You are on page 1of 1

ஹம்ஸ யோகம் – 22

மூலம்: பண்டிச் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா


தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
*****************************************************************************

ஸோஹம் சாதனையின் தத்துவம் இயல்பிலேயே சாதகனை முழுமையாக ஆணவம் மற்றும் இச்சையினை


சரணாகதி அடையச் செய்து அவனுடைய அடையாளத்தை தெய்வீகத்துடன் சேர்பப் ிக்கிறது. அவன்
தனது மனதினை சிரத்தை எனும் நீரினால் தினசரி கழுவிக்கொண்டு வரவேண்டும். அவனது மனமும்
அகமும் முழுமையாக இறைவனின் ஆற்றலைப் பெறுவதிலும் தெய்வீகத் தன்மையடைவதிலிலும்
சரணடைந்து இருக்க வேண்டும். அவனது வாழ்கை தெய்வீக விதிகளுக்கு அமைய ஒழுங்குடையதாக
இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அன்பும், சத்தியமும், உண்மையும் கருணையும் நிறைந்ததாக
அனத்து உயிர்களையும் மேற்கூறிய பண்பினைக் காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இப்படி உயிரானது
இறைசக்திக்கு சரணடைந்தவுடன் அவன் இறையாற்றலை ஈர்க்கும் வல்லமையுடையவனாகிறான்.
அவனுள் இருக்கும் தெய்வீகத்தன்மை விழிப்படைந்து அவன் தெய்வத்தன்மையை உணர்த்
தொடங்குகிறான்.
ஒரு இழுபடக்கூடிய புள்ளியாக இருக்கக்கூடிய பொருளை இரண்டு முனைகளிலிருந்து
இழுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் விடுபட்டாலும் அதன் இரண்டு முனைகளும்
இணைந்துகொள்ளும். இதுபோன்ற ஒரு நிலைதான் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையிலான
நிலை! முழுமையான தியாகம் ஒரு பக்கத்தில் நடைபெறும் என்றாலும் இணைவு நடைபெறும்.
அதன்பிறகு இரண்டும் வேறானது என்ற நிலை இருக்காது. இதுவே அன்பின் இரகசியம், சாதனையின்
இரகசியுமும் கூட. சாதனையில் சித்தி பெற பக்தியும் சரணாகதியும் மிக முக்கியமான இரண்டு
நிபந்தனைகள்! ஒரு சமித்தினை ஹோமத்தின் அக்னியில் சமர்ப்பித்தால் அது மரக்கட்டையாக
இருக்காது, உடனடியாக அக்னியாக உருமாறும். அதுபோல் சமுத்திரத்தில் கலக்கும் நீர் எல்லம்
சமுத்திரத்தின் அங்கமாக மாறும். ஒரு சிறு துளி சமுத்திரத்தின் முழு அங்கமாக மாறுகிறது. ஒரு துளி
உப்பு பாத்திரத்தில் உள்ள அனைத்து நீரையும் உப்புச்சுவையுடையதாக்குகிறது. பாலில் இட்ட சிறிதளவு சீனி
முழுப்பாலையும் இனிப்பாக்கிறது. இரண்டும் தமது தனித்த அடையாளங்களை இழந்து ஒன்றாகி
இரண்டும் வேறு என்ற நிலை உருவாகிறது.
இத்தகைய ஒரு இணைவையே ஜீவனிற்கும் பிரம்மத்திற்கிடையில் நடப்பதாக வேதாந்தம் கூறுகிறது.
இதுவே வாழ்ககை் யின் இலட்சியமாகும். இதுவே அத்வைதமாகும். இந்த நிலையில் சாதகன் தன்னுடைய
உண்மை நிலையாகிய – சிவோஹம் – நானே சிவம் – சத்சிதானந்தம் – எங்கும் நிறைந்த ஆனந்த
வடிவினன் – தத்வமஸி – நானே அவன் என்ற மகா வாக்கிய அனுபவங்களைப் பெறுகிறான். இது உயிர்
இறையுடன் கலப்பதால் உயிரிற்குக் கிடைக்கும் அனுபவமாகும். இந்த அனுபவத்தையே யோக நூற்கள்
பிரம்மானுபவம் என்று விபரிக்கிறது.
தொடரும்…

You might also like