You are on page 1of 12

x

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமான் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
தலைமையில் நடந்த ஸ்ரீராம அநுயாத்திரை யில்
அடியேன் பெற்ற பங்கும் அனுபவங்களும்
பகிர்பவர் எஸ்.விஜயராகவன்
My E-mail address: artistsvr@gmail.com
௦ 6-௦ 9-2 ௦௦ 6 பாகம் இருபது

-------------------------------------------------------------------------------------
காலை சுமார் 1 ௦-3 ௦ மணிக்கு வாஞ்சி மணியாச்சி
ஜங்ஷன்-ஐ மைசூர் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்
வந்தடைந்தது.அங்கே ஐந்து நிமிஷம் தான்
சாதாரணமாக நிற்கும் .நாங்கள் 38 ௦ பேர்
இறங்கவேண்டி யிருந்ததால் சற்று நின்று கிளம்பி
சென்றது.ஸ்டேஷன் வாயிலில் ஏழு ஸ்பெஷல்
பஸ்கள் காத்திருந்தன. நாங்கள் காலை ஆறு
மணிக்கே டிரைனிலேயே பல்விளக்கி காலை கடன்களை முடித்துக்கொண்டு ப்ரூ காபியை
பால் மட்டும் வாங்கி காபி தயாரித்து பருகினோம். அன்று காலை குளிக்காதபடியால்
பாலபோஜனம் இல்லை. இருப்பினும் எங்கள் சமையற் குழுவினர் காபி மட்டும் மணியாட்சி
ஜங்ஷன் வாசலில் தரவே எங்கள் டம்ளர்களில் வாங்கி பருகிவிட்டு ஸ்டேஷன்
குழாய்களிலேயே டம்ளர்களை அலம்பி கைப்பையில் வைத்துக்கொண்டு எங்கள்
பெட்டிகளை தூக்கிக்கொண்டு பஸ்களில் ஏறி அமர்ந்தோம்..பஸ்கள் புறப்பட்டு வேகமாக
சென்று திருக்குறுங்குடி மலை நின்ற நம்பி திருக்கோவில் மலை அடிவாரத்தை சென்று
அடைந்தபோது சரியாக மணி 1-௦௦
மணியாச்சி
ஜங்ஷன்-ல்
இருந்து
திருக்குறுங்குடி
மலை நின்ற
நம்பி கோயில்
சுமார் 8௦ கி.மீ .
இரண்டு மணி
நேர
பயணம்.பஸ்களை விட்டு இறங்கிய இடத்தில் ஒரு அருவி ஓடும் சப்தம் கேட்டது.

கீ ழே காட்டியுள்ள மலை பாதை தொடங்கும் இடத்தில் எல்லாரையும் கூட்டி ஒலிபெருக்கி


மூலம் ஸ்வாமி பேசியது. “இப்போது மணி ஒன்று. இந்த மலை மேலிருந்து கீ ழே ஓடும்
அருவியின் சப்தந்தான் நீங்கள் கேட்கும் ஓசை. சுத்தமான அருவி தண்ண ீர் தான் இங்கே
ஓடுவது. இந்த மலையின்மீ து ஏற படிகள் கிடையாது. சரிவான பாதைதான். குண்டுங்
கட்டியுமாக நிறைய பாறாங்கற்கள் சாலை முழுதும் பரவி இருக்கும். மெதுவாக பார்த்துதான்
இந்த மலைமேல் ஏறவேண்டி இருக்கும்.

இதன் மேல் ஏற முடியாதவர்கள் இங்கே மலையடிவாரத்தில் ஓடும் அருவியிலேயே குளித்து


வேறு ஆடை மாற்றிக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு பஸ்களிலேயே
அமர்ந்திருக்கலாம். அம்மாதிரி எத்தனைபேர் என்று தெரிந்தால் மேலிருந்து கீ ழே வருகையில்
அவர்களுக்கான உணவை வாலண்டியர்கள் கொண்டு வந்து தருவார். எப்படியும் கீ ழே வர
மூன்று மனியாகவாவது ஆகிவிடலாம். அதுவரை பசி தாங்காது என்று நினைப்பவர்கள்
மெதுவாக அங்கங்கே உட்கார்ந்து மேலே வருவது நல்லது. மேலே குளிக்க இந்த அருவி
தண்ணர்ீ பெரிய அகலமான ஓடையாக குளம் போல் பாறைகளால் சூழப்பட்டு மலை மீ து
ஓடி கீ ழிறங்கி பாய்கிறது. அங்கே சென்று நீராடிவிட்டு கலைந்த ஆடைகளை கசக்கி
பிழிந்து அங்கேயே காயப்போடலாம், நெற்றிக்கு இட்டுக்கொண்டு, மலை நின்ற நம்பி
பெருமாளை சேவிக்கலாம். சேவித்து விட்டு பிறகு ,உணவை துண்டு இலைகளில்
பெற்றுக்கொண்டு உண்டு முடித்தவுடன் கீ ழ் நோக்கி ஓடும் ஓடைகளில் கை கால்களை
அலம்பிக் கொள்ளலாம். கொஞ்சம் ஒரு அரை மணிகாலம் மலைமேலுள்ள மண்டபங்களில்
சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டு காய்ந்த வஸ்திரங்களை தட்டி மடித்து பைகளில் வைத்துக்
கொண்டு மாலை நான்கு மணிக்கு இறங்குவோம். கீ ழே வந்து நம் பஸ்களில் சிறிது தூரம்
சென்று திருக்குறுங்குடி வைணவ நம்பியை சேவிக்கப் போகிறோம். ஆகையால் முடிவை
உங்கள் கையில் கொடுத்துவிட்டேன். சில விஷயங்களில் நீங்கள் தான் முடிவெடுக்க
வேண்டும். உங்கள் உடல்நிலை உங்களுக்குத்தான் தெரியும்.என்று சொல்லிவிட்டு அவர்
எல்லோரையும் கூட்டிக்கொண்டு மலையேற ஆரம்பித்தார். ஒரு அரைமணி பொறுத்துப்
பார்த்தபோது ஏழெட்டு பேர் தவிர எல்லோருமே மலை ஏறி உட்கார்ந்து உட்கார்ந்து சென்று
கொண்டிருந்தார்கள்.

ஆனால் எனக்கோ அன்று பார்த்து WHEEZING கொஞ்சம் அதிகமாய் இருந்தது. ஆட்டோ


கிடைத்தால் இரண்டு மூன்று பேர் ஷேர் பண்ணிக்கொண்டு போகலாம் என்று பார்த்தேன். .ஊர்
கொஞ்சம் தள்ளி இருந்ததாலும் உச்சி வெய்யிலாய் இருந்த படியாலும் வனப்பகுதியாய்
இருந்ததாலும் ஒரு ஆட்டோ கூட கண்ணில் தென்படவில்லை. நிச்சயம் மேலே ஏறிச்
சென்றால் குண்டுகற்களில் சறுக்கி கீ ழே விழ ஏதுவுண்டு.விழாமல் போனாலும்
மூச்சிரைப்பினால் நடுவழியில் அமர்ந்து விட்டால் மேலிருந்து அவர்கள் வரும் வரை அந்த
வெயிலில் அமர்ந்திருக்க வேண்டியதே. அதைவிட அங்கிருந்த ஓடையின் அருகில் ஒரு
பெரிய மரத்தின் நிழலில் ஒரு குளிக்கும் பாறையின் பேரில் அமர்ந்து குளிப்போம் என்
முடிவு எடுத்தேன். வேஷ்டி உத்தரியங்களை மாற்றிக்கொண்டுநெற்றிக்கு திருமண்,ஸ்ரீ
சூர்ணம் இட்டுக்கொள்வது. அதன் பிறகு கீ ழிருந்தபடியே மலை நின்ற நம்பி கோவிலை
திக்கு நோக்கி தொழுதுவிட்டு அமர்ந்திருப்பதே உத்தமம் என்று நினைத்து குளிப்பதற்கு
ஆயத்தமானேன்.

.மேலே சென்றவர்களில் சிலர் பாதி வழி சென்று இறங்கிக் கொண்டிருந்தனர் .இறங்குவது


அவ்வளவு சிரமமில்லை என்று சொன்னார்கள்.ஏறுவது அடியோடு முடியவில்லை/ ஏனோ
இந்த பாதைக்கு படிகள் கூட கட்டவில்லையே என்று அங்கலாய்த்த படியே மலை ஏறாமல்
பாதி வழியிலேயே திரும்பி விட்டனர். .

இறங்கி வந்தவர்கள் நாங்களும் குளிக்கணும் என்றபோது அதற்கென்ன இந்த ஓடையில் நூறு


பேர் வேண்டுமானாலும் குளிக்கலாம் கொஞ்சம் இந்த பாதையை விட்டு ஓடையிலே நடந்து
சற்று உள்ளே போனால் இடப்பளவு ஆழத்துக்கு ஸ்படிகம் மாதிரி தண்ண ீர் ஓடுகிறது
மரங்கள் சூழ்ந்து குளு
குளுவென்று நிழலாயும்
உள்ளது. ஒரு கவலையும்
வேண்டாம் என்று
சொன்னேன். கொஞ்சம்
என் பெட்டியைப் பார்த்துக்
கொள்ளுங்கள். நான்
முதலில் குளித்துவிட்டு
வந்து சொல்கிறேன்
என்று சொல்லி டவலை
கட்டிக்கொண்டு கொஞ்சம்
உள்பக்கம் மரங்களிடை
யே சற்று இடுப்பளவு ஆழம் வரும் வரை ஆற்று தண்ண ீரிலேயே நடந்தேன்.பல
இடங்களில் பாறைகள் மேலேயே ஆற்றுத் தண்ண ீர் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு
சமதளமான பாறையை தேர்ந்தெடுத்து அதன் மேலேயே அமர்ந்து ஓடும் தண்ணரில்

குளித்தபோது மொத்த சோர்வும் போய் மூச்சிரைப்பும் சற்று குறைந்திருந்தது .துணிகளை
கசக்கிப் பிழிந்து கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தேன்.

நீங்கள் போய் குளித்து வாருங்கள் ரொம்ப உள்ளே போகவேண்டாம். கிட்டக்கவே இடுப்பளவு


தண்ணர்ீ ஓடுகிறது நிறைய பாறைகள் உள்ளன நன்றாக உட்கார்ந்து குளிக்கலாம். சோப்பே
தேவையில்லை நீரோட்டம் உடம்புக்கு நல்ல புத்துணர்ச்சியை தந்து விட்டது என்று சொல்லி
உங்கள் பெட்டிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் சீக்கிரம் வாருங்கள்.என்று சொல்லி
அவர்களையும் அனுப்பினேன். ஒரு அரைமணி காலத்தில் நாங்கள் நாலைந்து பெரும் ரெடி
ஆகி விட்டோம்அந்த அம்மாள் சொன்ன வார்த்தை.. “மேலே போய் பெருமாளையும்
சேவிக்க முடியவில்லை. காலை ஆகாரமும் இல்லை.இவர் ஷுகர் பேஷன்ட்.பசிக்கு
நேரத்திற்கு ஏதாவது சாப்பிடனும்.அவர்கள் எத்தனை மணிக்கு வருவார்களோ
தெரியவில்லை” என்று ஒரு அம்மாள் தன் கணவரைக் காட்டி கூறியபோது நான் கூறியது
.கொஞ்சம் அவருக்கு பிஸ்கட், மாதிரி ஏதாவது இருந்தால் கொடுங்கள் நமக்கு சாப்பாடு வர
மூன்று மணி ஆகும்.என்றேன்.

அப்போது ஒரு ஆட்டோ வந்து அந்த மலைப்பாதை முன் நின்றது. அதில் உட்கார்ந்திருந்தவர்
வேளுக்குடி சுவாமிக்கும்,மற்ற உபன்யாச சுவாமிகளுக்கும் பிரசாதமும்,வியஞ்சனமும்
தனியாக தயார் பண்ணிக்கொண்டு வந்திருந்தார். இந்த விஷயம் பற்றி நான் ஏற்கனவே முன்
பாகங்களில் எழுதி யுள்ளேன். அருகில் சென்று “என்ன விஷயம்?” என்று
விசாரித்தேன்.”ஒன்றுமில்லை இனிமேல் இந்த ஆட்டோவில் மலை ஏறினால் இந்த
சொம்புகள் , பாத்திரங்களில் உள்ள குழம்பு, சாற்றமுது(ரசம்) போன்ற திரவ பதார்த்தங்கள்
இந்த ஆட்டோ குதிக்கப்போற குதிப்பில் எல்லாம் தளும்பித் தளும்பி ஆட்டோவிற்குள்ளேயே
கொட்டிப் போகும்.பாத்திரங்கள் சிலபொழுது சாய்ந்து மொத்தமும் கூடவணாகி
ீ விடலாம்
.என் ஒருவனால் இத்தனை பாத்திரங்களையும் இலைபோட்டு மூடி அதன் மேலே
வஸ்திரத்தால் மூடி அழுத்தமாக கைகளினால் அமுக்கிக்கொண்டு போக முடியாது
வேறு ஒருவரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் என்று.டிரைவர் சொல்கிறார்
.நீர் கொஞ்சம் என்னுடன் ஆட்டோவில் உதவியாக வரமுடியுமா என்று வினவினார்.

பகவான் ”எனக்கு இப்படி ஒரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறானோ “ என்று மனதில்


நினைத்து மகிழ்ந்து “அதற்கென்ன சுவாமி காத்திருக்கிறேன். சுவாமிக்கு ஒரு கைங்கர்யம்
பண்ண வாய்ப்பு கிடைத்ததே” என்று சொல்லிவிட்டு “ ஆட்டோ திரும்பி வந்தால்
இவர்களையும் கொஞ்சம் மேலே கொண்டு சேர்ப்பித்தால் நல்லது.அதற்கு என்ன காசோ
அதை இவர்கள் கொடுத்து விடுவர் என்று சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்து “நீங்கள்
குளித்து சித்தமாகத்தானே உள்ள ீர்கள்.ஒரு பத்து நிமிஷத்தில் இவர் எங்களை மேலே
விட்டு திரும்பி வருவார். உங்களை மேலேயும் கொண்டு விடுவார். ஒரு பத்து ரூபாய்
கொடுக்க வேண்டியிருக்கும். மேலேபோய் நேரத்தில் சாப்பிட்டு பெருமாளையும்
சேவிக்கலாம், என்று சொல்லியபோது ஆட்டோ டிரைவர் ஒரு ஆளுக்கு ரூ.5/-
தரனும்,பாதை கரடுமுரடா இருக்குது என்று கூற .அவர்கள் நான்குபேரும் அது தான் சரி
ஆளுக்கு ரூ.5/- தந்துடறோம் என்று சொல்ல நான் என் பெட்டியுடன் ஏறி அமர்ந்தேன்.
வண்டி செல்ல ஆரம்பித்தது. தூக்கி தூக்கி போட்டது. இப்படி ஒரு கூத்தாடும் என்று
நான்கூட நினைக்கவில்ல. பாதை பூராவும் குண்டு பாறாங்கற்கள் எவ்வளவு முயன்றும்
கால்பாகத்திற்கு மேல் குழம்பும் ரசமும் ஆட்டோவில் சிந்தி வணானதை
ீ . எங்களால்
தடுக்க முடியவில்லை. வேஷ்டிகளும் குழம்பு தெறித்து சற்று பாழானது. நல்லகாலம்
பெட்டி கையில் இருந்தது. மேலே சென்று அந்த ஸ்வாமியுடன் பாத்திரங்களை இறக்க
முயல்கையில் சில வாலண்டியர்கள் ஓடி வந்து கூட மாட உதவினர். பிரசாத வியஞ்சன
பாத்திரங்களை கோவில் மடப்பள்ளியில் சென்று சேர்த்தனர். மலைமேல் நின்று சுற்றிப்
பார்த்தேன் பெரிய குளம் மாதிரி தண்ண ீர் தேங்கி கீ ழ்பக்கமாக ஓடிக் கொண்டிருந்தது.
நான் ஈர டவலினால் உடம்பை மறுமுறை நன்றாக துடைத்துக்கொண்டு குழம்பு சிந்திய

வேஷ்டியை அப்படியே நம்பி ஆற்று தண்ண ீரில் முழங்கால் ஆழத்தில் நின்றபடி ஓடும்
தண்ணரில்
ீ கசக்கிவிட்டு பிழிந்து கரை ஏறியவுடன் அதுவே இன்னும் ஒரு கால் மணி
காலத்தில் காய்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவ்வளவு காற்று மலை
மேல் வசிக்கொண்டிருந்தது.ஆட்டோவை
ீ அனுப்பிவிட்டு அவர்களை அழைத்து வரச்
சொன்னேன்.கீ ழிருந்து மேல் வர கால்மணி நேரம் தான் ஆகியது. ஆனால் ஆட்டம்
கொஞ்சம் ஜாஸ்தி.தான். நான் மேலே வந்து சுற்றிப் பார்க்கையில், இன்னும் பலர்
குளிக்காமலே டவலுடன் நின்று கொண்டிருந்தனர்.இன்னும் சிலர் குளித்து முடித்து
நெற்றிக்கு இட்டுக் கொண்டிருந்தனர். வெகு சிலர் கையில் சற்று பெரிய வாழை
சிப்பியில் கதம்ப குழம்பு சாதம், தயிர் சாதத்துடன் ஒரு பாறையில் அமர்ந்து தயிர்
சதத்தை குழம்பு சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சுவைத்து உண்டு கொண்டிருந்தனர்.
அடுத்து என்ன செய்யலாம் என்று நான் யோசித்தபடி இருக்கையில், மலைமேல் நின்ற
நம்பி திருக்கோவில் கம்பீரமாக காட்சி தர உள்ளே போய் பெருமாளை பலர் சேவித்து
கொண்டிருந்தனர்.சரி நாமும் பெருமாளை சேவித்து விட்டு உண்போம் என்று .பெட்டியை
ஒரு ஓரமாக வைத்துவிட்டு கைப்பையில் ஒரு திராக்ஷை முந்திரி கல்கண்டு
பொட்டணத்தையும்,அர்ச்சகருக்கு ஒரு பத்து ரூபாய் நோட்டையும் போட்டுக்கொண்டு
சந்நிதிக்குள் நுழைந்து பெருமாளை சேவித்து அர்ச்சகர் தட்டில் பொட்டணத்தையும் பத்து
ரூபாய் நோட்டையும் சேர்க்க,அர்ச்சகர் நெய் தீபம் காட்டி அடியேன் தந்த எளிய
உபகாரத்தை பெருமாளுக்கு காட்டிவிட்டு,. “இந்த திவ்ய தேசத்தில் ஐந்து நம்பிகள்
உள்ளார்கள்.இவர் மலைமேல் நின்ற நம்பி. இன்னொரு நின்ற நம்பி கீ ழே மெயின்
கோவிலில் எழுந்தருளி உள்ளார். மேல் நின்ற நம்பி. கீ ழே இருந்த நம்பி, கிடந்த நம்பி,
திருப்பாற்கடல் நம்பி,ஆகியோர் கோயில் கொண்டுள்ளார்கள். பெரிய திவ்ய தேசம்.நான்கு
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம்.இரண்டு நாளாவது இருந்து
சேவிக்கணும்.நீங்கள் இன்று ராத்திரியே கிளம்புகிறீர்கள் போலிருக்கிறது ஸ்வாமி
சொன்னார்.” என்று சொல்லிக்கொண்டே தந்த பிரசாதத்தை வாங்கி என்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டேன். அந்த பட்டருக்கு நாங்கள் முந்நூறு பேருக்குமேல்
அங்கு வந்து குளித்து பெருமாள் சேவிக்க இருப்பதை ஸ்வாமி முன்பாகவே
தெரிவித்திருப்பார் போல்இருக்கிறது. கோவில் 1 ௨-௦௦ மணியில் இருந்தே திறந்து
வைத்திருந்தார். என்று அறிந்தேன்..குளித்தவர்கள் பத்து பத்து பேராக பெருமாளை
சேவித்து வந்தனர். வெளிப் பிரகாரத்தில் வாழை இலை சிப்பியில் பலவித
காய்கள்,கறிகள் சேர்த்த கதம்ப குழம்பு சாதம், கூடவே தயிர் சாதம் . கோவில் உள்
பிரகாரத்தில் எங்கள் புருஷோத்தமன் குருப் தந்து கொண்டிருந்ததை வாங்கிக் கொண்டு
கோவிலுக்கு வெளியே வந்து மரங்களின் நிழலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி அதி
மனோகரமாய் இருந்தது.ஜிலு ஜிலு வென்று காற்றடித்துகொண்டு நிழல்களையும் தந்து
கொண்டிருந்த மரங்களும் ‘.ஜோ’ வென்ற இரைச்சலுடன் அருவி நீர் நம்பி ஆற்றில்
ஓடிக்கொண்டிருந்த காட்சியும்,,அதில் எழுந்து வரவே மனமின்றி நீராடிக்கொண்டிருந்த நம்
யாத்திரை வாசிகளின் அரட்டையும் இதையெல்லாம் ரசித்து பார்த்துக்கொண்டே
சாப்பிட்டு முடித்து ஆற்று நீரில் கைகளை அலம்பியபோது “ஒய் இங்கே வாரும்” என்று
ஒரு குரல் கேட்க திரும்பி பார்த்தேன். , அங்கே நான் நின்றிருந்த பக்கத்தில் தனியே
நீராடிக்கொண்டிருந்த பெங்களூர் THREAD ரோலிங் INDUSTRY) சுவாமி இந்த யாத்திரை
டிரிப்பில் என்னோடு நண்பரானவர்களில் இரண்டாமவர் என்னைப் பார்த்து “ஒரே
வசிங்
ீ ஆக இருக்கிறது கீ ழேயே இருக்கிறேன் என்று சொன்ன ீரே எப்படி ஏறி
வந்தீர்?”என்று என்னைக் கேட்க நான் “பெருமாள் அழைத்து வந்தார் காணும்” என்று
சொன்னதைக் கேட்டு அதற்கு அவர் “அப்படியா, அது என்ன கதை?” என்று கேட்க
அடியேன் அவர் காதோடு நடந்ததை கூற, “அப்படியா சமாசாரம், அதிசயமான
அருள்தான். எங்களுக்கு பின்னால் வந்துவிட்டு,, குளித்து, பெருமாளையும் சேவித்து
சாப்பாடும் நேரத்திற்கு முடித்துக் கொண்டீரே .பார்த்தீரா! என்னோமோ நான் கீ ழிருந்தே
திசை கை கூப்பி தொழுகிறேன் என்றீரே உம்மை பெருமாள் விடமாட்டார் காணும்”
என்று என்று என் கையை பிடித்துகொண்டு ஆற்றிலிருந்து மேலேறி தன் காரியங்களை
பார்க்க சென்றார்.அதே சமயம் நான் கீ ழே விட்டு வந்த நான்கு பேர்கள் ஆறு பேராக
(இன்னும் இருவர் வந்து சேர்ந்து கொண்டார்களாம்) ஆட்டோவில் இருந்து இறங்கிக்
கொண்டிருந்தனர்.,.என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே அந்த அம்மாள் “உங்களுக்கு
எங்கள் நன்றி.” என்று சொல்ல “அதை பெருமாளுக்கு சொல்லுங்கள்”. சீக்கிரம்
பெருமாளை சேவித்துவிட்டு பிரசாதம் உள் பிரகாரத்திலேயே தருகிறார்கள். உங்கள்
அகத்துக்காரரை கவனியுங்கள். அவர் ஷுகர் பேஷன்ட் பசி தாங்கமாட்டார் என்றீரே
“என்று சொல்லி உள்ளே அனுப்பினேன்.. .

மலை மேல் நின்ற நம்பி உத்சவமூர்த்தி


பெருமாளும் ஸ்வஸ்தானதிலிருந்துகொண்டே எங்கள் எல்லோரையும் பார்த்து
களிப்போடு இருந்ததாகவே எனக்கு தோன்றியது. இன்னுமொறு ஆச்சரியமான சம்பவம்.
அங்கெ நிறைய வானரங்கள் இருந்தன. ஆனால் ஒன்றுகூட நாங்கள் சாப்பிட்ட பக்கம்
வரவில்லை. அங்கங்கே உட்கார்ந்து எங்களை வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தன.
நாங்கள் அருகில் சென்று கொடுத்தால் கை நீட்டி வாங்கி உண்டன. பலரும் வாழைப்
பழங்களை அவைகளுக்கு கொடுக்க அமைதியாக ஒன்றுக்கொன்று சண்டை இடாமல்
வாங்கி சென்றது இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை.. எல்லோரும் ஆடையை
மாற்றிக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு பெருமாளை சேவித்து ஆகாரம் உண்டு
கோவில் வாசலில் மலைமேல் நின்று கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக்கொண்டே
இருக்கையில் பொழுது போனது தெரியவில்லை. அடியேன் ஆப்தர் வேணுகோபால
சுவாமியுடன் அந்த க்ஷேத்திர பெருமைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். என்னைவிட
அவர் சம்பிரதாய விஷயங்கள் நன்கு அறிந்தவர். பெங்களூரில் DRDO-வில் ஒரு துறையில்
ENGINEER ஆகா பணிபுரிகிறவர்.டயம் போனதே தெரியவில்லை.
அந்த சமயம் வேளுக்குடி ஸ்ரீமான் கிருஷ்ணன் ஸ்வாமி ஒலிபெருக்கி மூலம் சொன்ன
வார்த்தைகள்:

மணி 3-௦௦ ஆகிறது. மூன்றரைக்கு கீ ழே இறங்கினால் போதும். அதன்மேல் ஒரு அரை


மணி காலத்தில் நம் பஸ்ஸில் ஏறி கீ ழ் சந்நிதிகளை சேவித்து விடலாம். எல்லோருமே
மேலே ஏறி வந்து விட்டார்கள் போலத் தெரிகிறது. மூன்று வயதானவர்கள் பஸ்ஸில்
இருப்பதாக வாலண்டியர் சொன்னார்.அவர்களுக்கு உணவுப் பொட்டனங்களை
எடுத்துக்கொண்டு போய் கொடுத்தாயிருக்கும். ரெடியாக இருக்கச்சொல்லுங்கள். ஐந்து
மணிக்கு கீ ழ் திருக்குறுங்குடி நம்பி கோயிலில் இன்று பவித்திர உத்சவம் மூன்றாம் திரு
நாள் திருவதி
ீ புறப்பாடுஉண்டு.. உற்சவரை திருவதி
ீ புறப்பாட்டில் சேவிக்கிறோம்அவர்
நாலு வதியும்
ீ பபுறப்பாடாகி உள்ளே எழுந்தருளுவதற்குள் கோவில் உள்ளே சென்று
மற்ற சந்நிதிகளையும் மூலவரையும் சேவித்துக் கொள்ளலாம்.என்று கூறி நிறுத்தினார்.

பின்னர் அவர் சொன்ன விவரங்கள்


மஹேந்திரகிரியின் ஒரு பகுதியில் மலைமேல் நம்பியின் சந்நிதி இங்கே நாம்
சேவித்தது.. இங்கிருந்து தொலைவில் மஹேந்திரகிரியின் உச்சி தெரிகிறது. இதற்கு
அருகே தான் எங்கோ வானரப்படை கடந்து இருக்க வேண்டும். இங்கிருந்து தான்
ஹனுமான் இலங்கைக்குத் தாவினார். ஆக, இந்த மலைப் பிரதேசங்கள் வானரசேனையை
வழி நடத்திச் சென்ற ஸ்ரீ ராமபிரான் திருவடி பதிந்த ஸ்தலங்களே. நாம் இனி கீ ழிறங்கி
நம் பஸ்களை அடைவோம்.என்று சொல்ல நாங்கள் மலையை விட்டு கீ ழிறங்கினோம்

இறங்குவதும் சற்று கடினமாகவே இருந்தது. கையில் சூட்கேஸ் வேறு. (தற்காலம் சாலை


வசதி விருத்தி அடைந்திருக்கிறது என்று கேள்வி)
.நான் கீ ழ் அருவி ஓடையில் குளிப்பதற்கு முன்பு ASTHAALIN மாத்திரை எடுத்துக்
கொண்டதில் கொஞ்சம் வேலை செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்
இறங்குகையில் உற்சாகமாகவே இருந்தது. மூச்சிரைப்பும் நின்று போய் இருந்தது.
அதனால் சமாளித்தேன்.

..
நாங்கள் எங்கள் பஸ்களில் ஏறி
திருக்குறுங்குடி கோயிலை
அடைந்தபோது ஸ்வாமி
சொன்னமாதிரி பவித்ர உத்சவம்
3-ம் திருநாள் புறப்பாடு தெற்கு
மாடவதியில்
ீ நடந்து
கொண்டிருந்தது. பெட்டிகளை
எல்லாம் பஸ்களிலேயே விட்டு
எல்லோரும் வேகமாகி இறங்கி
கோஷ்டி பக்கம் முன்னால் போய்
சேவித்தோம்.திருக்குறுங்குடி
ஜீயர் சுவாமி முன் நின்று
கோஷ்டியை நடத்திக் கொண்டு
போகையில் மூன்றாம்
திருவந்தாதி சேவிப்பது காதில்.
விழுந்தது. இந்த பிரபந்தம்
திருவல்லிக்கேணி வாசிகளுக்கு
(மனப்) கண்டபாடாமாயிருக்கும்.
ஏனெனில் அது பேயாழ்வார்
அருளிச் செய்தது. பேயாழ்வார்
அவதாரஸ்தலம் மாடமாமயிலை
திருவல்லிக்கேணி யானதால்
அனேகமாக பஞ்சபர்வ புறப்பாடுகளில்ஒவ்வொரு மாதமும் இதைத்தான் சேவிப்பது
வழக்கம். கோவில் உள்ளே போய் மூலவரை சேவிப்பதா இல்லை கோஷ்டியில்
அன்வயித்து மூன்றாம் திருவந்தாதி சேவையில் கலந்து கொள்வதா என்று
யோசிக்கையில் கோஷ்டியார் முன்னே செல்ல பின்னே தீர்த்தம், சடாரி இவைகளை
எங்களுக்கு சாதித்துக்கொண்டே இரு அர்ச்சகர்கள் வரவே அதை பெற்றுக்கொள்ள
நாங்கள் விரைய வேண்டியதாயிற்று. திருவதியில்
ீ ஒரு பெரிய வெள்ளி கங்காளத்தை
இடுப்பில் கட்டிக்கொண்டு தீர்த்தம் சாதிப்பதை முதன்முதலில் அந்தக் கோவிலில் தான்
பார்த்தேன். அதற்குள் ஒருவேளை புறப்பாடு முடிய தாமதமானால் சுவாமி உள்ளே
சேவித்துக்கொண்டு வேகமாக கிளம்பிவிட்டால் என்ன பண்ணுவது என்ற பயத்தில்
கோவிலுக்குள் சென்றவர்களுடன் நாங்களும் சென்று பெருமாள் தாயார் சந்நிதிகளை
சேவித்துக்கொண்டே ஒரு பிரதட்சணம் வரவும் பெருமாள் திரும்புகால் ஆகி உள்ளே
எழுந்தருளவும் சரியாக இருந்தது இயல் சேவை முடிவில் ஸ்ரீ சடகோபம் சாதிக்கையில்
சாற்றுப் (இறுதி) பாசுரங்கள் சேவிக்கவே எங்களுக்கு அதில் சேர்ந்து சேவிக்க ஒரு
சந்தர்பம் கிடைத்தது இது ஒரு மஹா பாக்யமே என்று நாங்கள் எல்லோருமே அதில்
கலந்துகொண்டு புஷ்டியான கோஷ்ட்டியுடன் உரக்க சேவித்தது ஸ்தலத்து ஜீயருக்கு
மிக்க மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும். பெருமாள் உள்ளே எழுந்தருளினவுடன் ஜீயர்
சுவாமியை வேளுக்குடி சுவாமி தண்டன் சமர்பித்து குசலபிரச்னம் விசாரிக்க நாங்களும்
எல்லோரும் ஜீயர் சுவாமியையும் பெருமாளையும் சேவித்து விடை பெற்றோம்.
அப்போது மணி.7-௦௦ சுவாமி எல்லோருடனும் கோபுர வாசல் தாண்டி வெளியே
வந்ததும், நாம் இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஆழ்வார் திருநகரி சேவிக்காமல் போகக்
கூடாது. ஸ்ரீ நம்மாழ்வார் அவதார ஸ்தலம் .நமக்காக அந்த கோவிலை நடை சாத்தாமல்
ஒன்பது மணிவரை காத்திருப்பதாக போன் வந்தது.நாம் உடனே நம்மாழ்வாரை சேவிக்க
கிளம்புவோம்.இங்கே சொல்ல வேண்டிய பாராயணம், உபன்யாசங்கள் ஆழ்வார்
திருநகரியில் சொல்லப்படும் என்று கூறினார். எல்லாரும் அவரவர் பஸ்களில் ஏறி
உட்கார்ந்தாயிற்று. இதுவும் ஒரு பாக்யமே என்று பலரும் சொல்லிக் கொண்டார்கள்
ஏனெனில் எங்கள் யாத்திரையில் புரோக்ராமில் ஆழ்வார் திருநகரி இல்லை.

.திருக்குறுங்குடி-
லிருந்து ஆழ்வார்
திருநகரி எழுபது
கி.மீ . பயணம்
.வேகமாக போனால்
எட்டரை ம ணிக்குள்
போய் விடலாம்
என்று பஸ்கள்
விரைந்தன.
திட்டப்படி எட்டரை மணிக்கு ஆழ்வார் திருநகரி ஏழு பஸ்களும் சேர்ந்தாயிற்று. பட்டர்கள்
கைங்கர்யபரர்கள் எல்லோரும் எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில்
ஆழ்வாரை சேவித்துக்கொண்டே போய், பின்
பெருமாள் மூலவரையும்சேவித்துக்கொண்டு வந்து முன்
மண்டபத்தில் அமர வேண்டியது. மொத்தபேரும் அரை மணி
அவகாசத்தில் சேவிக்க வேண்டும். பெருமாளுக்கு முன்
வைத்திருக்கும் ஒரு மூங்கில் தட்டில் சம்பாவனைகளை
சேர்த்துக் கொண்டே வரிசை நகர வேண்டும். ஒரு அர்ச்சகர்
நம்மாழ்வாரை சேவை பண்ணி வைத்து ஆழ்வார் திருவடி
நிலைகளை எங்கள் சிரசில் வைப்பார்.. மற்றொரு அர்ச்சகர்
பெருமாளுக்கு தீபம் காட்டி சேவை பண்ணி வைப்பார்.
வேறொருவர் அர்ச்சகர் ஸ்ரீ நம்மாழ்வாரின் உபதேச ஹஸ்த்தத்தை (கெட்டியான
சந்தனத்தில் பதித்தது) ஒரு பிரம்பு கூடையில் இருந்து அவ்வளவு பேருக்கும் தந்தருள்வார்.
இந்த சந்தன நம்மாழ்வார் ஹஸ்தம் கிடைத்தது மஹா பாக்கியமே. இந்த ஏற்பாட்டிற்கு
அத்தனை குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்தது ஸ்ரீமான் வேளுக்குடி ஸ்வாமியின்
புருஷகாரமே.
ஹஸ்தத்தின் போட்டோவை பக்க வாட்டில் ஆழ்வாருடன் காட்டியுள்ளேன்.
சுமார் நானூறு ஹஸ்தங்கள் தயாராக வைத்திருந்து அந்த நேரத்தில் யாருக்கும் விட்டுப்
போகாதபடி அர்ச்சகர் திருக்கரத்தால் தந்தருளியது ஒருமஹா பாக்கியம்.திருப்பதியை
போல் வாலண்டியர்கள் ஜெரகண்டி பணியை நிறைவேற்றினர்.
அந்த ஹஸ்தம் இன்றுவரை பத்திரமாக எந்தவித சேதமும் ஆகாதபடி போற்றி வருகிறேன்.
அடியேன் இந்த யாத்திரை முடிந்து திரும்பியபிறகு இதை பூஜை பெட்டியில் வைத்து
நித்ய திருவாராதணம் ஆரம்பமாகும் சமயம் ( தினமும் பூஜை ஆரம்பிக்கையில்)
சிரசில்மேல் வைத்துகொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டு பூஜையை ஆரம்பிப்பதை
வழக்கமாக கொண்டுள்ளேன்.

பெற்றுக்கொண்டு வெளி மண்டபம் வரவேண்டியது என்று சொன்னார்.இந்த அவசரத்திற்கு


காரணம் 9-௦௦ மணிக்குள் அரவணை (ஸயன பூஜை நடக்கும் நேரம்) முடிந்து நடை
சாத்தவேண்டும். எங்களால் பெருமாள் ஆழ்வார் அரவணை லேட்டாகக் கூடாது.
அப்படியே நடந்தது.சாதாரணமாக பெருமாள் அரவணை (சயனத்தின்போது நடக்கும் பூஜை
உத்சவகாலம்தவிர மற்ற நாட்களில் 9-௦௦ மணி தாண்டி நடப்பதில்லை.
உடனே நடையும் சாத்தப்படும். நாங்கள் ஒரு 38 ௦ சேவார்த்திகள் வருவது தெரிந்து
ஆழ்வாரையும் பெருமாளையும் சேவிக்காமல் போககூடாது என்று நல்ல எண்ணத்தில்
காத்திருந்தனர். நாங்களும் ஒன்பது மணிக்குள் முடிக்கவும் அவர்களும் தாமதமின்றி பூஜை
முடிந்து சயனம் அரவணை ஆகி நடை சாத்தப் பட்டது
அதன்பின் பக்கத்தில் காட்டியுள்ள மண்டபத்தில் .
பாராயணமும் விளக்கங்கமும் நடந்தது
அங்கே வாசிக்கப்பட்ட பாராயண சர்கங்கள்:

யுத்த காண்டம் 1- 5
சீதையை சீக்கிரம் விடுவிக்க வேணும் என்ற
எண்ணத்தில் இயற்கையின் எழிலைப்
பார்த்துக்கொண்டே அவற்றில் ஆழ்ந்து விடாமல்
வேகமாகச் சென்றது வானரசேனை ஸஹ்யம், மலயம் என்ற பர்வதங்களின் காடுகளைப்
பார்த்துக்கொண்டே. வானரசேனை நகர்ந்தது. சம்பக, திலகம், ,அசோகம் கதம்பம் முதலிய
மரங்களின் கிளைகளை முறித்துக் கொண்டும் அவற்றினால் இருந்து வசும்
ீ சுகமான
காற்றை அனுபவித்துக்கொண்டும் சென்றது.ஸஹ்யம், மலயம் என்ற பர்வதங்களைக்
கடந்து மஹேந்த்ரம் என்ற பர்வதத்தை ராமபிரான் சேனையுடன் அடைந்தார். அதன்
சிகரத்தில் ஏறி கடலைப் பார்த்தார். பிறகு கீ ழே இரங்கி வேலாவனம் என்ற உயர்ந்த
வனத்தை சென்றடைந்து தங்கி, கடலை கடப்பது பற்றி ஆலோசிப்போம்.என்று
சுக்ரீவனிடம் கூறினார்.

சர்க்கம் 6- 14 இலங்கையில் ராவணன் ராமனை ஜெயிப்பதற்கு என்ன வழி என்று


ஆலோசித்தான்.பிர்ஹஸ்தன் ,துர்முகன், வ்ஜ்ராதம்ஷ்ட்ரன் ,நிகும்பன், வஜ்ரஹனு என்ற
சேணாதிபதிகள் சத்ரு சேனையை தாங்கள் ஜெயித்து விடுவோம் என்று ராவணனுக்கு
நம்பிக்கை ஊட்டினார்கள். ராமனை ஜெயிக்க முடியாது என்றார் விபீஷனாழ்வான்.
கும்பகர்ணன் ராவணனுடைய செயலுக்காக அவனை நிந்தித்தான்.அவனுடைய செயல்
ராக்ஷசர்களுக்கு பயத்தை உண்டாக்கி உள்ளது. ஆயினும் அதை தன் வலிமையால்
போக்குவேன் எதிரிகளை ஜெயித்து காட்டுவேன் என்று உறுதி கூறினான்
.ராமபிரானை எவ்விதத்திலும் ஜெயிக்க முடியாது அவரிடம் சீ தையை சமர்ப்பித்து
விடுதலே நலம் என்றார் விபிஷனாழ்வார்.
சர்க்கம் 1 5 - 18
இராவணன் விபீஷணனை நிந்தித்து விரட்டினான்.விபீஷணனும் நாலு ராக்ஷஸர்களுடன்
ஆகாசத்தில் ஏறி ஒரே முகூர்த்தத்தில் கடலை தாண்டி ராமபிரானும் லக்ஷ்மணனும்
இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்,
இத்துடன் ஸ்ரீமான் கிருஷ்ணன் சுவாமியின் விளக்கம் முடிந்தது.

அதன் பின்னர் அவர்


எங்களைப் பார்த்து கூறியது.
நாம் இப்போது .இங்கிருந்து
ராமநாதபுரம் கிளம்பு
கிறோம். சுமார் 162 கி.மீ ..
நான்கு மணி நேர
பயணம்.மணி இப்போது 1 ௦-
௦௦.ஆகப் போகிறது.நாம் 1 ௦-15 க்கு கிளம்பினாலும் ராமநாதபுரம் போய்ச் சேர, எப்படியும்
அதிகாலை 2-௦௦ மணியாகும்.அங்கே லாட்ஜ்களில் இடம் புக் செய்துள்ளது.ராத்திரி
பஸ்களிலேயே தூங்குகிறோம்.அதிகாலை 2-௦௦ மணியிலிருந்து 5-மணிவரை
லாட்ஜிலும்கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். பின் எழுந்து காலைகடன்களை
முடித்துக்கொள்வது .6-௦௦மணிக்கு காபி கொடுப்பார்கள்.அருந்தி விட்டு 6-3 ௦ மணிக்கு
லாட்ஜ் ரூம்களை காலி பண்ணிவிட்டு திருப்புல்லாணி நோக்கி நம் பஸ்களில்
கிளம்புகிறோம். ஸமுத்திரக்கரையை அடைய 7-3 ௦ மணி ஆகிவிடும். . கடலில்
தீர்த்தாமாடுகிறோம்.கடல் தண்ண ீர் ஒத்துக்கொள்ளாதவர்கள் காலை ராமநாதபுரம் லாட்ஜ்
ரூம்களில்6-3 ௦மணிக்குள் குளித்து ரெடியாகணும். நாம் திரும்பி லாட்ஜ் வரமாட்டோம்
நேரே திருப்புல்லாணி அது முடிந்து திருகோஷ்டியூர் அதை முடித்துக்கொண்டு நாளை
ராத்திரி ஸ்ரீ ரங்கம் அடைகிறோம்..ராமநாதபுரத்தில் லாட்ஜில் குளிப்பவர்கள்
சமுத்திரக்கரையில் ப்ரோக்ஷித்துக் கொள்ளலாம். ஒரு சிறு உபன்யாசம் கடற்கரையில்
நடக்கும். அங்கிருந்து கிளம்பி திருப்புல்லாணி கோவிலுக்கு வருகிறோம் தர்பாசயணம்
பெருமாள் தாயார் சந்நிதிகளில் சேவிக்கிறோம் அங்கும் பாராயணம், உபன்யாசம் நடக்கும்.
மற்றவை நாளை சொல்லப்படும். இப்போது கிளம்புகிறோம். அவரவர் வண்டி போய்க்
கொண்டிருக்கும் போதே அரிசி உப்புமா வழங்கப்படும்.. என்று சொல்லி முடிக்க
அனைவரும் பஸ்களில் ஏறி அமர்ந்தோம்.ராத்திரி 2-மணிக்கு (அதாவது ஏழாம் தேதி
அதிகாலை) ராமநாதபுரம் லாட்ஜை அடைந்தோம். பஸ்ஸில் தூங்கிக் கொண்டே வந்ததால்
பாதி தூக்கமும் பாதி விழிப்புமாய் இருந்தது. எங்கள் பெட்டிகளை வாங்கிக் கொண்டு ஒரு
ரூமுக்கு நாலைந்து பேர் வதம்
ீ தங்கினோம்.
ஊமைத்தூக்கம் தான்..- நாலரை ஐந்து மணிக்கு கண்விழிக்கவே காலைக்கடன்களை
முடித்துக்கொண்டு ரெடியானபோது ஐந்தரை மணிக்கே காபி வந்தது.
.. இருபதாம் பாகம் முற்ற

You might also like