You are on page 1of 1

விவிலிய வினாக்கள் - 3

(பிலிப்பியர், கொலோசையர் , தெசலோனிக்கர் 1,2, தீமோத்தேயு 1,2, தீத்து, பிலமோன் திருமுகங்கள்)

பெயர்: மை. பிரான்சிஸ் தனராஜ்

அன்பியம்: முடியப்பர் குடும்ப எண்: 21/398


_____________________________________________________________________________
1. பவுலுக்கு உதவிட பிலிப்பியர்களால் அனுப்பப்பட்டவர் பெயர் என்ன?

எப்பப்பிராதித்து பிலிப் 2:25

2. கிறிஸ்தவர்களின் தாய்நாடு என பவுல் குறிப்பிடுவது எது?

விண்ணகமே தாய்நாடு பிலிப் 3:20

3. திருச்சபையாகிய உடலுக்கு தலை யார்?

கிறிஸ்து. கொலோ1:18

4. பவுல் லூக்காவை எவ்வாறு அழைக்கிறார்?

அன்பார்ந்த மருத்துவர் கொலோ4:14

5. எந்த திருச்சபையிலிருந்து வரும் திருமுகத்தை பவுல் வாசிக்கக் சொல்கிறார்?

லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து கொலோ4:16

6. பவுல் தெசலோனிக்காவுக்கு யாரை அனுப்பினார்?

திமொத்தேயுவை 1 தெச 3:3

7. பவுல் தெரிவிக்கும் மார்புக்கவசம் எவை?

நம்பிக்கையும் அன்பும் 1 தெச 5:8

8. பவுல் உழைப்பைப்பற்றி கூறுவது என்ன?

“உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” 2 தெச 3:10

9. தீமோத்தேயு, தீத்துவுக்கு எழுதப்பட்ட திருமுகங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

ஆயர் பணித் திருமுகங்கள்

10. எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் எது?

பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் 1 திமொ 6:10

11. தீமோத்தேயுவின் பாட்டி, தாய், பெயர்கள் என்ன?

பாட்டி - லோயி & தாய் - யூனிக்கி. 2. திமொ 1:5

12. தன்னுடன் இருப்பதாக பவுல் குறிப்பிடுவது யாரை?

லூக்கா மட்டுமே 2. திமொ 4:11

13. கிரேத்துத் தீவில் தீத்துவை பவுல் எதற்காக விட்டு வந்தார்?

மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த தீத் 1:5

14. சேனா என்ன பணி செய்கிறார்?

வழக்கறிஞர் தீத் 3:13

15. பவுலுக்காக உடன் உழைப்பாளர்களாக இருந்தவர்கள் யாவர்?


பிலமோன் மற்றும் சகோதரி அப்பியா பில 1:1

You might also like