You are on page 1of 1

ஹம்ஸ யோகம் – 07

மூலம்: பண்டிச் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா


தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
*****************************************************************************

சிரத்தை நம்பிக்கை என்ற இரண்டு உணர்ச்சி ஆற்றல்களும் தெய்வ உருமாற்றம் பெறும் அகத்தை உணரும்
யோக சாதனையில் மிக முக்கியமான நிபந்தனைகளாகும். தெய்வ சாதனைக்கான சடங்குகளும்,
பௌதீக மனசீக பயிற்சிகளும் உண்மையில் சாதனையின் நான் கில் ஒரு பங்கிற்கான நிபந்தனைகளை
மாத்திரமே பூர்த்தி செய்கின்றது. நான் கில் மூன்று பங்காகிய பிரதான பாகம் சாதகனின் சாதனையில்
முன்னேற்றத்திற்கான தீராத தாகம், சிரத்தை, நம்பிக்கை, மற்றும் சங்கல்ப சக்தியில் தங்கியிருக்கிறது.
சாதகனின் நம்பிக்கையும் உறுதியும் சலனமுறுவதாக இருந்தால் எந்தவொரு ஆன்ம யோக சாதனையும்
சித்தியுறாது. இது பௌதீக முயற் சிக்கும் முழுமையாகப் பொருந்தும்.
உண்மையான ஆர்வம் நம்பிக்கையும் சிரத்தையுடனும் சேர்ந்து தகுந்த ஒழுக்கத்தினால் வலிமையடையச்
செய்யப்பட்ட சாதனை துரிதமாக வெற்றியைத் தரும். இது பிராணாயாம சாதனைக்கும் பொருந்தும்.
சாதகனின் உணர்வுப்பூர்வமான சங்கல்ப சக்தியானது மூச்சினை உள்ளிழுக்கும் போது பிராணனை
உள்ளீர்க்கும்.
பலவிதமான பிராணாயாமங்கள் ஒருவன் தன்னை வளர்த்துக்கொள்ளப் பாவிக்க முடியும் . இங்கு நாம்
இருவகையான பிராணாயாமங்கள் பற்றி மாத்திரம் பார்ப்போம். இவை இரண்டும் எளிமையானதும்,
அனைவராலும் பின்பற்றக்கூடியதுமாகும். இந்தப்பிராணாயாமங்களின் போது மனதும், மூச்சும்
ஒன்றிணைந்து செயற்படுவது மிக அவசியமாகும். இந்தப்பிராணாயமத்தை எவரும் இலகுவாகச்
செய்யக்கூடிய பயிற்சியாகும். பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் கூட இதைப் பயிற் சிக்கலாம்.
இந்தப்பிராணாயாமத்தைப் பயிற்சிக்கும் முறை வருமாறு; சாதகன் சுகாசன நிலையில் முதுகுத்தண்டு
நேராக இருக்குமாறு உடலை வருத்தாமல் அமைதியாக அமர வேண்டும். வெறும் நிலத்தில் இல்லாமல் ஒரு
துணி, கம்பளம் விரித்துக்கொள்ள வேண்டும். பிறகு மூச்சினை வெளிவிட்டபின்னர் அமைதியாக,
அதேவேளை மெதுவாக உள்மூச்சினை இழுக்க வேண்டும். இப்படி இழுக்கும் அளவு நான்கு செக்கனுக்கு
அதிகமாக இருக்கக்கூடாது. உள்ளிழுக்கும் மூச்சினை பூரகம் சென்று சொல்லுவோம், இப்படி
இழுக்கப்பட்ட மூச்சினை இயலுமான அளவு நிறுத்திவைக்க வேண்டும். இப்படி நிறுத்தும் போது
எந்தவிதமான கஷ்டமும் இருக்கக் கூடாததுடன் நிறுத்தி வைக்கும் அளவு எக்காரணம் கொண்டும் 16
செக்கனுக்கு மேற்படக்கூடாது. மூச்சினை நிறுத்தி வைப்பதைக் கும்பகம் என்று சொல்லுவோம். பிறகு
மூச்சினை அவசரப்பட்டு வெளிவிடாமல் மெதுவாக கஷ்டப்படாமல் வெளியே சீராக வெளிவிடவேண்டும்.
இப்படி வெளிவிட்டபின்னர் நான் கு செக்கனுக்கு மேற்படாமல் மூச்சினை உள்ளிழுக்காமல் இருந்து
மீண்டும் மூச்சினை உள்ளிழுக்க வேண்டும். பூரகம்-அந்தர் கும்பகம் – ரேசகம் – பகிர்கும்பகம் இந்த
நான்கு அங்கங்களும் சேர்நத் து ஒரு சுற்று எனப்படும். ஆரம்ப சாதகன் ஐந்து சுற்றுக்களுக்கு மேல்
செய்யக்கூடாது. இரண்டுவாரம் பயிற்சித்து மெதுவாக சுற்றுக்களின் எண்ணிக்கையைக் கூட்டலாம்.
அதிகபட்சம் ஒராண்டு பயிற்சி செய்த சாதகன் இதை 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இந்தப்பிராணாயமப் பயிற்சி அனைவரும் செய்யலாம் என்று கூறப்படுவதன் அர்தத ் த்தினை சரியாக
புரிந்துகொள்ள வேண்டும். இந்தக்கட்டுரையைப் படித்துவிட்டு நீங்களாகவே செய்வது முற்றிலும்
தவறானது. உங்கள் புரிதலில், உடல் ஆரோக்கியத்தில் தவறு இருந்தால் சிலவேளைகளில் பிரச்சனைகள்
வரலாம். இங்கு பகிரப்படுவதன் நோக்கம் யோக அறிவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், மறைந்து
விடக்கூடாது என்பதற்காகவே. ஆகவே இதைப் பயிற் சிக்க விரும்பும் அன்பர்கள் தகுந்த பிராணாயாம
ஆசிரியரையோ, ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களையோ தொடர்பு கொள்ளலாம்.
தொடரும்…

You might also like