You are on page 1of 1

தலைமையாசிரிய.ர் அவர்களுக்கும்……………………………………….

இவ்வார பொறுப்பாசிரியர்கள் நான்


திருமதி.சுகந்தி……………………………………………………………………….இன்று ஆசிரியர் உங்களிடம் ஒரு சில
பண்டிகைகளைப் பற்றிப் பேசவுள்ளேன்.கடந்த வாரம் நாம் அனைவரும் மார்கழி இறுதி நாள் போகி பண்டிகையும் தை முதல்
நாள் பொங்கல் திருநாளைக் கொண்டாடினோம் அல்லவா, நிச்சயம் நீங்கள் அனைவரும் குடும்பத்தினருடன் பொங்கல்
திருநாளைக் மகிழ்ச்சியாகக் கொண்டாடிருப்பீர்கள் என்று ஆசிரியர் நம்பிக்கைக் கொள்கிறேன் ஆம் நாளை என்ன நாள்? ஆம்
நாளைத் தைப்பூசத் திருநாள்.
தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப் பெருமானுக்குக்
கொண்டாடப்படும் விழாவாகும். நம் நாட்டில் கோலாலம்பூர் பத்துமலை, பினாங்கு தண்ணீர் மலை,ஈப்போ கல்லு மலை,சுங்கை
பெட்டாணி சுப்பரமணியர் ஆலயம் மற்றும் மலேசியாவில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா மிக
விமரிசையாகக் கொண்டாடப்படும் .தைப்பூசத் தினத்தன்று அழகன் முருகப் பெருமானுக்கு அலகு குத்தி,பால்
குடங்கள்,காவடிகள் போன்ற நேர்த்திக் கடன்களைப் பக்தர்கள் செலுத்துவர்.தற்போது கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக
நிறைய கட்டுபாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது,ஆகவே தைப்பூச திருவிழாவிற்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் தயவு
செய்து மறவாமல் அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுபாடுகளைக் கடைப்பிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களின் கைத்தூய்மி மற்றும் முகக்கவரியை மறவாமல் பயன்படுத்துங்கள். வெற்றி வேல் முருகனுக்கு ஹஹொகரா என்று
கூறி உங்களிடம் இருந்து விடைபெருகிறேன்,நன்றி வணக்கம்..நம்மை நாம் பாதுகாப்போம்

You might also like