You are on page 1of 6

இணைமொழிகள்

1. சீரும் சிறப்பும்

 மேன்மை / உன்னத நிலை / ஏற்றம் மிகுந்த

 எ.கா :

 உண்ண உணவுக் கூட இல்லாத நிலையில் இருந்த அகிலன்


இன்று அவனது கடின உழைப்பினால் சீரும் சிறப்புமாக
வாழ்ந்தான்.
2. ஏழை எளியவர்

 வறியவர் / பொருளாதாரத்தில் நலிவுற்றவர்

 எ.கா :

 ஒவ்வொரு வருடமும் ஏழை எளியவர்களுக்கு ஒரு சிறு


தொகையைக் கொடுத்து என் அப்பா உதவுவார்.
3. ஊண் உறக்கம்

 உணவும் தூக்கமும்

 எ.கா :

 பாரதி ஊண் உறக்கமின்றி சோதனைக்காக வாசித்து


இன்று சிறந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளாள்.
4. ஈடு இணை

 ஒப்பு / சமமான

 எ.கா :

 அருளின் கொடைக் குணத்திற்கு ஈடு இணையே


இல்லையென அவரின் சுற்றத்தார்கள் புகழ்வார்கள்.
5. அடக்க ஒடுக்கம்

 பணிவு

 எ.கா :

 அமுதன் புகழின் உச்சியில் இருந்தாலுமே அடக்க


ஒடுக்கத்துடன் தான் அனைவரிடமும் பழகுவார்.

You might also like