப் பெருக்குடன் வாழ்கிறேன். இதனைத் தவிர்த்தல் வேண்டும். நீ வானளாவ உயர்ந்த
மலையின் தலைவன் ஆயிற்றே. களவு இன்பம் வேண்டாமே.
2

அரசன் உதியன் ஆளும் குழுமூர் மலையில் பல காட்டுப்பசுக்கள் (பல்லான்) மேயும். அவற்றுடன் வளர்ப்புப்


பசுக்களும் (நல்லான்) மேயும். பின் நிழலில் படுத்து ஒற்றுமையாக அசைபோடும். அரசன் உதியன்
கொடையைக் கடமை என்னும் அணிகலனாக அணிந்துகொண்டு வாழ்பவன். அவன் உணவு வழங்கச்
சமைக்கும் மடத்தில் (அட்டில்) உணவு உண்பவரின் ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பது போல, அவன்
மலைச்சோலையில் கொட்டும் அருவியின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.

அங்கு, தயங்கி நடக்கும் புதிய யானைக்கன்றையும் பெண்யானையையும் பாதுகாப்பாக


அழைத்துக்கொண்டு ஆண்யானை செல்லும். அதனைப் பார்த்து, கல்லுக் குகையில் இருக்கும் புலி
புலம்பும்படி ஆண்யானை குகையே அதிரும்படி பிளிறிக்கொண்டு செல்லும்.  

இப்படிப்பட்ட வழியில் வருகிறாய். என்னைப் பாதுகாக்கும் கானவர் உறங்கும் காலம் பார்த்து வருகிறாய். மான்
செல்லும் சிறிய காட்டுப்பாதையில் வருகிறாய். இப்படி எனக்கு அச்சம் தரும் வகையில் வருவதைத் தவிர்க்க
வேண்டும். (மணந்துகொள்ள வேண்டும்).

அகநானூறு Agananuru 170

நண்டு

அவன் நண்டோடு பேசுகிறான்.


1

கடற்கரை நிலமாகிய கானலும் சொல்லாது. உப்பங்கழியும் சொல்லாது. தேன் துளிக்கும் மலர்களைக் கொண்ட
புன்னை மரமும் சொல்லாது. சொல்லக்கூடியவர் உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு இல்லை. நீதான்
இந்தத் துறையில் இருக்கிறாய். கழியில் பூத்திருக்கும் நெய்தல் பூவின் மணத்தோடு தேன் அமிழ்தை உண்ட
வண்டினம் களிப்பு மயக்கத்தில் பறக்க முடியாமல் கிடக்கும் துறையை உடைய துறைவன் நீதான்.
நண்டே (அலவ) நீதான் எனக்குச் சொல்ல வேண்டும்.

கடலில் மேயும் சிறுகாக்கை களைப்போடு இளைப்பாறுகையில் தாழம்பூ மடலில் தன் பெண்ணோடு


அமர்ந்துகொண்டு கனாக் காணும். சுறாமீன் வேட்டைக்குச் செல்வோர் உறங்கும் நள்ளிரவில் கனாக் காணும்.
வெள்ளை இறால் மீன்களை உண்பது போல் கனாக் காணும். இப்படிக் காக்கை கனாக் காணும் நள்ளிரவு
வேளை இது.

“உன் துன்பத்தைப் போக்கியவள் தன் துன்பத்தில் இந்த நள்ளிரவில் நீந்திக்கொண்டிருப்பாளோ” என்று


நண்டே! நீதான் சொல்லவேண்டும். (அவள் உன்னையும் என்னையும் நினைப்பாளா என்று நீதான் சொல்ல
வேண்டும்).

துறைவன் என்று நண்டை விளிக்கும்போது தலைவன் தன்னையும் அந்தத் துறைவன் எனக்


கூறிக்கொள்கிறான்.

நின் உறு விழுமம் – என்னும்போதும் அவ்வாறே தன்னையும் குறிப்பிட்டுக்கொள்கிறான்.

You might also like