You are on page 1of 5

எஸ்.பி.ஓ.ஏ.சீனியர் செகண்டரி பள்ளி, மதுரை.

அலகுத் தேர்வு - 3

தமிழ்

வகுப்பு : 7. நேரம் - 40 நிமிடங்கள்

மதிப்பெண் -20

I.படித்தறிந்து விடையளி. 5

இயல் , இசை , நாடகம் என்பது முத்தமிழ்


ஆகும் . தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம். நாடகம்'
போலச் செய்தல்' என்னும் பண்பு அடிப்படையில் தோன்றியது
.பிறரைப் போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்னும் மனித
உணர்ச்சி தான் நாடகம் தோன்றக் காரணமானது. பண்டைய
மரப்பாவைக் கூத்து, பொம்மலாட்டமாக வளர்ச்சியடைந்து
தோல்பாவைக்கூத்து, மரப் பாவைக்கூத்து என வளர்ச்சி அடைந்து
உயிருள்ள மனிதர்களையே வேடம் புனையச் செய்து ஆடிப்பாடி
நடிக்க வைத்தது. தமிழ் நூல்களில் முறுவல், சயந்தம், செயிற்றியம் ,
மதிவாணர் நாடகத்தமிழ் நூல் , விளக்கத்தார் கூத்து, குணநூல் கூத்து
ஆகியன நாடகத்திற்கு எழுதப்பட்ட நூல்களாகும்.

வினாக்கள்

1. நாடகம் தோன்ற அடிப்படையாக அமைந்தது எது ?

2.தமிழில் முப்பெரும் பாகுபாடுகள் யாவை?

3. நாடகத்திற்கு இலக்கணம் வகுத்த நூல்கள் யாவை ?

4'.நாடகம் ' - பிரித்து எழுதுக.

5. கூத்தின் வளர்ச்சி நிலைகள் யாவை ?


II. மனனப் பாடலைத் தகுந்த சொற்களால் நிரப்புக: 3

வானம் ஊன்றிய ................. போல

.............. சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த ...........................

III. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி:


3×2=6

1. மருதன் இளநாகனார் பெயர்க்காரணம் கூறுக ?

2.நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?

3. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.

4. சிறிய நீர் நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய


ஊர்திகளின் பெயர்களை எழுதுக.

IV. கூறியவாறு செய்க: 3×1=3

1. கப்பல் - ஒரு பொருள் குறித்த பல திரிசொல்லாக மாற்று.

2.மண் ,பொன் - எவ்வகைச் சொற்கள் என எழுதுக.

3. விஷம் - தற்பவமாக மாற்றுக.

V. நிரப்புக. 3×1=3

1. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ..................

2. எல்லாருக்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ..............

3.' ஆழ்கடலின் அடியில்' என்ற விரிவானத்தில் விலங்கியல்


பேராசிரியரின்
பெயர் ..................

எஸ்.பி.ஓ.ஏ.சீனியர் செகண்டரி பள்ளி, மதுரை.

அலகுத் தேர்வு - 3

தமிழ்

வகுப்பு : 7. நேரம் - 40 நிமிடங்கள்

மதிப்பெண் -20

I.படித்தறிந்து விடையளி. 5

"தோன்றின் புகழோடு தோன்றுக " என்னும்


பொய்யாமொழி யாரின் பொன்மொழிக்கிணங்க புரட்சிப் பூக்கள்
பூத்துக் குலுங்கிய அவர்கள் 29.04.1981 ஆம் ஆண்டு பிறந்தார்.
இளமைப் பருவத்திலன் துடுக்கடக்கி பள்ளியில் சேர்ந்து
முத்தமிழ்ப்புலமை பெற்றார் . 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'
என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் . பாரதியாரால்
'சுப்புரத்தினம் ஓர் கவி' என்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம்
செய்து வைக்கப்பட்டார். சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு
ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சியடையாது என்பதனை உணர்ந்த
பாவேந்தர், புதிய சமுதாயத்தை உருவாக்குவதிலேயே தன்
சிந்தனையைச் செலவிட்டார் .இவரது நூல்களான இசையமுது ,
குடும்ப விளக்கு , குறிஞ்சித்திட்டு இன்றும் மலர்ந்து மணம் பரப்பிக்
கொண்டிருக்கின்றன.

வினாக்கள்

1. பாரதிதாசன் எப்போது பிறந்தார் ?

2. பாரதிதாசன் எக்கொள்கையை உயிர்மூச்சாய் கொண்டு இருந்தார்?

3. பாரதியாரால் , பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

4. பாரதிதாசன் எவற்றில் தன் சிந்தனையைச் செலவிட்டார் ?

5.பாரதிதாசன் இயற்றிய நூல்கள் எவையேனும் இரண்டு எழுதுக.

II. மனனப்பாடலைத் தகுந்த சொற்களால் நிரப்புக: 3

விண்பொர நிவந்த .............. மாடத்து

.................மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ................ கரையும்

துறை.

III.எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி: 3×2=6

1.' தோணி' என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

2. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?

3. பயணங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

4. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?


IV. கூறியவாறு செய்க: 3×1=3

1. மொழி - வேறு பெயர்களை எழுதுக.

2. அழுவம் ,வங்கம் - எவ்வகைத் திரிசொல் என எழுதுக.

3.லக்ஷ்மி - தற்பவமாக மாற்றுக.

V. நிரப்புக. 3 ×1=3

1. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி...................

2. பல பொருள் தரும் ஒரு சொல் என்பது ................

3.' ஆழ்கடலின் அடியில் 'விரிவானத்தில் இடம்பெற்றுள்ள நீர்மூழ்கி


கப்பலின்

பெயர் ................

You might also like