You are on page 1of 19

HBTL 1203

TATABAHASA BAHASA TAMIL 1


SEMESTER MEI 2021

TUGASAN INDIVIDU

PUSAT PEMBELARAN : TAIPING

NAMA : UMA DEVI A/P KIRUBANANTHEN


NOMBOR ID :
NOMBOR KAD PENGENALAN :
EMAIL :
HBTL 1203 2

உள்ளடக்கம்
தலைப்பு பக்கம்
1.0 முன்னுரை 3

2.0 வாக்கியத்தைப் பற்றிய சான்றோர் கூற்றும் சான்றுகளும் 6

3.0 தொடர் வாக்கியத்திற்கும் கலவை வாக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு 9

3.1 தொடர் வாக்கியம் 9

3.2 கலவை வாக்கியம் 10

4.0 தமிழ் மொழியில் வினைத்தொகையும் பண்புத்தொகையும் புதுப்புதுச்

சொற்றொடர்கள் உருவாக்க உதவும் பங்கு. 12

4.1 வினைத்தொகை 12

4.2 பண்புத்தொகை 14

5.0 இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கும் பண்புத்தொகைக்கும்

இடையிலானத் தொடர்பு 16

6.0 மேற்கோள் நூல்கள்/ அகப்பக்கங்கள் 19

1.0 முன்னுரை
HBTL 1203 3

‘நன்றே செய்; அதனை இன்றே செய்’ எனும் கூற்றினை ஒவ்வொரு முறையும் உணர்த்திச்
சென்ற முனைவர் அவர்களுக்கு நன்றிகள்! இப்பயில்பணியைச் செய்யத் துவங்குவதற்கு முன்பு
எனக்குள்ளே ஆயிரமாயிரம் கேள்விகள். எங்கே தொடங்கி எப்படி முடிக்கப் போகிறோம் என்ற பயம்.
ஆனால், இப்பயில்பணியத் துவங்கியப்பிறகு நான் படித்த பற்பல நூல்களிலிருந்து பல தகவல்களை
அறிந்து கொண்டேன். ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்ற பொழுது வாங்கி வைத்த பல நல்ல
பயன்மிகு நூல்களின் பயன்பாட்டை இப்பயில்பணியின் வழி உணர்ந்து கொண்டேன்.

இப்பயில்பணி வெறும் இலக்கண பயில்பணியாக மட்டும் இல்லாமல் தமிழ் மொழியின் மொழி


வளர்ச்சியில் சொல், சொற்றொடர், வாக்கியம் என இலக்கணம் புகுந்து விளையாடி உள்ளதையும்
தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. வாக்கியம் எனும் சொல்லே வடமொழிச் சொல்லாகும் என்ற
உண்மையைப் பேராசிரியர் வே.சங்கர் அவர்கள் எழுதிய ‘இயல் தமிழ் இலக்கணம்’ நூலின் வழியே
நான் அறிந்தேன். இதனைத் தமிழில் முற்றுத் தொடர் என்று வழங்குவர். வாக்கியம் எனும் சொல்
நடைமுறையில் அதிகப் பயன்பாட்டைப் பெற்றுத் தமிழ் மொழியில் ஒன்றி விட்டதன் காரணமாக
அந்தச் சொல்லே பயன்படுத்தப்படுகின்றது.

நவீன மொழியியலுக்கு ஒரு நூற்றாண்டுக் கால வரலாறுதான் உண்டு. 1916 இல்


வெளிவந்த, ஃபேடினன் டி சசூரின் பொதுமொழியியல் பாடநெறி (A Course in General
Linguistics) என்பதுதான் இத்துறை சார்ந்த முதல் நூல். அவ்வகையில் சசூர்தான் நவீன
மொழியியலின் முன்னோடி. இவர் 19 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் ஐரோப்பாவில்
வளர்ச்சியடைந்த ஒப்பியல், வரலாற்று மொழியியல் (Comparitive and Historical Linguistics)
புலமை வழிவந்தவர். ஒப்பியல், வரலாற்று மொழியியல் ஆய்வுகள்தாம் நவீன மொழியியலுக்கு
வித்திட்டன. 20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் நவீன மொழியியல் சிந்தனைகள் பெருவளர்ச்சி
பெற்றன. பல்வேறு மொழியியல் கோட்பாடுகளும் சிந்தனைப் பள்ளிகளும் கிளைகளும் வளர்ந்தன.
கடந்த ஒரு நூற்றாண்டுக் கால மொழியியல் வளர்ச்சியில் ஏராளமான சிந்தனையாளர்கள் பெரிதும்
பங்களித்துள்ளனர்.

மொழி மனித வாழ்வின், முன்னேற்றத்தின் மிகப் பிரதான கருவியாகும். வாழ்வின் சகல


துறைகளிலும் அது ஊடுருவி இருப்பதோடு, எல்லாத் துறைகளையும் இணைக்கும் ஊடுபாவாகவும்
செயல்படுகிறது. இதனால் மொழி ஆய்விலும் மொழிக் கல்வியிலும் மொழியியல் பிரிக்க
HBTL 1203 4

முடியாதவாறு பிணைந்துள்ளது. உலகெங்கிலும் நவீன கல்வித் துறையில் மொழியியல் முக்கிய


இடம்பெற்றுள்ளது. உலகின் வளர்ச்சியடைந்த பல்கலைக்கழகங்களில் எல்லாம் மொழியியலும்
பிரதான இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

இருப்பினும், நவீன மொழியியல் நமது மொழிச் சிந்தனையிலோ தமிழ் கற்றல்,


கற்பித்தலிலோ எவ்விதச் செல்வாக்கும் செலுத்தவில்லை. பள்ளிகளில் இலக்கணக் கல்வி என்பது
நன்னூல் கருத்துகளைச் சொல்லிக்கொடுப்பதாகவே இருக்கிறது. கற்பித்தல் இலக்கணம்
(Pedagogic Grammar) என்னும் கருத்தாக்கமே நமக்கு அறிமுகமாகவில்லை. மொழித்
தூய்மையை, இலக்கணத் தூய்மையைப் பேணுவதே தமிழ் கற்பித்தலின் நோக்கமாயிற்று. பள்ளி,
கல்லூரிப் பாடநூல்கள் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மாணவர்களின் மொழித்
தேவை என்ன? தமிழ்மொழியில் தேர்ச்சியைப் படிப்படியாக அவர்களிடம் எவ்வாறு ஏற்படுத்துவது?
எந்த வகுப்பில் எதைக் கற்பிப்பது, ஏன், எப்படிக் கற்பிப்பது என்பது பற்றி நாம் அதிகம்
சிந்திப்பதில்லை. நன்னூலில் உள்ள இலக்கணக் கலைச்சொற்களை எல்லாம் மாணவர்களுக்குச்
சொல்லிக்கொடுத்துவிட விரும்புகிறோம். மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய நமது
மதிப்பீடுகளையெல்லாம் அவர்களின் தலையில் சுமத்திவிட நினைக்கிறோம். அவர்களுடைய
மொழித்திறன் வளர்ச்சிக்கு இவையெல்லாம் அவசியமா என்று நாம் சிந்திப்பதில்லை. இதனால்,
பள்ளி, கல்லூரித் தமிழ் வேறாகவும் ஊடகங்களிலும் படைப்பிலக்கியங்களிலும் பயன்படும் தமிழ்
வேறாகவும் பிளவுண்டு கிடக்கிறது. இது ஆரோக்கியமான சூழல் அல்ல.

நமது மொழிச் சிந்தனையிலும் தமிழ்க் கல்வியிலும் புதிய, புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட


வேண்டுமானால் தமிழ்க் கல்வித் துறையில் மொழியியல் முக்கியத்துவம் பெற வேண்டும்.
மேலைநாடுகளில் மொழிக் கல்வியில் மொழியியல் பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ளது.
அதனால் அத்துறைகளில் அவர்கள் அதிக முன்னேற்றம் கண்டிருக்கின்றனர். மொழியியல்
தமிழுக்கு அறிமுகமாகி அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் நாம் அதை ஓரங்கட்டியே
வைத்திருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும். தமிழைத் தாய்மொழியாக, இரண்டாம்
மொழியாகக் கற்பித்தல், மாணவர்களின் மொழித் திறன் வளர்ச்சி, மொழி, இலக்கிய ஆய்வு
போன்றவற்றில் முன்னேற்றம் காண இது அவசியம்.
HBTL 1203 5

1950 களில்தான் தமிழில் மொழியியல் அறிமுகமானது. அக்காலத்தில் அமெரிக்க அமைப்பு


மொழியியல் அல்லது விளக்க மொழியியல் (Structural / Descriptive Linguistics) என
அழைக்கப்படும் கோட்பாடு முக்கிய மொழியியல் கோட்பாடாக ஆதிக்கம் பெற்றிருந்தது. அதில்
பயிற்சிபெற்ற சிலர்தான் தமிழ்நாட்டில் அதை அறிமுகப்படுத்தினர். இவர்களுள் முதன்மையானவர்
தெ.பொ. மீனாட்சிசுந்தரம். தமிழ்நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்தான் முதல்
மொழியியல் துறை உருவாக்கப்பட்டது. தெ.பொ.மீயிடம் பயின்று பின்னர் அமெரிக்காவில்
பயிற்சிபெற்ற தமிழ் மொழியியலாளர்கள் பலர் உருவாயினர். மு.சண்முகம்பிள்ளை,
வி.ஐ.சுப்பிரமணியம், ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம், கே.குமாரசாமி ராஜா, இ.
அண்ணாமலை முதலியோர் முதல் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் மொழியியலாளர்கள் எனலாம் .
இலங்கையில் க.கணபதிப்பிள்ளை இவ்வகையில் முன்னோடியாவார். அவரைத் தொடர்ந்து
சு.சுசீந்திரராஜா, திருக்கந்தையா, தனஞ்செயராஜசிங்கம், அ.சண்முகதாஸ் முதலியோர்
உருவானார்கள்.

தமிழ்நாட்டில் 1970, 80 களில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் கோவை பாரதியார்


பல்கலைக் கழகத்திலும் மொழியியல் துறைகள் உருவாக்கப்பட்டன. இலங்கையில் கொழும்பு
பல்கலைக்கழகத்தில் 1970 களின் தொடக்கத்தில் மொழியியல் துறை ஒன்று இயங்கியது.
பின்னர் அது களனி பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்பட்டது. 1980 களில் யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தில் ஒரு மொழியியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. பல ஐரோப்பிய நாடுகளிலும்
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கடந்த
பல சகாப்தங்களாகத் தமிழ் மொழியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த அளவிற்கு இல்லாவிடினும் அடியேன் தமிழ் மொழிப்பால் கொண்ட மோகத்தில் செய்த


இந்த சிறு ஆய்வு என் பயில்பணி கேள்விகளுக்குத் தக்கச் சான்றுகளோடு தரமான பதிலை
அளிக்கும் என பெரிதும் நம்புகிறேன்.

நன்றி.
HBTL 1203 6

2.0 வாக்கியத்தைப் பற்றிய சான்றோர் கூற்றும் சான்றுகளும்


வாக்கியம் என்பது ஒரே ஒரு முழுக் கருத்தைத் தெரிவிக்கும் சொற்கூட்டம் ஆகும். எழுவாயும்
பயனிலையும் அமைந்து, கருத்து முடிந்த இரு சொற்றொடர் அல்லது பல்சொற்றொடர் அமைப்பில்
இருப்பது வாக்கியம் எனப்படுகிறது.
முனைவர் ச. அகத்தியலிங்கம், தமது தமிழ் மொழி அமைப்பியல் நூலின் வழி
வாக்கியத்தை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
‘š츢Âõ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢ð¼ ¦º¡ü¦È¡¼÷¸û, ÌÈ¢ôÀ¢ð¼ «¨ÁôÒ Ó¨È¢ø
þ¨½óÐ ¿¢ýÚ ´Õ ÓüÚô¦À¡Õ¨Çò ¾Õõ ¦Á¡Æ¢Â¡ì¸õ ¬Ìõ’.
«.¸¢. ÀÃó¾¡ÁÉ¡÷, தமது நல்ல தமிழ் எழுத வேண்டுமா?நூலின் வழி வாக்கியத்தை
இவ்வாறு கூறுகிறார்.
‘š츢Âõ ±ýÀÐ ´Õ ÓØì¸Õò¨¾ò ¦¾Ã¢Å¢ìÌõ ¦º¡üÜð¼õ ±ýÚõ «¾¢ø
þÕ §ÅÚ ¸Õòиû þÕò¾øܼ¡Ð’.
இருவரின் கருத்துகளையும் ஆழமாக நோக்கினால் ஒரு உண்மை நமக்கு நன்கு புலப்படும்.
வாக்கியம் என்பது சொற்களால் ஆனது. இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
வாக்கியம் என்று சொல்வதற்குச் சில கூறுகளை அவ்வாக்கியம் கொண்டிருக்க வேண்டும்.
அப்படிக் கொண்டிருந்தால்தான் அது வாக்கியம்.
வழக்கமாக ஒரு வாக்கியத்தில் ஒரு பொருளைப் பற்றி ஒரு செய்தி இருக்கும். அந்த ஒரு
பொருளே எழுவாய் எனப்படுவது. வேறு வகையாகக் கூற வேண்டும் எனின் ஒரு வாக்கியத்தில்
எந்தப் பொருளைப் பற்றி ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தப் பொருளைக் குறிக்கும்
சொல் எழுவாய் எனப்படும்.

‘துருவன் பேசினான்’
என்பது ஒரு வாக்கியம்.

இவ்வாக்கியத்தில் இரண்டு சொற்கள் உள்ளன, முதல் சொல் துருவன்; மற்றொன்று பேசினான்.


இவ்வாக்கியத்தில் துருவன் என்பவனைப் பற்றி செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. என்ன செய்தி
என்றால் பேசினான் எனும் செய்தி. எனவே, ‘துருவன்’ என்பது எழுவாய்; ‘பேசினான்’ என்பது
பயனிலை.
HBTL 1203 7

ஒரு வாக்கியம் உருவாகக் கண்டிப்பாக ஒரு பொருள் தேவை. பொருள் என்ற ஒன்று
இல்லாவிட்டால் அதைப் பற்றிய செய்தி எதுவுமில்லை.வேறுவகையில் சொல்ல வேண்டுமாயின் ஒரு
பொருளைக்குறிக்கும் சொல் இல்லாவிட்டால் அதைப்பற்றிய செய்தியைக் குறிக்கும் சொல் இல்லை.
அந்த இரண்டு உறுப்புகளும் இன்றி வாக்கியமும் இல்லை. ஆதலால் வாக்கியம் உருவாக ஒரு
பொருளைக் குறிக்கும் சொல் காரணமாக அமைகிறது. அதனால், அஃது எழுவாய் எனப்படுகிறது.
வாக்கியம் எழுவதற்கு வாயாக இருப்பது எழுவாய். அந்த எழுவாயின் பயன் நிற்கும் இடம்
பயனிலை.

ஒரு வாக்கியத்திற்கு எழுவாய் பயனிலை ஆகிய இரண்டும் இன்றியமையாதவையாகும்.


அவற்றுள்வாக்கியத்தை துவக்க எழுவாய் காரணமாக அமைகிறது.பயனிலை என்பது எழுவாயின்
பயனை வாங்கி வாக்கியத்தை முடிக்கும் சொல் ஆகும்.

எழுவாய் பயனிலையோடு இன்னொரு உறுப்பும் வாக்கியத்தில் இருப்பதை நாம்


காண்கிறோம். அதைத்தான் செயப்படுபொருள் என்று குறிப்பிடுகிறோம்.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

இவ்வாக்கியம் உருவாக காரணமாக இருந்தது இளங்கோவடிகள். எனவே அஃது எழுவாய்.


இளங்கோ என்ன செய்தார்? இயற்றினார். எனவே இயற்றினார் என்பது பயனிலை. எதை
இயற்றினார் என வினவினால் சிலப்பதிகாரத்தை என விடை வருகிறது. சிலப்பதிகாரம் என்பது
செயப்படுபொருள். செயப்படுபொருளை செய்பொருள் என்றும் குறிப்பிடுவர். செயப்படுபொருள்
பெரும்பாலும் இரண்டாம் வேற்றுமை உருபுடனேயே தோற்றமளிக்கும். சில வேளைகளில்
அவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதும் உண்டு.

காரி பரிசில்கள் வாங்கினான்.

மேற்காணும் வாக்கியத்தில் பரிசில்கள் என்பது செயப்படுபொருள். அஃது இரண்டாம் வேற்றுமை


உருபாகிய ‘ஐ’ யை ஏற்று வராதிருப்பதைக் காண்க. சில வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை
உருபு மறைந்தும் சிலவற்றில் விரிந்தும் வரும் என்பது கவனிக்கத்தக்கது.
HBTL 1203 8

மேற்காணும் விளக்கத்திலிருந்து ஒரு வாக்கியத்தில் எழுவாய், பயனிலை செயப்படுபொருள் ஆகிய


மூன்றும் உறுப்புகள் என்றும் அவற்றில் எழுவாயும் பயனிலையும் வாக்கியத்தின் இன்றியமையாத
கூறுகள் என்பதும் தெரியவரும். செயப்படுபொருள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமையும்.

இதன்வழி, முனைவர் ச. அகத்தியலிங்கம், தமது தமிழ் மொழி அமைப்பியல் நூலில்


குறிப்பிட்டிருந்தது போல ‘š츢Âõ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢ð¼ ¦º¡ü¦È¡¼÷¸û, ÌÈ¢ôÀ¢ð¼
«¨ÁôÒ Ó¨È¢ø þ¨½óÐ ¿¢ýÚ ´Õ ÓüÚô¦À¡Õ¨Çò ¾Õõ ¦Á¡Æ¢Â¡ì¸õ
¬Ìõ’ என்பது உண்மையாகிறது.

மேலும், «.¸¢. ÀÃó¾¡ÁÉ¡÷, தமது நல்ல தமிழ் எழுத வேண்டுமா?நூலின் வழி


குறிப்பிட்டிருந்த ‘š츢Âõ ±ýÀÐ ´Õ ÓØì¸Õò¨¾ò ¦¾Ã¢Å¢ìÌõ ¦º¡üÜð¼õ
±ýÚõ «¾¢ø þÕ §ÅÚ ¸Õòиû þÕò¾øܼ¡Ð’ என்ற உண்மையும் நன்கு
புலப்படுகிறது.
HBTL 1203 9

3.0 தொடர் வாக்கியத்திற்கும் கலவை வாக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு


3.1 தொடர் வாக்கியம்
இரண்டு வாக்கியங்கள் ஒத்த நிலையில் இணையும்பொழுது உருவாகும் வாக்கியமே தொடர்
வாக்கியமாகும் என அகத்தியலிங்கம் கூறுகிறார். அவ்வாறு இணைகின்றபொழுது இது தலைமை
வாக்கியம் இது உறுப்பு வாக்கியம் என்ற வேறுபாடு இல்லாத நிலைப்பாடு இருக்கும்.

தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவரும்


வாக்கியமாகும்.ஓர் எழுவாய் பல பயனிலைகளையோ பல எழுவாய்கள் பல பயனிலைகளையோ
பெற்று வரும் வாக்கியம் தொடர் வாக்கியம் எனப்படுகிறது.

தொடர் வாக்கியங்கள் காரணகாரியம், முன்பின்மை, உடனிகழ்ச்சி, மறுநிலை,


முரணிலை, பலநிலை, ஒப்பீடு, வேற்றுமை முதலியவ்வற்றின் அடிப்படையில் அமையலாம் என்று
தேவநேயப்பாவாணர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு அமையும்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்கியங்கள் அதனால், இதனால்,


என்னும் சுட்டு முதற்கிளவிகளால் இணைக்கப்படலாம். ஆகையால், ஏனென்றால் என்னும்
காரணக்கிளவிகளால் இணைக்கப்படலாம். எனினும், இருப்பினும் போன்ற சொற்களால்
இணைக்கப்படலாம். கருத்துத்தொடர்பாலும் இணைக்கப்படலாம் எனப் பரந்தாமனார்
குறிப்பிடுகின்றார்.

மேற்குறிப்பிட்டிருந்தது போன்று இணைக்கப்பட்டவை எனக் கீழ்க்கண்ட தொடர் வாக்கியங்களைக்


கூறலாம்.

 வெயில் கடுமையாக உள்ளது; (அதனால்) புல்பூண்டுகள் நீரின்றி வாடுகின்றன.


 சாலைச் சந்திப்பில் பச்சை விளக்கு எரிந்தது; (ஆகையால்) வாகனங்கள் மெல்ல
நகரத்தொடங்கின.
 சிலர் சிரிப்பார்; சிலர் அழுவார்; நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்.(முரணிலை)
 ஒன்று முருகன் பதில் சொல்ல வேண்டும்; இல்லையெனின், அருகிலிருந்த கண்ணனாவது
விளக்கம் கூற வேண்டும்.(மறுநிலை)
HBTL 1203 10

 வீட்டில் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லை; ஆனால், வெளியில் கரை போட்ட


வெள்ளை வேட்டிக்குக் குறைவில்லை. (ஓப்பீடு)
 பலர் பல மாதிரி; அதில் நான் ஒரு மாதிரி. (வேற்றுமை)
 அவன் அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்கிறான்; ஏனெனில், அவனிடம் சாதக
பாதகங்களை ஆராய்ந்து ஒரு செயலில் ஈடுபடும் நற்பழக்கம் இல்லை. (காரணக்காரியம்)

கீ ழே உள்ள வாக்கியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப்

பெற்று வந்துள்ளன;  கருத்துத் தொடர்புடனும்

அமைந்துள்ளன.  இவ்வாறு,  தனி வாக்கியங்கள் பல,  தொடர்ந்து

வருவதும்,  ஒரே எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வருவதும்

தொடர் வாக்கியம் எனப்படும்.

 செல்வி காலையில் எழுந்தாள்; கருத்துடன் கற்றாள்; வாழ்வில்

உயர்ந்தாள். 

 அன்பரசன் அயராது உழைத்தான்; அதனால் வெற்றிபெற்றான். 

 சமயம் என்பது நன்னடத்தை; வெறும் நம்பிக்கை அன்று.

 
3.2 கலவை வாக்கியம்
கலவை வாக்கியமோ தொடர் வாக்கியத்திற்கு முரணானத் தன்மைகளைக்
கொண்டுள்ளது.

ஒரு வாக்கியத்தின் உள்ளே இன்னொரு வாக்கியத்தை முன்னதன் பகுதியாக அல்லது உறுப்பு


வாக்கியமாக இணைக்கும்பொழுது உருவாகும் வாக்கியம் கலவை வாக்கியம் எனப்படும் என
அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார். அவ்வாறு வாக்கியங்கள் அமைகின்றபொழுது ஒன்று முதன்மை
வாக்கியமாகவும் மற்றவை சார்பு வாக்கியங்களாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
HBTL 1203 11

முதன்மை வாக்கியத்தைத் தலைமை வாக்கியம் என்றும் சார்பு வாக்கியத்தை உறுப்பு வாக்கியம்


என்றும் சுட்டுவதுண்டு.

உதாரணமாக,
 “யாமார்க்கும் குடியல்லோம்” என அப்பர் அடிகள் பாடினார்.
 மேற்காணும் வாக்கியத்தில் முதன்மை வாக்கியம் ‘ அப்பர் அடிகள் பாடினார்’
என்பது. சார்பு வாக்கியமாக “யாமார்க்கும் குடியல்லோம்” என்பது வந்துள்ளது.
 ‘ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்’ எனத் திருவள்ளுவர்
அறிவுரை கூறியுள்ளார்.
 ‘ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்’ என்பது சார்பு
வாக்கியம். ‘திருவள்ளுவர் கூறியுள்ளார்.’ என்பது முதன்மை வாக்கியம்.

 நாடு முன்னேற வேண்டுமானால் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.


 இவ்வாக்கியத்தில், நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பது
முதன்மை வாக்கியம். ‘நாடு, முன்னேற வேண்டுமானால்’ என்பது சார்பு
வாக்கியம்.

 ‘ஆண் மக்களே! பெண் இனத்திற்கு மதிப்புக் கொடுங்கள்; உரிமை கொடுங்கள்; அதுவே


நாகரிகம்’ என்று திரு.வி.க கூறுவார்.
 இவ்வாக்கியத்தில், திரு.வி.க. கூறுவார் என்பது முதன்மை வாக்கியம். ‘பெண்
இனத்திற்கு மதிப்புக் கொடுங்கள்; உரிமை கொடுங்கள்; அதுவே நாகரிகம்’
என்பன சார்பு வாக்கியங்கள்.

இவ்வாறு ஒரு முதன்மை வாக்கியம் அதனோடு தொடர்புடைய ஒரு வாக்கியத்துடனோ, பல


சார்பு வாக்கியங்களுடனோ பொருந்த வருவது கலவை வாக்கியம் ஆகும்.

மேற்குறிப்பிட்ட உதாரணங்களின் வழி தொடர் வாக்கியத்திற்கும் கலவை வாக்கியத்திற்கும்


உள்ள வேறுபாடு தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்தத
் ப்படுகிறது.
HBTL 1203 12

4.0 தமிழ் மொழியில் வினைத்தொகையும் பண்புத்தொகையும் புதுப்புதுச்


சொற்றொடர்கள் உருவாக்க உதவும் பங்கு.
4.1 வினைத்தொகை
தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து
ஒருசேரக் குறிக்குமாறு வரும் ஒரு பெயர்ச்சொல். பரவலாக எடுத்துக்காட்டப்படும்
சொல் ஊறுகாய் என்பது. இச்சொல் ஊறுகின்ற காய், ஊறின காய், ஊறும் காய் என முக்கால
வினைகளையும் குறிக்கும். இதே போல வீசுதென்றல் என்னும் பொழுது வீசுகின்ற தென்றல்
(தெற்கு நோக்கி மென்மையாக வீசும் காற்று), வீசிய தென்றல் , வீசும் தென்றல் என்று முக்கால
வினையையும் குறிக்கும்.

வினைத்தொகை ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச்


சொல் ஆகும். முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும், பின்வரும் சொல் பெயர்ச்சொல்லாக
இருக்கும். முன்வரும் வினைச்சொல், மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் சொல்லாக
அமையும்.

எடுத்துக்காட்டுகள்
 ஊறுகாய்- ஊறின காய்-இறந்த காலம்
          ஊறுகின்ற காய்-நிகழ்காலம்
          ஊறும் காய்-எதிர்காலம்

 நிகழ்த்துகலை- நிகழ்தத
் ிய கலை-இறந்த காலம்
HBTL 1203 13

          நிகழ்த்துகின்ற கலை -நிகழ்காலம்


          நிகழ்த்தும் கலை -எதிர்காலம்

 வீசுதென்றல்- வீசிய தென்றல்-இறந்த காலம்


          வீசுகின்ற தென்றல் -நிகழ்காலம்
          வீசும் தென்றல் -எதிர்காலம்

 கடிநாய்- கடித்த நாய்-இறந்த காலம்


கடிக்கின்ற நாய்-நிகழ்காலம்
கடிக்கும் நாய் -எதிர்காலம்

 படர்கொடி- படர்ந்த கொடி-இறந்த காலம்


படர்கின்ற கொடி-நிகழ்காலம்
படரும் கொடி-எதிர்காலம்

 சுடுசோறு - சுட்ட சோறு-இறந்த காலம்


சுடுகின்ற சோறு-நிகழ்காலம்
சுடும் சோறு-எதிர்காலம்

 குடிநீர் - குடித்த நீர்-இறந்த காலம்


   குடிக்கின்ற நீர்-நிகழ்காலம்
குடிக்கும் நீர்-எதிர்காலம்

இதைப்போல எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே


வினைத்தொகை ஆகும். இவ்வரிசையில் மேலும் சில சான்றுகள் உள்ளன.
 ஏவுகணை
 அலைபேசி
 நகருயிர்
HBTL 1203 14

 ஓடுதளம்
 ஆடுகளம்
 தாழ்பூந்துறை

4.2 பண்புத்தொகை

பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல். ஒரு


பண்பைக் குறிப்பது பண்புப்பெயர்.இது பெயர்ச்சொல்லில் ஒரு வகை; ஏதேனும் ஒரு பண்பு தொக்கி
நிற்கும் ஒரு பெயர்ச்சொல். இவ்வாறு தொக்கி நிற்பதால் இதற்கு பண்புத்தொகை எனப் பெயர்.

நிறம், அளவு, குளிர் வெப்பம் போன்று ஏதேனும் ஒரு பண்பு தொக்கி நிற்கும் ஒரு
பெயர்ச்சொல். எடுத்துக்காட்டாக செந்தாமரை என்பது செம்மை நிறம் உள்ள தாமரை என்று
பொருள். இதில் செம்மை என்னும் பண்பு தொக்கி செந்தாமரை என்று உருவானதால் இவ்வகைப்
பெயர்ச்சொல்லுக்குப் பண்புத்தொகை என்று பெயர். செந்தாமரை - இதனைச் செம்மை ஆகிய
தாமரை என விரித்தல் வேண்டும். செம்மை என்பது பண்பு (நிறம்) ஆகிய எனும் உருபு
மறைந்திருப்பதால் பண்புத் தொகையாம். பண்புத் தொகையில் "மை' எனும் விகுதியும் "ஆகிய'
எனும் உருபும் மறைந்திருக்கும். உம் எனும் இடைச்சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை.

எடுத்துக்காட்டாக,
 நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை, கருமை
 வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் - வட்டம், சதுரம்.
 சுவையைக் குறிக்குஞ் சொற்கள் - இனிமை, கசப்பு
 குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் - நன்மை, தீமை
HBTL 1203 15

 எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு


வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டுக்கள் (முறையே):
 வெண்கரடி = வெண்மை + கரடி
 வட்டக்கோடு = வட்டமான கோடு
 புளிச்சோறு = புளிக்கும் சோறு
 பெருங்கடல் = பெருமை (பெரிய) + கடல்
 மூவேந்தர் = மூன்று + வேந்தர்

தமிழில் ஒரு பொதுப் பெயரும் சிறப்புப் பெயரும் சேரும் பொழுது இணைத்து எழுத
வேண்டும் என்பது விதி, அவை ஒரு வாக்கியமாகத் தான் கருத்தப்படுகிறது. அவ்வாறே
வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை இரண்டுமே பல்வேறு புதுப்புதுச் சொற்களைத் தமிழ்
மொழியில் உருவாக்குவதற்கு பெரும் பங்காற்றுகின்றன.

தற்போதைய காலக்கட்டத்தில்,குறுந்தகடு, கணிப்பொறி, வன்தகடு போன்ற சொற்கள்


பயன்பாட்டில் உள்ளன. இச்சொற்களை நாம் நன்கு ஆராய்நத
் ோமேயானால் மேற்குறிப்பிட்டிருந்த
விதிகள் நமக்கு புலப்படும்.

குறுகிய + தகடு = குறுந்தகடு (பண்புத்தொகை)


கணிக்கும் + பொறி = கணிப்பொறி (வினைத்தொகை)
வன்மையான தகடு = வன்தகடு (பண்புத்தொகை)

உருவாகும் சொல் எந்தச் சூழ்நிலையிலும் ஒரே பொருளை கொடுக்க வேண்டும், அப்பொழுது


தான் அச்சொல் காலத்தை கடந்து நிற்கும், மேலும் மரபில் அமைந்தால் மட்டுமே ஒருவர் அதை
ஆராய முடியும்.

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.’


‘பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும், சொல்லின் ஆகும்' என்மனார் புலவர்
HBTL 1203 16

ஒரு சொல், ஒரு பொருளையும், அதன் தன்மையையும் விவரிக்க வேண்டும். இதன் படி
அமைப்பதே தமிழ் மரபு. எல்லா மொழிகளிலும் வேர்ச்சொல்லில் இருந்து வந்த பல சொற்றொடர்கள்
சொல்லாக ஆளப்படுகிறது. டெலிவிஷன், டெலிபதி, டெலெஸ்கோப், டெலிஃபோன் போன்றவை
இதே முறையில் உருவான ஆங்கிலச் சொற்களாகும்.

இனி வரும் காலங்களிலும் பல புதிய சொற்கள் உருவாகத்தான் போகின்றன.இப்படி அடுத்து


அடுத்து வரப் போகின்ற எல்லாச் சொற்களிலும் வினத்தொகை, பண்புத்தொகையின் பங்கு
இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

5.0 இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கும் பண்புத்தொகைக்கும் இடையிலானத்


தொடர்பு

இருபெயரொட்டுப் பண்புத்தொகை பண்புப் பெயர் இடம் பெறாத பண்புத் தொகை ஆகும்.


பண்புப் பெயர்ச் சொற்களுடன் வேறு சொற்கள் சேர்ந்து வந்து ஆகிய எனும் சொல் ‌மறைந்து
வருவது பண்புத் தொகை எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது பொதுப்
பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ சேர்ந்தமைந்து ஒரு பொருளை
உணர்த்துவதாகும். பண்புத் தொகை போல இங்கும் “ஆகிய‌” எனும் சொல் மறைந்து ‌நிற்கும்.
சிறப்புப் பெயர்ச் சொற்கள் பண்புப் பெயர்ச் சொற்கள் ஆகாவிடினும் பண்புத் தொகை போல
“ஆகிய” எனுஞ்சொல் மறைந்து நிற்றலால் இது இருபெ‌யரொட்டுப் பண்புத் தொகை எனப்பட்டது.

எடுத்துக்காட்டுகள்:

 பலாமரம்  என்ற சொல்லில் பலா என்பது சிறப்புப் பெயர். மரம் என்பது பொதுப்பெயர்.
 பலாவாகிய மரம் என்று வர வேண்டும். இதில் ஆகிய என்ற சொல் மறைந்து வந்துள்ளது.
 ஆதலால் பலாமரம் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
 
HBTL 1203 17

 வெள்ளைத் தாமரை  என்ற சொல்லில் தாமரை என்பது பொதுப்பெயர். வெள்ளை என்பது


சிறப்புப் பெயர். இதில் தாமரையின் நிறப் பண்பு உணர்த்தப்படுகிறது.

இவ்வரிசையில் மேலும் சில சான்றுகள் உள்ளன.

 சாரைப்பாம்பு
 முத்துப்பல்
 தென்னைமரம்
 தாமரைப்பூ
 மாமரம்
 தைத்திங்கள்
 வாழைமரம்
 மார்கழிதிங்கள்
 தமிழ்மொழி
 மருந்துக்கடை
 கன்றுக்குட்டி
 மல்லிகைப்பூ
 குமரிப்பெண்
 கடல்நரீ ்
 தமிழ்ச்சங்கம்
 தமிழ்ப்பள்ளி
 நெல்லிக்கனி
 வாழைக்குலை
 வட்டப்பலகை
       

 இவை எல்லாம் இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்குச் சான்றுகள் .

 இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும். அதாவது வருமொழி முதலில் க ச த ப


என்ற எழுத்துகளில் ஏதாவது ஒன்று வந்தால் அது மிகும்.
HBTL 1203 18

 சாரை  +  பாம்பு  =  சாரைப்பாம்பு


 கன்று  +  குட்டி    =  கன்றுக்குட்டி
 தை  +  திங்கள்    = தைத்திங்கள்
 உழவு  +  தொழில்  =  உழவுத்தொழில்
 தாமரை +  பூ  =  தாமரைப்  பூ
 வாழை  +  குலை  =  வாழைக்குலை
 பலா  + பழம்  =  பலாப்பழம்
 பச்சை  +  பட்டு   =  பச்சைப்பட்டு

சில இடங்களில் முதலில் பொதுப்பெயரும் சிறப்புப் பெயர்  இரண்டாவதாகவும் வருதலும் உண்டு.

எடுத்துக்காட்டாக,

 மன்னர் செங்குட்டுவன்
 புலவர் கம்பர்
 ஆசிரியர் மாணிக்கம்
 தலைநகர் டெல்லி

போன்ற சொற்களில் மாறி வந்துள்ளதைக் காணலாம். இவையும் இருபெயரொட்டுப்


பண்புத்தொகையே ஆகும்.

இதுவரையில் நாம் கண்ட எல்லா எடுத்துக்காட்டுகளிலும் நமக்குத் தெளிவாக


ஒன்று தெரிய வருகிறது. அதாவது, பண்புத் தொகைக்கும் இருபெயரொட்டுப்
பண்புத்தொகைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சிறப்புப் பெயர்ச் சொற்கள் பண்புப் பெயர்ச்
சொற்கள் ஆகாவிடினும் பண்புத் தொகை போல “ஆகிய” எனுஞ்சொல் மறைந்து தான் நிற்கிறது.
HBTL 1203 19

6.0 மேற்கோள் நூல்கள் / அகப்பக்கங்கள்

பரந்தாமனார், அ.கி. (2002). நல்ல தமிழ் எழுத வேண்டுமா?. சென்னை: பாரி நிலையம்.

அகத்தியலிங்கம்,ச. (2002). தமிழ் மொழி அமைப்பியல். சென்னை: மெய்யப்பன் தமிழாய்வகம்.

தேவநேயப்பாவாணர், ஞா. (2000). இயற்றமிழ் இலக்கணம். சென்னை: தமிழ் மண் பதிபகம்.

ஆறுமுக நாவலர்.(1993). தமிழ் இலக்கணம் (இலக்கணச்சுருக்கம்). சென்னை: முல்லை


நிலையம்.

சங்கர், வே. (2006). இயல் தமிழ் இலக்கணம். சென்னை: நன்மொழிப் பதிபகம்.

https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24331&cat=21

https://eegarai.darkbb.com/t94073-topic

You might also like