You are on page 1of 10

Thiruvonum's Weblog

« ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம்
-ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் —
ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம்
-ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் –
ஸ்ரீ எம்பெருமான்கள் ஆச்சார்யர்கள் சிஷ்யர்கள் பிரகாசிப்பித்த பிரபாவங்கள்– »
ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம்
-ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம்
–/ஸ்ரீ முதலிகள் திரு நாமங்கள் –
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ திருநாராயண புரத்தில் நின்றும் ஸ்ரீ கோயில் ஏற பயண கதியில் எழுந்து அருளிப்
புகுந்து திரு முகத்துறையிலே நீராடி
கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரராய் எழுந்து அருள அங்கு உள்ளார் எல்லாம் எதிர் கொண்டு
சேவிக்க அவர்களையும் கிருபை பண்ணி
எழுந்து அருளிப் புகுந்து சேவா க்ரமம் தப்பாமல் சேவித்து ஸ்ரீ அழகிய மணவாளன் திரு
மண்டபத்தில் சென்று தண்டன் சமர்ப்பித்து
உரை கோயிலின் உள்ளே புகுந்து ஸ்ரீ பெரிய பெருமாளையும் ஸ்ரீ நம்பெருமாளையும் திருவடி
தொழுது மனம் உருகி மலர்க்கண்கள்
துளிக்கக் கண்ணாலே பருகி வாயார வாழ்த்தி நிற்க
ஸ்ரீ பெருமாளும் திருப்பவளச் செவ்வாய் திறந்து ஸ்ரீ உடையவரை நோக்கி நெடு நாள்
தேசாந்தரம் சென்று போர மெலிந்தீரே என்று வினவி அருள –
ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ பெரிய பெருமாளைக் குறித்து -அகம் மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி தேவரீர் பள்ளி கொண்டு
அருளுகையாலே வன்பெரு வானகத்தில் சொல்லும்படியே உபய விபூதியில் உள்ளார்க்கும் என்ன கிலேசம் உண்டு
-என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் உகந்து தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டம் தளிகை பிரசாதங்களும்
பிரசாதிக்க ஸ்வீ கரித்து க்ருதார்த்தராய் நிற்க
ஸ்ரீ பெருமாளும் திரு மடமே போம் என்று விடை கொடுத்து அருள இவரும் புறப்பட்டு திவ்ய
உத்சவம் கொண்டாடும்
திரு மண்டபங்கள் திருக் கோபுரங்கள் திரு மதிள்கள் தொடக்கமான திவ்ய நகர ஸ்ரீ யை எல்லாம்
சுற்றி சேவித்து

முதலிகளும் தாமுமாக ஸ்ரீ ஆழ்வான் திருமாளிகை ஏற எழுந்து அருள ஸ்ரீ ஆழ்வானும் எதிரே
எழுந்து அருளி
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே விழுந்து சேவித்து உகப்பின் மிகுதியால் திருவடிகளை பூண்டு கொண்டு கிடக்க
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வானை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு கிலேச அதிசயேநே சோக
அஸ்ருவானது தாரா வர்ஷகமாக வர்ஷிக்க
நெடும் போது ஒரு வார்த்தையும் அருளிச் செய்ய மாட்டாதே விம்மல் பொருமலாய் துக்க ஆர்ணவ
மக்நராய் தழுதழுத்த திரு மிடற்று ஒலியுடன்
ஸ்ரீ ஆழ்வான் இத்தர்சனத்துக்காக த்ருஷ்ட்டி பூதரான உமக்கு இப்படி கண் போவதே என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாமம் கோணிற்று என்றாகிலும் நினைத்திரேனோ என்று
விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் அது உமக்கு உண்டோ -அடியேன் துஷ்கர்மம் அன்றோ உமக்கு இப்படி வருகைக்கு
அடி என்று திரு உள்ளம் புண்பட்டு
துக்க உபநோதனம் பண்ணி அருள ஸ்ரீ ஆழ்வானும் தேறி நிற்க
மற்றும் உண்டான ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்துடன் கூட திரு மடமே எழுந்து அருளி இருந்தார் –

பின்பு அந்நாட்டில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்து ஏறச்
சென்று தண்டன் சமர்ப்பித்து –
ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளினாரே-ஸ்ரீ ஆழ்வானுக்கும் திருக் கண்
மலர் போயிற்றே என்று துக்க உபநோதநம் பண்ணி –
தேவரீரை யாகிலும் சேவிக்கப் பெற்றோமே என்று சொல்லி எல்லாரும் ப்ரீதரராய் இருக்கும்
காலத்திலே
ஸ்ரீ திருச் சித்ர கூடம் அழிந்தது என்று சிலர் வந்து ஸ்ரீ உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –
அது கேட்டு துக்க ஆகுலராய் சோகித்து திரு முத்து உதிர்த்து அருளி -அங்குத்தையில் உத்சவ
பேரம் திருப்பதிக்கு
எழுந்து அருளினார் என்று கேட்டு அருளி அந்த இழவு எல்லாம் ஆறும்படி திருப்பதிக்கு
எழுந்து அருளி
ஸ்ரீ கோவிந்த ராஜனை மூல பேர ஸஹிதமாக திரு பிரதிஷ்டையும் பண்ணி வைத்து –
தென் தில்லைத் திருச் சித்ர கூடத்து என் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத்து என் வித்தகனை
-என்றதுவே
பொய்ம் மொழி ஓன்று இல்லாத மெய்ம் மொழியாக இப்படிப் பலிப்பதே -என்று அருளிச் செய்து
இழவு தீர்ந்து அருளி
திருமலை ஏறி திருவேங்கட மா முகிலையும் திருவடி தொழுது அப்போதே மீண்டு திருமலை இறங்கித்
திருத் தாழ்வரையிலே
ஆழ்வார்களையும் சேவித்துப் புறப்பட்டு ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளிப் பேர்
அருளாளரையும் திருவடி தொழுது மீண்டு
பயண கதியில் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளிப் புகுந்து ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து தம்
திருமடம் எழுந்து அருளி
ஸ்வ அபிமான அந்தர்பூதர்க்குத் தென்றலும் சிறு துளியும் போலே தர்சன தாத்பர்யம் அருளிச் செய்யா நின்று
கொண்டு
ஸூகமே எழுந்து அருளி இருந்தார் –

அதின் மற்றை நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வானை அழைத்து -ஸ்ரீ பேர் அருளாளர்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதராய் இருப்பர் –
நீர் அவரை கண் தந்து அருள வேணும் -என்று ஒரு ஸ்தோத்ரம் விண்ணப்பம் செய்யும் என்று
அருளிச் செய்ய —
ஸ்ரீ ஆழ்வானும் அடியேனுக்கு இக்கண் வேண்டா -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ எம்பெருமானாரும் அப்படி அன்று -சொல்ல வேணும் -என்று பல நாளும் நிர்பந்தித்து
அருளிச் செய்து அருள –
ஸ்ரீ ஆழ்வானும் கண் அழியாமல் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை அருளிச் செய்ய உபக்ரமித்து –
ஸ்வஸ்தி ஹஸ்திகிரி மஸ்த சேகரஸ் சந்தநோது மயி சந்ததம் ஹரி -நிஸ் சாமாப்யதிகம்
அப்யதத்தயன் தேவம்
ஒவ்பநிஷதீ ஸரஸ்வதீ -என்று சொல்லி
நீல மேக நிபஞ்சந புஞ்சஸ்யாம குந்தலம் அனந்த சயந்த்வாம்–அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம்
நேத்ர ஸாத் குரு கரீச ஸதாமே-என்ற
இஸ் ஸ்லோகத்தாலே சதா தர்சனம் பண்ண யோக்கியமான அப்ராக்ருத திவ்ய நேத்ரம் அடியேனுக்கு
தந்து அருள வேணும் -என்று
விஞ்ஞாபிக்க -அன்று இரவே ஸ்ரீ பேர் அருளாளரும் தந்தோம் என்று ஸ்வப்ன முகேன அருளிச்
செய்ய

ஸ்ரீ ஆழ்வானும் பிரத்யூஷ காலத்திலே பெரிய ப்ரீதியோடே எழுந்து அருளி இருந்து அனுஷ்டானத்தைச் செய்து
ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை நிறைவேற அருளிச் செய்து -ஸ்ரீ உடையவர் சந்நிதிக்குச் சென்று
தண்டன் இட்டு –
தேவரீர் நியமனப்படி ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்தேன் என்று ஸ்ரீ வரதராஜ
ஸ்தவத்தை முற்றவும்
விண்ணப்பம் செய்து காட்ட -ஸ்ரீ உடையவரும் கேட்டு உகந்து அருளின அளவிலே ஸ்ரீ ஆழ்வானும்

பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் ஸ்ரீ பேர் அருளாளன் ஆகையால் அடியேன்
கேட்டபடியே
ஸ்ரீ வைகுண்டேது பரே லோகே நித்யத்வேந வ்யவஸ்திதம் பஸ்யந்தி ச சதா தேவம் நேத்ரைர் ஞானேந
சாமர என்று
சொல்லப்படுகிற ஸ்ரீ வைகுண்ட நாதனை சதா தர்சனம் பண்ணுகிற அப்ராக்ருத திவ்ய சஷூஸ்ஸை ப்ரசாதித்து
அருளினார் என்ன –
ஸ்ரீ உடையவரும் அங்கன் அன்று அங்கு ஏறப் போவோம் வாரும் என்று ஸ்ரீ ஆழ்வானைக் கையைப்
பிடித்துக் கொண்டு
ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரதராஜ
ஸ்தவத்தைப் பேர் அருளாளர் சந்நிதியில்
விண்ணப்பம் செய்து தலைக் காட்டுகிற போது ஸ்ரீ உடையவர் காலாந்தரத்திலே தாழ்க்க-ஸ்ரீ
ஸ்தவம் திருச் செவி சாத்தி
ஸ்ரீ பேர் அருளாளரும் ப்ரசன்னராய் ஸ்ரீ உடையவர் வருவதற்கு முன்னே -ஸ்ரீ ஆழ்வான் உமக்கு
அபேக்ஷிதம் என் என்று கேட்டருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவர் திரு உள்ளம் பற்றினத்தை வேண்டிக் கொள்ளாதே –
நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்ய -அப்படியே பெறக் கடவன்
என்று
ஸ்ரீ பெருமாளும் திருவாய் மலர்ந்த அளவிலே

ஸ்ரீ உடையவர் கேட்டுப் பதறி ஓடி வந்து திரு உள்ளம் உளைந்து ஸ்ரீ பெருமாளைக் குறித்து
சர்வஞ்ஞரான தேவரீர்
இப்போது என் நினைவினைத் தலைக் கட்டிற்று இலீரே –
ஸ்ரீ ஆழ்வான் நீ ஸ்வ தந்திரனாய் என் நினைவைத் தலைக் கட்டாதே அதி லங்கித்து நான்
வருவதற்கு முன்னே இப்படிச் செய்தாயே
என்று இருவரையும் வெறுத்து -இனி என் -என்று திகைத்து நிற்க-
ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளும் நம்மையும் உம்மையும் காணும் இடத்து கட் கண்ணாலே காணக்
கடவர்-என்று வர பிரதானம் பண்ணி அருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பெருமாளைத் தம் கட் கண்ணாலே சேவித்துச் சாத்தின திவ்யாபரண திவ்ய
விக்ரஹ அவயாதிகளை
இவை இவை என்று குறித்துக் காட்டி அருளி ஸ்ரீ உடையவர் விக்ரஹத்தையும் சேவித்துக் காட்டி
அருள
இவரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ ஆழ்வானுடன் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளி பூர்வம் போலே வ்யாக்யானித்துக்
கொண்டு இருக்கச் செய்தே –

ஸ்ரீ நாச்சியார் திருமொழி வ்யாக்யானத்தில் -நாறு நறும் பொழில் -என்கிற பாட்டு


ப்ரஸ்துதமாக-
ஸ்ரீ ஆண்டாள் பிரார்த்தனையை நாம் தலைக்கட்ட வேணும் -என்று அப்போதே புறப்பட்டு ஸ்ரீ
திருமால் இருஞ்சோலை திருமலைக்கு
எழுந்து அருளி ஸ்ரீ கோதை பிரார்த்தித்த படியே நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார
வடிசிலும் பரிவுடன்
ஸ்ரீ நம்பிக்கு அமுது செய்வித்து அருளி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏற எழுந்து அருளி ஸ்ரீ வட பெரும்
கோயிலுடையானையும் சேவித்து
ஸ்ரீ நாச்சியார் திருமாளிகைக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வார் திருமகளாரை அடி வணங்கி
நிற்க
ஸ்ரீ கோதையும் ஸ்ரீ குல முனிவனைக் குறித்து தம் பிரார்த்தனையைத் தலைக் கட்டினத்துக்கு
மிகவும் உகந்து –
நம் கோயில் அண்ணர் – என்று அர்ச்சக முகேன திரு நாமம் பிரசாதித்து தீர்த்த பிரசாதங்களை
பிரசாதித்து விடை கொடுத்து அருள –
அங்கு இருந்து புறப்பட்டு ஸ்ரீ திரு நகரிக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வாரையும் சேவித்து
தீர்த்த பிரசாதமும் பெற்று மீண்டு
பயண கதியில் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு தர்சனார்த்தம்
பிரசாதித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

————————-

இப்படி எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த


முதலிகளுடைய திருமுடி யடைவு எங்கனே என்னில்

ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஸ்ரீ மாட பூசி ஆழ்வான்
ஸ்ரீ சேட்டலூர் சிறியாழ்வான்
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ அரணபுரத்து ஆழ்வான்
ஸ்ரீ அளங்க நாட்டாழ்வான்
ஸ்ரீ நெய்யுண்டான் ஆழ்வான்
ஸ்ரீ உக்கலாழ்வான்
ஸ்ரீ கோமடத்தாழ்வான்
ஸ்ரீ வேதாந்தி யாழ்வான்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ மிளகு ஆழ்வான்
ஸ்ரீ காராஞ்சி ஆழ்வான்
ஸ்ரீ ஈயுண்ணி ஆழ்வான்
ஸ்ரீ கோயில் ஆழ்வான்
ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்
ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்

ஸ்ரீ முதலியாண்டான்
ஸ்ரீ பெரியாண்டான்
ஸ்ரீ சிறியாண்டான்
ஸ்ரீ அம்மங்கி யாண்டான்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ சோமாசி யாண்டான்
ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
ஸ்ரீ ஈஸ்வர ஆண்டான்
ஸ்ரீ ஈயுண்ணி யாண்டான்
ஸ்ரீ பிள்ளை யாண்டான்
ஸ்ரீ குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்
ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்
ஸ்ரீ சீயராண்டான்

ஸ்ரீ கிடாம்பி யாச்சான்


ஸ்ரீ சிறியாச்சான்
ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
ஸ்ரீ கொங்கில் யாச்சான்
ஸ்ரீ ஈச்சம்பாடி யாச்சான்
ஸ்ரீ என்னாச்சான்
ஸ்ரீ ஐயம்பிள்ளை யாச்சான்
ஸ்ரீ தூயபிள்ளை யாச்சான்
ஸ்ரீ ஆச்சி யாச்சான்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

ஸ்ரீ தொண்டனூர் நம்பி


ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் (மளூர் )நம்பி
ஸ்ரீ சொட்டை நம்பி
ஸ்ரீ குரவை நம்பி
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி
ஸ்ரீ முடும்பை நம்பி
ஸ்ரீ பராங்குச நம்பி
ஸ்ரீ வில்லிபுத்தூர் நம்பி
ஸ்ரீ வடுக நம்பி
ஸ்ரீ திருக் குருகூர் நம்பி
ஸ்ரீ கொமாண்டூர் பிள்ளை நம்பி

ஸ்ரீ பராசர பட்டர்


ஸ்ரீ பராங்குச பட்டர்
ஸ்ரீ வரம் தரும் பெரிய பெருமாள் பட்டர்
ஸ்ரீ அழகிய மணவாள பட்டர்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்
ஸ்ரீ சிறுப்பள்ளி தேவ ராஜ பட்டர்
ஸ்ரீ கோவிந்த பட்டர்
ஸ்ரீ திருவரங்க பட்டர்
ஸ்ரீ நம்பியாரில் ஸ்ரீ ரெங்கராஜ பட்டர்
ஸ்ரீ உள்ளூரில் பெரிய பெருமாள் பட்டர்

ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர்


ஸ்ரீ ஈச்சம்பாடிச் சீயர்
ஸ்ரீ குலசேகர சீயர்
ஸ்ரீ திரு வெள்ளறைச் சீயர்
ஸ்ரீ ஆட் கொண்ட வில்லி சீயர்
ஸ்ரீ திரு மழிசைச் சீயர்
ஸ்ரீ திருவாய் மொழிச் சீயர்
ஸ்ரீ திரு நாராயண புரச் சீயர்
ஸ்ரீ சாளக்ராமச் சீயர்
ஸ்ரீ கோவிந்த சீயர்
ஸ்ரீ திருமாலிருஞ்சோலைச் சீயர்
ஸ்ரீ திருப் புட் குழிச் சீயர்
ஸ்ரீ திருக் குடந்தைச் சீயர்
ஸ்ரீ திரு முட்டஞ் சீயர்
ஸ்ரீ திருநின்றவூர்ச் சீயர்

ஸ்ரீ திரு நாராயண புரத்து அரையர்


ஸ்ரீ பெருமாள் கோயில் பெருமாள் அரையர்
ஸ்ரீ ராஜ நாராயண பெருமாள் அரையர்
ஸ்ரீ திருவரங்க மாளிகை அரையர்
ஸ்ரீ திருவாய் மொழி அரையர்
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
ஸ்ரீ திருக் குறுங்குடி அரையர்
ஸ்ரீ திரு நகரி அரையர்
ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
ஸ்ரீ திரு மாலிருஞ்சோலை அரையர்
ஸ்ரீ திரு வனந்த புரத்தரையர்
ஸ்ரீ ராஜ மகேந்திர பெருமாள் அரையர்
ஸ்ரீ பிள்ளை விழுப்பத்தூர் அரையர்
ஸ்ரீ திருவேங்கடத்து அரையர்

ஸ்ரீ ஆட் கொண்ட அம்மாள்


ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
ஸ்ரீ முடும்பை அம்மாள்
ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
ஸ்ரீ உக்கல் அம்மாள்
ஸ்ரீ சொட்டை அம்மாள்

ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள்


ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ பட்டினப் பெருமாள்

ஸ்ரீ திருமலை நல்லான்

ஸ்ரீ எம்பார்

ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார்

ஸ்ரீ பெரிய கோயில் வள்ளலார்

ஸ்ரீ அலங்கார வேங்கடவர்

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்


ஸ்ரீ ஆர்க்காட்டுப் பிள்ளான்
ஸ்ரீ இராமானுசப் பிள்ளான்
ஸ்ரீ திரு நகரிப் பிள்ளான்

ஸ்ரீ கோமடத்து ஐயன்


ஸ்ரீ வைத்த மா நிதிச் சிறியப்பன்
ஸ்ரீ பெரியப்பன்

ஸ்ரீ அணி அரங்கத்து அமுதனார்


ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார்

ஸ்ரீ கொமாண்டூர் இளைய வல்லி

ஸ்ரீ கரும் தேவர்

ஸ்ரீ ஐம்பத்து இருவர்

ஸ்ரீ எம்பெருமானார் செல்வப்பிள்ளை

——————————–

ஸ்ரீ சாத்தாத முதலிகள்

ஸ்ரீ குணசேகரப் பெருமாள்


ஸ்ரீ பட்டர் பிரான் தாசர்
ஸ்ரீ பகை வில்லி தாசர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் தாசர்
ஸ்ரீ நாராயண தாசர்
ஸ்ரீ கோவர்த்தன தாசர்
ஸ்ரீ திருவழுதி வளநாடு தாசர்
ஸ்ரீ ராமானுஜ தாசர்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர்
ஸ்ரீ வண்டர்
ஸ்ரீ சுண்டர்
ஸ்ரீ ராமானுஜ வேளைக்காரர்

———————————-

ஸ்ரீ நத்தத்து முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ திருவரங்க தாசர்


ஸ்ரீ திருமாலிருஞ்சோலை தாசர்
ஸ்ரீ வானமாமலை தாசர்

——————————–

ஸ்ரீ கொங்கில் முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ அழகிய மணவாள தாசர்


ஸ்ரீ திரு வேங்கட தாசர்
ஸ்ரீ பேர் அருளாள தாசர்

————————————

ஸ்ரீ மழலைக் கூர்நத்தில் முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ யதிவர சூடாமணி தாசர் –


ஸ்ரீ யதிராஜ தாசர்
ஸ்ரீ இளையாழ்வார் தாசர்

—————————————–

ஸ்ரீ பாண்டிய நாட்டு முதலிகள் மூவர் திரு நாமம்


ஸ்ரீ மகிழ் அலங்கார தாசர்
ஸ்ரீ சடகோப தாசர்
ஸ்ரீ பிள்ளை திருவாய் மொழி தாசர்

——————————-

ஸ்ரீ ஸ்தானத்தாரில்

ஸ்ரீ சேநா நாத ப்ரஹ்ம ராயர்


ஸ்ரீ வீர ஸூந்தர ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ ஜெகந்நாத ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ வீர ராகவ ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ பிள்ளை யுறைந்தை யுடையார்
ஸ்ரீ திரு மஞ்சனம் எடுக்கும் தூய முனி வேழம்
ஸ்ரீ பண்டாரம் காவல் திருவரங்கத்து மாளிகையார்
ஸ்ரீ ஆண்டவர்
ஸ்ரீ அரியவர்

——————————-

ஸ்ரீ அம்மைமார்கள்

ஸ்ரீ திருவனந்த புரத்து அம்மை


ஸ்ரீ திரு வாட்டாற்று அம்மை
ஸ்ரீ திரு வண் பரிசாரத்து அம்மை
ஸ்ரீ மன்னனார் கோயில் போர் ஏற்று அம்மை
ஸ்ரீ திருநறையூர் அம்மை
ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அம்மை
ஸ்ரீ திருப்பதி ஸ்ரீ கார்யம் செய்யும் அம்மை
ஸ்ரீ ஆண்டாள் அம்மை
ஸ்ரீ நாயகத்தேவியார்
ஸ்ரீ துய்ய பெருந்தேவியார்
ஸ்ரீ பெரிய பெரும் தேவியார்
ஸ்ரீ சிறிய பெரும் தேவியார்
ஸ்ரீ பெரும் புதூர் திருவரங்கம் திருக் குடந்தை துய்ய வாயிரம்
ஸ்ரீ கொங்கில் பிராட்டியார்
ஸ்ரீ அத்துழாய் அம்மை
ஸ்ரீ அம்மங்கி அம்மை
ஸ்ரீ கூரத்தாண்டாள்
ஸ்ரீ தேவகிப் பிராட்டியார்
ஸ்ரீ யதிராஜ வல்லியார்
ஸ்ரீ பங்கயச் செல்வியார்
ஸ்ரீ பொன்னாச்சியார்
ஸ்ரீ இன்னிள வஞ்சியார்
ஸ்ரீ சூடிக் கொடுத்தாள்
ஸ்ரீ திருப் பாவை பாடினாள்

————————————-

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ஆஸ்ரயித்த முதலிகள் எழுபத்து நான்கு ஆச்சார்யர்கள்


யார் என்னில்

ஸ்ரீ ஆளவந்தார் திருக் குமாரர் ஸ்ரீ சொட்டை நம்பி திருக் குமாரர் ஸ்ரீ என்னாச்சான்
திருக் குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்
ஸ்ரீ பெரிய நம்பி திருக் குமாரர் ஸ்ரீ புண்டரீகர்
ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பி திருக் குமாரர் ஸ்ரீ தெற்கு ஆழ்வான்
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் ஸ்ரீ சுந்தரத் தோளுடையார்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருக் குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளையும் ஸ்ரீ திருமலை
நம்பியும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக் குமாரர் ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும்
ஸ்ரீ முதலியாண்டானும் அவர் திருக் குமாரரும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானும்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ கோமடத்தாழ்வான்
ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்

ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்


ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ மிளகு ஆழ்வான்
ஸ்ரீ நெய் யுண்ட ஆழ்வான்
ஸ்ரீ சேட்டலூர்ச் சிறியாழ்வான்
ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான்
ஸ்ரீ கோயில் ஆழ்வான்

ஸ்ரீ உக்கல் ஆழ்வான்


ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ எம்பார்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்
ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
ஸ்ரீ ஈச்சம்பாடி யாச்சான்
ஸ்ரீ கொங்கில் ஆச்சான்
ஸ்ரீ ஈச்சம் பாடி சீயர்
ஸ்ரீ திருமலை நல்லான்
ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர்

ஸ்ரீ திரு வெள்ளறை சீயர்


ஸ்ரீ ஆட் கொண்ட வில்லி சீயர்
ஸ்ரீ திரு நகரிப் பிள்ளான்
ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார்
ஸ்ரீ அலங்கார வேங்கடவர்
ஸ்ரீ நம்பி கருந்தேவர்
ஸ்ரீ சிறுப்பள்ளி தேவ ராஜ பட்டர்
ஸ்ரீ பிள்ளை யுறந்தை யுடையார்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய கோயில் வள்ளலார்

ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்


ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ சோமாசி ஆண்டான்
ஸ்ரீ சீயர் ஆண்டான்
ஸ்ரீ ஈஸ்வர ஆண்டான்
ஸ்ரீ ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான்

ஸ்ரீ பெரியாண்டான்
ஸ்ரீ சிறியாண்டான்
ஸ்ரீ குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்
ஸ்ரீ அம்மங்கி ஆண்டான்
ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி

ஸ்ரீ குரவை நம்பி


ஸ்ரீ முடும்பை நம்பி
ஸ்ரீ வடுக நம்பி
ஸ்ரீ வங்கிப்புரத்து நம்பி
ஸ்ரீ பராங்குச நம்பி
ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
ஸ்ரீ உக்கல் அம்மாள்
ஸ்ரீ சொட்டை அம்மாள்
ஸ்ரீ முடும்பை அம்மாள்

ஸ்ரீ கொமாண்டூர்ப் பிள்ளை


ஸ்ரீ கொமாண்டூர் இளைய வல்லி
ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள்
ஸ்ரீ ஆர்க்காட்டுப் பிள்ளான்

———————————————

சம்சேவிதஸ் சம்யமி சப்த சத்யா பீடைஸ் சதுஸ் சப்ததி பிஸ்ஸமேதை -அந்யைரநந்தைரபி விஷ்ணு
பக்தை ராஸ்தே அதி ரங்கம்
யதி ஸார்வ பவ்ம–என்கிறபடியே எழுநூறு உத்தம ஆஸ்ரமிகளாலும்-எழுபத்து நாலு ஸிம்ஹாஸனஸ்த்ரான
ஆச்சார்ய புருஷர்களாலும் –
அசங்க்யாதரான சாற்றின -சாத்தாத -முதலிகளாலும் -பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும்-முன்னூறு
கொற்றி அம்மைமார்களாலும் –
எண்ணிறந்த ராஜாக்களாலும் -இப்படி அகிலராலும் ஸேவ்யமானராய் இவ்வைஸ்வர்யத்துடனே –
ஸ்ரீ ரெங்க நாதோ ஜெயது ஸ்ரீஸ் ச வர்த்ததாம் -என்று ஸ்ரீ நம்பெருமாளை மங்களா சாசனம்
பண்ணிக் கொண்டு சேவித்து இருந்தார் –

இப்படி இருக்கிற ஸ்ரீ உடையவர் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணும் முதலிகள்


ஸ்ரீ கூரத்தாழ்வானும் -ஸ்ரீ முதலியாண்டானும் -ஸ்ரீ நடாதூர் ஆழ்வானும் -ஸ்ரீ பட்ட வர்க்கமும் ஸ்ரீ
பாஷ்யத்துக்கு உசாத் துணையாக இருப்பார்கள் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவாராதனம் செய்து அருளுவார்
ஸ்ரீ கிடாம்பி பெருமாளும் ஸ்ரீ கிடாம்பி ஆச்சானும் திரு மடைப்பள்ளிக்கு கடவராய்
இருப்பார்கள்
ஸ்ரீ வடுக நம்பி எண்ணெய் காப்பு சாத்தி அருளுவார்
ஸ்ரீ கோமடத்து சிறி யாழ்வான் கலப்பானையையும் ஸ்ரீ பாத ரக்ஷையையும் எடுப்பர்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் கருவூலம் நோக்குவர்
அம்மங்கி அம்மாள் பால் அமுது காய்ச்சுவர்
ஸ்ரீ உக்கல் ஆழ்வான் பிரசாத காலம் எடுப்பர்
ஸ்ரீ உக்கல் அம்மாள் திருவால வட்டம் பரிமாறுவர்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான் திருக் கைச் செம்பு பிடிப்பர்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறி யாண்டான் திரு மடத்துக்கு அமுதுபடி கறியமுது
நெய்யமுது முதலானவை நடத்திப் போருவர்
ஸ்ரீ தூய முனி வேழம் திரு மஞ்சனம் எடுப்பர்
ஸ்ரீ திருவரங்க மாளிகையார் ஸ்ரீ பண்டாரம் நோக்குவார் –
ஸ்ரீ வண்டரும் சுண்டரும் கைக்காயிரம் பொன்னுக்கு ராஜ சேவை பண்ணி திரு மடத்துக்கு
திருக்கை வழக்காக்கி அருள்வார்கள்
ஸ்ரீ ராமானுஜ வேளைக்காரர் திரு மேனிக் காவலாய்ப் போருவர்
ஸ்ரீ அளங்க நாட்டாழ்வான் பிரதிபக்ஷ நிராசனம் பண்ணிப் போருவர் —

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .


ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
திருவடிகளே சரணம்-

You might also like