You are on page 1of 1

ஹம்ஸ யோகம் – 16

மூலம்: பண்டிச் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா


தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
*****************************************************************************

ஒவ்வொரு ஜீவனும் இயற்கையான சுவாசத்தின் மூலம் மௌனமான ஜெபமாகிய ஸோஹத்தினை


அறியாமல், உணராமல் நடாத்திக்கொண்டுதான் இருக்கிறது. இப்படி அறியாமல் நடந்துகொண்டிருக்கும்
சுவாசங்களின் அண்ணளவான எண்ணிக்கை நாளொன்றுக்கு 21600 ஆகும்.
கோரக்க சம்ஹிதை இப்படிச் சொல்கிறது; ஜீவனின் உணர்வுச்சக்தி தொடர்ச்சியாக ஹம்ஸ ஹம்ஸ என்று
உச்சரித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஜீவன் தினசரி 21600 தடவைகள் முயற்சியில்லாமல் இரவும்
பகலும் ஹம்ஸ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
சமஸ்க்ருத இலக்கண சில இலக்கண விதிகளின் படி ஸோஹம் என்பது தொடர்ச்சியாக உச்சரிக்கும்
போது ஓஹம் என்று தோற்றம் பெற்று இறுதியாக ஓம் என்று மாறுவதாக கருதப்படுகிறது.
ஸோஹம் என்ற சொல்லில் ஸகாரமும், ஹகாரமும் அகற்றப்பட்டால் மிகுதி உள்ள உயிரெழுத்துக்களுடன்
ஓம் என்ற சொல் பெறப்படுகிறது. ஆகவே பிரணவ மந்திரமாகிய ஓம் என்பதும் ஸோஹம் என்ற
மந்திரத்திலிருந்தே தோற்றம் பெறுகிறது.
ஹம்ஸ யோக சாதனை அதிமுக்கிய சிக்கல் வாய்ந்த ஆன்மீகப் பயிற்சியாகும். இந்த சாதனையின்
இறுதி இலக்கு அனைத்து சாதனைகளையும் ஒருங்கிணைத்து குண்டலினியை விழிப்பிப்பதை
நோக்கியிருக்கிறது.
தந்திரசாரம் குண்டலினி சக்தியானது ஹம்ஸத்திம் மேலேறி சக்கரங்களைப் பிளந்து செல்கிறது என்று
கூறுகிறது.
காய்த்ரிதேவியின் ரூபத்தில் ஹம்ஸ காயத்ரி ரூபம் என்று வணங்கப்படுகிறது. இதன் அர்த்தம்
காயத்ரியின் ஆற்ற்லை ஸோஹம் சாதனையின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்பதன் குறியீட்டு
விளக்கமேயாகும்.
ஹம்ஸம் என்ற அன்னம் புனிதமான பறவையாகும். இது எப்போதும் தூய்மையையும், நல்ல உணவையும்
மாத்திரமே உணவாக எடுத்துக்கொள்ளும். பாலுடன் நீரைக் கலந்து வைத்தாலும் பாலை மாத்திரம்
பகுத்தும் உண்ணும் ஆற்றலுடையதாக வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆற்றலினால் ஹம்ஸம் என்ற சொல்
இலக்கியங்களில் தூய அறிவு, தூய்மை, நேர்மை, பகுத்தறிவு ஆகியவற்றைக் குறிப்பிட
பயன்படுத்தப்படுகிறது. இந்த இலக்கிய உதாரணங்கள் மூலம் காயத்ரி தேவியின் வாகனமாக ஹம்ஸம்
குறிப்பிடப்படுவதன் அர்த்தத்தினை இப்படி எடுத்துக்கொள்ளலாம்; காயத்ரி சாதனையில் சித்தி பெற்ற
சாதகன் ஒருவனின் வாழ்ககை ் தூய்மையானதாகவும், சம நிலையுடையதாகவும், அறமுடையதாகவும்,
விவேகம் நிறைந்ததாகவும், நன் நடத்தையுடையதாகவும் இருக்கும். சாதனையின் உயர்வினைப் பற்றி
விளங்கிக்கொள்வதற்கு காயத்ரி தேவி ஹம்ஸத்தில் – அன்னத்தில் இருப்பது என்பது ஹம்ஸயோக
சாதனையின் மூலம் காயத்ரியின் முழுமையான ஆற்றலை நாம் உணர முடியும் என்பதைக் குறிப்பதாகும்.
Page -23

தொடரும்…

You might also like