You are on page 1of 16

பொதுத் தமிழ் வாராந்திர தேர்வு

வகுப்பு : பத்தாம் வகுப்பு

பாடம் : இரண்டாம் வினாத்தாள் இயல் – 4,5,6

மொத்த மதிப்பெண்கள் : 100

தேர்வுக்கான நிபந்தனைகள்:

இத்தேர்வினை அவரவர் வகுப்பு நேரங்களிலேயே எழுத வேண்டும். இத்தேர்வானது 100 வினாக்கள்


உடையதாக இருக்கும். தேர்வை முடித்த பின்னர் உடனடியாக அதற்கான பதில்களைக் கொண்டு
திருத்தி கொடுக்கப்படும். கண்டிப்பாக அனைவரும் இத்தேர்வை எழுத வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறோம்.

பத்தாம் வகுப்பு இரண்டாம் வினாத்தாள்

இயல் – 4, 5, 6
1. உயிரினங்களில் மனிதனை உயர்தத
் ிக் காட்டுவது எது?
அ) செயல் ஆற்றல் ஆ) கற்பனை ஆற்றல்
இ) சிந்தனை ஆற்றல் ஈ) படைப்பு ஆற்றல்

2. வித்துவக்கோட்டில் இருக்கும் திருமாலை பெண் தெய்வமாகப் பாவித்துப் பாடியவர்


அ) நம்மாழ்வார் ஆ) பூதத்தாழ்வார்
இ) பேயாழ்வார் ஈ) குலசேகராழ்வார்

3. பின்வரும் விடைகளில் வெளிப்படை விடை எது?


அ) உற்றது உரைத்தல் ஆ) உறுவது கூறல்
இ) ஏவல் ஈ) மறை

4. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி எது?


அ) மத்தளம் ஆ) உறுமி
இ) நாதஸ்வரம் ஈ) பறை

5. இரவீநத
் ரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
அ) ஜி.யு.போப் ஆ) யூமா வாசுகி
இ) மணவை முஸ்தபா ஈ) இரவீநத
் ரநாத் தாகூர்

6. புலி, சிங்கம் எந்த நிலத்திற்குரிய விலங்குகள்?


அ) முல்லை ஆ) பாலை
இ) குறிஞ்சி ஈ) நெய்தல்

7. பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுடன் உரையாட உருவாக்கிய மென்பொருள்


அ) இலா ஆ) சீலா
இ) மாலாலா ஈ) சுமி

8. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் எந்த இயலில் குறிப்பிட்டுள்ளார்?


அ) தொகைமரபு ஆ) செய்யுளியல்
இ) மரபியல் ஈ) விளிமரபு

9. ‘இங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்து விட்டேன்’ என்று பாடியவர்


அ) திருமூலர் ஆ) பாரதியார்
இ) திருநாவுக்கரசர் ஈ) தாயுமானவர்

10. குதிரையாட்டம் யாருடைய ஆட்சிக் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது?


அ) நாயக்கர் ஆ) மராட்டியர்
இ) பாளையக்காரர் ஈ) சோழர்

11. செயற்கை நுண்ணறிவை முதலாவதாகவும் சரியாகவும் பயன்படுத்துபவர்களுக்கு வசப்படுவது எது?


அ) அரசியல் ஆ) பொருளாதாரம்
இ) வணிகம் ஈ) சட்டம்

12. பண்டைத் தமிழ் வணிகர்கள் அடிக்கடி சென்று வந்த சீனாவின் துறைமுகம்


அ) நிங்போ ஜோஷான் ஆ) ஒங்கொங்
இ) சம் சுயிபோ ஈ) சூவன்சௌ

13. சீனப்பேரரசனான குப்வாய்கானின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவிலில் அமைக்கப்பட்ட சிற்பங்கள்
அ) பல்லவர்கால சிற்பங்கள் ஆ) நாயக்கர்கால சிற்பங்கள்
இ) சோழர்கால சிற்பங்கள் ஈ) பாண்டியர்கால சிற்பங்கள்

14. நாலாயிர திவ்யபிரபந்தத்தில் பெருமாள் திருமொழி இடம்பெறுவது


அ) மூன்றாம் திருமொழி ஆ) நான்காம் திருமொழி
இ) ஐந்தாம் திருமொழி ஈ) ஆறாம் திருமொழி

15. கவிதையில் கருப்பொருளின் பின்னணியில் அமைத்துப் பாடுவது எது?


அ) முதற்பொருள் ஆ) உரிப்பொருள்
இ) பெரும்பொழுது ஈ) சிறுபொழுது

16. ‘உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்’ – இதில் ‘ஊழி’ என்பதன் பொருள் என்ன?
அ) கடல் ஆ) வானம்
இ) ஆண்டு ஈ) யுகம்

17. ஐம்பெரும் பூதங்களில் முதலாவது எது?


அ) வானம் ஆ) காற்று
இ) நீர் ஈ) நிலம்
18. இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகைஅரைவட்ட வானத்திரை எங்கு அமைந்துள்ளது?
அ) ஐதராபாத் ஆ) திருவனந்தபுரம்
இ) சென்னை ஈ) பெங்களூரு

19. ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவது எது?


அ) கல்வி ஆ) தியானம்
இ) அன்பு ஈ) நட்பு

20. இராஜஸ்தானில் கச்கிக்கொடி என்று அழைக்கப்படும் ஆட்டம் எது?


அ) காவடியாட்டம் ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்
21. மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறன் எது?
அ) சிந்தனைத் திறன் ஆ) ஆளுமைத் திறன்
இ) புத்திக்கூர்மை ஈ) படைப்புத்திறன்

22. அண்டப்பருவெளியில நம் பால்வத


ீ ி போன்று பல பால்வத
ீ ிகள் உள்ளன என்று நிரூபித்தவர் யார் ?
அ) ஜான் வீலர் ஆ) எட்வின் ஹப்பிள்
இ) ஐன்ஸ்டைன் ஈ) ஸ்டீபன் ஹாக்கிங்

23. புவியின் உருவாக்கம் குறித்து இன்றைய அறிவியல் கூறுகிற கருத்தை அன்றே பழங்கவிதையில் உரைத்தவர்?
அ) கணியன் பூங்குன்றனார் ஆ) கீரந்தையார்
இ) மோசிகீரனார் ஈ) பிசிராந்தையார்

24. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர்


அ) பெப்பர் ஆ) வாட்சன்
இ) சோனிக் ஈ) ஃபீனிக்ஸ்

25. தலைவிதிதான் வாழ்ககை


் யைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்தத
் ால் எனக்குச் சிரிப்புதான்
வருகிறது என்று கூறியவர்?
அ) ஐன்ஸ்டைன் ஆ) நியூட்டன்
இ) ஸ்டீபன் ஹாக்கிங் ஈ) ஜான் வீலர்

26. இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி,
பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது.
அ) மரபு நிலை ஆ) வழுநிலை
இ) வழாநிலை ஈ) வழுவமைதி

27. “சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ”் இக்குறளில் பயின்று வந்துள்ள
அணி எது?
அ) உவமையணி ஆ) உருவகவணி
இ) தீவகவணி ஈ) சிலேடையணி

28. நடந்தாய், வந்தரீ ் என்பன


அ) தன்மை வினைகள் ஆ) முன்னிலை வினைகள்
இ) படர்க்கை வினைகள் ஈ) தன்மைப் பெயர்கள்

29. ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகளில் தவறானது எது?


அ) அமெரிக்காவின் அதிபர் விருது ஆ) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
இ) உல்ஃப் விருது ஈ) அடிப்படை வேதியியல் விருது

30. “ஒரு மொழியில் உணர்தத


் ப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்று கூறியவர்
யார்?
அ) கணமுத்தையா ஆ) மணவை முஸ்தபா
இ) ஸ்ரீதர் ஈ) தெ.பொ.மீனாட்சி

31. உலக நாகரிக வளர்சச


் ிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவர்
யார்?
அ) தெ.பொ.மீனாட்சி ஆ) மு.கு. ஜகந்நாதர்
இ) கணக முத்தையா ஈ) மணவை முஸ்தபா

32. 2016 இல் ஐ.பி.எம்.நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினி வாட்சென் கண்டுபிடித்தது


அ) புற்றுநோய் ஆ) கொரொனா
இ) மூளைக்காய்ச்சல் ஈ) நீரழிவு

33. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பை ----------- என்கிறோம்.


அ) நுண்கலை ஆ) பயன்கலை
இ) படிமக்கலை ஈ) கவின்கலை
34. ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக்கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள
சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவது?
அ) சேர்வையாட்டம் ஆ) தேவராட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) மயிலாட்டம்

35. “சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன்” இதில் சொல்லேருழவன் யார்?


அ) மோசிகீரனார் ஆ) கூடலூர்க்கிழார்
இ) நல்லந்துவனார் ஈ) நக்கீரனார்

36. தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று குறிப்பிடும் நூல் எது?
அ) நீதி வெண்பா ஆ) திருக்குறள்
இ) பழமொழி நானூறு ஈ) சிறுபஞ்சமூலம்

37. ஸ்டீபன் ஹாக்கிங், அண்டவெளியில் காணப்படும் கருந்துளையை என்னவென்று நிறுவினார்?


அ) செயற்கையின் ஆற்றல் ஆ) அழிவின் ஆற்றல்
இ) படைப்பின் ஆற்றல் ஈ) நுண்ணறிவின் ஆற்றல்

38. கீழ்க்காணும் நூல்களுள் பரஞ்சோதி முனிவர் இயற்றாதது எது?


அ) வேதாரண்யப் புராணம்
ஆ) திருவிளையாடற் புராணம்
இ) திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா
ஈ) திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

39. எவர் பொருட்டு, இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வடதிருஆலவாயில் சென்று தங்கினார்?
அ) மோசிகீரனார் ஆ) கீரந்தையார்
இ) இடைக்காடனார் ஈ) உலோச்சனார்

40. புதிய நம்பிக்கை என்னும் கதையின் ஆசிரியர் யார்?


அ) புதுமைப்பித்தன் ஆ) புலமைப்பித்தன்
இ) சு.சமுத்திரம் ஈ) கமலாலயன்

41. “குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்


சுற்றமாச் சுற்றும் உலகு” இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்?
அ) குடிசெயல் வகை ஆ) நல்குரவு
இ) பகை மாட்சி ஈ) கயமை

42. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவும் வினா?


அ) கொடை வினா ஆ) கொளல் வினா
இ) அறிவினா ஈ) ஏவல் வினா

43. இன்றைய தொழில்நுட்பத் திறன்பேசியில் உரிமையாளரை அடையாளம் காண்பது


அ) கைரேகை ஆ) கடவுச்சொல்
இ) முகம் ஈ) குரல்ஒலி

44. திருக்குறளில் தோற்பாவைக் கூத்து எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?


அ) கையுறைப் பாவை ஆ) கொல்லிப்பாவை
இ) மரப்பாவை ஈ) வாயுறைப்பாவை

45. தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும் போது,“இந்த மாறன் ஒருநாளும் பொய்


கூறமாட்டான் ” என்று குறிப்பிடுவது.
அ) பால் வழுவமைதி ஆ) காலவழுவமைதி
இ) இடவழுவமைதி ஈ) மரபு வழுவமைதி

46. “ஆலத்து மேல குவளை குளத்துள


வாலின் நெடிய குரங்கு” இப்பாடலடியில் அமைந்துள்ள பொருள்கோள் எது?
அ) ஆற்றுநீர் ஆ) முறை நிரல்நிரை
இ) எதிர் நிரல்நிரை ஈ) கொண்டுகூட்டு

47. 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு


உணர்த்தும் செய்தி
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

48. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி


மருளை அகற்றி மதிக்கும் தெருளை“ - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ் ஆ) அறிவியல்
இ) கல்வி ஈ) இலக்கியம்

49. சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன


அ) இலக்கியங்கள் ஆ) கட்டக்கலைகள
இ) நிகழ்த்துக்கலைகள் ஈ) சிற்பக்கலைகள்

50. “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்


மாளாத காதல் நோயாளன் போல” என்னும் பாடல் இடம் பெறுவது
அ) பெரியாழ்வார் திருமொழி ஆ) பெரிய திருமொழி
இ) பெருமாள் திருமொழி ஈ) நாச்சியார் திருமொழி

51. “நீரற வறியாக் கரகத்து” என்று கரகாட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?
அ) புறநானூறு ஆ) சிலப்பதிகாரம்
இ) தமிழ்விடுதூது ஈ) தொல்காப்பியம்

52. இன்றைய மின்னணுப் புரட்சிக்கு காரணமாக அமைவது


அ) வலைதளம் ஆ) மென்பொருள்
இ) வன்பொருள் ஈ) இணையம்

53. புலம்பெயர் தமிழர் வாழும் மலேசியாவில் ஆடப்படும் நிகழ்த்துக்கலை எது?


அ) தேவராட்டம் ஆ) ஒயிலாட்டம்
இ) காவடியாட்டம் ஈ) கரகாட்டம்

54. “சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும் உள்ளே ஈர்க்கப்படும். அவை


வெளிவரமுடியாததால் இதனைக் கருந்துளை எனலாம்” என்று கூறியவர்?
அ) ஐன்ஸ்டைன் ஆ) நியூட்டன்
இ) ஸ்டீபன் ஹாக்கிங் ஈ) ஜான் வீலர்

55. “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர்?


அ) நா.வானமாமலை ஆ) தே.லூர்து
இ) ந.முத்துச்சாமி ஈ) சங்கரதாஸ்சுவாமிகள்

56. ஒரே நேரத்தில் நிகழ்தத


் ப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளிப்பது
அ) தசாவதானி ஆ) சதாவதானி
இ) அட்டாவதானி ஈ) மகரிசி

57. “பதலை திமிலைதுடி தம்பட்டமும் பெருக” இதில் குறிப்பிடப்படும் கலை எது?


அ) புலியாட்டம் ஆ) புரவியாட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) தப்பாட்டம்

58. தற்போது இந்த உலகத்தை ஆண்டுகொண்டிருப்பது


அ) வலைதளம் ஆ) மென்பொருள்
இ) வன்பொருள் ஈ) இணையம்

59. பின்வரும் செய்திகளில் தவறானது எது?


அ)பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை
அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன.

ஆ) ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் பெண், ஆண்வேடமிட்டு


ஆடுவதும் உண்டு.

இ) தண்ணீர் குடித்துக் கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள்


மயிலாட்டத்தில் ஆடிக்காட்டுவர்.

ஈ) தேவராட்டம், வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள்


கொள்ளப்படுகிறது. இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் .
60. பொருத்துக.
1. கிண்கிணி - a. காலில் அணிவது 2. சுட்டி - b. நெற்றியில் அணிவது
3. குண்டலம்- c. காதில் அணிவது 4. சூழி - d. தலையில் அணிவது
அ) 1 – d, 2 – a, 3 – b, 4 – c ஆ) 1 – a, 2 – b, 3 – c, 4 – d
இ) 1 – a, 2 – b, 3 – d, 4 – c ஈ) 1 – d, 2 – b, 3 – c, 4 – a

61. குழந்தைதன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும்முகமசைந்தும்
ஆடும் பருவம் எது?
அ) சப்பாணிப் பருவம் ஆ) வருகைப் பருவம்
இ) செங்கீரைப் பருவம் ஈ) தாலப்பருவம்
62. சிலப்பதிகாரத்தில் குடக்கூத்து என்னும் ஆடலை ஆடியவர்?
அ) கண்ணகி ஆ) மாதவி
இ) மாதரி ஈ) சித்திராபதி

63. தாதுகு சோலை தோறும் செண்பக்காடு தோறும் பாயும் ஆறு எது?


அ) பஃறுளி ஆ) பொன்னி
இ) சரயு ஈ) நொய்யல்

64. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்கள் எத்தனை?


அ) 101 ஆ) 105
இ) 108 ஈ) 96

65. ‘வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்’ இதில் வண்மை என்பதன் பொருள்


அ) வலிமை ஆ) கொடை
இ) பகை ஈ) அன்பு

66. ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’ என்று சந்த இன்பத்தைக் கூறியவர்?
அ) கம்பர் ஆ) அருணகிரிநாதர்
இ) தாயுமானவர் ஈ) பாரதியார்

67. ‘கல்வியில் பெரியவர்’ என்று போற்றப்படுபவர் யார்?


அ) கபிலர் ஆ) கம்பர்
இ) நக்கீரர் ஈ) ஒட்டக்கூத்தர்

68. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும்.


அ) மரபு ஆ) வழு
இ) வழாநிலை ஈ) வழுவமைதி

69. ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
அ) ந. முத்துச்சாமி ஆ) சா. கந்தசாமி
இ) உமாமகேஸ்வரி ஈ) கு. அழகிரிசாமி

70. முல்லை நிலத்தின் பெரும்பொழுது எது?


அ) குளிர்காலம் ஆ) முன்பனிக்காலம்
இ) இளவேனில் காலம் ஈ) கார்காலம்

71. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.


இத்தொடருக்கான வினா எது?
அ) கரகாட்டம் என்றால் என்ன ?
ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

72. பொருத்துக.
1. குறிஞ்சி - a. மணமுழா 2. முல்லை - b. மீன்கோட்பறை
3 . மருதம் - c. தொண்டப்பறை 4. நெய்தல் - d. ஏறுகோட்பறை
அ) 1 – c, 2 – d, 3 – b, 4 – a ஆ) 1 – d, 2 – a, 3 – b, 4 – c
இ) 1 – c, 2 – d, 3 – a, 4 – b ஈ) 1 – a, 2 – b, 3 – c, 4 – d

73. நெய்தல் நிலத்தின் சிறுபொழுது எது?


அ) மாலை ஆ) எற்பாடு
இ) வைகறை ஈ) யாமம்

74. மழை வேண்டி நிகழ்த்தப்படும் தெருக்கூத்து?


அ) வள்ளித் திருமணம் ஆ) அருச்சுனன் தபசு
இ) அரிச்சந்திரன் கதை ஈ) முத்துப்பட்டான் கதை
75. சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் பெரும்பொழுது எது?
அ) பின்பனிக்காலம் ஆ) முதுவேனிற்காலம்
இ) இளவேனிற்காலம் ஈ) முன்பனிக்காலம்

76. “தேவர் அனையர் கயவர் அவரும்தாம்


மேவன செய்தொழுக லான்” இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
அ) பிறிதுமொழிதல் அணி ஆ) வஞ்சப் புகழ்ச்சி அணி
இ) பின்வருநிலையணி ஈ) எடுத்துக்காட்டு உவமையணி

77. ‘இன்மையின் இன்மையே இன்னாதது’ இவ்வடியில் இன்மை என்பதன் பொருள்


அ) அறியாமை ஆ) நிறைவு
இ) வறுமை ஈ) துன்பம்

78. “ போலச்செய்தல் ” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலை எது?


அ) பொய்க்கால் குதிரையாட்டம் ஆ) சேர்வையாட்டம்
இ) ஒயிலாட்டம் ஈ) தேவராட்டம்

79. அறனீனும் இன்பமும் ஈனும் தி்றனறிந்து – இக்குறளின் அடுத்த அடி யாது?


அ) தீதின்றி வந்த பொருள் ஆ) தியற்கை அறிந்து செயல்
இ) புல்லார் புளர விடல் ஈ) தஞ்சம் எளியன் பகைக்கு

80. சா. கந்தசாமியின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்?


அ) விசாரணை கமிஷன் ஆ) சாயாவனம்
இ) சூர்யவம்சம் ஈ) சாந்தகுமாரி

81. “ஆடுக செங்கீ்ரை” இதில் ‘ஆடுக’ என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?


அ) பெயரெச்சம் ஆ) வினையெச்சம்
இ) வியங்கோள் வினைமுற்று ஈ) தொழிற்பெயர்

82. கங்கைப் படலத்தின் வேறுபெயர் என்ன?


அ) பொன்னிப் படலம் ஆ) குகப்படலம்
இ) நாட்டுப்படலம் ஈ) ஆற்றுப்படலம்
83. முத்துக்குமாரசுவாமிப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் யார்?
அ) அருணகிரிநாதர் ஆ) குமரகுருபரர்
இ) சிவஞான முனிவர் ஈ) சேக்கிழார்

84. கரகாட்டத்திற்கு அடிப்படை குடக்கூத்து என்று குறிப்பிடும் நூல் எது?


அ) புறநானூறு ஆ) சிலப்பதிகாரம்
இ) திருப்புகழ் ஈ) தொல்காப்பியம்

85. “இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்”என்று கூறுவது


அ) வினாஎதிர் வினாதல் விடை ஆ) இனமொழி விடை
இ) ஏவல் விடை ஈ) மறைவிடை

86. “ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து” இவ்வடியில் நீபவனம் என்பது
அ) செண்பகவனம் ஆ) கடம்பவனம்
இ) சந்தனவனம் ஈ) அசோகுவனம்

87. திருவிளையாடற் புராணம் எத்தனைப் படலங்களைக் கொண்டுள்ளது?


அ) 52 ஆ) 64
இ) 118 ஈ)108

88. பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்கள் எம்மொழிக் கதைகளைத் தழுவி


படைக்கப்பட்டவை?
அ) வடமொழி ஆ) ஆங்கிலம்
இ) திராவிடமொழி ஈ) கிரேக்கம்

89. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்வானவர் என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?


அ) திருத்தக்கத்தேவர் ஆ) சீதத
் லைச் சாத்தனார்
இ) சேக்கிழார் ஈ) கம்பர்

90. “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்


அ) சாங்கிருத்யாயன் ஆ) மு.கு. ஜகந்நாதர்
இ) கணமுத்தையா ஈ) சா.முத்தையா
91. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று பாடியவர்?
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன்
இ) சுரதா ஈ) வெ.இராமலிங்கம்

92. குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார்
பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ) இடவழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இடவழுவமைதி

93. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?


அ) 1980 ஆ) 1984
இ) 1988 ஈ) 1992

94. ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் மொத்தம்


எத்தனை?
அ) ஐந்து ஆ) ஏழு
இ) மூன்று ஈ) பத்து

95. “அண்டப் பகுதியின் உண்டை பிறக்கம்” என்று அண்டப் பகுதிகள் ஈர்ப்புடன் தூசு போல் நுண்மையாக
இருப்பதைக் குறிப்பிடுவபர் யார்?
அ) திருமூலர் ஆ) திருநாவுக்கரசர்
இ) மாணிக்கவாசகர் ஈ) திருஞானசம்பந்தர்
96. பரிபாடலில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை?
அ) 70 ஆ) 50
இ) 24 ஈ) 22

97. பிரான்சு "தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும்
கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன என்று குறிப்பிட்டவர்.
அ) உ.வே.சாமிநாதையர் ஆ) தனிநாயகம் அடிகள்
இ) மணவை முஸ்தபா ஈ) சங்கர நமச்சிவாய முதலியார்

98. சா. கந்தசாமி இயற்றிய ‘சுடுமண் சிலைகள்’ என்பது


அ) சிறுகதைத் தொகுப்பு ஆ) புதினம்
இ) குறும்படம் ஈ) கட்டுரைத் தொகுப்பு

99. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?


அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

100. “காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை
வேண்டும்" என்று குறிப்பிட்டவர் யார்?
அ) பாரதியார் ஆ) குலோத்துங்கன்
இ) கணமுத்தையா ஈ) குமரகுருபரர்

விடைகள்
1 2 3 4 5 6 7 8 9 10

இ ஈ ஈ ஆ ஈ இ அ இ ஆ ஆ

11 12 13 14 15 16 17 18 19 20

இ ஈ இ இ ஆ ஈ அ இ அ ஈ

21 22 23 24 25 26 27 28 29 30

இ ஆ ஆ அ இ ஈ அ ஆ ஈ ஆ

31 32 33 34 35 36 37 38 39 40

ஆ அ ஆ இ அ ஆ இ ஈ இ ஈ

41 42 43 44 45 46 47 48 49 50

அ ஆ இ இ இ ஈ அ இ இ இ

51 52 53 54 55 56 57 58 59 60

அ ஈ இ ஈ இ ஆ ஈ ஆ ஆ ஆ

61 62 63 64 65 66 67 68 69 70

இ ஆ இ ஆ ஆ ஈ ஆ இ ஆ ஈ

71 72 73 74 75 76 77 78 79 80

ஈ இ ஆ ஆ இ ஆ இ அ அ அ

81 82 83 84 85 86 87 88 89 90

இ ஆ ஆ ஆ இ ஆ ஆ அ ஈ இ

91 92 93 94 95 96 97 98 99 100

அ இ இ ஆ இ அ ஆ இ ஈ ஆ

You might also like