You are on page 1of 24

லாஇலாஹ இல்லல்லாஹ் அல்லாஹ் தான் வணங்குவதற்கு உரித்தான ஒரே இறைவனே தவிர

வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன் நிலைத்திருப்பவன்.

அலிஃப் லாம் மீம் அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்குரிய இறைவன். வேறு யாரும்
வணங்குவதற்கு தகுதியானவர் இல்லை. என்றென்றும் ஜீவித்திருக்கும் அந்த இணையற்ற
அல்லாஹ் வின் முன் அனைத்து முகங்களும் கவிழ்ந்து விடும்.

யா அல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ மிகவும்


தூய்மையானவன்.

தனித்தவனே, தேவையற்றவனே, அந்த மகத்தான அல்லாஹ் (ஜல்) யாரையும் பெறவுமில்லை,


அவன் யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை, எதுவுமில்லை.

கருணை புரிபவர்களுக்கெல்லாம் மகா கருணையாளனே - நிச்சயமாக நான்


அநியாயக்காரர்களில் ஆகிவிட்டேன். நாங்கள் எங்கள் ஆத்மாக்களுக்கு அநியாயம் செய்து
கொண்டோம். நீ எங்களை மன்னிக்காவிட்டால், அருள் புரியாவிட்டால் நாங்கள் மிகவும்
கஷ்டப்பட்டவர்களாகி விடுவோம்.

எங்கள் இரட்சகனே - எங்களை மன்னித்து விடு, எங்கள் பாவ மன்னிப்பை ஏற்று கொள்வாயாக
- நிச்சயமாக நீ பாவ மன்னிப்பை ஏற்பவனாகவும், அருள் பாலிப்பவனாகவும் இருக்கின்றாய்.

என் இறைவனே - என்னை மன்னித்தது விடு. கருணையாளனே - நீ எங்களுக்கு அருள்


புரிவாயாக. ஈடு இணையற்றவனே, மேன்மையானவனே, சங்கைமிக்கவனே - நீ அறிந்த
அனைத்திலும் எங்களுக்கு நன்மை செய்வாயாக, மற்றும் நல்லது செய்வாயாக. நீ அறிந்த
அனைத்திலும் நீ எங்களுக்கு பாதுகாவல் தருவாயாக மற்றும் நீ அறிந்த அனைத்து
தீயவைகளிலிருந்தும் நீயே எங்களுக்கு பாதுகாப்பு தந்து விடுவாயாக.

நிச்சசயமாக நீயே மிகவும் கண்ணியமுடையவனாகவும், சிறப்புடையவனாகவும் இருக்கின்றாய்.

யா அல்லாஹ் - இருதயங்களை திருப்பி வைப்பவனே - எங்கள் இருதயங்களை உன்


வணக்கத்தில் திருப்பி வைப்பாயாக. இருதயங்களை மாற்றி வைப்பவனே - எங்கள்
இருதயங்களை உன் சன்மார்க்கத்தின் பால் நிலைபடுத்தி வைப்பாயாக.

யா அல்லாஹ் - எங்களுடைய இருதயங்களும், எங்கள் அவயவங்களும், எங்கள் பக்க


வாட்டுக்கள் யாவும் உன் கையிலேயே இருக்கின்றன. அதிலிருந்து எதற்கும் நீ எங்களுக்கு
உரிமையளிக்க வில்லை. எனவே,எங்களுக்கு ஏதேனும் அவைகள் மூலம் நீ செய்ய நினைத்தால்,
நீயே எங்களுக்கு உதவியாளனாக ஆகி விடு.

யா ரப்பி - நேரான மற்றும் நேர்மையான பாதையில் எங்களுக்கு நேர்வழி காட்டியருள்வாயாக.


நேர்வழியை எப்போதும் பின்பற்றும் நற்பேற்றையும் தந்தருள்வாயாக. சத்தியத்தை எங்களுக்கு
சாத்தியமாகவே காட்டியருள்வாயாக. சத்தியத்தை பின்பற்றும் நற்பேற்றையும் எங்களுக்கு
தருவாயாக. அசத்தியத்தை அசத்தியமாகவே எங்களுக்கு காட்டுவாயாக. அவைகளை விட்டும்
ஒதுங்கிக்கொள்ளும் நற்பேற்றையும் தந்தருள்வாயாக. சத்தியத்தையும், நேரானவற்றையும்
எங்களுக்கு காண்பித்ததின் பின் நாங்கள் அவைகளிலிருந்து மாறுபடுவதை விட்டும், வழி
தவறுவதை விட்டும் நீயே எங்களை காப்பாற்றுவாயாக.

எங்கள் இறைவனே, உன்னுடைய அன்பையும் உனது ரசூலின் அன்பையும், எவர்களின் அன்பு


உன்னிடம் எங்களுக்கு நன்மை தருமோ அவர்களின் அன்பையும் எங்களுக்கு தருவாயாக.

ஜீவித்திருப்பவனே, நிலைத்திருப்பவனே -உன் கிருபையால் எங்களுக்கு அருள் புரிவாயாக. யா


ரஹ்மானே, உன்னிடமே உதவி தேடுகிறோம். உன்னிடமே மன்னிப்பு கேட்கிறோம். இறைவா, எங்கள்
பாவங்களை மன்னித்துவிடுவாயாக. இறைவா, எங்கள் அந்தஸ்து அனைத்தையும் சீர்திருத்தி
வைப்பாயாக.

யா ஹய்யு யா கையும் யாதல் ஜலாலி வல் இக்ராம் (ஜல்) - யா அல்லாஹ் , நீயே எனது நாயன்.
உன்னையன்றி வேறு நாயன் இல்லவே இல்லை. நீயே என்னைப்படைத்தாய். நான் உனது அடிமை.
உனக்கு நான் கொடுத்த உனது அறுதிமானத்திலும், நீ எனக்களித்த உனது வாக்குறுதியிலும்
நான் இயன்ற அளவு ஸ்திரமாக இருக்கிறேன். இறைவா, நான் செய்த அனைத்து பாவங்களை
விட்டும் உன்பால் மன்னிப்பு தேடுகிறேன். இறைவா நான் செய்த அனைத்து தீமைகளை விட்டும்
உன்பால் இரட்சிப்பு தேடுகிறேன்.

யா ரஹ்மானே, நீ என் மீது செய்த உன் அருட்கொடையை பற்றி உனக்கு, உண்மை என்று
ஊர்ஜிதம் செய்கிறேன். எனது பாவங்களுக்காக வருந்துகிறேன். இறைவா, எனக்கு பாவ
மன்னிப்பு அருள்வாயாக. உன்னையன்றி பாவங்களை மன்னிப்பவன் யாரும் இல்லை.

யா அல்லாஹ், கண்ணியம் மிக்கவனே, மேன்மையானவனே, நான் உனது அடிமை. உனது


அடியானின் மகன், உனது அடியாளின் மகன். உன் பிடியிலேயே, உன் கரத்திலேயே எனது
முன்நெற்றி உரோமம் இருக்கின்றது. உனது ஆட்சி என்னிலே நடந்து கொண்டும், உன் தீர்ப்பு
என்னிலே நியாயமாகவும் இருக்கின்றது.
யா அல்லாஹ், கண்ணியம் மிக்கவனே, மேன்மையானவனே, நீ உன் தனக்கு எது கொண்டு நீ
பெயர் வைத்துக்கொண்டாயோ, அல்லது உன் மறையில் எதை நீ இறக்கி வைத்துள்ளாயோ,
அல்லது உன் படைப்பில் நீ யாருக்கு எதை கற்றுக்கொடுத்திருக்கின்றாயோ, அல்லது உன்
அடியார்களில் நீ யாருக்கு எதை உதிப்பாக்கி கொடுத்திருக்கின்றாயோ, அல்லது உன்னிடமுள்ள
மறை பொருளிலே நீ எதைக்கொண்டு ஒன்றித்து தனித்து விட்டாயோ, அத்தகைய உனது
மேலான திரு நாமத்தின் பொருட்டால் எனது இதயத்தின் வசந்த காலமாகவும், எனது துக்கமும்,
துயரமும், தீரக்கூடியதாக திருக்குர்'ஆனை நீ எனக்கு பயன்படச் செய்யுமாறு உன்னிடம்
மன்றாடி இறைஞ்சுகிறேன்.

கண்ணியமானவனே, கருணைமிக்கவனே - நன்மை செய்தால் மகிழ்ச்சியும் தீமை செய்தால்


பாவ மன்னிப்பும் தேடுவார்களே அத்தகையவர்களுள் என்னையும், என் மனைவி மக்களையும்,
எங்கள் குடும்பத்தவர்களையும் சேர்த்தருள்வாயாக.

இறக்கமுடைய நாயனே - பலன் தரும் அறிவையும், அங்கீகரிக்கப்படும் அமல்களையும்,


கிரியைகளையும், ஹலாலான உணவையும், நேர்மையான செல்வத்தையும், ஏற்றுக்கொள்ளப்படும்
வேண்டுதலையும் எனக்கும், மனைவி மக்களுக்கும் தந்தருள் புரிவாயாக.

யா அல்லாஹ் - பாவ மன்னிப்பையும் என்னுடைய தீன் துன்யாவில் பாதுகாப்பையும் நான்


உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ் - நான் வெட்கப்படக்கூடிய சகல குற்றங்களையும் மறைத்து, நான்


அச்சப்படக்கூடிய சகல அச்சங்களையும் அச்சம் தீர்த்துவைப்பாயாக.

கண்ணியம் மிக்கவனே - எனக்கு முன் பக்கமும், பின்புறத்திலும், வலப்புறத்திலும்,


இடப்புறத்திலும், எனக்கு மேல்புறத்திலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக. எனக்கு
கீழால் பூகம்பம் ஏற்பட்டு நான் அழிந்திடாதிருக்க உன் கண்ணியம் கொண்டு உன்பால்
கார்மனம் தேடுகிறேன், பாதுகாவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ் - என் உடலில் சௌக்யத்தை தந்தருள்புரிவாயாக. எனது கேள்வியில்


சௌக்கியதையும், எனது பார்வையில் சௌக்யத்தையும் தந்தருள்புரிவாயாக. யா
அல்லாஹ் உன்னையன்றி வழிபட வேறு நாயன் இல்லவே இல்லை.

யா அல்லாஹ் - கண் இமைக்கும் நேரம் கூட எங்களை எங்கள் இச்சை (நப்ஸ்) களிடம்
ஒப்படைத்துவிடாதே.
யா அல்லாஹ் - நீ எங்களுக்கு இலேசாக்கி வைத்தவைகளை தவிர வேறு எதுவும்
எங்களுக்கு இலேசு கிடையாது. நீ நாடினால் எப்படிப்பட்ட கஷ்டத்தையும் இலேசாக்கி
விடுகின்றாய். எனவே எங்கள் கஷ்டங்களை நீக்கி சிரமங்கள் அனைத்தையும்
நீக்கிவிடுவாயாக.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் கிடையாது. அவன்


பொறுமையானவன். சிறப்பானவன். ஈடு இணைஇல்லாதவன், மிகவும் தூய்மையானவன்.
மகத்தான அர்ஷுக்கு அதிபதி.

எல்லாப்புகழும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.

யா அல்லாஹ் - உன்னுடைய அருளுக்குரிய அம்சங்கள் அனைத்தையும், உன்னிடமே


வேண்டுகிறோம். உன்னுடைய அருளுக்குரிய சாதனங்கள் அனைத்தையும், உன்னிடமே
வேண்டுகிறோம். உன் பாவ மன்னிப்பின் ஆதரவையும், எல்லா நற்காரியங்களில் உன்
சன்மானத்தையும், எல்லா பாவங்களிலிருந்தும் சலாமத்தையும் உன்னிடம் வேண்டுகிறேன்.

யா தவ்வாப் ஜல்ல ஜலாலுஹு - மிக்க மன்னிக்கின்றவனே - எங்களின் எந்த ஒரு


பாவத்தையும் நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே.

யா ரவூபுர் ரஹீம் (ஜல்) - மிகவும் இரக்கமுடையவனே - நிகரில்லா அன்புடையவனே -


எங்களின் எந்த கவலையையும் அதை நீ சந்தோஷமாக்காமல் விட்டு விடாதே.

இறைவா - உன்னுடைய பொருத்தமும், எங்களுக்கு நன்மையும், பிரயோஜனமும்


இருக்கக்கூடிய எந்த ஒரு தேவையையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே.

கிருபையாளர்களுக்கெல்லாம் மாபெரும் கிருபையாளனே - உன்னளவில் எங்களை


நேசமாக்கிவைப்பாயாக. எங்கள் உள்ளங்களில் உனக்கு பணிவை உண்டாக்கி வைப்பாயாக.

யா அல்லாஹ் - ஜனங்களின் பார்வையில் எங்களை கண்ணியமாகி வைப்பாயாக.

யா முஹைமின் (ஜல்) - பாதுகாவலனே - நரக நெருப்பை விட்டும், நரக வேதனையை


விட்டும், கப்ருடைய வேதனையை விட்டும், எங்களை காப்பாற்றுவாயாக. யா அல்லாஹ்
ஹராமான வஸ்துக்கள் எங்கள் வசம் வந்து சேர்வதை விட்டும் எங்களை
காப்பாற்றுவாயாக. இறைவா - ஹராமான காரியங்கள் எதுவும் செய்வதிலிருந்தும் மற்றும்
அனைத்து ஹராமான வற்றிலிருந்தும் எங்களையும், எங்கள் மனைவி மக்களையும்,
எங்கள் குடும்பத்தவர்களையும் காப்பாற்றுவாயாக.

யா முஹைமின் (ஜல்) - பாதுகாவலனே - உனது படைப்பினங்களில் காற்று, நீர், நெருப்பு


போன்றவற்றால் உண்டாகும் அனைத்து ஆபத்துக்கள், கஷ்டங்களிலிருந்து எங்களுக்கு
பாதுகாவல் தருவாயாக.

யா முஹைமின் (ஜல்) - பாதுகாவலனே - உயரத்திலிருந்து கீழே விழுதல், நீரில் மூழ்குதல்,


நெருப்பில் கரியுதல், பூகம்பம், மரம் செடி கொடிகளிலிருந்து உண்டாகும் ஆபத்துக்கள்,
கஷ்டங்களிலிருந்து எங்களுக்கு பாதுகாவல் தருவாயாக.

இறைவா - விஷ ஜந்துக்கள், விஷ பிராணிகள், வன விலங்குகள், மிருகங்கள், மற்றும்


உனது படைப்பிணங்களிலிருந்து வரும், ஆபத்துக்கள், தீமைகளை விட்டும் எப்போதும் நீ
எங்களை காப்பாற்றுவாயாக.

யா அல்லாஹ் - வயோதிகம், முதுமை, கொடிய நோய்கள், பைத்தியம், குஷ்டம்,


உறுப்புக்கள் அழுகும் நோய், உள் உறுப்புக்களில் உண்டாகும் அனைத்து நோய்களை விட்டும்
எங்களை காப்பற்றுவாயாக. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறில்லை.

யா மானிஃ (ஜல்) - தடுத்தது காப்பவனே - உனது படைப்பினங்களி லிருந்து உண்டாககூடிய


சகல தீங்குகளிலிருந்தும் எங்களை தடுத்து காத்தருள்புரிவாயாக.

யா ஹாதி (ஜல்) - நேர்வழி காட்டுபவனே - நல்ல குணங்களில் எங்களை நிலைப்படுத்தி


வைப்பாயாக. எங்கள் விரோதிகள் மீதும் உன்னுடைய விரோதிகள் மீதும் எங்களுக்கு
சாதகமான உதவிகளை செய்தருள்வாயாக.

எங்கள் இறைவனே - எங்களுக்கு சாதகமாக உதவி செய். எங்களுக்கு பாதகமாக உதவி


செய்யாதே. எங்களுக்கு ஆதரவாக உதவி செய்வாயாக.

எங்கள் இறைவனே - எங்களுக்கு அபிவிருத்தியை கொடு. எங்களுக்கு நஷ்டத்தை


கொடுக்காதே. எங்கள் மீது இரக்கம் கொள்ளாதவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே. யா
அல்லாஹ் - இஸ்லாத்திற்காக எங்கள் இருதயங்களை விசாலமாகி வைப்பாயாக. எங்கள்
இறைவனே - ஈமானை எங்களை பிரியமானதாக ஆக்கி வைப்பாயாக. எங்கள்
உள்ளங்களில் ஈமானை அலங்கரித்து வைப்பாயாக. குப்ர் எனும் இணைவைத்தலையும்,
அனைத்து பாவங்களையும் எங்களுக்கு வெறுப்பானதாக ஆக்கி வைப்பாயாக. எங்கள்
இறைவனே - எங்களை உத்தமர்களில் ஆக்கி வைப்பாயாக.

என் இரட்சகனே - நான் உன்னையே எனக்கு உத்திரவு பிறப்பிக்கக்கூடியவனாக


ஆக்கிக்கொண்டேன். ஆகையால், நான் முன் பின் செய்த பாவங்கள், பாவச்செயல்கள்
மற்றும் நான் செய்த குற்றங்கள் அனைத்தையும் என்னை விட நீயே நன்கு அறிந்தவன்.
எனவே, எனது குற்றங்களை மறைத்து, தீமைகளை அகற்றி, பாவங்களை மன்னித்து
அருள் புரிவாயாக.

யா அல்லாஹ் (ஜல்) - கோழைத்தனம் உண்டாவதைவிட்டும், உலோபி குணத்தைவிட்டும்,


உன்னிடம் கார்மானம் தேடுகிறேன். மேலும் நான் முதிர்ந்த வயதை அடைந்து
கஷ்டப்படாமலும், உலக சோதனைகள் அனைத்தை விட்டும், கப்ருடைய வேதனைகளை
விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ் - நான் உன்னை திக்ர் செய்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நீ


எனக்கு உதவி புரிவாயாக.

இரட்சகா - உன்பால் எனக்குள்ள தேவை உனது மன்னிப்பும், என்னைப்பற்றி வெறுப்பின்றி நீ


என்மீது விருப்பம் கொள்வதும், வழிகேடில்லாத நேர்வழியும், அழகிய முடிவும், எரியும்
நரகிலிருந்து மீட்சியும், மேலான சுவர்க்க வாழ்வும், எந்த தடையும் இல்லாமல் உனது
சங்கையான திருமுகத்தை பார்ப்பதுமாகும். மேலும் உலகத்தவர் என்னை
மண்ணறைக்குள் மறைத்துவிட்டு அகன்ற வேளையில், நீ என்னை நினைப்பதும், நீ என்
மேல் கருணைபுரிவதுமாகும், உன்னருள் என்மீது பொழிவதுமாகும்.
யா அல்லாஹ் - ஒரு சிறு அளவு இணை வைப்பதை விட்டும், பித்அத் அனைத்தையும்
விட்டும், உனக்கு விருப்பமற்றவைகள் அனைத்தைவிட்டும், நீ விலக்கியவைகள்
அனைத்தை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக.

யா அல்லாஹ் - எப்போதும் எங்கள் தேவைகள் யாவையும் உன்னிடமே கேட்டுப்பெற்று


உனக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களாக எங்களையும், எங்கள் சந்ததியினரையும்
ஆக்கியருள் புரிவாயாக.

யா ரஹ்மானே - சுவனத்தில் எங்களுக்கு சுவனத்தை தந்து, எங்களின் அந்தஸ்தை


உயர்வாக்கி வைப்பாயாக.

யாஅல்லாஹ்! உன்னுடைய தூதர், எங்களின் வழிகாட்டி பிரியம் மிக்க நபி முஹம்மது


(ஸல்) அவர்கள் கேட்ட அனைத்து நல்லவற்றையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும்
உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய அனைத்து தீமைகளை
விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். உதவி செய்பவனும் நீயே,
வழிகாட்டுபவனும் நீயே. அல்லாஹ் (விதித்தவற்றிலிருந்து) விலகவோ, (விதிக்காதவற்றை
செய்ய) சக்தி பெறவோ அவன் துணையின்றி முடியாது.

யா அல்லாஹ் சுவனத்தில் ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் மேலான உயர்ந்த சுவனத்தை


எங்களுக்கும், எங்கள் தாய், தந்தைக்கும், எங்கள் சந்ததியினருக்கும் தந்தருள்வாயாக.
எங்கள் சந்ததிகள் அனைவரும் ஈமானில் பரிபூரணம் பெற்றவர்களாகவும், எங்களுக்காக
துஆ செய்யக்கூடியவர்களாகவும், ஸாலிஹான நல்ல குணங்களை பெற்றவர்களாகவும்
ஆக்கியருள்வாயாக.

யா அல்லாஹ் நீ எனக்கருளிய சௌபாக்கியங்களும், ஆரோக்யமும் என்னை விட்டும்


போய் விடுவதை விட்டும் உன்னை கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ் திடீரென வரும் உன் வேதனையை விட்டும் உன்னுடைய எல்லாக் கோபத்தை


விட்டும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ் மரண நேரத்தில் ஷைத்தான் என்னை ஏமாற்றி தவற செய்வதை விட்டும்


உன்னிடம் காவல் தேடுகிறேன்.
யா அல்லாஹ் - இழுக்களவில் கொண்டு சேர்க்கும்படியான பேராசையை விட்டும்
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ் - கெட்ட குணங்கள், கெட்ட செயல்கள், கெட்ட நோய்கள், கெட்ட


மேலெண்ணங்கள், கெட்ட ஆசைகள், பேராசைகள், கெட்ட பார்வை, கெட்ட கேள்வி,
கெட்ட பேச்சு போன்ற அனைத்து கெட்டவைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல்
தேடுகிறேன்.

யா அல்லாஹ் - கடன் அதிகரிப்பதை விட்டும், எதிரிகளின் ஆதிக்கத்தை விட்டும்,


எங்களுக்கு ஏற்படும் தங்கடங்கள் மீது எதிரிகள் சந்தோஷமடைவதை விட்டும் உன்னிடம்
நான் பாதுகாவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ் - என் காரியங்களுடைய பாதுகாப்பிருக்கும்படியான எனது மார்க்கத்தை


சீர்படுத்துவாயாக. எனது பிழைப்பிருக்கும் படியான எனது துன்யா வாழ்வையும்
சீர்படுத்துவாயாக. நான் திரும்பச் செல்லவிருக்கின்ற எனது மறுவுலக வாழ்வையும்
சீர்படுத்துவாயாக.

இறைவா - எல்லா நன்மையான காரியங்களையும் அதிகம் செய்யுக்கும்படியான


வாழ்கையாக எனது வாழ்கையை அமைத்துவைப்பாயாக. எல்லா தீங்குகளை விட்டும்
நிவர்த்தியாவதாக எனது மரணத்தை அமைத்துவைப்பாயாக.

என்னை படைத்தவனே - எங்களுக்கு ஆதரவாக உதவி செய். எங்களுக்கு பாதகமாக


உதவி செய்யாதே. எங்களுக்கு சாதகமாக ஆதரவளி. எங்களுக்கு பாதகமாக
ஆதரவளிக்காதே.

யா அல்லாஹ் - எனக்கு நேர்வழி காட்டி அவ்வழியின் பாதையை இலேசாக்கி


தந்தருள்வாயாக. யா அல்லாஹ் - எனக்கு நேர்வழி காட்டியதன் பின் அதிலிருந்து வழி
தவறுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ் என் சிறப்பை உயர்த்துவாயாக. என் பாவத்தை விட்டுவிடுவாயாக. என்


உள்ளத்தை தூய்மை படுத்துவாயாக. என் மர்மஸ்தலங்களைப் பாதுகாப்பாயாக. யா
அல்லாஹ் - என்னுடைய கேள்வி, பார்வை, ஆத்மா, தோற்றம், குணம் எல்லாவற்றிலும்
பரக்கத் செய்வாயாக.
யா அல்லாஹ் - பலாய் முஸீபத் அனைத்தை விட்டும், எங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களின்
மீது எதிரிகள் சந்தோஷப்படுவதை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

உள்ளங்களை புரட்டக்கூடியவனே - என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைக்க


செய்வாயாக.

யா அல்லாஹ் - உன்னுடைய ரஹ்மத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையானவற்றை


எல்லாம் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய மன்னிப்பு கிடைப்பதற்குள்ள மன உறுதியை
உன்னிடம் கேட்கின்றேன். எல்லா நல்லவைகளையும் நிரப்பமாக தந்து, எல்லா தீங்குகளை
விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக. யா அல்லாஹ் - சுவர்க்கம் கிடைத்து வெற்றி பெற
செய்து, நரகத்தை விட்டும் பாதுகாத்து காப்பாற்றி விடுவாயாக.

யா அல்லாஹ் - சுவர்க்கம் கிடைத்து வெற்றி பெற்றவர்களாவும் நரகத்தை விட்டும்


தப்பியவர்களாகவும் எங்களை ஆக்குவாயாக.

யா அல்லாஹ் - என் கல்பிற்கு நீ நேர்வழி காட்டும்படியான ரஹ்மத்தை உன்னிடம்


கேட்கிறேன். சிதறுன்று கிடக்கின்ற என் காரியங்களை நீ ஒன்று சேர்க்கும்படியான
ரஹ்மத்தை உன்னிடம் கேட்கிறேன். என்னிடமிருந்து மறைந்துபோனவற்றை நீ
பாதுகாக்கும் ya படியான ரஹ்மத்தை உன்னிடம் உன்னிடம் கேற்றுகின்றேன். என் முன்
உள்ளவைகளை நீ உன்னிடத்தில் உயர்தத
் ிக்கொள்ளும்படியான ரஹ்மத்தை உன்னிடம்
கேட்கிறேன்.

யா அல்லாஹ் - நீ எந்த ரஹ்மத்தால் என் முகத்தை வெண்மையாக்குவாயோ அந்த


ரஹ்மத்தை உன்னிடம் கேட்கின்றேன். என்னுடைய அறிவை நீ தூய்மையாக்கும்படியான
ரஹ்மத்தை உன்னிடம் கேட்கின்றேன்.

யா அல்லாஹ் - நீ எனக்கு நேர்வழி காட்டி என்னைவிட்டும் பித்னாக்களை தட்டும்படியான


ரஹ்மத்தை உன்னிடம் கேட்கின்றேன்.

யா அல்லாஹ் - எல்லா கெட்ட காரியங்களை விட்டும் நீ என்னை பாதுகாக்கும்படியான


ரஹ்மத்தை உன்னிடம் கேட்கின்றேன்.

யா அல்லாஹ் நீ விலக்கிய அனைத்தை விட்டும் நீ என்னை பாதுகாக்கும்படியான


ரஹ்மத்தை உன்னிடம் கேட்கின்றேன்.
யா அல்லாஹ் - தீர்ப்பு நாளில் வெற்றியையும், நபிமார்கள், ஷுகத்தாக்கள்
இருப்பிடத்தையும், உன் நன்நேசர்களின் நல்ல வாழ்வையும், நபிமார்களின்
தோழமையையும், நிறைவான, நிம்மதியான உன் அருள் பெற்ற நல்வாழ்வையும்
தந்தருள்வாயாக.

யா அல்லாஹ் - எதிரிகளுக்கு கேடாக எங்களுக்கு வெற்றியையும், உன்னுடைய


விரோதிகள், மற்றும் எங்களின் விரோதிகளுக்கு எதிராக உன்னருள் கொண்டு
எங்களுக்கு வெற்றியை தந்தருள்புரிவாயாக.

யா அல்லாஹ் - என்னுடைய பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறாய். என்னுடைய


ரகசியத்தையும், பரகசியத்தையும் அறிந்தவனாக இருக்கிறாய். நானோ, உன்னுடைய
தேவையுடையவனாக இருக்கிறேன்.

இறைவா - மிகவும் அஞ்சி பயந்து நான் செய்த பாவங்களை மனமார


ஒப்புக்கொண்டவனாக உன்னிடம் மன்றாடி கேட்கின்றேன். என் சிரசை உனக்காக
தாழ்தத
் ி, உன்னை ஸுஜூத் செய்தவனாக, உன்னிடம் என்னை அர்ப்பணித்தவனாக
உன்னிடம் இறைஞ்சுகிறேன். இறைவா - என் துவாவை ஏற்று எனக்கு நல்லருள் புரிவாயாக.

ஸலவாத்தும், ஸலாமும் எங்கள் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தார்,


தோழர்கள், அனைவர் மீதும் உண்டாவதாகவும்.

ஆமீன் - ஆமீன் - சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஸ்ஸதி அம்மா எசிபூன், வஸ்ஸலாமுன் அலல்
முர்சலீன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

================================================================
===============================

இறைவா - நரகின் சோதனை, நரக வேதனை, கப்ரின் சோதனை, கப்ரின் வேதனை,


செல்வத்தின் சோதனையின் தீயவிளைவு, வறுமையின் சோதனையின் தீயவிளைவு
ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
இறைவா - மஸீஹுத் தஜ்ஜாலுடைய சோதனையின் தீயவிளைவுகளை விட்டும்
நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இறைவா - பனிக் கட்டி மற்றும் பனித்துளி நீரால் என் உள்ளத்தை கழுவி விடுவாயாக .
வெண்மையான துணியை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்துவதைப் போல் என்
உள்ளத்தை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக . கிழக்கிற்கும் மேற்கிற்கும் நீ
ஏற்படுத்தி யுள்ள தூரத்தைப் போல எனக்கும் என் பாவங்களுக்கும் மத்தியில் தூரத்தை
ஏற்படுத்துவாயாக.

இறைவா - சோம்பல், பாவச்செயல், மற்றும் கடன் ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான்


உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ் - இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம்,


கப்ரின் வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை ஆகியவைகளை விட்டும்
நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ் - கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத் தகாதவை ஏற்படுவதை


விட்டும், தீயமுடிவுகளை விட்டும், விரோதிகளின் கேளி, கிண்டல்களை விட்டும்
நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீர்படுத்து வாயாக! ஏனெனில்


அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்து வாயாக! ஏனெனில் அதுதான்
நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்து வாயாக! ஏனெனில் அதுதான் நான்
திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு
வாய்ப்பளிப்பாயாக!

யாஅல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும் பத்தினித் தனத்தையும் (பிறரிடம்)


தேவையற்ற நிலையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் உனது அச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனை


தூய்மைப்படுத்துவாயாக! நீதான் அதனைத் தூய்மைப் படுத்துவோரில் மிகச்
சிறந்தவன். நீயே அதன் பொறுப்பாளன். நீயே அதன் தலைவனுமாவாய்.
யாஅல்லாஹ்! பயனளிக்காத கல்வியைவிட்டும் (உனக்கு) பயப்படாத உள்ளத்தை விட்டும்
நிறைவடையாத மனதை விட்டும் பதிலளிக்கப்படாத பிரார்த்தனையை விட்டும்
நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! அதில் உறுதியாக நிற்கச்


செய்வாயாக! யாஅல்லாஹ்! நேர்வழியையும் அதில் உறுதியாக நிற்பதையும் நிச்சயமாக
நான் உன்னிடம் கேட்கிறேன்.

யாஅல்லாஹ்! உனது அருட்கொடைகள் (என்னை விட்டு) நீங்குவதை விட்டும்


ஆரோக்கியத் தன்மை (என்னைவிட்டு) மாறுவதை விட்டும் உனது திடீர் தண்டனையை
விட்டும் உனது அனைத்துக் கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம்
பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! நான் செய்தவைகளின் தீயவிளைவை விட்டும் நான் செய்யாதவற்றின்


தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! எனக்கு செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும்


எனக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக!

வணக்கத்திற்குரியவன் மகத்தான, கணிவான அல்லாஹ்வைத் தவிர வேறு


யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் மேன்மைமிக்க, அர்ஷின் அதிபதியான
அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. வணக்கத்திற்குரியவன் வானங்கள், பூமி
மற்றும் கண்ணியத்திற்குரிய அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு
யாருமில்லை.

யாஅல்லாஹ்! நான் உனது அருளையே ஆதரவு வைத்துள்ளேன். (அதனை) கண்


மூடித்திறக்கும் அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!.
மேலும் என்னுடைய அனைத்து காரியங்களையும் சீர்படுத்துவாயாக!
வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை. உனது அடிமை மற்றும் உனது அடிமைப்
பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது
சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்பபு
் வழங்குகிறாய். உனக்கு
நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில்
ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே
தேர்நதெ
் டுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால்
கேட்கிறேன். (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாக,
நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக, துன்பத்தை போக்கக் கூடியதாக
ஆக்குவாயாக!

யாஅல்லாஹ்! உள்ளங்களை திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது


வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக

யாஅல்லாஹ்! இவ்வுலகிலும் மறுவுலகிலும் உன்னிடம் நலவைக் கேட்கிறேன்

யாஅல்லாஹ்! என்னுடைய அனைத்து காரியங்களின் முடிவுகளையும் சிறந்ததாக


ஆக்குவாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும்
என்னை பாதுகாப்பாயாக!

யாஅல்லாஹ்! எனக்கு கிருபைசெய்வாயாக! எனக்கு பாதகமாக கிருபை


செய்யாதிருப்பாயாக! எனக்கு உதவி செய்வாயாக! எனக்கு பாதகமாக உதவி
செய்யாதிருப்பாயாக! எனக்காக சூழ்ச்சி செய்வாயாக! எனக்கு பாதகமாக சூழ்ச்சி
செய்யாதிருப்பாயாக! எனக்கு நேர்வழியை காட்டுவாயாக! நேர்வழியை எனக்கு
எளிதாக்குவாயாக! எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்கு
உதவிசெய்வாயாக! உனக்கு நன்றி செலுத்துபவனாக, உன்னை நினைவு கூர்பவனாக,
உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு வழிப்படுபவனாக, கட்டுப்படுபவனாக,
அடிபணிபவனாக, சரணடைபவனாக என்னை ஆக்குவாயாக! இறைவா! எனது
பாமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! எனது பாவங்களை போக்கிடுவாயாக! எனது
பிரார்தத
் னைக்கு பதிலளிப்பாயாக! எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக!
எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை பலப்படுத்துவாயாக! எனது
உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக!

யாஅல்லாஹ்! உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்ட அனைத்து


நல்லவற்றையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்)
அவர்கள் பாதுகாவல் தேடிய அனைத்து தீமைகளை விட்டும் நான் உன்னிடம்
பாதுகாப்புத் தேடுகிறேன். உதவி செய்பவனும் நீயே! வழிகாட்டுபவனும் நீயே! அல்லாஹ்
(விதித்தவற்றிலிருந்து) விலகவோ, (விதிக்காதவற்றை செய்ய) சக்தி பெறவோ அவன்
துணையின்றி முடியாது.

யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும் பார்வையின் தீங்கை விட்டும்


நாவின் தீங்கைவிட்டும் உள்ளத்தின் தீங்கைவிட்டும் எண்ணத்தின் தீங்கைவிட்டும்
நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

யாஅல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற


தீயநோய்கள் ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், கெட்ட ஆசைகள்


ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். கண்ணியத்திற்குரியவன். மன்னிப்பை


விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! நான் நல்லறங்களை செய்ய, தீமைகளை விட்டுவிட, ஏழை களை நேசிக்க


அருள்புரியுமாறும், என்னை நீ மன்னித்து, கிருபை செய்யுமாறும், நீ ஏதேனும் ஒரு
சமூகத்தினரை சோதிக்க நினைத்தால் அச்சோதனைக் குள்ளாக்கப்படாதவனாக என்
உயிரைக் கைப்பற்றி விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். உனது நேசத்தையும் நீ
நேசிப்போரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் செயல்களை
நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.

யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும்


இவ்வுலகிலும் மறுவுலகிலும் (தருமாறு) உன்னிடம் கேட்கிறேன். நான் அறிந்திருக்கின்ற
மற்றும் அறியாத அனைத்து தீமைகளை விட்டும் இவ்லகிலும் மறுவுலகிலும் உன்னிடம்
பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்டைய அடியாரும்; நபியுமாகிய (முஹம்மது-
ஸல்-) அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம்
கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய (முஹம்மது-ஸல்) அவர்கள் பாதுகாவல்
தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும்
செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன்
பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்து தீர்பபு
் களையும்
(ஏற்பாடுகளையும்) எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.

யாஅல்லாஹ்! நான் நிற்கும்போதும் உட்காரும் போதும் படுக்கும் போதும் இஸ்லாத்தைப்


பேணி நடப்பவனாக என்னை நீ ஆக்குவாயாக! மேலும் என்னை விரோதி மற்றும்
பொறாமைக்காரனின் பரிகாசத்திற்கு ஆட்படுத்தா திருப்பாயாக! யாஅல்லாஹ்!
உன்னிடமுள்ள அனைத்து நல்ல பொக்கிஷங்களிலிருந்தும் (எனக்கு தருமாரு) நான்
உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னிடமுள்ள அனைத்து தீய பொக்கிஷங்களிலிருந்தும்
நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! உனக்கு மாறுசெய்வதை விட்டும் எங்களை தடுக்கக் கூடிய (உன்னைப்


பற்றிய) அச்சத்தையும் உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத்தரும் வழிபாட்டையும் உலக
சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தருவாயாக!

இறைவா! எங்களுடைய செவிப் புலன்களையும் பார்வைகளையும் (உடல்) சக்திகளையும்


நீ எங்களை வாழவைக்கும்வரை (குறையின்றி) இயங்கச் செய்வாயாக! அதனை எங்கள்
வாரிசுகளுக்கும் ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி
வாங்குவாயாக! எங்கள் மீது விரோதம் கொண்டவர்களுக்கு பாதகமாக எங்களுக்கு நீ
உதவிசெய்வாயாக! எங்களுடைய மார்கக
் த்தில் எங்களுக்கு சோதனைகளை
ஏற்படுத்தாதிருப்பாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாவும் எங்கள் அறிவின்
எல்லையாகவும் ஆக்காதிருப்பாயாக! எங்கள் மீது இரக்கம் காட்டாதவரை எங்கள்
பொருப்பாளியாக ஆக்கா திருப்பாயாக!

யாஅல்லாஹ்! கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமைவரை என்னுடைய ஆயுட்காலம்


நீடித்தல், உலகசோதனை, கப்ரின் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான்
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்த


தவறுகளையும் என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீ
மன்னித்தருள்வாயாக! இவைகளைப் பற்றி என்னைவிட நீயே நன்கறிந்தவன்.
யாஅல்லாஹ்! நான் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ
செய்தவைகளையும் மேலும் என்னிடம் நிகழ்ந்த அனைத்து -பாவங்களையும்- மன்னித்
தருள்வாயாக!
யாஅல்லாஹ்! நான் உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்
மீதே உறுதி கொண்டுள்ளேன். உன்பக்கமே மீண்டுள்ளேன். உன்னிடமே முறையிடுகிறேன்.
யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறுயாருமில்லை. உன்னுடைய
கண்ணியத்தின் பொருட்டால் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன், என்னை நீ
வழிதவறச் செய்யாதிருப்பாயாக! நீயே மரணிக்காத நித்திய ஜீவன்;. மனித, ஜின்
இனத்தினர் மரணித்துவிடுவர்.

யாஅல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும் உனது மன்னிப்பில் உறுதி


கொள்ளும் நிலையையும் அனைத்து பாவங்களை விட்டு பாதுகாப்பையும் அனைத்து
நல்லறங்களின் பிறதி பலன்களையும் சொர்க்கத்தைப் பெற்று வெற்றி பெறவும் நரகை
விட்டும் ஈடேற்றம் பெறவும் (அருள்புரியுமாறு) நிச்சயமாக நாங்கள் உன்னிடம்
கேட்கின்றோம்.

யாஅல்லாஹ்! எனது முதுமைப் பருவத்திலும் எனது ஆயுள் முடியும் நிலையிலும்


உன்னுடைய அருட் கொடைகளை (ரிஸ்கை) எனக்கு விசாலப்படுத்துவாயாக!

யாஅல்லாஹ்! உன்னுடைய தயாளத் தன்மையிலிருந்தும் உன்னுடைய அருளிலிருந்தும்


நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். ஏனெனில் இவைகளை உன்னைத் தவிர வேறு
எவரும் சொந்தம் கொள்ள முடியாது.

யாஅல்லாஹ்! உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ


இறப்பதை விட்டும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும்,
உன்னுடைய பாதையில் (போர் செய்யும்போது) புறமுதுகு காட்டிஓடி இறப்பதை விட்டும்,
(விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம்
பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! பசியை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


ஏனெனில் நிச்சயமாக அது மனிதனை கீழே சாய்ப்பதில் மிகவும் தீயது. மேலும் மோசடி
செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது
மிகக்கொடிய நம்பிக்கை துரோகமாகும்
யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம்;, கஞ்சத்தனம், முதுமை,
கல்நெஞ்சம், பொடுபோக்கு, கஷ்டம், இழிவு, ஏழ்மை ஆகியவைகளை விட்டும் வறுமை,
நிராகரித்தல், பாவச்செயல், பிரிவை ஏற்படுத்துதல், நயவஞ் சகத்தனம், பிறர்
போற்றவேண்டும் என்பதற்காகச் செயல் படல், பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகச்
செயல்படல் -முகஸ்த்துதி- ஆகியவைகளை விட்டும், செவிடு, ஊமை, பைத்தியம்,
உடலுறுப்புக்கள் அழுகி விழும்நோய், வெண் குஷ்டம் மற்றும் கெட்ட அனைத்து
நோய்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இறைவா! வறுமை, ஏழ்மை, இழிவு ஆகியவற்றை விட்டும் நான் பிறருக்கு அநீதம்


செய்வதை விட்டும் பிறரின் அநீதிக்கு ஆளாவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம்
பாதுகாப்புத்தேடுகிறேன்

இறைவா! (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான்
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அண்டை வீட்டார்
திசைமாறச் செய்து விடுவார்கள்.

யாஅல்லாஹ்! (உனக்குப்) பயப்படாத உள்ளம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்தத


் னை,
நிறைவடையாத மனம், பயனளிக்காத கல்வி ஆகிய இந்த நான்கு தன்மைகளை
விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம்; பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! பகலில் ஏற்படும் தீங்கை விட்டும் இரவில் ஏற்படும் தீங்கை விட்டும் தீங்கு
ஏற்படும் நேரத்தை விட்டும் தீய நண்பர்களை விட்டும் மற்றும் (நான்) வசிக்கும் இடத்தில்
தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறேன். மேலும் நரகத்தை


விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
யாஅல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதை விட்டும் நிச்சயமாக
நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம்
பாவமன்னிப்பு கேட்கிறேன்.
யாஅல்லாஹ்! எனக்கு நீ கற்றுக் கொடுத்தவற்றை எனக்கு பயனுள்ளதாக
ஆக்கிவைப்பாயாக! எனக்கு பயனளிப்பவற்றையே கற்றுத் தருவாயாக! மேலும்
என்னுடைய கல்வியை அதிகப்படுத்துவாயாக!

யாஅல்லாஹ்! பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும்


ஏற்றுக்கொள்ளப்படும் நல்லறத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

யாஅல்லாஹ்! நிச்சயமாக நீ தனித்தவன். ஒருவன், தேவையற்றவன். யாரையும்


பெற்றெடுக்காதவன். யாராலும் பெறப்படாதவன். யாராலும் நிகராக முடியாதவன்.
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னுடைய பொருட்டால் கேட்கின்றேன் என்னுடைய
பாவங்களை மன்னித்து விடுவாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனாகவும் கிருபை
செய்பவனாகவும் உள்ளாய்.

யாஅல்லாஹ்! நிச்சயமாக புகழனைத்தும் உனக்குரியதே! உன்னைத் தவிர


வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தனித்தவன், இணையற்றவன்.
கொடையாளன். வானங்களை யும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே!
வல்லமை மிக்கவனே! கண்ணியத்திற்குரியவனே! நித்தியஜீவனே! நிரந்தர மானவனே!
நிச்சயமாக நான் உன்னுடைய பொருட்டால் சொர்க்கத்தைக் கேட்கிறேன், மேலும்
நரகைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! என்னுடைய பாவ மன்னிப்பை ஏற்றுக்


கொள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்றுக்கொள்பவனும்
மன்னிப்பவனுமாவாய்.

யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே இறைவன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர


வேறு யாருமில்லை. நீதனித்தவன். தேவையற்றவன். யாரையும் பெற்றெடுக்காதவன்.
யாராலும் பெறப்படாதவன். யாராலும் நிகராக முடியாதவன் என்று நான் சாட்சி
கூறியதின் பொருட்டால் நான் உன்னிடம் (என் தேவைகளைக்) கேட்கிறேன்.

இறைவா! நான் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் உன்னைப் பயப்படவும் விருப்பிலும்


வெறுப்பிலும் உண்மையைப் பேசவும் வறுமையிலும் செழிப்பிலும் நடுநிலையையும் நான்
உன்னிடம் கேட்கிறேன். மேலும் முடிந்துவிடாத அருட்கொடையையும் விடைபெறாத கண்
குளிச்சியையும் விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும்
மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும்
வழி கேட்டின் குழப்பத்திலும் தீயவிளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டு விடாது உன்னை
சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் இன்பத்தையும் உன்னிடம்
கேட் கிறேன். யாஅல்லாஹ்! ஈமானின் பொலிவூட்டும் தன்மைகளைக் கொண்டு
எங்களை அலங்கரிப்பாயாக! எங்களை நேர்வழி பெற்றோரின் வழியில் ஆக்குவாயாக!
யாஅல்லாஹ்! எனக்கு உன்னுடைய நேசத்தையும் நான் யாரை நேசித்தால் உனது
நேசத்திற்குரியவனாக ஆக முடியுமோ அவரின் நேசத்தையும் எனக்குத் தந்தருள்
புரிவாயாக!. யாஅல்லாஹ்! நான் விரும்பியதை நீ எனக்கு தந்துள்ளாய். எனவே நீ
விரும்பும் செயல்களில் நான் ஈடுபட எனக்கு சக்தியூட்டக் கூடியதாக அதனை
ஆக்குவாயாக! யாஅல்லாஹ்! நான் விரும்பிதை நீ என்னை விட்டும் தடுத்துவிட்டாய்.
எனவே நீ விரும்பும் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பாக அந்த இடைவெளியை எனக்கு
ஆக்குவாயாக!

யாஅல்லாஹ்! பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்


படுத்துவாயாக! யாஅல்லாஹ்! அழுக்கிலிருந்து வெள்ளைத் துணியைத் தூய்மைப்
படுத்தப்படுவதைப் போல் என்னை இவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!
யாஅல்லாஹ்! பனிக்கட்டி, பனித்துளி, குளிர்ந்த நீர் ஆகியவைகளைக் கொண்டு
என்னை தூய்மைப் படுத்துவாயாக!

யாஅல்லாஹ்! கஞ்சத்தனம், கோழைத்தனம், முதுமை, மனக் குழப்பம், மண்ணரை


வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவா! நரக வெப்பம்


மற்றும் மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! மேலும் என்னுடைய மனதின்


தீங்கிலிருந்து என்னைபாதுகாப்பாயாக!
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன். மேலும்
பயனளிக்காத கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! ஏழு வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின்


இறைவனே! எங்கள் இறைவனே! அனைத்துப் பொருட்களின் இறைவனே! விதையையும்
வித்துவையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை
இறக்கியவனே! அனைத்துத் தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஏனெனில் அவற்றின் நெற்றிப்பிடி உன் ஆதிக்கத்தில்தான் உள்ளது. யாஅல்லாஹ்! நீயே
ஆரம்பமானவன் உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே கடைசியானவன். உனக்கு பின்பு
எதுவுமில்லை. நீயே மிகைப்பவன். உனக்குமேல் எதுவுமில்லை. நீயே மறைவானவன்.
உனக்கு மறைவானது எதுவுமில்லை. எங்களுடைய கடனை நிறைவேற்றுவாயாக! மேலும்
ஏழ்மையை விட்டும் (பாதுகாத்து, பிறர்) தேவையற்றவர்களாக ஆக்குவாயாக!

யாஅல்லாஹ்! எங்கள் உள்ளங்களை இணைப்பாயாக! எங்களுக்கு மத்தியில் (நட்பை)


சீர்படுத்துவாயாக! வெற்றிக்குரிய வழிகளை எங்களுக்கு காட்டு வாயாக!
இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் எங்களுக்கு ஈடேற்றம் அளிப்பாயாக!
வெளிப்படையான, அந்தரங்கமான அனைத்து மானக்கேடான விஷயங்களை விட்டும்
எங்களை நீ பாதுகாப்பாயாக! எங்கள் செவிப்புலன்கள், பார்வைகள், உள்ளங்கள்,
மனைவியர்கள், வாரிசுகள் ஆகிய அனைத்திலும் அபிவிருத்தி செய்வாயாக! எங்களை
மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய்.
உன்னுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களாக, அதற்காக உன்னை
புகழ்பவர்களாக, உனது அருட்கொடைகளை ஏற்றுக் கொள்பவர்களாக எங்களை
ஆக்குவாயாக! மேலும் எங்களுக்கு (உன்) அருட்கொடைகளை பரிபூரணப்
படுத்துவாயாக!

யாஅல்லாஹ்! நல்ல வேண்டுதல், நல்ல பிரார்தத


் னை, நல்ல வெற்றி, நற்செயல், நற்கூலி,
நல்வாழ்வு, நல்ல மரணம் ஆகிய வற்றை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! (மறுமை நாளில்) என்னுடைய தராசைக்
கனப்படுத்துவாயாக! என்னுடைய ஈமானை பலப்படுத்துவாயாக! என்னுடைய
அந்தஸ்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்;றுக் கொள்வாயாக!
என்னுடைய தவறுகளை மன்னிப்பாயாக! மேலும் நான் உன்னிடம் சொர்க்கத்தில் உயர்ந்த
அந்தஸ்த்தைக் கேட்கிறேன்.
யாஅல்லாஹ்! நல்ல வெற்றிகளையும், நல்லமுடிவுகளையும், அனைத்து நல்லவைகளையும்
நல்ல துவக்கத்தையும் வெளிப்படையான, அந்தரங்கமான நல்லறங்களையும்
சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
ஏற்றுக் கொள்வாயாக!
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நல்லவற்றில் ஈடுபடவும், நல்லவற்றைத் தூண்டவும்,
நல்லவற்றைசெய்யவும், அந்தரங்கம் மற்றும் வெளிப்படையான அனைத்து
நல்லவைகளையும் சொர்க்கத்தில் உயர்நத
் அந்தஸ்துகளையும் கேட்கிறேன். ஏற்றுக்
கொள்வாயாக!
யாஅல்லாஹ்! நான் செய்யும் திக்ரை உயர்த்துமாறும் என்னுடைய பாவத்தை
மன்னிக்குமாறும் என்னுடைய பிரச்சனைகளை சீராக்குமாறும் என்னுடைய உள்ளத்தை
தூய்மைப்படுத்துமாறும் என்னுடைய மர்மஸ்தானத்தை பத்தினித்தனமாக ஆக்குமாறும்
என்னுடைய உள்ளத்தை ஒளிமயமாக்குமாறும் என்னுடைய பாவங்களை மன்னிக்கு
மாறும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் சொர்க்கத்தில் உயர்ந்த
அந்தஸ்துகளையும் கேட்கிறேன்.
யாஅல்லாஹ்! என்னுடைய உள்ளம், காது, பார்வை, உயிர், உடல், குணம், குடும்பம், வாழ்வு,
மரணம், செயல் ஆகிய வற்றில் நீ அபிவிருத்தி செய்யுமாறு நிச்சயமாக நான் உன்னிடம்
கேட்கிறேன். மேலும் என்னுடைய நல்லறங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக!.
சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளைக் கேட்கிறேன். தந்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள்


ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக!

யாஅல்லாஹ்! நீ எனக்கு அளித்த ரிஸ்கை -அருட் கொடைகளை- எனக்கு


போதுமானதாக்கி, அதில் எனக்கு அபிவிருத்தியும் செய்வாயாக! என்னை விட்டும்
நீங்கிவிடும் -அருட்கொடைகளுக்கு- பகரமாக அதைவிட சிறந்த வற்றை எனக்குத்
தருவாயாக!
யாஅல்லாஹ்! என்னை (மறுமையில்) மிகவும் எளிதாக விசாரணை செய்வாயாக!
கண்களால் பார்க்கப்பட முடியாதவனே, எண்ணங்களால் வர்ணிக்கப்பட முடியாதவனே,
காலத்தின் சோதனைகளால் மாற்றப்பட முடியாதவனே - தனித்தவனே,
இணையற்றவனே, தேவையற்றவனே - மலைகளின் கன எடைகளையும், கடல்களின்
கொள்ளளவுகளையும், கடலில் வாழும் மீனினங்களின் எண்ணிக்கையையும், அனைத்து
பறவைகள், நீர் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையையும், மழை துளிகளின்
எண்ணிக்கைகளையும், மரங்களின் இலைகளின் எண்ணிக்கைகளையும் மிகவும்
துல்லியமாக அறிந்தவனே - மற்றும் நீ படைத்த அனைத்து ஜீவராசிகளையும்,
பொருட்களையும் தெளிவாக அறிந்தவனே -

மேலும் இரவின் இருளில் மறைந்திருப்பவைகள் இன்னும் பகலின் ஒளியில்


பிரகாசிப்பவைகளின் எண்ணிக்கைகளை அறிந்தவனே! அவனை விட்டும் எந்த
வானமும், மற்ற வானத்தை மறைத்துவிட முடியாது, எந்தப் பூமியும் மற்ற பூமியை
அவனை விட்டும் மறைத்துவிட முடியாது, எந்தக் கடலும் அதன் ஆழத்தில்
இருப்பவற்றை அவனை விட்டும் மறைத்துவிட முடியாது. என் வஈழ்நாளின் கடைசி
பகுதியை மிகச் சிறந்ததாக ஆக்கிவிடு! எனது கடைசி அமலை மிகச்சிறந்த அமலாக
ஆக்கிவிடு! உன்னைச் சந்திக்கும் நாளை சிறப்பான நாளாக ஆக்கிவிடு.

யா அல்லாஹ் - எனது உள்ளத்துக்கு நேர்வழியை கொடுக்கும் உனது சிறப்பான


ரஹ்மத்தை உன்னிடம் வேண்டுகிறேன். அந்த ரஹ்மத்தின் மூலம் எனது காரியங்களை
இலகுவாக்குவாயாக.

யா அல்லாஹ் - அந்த ரஹ்மத்தின் மூலம் எனது துன்பங்களை நீக்கிவிடுவாயாக. அந்த


ரஹ்மத்தின் மூலம் எல்லா சிக்கல்களையும் தீரத
் ்து வைப்பாயாக. அந்த ரஹ்மத்தின்
மூலம் என்னிடம் உள்ளவைகளை உயர்ந்ததாகவும், கண்ணியமானதாகவும்
ஆக்குவாயாக.

யா அல்லாஹ் - அந்த சிறப்பான ரஹ்மத்தின் மூலம் எனது அமலை ஷிர்க், முகஸ்துதி,


பெருமை, கர்வம் போன்றவற்றிலிருந்து தூய்மை படுத்துவாயாக.

யா அல்லாஹ் - அந்த ரஹ்மத்தின் மூலம் எனது உள்ளத்தில் எனக்கேற்ற


நல்லெண்ணங்களை உதிக்கச்செய்வாயாக. அந்த ரஹ்மத்தின் மூலம் உன்னுடைய
பொருத்தம் பெற்றதும் எனக்கு பிரியமானவைகளையும் தந்தருள்புரிவாயாக. அந்த
ரஹ்மத்தின் மூலம் நீ அறிந்த எல்லா நல்லவைகளையும் எனக்கு தந்தருள்புரிவாயாக.
அந்த ரஹ்மத்தின் மூலம் நீ அறிந்த எல்லா தீங்குகளிலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக.
யா அல்லாஹ் - அந்த ரஹ்மத்தின் மூலம் குப்ர் என்னை அணுக முடியாத ஈமானையும்,
நம்பிக்கையையும் கொடுப்பாயாக. அந்த ரஹ்மத்தின் மூலம் ஈருலகிலும் கண்ணியமும்
சிறப்பும் உடைய இடத்தை அடைந்து கொள்ளும் படியான உனது அருளைக்
கொடுப்பாயாக.

யா அல்லாஹ் - அந்த ரஹ்மத்தின் மூலம் தீர்பபு


் வழங்குவதில் சீரான முறையையும்,
ஷகீதுகளுக்கு கிடைக்கும் விருந்தோம்பலையும், பாக்கியசாலிகள் வாழ்வையும்,
பகைவர்களுக்கு எதிரான உனது மேலான உதவியையும் நான் உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ் - நான் எனது தேவைகள் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கின்றேன்.


எனது அறிவு குறைந்திருப்பினும், எனது அமல் பலவீனமாயிருப்பினும், நான் உனது
அருளுக்கு தேவையுடையவனாக இருக்கிறேன். காரியங்களை சீராக்குபவனே,
உள்ளங்களுக்கு ஆரோக்யம் அளிப்பவனே, அந்த சிறப்பான ரஹ்மத்தின் மூலம் உனது
பொருத்தமும், எனக்கு நன்மையும் தரக்கூடிய எனது எல்லா தேவைகளையும்
நிறைவேற்றிவைப்பாயாக.

யா அல்லாஹ் - ஒன்றாக உற்பத்தியாகும் பல்வகைச் சுவையுள்ள கடல் நீரை


ஒன்றையொன்று கலக்காமல் உனது வல்லமையால் நீ பிரிப்பது போன்று, சுவையான நீரை
விட்டும் உவர்பபு
் நீரையும், உவர்ப்பு நீரை விட்டும் சுவையான நீரையும் தனித்தனியாக
பிரிப்பது போன்று, நரக வேதனையை விட்டும், கப்ரின் வேதனையை விட்டும், கப்ரின்
சோதனைகளை விட்டும் என்னை தூரமாகி உன்னுடைய சிறப்பான ரஹ்மத்தாலும்
அருளாலும் காத்தருள உன்னிடம் மன்றாடி இறைஞ்சுகிறேன்.

யா அல்லாஹ் - எந்த நலவை என் அறிவால் எட்டிவிட முடியாதோ, எதை அடைய என்
அமலில் பலம் குன்றிவிட்டதோ, எந்த நலவை என் எண்ணமும் அடைய முடியாதோ, எந்த
நலவை உனது படைப்பினங்களில் யாரேனும் ஒருவருக்கு வாக்களித்துள்ளாயோ, எதை
நான் உன்னிடம் இதுவரை கேட்கவில்லையோ, அல்லது உன் அடியார்களில் யாரேனும்
ஒருவருக்கு வழங்க உள்ளேயோ, நான் அதை உன்னிடமிருந்து அடைய
ஆசைப்படுகிறேன்.

அகிலங்களின் இரட்சகனே, உன்னுடைய ரஹ்மத்தின் பொருட்டால் அதை உன்னிடம்


வேண்டுகிறேன். பலமான வாக்குறுதி படைத்தவனே, நற்செயல்களின் உரிமையாளனே,
உன்னிடம் வேதனை நாளின் அச்சமின்மையை பெற்ற நல்லோர்கள், மறுமையில் உனது
நெருக்கத்தைப் பெற்றவர்கள், உன்னிடம் ஆஜராகி இருப்பவர்கள், ருகூவு, ஸுஜூது
செய்து கொண்டிருப்பவர்கள், உன் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள்,
இத்தகையோருடன் சுவனத்தில் இருப்பதை உன்னுடைய ரஹ்மத்தின் பொருட்டால்
உன்னிடம் வேண்டுகிறேன்.

யா அல்லாஹ் - நிச்சயமாக நீ கருணை மிக்கவன், அன்பு மிக்கவன், நிச்சயமாக நீ


நாடியதை செய்பவன்.

யா அல்லாஹ் - உனது ரஹ்மத்தால் எங்களை நேர்வழி பெற்றவர்களாகவும்,


மற்றவர்களுக்கு நேர்வழி காட்டுபவர்களாகவும், எப்போதும் நேர்வழியின் பக்கமே
இருக்கும் அருளை எங்களுக்கு தந்தருள்புரிவாயாக.

You might also like