You are on page 1of 1

ஹம்ஸ யோகம் – 02

மூலம்: பண்டிச் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா


தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
*****************************************************************************

ஒவ்வொரு அறிவியல் மாணவனும் ஒட்சிசன் பூமியில் உயிர்வாழ்வதற்கு எவ்வளவு அவசியம் என்பதை


அறிவான். அனைத்துக்கும் மேலாக மனித உடலிற்கு உணவையும் நீரையும் விட அவசியமானது பிராண
வாயு எனப்படும் ஒட்சிசனாகும். ஓட்சிசன் குருதியில் செம்மை நிறத்தை (ஹீமோகுளோபின்) சரிசெய்யும்
முக்கிய பொருளாகும். இந்த வாயுவே எரிபொருளாகும். உடலாகிய இயந்திரத்தின்
அனைத்துப்பாகங்களும் சக்தி பெற்று இயங்குவதற்கு இந்த எரிபொருள் அவசியமானதாகும்.
இதனுடைய சீரான ஓட்டமும், அளவும் இந்த ஸ்தூல உடல் ஒழுங்காக இயங்குவதற்கு அத்தியாவசியமான
ஒன்றாகும்.
பிராணன் என்ற சொல் மிக சூட்சுமமான உயிர் சக்தியினைக் குறிப்பதாகும். இது ஸ்தூல நிலையில்
உடலின் பௌதீக, இரசாயன இயக்கங்களை ஒழுங்குபடுத்தும் ஒரு சக்தியாக செயற்படுகிறது.
ஒருவனிடம் இருக்கும் பிராணனின் அளவு அவனது செயலின் மீதான ஆர்வம், விழிப்புணர்வு, உத்வேகம்,
சிறப்பாக ஆற்றலுடன் செயற்படும் தன்மை ஆகியவற்றைத் தீரம ் ானிக்கும்! பௌதீக உடல் பயிற்சி,
ஆழமாக மூச்சு விடுதல், ஓடுதல் போன்றவை உடலில் ஒட்சிசனின் அளவைக்கூட்டி சீரப் டுத்தும். ஆனால்
நுண்மையான பிராணனினை ஒழுங்கு படுத்துவதற்கு யோகாசனம், பிரணாயாமம் ஆகியவை
பயன்படுத்தப்பட வேண்டும். இவை அதிக பிராணனை உடலிற்கு ஏற்பிக்கச் செய்யும். இந்த பிராணனே
உண்மையான வலிமைக்கும் ஆன்ம உணர்விற்குமான காரணமாகும்.
யோக சாஸ்திர நூற்களில் பலவிதமான பிரணாயாமங்கள் விளங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது. பிரம்ம
வர்ச்சாஸ் எனப்படும் பிரம்ம சக்தியைப் பெறுவதற்கான பிராண யோக முறைகளில் சூரியவேதா,
அனுலோம-விலோம பிராணாயம முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பௌதீக உடற்பயிற்சிகள் ஸ்தூல
உடலினை ஒழுங்குபடுத்தும் போது யோகாசனம், பிரணாயாமம் என்பவை சூக்ஷ்ம உடலினை
வலிமைப்படுத்தும் பயிற்சியாக இருக்கிறது. ஆகவே பிரணாயாமம் என்பது சூக்ஷ்ம சரீரத்தின்
ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும்.
பிராணனின் ஸ்தூல அமைப்பான பிராண வாயு – ஒட்சிசன் – ஸ்தூல உடலினால் பாவிக்கப்படும் அதே
வேளை அதன் சூக்ஷ்ம பகுதி சூக்ஷ்ம உடலினால் ஏற்கப்படுகிறது. இது பிரணாயாமத்தால்
ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஸ்தூல், சூக்ஷ்ம உடலைப்போல் எமக்கு இருக்கும் நுண்ணிய சரீரம் காரண
சரீரம் எனப்படும். இந்த சரீரம் இயங்குவதற்கும் பிராணன் அவசியமாகிறது. இப்படி நாம் பயன்படுத்தும்
பிராணன் உற்பத்தியாகி வரும் மூலத்தை மகாபிராணன் என்று சொல்லுகிறோம். காரண சரீரம்
இயங்குவது இந்த மகாபிராணனிலாகும். இது சிவம் அல்லது பிரம்மம் என்று நாம் கூறும் மூலசக்தியில்
இருந்து பிராணனை மகாபிராணன் என்று சொல்கிறோம்.
இந்த மாகாபிராணனை எம்மில் ஈர்க்கும் சாதனையே ஹம்ஸ யோகமாகும். இதனை ஸோஹம் சாதனை
என்றும் கூறுவார்கள். காயத்ரி சாதனையில் இதனை காயத்ரியின் அஜபா ஜெபம் என்று கூறுவார்கள்.

You might also like