You are on page 1of 2

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர்

அறுவடைப் பண்டிகை ஆகும்.[இது தமிழ் மாதமான தை முதல் நாளில்


கொண்டாடப்படுகிறது. தை பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது,

பொங்கல் என்றால் என்ன?

தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை விளைவிக்க


எவையெல்லாம் உதவியதோ அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும்.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து
அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சரக்கரை, பால்,
நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப்
பொங்கலிட்டு; இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய
எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல்.

பொங்கல் பண்டிகை மிகவும் பழமையான விழா என்பதற்கு


எடுத்துக்காட்டாக திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியில்

“மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”

என்று குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் கொண்டாடும் விதம்:

இந்தப் பண்டிகை 4 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

1. போகி: பொங்கலுக்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி


செலுத்துவதுடன் நமது பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும்
விழா. வீடுகளை அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி,
சிறுபீழைப்பூக்கள், கம்பு, ஆவாரம்பூ, வேப்பிலை வைத்து காப்பு கட்டி
பொங்கலை வரவேற்பார்கள்.

2. சூரியப் பொங்கல்: விவசாயம் நடக்க முதல் காரணமாக இருக்கும்


சூரிய ஒளி, அதற்காக தான் சூரியனுக்கு படையல் வைத்து சூரிய
பொங்கல் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சூரிய
பகவானுக்கு பொங்கலிட்டு, படையல் செய்வது வழக்கம். மண்பானையை
அலங்கரித்து கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு
மூட்டி புத்தரிசி போட்டு பொங்கல் சமைப்பார்கள். பொங்கி வரும் போது
குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி
வணங்குவார்கள். இனிப்பு தரும் கரும்பு வைத்து தலைவாழை இலை
போட்டு மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், கொடி வழிக்
காய்கறி வகைகள் சேர்க்கப்படும். பச்சை நெற்களை அரைத்து தவிடு
நீக்காமல் தண்ணீர் சேர்த்து வைக்கப்படும் பருப்புக் குழம்புடன்
சூரியனுக்கு படைத்து மகிழ்ச்சியுடன் நன்றி கூறும் நன்னாலே பொங்கல்
திருநாள்.

3. மாட்டுப் பொங்கல்: விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி


செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகள் மற்றும்
பறவைகளுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் வழங்கப்படும்.

4. காணும் பொங்கல்: காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது


கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்,
பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள்
உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

வரப்புயர நீருயரும்! நீருயர நெல்லுயரும்! நெல்லுயுர குடியுயரும்!


குடியுயர கோனுயர்வான்!.

You might also like