You are on page 1of 1

நாங்கள் அனைவரும் தாத்தாவைப் பார்க்க மருத்துவமனைக்குச்

சென்றோம். அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்றோம். அவர்


மயக்கத்தில் இருந்தார். அதனைக் கண்டு அம்மாவும் நாங்களும் கண்
கலங்கினோம். அப்போது அவ்வறைக்கு வந்த மருத்துவர் “ உங்கள்
தாத்தாவிற்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டுவிட்டது. இனி கவலை
வேண்டாம்” என்று கூறினார். அதனை கேட்ட நாங்கள் மருத்துவருக்கும்
கடவுளுக்கும் நன்றி கூறினோம்.
“கடவுளே என் தாத்தா சீக்கிரமாக குணமடைய வேண்டும்” என்று
தங்கை க௶டவுளை வேண்டிக்கொண்௶டாள். தாத்தாவின் நிலமையைக்
கண்ட நான் ‘நான் பெரியவனானதும் என் உடல் உறுப்புகளைத் தானம்
செய்வேன்” என்று என் பெற்றோரிடம் கூறினேன்.
நாங்கள் தாத்தாவின் தற்சமய உடல் நிலையைக் கண்டு
மனமகிழ்வோடு வீடு திரும்பினோம். நாம் நம் உடல் ஆரோக்கியத்தின் மீது
கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பா எங்களுக்கு அறிவுரை கூறினார்.

You might also like