You are on page 1of 3

1) தொண்ணூறு அமையும் முறை

ஒன்பது + பத்து
ஒன்பது + நூறு (பத்தை நூறாகத் திரித்தல்)
தொன்பது + நூறு (நிலைமொழி முதலில் தகரத்தை நிறுத்தல்)
தொன் + நூறு (பது என்பதை நீக்கல்)
தொண் + நூறு (னகரத்தை ணகரமாகத் திரித்தல்)
= தொண்ணூறு
2) தொள்ளாயிரம் அமையும் முறை

ஒன்பது + நூறு
ஒன்பது + ஆயிரம் (நூற்றை ஆயிரமாகத் திரித்தல்)
தொன்பது + ஆயிரம் (நிலைமொழி முதலில் தகரத்தை நிறுத்தல்)
தொன் + ஆயிரம் (பது என்பதை நீக்கல்)
தொள் + ஆயிரம் (னகரத்தை ளகரமாகத் திரித்தல்)
= தொள்ளாயிரம்

ஒன்று + பத்து = ஒருபது


இரண்டு + பத்து = இருபது
மூன்று + பத்து = முப்பது
நான்கு + பத்து = நாற்பது
ஐந்து + பத்து = ஐம்பது
ஆறு + பத்து = அறுபது
ஏழு + பத்து = எழுபது
எட்டு + பத்து = எண்பது
6.3.2 ஒன்று முதல் எட்டு முன்னர்ப் பத்து வருதல்

ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்கள் நிலைமொழியில்


நின்று வருமொழியாக வரும் பத்து என்னும் எண்ணுப்பெயரோடு
புணரும்போது, பத்து என்னும் சொல்லின் நடுவில் உள்ள தகரமெய்
கெடும். அஃதாவது தகரமெய் கெட்டுப் பத்து ‘பது’ என்றாகும்.

நிலைமொழியில் உள்ள எட்டுவரையிலான எண்ணுப்பெயர்கள்


பொதுவிதியிலும், சிறப்பு விதியிலும் தமக்குச் சொல்லப்பட்ட
விகாரங்களை ஏற்புடையவாறு பெற்று வரும்.

You might also like