You are on page 1of 1

ஹம்ஸ யோகம் – 21

மூலம்: பண்டிச் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா


தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
*****************************************************************************

சாரதா திலக தந்திரம் கூறுகிறது; ஒவ்வொரு மானிடனும் தனது ஒவ்வொரு மூச்சிலும் ஸோஹம்
ஜெபத்தினைச் செய்துகொண்டிருக்கிறான். இதை அறியாதவன் குருடனாகவும் அறியாமை இருள்
நிறைந்தவனாகவும் உலகமாயையில் சிக்கி மோக்ஷமடைய முடியாதவானாக இருக்கிறான். யோகிகளுக்கு
மோக்ஷத்தினைத் தருவது அஜபா காயத்ரி. இந்த சக்தியை ஒருவன் உணருவதன் மூலம் ஞானத்தினைப்
பெறுவதன் மூலமும் தன்னுடைய அனைத்துப் பாவங்களை நீக்கி துன்பத்திலிருந்து பூரண விடுதலை
பெறமுடியும். இதற்கு நிகரான வித்தை எதுவும் இல்லை. இந்த சாதனையைச் செய்வதால் பெறப்படும்
ஆற்றலுக்கு நிகரான புண்ணியம் எதுவும் இல்லை. இதைப் போன்றதொரு சாதனை இதற்கு முன்னரும்
இருந்ததில்லை, எதிர்காலத்திலும் வரமுடியாது.
இறைவன் – உயிர்களின் தந்தை எப்போதும் தனது பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்ற நோக்கம்
உடையவர், ஆனால் உயிர் தனது அறியாமையினால் இறைவனின் ஆற்றலை, அறிவை, பெறுவதில் இருந்து
தன்னை விலக்கிக் கொள்கிறது. இறைவ எப்போது எமக்குள்ளேயே இருக்கிறார். அதனால் நாம்
எமக்குள்ளே எப்போதும் ஒருவித இழுபறி நிலையில் வாழ்கிறோம். இறைவன் உயிர் தனது சரியான
பாதையைத் தேர்ந்தெடுக்கும் வரை திருபதியடைவதில்லை. அதனால் எமக்குள் இருந்து கொண்டு அந்த
இறைவனின் ஆற்றல் நீதியுடனும், உறுதியாகவும் நாம் ஆற்றும் உடல், மன, உணர்சச ் ி செயல்களுக்கும்
ஆன்ம சாதனைக்கும் ஏற்ற வகையில் கர்மக்கணக்கினை எழுதி எம்மை சரியான வழிக்கு
திசைகாட்டிக்கொண்டு இருக்கின்றது. உயிர் சரியான வழியில் செல்லவில்லை என்றால் கர்ம வினைகள்
மூலம் துன்பத்தினை ஏற்படுத்தி சரியான வழியினை ஞாபகப்படுத்தி உயர் தர்மத்தினைப் போதிக்கிறது.
மாயையால் சூழப்பட்டுள்ள உயிரானது இறைவனின் பக்தனாக மாறி இறைவனை வணங்கத்
தொடங்குகிறது. தனது தவறான மன, உடல், உணர்ச்சிச் செயல்களை திருத்திக்கொள்ளாமல் தனது
நியாயமற்ற ஆசைகளை மாத்திரம் பூர்தத ் ி செய்ய பிரார்தத் னை, பூஜைகள் மூலம் திருப்தி செய்து
நன்மை அடைந்துவிடலாம் என்று நம்புகிறான். தான் பிரார்த்தனை செய்தால் கடவுள் கேட்கவேண்டும்,
தனக்கு எந்தவிதமான பரீட்சையும் வைக்கக்கூடாது; தான் அதைப் பெறுவதற்கு தகுதியானவானா
இல்லையா என்றெல்லாம் கவனிக்கக் கூடாது; பிரார்தத ் னை செய்தால் கிடைக்க வேண்டும் என்று
எண்ணுகிறான். இப்படி இறைவனும் உயிரும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் எப்படி இருவரும்
ஒருவருக்கொருவர் அருகில் வருவது? எப்படி உயிர் இறைவனை அறிவது? உயிர் தனது தெய்வீகப்
பெற்றோரான இறைவனை அறிவது?
இதற்குரிய தத்துவம் தான் ஸோஹம் சாதனை!
தொடரும்…

You might also like