You are on page 1of 3

நலம்

வாழ்க்கை எந்திரமயமாகிவிட்டது;

பொறுமை அற்றுப்போய் விட்டது;

எங்கும் அவசரம் எதிலும் அவசரம்;

உண்பதில் நிதானமில்லை;

உடலைப் பேணுவதில் உருப்படியில்லை;

உள்ளம் பெருங்கோயில் என்ற எம் பாட்டன், உயிர் உறையும் உடலை ஆலயம் என்றான் !

ஆன்மா லயித்து இன்பம் சுகிப்பதால் அது அங்ஙனம் எனப்பட்டது.

அவ்வாறான ஆலயத்தை உண்மையாய் பேணுகிறோமா என்பதுதான் கேள்வி?

“அட சும்மா போங்க! நாங்க கோயிலைப் பேணுகிற அழகைத் தைப்பூசத்தப்ப வந்து பாருங்கனு
சொல்றீங்களா?”

இல்லை! “நாங்க பேணிட்டாலும்!” என்று சிலாக்கிறீர்களா?

அவையோரே! கூர்ந்து கேட்க வேண்டும்!

பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை! கேட்கத்தான் வேண்டும்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுடைய ஒரு நகைச்சுவை; கடற்கரையில் ஒரு அம்மா; நல்ல வட்டமான
உருவம். கழுத்து நிறைய நகையோடு சோற்றை அள்ளி வாயில் வைப்பார் பாருங்கள்! அப்பப்பா!
அதுதான் உண்மையிலேயே திவ்யக் காட்சி! நினைத்தாலே வயிறு நிரம்பி விடுகிறது.

அப்படி தின்றால் எப்படி செரிக்கும்?? முதலில் விக்கும். அப்புறம் போய்விடும். உயிர்!

இது மெய்! மெய்யான மெய்ப்பொருள் இதில் ஒன்றியிருக்கிறது. அதனால்தான், உடலை மெய் என்று
விளிக்கிறோம்.

அதை பேணுதல்தான் நம்முடையத் தலையாயக் கடமை!

உண்மையை உறுபொருளாகத் தரிப்போர் ஒன்றை உணருதல் வேண்டும்!

பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் தோயும்போது,


இப்பிண்டத்தை வளர்ப்பது தானே நம் முதல் பொறுப்பு?

திரையிலே ஒரு அழகானப் பாடல்! அது அழுக்கானப் பாடல் என்றாலும் தகும்!

நாயகன் பாடுகிறான். “ஆடி வந்தா அல்வா கடை! அசைந்து வந்தா மளிகைக் கடை! பளபளக்கும்
ரேசன் கடை!

கடைசியா ஒன்று சொல்கிறான்.


ஒரு துணிக் கடைதான் உனக்கு மட்டும் தேவைப் படாதே!”

ஞானப் பெருவெளியில் நின்று பாடியிருக்கிறானோ??

அடிக்கிற வெயிலுக்கு முழுதாய் மூடியிருந்தாலே மேனி கரிகட்டையாகி விடுகிறது; திகம்பர


கோலத்தில் போனால் நினைத்துப் பாருங்கள்?

பெரியோர்களே!

ஐம்புல மாயையில் மயக்குற்றுத் துன்பப்படுகிறோம்! பெரும்பாலோர் அதை உணருவதே இல்லை.


எண்சாண் உடம்பை வளர்ப்பதில் அல்லாமல், அதை துகிலுரித்து மோகத்தில் ஆழ்த்தி, கடைசியாக
மண்ணோடு மக்கிப் போய்விடவே அவசரப்படுகிறோம். முடியவில்லை என்றால் சொந்தமா
இறுக்கிக்கிட்டுச் செத்துவிட எத்தனிக்கிறோம்.

உடலைப் பேணி உயிரைக் காத்தால்தான் இறையருள் கிட்டும்! கண்ட நேரங்களில் கண்டதையும்


அள்ளி திணித்துக் கொண்டு, வாழும் வயதில் “பொட்டென்று” போய்விட்டால் இறையருளா
கிட்டும்? எமதர்மனே ஏளனமாகத்தான் பார்ப்பான்! வாய்ப்புக் கிட்டினால் கொப்பரையில் பொரித்தும்
எடுப்பான்.

உண்டிச் சுருங்கினால் உபாயம் பலவுண்டு; எனவே, முறையான உணவுப் பழக்கம் வேண்டும்.


அதோடு, கொஞ்சமாவது உடலை வளைக்கவும் வேண்டும்! அதன் பொருட்டுத்தான் திருமூலன்
அழகாய்ச் சொன்னான். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்று.

தொழுநோய்க்காரனைப் பாருங்கள்! ஆண்டவா! எப்போடா என்னக் கொண்டு போவேனு கத்திக்


கொண்டே இருப்பான். உடம்பு அழிகிறது. எப்போதும் வேதனை! வலி! ஆக, உயிராலும் அழிந்து
போகிறான். அவனுக்கு இம்மை இன்பமயமானதாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பிறவிப்பிணியை விட்டொழித்து இறைவனின் திருவடி இன்பத்தினை நுகர உடல் மிகவும் அவசியம்.

உடலில் பலமும் வேண்டும்;

மூச்சை அடக்கி சிவயோகத்தில் சித்திக்க வேண்டும்; இதனால் நாடிகள் வலுப்பெறும். இறைவனைக்


காணவும் வழிக்கிடைக்கும்.

இயல்பாக இயங்கக்கூடிய வலநாடியிலிருந்தும் இட நாடியிலிருந்தும் உயிர்க்காற்றை எடுத்து,


நடுநாடியில் இயங்கச் செய்து குண்டலினியை எழுப்ப வேண்டும்;

அக்குண்டலினியை அங்கேயே பொருத்துதலும் வேண்டும்;

இது எளிதில்லை. ஆனால், முடியாததும் இல்லை. கொஞ்சம் மெனக்கெட வேண்டும்!


அவ்வளவுதான்! கூரை ஏறிக் கோழிப் பிடிக்க முடியாதவன், கோபுரம் ஏறி வைகுண்டம் போக
முடியுமா?

கெடாவிலிருந்து ஜோகூருக்குப் போகவே ஏறக்குறைய பத்து மணி நேரம் ஆகும்பொழுது,


குண்டலினியை நினைத்த மாத்திரத்தில் எழுப்பிப் பொருத்திவிட முடியுமா???

நற்பொருள் விழைவோரே!
வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். வாயைக் கட்டு என்று! எந்த அளவிற்கு நாவினாற் சுட்டவடு
ஆபத்தோ, அந்த அளவிற்கு வாய் வழியாக அளவுக்கதிகமாக வயிற்றுக்குள் போகும் உணவுகளும்
ஆபத்தானவைகள்தான்.

ஒரு வேளை உண்பவன் யோகி

இரு வேளை உண்பவன் போகி

மூவேளை உண்பவன் ரோகி

நாவேளை உண்பவன் துரோகி

என்றார்கள் ஆன்மீகச் செம்மல்கள்.

பெருமக்களே!!

ஐயோ பத்திக்கிச்சு! ஐயோ பத்திக்கிச்சு என்று சபையில் உள்ள முக்கால்வாசி பாடியிருப்பீர்கள்!


இப்போதும் பாடிக்கொண்டிருக்கலாம்! முணுமுணுத்தாவது கொண்டிருக்கலாம்!

பாடுவதில் தப்பில்லை! ஆனால் தயவு செய்து பாடுவதோடு சேர்த்து கொஞ்சம் மூலாதார


நெருப்பை எழுப்புங்கள்! சுட்டாலும் பரவாயில்லை!

அவ்வழியே இறைவனை தொடர்ந்து நினையுங்கள்! உடலை நிலைநிறுத்தும் ஆற்றலைப்


பெறுவீர்கள்!

ஏகப்பரம்பொருளின் அருளோடு பிறவா பெரும்பயனையும் பெற்று உய்வீர்கள்!!!

ஏகாந்தம் அடைவீர்கள்!

எல்லா பிறப்பும் பிறந்திளைத்துப் பெறுவதற்கரிய மானிடப் பிறவி பெற்ற நாம், அகத்தையும்


உடலையும் நலமாக வைத்துக் கொண்டால் நல்வாழ்வு கிட்டும் என்று பகர்ந்து முடிக்கிறேன். நன்றி.

You might also like