You are on page 1of 5

முதல் முழுப் பாடத் தேர்வு -2023- 24

வகுப்பு : பதினொன்று மதிப்பெண் : 90 பாடம்


: தமிழ்
நேரம் : 3.00 மணி
I . கீழ்க்காணும் வினாக்களுக்கு உரிய சரியான விடையளி : 6x1=6
1 . கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு………………..
அ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் ஆ) தமிழனின் கவிதை இயல்

இ) புல்லின் இதழ்கள் ஈ) உயிர்த்தெழும் காலத்துக்காக

2.புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்……………..


அ) ஸ்டெஃபான் மல்லார்மே ஆ) பாப்லோ நெரூடா இ) வால்ட் விட்மன் ஈ) இந்திரன்
3. பொருத்துக
i) இந்துளம் – 1. மயில்
ii) இடங்கணி – 2. ஒருவகைப் பண்
iii) தரளம் – 3. சங்கிலி
iv) மஞ்ஞை – 4. முத்து
அ) 2, 3, 4, 1 ஆ) 3, 4, 2, 1 இ) 4, 3, 2, 1 ஈ) 2, 1, 4, 3
4. தாழ்வாரத்தை ‘மெட்டு ‘எனக் குறிப்பிட்டவர் …………..
அ) ஜதாப்பு ஆ) குறும்பர் இ) தோடர் ஈ) கோண்டு
5. கடவுளோடு மனிதர்களைப் பாடியவை ………………
அ) சங்க இலக்கியங்கள் ஆ) சிற்றிலக்கியங்கள் இ) சமய இலக்கியங்கள் ஈ) காப்பியங்கள்
6, அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல் …………………
அ) குறடு ஆ) நெறிக்கட்டு இ) வடக்குவீதி ஈ) தகப்பன் கொடி

II. கீழ்க்காணும் வினாக்களுக்கு உரிய சரியான விடையளி 8x1=8


7. தவறான இணையைத் தெரிவு செய்க.
அ) கயல் + விழி = பெயர் + பெயர் ஆ) தமிழ் + கற்றாள் =பெயர் + வினை
இ) வந்தாள் +மகாலட்சுமி =வினை +வினை ஈ) தொழுதனர் +மக்கள் =வினை + பெயர்
8. பொருள் தெரியாத சொற்களுக்கும் பொருள் கூறுதல் ……………… நோக்கம்.
அ) கலைச் சொல்லின் ஆ, இணையத்தின் இ) அகராதியின் ஈ) வலைப்பூவின்

9. பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே------

அ.வளை ஆ.மதி இ.இதழ் ஈ.ஆழி

10. கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.


அ) விரியன் – 1. தண்டை

ஆ) திருகுமுருகு – 2. காலாழி
இ) நாங்கூழ்ப்புழு – 3. சிலம்பு

ஈ) குண்டலப்பூச்சி – 4. பாடகம்
i–3421 ii – 3 1 4 2 iii – 4 3 2 1 iv – 4 1 3 2
11.மாண்ட தவளை -இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு
அ.வினைமுற்று ஆ.பெயரெச்சம் இ.வினையெச்சம் ஈ. உரிச்சொற்றொடர்

12.இனிதென ‘ – இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.


அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
ஆ) தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்; உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.

13.பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்கள்.

அ.பெயர்ச்சொல் ஆ.இடைச்சொல்,உரிச்சொல்

இ.வினைச்சொல் ஈ.இவை அனைத்தும்

14 . “இந்தியா 24 மணி நேரம்”என்னும் ஆவணக் குறும்படத்திற்கு இசை அமைத்தவர்.

அ. ஏ.ஆர்.ரஹ்மான் ஆ.இசைஞானி இளையராஜா

இ.கண்ணதாசன் ஈ. சங்கர் III .


எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி 3x2=6

15.தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

16. பாயிரத்தின் வேறு பெயர்கள் யாவை?

17.அகநானூற்றின் பிரிவுகள் யாவை?

18. உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?

IV . எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி 2x2=4


19. மொழி வெளிப்பாட்டின் பகுதிகள் யாவை?

20.தமிழ்நாட்டின் மாநில மரம் – சிறு குறிப்பு வரைக.

21. கோட்டை’ என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

22..நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?

V. எவையேனும் ஏழு வினாக்களுக்கு மட்டும் விடையளி 7x2=14


23. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

அ) குமரனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா?


என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் குமரனது வீடு.
ஆ).கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவர்.

24. உயிர்முதல், மெய்ம்முதல் – எடுத்துக்காட்டுடன் விளக்குக.

25. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.


அ. குரை, குறை (அல்லது) ஆவிலை, விளை, விழை

26. தமிழில் எழுதுக அ .CULTURE ஆ AGREEMENT

27.பிறமொழிச் சொற்களை தமிழாக்கம் தருக.


அ.வாடகை ஆ.பத்திரிக்கை இ.கம்பெனி . ஈ .விசா

28. நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்துக்குச் செல்வேன்

-- (பொருள் மாறா எதிர்மறை தொடராக மாற்றுக )

29. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.


அ. தங்கை (அல்லது) ஆ. பிண்ணாக்கு
30. பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக. அ). அலர்ந்து (அல்லது) ஆ. உழைப்போர்

31. புணர்ச்சி விதி தருக. - அ. காலங்கடந்தவன் (அல்லது) ஆ.உலகனைத்தும்

VI. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி 2x4=8


32.தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும்
மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?
33. .“சலச வாவியில் செங்கயல் பாயும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

34. சேரநாடு, செல்வவளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய தருணங்களைக் குறிப்பிடுக.


35.மேகத்திடம் கூறுவதுபோலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சிப் பொருள் யாது?

VII. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி

2x4=8

36. வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? – நும் கருத்தை எழுதுக.


37. ஆனந்தரங்கர், ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப் பகுதிவழி எடுத்துக்காட்டுக.
38. ‘தாமஸிகம்’ என்றால் என்ன?
39.இயற்கையுடன் உரையாடல் ஒன்றைக் கற்பனையாகப் பத்து வரிகளில் எழுதுக.

VIII.எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி 3x4=12


40.. அ. உவமை அணி (அல்லது)
ஆ. சொல் பின்வரும் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக

41. விதி வேறுபாடறிந்து விளக்குக.


i. தன்னொற்றிரட்டல் – தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்.
ii. இனமிகல் – வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.
42. இலக்கிய நயம் பாராட்டுக (ஏற்புடைய நயங்களை எழுதுக)

தண்டலை மயில்கள் ஆட, தாமன் விளக்கம் தாங்க,


கொண்டல்கள் முழவின் எங்கள் தவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பால மருதம்வீற் றிருக்கும் மாதோ. – கம்பர்

43. தமிழாக்கம் தருக

The folk songs of TamilNadu have in thema rawarkable charm just as we find in the folk
songs of any other country. But what is special in Mese Tamil songs is, they not only possess a
native charm and the aroma of the soil but have reserved in them a certain literary and artistic
quality. This is so because the people who yowak the language of these folk songs, the Tamils,
have had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so old and yet
so full of life that they are alwax new and progressively modern. These songs were born several
centuries ago; they are baing born every generation; they will be born and reborn over and over
again!

IX.கீழ்க்காணும் வினாக்களுக்கு உரிய விடையளி : 3x6=18

44. அ). வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை


விளக்கிக் கட்டுரையாக்குக.

(அல்லது) )
ஆ. பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி’ என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.

45. அ. “‘சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே’ என்னும் தலைப்பில்


மேடைப்பேச்சிற்கான உரையை உருவாக்குக.

(அல்லது)

ஆ. ‘கல்லும் கதை சொல்லும்’ – என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப்


பொருந்துவதை விளக்கி எழுதுக
46. அ. ‘யானை டாக்டர்’ கதை வானலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர்
அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.

(அல்லது)

ஆ. நர்த்தகி நடராஜின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க.


X. மனப்பாட வரிகளை அடிப்பிறழாமல் எழுதுக 4+2=6
47. அ .“ அம்ம வாழித் ”- எனத் தொடங்கும் பாடல் எழுதுக

ஆ. “செயல் ‘‘ என முடியும் குறளை எழுதுக

You might also like