You are on page 1of 1

கிளியைக் கிள்ளிய காளை

திரு. நாகராஜன் த/பெ கல்யாணசுந்தரம் அவர்கள் அலோர்ஸ்டார் மாநகத்தைச் சேர்ந்தவராவார்.


கடந்த 10 ஆண்டுகளாகப் பல உயரமான மலைகளை ஏறி தொடர் சாதனைகளைப் படைத்து வருகிறார்.

இவர் முதன் முதலில் 2013-ஆம் ஆண்டில் தமது “ cat” “கேட்” குழுவினருடன் மலேசியாவின்
உயரமான மலையான கினபாலு மலையை ஏறி சாதனை படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து
வியாட்னாம் இந்தோசினாவில் அமைந்திருக்கும் உயரமான மலையான “பன் சிபான்” மலையை
வெற்றிகரமாக ஏறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்தோனிசிய உயரமான மலைகளான, “ஆகோங்”
மலை, “ரிஞ்ஞானி” மலைகளையும் ஏறி சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்
தொடர்ந்து 2019-ஆம் ஆண்டில் நேப்பாளில் அமைந்துள்ள எவரெஸ்டு (Bace camp) வரை ஏறியுள்ளார்.

அடுத்ததாக கடந்த ஜனவரி 31-ஆம் திகதி உலகத்தின் ஏழு கண்டங்களில் உள்ள மலைகளில்
ஒன்றான ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்திருக்கும் கிளிமஞ்சாரோ மலையை ஏறியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த மலை சுமார் 5895 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. கடுங்குளிர் என்பதைக்
கூட பொருட்படுத்தாது அதனையும் ஒரு சவாலாகக் கொண்டு மலை உச்சியை அடைந்துள்ளது
உண்மையில் பாராட்டக்குரியது. அதோடு மட்டுமல்லாது மலை உச்சியில் முறையே கெடா இந்தியர் சங்கம்,
மாநிலக் கொடி, தேசியக் கொடி என மூன்று கொடிகளை ஊன்றி தமது இலட்சச
் ியத்தில் வெற்றி
கண்டுள்ளார்.

54 வயதான போதிலும் இவர் மூன்று மலையேறும் குழுக்களைப் பராமறித்துக் கொண்டிருப்பதோடு


நமது இந்திய இளைஞர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இளைய
தலைமுறையினை இவ்வாரான செயலில் தங்களை ஈடுபடித்தி சாதனை புரிவதோடு நாட்டிற்கும் பெருமை
சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

You might also like