You are on page 1of 1

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு (AI ) என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு மற்றும் இதனை


உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணினி அறிவியலின்ஒரு பிரிவாகும். பெரும்பாலான
AI உரைநூல்கள் இத்துறையினை "நுண்ணறிவுக் கருவிகளைப் பற்றிப் படித்தல் மற்றும்
வடிவமைத்தல்" என வரையறுக்கின்றன,[1] இதில் நுண்ணறிவுக் கருவி என்பது, தன்
சூழ்நிலையை உணர்ந்து அதிக வெற்றி வாய்ப்புகளுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஒரு
அமைப்பாகும்.[2] ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956 இல் இந்தச் சொல்லை
அறிமுகப்படுத்தி,இதனை "நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல் மற்றும்
பொறியியல்" என வரையறுத்தார்.

AI இன் பயன்பாடுகள்
செயற்கை நுண்ணறிவானது மருத்துவ அறுதியிடல், பங்கு வணிகம், ரோபோ
கட்டுப்பாடு, சட்டம், அறிவியல் கண்டுபிடிப்பு, வீடியோ விளையாட்டுக்கள், பொம்மைகள் மற்றும்
வலை தேடு பொறிகள் உட்பட பெரும்பால துறைகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது. ஒரு தொழில்நுட்பமானது பிரதானப் பயன்பாட்டிற்கு புழக்கத்திற்கு
வந்துவிட்டால், அதன் பின்னர் அது செயற்கை நுண்ணறிவு என்று கருதப்படுவதில்லை, இதை
AI விளைவு என்பர்.அது செயற்கை வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கப்படவும் கூடும்.

You might also like