You are on page 1of 2

தற்காலத்தில் தொலைபேசி என்பது எம்மவர்கள் அனைவரின் வாழ்விலும்

இன்றியமையாத ஒரு சாதனமாக அமைந்து காணப்படுகிறது. அதிலும்


இளைஞர்கள் மத்தியில் தொடுதிரை தொலைபேசி மிகவும் பிரசித்தமான
ஒன்றாக காணப்படுகிறது.
பல நன்மைகளையும், தீமைகளையும் செய்கின்ற தொடுதிரை
தொலைபேசியை இயக்குகின்ற இயக்கத்தளமாக காணப்படுகின்ற
ஆன்ட்ராய்டானது google என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்படுகிறது.
இந்த ஆண்ட்ராய்டு பல மக்களால் அரக்கன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த
ஆண்ட்ராய்டு அரக்கன் பற்றியும், இவ்வாறு இது அழைக்கப்படுவதற்கான
காரணம் பற்றியும் நோக்குவோம்
ஆண்ட்ராய்டு தொழில்நுட்பமானது 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2008
ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி ஆண்ட்ராய்டு இயக்குதளத்தின் முதல்
பதிப்பு வெளியிடப்பட்டது.
முதன்மையாக தொடுதிரையுடன் கூடிய செல்லிடப்பேசிக்காக
உருவாக்கப்பட்ட ஒரு இயக்கத்தளம்தான் ஆண்ட்ராய்டு இயக்கத்தளம் ஆகும்.
ஆண்ட்ராய்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த செல்லிடப்பேசிகள் பிறகு
கூகுள் (Google) நிறுவனத்தினால் வாங்கப்பட்டு, அவற்றின் மூலம் முதன்
முதலில் HTC யின் G1 ஸ்மார்ட் போனில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின்னர் தொடுதிரையின் தொலைநுட்பம் வளர்ச்சி பெறவே MOTOROLA,
SAMSUNG ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்களில் ஆண்ட்ராய்டு
இயக்குதளம் பயன்படுத்தப்பட்டது. தற்போது Open Handset Alliance (OHA)
இன்று நிறுவனத்தினாலும் உருவாக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு தொலைபேசி இயக்குத்தளமானது பல மக்களால்
ஆண்ட்ராய்டு அரக்கன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு
இயங்குதளமே முதன் முதலில் தொடுதிரை தொலைபேசியை அறிமுகம்
செய்தது.
இதன் காரணமாக கல்வி கற்கும் மாணவர்கள் தொடக்கம் இளைஞர்கள்
அனைவரும் அதில் மூழ்கி அதனையே தம்முடைய வாழ்வாக எண்ணி
சுற்றுச்சூழலில் நடப்பவற்றை கண்டிராது, இந்தத் தொலைபேசியில்
மூழ்கிக் காணப்படுகின்றனர்.
இதில் காணப்படும் play store இல் எத்தனை விளையாட்டுகளையும்
(Games), பதிவிறக்கி கொள்ளலாம். இதன் மூலம் அதிகப்படியானோர்
இதற்கு அடிமையாகி உள்ளனர்
எந்த ஒரு தொலைத்தொடர்பு சாதனங்களிலும் நன்மையான
விடயங்களும், தீமையான விடயங்களும் காணப்படுகின்றன.
ஆண்ட்ராய்டு இயக்கத்தலமானது அதிகப்படியான விஷயத்தை
தன்மைகளை வழங்குவதன் நோக்கம் எம்முடைய நேரத்தையும்,
சேவைகளையும் விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே என்பதை உணர்ந்து
சரியான முறையில் பயன்படுத்துவது எம் ஒவ்வொருவரின்
கடமையாகும்.

You might also like