You are on page 1of 1

பொங்கலோ..ஓ..

ஒ பொங்கலோ -4
பொங்கலோ பொங்கலோ பொங்கல்-2
நம்ம சாமி தந்த நல்ல பூமி இது
அதனாலே நன்றி சொல்வோம்
தாய் மண்ணின் கனிகளால்
தமிழ்தாயின் வரங்களால்
மாண்போடு வாழ்ந்திடுவோம்
பொங்கலோ..ஓ..ஓ பொங்கலோ -4
பொங்கலோ பொங்கலோ பொங்கல்-2

1
கடவுளே கதிரவனாய் மண்ணகத்தை வளமாக்கி
உழைப்பின் கனிகளை தந்தவரே
உழவனை காத்திட உழுதுண்டு வாழ்ந்திட
இயற்கையின் இறைவனை தொழுதிடுவோம்-2 கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று
பண்பாடுவோம் தமிழர் திருநாள் இன்று -2
பொங்கலோ..ஓ..ஓ பொங்கலோ -4
பொங்கலோ பொங்கலோ பொங்கல்-2

2
ஆண்டவர்செய்திருக்கும் எல்லா நன்மைகளுக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேனோ?
விளைச்சலை பெருக்கினார்
கனிகளால் நிரப்பினார் நலம் தரும் காரியம் செய்தாரே-2 கொண்டாடுவோம் நன்றி பெருநாள்
இன்று பண்பாடுவோம் தமிழர் திருநாள் இன்று -2
பொங்கலோ..ஓ..ஓ பொங்கலோ-4
பொங்கலோ பொங்கலோ பொங்கல் -2

3
பழையன கழிந்தன புதியன புகுந்தன
போகி திருநாள் நம் புது நாள்
கால்நடை விலங்குகள் காத்திடும் செல்வங்கள்
தாங்கிடும் கடவுளின் திருகரங்கள் -2 கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று பண்பாடுவோம்
தமிழர் திருநாள் இன்று-2 பொங்கலோ..ஓ..ஓ பொங்கலோ -4
பொங்கலோ பொங்கலோ பொங்கல்-2

4
உறவுகள் வாழவே உயிரையும் தந்த நம்
இயேசுவின் அன்பினை சாற்றிடுவோம்
உள்ளத்தில் உவகை பொங்க
உலையினில் பால் பொங்க
தமிழ் போல் இனிக்கட்டும்
உறவுகளே -2 கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று
பண்பாடுவோம் தமிழர் திருநாள் இன்று -2 பொங்கலோ..ஓ..ஓ பொங்கலோ -4
பொங்கலோ பொங்கலோ பொங்கல்-2

நம்ம சாமி தந்த நல்ல பூமி இது


அதனாலே நன்றி சொல்வோம்
தாய் மண்ணின் கனிகளால்
தமிழ் தாயின் வரங்களால்
மாண்போடு வாழ்ந்திடுவோம்-2 பொங்கலோ..ஓ..ஓ பொங்கலோ-4
பொங்கலோ பொங்கலோ பொங்கல்-2

You might also like