You are on page 1of 1

ஹம்ஸ யோகம் – 06

மூலம்: பண்டிச் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா


தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
*****************************************************************************

பிரணாயாமட்தில் சங்கல்பம் என்பது சாதகனின் இச்சாசக்தியையும் மன ஏகாக்கிர சக்தியினது கூட்டு


ஆற்றலாகும். பல விதமான மந்திரங்களும், யந்திரங்கள், தெய்வ ரூபங்கள் மனதின் இந்தச் சக்தியை
அதிகரிப்பதற்காக பரிந்துரைக்கப்படுகிறது. மந்திர ஜெபமும் அந்த மந்திரத்திற்குரிய தேவதையினை
தியானிப்பதும் மன ஒருமைப்பாட்டினை அதிகரித்து சாதகனை தியானத்திற்குச் செலுத்தும். ஒரு
சாதகன் பிரணாயாமம் செய்யும் போது தான் தெய்வ பிராணசக்தியில் மூழ்கி இருப்பதாகவும் ஒவ்வொரு
மூச்சின் போது அந்தப்பிராணனை தனக்குள் உறிஞ்சுவதாகவும் பாவனை செய்ய வேண்டும்.
நம்பிக்கை, சிரத்தை ஆகிய இரண்டு பண்புகளும் மிக சக்தி வாய்ந்த காந்த ஆற்றல்களாகும். அவை
இரண்டும் உணர்வு சக்தியின் அதிசக்திவாய்ந்த ஆற்றல்களாகும். இதுபோல் உணர்சச ் ிகளும் மிக
ஆற்றலுள்ள சக்திகளாகும். இந்த ஆற்றல்களை நவீன அறிவியல் தற்போது ஆராய்ந்து
உறுதிப்படுத்தியுள்ளது. தத்துவாசிரியர்களும், உளவியலாளர்களும் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம்
ஆகியவை சேதனம் அல்லது உணர்வு என்ற ஆற்றலின் அடிப்படியிலேயே செயல்படுகின்றன. பிராணன்,
ஸ்தூல உடலின் செயல்கள் அனைத்தும் இந்த சேதன – உணர்வு ஆற்றலின் அடிப்படையிலேயே
செயற்படுகின்றன. இதுவே ஒருவனின் ஆளுமையில் உயிர்ப்பு, அமைதி, சிறப்பு என்பவற்றின்
அடிப்படையாகும்.
ஒருவனது அகத்தில் காணப்படும் அதீத ஆசையும், அவன் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்ட
அனுபவங்களும் அவனது சங்கல்ப சக்தியால் தூண்டப்பட்டு மனதில் எண்ண அலைகளாகவும்,
மூளையில் இரசாயனத்தாக்கமும், உடலில் செயலாகவும் வெளிப்படுகிறது. இதனால் உடலினதும்
மனதினதும் நம்பிக்கையும், உறுதியுடனும் கூடிய செய்கைகளே ஒருவன் நல்ல காரியமோ தீய காரியமோ
செய்வதற்குரிய அடிப்படையாகவும் அதன் விளைவுகளைத் தீர்மானிக்கும் காரணிகளாகவும்
அமைக்கிறது. ஒருவன் தனது அகப்பண்பிற்கும், உணர்சச ் ிகளுக்கும், எண்ணங்களுக்கு அமையவும்
செயலின் விளைவு ஆபத்தாகவோ, பலனுடையதாகவோ, நன்மையானதாகவோ அமைகிறது. சுருக்கமாக
ஒருவனால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யப்படுகின்ற செயல்களின் விளைவுகள் அவனது
சங்கல்ப சக்தியின் – அவனது அகத்தில் ஆழத்தில் அவன் விரும்பும் உத்வேகத்தினதும், மன
எண்ணத்தின் அடிப்படையிலுமே நடைபெறுகிறது.
ஒருவனது சங்கல்ப சக்தியின் ஆற்றலே அவனது வாழ்வு உயர்வை நோக்கிச் செல்லப்போகிறதா, தாழ்வை
நோக்கிச் செல்லப்போகிறதா என்பதைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணியாகும். ஒவ்வொரு
மனிதனும் தனது வாழ்ககை ் யை தான் விரும்பியபடி அமைக்கக் கூடிய வல்லமையையை இந்த சங்கல்ப
சக்தி தருகிறது. குழுவாகச் சேர்ந்து செய்யப்படும் சங்கல்ப சக்தி மிகச்சக்தி வாய்ந்த புரட்சிகர
மாற்றத்தினை ஏற்படுத்தி ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றலாம். அப்படியான சங்கல்பம் தெய்வீக
எண்ணத்தினைக் கொண்டதாக இருப்பின் அது அனைத்து உயிர்களும் மகிழ்வுடன் வாழும் ஒரு சுவர்க்க
மயமான சூழலை உருவாக்கும்.
தொடரும்…

You might also like