You are on page 1of 1

வின்சென்ட் வான்காக் தனது வாழ்நாளில், மனநோயால் பாதிக்கப்பட்டார், உறவுகளால்

தோல்வியடைந்தார், 37 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தனது வாழ்க்கையில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே விற்றார், ஒரு கலைஞராக அவர்
தோல்வியுற்றார். இருப்பினும் அது அவரது உற்சாகத்தையும் கலை மீதான ஆர்வத்தையும்
குறைக்கவில்லை.

அவர் இறந்து பல வருடங்கள் ஆன போதும் அவர் (பின்னை மனபதிவியல்வாதம்) போஸ்ட்


இம்ப்ரெஷனிசத்தின் உலகில் ஒரு முக்கிய நபராக அறியப்படுகிறார், இறுதியில், இதுவரை
வாழ்ந்த மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார்.

அவர் கலை வகுப்புகளில் ஒரு பரபரப்பான விஷயமாக மாறினார் என்பதையும், அவரது படம்
டிவி, புத்தகங்கள் மற்றும் பிரபலமான கலாச்சாரத்தின் பிற வடிவங்களில் பயன்படுத்தப்படப்
போவதையும் அவர் ஒருபோதும் அறிய மாட்டார்.

இந்த பெரிய, சோகமான மனிதனின் வார்த்தைகள் இதோ:

" 'உன்னால் வண்ணம் தீட்ட முடியாது' என்று உங்களுக்குள் ஒரு குரலைக் கேட்டால், எல்லா
வகையிலும் வண்ணம் தீட்ட வேண்டும், அந்தக் குரல் அமைதியாகிவிடும்."

You might also like