You are on page 1of 5

8.

அந்திம கால நாவல் இன்றைய இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் சிறந்து

விளங்க எடுத்துரைக்கும் படிப்பினைகளைச் சான்றுகளோடு ஆராய்க.


[25]

முன்னுரை:

- அந்திம காலம் நாவல் மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவரான முனைவர்

ரெ.கார்த்திகேசு

அவர்களின் சிந்தனையில் மலர்ந்த நாவலாகும்.

- 1952-ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதை ‘தமிழ் முரசு’ மாணவர் மணிமன்ற மலரில்

பிரசுரமாகியது. அதிலிருந்து தொடர்ச்சியாக நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்,

கவிதைகளை, வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார்.

- பணி ஓய்வு பெற்ற ஆசிரியரின் வாழ்க்கையில் நிகழும் முக்கிய நிகழ்வுகளைச் சித்தரிக்கும்

நாவலாக உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை என்பது நீடித்து, நிலைப்பெற்ற ஒன்றல்ல,

மாறாக வாழ்க்கை என்பது நிலையாமை என்பதைக் கருவாகக் கொண்டு இந்நாவல்

அமைகின்றது.
[3]

கதைச்சுருக்கம்:

- பணி ஓய்வு பெற்ற ஆசிரியரான சுந்தரம், தன்னுடைய வாழ்க்கையை எப்பொழுதும்

ஒரு

கட்டுக்கோப்பிலேயே வைத்திருந்தார்.

- ஆனால், இவருக்கு மூளைப் புற்றுநோய் இருக்கின்றது என மருத்துவர்கள்

கூறியவுடன்

கலங்கிப் போகின்றார்.

- இந்நிலையில் சுந்தரத்திற்கு அவருடைய மனைவி ஜானகி, நண்பரான

இராமச்சந்திரன், மதர்

மேகி ஆகியோர் அவருக்கு ஆறுதலாக இருக்கின்றனர்.

- அவருடைய மாணவரான டாக்டர் ரம்லியின் சிகிச்சையால் குணமடைகிறார்.

இதற்கிடையில்

- அவர் பேரனான் பரமு இரத்தப் புற்றுநோயால் இறக்கின்றான். ஜானகியும் அத்தையும்

இறந்து விடுகின்றனர்.
- அவரின் மகளான ராதா- சிவமணியின் திருமண வாழ்க்கையும் கலைந்து மீண்டும்

தழைக்கத்

துவங்குகின்றது. தன் அக்காள் அன்னத்துடன் மீதி நாள்களைச் சுந்தரம் கழிக்கின்றார்.

- இன்றைய இளைய தலைமுறையினர் பயனடையும் வகையில் பல அரிய

படிப்பினைகளை

ஆசிரியர் இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.


[4]

கருத்துகள்:

இல்லற வாழ்க்கையை மதிக்க வேண்டும்

- இளைய தலைமுறையினர் இல்லற வாழ்க்கையை மதித்து செயல்பட வேண்டும்.

- இந்நாவலில் சிவமணி மற்றும் ராதா வாழ்க்கை, காதலித்து திருமணம் புரிந்தவர்கள்.

ஆனால் கால ஓட்டத்தில் இருவரின் வாழ்க்கையும் திசை மாறியது. திருமணம் புரிந்து சில

வருடங்களில் இருவருக்குமே திருமண வாழ்க்கை கசந்து போனது. சிவமணியும் புகை

பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தன் மனைவியான ராதாவையும் பல

துன்பங்களுக்கு ஆளாக்கினான்.

- இளைய தலைமுறையான ராதா துணிந்து தன் இல்லற வாழ்க்கையைத் துச்சமாக எண்ணி

செயல்படுகிறாள். அதற்கேற்றவாறு அவள் கணவனான சிவமணியும் தன்

குணாதிசயங்களை மாற்றிக் கொண்டு மனைவியிடம் கொடுமையாக நடந்து

கொள்கிறான்.

- திருமணத்திற்கு முன்பு இருந்த காதல் திருமணத்திற்குப் பின் பெரும்பாலும்

இருப்பதில்லை. இதனால் இல்லற வாழ்க்கை பாதிப்படைகிறது.

- ஆகவே இந்நாவல் கணவன் - மனைவி இருவருமே இல்லற வாழ்க்கையில் விட்டுக்

கொடுத்து, புரிந்துணர்வோடு வாழ்ந்தாலே இல்லற வாழ்க்கையைச் சிறப்பாக நடத்த

முடியும் என்ற படிப்பினையை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துணர்த்துகிறது.


-

நேர்மையான வழியில் பணத்தைத் தேட வேண்டும்.


- இளைய தலைமுறையினர் வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்தை

நேர்மையான வழியில் ஈட்ட வேண்டும்.

- சிவமணி கதாப்பாத்திரத்தின் வழி குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேற

பேராசைப்படக்கூடாது என்ற படிப்பினையை இன்றைய தலைமுறையினருக்கு

இந்நாவல் வழி உணர்த்தப்படுகின்றது.

- எ:கா: சிவமணி தனது மனைவியிடம் பலமுறை புதிய தொழில் தொடங்கப் போவதாகக்

கூறி பணத்தைக் கேட்டு துன்புறுத்தினான். ராதா கொடுக்கவில்லையென்றால் அவளை

அடித்து கொடுமைப்படுத்தினான்.

- இதனால் அவனின் குடும்ப வாழ்க்கை நிம்மதியற்று காணப்பட்டது. எ:கா: ராதா அவனை

விட்டு லண்டனில் உள்ள காதலனைத் தேடிச் செல்கிறாள். மகன் பரமா ரத்தப் புற்று

நோய்க்கு ஆளாகி இறக்கிறான்.

- ஆகவே, வாழ்வில் முன்னேறுவதற்குச் சுயகாலில் நின்று நேர்மையான முறையில்

சம்பாதித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை முறையாகும் என்ற படிப்பினையை இந்நாவல்

இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துணர்த்துகிறது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

- செய்யும் தொழிலில் நேர்மையைக் கடைப்பிடித்தால் வாழ்வில் அனைத்து

சவால்களையும் முறியடித்து வெற்றி காண முடியும் என்ற படிப்பினையை இந்நாவல்

சுந்தரம் கதாபத்திரத்தின் வழி இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துணர்த்துகிறது.

- தன்னைச் சூழ்ந்துள்ள மனிதர்களுக்குத் தான் துன்பம் தராதவாறு நடந்து கொள்ள

வேண்டும் என்று மனதளவில் நினைத்துச் செயல்பட்டவர் சுந்தரம்.

- எ:கா: தனது வேலையை ராஜினாமா செய்வதைக்கூட பொருட்படுத்தாது அநீதிக்குத்

துணைப்போக மாட்டேன் என்று தன்னுடைய பணியில் மிகவும் நேர்மையுள்ளவராகவே

உலா வந்து வெற்றியும் கண்டார்.

- ஆகவே, தொழிலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கூறுகளைக் கடைப்பிடித்தால்,

கண்டிப்பாக அநீதியை அழித்து நீதியை நிலை நாட்ட முடியும் என்ற படிப்பினையை


இந்நாவல் சுந்தரம் கதாபத்திரத்தின் வழி இன்றைய தலைமுறையினருக்கு

எடுத்துணர்த்துகிறது.

வாழ்க்கையின் எதார்த்தங்களைப் உணர்ந்து வாழ வேண்டும்.

- மனிதர்களின் வாழ்க்கை நிலையற்றது. ஆகவே, வாழ்க்கையில் நிகழும் அனைத்துச்

செயல்களையும் எதார்த்தப் போக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இன்றைய

இளைய தலைமுறையினருக்கு ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.

- துன்பத்தை நினைத்துத் துவண்டு விடாமல் அதனை எதிர்கொண்டு சமாளித்து வாழ

வேண்டும் என்பதனைச் சுந்தரத்தின் கதாப்பாத்திரத்தின் வழி அறிய முடிகின்றது.

- எ:கா: இந்நாவலில் சுந்தரம் தனக்கு நோய் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தும், அதைப்

பொருட்டாக என்ணாமல் தனது தினசரி வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறார்.

- அதிகமானோர் தங்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டால் அதை ஒரு சுமையாக

பார்க்கின்றார்களே ஒழிய அதனை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதனைச் சிந்திக்க

மறுக்கின்றனர். இதனால் மன உளைச்சலில் சிக்குண்டு துன்பப்படுகின்றனர்.

- ஆகவே வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை எதார்த்தப் போக்கில் எடுத்துக் கொண்டு

அன்றாட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று இந்நாவல் சுந்தரத்தின் கதாபாத்திரத்தின்

வழி இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துணர்த்துகிறது.

அன்பும் அரவணைப்பும் கொண்டு வாழ வேண்டும்.

- பிறர் மீது அன்பும் அரவணைப்பும் கொண்டு வாழ வேண்டும் எனும் கருத்தும்

இந்நாவல் வழி இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.

- எ:கா: மதர் மேகி, மௌண்ட் மிரியம் என்ற மருத்துவமனையில் வேலை செய்கின்றார்.

அங்குத்தான் சுந்தரமும் தனது மூளைப் புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றார்..

அவர் சுந்தரத்திடம் அன்பாகவும், ஆறுதலாகவும் நடந்து கொண்டார். மதர் மேகியின்

ஆறுதலும் அன்பும் சுந்தரத்திற்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது.

நண்பர் இராம சந்திரனின் துன்பத்தில் துணை நிற்கும் அன்பான பண்பும் சுந்தரத்திற்கு

நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது.


- ஆகவே, எல்லா சூழ்நிலைகளிலும் நமது வாழ்வில் அனைவரிடமும் அன்புடன் நடந்து

கொள்ள வேண்டும். பிறர் மகிழ்ச்சியோடு வாழ நம்மால் இயன்றவரை உதவி செய்ய

வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள

முயற்சிக்க வேண்டும் என்ற படிப்பினையை இந்நாவல் மதர் மேகி மற்றும்

இராமச்சந்திரன் கதாபாத்திரங்களின் வழி இன்றைய தலைமுறையினருக்கு

எடுத்துணர்த்துகிறது.

1 கருத்து /விளக்கம், எ:கா, நி.பா : 4 மதிப்பெண்

4 கருத்து : 4x 4: 16 மதிப்பெண்

 ஆசிரியரை மதிக்க வேண்டும்

முடிவுரை

ஆசிரியர் இந்நாவல் வழி பல படிப்பினைகளை இன்றைய இளைய தலைமுறையினர்

வாழ்க்கையில் சிறந்து விளங்க எடுத்துரைத்திருக்கும் பாங்கு மிகவும் சிறப்பாக உள்ளது.


[2]

கூறுகள் மதிப்பெண்

முன்னுரை 3

கதைச் சுருக்கம் 4

கருத்துகள் 4 x 4: 16

முடிவுரை 2

மொத்தம் 25

You might also like