You are on page 1of 7

Study Material

வகுப்பு :10th

இயல் - 6

2.பூத்தொடுத்தல்

I. பலவுள் தெரிக.

மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

அள்ளி முகர்ந்தால்

தளரப் பிணைத்தால்

இறுக்கி முடிச்சிட்டால்

காம்பு முறிந்தால்

விடை : தளரப் பிணைத்தால்

II. சிறு வினா

1.நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில்


வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.?

நாட்டுபுறப்பாடலில் ::

இறுக்கி முடிச்சிட்டால்

காம்புகளின் கழுத்து முறியும்.

தளரப் பிணைத்தால்

மலர்கள் தரையில் நழுவும்.

வாசலில் மரணம் நிற்பதறிந்தும்

வருந்தாமல் சிரிக்கும்

இந்தப் பூவை

எப்படித் தொடுக்க நான்- நவீன கவிதை கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்

காம்பழுகிப் போகுமின்னு

விரலாலே பூவெடுத்தா – மாரிக்கு

வெம்பி விடுமென்று சொல்லி

தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத்

தாங்கி மலரெடுத்தார்- நாட்டுப்புறப் பாடல்

நவீன கவிதையில்
பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை, எதற்கும் வருந்தாமல் சிரிக்கும் மலரைப்ப பெண்ணோடு
ஓப்பிட்டுள்ளார்..

நாட்டுப்புறப் பாடலில்

பெண் தெய்வமாகிய மாரியோடு ஒப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.

நவீன கவிதை கருத்து நாட்டுப்புறப் பாடல் கருத்து

பூவைக் இறுக்கி முடிச்சிட்டால் காம்பின் கழுத்து முறிவது போல பெண்களின் கழுத்து முறியும்.
மரியாகிய பெண் தெய்வத்திற்குக் கையாலே பூப்பறித்தால் காம்பு அழுகிவிடும் என்று கையாலே
பூப்பறிக்கவில்லை.

தளப்பிணைத்தா் மலர்கள் தரையில் நழுவுவது போல பெண் தளர்நத ் ால் வாழ்வு நழுவும். விரலால்
பூப்பறித்தால் பயனற்றதாய் வெம்பிவிடும் என்று விரலால் பூப்பறிக்கவில்லை.

வாசலிலே மரணம் வந்து நின்றாலும் வருந்தாமல் சிரிக்கும் பூவைப் போல பெண்ணும் வருத்தங்கள்
வந்தபோது அவற்றைச் சுமையாகக் கருதாமல் குடும்பத்தைக் காப்பாள். மேற்கண்ட காரணத்தால்
மாரியாகி பெண் தெயவத்துக்குத் தங்கத் துரட்டி கொண்டு பூப்பறித்தார்.

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1.கலைகள் மனித வாழ்விற்கு அழகூட்டுபவை

2.கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.

3.கவிஞர் உமா மேகஸ்வரி தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் வாழ்ந்து வருகிறார்.

II. இலக்கணக் குறிப்பு

1.தளர – பெயரச்சம்

2 இற க்கி – வினையெச்சம்

III. பகுபத உறுப்பிலக்கணம்:

1. இறுக்கி = இறுக்கு + இ

இறுக்கு – பகுதி

இ – வினையெச்ச விகுதி

2. சிரிக்கும் = சிரி + க் + க் + உம்

சிரி – பகுதி
க் -சந்தி

க் – எதிர்கால இடைநிலை

உம் – செய்யும் என்னும் வாய்பப் ாட்டு வினைமுற்று விகுதி

IV. சிறு வினா

1.கலை எவற்றுடன் தன்னை பிணைத்து கொண்டுள்ளது?

விடை :

அழகியல், மண்ணுயிர்கள் அனைத்தையும் தம் வாழ்வியல் சூழலுடன் பிணைத்து கொண்டுள்ளது

2. பூக்களை தொடுக்கும் போது இறுக்கி முடிச்சிடுவதாலும், தளரப் பினைப்பதாலும் நிகழ்வது என்ன?

விடை :

பூக்களை தொடுக்கும் போது

இறுக்கி முடிச்சிடுவதால் காம்புகளின் கழுத்து முறியும்.

தளரப் பினைப்பதால் மலர்கள் தரையில் நழுவும்.

3. பூத்தொடுத்தல் என்னும் கவிதையில் பூவை என்ற சொல் யாரைக் குறிக்கிறது? அப் பூவைத்
தொடுப்பது எப்படி?

விடை :

பூவை என்ற சொல் பெண்ணைக் குறிக்கிறது.

மனமாகிய நுட்பமான நூலால் மட்டுமே தொடுக்க முடியும்.

4. கவிஞர் உமா மேகஸ்வரி படைத்துள்ள கவிதைத் தொகுதிகளை கூறுக?

விடை :

● நட்சத்திரங்களின் நடுவே
● வெறும் பொழுது
● கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்.

5. கவிஞர் உமா மேகஸ்வரி பற்றி சிறு குறிப்பு வரைக

கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.

தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.

நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப்


படைத்துள்ளார்

கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்

3.முத்து குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

I. சொல்லும் பொருளும்
பண்டி – வயிறு

அசும்பிய – ஒளிவீசுகிற

முச்சி – தலையுச்சிக் காெண்டை

II. இலக்கணக் குறிப்பு

குண்டலமும் குழைகாதும் – எண்ணும்மை

ஆடுக – வியங்கோள் வினைமுற்று

கட்டிய – பெயரெச்சம்

வட்டச் சுட்டி – குறிப்பு பெயரெச்சம்

III. பகுபத உறுப்பிலக்கணம்

பதிந்து = பதி + த் (ந்) + த் + உ

பதி – பகுதி

த் – சந்தி

ந் – ஆனது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

V. சிறு வினா

1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய


நயத்தை விளக்குக.?

விடை ;

வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு

● கிண்கிணி:-

கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.

● அரைஞான் மணி:-

இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.

● சிறு வயிறு:-

பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.

● நெற்றிச் சுட்டி:-

பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்ட வடிமான சுட்டி பந்தாடியது.

● குண்டலங்கள்:-
கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழுகளும் அசைந்தாடின.

● உச்சிக் கொண்டை:-

உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டுப்பட்டுள்ள ஒளியுள் முத்துகளோடு ஆடியது.

● ஆடுக:-

வைத்திய நாதபுரி முருகனே! செங்கீரை ஆடி அருள்புரிவாயாக

பவளம் போன்ற உன் திருமேனி ஆட, செங்கீரை ஆடுக.

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1.சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும்..

2.முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் குமரகுருபரர்

3.முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று..

4.குமரகுருபரின் காலம் 17–ம் நூற்றாண்டு ஆகும்.

II. சிறு வினா

1. செங்கீரைப் பருவம் குறிப்பு வரைக?

விடை :

செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6 ம் மாதங்களில் மென்மையாக
அசையும். இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர்.

இப்பருவத்தில் குழந்தை தன் இருகைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலினை நீட்டி
தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.

2. குமரகுருபரர் குறிப்பிடும் அணிகலன்களும், அணியப்படும் இடங்களையும் கூறுக.?

விடை :

அணிகலன்கள் அணியப்படும் இடம்

சிலம்பு காலில் அணிவது

கிணகிணி காலில் அணிவது

அரை நாண் இடையில் அணிவது

சுட்டி நெற்றியில் அணிவது

குணடலம் காதில் அணிவது


குழை காதில் அணிவது

சூழி தலையில் அணிவது

1. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் சிறு குறிப்பு வரைக?

விடை :

● முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழினை குமரகுருபரர் இயற்றினார்.


● 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

● இதில் இறைவனையோ தலவரையோ அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு,


அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.

● பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புகிறது.

● பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது


பாடப்பெறும்.

● இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகையாகப் பாடப்பெறும்.

4. குமரகுருபரர் சிறு குறிப்பு வரைக

விடை:

● குமரகுருபரரின் காலம் 17 ஆம் நூற்றாண்டு.


● இவர் தமிழ், வடெமாழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
● கந்தர் கலிெவண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்,
● சகலகலா வல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்காேவை முதலான நூல்களை
இயற்றியுள்ளார்.

5. ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?

விடை :

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – சிற்றில், சிறுபறை, சிறுதேர்

6. பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?

விடை :

பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – கழ ங்கு, அம்மானை, ஊசல்


7. இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை?

விடை :

இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் – காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

You might also like