You are on page 1of 2

1.

 பழமொழி
ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப்
பூனை சுண்டாங்கி.

.தமிழ்விளக்கம்
அம்மை என்றால் தாய், பாட்டி. அம்மையார் என்றால் பாட்டிதான்.
அதாவது, அனுபவத்தில் பழுத்தவர். சுண்டாங்கி என்றால் கறியோடு
சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா.
அனுபவத்தில் பழுத்து ஆனையையே விழுங்கிக் காட்டிய
அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது கறியோடு சேர்த்த
மசாலாவை உண்பது போலத்தானே?

2.  பழமொழி
கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.

தமிழ்விளக்கம்
குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. பதக்கு, இரண்டு மரக்கால்.
ஒரே தடவையில் குறுணி நாழியில் பதக்கு நாழியளவு
நெல்லினை அளக்கமுடியுமா? கொட்டிக் கொட்டி அளந்தால்
முடியுமே என்று தோன்றலாம். அப்படியானால் பழமொழி தப்பா?
குறுணியில் கொட்டிக் கொட்டி பதக்கு அளவு அளக்கும்போது
பத்க்கால் கொட்டி அளந்தால் எவ்வளவு அளக்கலாம்? எனவே
சிறியோர் என்றும் பெரியோர் ஆகார் என்பது செய்தி.

3.  பழமொழி
ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க
முடியாது.

தமிழ்விளக்கம்
பட்டுக்கொள்ளலாம் என்ற பிரயோகம் இனிமை. அடி வாங்குதல்
இன்று வழக்கில் இருந்தாலும், பணிந்து அடி பட்டுக்கொள்ளுதல்
என்பதே சரியாகத் தொன்றுகிறது. வாங்குவதைத் திருப்பிக்
கொடுக்க முடியுமோ? அல்லது பெற்றுக் கொள்வது அடி என்றால்
அது ஒரு யாசகம் ஆகாதோ?

4.  பழமொழி
தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.

தமிழ்விளக்கம்
ஆசிரியர் கல்வி பயிற்றுவிக்கும்போது நடைமுறை
உதாரணங்களையும் உலக அனுபவங்களையும் விளக்கிக்
காட்டவேண்டும். அப்படி போதிக்கப்படாத கல்வியை உடலில்
சூடுபோட்டாலும் அந்த வடுவின் நினைவாக மனதில்
ஏற்றமுடியாது.
5.  பழமொழிஇத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்?

தமிழ்விளக்கம்
இந்தப் பழமொழி ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும்,
இதற்கு ஆன்மீ க வழியில் பொருள்கூறலாம். இத்தனை என்பது விரல்
அளவே உள்ள நம் ஆத்மா. அத்தனை என்பது இதுபோலப் பல
ஜீவாத்மாக்கள். இது போன்று விரல் அளவேயுள்ள ஜீவாத்மா
பரமாத்மா என்றால் பரமாத்மாவின் அளவு எத்தனை இருக்கும்
என்று வியப்பதாகக் கொள்ளலாம்.

You might also like