You are on page 1of 3

விடாமுயற்சி வெற்றி தரும்

.. தாயென்றாலும் தமிழென்றாலும் அது ஒன்றே. அன்பென்றாலும் அறமென்றாலும் அது


தமிழாழே இறை வேறு தமிழ் வேறு அல்ல என் உயிருடலாய் உறைந்திருக்கும் அன்னைத் தமிழைச் சிரம்
தாழ்த்தி கரம் கூப்பி வாழ்த்தி, என் தலைப்பினை அறிமுகப் படுத்துகிறேன். இன்று நான்
கருத்துரைக்கவிற்கும் தலைப்பு விடாமுயற்சி வெற்றி தரும்.

விடாமுயற்சி வெற்றி தருமா? அப்படியென்றால் என்ன? ஒரு தெளிவான குறிக்கோளை அடைய


வித்திடுவது முயற்சி அல்லது கடின உழைப்பாகும். அதனால்தான் விடாமுயற்சி பல சூழ்நிலைகளில்
வெற்றிக்கு முக்கியமானது என்று கூறப்படுகிறது.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்வார்கள். வெல்ல முடியாத கடினமான


காரியங்களின் கூட வாகை சூடிடலாம், முயற்சியைப் பற்றினால். எந்தக் காரியமுமே தொடங்கும்போது
மலைப்பாகத்தான் தோன்றும். விழுந்துதானே குழந்தைகள் நடைப் பயிலுகின்றனர்
கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விட்டுவிடுவதில்லையே. ஆக, இயற்கையாக
முயற்சி எனும் ஆயுதம் மனிதனுக்கு இருக்கின்றது. அதனை அறிந்து வாழ்வில் கடைப்பிடிப்பதிலே
ஒருவரின் வாழ்கை பாதை அமைகிறது.

தொடர்ந்து, ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்ற பழமொழிக்கேற்ப, கிடைக்கும்


வாய்ப்பைத் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி,
முயற்சியை ஆயுதமாகக் கொண்டு, சிந்தனையைச் சிதற விடாமல் வெற்றிப் பாதையில் பயணிக்க
வேண்டும். இதனையே சிங்கம் தன் இரையைத் தேடும் போது ஒரு இலக்கு வைத்துக் கொள்ளும்.
இடையில்  எந்த விலங்கு வந்தாலும்  எட்டிப்பார்க்காமல்  கவனம் முழுவதும் தான் முதலாவது குறி
வைத்த விலங்கின்மீதே  வைத்திருக்கும். அது கிடைக்கும்வரை தன் முயற்சியைக் கைவிடாது.
அதுபோலத்தான் வெற்றி கிட்டும் வரை இலக்கை நோக்கி நம் ஓட்டமும் இருக்க வேண்டும். "உலகிலேயே
மிகப் பெரிய வெற்றி
உன்னை நீயே ஜெயிப்பதுதான்” என்றார் மாவீரன் நெப்பொலியன்.

விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் நம்மைச் சுற்றி பல சாதனைகள் நிகழ்ந்திருக்காது.


ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளைச் சந்தித்திருக்கிறார்கள்.
அரசியல், ஆராய்சச ் ி, இலக்கியம், இசை, கல்வி என்று எந்தத் துறையிலும் புகழ் பெறுவதற்கு முன்பு பல
முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார்
என்று பெருமையாகச்
சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அவர் அந்த வெற்றியை அடையும் முன் ஆயிரம் முறை
தோல்வியைதான் முதலில் சந்திந்தார். அதற்காக அவர் அவருடைய முயற்சியைக்
கைவிட்டுவிடவில்லையே. தொடர் ஆராய்ச்சி செய்ததன் விளைவாகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட
கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் என்னும் உயர்நிலையைத் தாமஸ் ஆல்வா எடிசனால் அடைய
முடிந்தது. தோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளைத் தட்டித்
திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. இதையே தான் பலரும் அறிந்த விவேகானந்தர் சொல்கிறார், “வெற்றி
பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும் தான். நன்றாக
உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்” என்கிறார்.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்

மெய்வருத்தக் கூலி தரும்”


என்பது பொய்யாமொழிப் புலவரின் கூற்றாகும்.. அதாவது இறைவனால் சாத்தியமில்லாத விடயமும்,
விடாமுயற்சி உடையவராக இருப்பின் சாத்தியம் என குறிப்பிடுகிறார். நமது வாழ்ககை
் யில் ஆயிரம்
தடைகள் வருகின்ற போதும் முயற்சியோடு போராடுகின்றவர்களே வெற்றியடைவர் என்பது
திண்ணமாகும்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம்


லிங்கன் "நான் தோல்வியைத் தவிர வேறு எதுவும்
கண்டதில்லை" என்று விரக்தியாக கூறியிருந்தார். தொடர் தோல்வி யாரையுமே துவள வைத்துவிடும்.
ஐந்துமுறை தேர்தலில் தோற்றுப் போனாலும் முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி பெற்று
உலகமே பாராட்டும் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தார்.

இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தை பெற்றுவிட முடியாது. திறமை,
மேதைத்தனம், கல்வி இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற
தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும். இதைத்தானே திருவள்ளுவரும் இரண்டே
அடிகளில்

முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

என்கிறார். நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை.
விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
உழைக்காமல் யாரும் வென்றதாகச் சரித்திரமே கிடையாது. இதற்குச் சான்றாக போரில் தோற்றுப்போய்
ஒளிந்து கிடந்த ஒரு மன்னனுக்கு வெற்றிக்கான வழியை, பல முறை கீழே விழுந்தாலும் எழும்பி தன்
கூட்டைக் கட்டி முடித்த ஒரு சிறிய சிலந்தியின் விடாமுயற்சி மன்னனின் மனதில் ஓர் உத்வேகத்தைக்
கொடுத்தது. இதுவே, இழந்த தன் நாட்டை மீண்டும் மீட்க விடாமுயற்சி வேண்டும் என்ற பாடத்தையும்
புகட்டியது.

மேலும், தாழ்ந்த இடத்திலும் உயர்ந்தோர் தோன்றுவர் என்ற பொன்மொழிக்கேற்ப நாம் எப்படி


பிறந்தோம் என்பது முக்கியம் அல்ல. பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல் வாழ்வில் சாதனைப் பெற
என்ன முயற்சி செய்தோம் என்பதே இங்குக் கேள்வி. இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் இந்தியாவின்
இராமநாதபுரத்தில் வீடுகளுக்கு பத்திரிகை போட்ட சிறுவன் பின்னாளில் இந்தியாவை விண்வெளியில்
தலைநிமிர வைத்த டாக்டர் அப்துல் கலாம் ஆக மாறினார். அதுமட்டுமல்லாமல், போர்த்துகலில் ஒரு
வேளை உணவுக்கே போராடும் குடும்பத்தில் பிறந்து இன்றைய கால்பந்து உலகில் சிறந்த வீரரான
கிறிஸ்டியானோ றொனால்டோ பல பேருக்கு முன்னுதாரணமாக உள்ளார்.

அடுத்து, ஜமேக்கா எனும் நாட்டில் வறிய குடும்பத்தில் பிறந்து 3 தடவைகள் தொடர்ச்சியாக


ஒலிம்பிக்கில் தங்க பதக்கங்களை வென்ற உசைன் போல்ட் கடின முயற்சிக்குச் சிறந்த உதாரணமாவார்.
அவ்வாறே செருப்பு தைப்பவரின் மகன் அமெரிக்க ஜனாதிபதியானார். அவர் பல பேருக்கு சொன்ன
பாடம் முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்பது தான். மனிதர்களாக பிறந்த
ஒவ்வொருக்குள்ளும் தனித்திறமை இருக்கும் அதனைச் சரியாக இனம் கண்டு வாழ்ககை ் யில்
கடினமாக உழைத்தவர்கள் சாதித்து வருகிறார்கள். இதனை முன்னோடியாகக் கொண்டு நாமும்
செயல்பட வேண்டும்.

இறுதியாக, கடலின் அலைகள், பூமியின் சுழற்சி, சூரியனின் உதயம் எப்போதும் மாறுவதில்லை.


அது போல் நாமும் முயற்சியைக் கை விடாது போராடினால் ஒரு நாள் வெற்றி பெறுவது திண்ணம்.
பலருடைய பாதையில் தடையாக இருக்கும் கல், பலரின் பாதையில் படிக்கல்லாக கூட மாறிவிடும்.
அதனால் எப்பொழுதும் லட்சியத்தை அடைய முடியுமா? முடியாதா? என்று யோசிக்காமல், என்னால்
முடியும் என்று நினைத்து வெற்றிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும்.

நன்றி.

You might also like