You are on page 1of 4

5.

0 கெஜாமான் கெலிரிங்

இந்தக் கெலிரிங் சராவாக் அருங்காட்சியகத்தைச் சுற்றி அமைந்துள்ளது. 9 மீட்டர்


அளவிற்கு இதன் உயரம் உள்ளது. சுற்றளவோ 2.7 மீட்டர் அளவில் உள்ளது. பார்ப்பதற்கு இது
பிரம்மாண்டமாகவே உள்ளது. இதன் மேல்தளத்தில் சமமான மேற்பரப்பு உள்ள கல் ஒன்று
நிறுவப்பட்டுள்ளது. கெஜாமான் இனத்தாருடையதான இந்தக் கெலிரிங் பெலாகா மாவட்டத்திலிருந்து
கொண்டு வரப்பட்டதாகும். இது “லூகாஸ் சின்” என்பவரால் 1973-ஆம் ஆண்டு இந்த
அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இக்கெஜாமான் கெலிரிங் உருளை வடிவத்தில் அமைந்துள்ளது. நல்ல உயர்ந்த தரத்திலான


தேக்கு மரத்தினைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. வைரம் பாய்ந்த கட்டை என்பார்களே அது
போல இதன் தன்மை இருக்கிறது. நன்கு பணவசதி படைத்தவர்களே இதைச் செதுக்குவதற்கு
ஆட்களை நியமிக்கிறார்கள். அதன் வேலைக் கெடு சில நாட்கள் வரை நீள்கிறது.

இந்தக் கெலிரிங் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியிலிருந்து முதல்


பகுதி ஆரம்பித்து பின்னர் அடிவரை ஏழு பகுதிகளாகக் காட்டப்படுகிறது. இதன் முதல் பகுதி
சமமான ஒரு கல்லாகும். இரண்டாம் பகுதி மனித உருவங்களையும் மூன்றாம் பகுதி “பேய் உருவ”
வடிவங்களையும் கொண்டுள்ளன. நான்காம் பகுதியோ அட்டை வடிவிலான தொடர் வடிவங்களைக்
கொண்டுள்ளது. ஐந்தாம் பகுதி மீண்டும் பேய் உருவ வடிவங்களையும், ஆறாம் பகுதியோ
“காலோங் கெலுனான்” எனும் வடிவச் செதுக்குதலையும் கொண்டுள்ளன. இறுதியான, ஏழாம்
பகுதியோ “கோங்” இசைக்கருவி வடிவிலான செதுக்குதலைக் கொண்டுள்ளது. இது இறந்தவரின்
செல்வச் செழிப்பையும், அவரின் முதலாளித்துவத்தையும் காட்டுவதற்கு செதுக்கப்படுகிறது. இந்த
ஏழுப் பகுதிகளின் இடையிடையே கயிறு வடிவிலான வடிவு செதுக்கப்பட்டுள்ளன.

இனி தொடர்ந்து அதன் ஏழு பகுதிகளின் விளக்கங்களைக் காண்போம்.

5.1 முதலாம் பகுதி

இதன் உச்சியில் பாரமான பெரிய கல் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது முப்பது


செண்டிமீட்டர் அளவு அகலத்தைக் கொண்டதாய் உள்ளது. வட்டமான கற்கள் செதுக்கப்பட்டு
சமமாக்கப்படுகின்றன. இதன் பாரமோ பல டன்கள் இருக்கலாம். தஞ்சைப் பெருங்கோயிலை
நினைவூட்டுவதாய் இது இருக்கிறது. மேலிருந்து பார்க்கும் பொழுது இது நீள்வட்ட வடிவில்
அமைந்திருப்பது போல் தெரிகிறது. இக்கல்லைச் சுற்றி வரிவரியாய் தெரிய சொரசொரப்பான
முறையில் செதுக்கியிருக்கிறார்கள். இளஞ்சிவப்பு வண்ணத்தில் இக்கல் வண்ணமிடப்பட்டுள்ளது.
கெலிரிங்கின் நிலைத்தன்மையை அதிகப்படுத்த இக்கல் வைக்கப்பட்டுள்ளதாய் அறியப்பட்டாலும்,
இக்கெஜாமன் கெலிரிங்கைச் செதுக்கும் திரு.எட்வர்ட் ஹீகு என்பவர் இக்கல் வீரம், பலம்,
விடாமுயற்சியோடு இறந்தவரின் பொறுப்புணர்ச்சியையும் காட்டுவதாய் சொல்கிறார்.

5.2 இரண்டாம் பகுதி

இப்பகுதியில் இரண்டு வெவ்வேறான மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த மனித


உருவங்கள் குந்திய நிலையிலும் சங்கிலி போன்று இணைந்த நிலையிலும் உள்ளன.

குந்திய நிலையில் உள்ள மனித உருவங்கள் மேல்தட்டு மக்களின் கெலிரிங்கில் மட்டுமே


காணப்படுகின்றன. இந்த உருவத்தின் பின்புலம் முழுதும் சரிவரத் தெரியாமல் போயிருப்பினும்,
கலிமந்தான் தீவுகளிலுள்ள மாலோ மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த வகை மனித உருவஙக்ள்
பலியிடும் சடங்கையும் பாதுகாக்கும் திறனையும் சூட்சுமமாகக் காட்டுவதற்காக செதுக்கப்படுகின்றன
என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மேலும், இவ்வகை உருவங்கள் தீயதிலிருந்து தங்களைப்
பாதுகாக்கும் மூதாதையர்களாக அம்மக்கள் கருதுகிறார்கள். நம்முடைய வழக்கத்தில் ஊர்
எல்லைகளைப் பாதுகாக்கும் சிறுதெய்வங்கள் வழிபாட்டோடு இது ஒத்துப் போவதை என்னால்
சற்று உணர முடிந்தது. உலகம் முழுக்க மக்கள் விரிந்துப்பட்டிருந்தாலும், இது போன்ற கூறுகளில்
பெரும்பாலானோர் ஒத்திருப்பதைப் பார்க்கும்பொழுது எனக்கு மகிழ்ச்சிதான்.

இந்த உருவங்கள் இதனுடைய உரிமையாளருக்கு முனைப்பையும் பலத்தையும்


தருவதாகவும் நம்பப்படுகிறது. இப்பகுதியின் உச்சியில் முப்பரிமாண முறையில் இம்மனித
உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவைகள் பெரிய எடையுள்ள சிவப்பு நிறக்கல்லைத் தூக்கி
சுமப்பது போன்று உள்ளன. அதோடு காலை அகட்டிய நிலையில், சிறு மனித உருவங்களை
பிடித்தவாறு இடப்பக்கத்தை நோக்கியப்படி இவை அமைந்துள்ளன. இவை அரைத்துணியை மட்டும்
உடுத்தியிருக்கின்றன.

இந்த உருவங்கள் புடைத்துச் சற்று வெளியே தெரியும்படியும் துளைகள் உள்ளவாறும்


அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் துளைகள் காற்றும் வெளிச்சமும் புகுந்து வெளியேறுவதற்கு
அமைக்கப்பட்டுள்ளன. பலத்தக் காற்று வீசும் பொழுது இந்தத் துளைகள் குழல் போன்ற இசையை
எழுப்புகின்றன. நம்முடைய இசைத்தூண்களை இங்கே ஒப்பு நோக்கி பார்க்கலாம். இந்த
உருவங்களின் கை, கால், முகப் பகுதிகள் கொடி போன்ற அமைப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இவ்வுருவங்கள் குறுக்கு முறையில் செதுக்கப்பட்டுள்ளன. பெரிய மனித உருவங்களும்


சிறிய மனித உருவங்களும் விட்டு விட்டுச் செதுக்கப்பட்டுள்ளன. பெரிய அளவு மனித உருவங்கள்
உட்கார்ந்த நிலையிலும், சிறிய அளவிலான மனித உருவங்கள் தலைக்கீழாகத் தொங்கும்
நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறிய அளவு உருவங்கள் குழந்தைகளாக
உருவகப்படுத்தப்படுகின்றன. ஊலு மக்களின் வழக்கப்படி குழந்தைகள் அவர்களின் கூட்டத்தோடு
இணக்கமாக இருக்க சிறு வயது முதலே கட்டொழுங்கோடு வளர்க்கப்படுகிறார்கள்.

“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்பார்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதைப்


போல இருக்கும் இந்தச் சிற்பங்கள் மகிழ்ச்சி மிகுந்த குடும்பச் சூழலைக் காட்டுகின்றன.
இரண்டாவது வகை மனித உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. இவை குழி
விழுந்த கண்களோடு, பெரிய நாசியோடு, விரிந்த வாயோடு, பல்லோடு நாக்கை வெளியே
காட்டாதப்படி அமைந்துள்ளன. இதற்கு மூன்று விரல்களுடைய இரண்டு கைகள் உள்ளன. நடு விரல்
நீண்டும், ரம்பம் போன்ற அமைப்பிலும், முனையில் வளைந்தப்படியும் உள்ளது.

உள்ளங்கை கொடி போன்ற சிற்பத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை


உருவங்களில் தலை மட்டும் கெலிரிங்கிலிருந்து வெளியே தெரியும்படிபடி அமைக்கப்பட்டுள்ளது.

5.3 மூன்றாம் பகுதி

இந்த மூன்றாம் பகுதியில் மூவகையான பேய்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தங்களுடைய சமய நம்பிக்கையின் உறுதியைக் காட்டுவதற்காக ஊலு மக்கள் இப்பேய்
உருவங்களை விருப்பமுடன் தங்களின் கெலிரிங்களில் இடம்பெறச் செய்கிறார்கள். இறந்தவர்களின்
உலகத்தின் மீது அவர்களுக்கு அதீத நம்பிக்கை உண்டு. உலகத் தீமைகளிலிருந்து இறந்தவர்களின்
ஆவிகள் தங்களைக் காப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

மனிதர்கள் காணமுடியாததையும் இந்தப் பேய்கள் பார்ப்பதால் இவைகளுக்குப் பெரிய


கண்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். நீண்ட கோரைப்பற்கள் அவைகளின் சக்தியைக்
காட்டுவதற்காக இருக்கின்றன. முக்கோண வடிவ மூக்கு அவைகள் மனித வாழ்வை நாசமாக்கக்
கூடியன என்பதை உணர்த்துவதாக மக்கள் கருதுகிறார்கள்.

இவைகள் மனிதர்களைப் பயமுறுத்துவதற்காக கோரமாகச் செதுக்கப்படுகின்றன. முதல்வகை


பேய் விரிந்த இலை போன்ற அமைப்பில் உள்ளது. செம்மையான முறையில் இந்த வகை பேய்கள்
செதுக்கப்பட்டுள்ளன. இதன் முகத்தைச் சுற்றி செடி வகைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வட்டச் சுருள்களோடு பெரிய கருவிழிகளைக் கொண்ட கண்களை இவை பெற்றுள்ளன. நன்கு
உயரமான புருவங்களையும் அவைகளுக்கிடையில் பூ போன்ற அமைப்பையும் இப்பேய்கள்
கொண்டுள்ளன. மூக்கின் அமைப்போ சிறுத்து விரிந்து உள்ளது.

மெல்லிய உதடுகளையும் வரிசையான பற்களையும் இவ்வகை பேய்கள் கொண்டுள்ளன.


மேல் கீழாக கூர்மையான கோரைப்பற்களும் இருக்கின்றன. பேயாக இருப்பினும் அதனுடைய
முகம் மிக்க மகிழ்ச்சியுடையதாகக் காணப்படுகிறது. நான்கு விரல்கள் மட்டுமே இருப்பது இவைகள்
மனிதர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதைத் தெளிவாய்க் காட்டுகின்றன.

இரண்டாம் வகை பேய்களின் முகமோ வெற்றிலையின் வடிவத்தில் உள்ளது. கண்கள் குழி


விழுந்த அமைப்பில் உட்புறமாய் இருப்பது போன்றது இருக்கின்றன. முகத்தில் ஒன்றில் மூன்று
பகுதியை இந்தக் கண்களே நிரப்பிக்கொண்டிருக்கின்றன. நீண்ட மெல்லிய மூக்கு இவைகளுடையது.
நாசித்துவாரம் பெரியதாகவே உள்ளது. தடிப்பான புருவத்தின் மத்தியில் கொடி போன்ற அமைப்பு
உள்ளது. மேலும் கீழும் கோரைப்பறகள் நீண்டிருக்க வரிசையான பல்வரிசை கொண்டிருக்கிறது
இந்தப் பேய் உருவம். இதனுடைய கைகள் மூன்று விரல்கள் மட்டுமே கொண்டிருப்பது பெரிதும்
வித்தியாசமான ஒன்றாக உள்ளது.

மூன்றாம் வகை பேயோ புடைத்து வெளிவந்துள்ள நிலையிலுள்ள கண்களையும் சிறுத்த


மூக்கையும் கொண்டுள்ளது. சிறிய வாயையும் மேற்கூறிய இரண்டு பேய்வகைகளைப் போன்ற
பற்களையே கொண்டுள்ளது. மிக விரிந்த இலை போன்று இப்பேயின் முகம் அமைந்துள்ளது. அதை
சுற்றி கொடிகள் போன்ற செதுக்குதலும் சதுரத்தோடு வட்டம் போன்ற வடிவங்களும்
அமைந்துள்ளன. ஒரு கை கன்னத்தைத் தாங்கியப்படியும் மறு கை பின்புறம் வைத்துள்ளப்படியும்
இப்பேய் வகை அமைந்துள்ளது. கோரமான முகம் பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் வகையில்
உள்ளது.

You might also like