You are on page 1of 2

மாணிக்கவாசகரின் திருப்பாண்டிப் பதிகம்

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
திருமுறை விழாவிற்கு வருகை தந்திருக்கும் இந்து சங்கப் பெரியோர்களே, எங்களின் உரையாற்றும்
திறமைக்குப் புள்ளி வழங்க அமர்ந்திருக்கும் நடுவர்களே, போட்டிக்கு வந்திருக்கும் பெரியோர்களே,
தோழர்களே அனைவர்க்கும் எனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் . நான்
பேசப் போகும் உரையின் தலைப்பு ‘மாணிக்கவாசகரின் திருப்பாண்டிப் பதிகம்’ என்பதாகும்.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய பாடல்களே


திருப்பாண்டிப் பதிகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘கட்டளைக் கலித்துறை’
என்பதாகும். அக்காலத்தில் பாண்டிய நாட்டு மன்னர் ஒரு மிகச் சிறந்த
அறநெறி போற்றும் ஆட்சியாளராக இருந்தவர். அத்தகு சிறந்த நாட்டைப்
போற்ற வேண்டும் என்பதற்காக மாணிக்கவாசகர் இறைவனைப் பாண்டி
நாட்டுத் தலைவனாக வைத்துப் பாட எண்ணி இப்பதிகத்தை நமக்கு
அருளியுள்ளார்.

இப்பதிகத்தில் சிவபெருமானாகிய இறைவன் குதிரை மேல் வந்து


அருள் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சிவபெருமானின்
திருவுருவத்தை இடைவிடாது நினைத்தல் வேண்டுமென இப்பதிகம்
வலியுறுத்துகின்றது. மறு பிறப்பை நீக்கி முத்திப் பேற்றினை அருளும்
சத்தி சிவபெருமானுக்கு மட்டுமே உண்டு என்று தெளிவுபடுத்துகின்றார்.
உலக இன்பம் நிலையில்லாதது; நிலையான பேரின்பத்தில் திளைத்தால்
மட்டுமே மனிதர்க்கு மீ ட்சி உண்டு என மாணிக்கவாசகர் கூறுகின்றார்.

‘நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர்’

நீருக்குள்ளே குளித்து மகிழ்ச்சி கொள்ளும் நீங்கள்

‘பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ லேசென்று பேணுமினே’

சிவபெருமானின் பேரின்பக் கடலில் குளித்து மகிழ வாருங்கள் என்று


மாணிக்கவாசகர் நம்மை எல்லாம் அழைக்கின்றார்.

இறைவனது ஞானத்தைப் பெற்றுப் பிறவியை நீக்கிக் கொள்ள


வேண்டும். மனிதப் பிறவியின் நோக்கம் முத்தி இன்பத்தை
பெறுவதேயாகும். நாம் மனிதப் பிறவியை வணடித்துவிடாமல்,
ீ பெருங்
கொடை வள்ளலாகிய இறைவன் வழங்கும் முத்திப் பரிசினைப்
பெறுவதற்குப் பாடாற்ற வேண்டும் என்று திருப்பாண்டிப் பதிகத்தில்
கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் வலியுறுத்துகின்றன.
சிவபெருமான் துன்பத்தை நீக்கி அருளுவதோடு இன்ப ஆக்கத்தையும்
தந்து நம்மை உயர்த்துகின்றார் என்னும் நம்பிக்கையில் எள்ளளவும்
ஐயம் வேண்டாம் என்று மாணிக்கவாசகர் உறுதிபடச் சொல்கின்றார்.
இறைவன் முத்தி இன்பத்தைத் தருவதோடு இப்பூவுலகில் வாழும்
காலத்தில் இம்மை இன்பத்தையும் நமக்கு அருளுவதாக இப்பதிகம்
நமக்குச் சொல்கின்றது.

இறுதியாக கட்டளைக் கலித்துறைப் பாடல்கள், சிவபெருமான்


அன்பர்க்கு இன்பம் நல்குவதால் அந்த இறைவனின் திருவருளைத்
தெளிதல் வேண்டுமென நமக்கு எடுத்துரைக்கின்றன. ‘தேற்றமிலாதவர்
சேவடி சிக்கெனச் சேர்மின்களே,’ என்னும் இப்பதிகத்தின் இனிய இறுதி சொற்றொடரைக்
கூறி எனது உரையை முடிக்கின்றேன்.

அனைவர்க்கும் நன்றி; வணக்கம்!

You might also like