You are on page 1of 115

சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா (Charu Niveditha) என்ற புனைபெயரில் எழுதும் கே. அறிவழகன் தமிழின் குறிப்பிடத்
தகுந்த எழுத்தாளர். கலை, இலக்கியம், திரைப்படம், இசை என்று பல்வேறு துறைகளில் நுட்பமான
ரசனையும் ஆர்வமும் கொண்டவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர். தன்னுடைய
வசீகரமான எழுத்து நடையாலும், விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன்
படைப்புகளிலில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர். இவருடைய பல கட்டுரைகள்,
பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு
பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்பதையே இவரது
படைப்புகள் வலியுறுத்துகின்றன.

படைப்புகள்

 எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும் (புதினம்)

 கடல் கன்னி (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)

 கலகம் காதல் இசை (கட்டுரை)

 கோணல் பக்கங்கள் - (பாகங்கள் 1,2,3) (பத்திகள்)

 சீரோ டிகிரி (புதினம்)

 தப்புத் தாளங்கள் (பத்திகள்)

 நேநோ (சிறுகதை)

 ராஸ லீலா (புதினம்)

 எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது

 ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி (சிறுகதைத்தொகுப்பு)

 கடவுளும் நானும்

 சரசம், சல்லாபம், சாமியார்

 ஆஸாதி ஆஸாதி ஆஸாதி

 சினிமா சினிமா

 காமரூப கதைகள்

 மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்

 மூடுபனிச்சாலை

 தீராக்காதலி

 திசை அறியும் பறவைகள்

 தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை

 ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்

 சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்

 கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்


 கலையும் காமமும் - விவாதங்கள்

 மழையா பெய்கிறது - சர்ச்சைகள்

 கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்

நிலவு தேயாத தேசம் - 1 -சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   16 , 2015  04:16:26 IST
Latest Novels at Attractive Price

மனித வாழ்க்கைக்கு சாகசங்கள் தேவைப்படுகின்றன.  பயணம் ஒரு பெரும் சாகசமாக இருந்த காலம் ஒன்று
உண்டு.  உடனடியாக நம் ஞாபகத்துக்கு வருவது இப்ன் – பதூதாவின் பயணக் குறிப்புகள்.  இப்போதைய வாகன
வசதிகள் இல்லாத பதினான்காம் நூற்றாண்டில் 1,20,000 கிலோமீ ட்டர்களை தரை வழியாகவும் கடல்
வழியாகவும் கடந்தார் அவர்.  ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தன் 21-ஆவது வயதில் மொராக்காவின்
தாஞ்ஜியர் நகரை விட்டுக் கிளம்பிய அவர் அதற்குப் பின் 24 ஆண்டுகள் கழித்தே மொராக்கோ திரும்பினார். 
அவர் பயணித்த நாடுகளில் ஒன்று இந்தியா.   இந்தியாவின் முதல் சுல்தானிய அரசை ஸ்தாபித்தவர் மம்லுக்
குத்புதீன் அய்பக்.  ஆண்டு 1206.  மம்லுக் என்றால் அடிமை.  (அய்பக் ஆரம்பத்தில் அடிமையாக இருந்தவன்.)
குத்புதீனும் அவனுடைய சைன்யமும் வந்த பாதையில்தான் 1333-இல் இந்தியா வந்தார் பதூதா. அப்போது
மிகவும் பிரபலமாக இருந்த பேரரசன் முகமது பின் துக்ளக்கின் நம்பிக்கைக்கு உரியவராகி அவரது நீதிபதிகளில்
ஒருவராகவும் பணியாற்றினார். (அவர் அடிக்கடி கொடுத்த தண்டனை, மது அருந்தினால் 80 சவுக்கடி!) பதூதா
தன் பயண அனுபவங்கள் அனைத்தையும் ரிஹ்லா (பயணம்) என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.  அவரது
இந்திய அனுபவங்களில் முக்கியமானது, 1335-ஆம் ஆண்டு வட இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் – அந்தப்
பஞ்சத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் பசி பட்டியால் இறந்தனர்; துக்ளக்கின் ஆட்சியை எதிர்த்தவர்களை அவர்
நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சித்ரவதை செய்து கொன்றார்.  உயிரோடு எண்ணெய்க்
கொப்பரையில் போடுவது; உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டுவது போன்றவை அவருடைய
தண்டனைகளில் சில.  இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தச் சித்ரவதைகள் அனைத்தும் அரச
சபையிலேயே அனைவருக்கும் முன்னாலேயே நடந்தன.  துக்ளக்கை எதிர்த்த ஒரு அதிகாரி சிறையில் உணவு
உண்ண மறுத்தார்.  உடனே வலுக்கட்டாயமாக அவர் வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றச் செய்தார் துக்ளக். 
மறுநாள் அவர் தலை சீவப்பட்டது.  
ஒருமுறை பதூதாவே துக்ளக்கிடம் சிக்கினார்.  பதூதா ஒரு சூஃபி ஞானியிடம் சிநேகம் கொண்டிருந்தார்.  அந்த
சூஃபியோ துக்ளக்கை மதிப்பவர் அல்ல.  அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று
சொல்பவர்.  அவரை சிறைப்பிடித்து வந்த துக்ளக் அவர் தாடியை ஒவ்வொரு முடியாகப் பிடித்து இழுத்து ரத்தக்
களரியாக்கச் செய்து கொன்றார்.  பிறகு சூஃபியின் நண்பர்கள் யார் என்று பார்த்த போது அந்தப் பட்டியலில் இப்ன்
பதூதாவின் பெயரும் இருந்தது.  பதூதாவுக்குத் தன் தலையும் போகக் போகிறது என்று தோன்றி விட்டது. 
அப்போது பதூதா ஒன்பது நாட்கள் நீரைத் தவிர வேறு ஆகாரமே உண்ணாமல் முழுநேரமும் குரானையே
படித்துக் கொண்டிருந்தார்.  பிறகு தன் உடைமைகள் அனைத்தையும் துறந்து விட்டு ஒரு பிச்சைக்காரனைப்
போல் ஆக்கிக் கொண்டார்.  அதனால் துக்ளக் அவரைக் கொல்லாமல் பிச்சைக்காரனாகவே வாழ அனுமதித்தார்.
பின்னர் ஐந்து மாதங்கள் கழித்து பதூதாவை அரண்மனைக்கு அழைத்தார் துக்ளக்.  சிரச்சேதம்தான் என்று
நினைத்துக் கொண்டே அரண்மனை சென்றார் பதூதா.  பதூதா நினைத்தது போல் துக்ளக் அவரைக்
கொல்லவில்லை.  மாறாக 15 சீனத்துத் தூதர்களுடன் சீனாவில் ஆட்சி செய்த மங்கோலியப் பேரரசனிடம் தன்
தூதராக எக்கச்சக்கமான பரிசுப் பொருட்களுடன் அனுப்பினார்.  
1341-ஆம் ஆண்டு தில்லியிலிருந்து கிளம்பியது பதூதாவின் பரிவாரம்.  மங்கோலிய அரசனுக்கு வழங்க துக்ளக்
கொடுத்திருந்த பரிசு: 200 அடிமைகள், பாடகர்கள், நாட்டிய மங்கைகள், 15 வேலைக்காரர்கள், நூறு குதிரைகள்,
மற்றும் ஏராளமான விலையுயர்ந்த துணிகள், ஆபரணங்கள்.  பயண வழியில் இந்தப் பரிவாரம் இந்து வரர்களால்

மறிக்கப்பட்டு ஒரு சண்டை நடந்தது.  சண்டையில் பதூதாவின் குழுவே வென்றாலும் பதூதா அவரது
பரிவாரத்தை விட்டுப் பிரிய நேர்ந்தது.  பிறகு அவர் வேறொரு இந்துப் போராளிக் குழுவினால் சிறைப்
பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.  அப்போது அவர் ஒரு பிச்சைக்காரனைப் போல் இருந்தார். 
போராளிகளிடம் கெஞ்சினார்.  அவர்கள் அவருடைய சட்டையை வாங்கிக் கொண்டு அவரைப் போக
அனுமதித்தனர்.  
அதற்குப் பிறகு பதூதா தன் பரிவாரத்தைச் சென்றடைந்தார்.  
சீனா கிளம்புவதற்காக கோழிக்கோடு கடற்கரையில் நான்கு கப்பல்கள் தயாராக நின்றன.  மூன்றில் துக்ளக்கின்
பரிசுப் பொருட்கள்.  நான்காவது கப்பலில் கடல் கொள்ளையர்களோடு போரிடுவதற்காக நூற்றுக் கணக்கான
போர் வரர்கள். 
ீ கிளம்பும் தினத்தில் கடலில் அடித்த பெரும் சூறாவளியால் நான்கு கப்பல்களும் கடலில்
மூழ்கின.  பதூதா அப்போது கடற்கரையில் இருந்ததால் உயிர் தப்பினார்.  ஆனால் மீ ண்டும் கையில் ஒரு
நாணயம் கூட இல்லாத பிச்சைக்காரனாக நின்றார்.   
இப்படிப் போகிறது பதூதாவின் ரிஹ்லா.  பயணத்தின் மீ தான என் தீராத ஆர்வத்துக்குக் காரணமாக இருந்தது
அந்தப் புத்தகம்தான்.  ஆனால் இப்போது நாம் மேற்கொள்ளும் பயணங்கள் எப்படி இருக்கின்றன?  இன்பச்
சுற்றுலா என்று வேண்டுமானால் சொல்லலாம்.  ஆனால் அது கூட பலருக்கும் துன்பச் சுற்றுலாவாக
அமைவதையே பார்க்கிறோம்.  ஒரு பிரபலமான எழுத்தாளர் அமெரிக்கா சென்றார்.  ஆறு மாதம் இருந்து
விட்டுத் திரும்பினார்.  ஆர்வத்துடன் அவரது பயண அனுபவங்கள் குறித்துக் கேட்டேன்.  ”சொல்றதுக்கு
ஒன்னுமே இல்லிங்க” என்றார். அவர் சொன்னது புரியவில்லை.  பிறகு அவரிடம் ஒவ்வொரு நாளும் எப்படிக்
கழியும் என்ற விபரம் கேட்டேன்.  சொன்னார்.  எழுத்தாளர் எந்த நண்பர் வட்டில்
ீ தங்கியிருந்தாரோ அந்த
நண்பரும் அவர் மனைவியும் அலுவலகம் சென்று விடுவார்கள்.  இரவு அவர்கள் வரும் வரை எழுத்தாளர்
படித்துக் கொண்டிருப்பார்.  இல்லாவிட்டால் தொலைக்காட்சி பார்ப்பார்.  சனி, ஞாயிறுகளில் அவர்கள்
எழுத்தாளருக்கு ஊரைச் சுற்றிக் காண்பிப்பார்கள். சினிமா, பார்க், மால் அப்படி இப்படி.  அமெரிக்க வாழ்க்கை
ரொம்பவும் சலிப்பாகி விட்டதால் கிளம்பி வந்து விட்டேன் என்றார்.  எழுத்தாளரின் ஆறு மாத அமெரிக்கப்
பயணம் இப்படி ஆனது.  நான் வசிக்கும் மைலாப்பூரிலிருந்து கூட பல கிழவர்கள், கிழவிகள் அமெரிக்கா
செல்கிறார்கள்.  அமெரிக்காவில் தங்கிய நாட்கள் முழுவதும் அவர்களுக்கு நரகம்.  மேலே சொன்ன கதைதான். 
பிள்ளைகள் அலுவலகம் போய் விடுவார்கள்.  பேரன், பேத்தியை இவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது.   Un-
paid baby sitters.  அதிக பட்சம் இரண்டே மாதத்தில் தலை தெறிக்க இந்தியா ஓடி வந்து விடுகிறார்கள்.  
இதற்கு முக்கியமான காரணம், நம் ஆட்களால் அந்நிய கலாச்சாரத்தோடு எப்படிச் சேர்வது என்றே
தெரிவதில்லை.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் நியூ ஜெர்ஸி போனார்.  வயது 70.  இரண்டே மாதத்தில் திரும்பி
விட்டார்.  மேலே பார்த்த அதே கதை.  வட்டுக்குப்
ீ பக்கத்தில் உள்ள பார்க்கில் நடைப் பயிற்சி செல்லும் போது
அங்கே வரும் இன்னும் நாலைந்து மைலாப்பூர் கிழவர்களோடு அமெரிக்காவின் அலுப்பூட்டும் வாழ்க்கையைப்
பற்றிப் பேசுவது வழக்கம்.  மற்றபடி ஒரு அமெரிக்கரோடு கூட என் நண்பர் பேசியது இல்லை.  யாரைத்
தெரியும்?  யாரோடு பேசுவது?  என்ன பேசுவது?    
இன்னொரு காரணம், ஐரோப்பாவைப் போல் அமெரிக்காவில் வாகன வசதி கிடையாது.  கார் வைத்திருந்தால்
மட்டுமே சௌகரியம்.  ஐரோப்பாவில் இந்தப் பிரச்சினை கிடையாது.  கார் வைத்திருப்போர் கூட
மெத்ரோவிலோ, பஸ்ஸிலோதான் செல்வார்கள்.  எப்படியும் மூன்று நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடத்துக்குள்
வந்து விடும்.   நாமே எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம்.    
கடல் கடந்து போய் நம் நண்பர்களின் இல்லத்தில் தங்கி விட்டு வருவதையெல்லாம் பயணத்திலேயே சேர்த்துக்
கொள்ள முடியாது என்று தோன்றுகிறது.  சமீ பத்தில் Wild: From Lost to Found on the Pacific Crest Trail என்ற ஒரு
பயண நூலைப் படித்தேன்.  பசிஃபிக் மலைப் பாதை என்பதை சுருக்கமாக PCT என்று சொல்கிறார்கள்.  மொத்தப்
பாதையின் நீளம் 4286 கிலோமீ ட்டர்.  அமெரிக்காவின் மேற்கில் பசிஃபிக் பெருங்கடலை ஒட்டி, கீ ழே
மெக்ஸிகோ - அமெரிக்கா எல்லையிலிருந்து துவங்கி மேலே அமெரிக்கா – கனடா எல்லை வரை தெற்கு
வடக்காக கலிஃபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன் ஆகிய மூன்று மாநிலங்களின் ஊடாகச் செல்லும்
மலைப்பாதையை நடந்தே கடப்பதுதான் இதன் விசேஷம்.  இந்தப் பாதையின் ஒரு பகுதியை, அதாவது
கலிஃபோர்னியாவில் லாஸ் வேகாஸ் பக்கத்தில் உள்ள மொஹாவி (Mojave) பாலைவனத்திலிருந்து கிளம்பி
வாஷிங்டன் மாநிலத்தில் கொலம்பியா நதியில் கட்டப்பட்டுள்ள Bridge of the Gods பாலம் வரை 1800
கிலோமீ ட்டர் தூரத்தை நடந்தார் செரில் என்ற அமெரிக்கப் பெண்மணி.  அவருடைய பயண அனுபவங்கள்தான்
வைல்ட்.  1995-இல் வெளிவந்த இந்த நூல் லட்சக் கணக்கான பிரதிகள் விற்றது.  இதன் சிறப்பு என்னவென்றால்,
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் பயணம் என்பதை ஓர் உன்னதமான ஆன்மீ க அனுபவமாக உணர்ந்தனர்.   
தாயின் திடீர் மரணத்துக்குப் பிறகு கொடும் தனிமையில் வழ்ந்த
ீ செரில் ஹெராயினுக்கு அடிமையானார். 
பெண்ணியவாதியும் தேர்ந்த படிப்பாளியுமான செரிலுக்கு ஹெராயினைப் போலவே செக்ஸும் ஒரு வடிகாலாக
அமைய ஆரம்பித்தது.  யார் அழைத்தாலும் அவரோடு செக்ஸ் வைத்துக் கொண்டார்.  அதனால் செரில் மீ து
மிகுந்த அன்பு கொண்டிருந்த கணவன் விவாகரத்து செய்தான்.  ஆனால் ஹெராயினோ, செக்ஸோ செரிலுக்கு
நிம்மதியைக் கொடுக்கவில்லை.  துயரமும் தனிமையும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.  அப்போதுதான்
மலையேற்றத்திலோ நீண்ட தூர நடையிலோ எந்த முன் அனுபவமும் இல்லாவிட்டாலும் 1800 கி.மீ . தூரத்தை
நடப்பது என்று முடிவு செய்தார் செரில்.  பொட்டல் பாலைவனம்.  இடையில் பனிமலைகள்.  செங்குத்தான
குன்றுகள்.  ஸ்டவ், துணிமணி, கம்பளி, வேண்டிய அளவு தண்ணர்,
ீ உணவு, கூடாரத்துக்கான சாதனங்கள் என்று
ஒரு பெரிய மூட்டையை வேறு முதுகில் சுமந்து கொண்டு நடக்க வேண்டும்.  ஒரே ஆறுதல் என்னவென்றால்,
நூறு கி.மீ ட்டர் நடந்தால் ஒரு ஓய்வெடுக்கும் விடுதி இருக்கும்.  அங்கே தண்ணர்ீ பிடித்துக் கொள்ளலாம்;
குளிக்கலாம். ஊரிலிருந்து நமக்கு வேண்டியவர்கள் அனுப்பும் கடிதங்களும், பயணத்துக்குத் தேவையான
பொருட்களும் அந்த விடுதிகளில் கிடைக்கும்.  செரில் பயணம் செய்த 1800 கி.மீ . தூரமும் இது போன்று
இடையில் உள்ள விடுதிகளில் அவருடன் விவாகரத்து ஆன கணவன் அவருக்குத் தேவையான ஜோடுகளையும்
புத்தகங்களையும் மற்ற பொருட்களையும் அனுப்பி வைத்துக் கொண்டே இருந்தான்.  
கிளம்பிய முதல் நாளே செரில் எடுத்து வந்திருந்த ஸ்டவ் வேலை செய்யவில்லை.  நடந்து பழக்கம்
இல்லாததால் கால் பாதங்கள் கிழிந்து ரத்தம் கொட்டியது.   வழியில் செரில் அவரைப் போன்ற சில
பயணிகளையும் சந்திக்கிறார்.  அதில் ஒருவன்,  அவன் தினமும் 40 கி.மீ . நடப்பதாகச் சொல்கிறான்.  செரிலோ
பத்து கி.மீ . தான் நடக்கிறார்.  ஒரு இடத்தில் எட் என்பவனைச் சந்திக்கிறார்.  அவன், ”இவ்வளவு பெரிய மூட்டை
எதற்கு, தேவையில்லையே?”  என்று கேட்கிறான்.  ”இதில் உள்ள அத்தனையுமே அத்தியாவசியம் என்று
தோன்றுகிறது; வேண்டுமானால் எதையெல்லாம் கழித்துக் கட்டலாம், சொல்லுங்கள்” என்கிறாள் செரில்.  
மூட்டையைப் பிரிக்கும் போது அதில் இரண்டு டஜன் ஆணுறைகள் இருக்கின்றன.  “முதலில் இதைக்
குப்பையில் போடு; இவ்வளவு ஆபத்தான பாதையில் இதற்கெல்லாம் அவசியம் வராது” என்கிறான் எட். 
அப்படியும் அவனுக்குத் தெரியாமல் அந்த ஆணுறைகளில் ஒன்றை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக்
கொள்கிறாள் செரில்.  (அது அவளுக்கு அந்தப் பயணத்தில் ஒரு முறை உபயோகமாகிறது.  எப்படி என்பதை
நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க முடியாவிட்டாலும் சினிமாவாவது பார்த்துத் தெரிந்து
கொள்ளுங்கள்.  Wild என்ற பெயரில் சென்ற ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.)  
செரிலின் பயணத்தில் மறக்க முடியாத சில அனுபவங்கள் – எடுத்துச் செல்லும் தண்ணர்ீ காலியாகி விடும்
போது ஏற்படும் தவிப்பு.  இவ்வளவு சாகசம் எதுவும் இல்லாமல் நாம் மேற்கொள்ளும் இன்பச் சுற்றுலாவில் கூட
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை:  நாம் எடுத்துச் செல்லும் எடை.  நம்முடைய நோக்கம்
பயணம் என்றால் நாம் யாருக்கும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லக் கூடாது.  இது விஷயத்தில் நாம்
ராணுவ ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.  நாமே கூட அனாவசியமாக ஒரு பொருளைக் கூட எடுத்துச்
செல்லக் கூடாது.  நான் பயணம் செல்லும் போதெல்லாம் இப்படிப் பார்த்துப் பார்த்துத்தான் எடுத்துக் கொண்டு
போவேன்.  ஓட்டலிலேயே துண்டு இருக்கும் என்று துண்டு எடுத்துப் போக மாட்டேன்.  ஆனால் வாடகை
கம்மியாக வாங்கும் ஓட்டல்களில் துண்டு வைக்க மாட்டார்கள்.  அப்போதெல்லாம் வேஷ்டியாலேயே
துடைத்துக் கொள்வேன். பொதுவாக கணவர் வெளியூர் செல்லும் போது மனைவிதான் கூடமாட ஒத்தாசையாக
பயணத்துக்கான துணிமணிகளை எடுத்து வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் என் மனைவி
அவந்திகாவோ இப்படி ஒருமுறை கூட செய்ததில்லை.  இந்த முறை அந்த விஷயம் ஞாபகம் வந்து, “ஏன் நீ
அப்படிச் செய்வதில்லை?” என்று கேட்டேன்.  சட்டென்று அவள் பதில் சொன்னாள்: “நீ ஊருக்குப் போவது
எனக்குத் தண்டனை.  இவ்வளவு பெரிய வட்டில்
ீ தனியாக இருக்க வேண்டும்.  பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு
வர மாட்டேன் என்று சொன்னேன்.  என் பேச்சைக் கேட்காமல் இங்கே கொண்டு வந்து என்னைக் குடி வைத்து
விட்டாய்.  இப்போது பார்த்தால் பக்கத்து வட்டுக்காரர்கள்
ீ எப்போதும் துபாயில் இருக்கிறார்கள். வருஷத்துக்கு
அஞ்சு நாள் வருவதற்காக இவ்வளவு பெரிய பங்களா.  அந்த பங்களாவில் ஒரு பெண் வேறு தூக்குப் போட்டுக்
கொண்டு செத்ததாக வாட்ச்மேன் சொன்னார்.  (இன்னொரு பக்கத்து வட்டு
ீ வாட்ச்மேன்!) எதிர்வட்டில்
ீ பேசலாம்
என்றால் அங்கே மனிதர்கள் இருக்கிறார்களா என்றே தெரிவதில்லை.  இன்னொரு பக்கத்து வடும்
ீ பங்களா.
வாட்ச்மேனைத் தவிர வேறு யாரும் இல்லை.  அவரும் இப்படி பேய்க்கதையாகச் சொல்கிறார்.  இப்படி மனித
நடமாட்டமே இல்லாத வனாந்திரமாக இருக்கிறது.  நீயும் பாதிநாள் ஊருக்குப் போய் விடுவாய்.  இதில் உனக்கு
’பேக்’ பண்ணி வேறு தர வேண்டுமா?  போய்யா.”  
ஆனால் நான் அப்படிக் கேட்டு விட்டதனாலோ என்னவோ, இந்த முறை உனக்கு நான் ’பேக்’ பண்ணித்
தருகிறேன் பார் என்று சொல்லி விட்டு எல்லாவற்றையும் அழகாக அடுக்கிக் கொடுத்தாள்.  நானாக இருந்தால்
எல்லாவற்றையும் புளி மூட்டை மாதிரி சுருட்டிச் சுருட்டித் திணிப்பேன்.  
ஆனால் அவந்திகா ‘பேக்’ பண்ணிக் கொடுத்ததால் துருக்கியில் இருந்த இரண்டு வாரத்தில் பத்து நாட்கள்
நிர்வாணமாகவே படுத்துக் கொள்ள நேர்ந்தது.  அதை அடுத்த வாரம் சொல்கிறேன். நாம் செரில் கதைக்கு
வருவோம்.  மலைப்பாதைப் பயணத்தில் எந்த அனுபவமும் இல்லாத செரில் கடைசியில் 94 நாள் நடையில்
’கடவுள் பால’த்தைச் சென்றடைந்து விடுகிறாள்.  உடலை வதைத்த அந்தக் கொடுமையான பயணத்தினால்
அவளுக்கு என்ன கிடைத்தது? மிகப் பெரிய விடுதலை.  மனிதக் கூட்டத்தினிடையே இருந்த போது
மனநோயாளியாகும் அளவுக்கு அவளைத் தனிமையுணர்வு பீடித்திருந்தது. அந்தத் தனிமையும் மனநோயும்
இருந்த இடமே இல்லாமல் மலைப் பயணத்தின் முடிவில் நீங்கி விட்டது.  கவனியுங்கள்.   மனிதக்
கூட்டத்தினிடையே தனிமை நோய். மனிதர்களே இல்லாத பாலைவனத்தில் தனிமை நோய் நீங்கி விட்டது. 
எப்படி இது நிகழ்கிறது என்பதுதான் இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் நோக்கம்.  
நான் அமெரிக்கா சென்றால் பசிஃபிக் மலைப் பாதையை (PCT) முழுமையாகக் கடக்க முடியாவிட்டாலும் செரில்
போல் ’கடவுளின் பாலம்’ வரையாவது 1800 கி.மீ . தூரத்தை நடந்து விடுவேன்.  என் அமெரிக்கப் பயணத்தில்
ஆகப் பெரிய விருப்பமாக இருப்பது அதுதான்.  அதேபோல் அமெரிக்காவின் கிழக்குத் திசையிலிருந்து –
உதாரணமாக, நியூ ஜெர்ஸியிலிருந்து சான்ஃப்ரான்ஸிஸ்கோ வரை தரை வழியாக காரில் ஒரு நெடும்பயணம்
செல்லலாம்.  ஆனால் இதற்கெல்லாம் தமிழ் நண்பர்கள் ஒத்து வர மாட்டார்கள்.  இதற்கென்று இருக்கும்
பயணக் குழுக்களோடு தொடர்பு கொண்டுதான் போக வேண்டும்.  
***
  
ஒருமுறை ஆல்பெர் கம்யூவிடம் ”கால்பந்தா, நாடகமா? எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று கேட்ட போது ஒரு
நொடி கூட யோசிக்காமல் ”கால்பந்து” என்று சொன்னார்.  என்னிடம் அப்படி, ”எழுத்தா? பயணமா?” என்று
கேட்டால் ”பயணம்” என்றே சொல்வேன்.  ஏனென்றால், பயணம் நம்மைப் புனிதனாக்குகிறது.  இப்போது
நம்முடைய பிரதமர் கூட நிறைய பயணம் செய்கிறார்.  பலரும் அது பற்றிப் பலவாறாகக் கிண்டல்
செய்கின்றனர்.  அவர் மட்டுமல்ல; பல செல்வந்தர்கள் பயணம் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.  
நட்சத்திர ஓட்டலில் தங்கி வியாபாரம் பேசி விட்டு, இரவில் மது அருந்திக் கொண்டாடி விட்டு – அது கூட அந்த
ஊர் மது அல்ல; உலகம் பூராவிலும் கிடைக்கும் ஸ்காட்ச் விஸ்கி – மீ ண்டும் விமானத்தில் ஏறி இந்தியா. 
மற்றபடி ஒரு பயணத்தினால் கிடைக்கக் கூடிய எந்த அனுபவமும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.  அதிகம்
போனால் அந்த ஊர் மியூசியத்துக்குப் போய் வருவார்கள்.   மட்டும் அல்லாமல் நம் பயணங்கள் ஒவ்வொரு
நாட்டின் பெருநகரங்களோடு மட்டுமே முடிவடைந்து விடுகின்றன.  உதாரணமாக,  ஃப்ரான்ஸ் போனால் அங்கே
பாரிஸோடு நம்முடைய பயணம் முடிந்து விடுகிறது.  முக்கியமாக ஈஃபிள் டவர் ஏறினோமா, அவ்ளோதான்
பாரிஸ்.  நான் இரண்டு தடவைகளில் பாரிஸில் நான்கு மாதம் இருந்தேன்.  ஒரே ஒரு முறை ஈஃபிள் டவரை
கீ ழேயிருந்து பார்த்தேன்.  மேலே ஏறவில்லை.  
ஃப்ரான்ஸ் என்றால் நாம் போக வேண்டிய முதல் இடம் கோர்ஸிகா தீவுதான். மத்திய தரைக்கடலில்
ஃப்ரான்ஸுக்குத் தென்கிழக்கே இத்தாலியின் மேற்கில் உள்ள ஒரு ஃப்ரெஞ்ச் தீவு கோர்ஸிகா.  இத்தாலிக்கு
அருகில் உள்ளதால் இத்தாலி, ஃப்ரெஞ்ச் என்ற இரண்டு கலாச்சாரங்களின் சங்கமத்தை அங்கே காணலாம். 
பேசுவது கோர்ஸிகன் மொழி.  ஏராளமான குன்றுகளும், தரையைக் குடைந்து குடைந்து செல்லும் கடலும் (பல
இடங்களில் முழங்கால் அளவு நீர்!) பூலோக சொர்க்கமோ என வியக்க வைக்கிறது கோர்ஸிகா. 
எல்லாவற்றையும் விட ஆச்சரியம், குன்றின் விளிம்புகளில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்.  

 
இந்த வாரம் இடம்பெற்றிருக்கும்  புகைப்படத்தை எடுத்த ஜமீ ல் ஒரு தற்கால பதூதா.  கையில் காசே இல்லாமல்
உலகம் பூராவும் சுற்றிக் கொண்டிருக்கிறார்.   எப்படி சாத்தியம் என்றால், தான் தங்கும் ஒவ்வொரு இடத்திலும்
ஏதாவது ஒரு வேலையைச் செய்து அன்றாட செலவுகளை கவனித்துக் கொள்வது.  பிறகு வேறோர் தேசம்
செல்வது.  இவ்வளவுக்கும் ஜமீ ல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே ஊர் சுற்றக் கிளம்பி விட்டார். 
இப்போது கணவரோடும் குழந்தையோடும் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்.  அவருடைய இணையதளம்:
http://jandewheretheybe.com/travel-journal/
இப்படி ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக் கணக்கான பதூதாக்கள் இப்போதும் உலகம் பூராவும் சுற்றிக் கொண்டே
இருக்கிறார்கள்.  
 

நமக்குத் தெரியாத தேசத்தில், தெரியாத ஊரில் எப்படி நாம் வேலை செய்ய முடியும்?  இதற்காக ஒரு இணைய
தளமே இருக்கிறது.  http://www.helpx.net/ இதன் மூலம் நாம் ஒரு ஊரைத் தேர்ந்து கொள்ளலாம்.  கோர்ஸிகாவில்
360 கிராமங்கள் இருக்கின்றன.  ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் தனித்தனி இணையதளங்கள்.  மேலே
குறிப்பிட்ட ஹெல்ப் எக்ஸ் மூலம் நாம் ஒரு ஊரைத் தேர்ந்தெடுத்து, அங்கே உள்ள ஒரு இல்லத்தில்
விருந்தினராகத் தங்கிக் கொள்ளலாம்.  தனி அறை, அவர்கள் உண்ணும் உணவு என்று நமக்கும் அவர்களுக்கும்
எவ்வளவு பிரியமோ அவ்வளவு நாள், வாரம், மாதம் தங்கிக் கொள்ளலாம்.  (அங்கே போய் எனக்கு நோ கார்லிக்,
நோ ஆனியன் சாம்பாரும் இட்லியும் கேட்டால் அடித்துத் துரத்தி விடுவார்கள்.  இந்த உணவு விஷயம் பற்றி
எழுத ஏராளம் உள்ளது.  பிறகு பார்க்கலாம்.)  அப்படி நாம் தங்கியதற்கும் உணவுக்கும் காசு தர
வேண்டியதில்லை.  அவர்களுக்கு இதனால் என்ன லாபம்?  காசுக்குப் பதிலாக நாம் வேலை செய்து
கொடுக்கலாம்.  கோர்ஸிகாவில் அநேகமாக தோட்ட வேலைதான்.  ஒரு நாளில் மூன்று மணி நேரத்திலிருந்து
நான்கு மணி நேரம் வரை. அவ்வளவுதான்.  அதற்கு மேல் ஊரையும்  தீவையும் சுற்றிப் பார்க்கலாம். 
கோர்ஸிகாவில் உள்ள போனிஃபோஸியோ என்ற ஊரின் புகைப்படங்கள்:
http://www.slow-chic.com/blog/most-beautiful-villages-of-corsica/
http://www.slow-chic.com/blog/most-beautiful-villages-of-corsica/
***

நாம் எந்த அளவுக்குப் பயணத்தின் அருமை கிடைக்காதவர்களாக இருக்கிறோம் என்றால், நம்முடைய அறுபது
வயது ஹீரோக்கள் பதினாறு வயது ஹீரோயின்களோடு டூயட் பாடும் போது பார்க்கிறோம் அல்லவா காட்சிகள்,
அதெல்லாம் நாமே கண்டு களிக்க வேண்டியவை.  ஆனால் நம்முடைய வாழ்க்கை முழுவதுமே எதார்த்தத்தை
(Reality) விட்டுவிட்டுக் கனவு எதார்த்தத்தில் (hyper-reality) வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.   இதற்கு உவமானம்
சொல்ல வேண்டுமானால், பஞ்சத்தில் இருப்பவனுக்குப் பஞ்சாமிர்தத்தின் படத்தைக் காண்பிப்பது போல. 
நம்முடைய புலன்களால் அனுபவிப்பதற்குப் பதிலாக யாரோ சிலரது அனுபவத்தின் நிழல்களை நீண்ட
படுதாவில் இருட்டு அரங்கினுள் பாப்கார்னை சுவைத்தபடி பணம் கொடுத்துப் பார்க்கிறோம்.  நம்மை விட
அசடர்கள் வேறு யாரும் உண்டோ?   
அப்படி நாம் படுதாவில் பார்த்த இடம் ஒன்றை துருக்கியில் நேரடியாகப் பார்த்தேன்.  இப்போதைய சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்துக்கும் அப்போதைய உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?  உண்டு. 
அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

=====

நிலவு தேயாத தேசம் - 2 -சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   23 , 2015  09:02:13 IST
Latest Novels at Attractive Price

டியர் சாரு,
உங்கள் துருக்கி பயணக் கட்டுரை நன்றாகவே ஆரம்பித்துள்ளது.  கோர்ஸிகா பற்றிய உங்கள் குறிப்பைப்
பார்த்ததும் இதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.  கோர்ஸிகா பற்றி நீங்கள் எழுதியிருப்பது
உண்மை.  ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம்தான்.  இன்னொரு பக்கம், மிகக் கொடூரமானது.  பாரிஸில்
பிறந்து வளர்ந்த நான் இதுவரை நான்கு முறை கோர்ஸிகா சென்று வந்திருக்கிறேன்.  கோர்ஸிகா எங்கள்
நாட்டின் ஒரு பகுதி என்று சொல்கிறது ஃப்ரான்ஸ்.  1768-இலிருந்து அது ஃப்ரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்தாலும்
கோர்ஸிகர்களுக்கும் எங்களுக்கும் எந்தக் கலாச்சார ரீதியான ஒற்றுமையும் கிடையாது.  மொழி வேறு, நிறம்
வேறு, உணவு வேறு.  கலாச்சாரமே வேறு. மதம் மட்டுமே ஒன்று.  வேறொரு தேசத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்
எல்லா நாடுகளிலும் என்ன நடக்குமோ அதுவே கோர்ஸிகாவிலும் நடந்தது.  ஆயுதம் தாங்கிய விடுதலைப்
போர்.  அதை நடத்திக் கொண்டிருப்பது FLNC.  Corsican National Liberation Front.  கோர்ஸிகர்கள் படிப்பறிவற்ற
முரடர்கள் என்பதுதான் அநேகமான ஃப்ரெஞ்சுக்காரர்களின் மனோபாவம்.  காரணம், கோர்ஸிகா இத்தாலிக்கு
அருகில் இருப்பதால் அங்கே இத்தாலியக் கலாச்சாரத்தின் செல்வாக்கு அதிகம்.  இத்தாலிய மாஃபியா பற்றி
உலகத்துக்கே தெரியும்.  காட்ஃபாதர் படம் பார்க்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?  
கோர்ஸிகாவின் கலாச்சாரத்திலேயே வன்முறை ஊறிக் கிடக்கிறது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
சொன்னார் எங்கள் உள்துறை அமைச்சர்.   அதே ஆண்டில் ஃப்ரான்ஸ்வா மாஸினி என்பவர் கொல்லப்பட்டார். 
கோர்ஸிகாவில் நடக்கும் கொலைகள் அந்தக் கொலைகளோடு முடிந்து விடும்.  கொலையாளிகள் யாரும்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதே இல்லை.  யாருக்கும் எதுவும் தெரியாது.  பார்த்தாலும் சொல்ல மாட்டார்கள். 
வாயே திறக்க மாட்டார்கள்.  தெரியாது, தெரியாது, தெரியாது. இந்த ஒரே பதில்தான். மாஸினி ஒரு மாஃபியா
தலைவர்.  இன்னொரு மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டார்.  பிறகு மாஸினியின் கும்பல் எதிர் கோஷ்டி
ஆட்களைக் கொல்லும்.  இப்படி முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும்.  உலகம் பூராவும் மாஃபியா
தலைவர்களின் கதை அதுதானே?  தில்லியை உங்கள் நாட்டின் Rape capital என்று சொல்வதைப் போல
கோர்ஸிகாவை ஐரோப்பாவின் கொலை நகரம் (Murder capital) என்கிறார்கள்.  ஆனால் ஃப்ரெஞ்சுக்காரர்கள்
யாரையும் அவர்கள் கொல்வதில்லை.  அவர்களுக்குள்ளேயே தான் கொலை செய்து கொள்கிறார்கள்.  மாஃபியா
கும்பலோடு இப்போது விடுதலைப் போராட்டக் குழுக்களும் இந்தக் கொலைத் தொழிலில் சேர்ந்து கொண்டு
விட்டன.  கோர்ஸிகா பார் அசோசியேஷனைச் சேர்ந்த 63 வயதான அந்த்வான் சொலாகாரோ
கொல்லப்பட்டதற்கும் காரணம், விடுதலைப் போராளிகளுக்குள் நடக்கும் சண்டைதான்.  இவர்
கொல்லப்படுவதற்கு ஒருமணி நேரம் முன்புதான் ஒரு விடுதலைப் போராட்டக் குழுவின் முன்னாள்
தலைவரின் சடலம் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.  

இப்படி, கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 150 கொலைகள் நடந்துள்ளன.  சராசரியாக, ஆண்டுக்கு 20.  இத்தனை
கொலைகளிலும் இதுவரை எந்தக் கொலையாளியும் சிக்கவில்லை.  சர்வசாதாரணமாக பட்டப்பகலில் ஒரு
சதுக்கத்தில், ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில், ஒரு உணவு விடுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படுவார். 
சுட்டவன் எந்தப் பதற்றமும் இல்லாமல் பக்கத்தில் நிறுத்தியிருக்கும் தன் மோட்டார்சைக்கிளில் ஏறிச்
செல்வான்.  

The Prophet என்ற ஃப்ரெஞ்ச் படம் பார்த்திருக்கிறீர்களா?  மிக மூர்க்கமான கோர்ஸிகன் மாஃபியா


கும்பலைச் சேர்ந்தவர்களைப் பற்றிய ஃப்ரெஞ்ச் படம்.   கோர்ஸிகாவில் நடக்கும் கொலைகளைப் பற்றிச்
சித்தரிக்கும் ஒரு ஆவணப்படம் இது.

ஆனால் கோர்ஸிகாவில் இத்தனை கொலைகள் நடந்தாலும் இதுவரை ஒரு பயணி கூட


கொல்லப்பட்டதில்லை.  சண்டையெல்லாம் அவர்களுக்குள்ளே தான்.  அதனால்தான் என்னால் அங்கே நான்கு
முறை செல்ல முடிந்தது.  நீங்கள் ஃப்ரான்ஸ் வரும் போது சொல்லுங்கள்; உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்.
கடைசியாக ஒரு விஷயம்.  வரலாற்றில் மிகப் பெரும் போர்வரர்களில்
ீ ஒருவனாக விளங்கிய நெப்போலியன்
போனபார்த் கோர்ஸிகாவில் பிறந்தவன் தான்.  
வெரோனிகா,
பாரிஸ்.
***
வெரோனிகா குறிப்பிடும் The Prophet படத்தைப் பார்த்திருக்கிறேன்.  பொதுவாகவே சினிமா, புத்தகம்,
மற்றவர்களின் பயண அனுபவங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு தேசத்தைப் பற்றி நாம்
கொள்ளும் அனுமானங்கள் யாவும் நாமே அந்த நாட்டுக்குப் போகும் போது தவறாகப் போய் விடுவதை நான்
அனுபவித்திருக்கிறேன்.  உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு
அருகில் உள்ள தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஃப்ரெஞ்சுக்காரரை நாலைந்து ரௌடிகள் தாக்கி
அவரிடமிருந்த ஃபோனையும் பணத்தையும் பிடுங்கிக் கொண்டனர்.  அந்த ஃப்ரெஞ்சுக்காரர் தன் நாட்டுக்குத்
திரும்பிச் சென்று தமிழ்நாட்டைப் பற்றி என்ன சொல்வார்?  சம்பவம் நடந்தது இரவு 11.30.  அந்த நேரத்தில்
பாரிஸில் கூட சில இடங்களில் அப்படிப்பட்ட சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.  ஒருநாள் பாரிஸில்
உள்ள Marcadet - Poissonniers என்ற மெத்ரோ நிலையத்திலிருந்து வெளியே வந்து ஒரு தெரு வழியே சென்று
கொண்டிருந்தேன்.  பொதுவாக பாரிஸில் நள்ளிரவில் கூட பெண்கள் தனியாகப் போய் வந்து கொண்டிருப்பதை
பலமுறை பார்த்திருக்கிறேன்.  ஆனால் பாரிஸின் வடக்குப் பகுதி, அதாவது தமிழர்கள் அதிகம் வசிக்கும் லா
சப்பல், ’மெக்ரிப்’ மக்கள் வசிக்கும் மார்க்கதெ ப்வஸினியே, பார்ப் ரோஷ்ச்வார் (Barbès-Rochechouart)  போன்ற
பகுதிகள் கொஞ்சம் ஆபத்தானவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  (’மெக்ரிப்’ என்பது துனிஷீயா, மொராக்கோ,
அல்ஜீரியா போன்ற ஆஃப்ரிக்காவின் வட கிழக்கு நாடுகளைக் குறிக்கும்.) காரணம், இன்னொரு நாட்டுக்கு
அகதியாகச் செல்பவர்கள் சமூகத்தின் கீ ழ்த்தட்டில் வசிப்பவர்களாகத்தானே இருப்பார்கள்?  அவர்களிடம்
மேல்தட்டு மனிதர்களின் நாகரீகத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?  பிரதான சாலையில் நடந்து கொண்டிருந்த
நான் சீக்கிரம் போகலாம் என்று ஒரு குறுக்குச் சந்தில் புகுந்தேன்.  பார்த்தால் முப்பதுக்கும் குறையாத ’மெக்ரிப்’
இளைஞர்கள்.  ஒவ்வொருவரும் ஏழடி உயரம்.  தெருவில் நின்று கராபுரா என்ற கூச்சலுடன் கத்திக்
கொண்டிருந்தார்கள்.  அந்தக் குறுகிய சந்தில் அவர்களைத் தவிர வேறு மனிதர்களே இல்லை.  அந்தச் சந்தைக்
கடக்கும் வரை எனக்குள் உருவாகியிருந்த பயத்தை இப்போதும் மறக்க முடியவில்லை.  அவர்கள் ஒன்றும்
சண்டை போட்டுக் கொள்ளவில்லை.  பேச்சே அப்படித்தான் இருந்தது.  என் பயத்துக்குக் காரணம், அந்தப்
பகுதிகளில் நடந்த திருட்டு, வழிப்பறி பற்றி நான் கேள்விப்பட்டிருந்த கதைகள்தான்.
***
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் என் பிறந்த நாளுக்கு ஏதேனும் ஒரு பரிசு கொடுக்க விரும்பினார் நண்பர்
ராமசுப்ரமணியன்.    லேப்டாப் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே, வாங்கித் தருகிறேன் என்றார். 
”அதை விட முக்கியம் நான் துருக்கி செல்ல வேண்டியது.  அங்கே சென்று வர ஒரு டிக்கட் எடுத்துக் கொடுங்கள்”
என்றேன்.   ”சில மாதங்கள் பொறுங்கள்; நாம் இருவருமே செல்வோம்” என்றார்.  

”எல்லா நாடுகளையும் விட்டு விட்டு துருக்கியில் என்ன விசேஷம்? அடிக்கடி ப்ரஸீல், சிலே என்றல்லவா
சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?”

ப்ரஸீல், சிலே, அர்ஜெண்டினா, பெரூ, பொலிவியா, பராகுவாய், உருகுவாய், வெனிஸுவலா போன்ற


தென்னமெரிக்க நாடுகளுக்குப் போக ஆசைதான்.  ஆனால் போக முடியாததற்கு ஒரே காரணம், விமானச்
செலவு.  டிக்கட்டுக்கே இரண்டு மூன்று லட்சம் ஆகும்.  இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணம் செல்ல
முடியாததற்கு முக்கியத் தடையாக இருப்பது, நம்முடைய ரூபாய்க்கு வெளிநாட்டில் மதிப்பு இல்லாததுதான். 
இந்திய ரூபாயை வைத்துக் கொண்டு பர்மா, பங்களா தேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்குத்தான் சிரமம்
இல்லாமல் போய் வர முடியும்.

இந்த நிலையில் கிழக்காசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் போய் வருவதுதான் இப்போதைக்கு


சாத்தியம்.  அதிலும் துருக்கியில் என்ன விசேஷம் என்றால், ஓரான் பாமுக்.  அவரைச் சந்திப்பதில் அவ்வளவு
ஒன்றும் ஆர்வம் இல்லை.  ஆனால் அவருடைய இஸ்தாம்பூல்,  அவருடைய கார்ஸ் போன்ற நகரங்கள்
நமக்குள் எழுப்பியிருக்கும் சித்திரங்கள் மகத்தானவை.  உலகில் அதிக அளவுக்கு எழுதப்பட்ட ஒரு நகரம்
இஸ்தாம்பூல்.  அதற்கு அடுத்ததாகத்தான் பாரிஸ்.  சென்ற ஆண்டு நோபல் பரிசு பெற்ற பத்ரிக் மோதியானோ
பாரிஸ் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார். ஆனால் மோதியானோவுக்கு உலகப் பிரசித்தி பெற்ற ஒரு
வரலாற்றுச் சம்பவம் தூண்டுதலாக இருந்தது.  அவருடைய பாரிஸ் நாஜி ராணுவத்தினரால் ஆக்ரமிக்கப்பட்ட
பாரிஸ்.  பாமுக்கின் இஸ்தாம்பூலுக்கு அப்படிப்பட்ட  பிரசித்தமான வரலாற்றுக் காரணிகள் ஏதுமில்லை. 
ஆனாலும் தன்னளவிலேயே நூற்றுக் கணக்கான கதைகளைக் கொண்டிருந்தது இஸ்தாம்பூல்.  உலகில் எந்த
நகரத்துக்குமே இல்லாத இரண்டு கலாச்சாரங்கள், இரண்டு கண்டங்கள், இரண்டு மதங்கள் சங்கமிக்கும் பூகோள
ஆச்சரியத்தைக் கொண்டதாக இருந்தது இஸ்தாம்பூல்.   

இந்த ஆண்டு மே மாதம் ராமசுப்ரமணியனுக்கு துருக்கி செல்ல வாய்ப்பு கிடைத்தது.  அலுவலக விஷயமாகச்
செல்வதால் அவருக்கு லகுவில் வசா
ீ கிடைத்து விட்டது.  அலுவலக வேலை இரண்டு நாட்கள்தான்.  நாம் ஒரு
பத்து நாள் துருக்கி முழுவதும் சுற்றுவோம் என்றார்.  நான் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.  எப்போது
வெளிநாடு சென்றாலும் ட்ராவல் ஏஜெண்டுகளை அணுகாமல் நானாகவே திட்டமிட்டுக் கொள்வது வழக்கம். 
அதில் இருக்கும் சுதந்திரம் ஏஜெண்டுகள் மூலம் செல்லும் charted பயணத்தில் இல்லை என்பது என்
அபிப்பிராயமாக இருந்தது.  நாமாகவே திட்டமிட்டால் நாம் நினைத்த நேரத்துக்குக் கிளம்பலாம்; நினைத்த
இடத்துக்குப் போகலாம், வரலாம்.   குழுப் பயணத்தில் இந்த வசதி இல்லை.  அவர்கள் சொல்லும் இடங்களுக்கு
மட்டுமே போக முடியும்.  அவர்கள் சொல்லும் நேரத்தோடு அங்கிருந்து கிளம்பி விட வேண்டும்.  சுதந்திரம்
இருக்காது.   நான் துருக்கி செல்லும் காரணம், ஓரான் பாமுக்கின் இஸ்தாம்பூல் மட்டுமே அல்ல;
இஸ்தாம்பூலில் இருக்கும் நீல மசூதிதான் அந்த நகரை நோக்கி என்னை இழுத்துக் கொண்டே இருந்தது. 
உலகில் உள்ள அதிஅற்புதமான மசூதிகளில் அதுவும் ஒன்று.  அங்கே அமர்ந்து பாங்கு (தொழுகைக்கான
அழைப்பு) சப்தத்தைக் கேட்க வேண்டும் என்பது எனது தீராத ஆசை.    

ஆனால் துருக்கியில் பயண முகவரின் துணை இல்லாமல் நாமே சுதந்திரமாகச் சுற்ற முடியுமா என்பது பற்றி
எனக்குப் பெரும் சந்தேகம் இருந்தது. நண்பர்கள் வேறு துருக்கி என்றதுமே ”துருக்கியா?” என்று ஏதோ
ஆஃப்கானிஸ்தான் போவது போல் பயமும் பீதியுமாகக் கேட்டு கலக்கத்தை ஏற்படுத்தினார்கள்.  அதனால் முதல்
முறை ஒரு பயண நிறுவனத்தின் உதவியுடன் குழுவாகச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.  (ஆம்,
துருக்கிக்குப் பலமுறை செல்வதாக முடிவு செய்திருந்தேன். பாமுக்கின் ’என் பெயர் சிவப்பு’ நாவலின் பிரதான
கதாபாத்திரமே கார்ஸ் நகரம்தான்.  வெறும் 74000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட இந்த ஊர் துருக்கியின்
வடகிழக்கில் துருக்கியும் ஆர்மீ னியாவும் சந்திக்கும் எல்லைப் பகுதியில் உள்ளது.  இங்கே நான்
குளிர்காலத்தில்தான் போக விரும்பினேன்.  ஏனென்றால், ’என் பெயர் சிவப்பு’ நாவலில் பாதிப் பகுதி பனி
பற்றித்தான் எழுதியிருக்கிறார் பாமுக்.  பனி பற்றி எப்படி ஒருவர் நூறு இருநூறு பக்கம் எழுத முடியும் என்று
உங்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டால் அந்த நாவலைப் படித்துப் பாருங்கள்.  ஜி. குப்புசாமி அருமையாக
மொழிபெயர்த்திருக்கிறார்.  ஒரு மொழிபெயர்ப்பு நூலைப் படிப்பது போலவே இல்லை.  ஒருவகையில் என்
துருக்கி பயணத்துக்குக் காரணமே ஜி. குப்புசாமிதான் என்று சொல்வேன்.  எனவே இந்த முறை துருக்கிப்
பயணத்தில் இஸ்தாம்பூலும் வேறு சில ஊர்களும் என்று முடிவு செய்து கொண்டேன்.  அடுத்த முறை,
அங்காராவும் கார்ஸும்.)
துருக்கியில் உள்ள ஒரு பயண நிறுவனத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன்.  இதில் கவனிக்க
வேண்டிய விஷயம், இந்திய நிறுவனங்கள் மூலம் செல்வதில் பல சிக்கல்கள் உள்ளன.  பல பயணிகள் ட்ரிப்
அட்வைஸரில் எழுதியிருக்கும் விஷயங்கள் கதிகலங்க அடிக்கின்றன.  எல்லா ஏற்பாடுகளையும் முடித்து
வஸா,
ீ டிக்கட் எல்லாம் கொடுத்து விடுவார்கள்.  ஆனால் நாம் செல்ல வேண்டிய நாட்டில் போய் இறங்கினால்
நம்மை அழைத்துச் செல்ல அங்கே ஒருவரும் வர மாட்டார்கள்.  நாமே டாக்ஸி பிடித்து, தேடி அலைந்து
நமக்காக பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஓட்டலுக்குச் சென்றால் அங்கே நம்முடைய இந்திய
நிறுவனத்திலிருந்து எந்தத் தகவலும் போயிருக்காது.  சுற்றுலாப் பயணியாக மனைவியோடும்
குழந்தைகளோடும் செல்பவர்கள் ரத்தக் கண்ணர்ீ விட்டு ட்ரிப் அட்வைஸரில் எழுதியிருக்கிறார்கள். 
இந்தியாவுக்குள்ளேயே கூட பல இந்தியப் பயண நிறுவனங்கள் அப்படிச் செய்வதாக ட்ரிப் அட்வைஸரில்
செய்திகள் உண்டு.  அதனால் இந்திய நிறுவனங்களைத் தவிர்த்து விட்டு துருக்கி நிறுவனத்தைத் தொடர்பு
கொண்டேன்.  அந்த ஊர்க்காரர்களைப் பிடித்தால் துருக்கிக்குள் செய்யும் பயணம் லகுவாக இருக்கும் என்பது
என் யோசனை.

எனக்கான விமான டிக்கட் எடுத்தாகி விட்டது.  துருக்கி பயண நிறுவனத்துக்கு சென்னையில் ஒரு முகவர்
இருந்தார்.  அவரையும் தொடர்பு கொண்டேன்.  எதற்கும் கவலை வேண்டாம்; எல்லாவற்றையும் சுலபமாக
முடித்துக் கொடுக்கிறேன் என்றார்.  அது மார்ச் முதல் வாரம்.  ஏப்ரல் 15 தேதி வாக்கில் கிளம்ப வேண்டுமானால்
நிறைய நாள் இருந்தது.  சாவகாசமாக வஸாவுக்கு
ீ விண்ணப்பிக்கலாம்.  

வஸாவுக்கு
ீ விண்ணப்பிக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டாகும்.  என்னுடைய வங்கிக்
கணக்கில் எப்போதுமே 1000 ரூ. தான் கையிருப்பில் இருக்கும்.  அதற்கும் குறைந்தால் கணக்கு வைத்துக்
கொள்ள முடியாது என்று சொல்லி விடுகிறார்கள் வங்கியில்.  தொழில் எழுத்தாக இருப்பதால் ஆயிரம் ரூபாய்
வைத்திருப்பதே அதிக பட்சம்.  எழுத்தாளன் என்றாலே ஏழை என்றுதான் பொருள்.  சங்க காலத்திலிருந்தே
அப்படித்தான்.  தனக்கு தானம் தராத மன்னனைக் கன்னாபின்னாவென்று ஏசி விட்டுச் செல்கிறாள் அவ்வை. 
நேரடியாக அல்ல; முகத்துக்கு நேரே ஏசினால் காராக்கிரகம்தான் என்று அரண்மனையை விட்டு வெளியே வந்து
வாயில்காப்போனிடம் ஏசுகிறாள்.  ஆனால் வஸா
ீ கொடுக்கும் வெளிநாட்டு மண்டுகளுக்கு இந்தக்
கதையெல்லாம் புரியாது.  இந்த 1000 ரூபாய்ப் பிரச்சினையினாலேயே இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய
மூன்று நாட்டுத் தூதரகங்களும் எனக்கு வஸா
ீ மறுத்திருக்கின்றன.  அதனால் இந்த முறையும் அப்படி ஆகக்
கூடாதென்று ஒரு நண்பரிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி வங்கிக் கணக்கில் சேர்த்திருந்தேன்.
இதற்கிடையில் இஸ்தாம்பூலில் இருக்கும் பயண நிறுவன ஆள் துருக்கிக்குள் நாங்கள் சென்று வருவதற்கான
விமான டிக்கட் போடுவதற்காக என்னுடைய வங்கி அட்டையின் (Debit card) பின் நம்பரைக் (CVV) கேட்டார். 
யாருக்கும் நம்முடைய பின் நம்பரைக் கொடுக்கக் கூடாது என்று வங்கியில் அடிக்கடி நம்மை
நினைவூட்டுகிறார்கள்.  அது ஞாபகம் வந்து சென்னை முகவரைப் பிடித்தேன்.  அவரோ அதெல்லாம்
கொடுக்காதீர்கள் என்று சொல்லி விட்டார்.  அதன் பிறகு அந்த சென்னை முகவரைப் பிடிக்கவே
முடியவில்லை.  அலுவலகம் சென்றாலும் அவரைக் காணோம்.  இப்படியே போனதில் ஏப்ரல் 10 தேதி ஆகி
விட்டது.  ஏப்ரல் 16-க்கு நான் டிக்கட் எடுத்திருந்தேன்.  அப்போது என்னைத் தொடர்பு கொண்ட சென்னைப் பயண
முகவர் “ஒரு வாரத்தில் வஸா
ீ கிடைக்காது” என்று சொல்லிக் கை விரித்து விட்டார்.   நான் தான் ஒரு
மாதத்துக்கு முன்பே ஆவணங்களையும் பணத்தையும் தயார் செய்திருந்தேனே என்றால் அதற்குப் பதில்
இல்லை.  
பிறகு தாமஸ் குக் அலுவலகம் போய்க் கேட்டேன்.  அவர்களும் வஸா
ீ வாங்குவதற்குக் குறைந்தது பத்து
தினங்களாவது தேவை என்றார்கள்.  

விமான டிக்கட்டை ரத்து செய்ததில் சுளையாக 30000 ரூ. நஷ்டமானது.  இது பற்றி ட்ரிப் அட்வைஸரில்
விளக்கமாக எழுதினேன்.  உடனே அதைப் படித்து விட்டு இஸ்தாம்பூலிலிருந்து ஃபோன் செய்து திட்டி
மிரட்டினார் இஸ்தாம்பூலில் இருந்த பயண நிறுவன மேலாளர்.  

இந்தக் குழப்பத்தினால் என் நண்பர் ராம் குறிப்பிட்ட தேதியில் இஸ்தாம்பூல் போய் விட்டார்.  நானும் அவரும்
இஸ்தாம்பூலில் நான்கு நாட்கள் தங்குவதற்காக முன்னேற்பாடாக அறை வாடகைக்குப் பணம்
கட்டியிருந்தோம்.  எந்த நிறுவனத்திலும் நாம் பணம் கட்டிய பிறகு அதைத் திரும்பப் பெற முடியுமா? அதனால்
அந்த நான்கு நாட்களும் ராம் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் சும்மாவே இருந்திருக்கிறார்.   ஃபோன் செய்து, 
”வெளியே போய் சுற்ற வேண்டியதுதானே?” என்று கேட்டேன்.  ”என்ன பார்ப்பது?  எங்கே பார்த்தாலும் பழைய
கட்டிடம் கட்டிடமாக இருக்கிறது.  வேறு என்ன?” என்றார் ராம்.  ஊர் என்றால் வெறும் கட்டிடம் இல்லை என்று
அவரிடம் பத்து நிமிடம் சொற்பொழிவாற்றினேன்.  

நிற்க.  இஸ்தாம்பூல் பயண நிறுவனம் என்னை ஏமாற்றியது போல் மற்ற ஐரோப்பிய நாடுகளில் நடக்க
வாய்ப்பே இல்லை.  அதனால்தான் ஐரோப்பியர்கள் ஆரம்பத்திலிருந்தே துருக்கியை ஐரோப்பிய யூனியனில்
சேர்த்துக் கொள்ள மறுத்து வருகிறார்கள்.    

ராம் இஸ்தாம்பூலில் இருந்த போது தொழிலாளர் தினம் வந்தது.  மே முதல் தேதி.  ”நகரம் பூராவும் மயான
அமைதி.  ஏதோ ஊரடங்கு உத்தரவு போட்டது போல் இருக்கிறது” என்றார் ராம்.  நகரம் முழுவதும் ஒரு ஈ
காக்காய் இல்லை.  வெளியே போய் ’கலாட்டா பாலம்’ வரை நடந்து வரலாம் என்று கிளம்பியிருக்கிறார்.  நடந்து
செல்லும் போது ஒரு ஆள் இன்னொரு ஆளைக் கத்தியால் குத்தி விட்டு ஓடியிருக்கிறான்.         
                 
இதைக் கேள்விப்பட்ட பிறகு அதே இஸ்தாம்பூல் பயண நிறுவனத்தின் மூலம் போனால் அங்கேயே நமக்கு
சமாதி கட்டினாலும் கட்டி விடுவார்கள் என்று பயந்து வேறொரு இந்திய பயண நிறுவனத்தை அணுகினேன். 
அவர்களுடைய வேலை பிரமாதமாக இருந்தது.  பத்தே நாளில் வஸா
ீ கிடைத்தது.
இந்தத் தொடரின் விளம்பரத்தில் காளான் குன்றுகளைப் பார்த்திருப்பீர்கள்.  அது பற்றிப் பின்னர் விரிவாக

எழுதுகிறேன்.  இப்போது சந்திரமுகியில் ரஜினியும் நயனும் பாடும் டூயட்டைப்


பாருங்கள்.  அதன் பின்னணியில் வருவதுதான் காளான் குன்றுகள்.
===

நிலவு தேயாத தேசம் – 3 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   02 , 2015  01:34:23 IST
Latest Novels at Attractive Price

"15 மே அன்று மதியம் 3.30 மணிக்கு சென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு விமானம்…” என்று ஆரம்பிக்கும்
பயணக் கட்டுரையை எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் படிக்க மாட்டேன்.  ஒரு நல்ல பயணக் கட்டுரையில்
இந்த விபரம் இருக்காது.  என்றாலும் விமான நிலையத்திலேயே எனக்கு இரண்டு அதிர்ச்சியான சம்பவங்கள்
நிகழ்ந்ததால் இப்படி ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
 
வெளிநாடு செல்ல வேண்டுமானால் மூன்று மணி நேரத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்க
வேண்டும்.  நான் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக நான்கு மணி நேரத்துக்கு முன்னதாகவே போய் விட்டேன். 
இமிக்ரேஷனை முடிக்க வேண்டும்.  ஒரு ஐரோப்பியப் பயணத்தின் போது இமிக்ரேஷன்காரர்கள் என்னைத்
தீவிரவாதியாகவே முடிவு செய்து விட்டது போல் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.  நானும் பயத்தில் ஏதேதோ
உளறிக் கொட்டிக் கொண்டிருந்தேன்.  விமானம் கிளம்பும் நேரம் கூட வந்து விட்டது.  அந்த நேரத்தில்
ஃப்ராங்க்ஃபர்ட் செல்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பாடலாசிரியர் அறிவுமதி குறுக்கிட்டு
என்னைக் காப்பாற்றினார்.  அறிவுமதியை இமிக்ரேஷன் அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.  அப்படியெல்லாம்
பிரச்சினை வந்து விடக் கூடாது என்று கருதியே ரொம்ப முன்னதாகக் கிளம்பினேன்.  11 மணிக்கு சென்னை
விமான நிலைய வாசலில் அந்தப் பெண் என்னைப் பார்த்து சிரித்தார்.  எங்கேயோ இவரைப் பார்த்திருக்கிறோமே
என்று புருவத்தைச் சுருக்குவதற்குள்ளேயே ஞாபகம் வந்து விட்டது.  என் பயணத்துக்கு ஏற்பாடு செய்த
நிறுவனத்தில் என்னைப் போலவே துருக்கி செல்ல இருந்த பெண்.  நான் செல்ல இருந்த அதே விமானம்.  ஓமன்
ஏர்வேஸ்.  மஸ்கட் வரை ஒரு விமானம். மஸ்கட் விமான நிலையத்தில் நான்கு மணி நேரம் தங்கி விட்டுப்
பிறகு இன்னொரு விமானத்தில் இஸ்தாம்பூல். 
 
இதுவரை என்னுடைய பயணங்களில் என் பக்கத்து இருக்கையில் எழுபது எண்பது வயதுக்கு மேற்பட்ட
முதியவர்கள் – அதிலும் காது கேளாதவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் போன்றவர்களையே சக பயணிகளாக
அடையும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன்.  இப்போதுதான் முதல்முறையாக ஒரு இளம்பெண்.  பக்கத்து
இருக்கையா இல்லையா என்று தெரியாது.  ஆனால் என்னோடு இஸ்தாம்பூல் வருகிறார்.  பயண நிறுவனம்
ஒன்றே என்பதால் அநேகமாக இஸ்தாம்பூலில் என்னோடுதான் சேர்ந்து வருவார்.  நான் இஸ்தாம்பூலில் மூன்று
நாள் நிற்கிறேன்.  எப்படியோ, பெண்களைப் பற்றி அதிகம் யோசிக்கக் கூடாது என்று அந்த எண்ணத்தைத்
தொடர்வதைக் கைவிட்டேன்.
 
பொதுவாக பெண்கள் யாரும் ஆண்களிடம் தாமே முன்வந்து பேசி விடுவதில்லை.  நினைவு தெரிந்த
நாளிலிருந்து ஆண்களால் அடைந்திருக்கும் தொந்தரவுகளே அதற்குக் காரணம் என்பது தெரியுமாதலால்
பெண்கள் என்றாலே காத தூரம் ஒதுங்கி விடுவது என் இயல்பு.  ஆனால் வழக்கத்துக்கு மாறாக அந்தப்
பெண்ணே வலிய வந்து பேசினார்.  அது மட்டுமல்லாமல் என்னை யாரென்றும் அவருக்குத்
தெரிந்திருக்கவில்லை.  பெஸண்ட் நகர் என்றார்.  பேச்சிலேயே தெரிந்தது.  நுனிநாக்கு ஆங்கிலம்.  தமிழ்
தெரியா தமிழ்ப் பெண்.  அபிநயா.  ஆராய்ச்சி மாணவி. எதில் ஆராய்ச்சி?  ஐரிஷ் இலக்கியம்.  துருக்கிக்குத்
தனியே பயணம்.  ஆச்சரியம் என்றேன்.  Wanderlust என்றார்.  நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த
போது பின்னால் ஹலோ சாரு என்ற குரல்.  பார்த்தால் ஒரு தோள்பையுடன் ஆனந்த்.  துபாயில் வசிக்கும் என்
நெருங்கிய நண்பர்.  அவர் இந்தியா வருவதே எனக்குத் தெரியாது.  மூன்று நாட்கள் கோவில் திருவிழாவுக்காக
வந்ததாகச் சொன்னார்.  எனக்கு உள்ளுக்குள் பயம் சுருள ஆரம்பித்தது.  ’சாருவை ஒரு பெண்ணோடு விமான
நிலையத்தில் பார்த்தேன்’ என்று யாரிடமாவது சொல்லி வைத்தால் என்ன ஆவது?  நான் பயந்தது போலவே
ஆனந்த், “சாரு, ஒரு நிமிஷம் இப்படி வர்றீங்களா?” என்று தனியே அழைத்தார்.  முடிந்தது கதை.  யார் இந்தப்
பெண் என்று கேட்கப் போகிறார்.   யாரென்று தெரியாது என்றால் நம்பவா போகிறார்?  ஆனால் ஆனந்த் என்
வாசகர் வட்டத்தில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்.  தேர்ந்த படிப்பாளி.  அவர் கூப்பிட்டது இன்னொரு
விஷயத்துக்காக.  ”துருக்கியில் உங்களுக்குப் பணம் தேவைப்படும்; இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்று 200
திர்ஹாமை என் கையில் திணித்தார்.  உடனே கிளம்பி விட்டார்.  அப்போது எனக்கு ஒரு திர்ஹாமுக்கு எத்தனை
ரூபாய் என்று தெரியாது.  பின்னர் துருக்கியில் ஒரு கரன்ஸி எக்ஸ்சேஞ்ஜ் நிறுவனத்தில் அதை மாற்ற
வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.  அந்தக் கதை அப்புறம்.
 
நண்பர் ராம் தன்னுடைய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் க்ரெடிட் கார்டை என்னிடம் கொடுத்திருந்தார்.  இரண்டு
லட்சம் ரூபாய் வரை அது செல்லுபடியாகும்.  ஆனால் என்னிடமும் டெபிட் கார்டு இருந்தது.  அதில் 50,000
ரூபாய் இருந்தது.  உள்நாட்டுப் போக்குவரத்து செலவு, மூன்று வேளை உணவு என்று எல்லாவற்றுக்கும்
சேர்த்தே பயண நிறுவனத்துக்குப் பணம் செலுத்தியிருந்ததால் துருக்கியில் நான் செலவு செய்ய வேண்டிய
அவசியம் எதுவும் இல்லை.  சென்னையிலிருந்து மஸ்கட் நான்கு மணி நேரப் பயணம். பிறகு அங்கிருந்து
அதிகாலை நான்கு மணிக்கு இஸ்தாம்பூலுக்கு விமானம் ஏற வேண்டும். 
 
விமானத்தில் அபிநயாவைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவம்
செய்து கொள்ள சென்னை வருகிறார்கள் என்பதை விமானத்தைப் பார்த்ததும் தெரிந்து கொள்ள முடிந்தது. 
அங்கே மருத்துவத்துக்குச் செலவு அதிகம் என்பதால் அறுவை சிகிச்சை போன்ற பெரிய விஷயங்களுக்கு
இங்கே வந்து விடுகிறார்கள்.  கூடவே நோயாளியைக் கவனிக்கவும் இரண்டு பேர்.  மூன்று பேருக்கான விமானச்
செலவு, தங்கும் செலவு எல்லாம் போக மருத்துவச் செலவு ஆகிய  இவ்வளவையும் சேர்த்தால் கூட வளைகுடா
நாடுகளை விட மருத்துவச் செலவு இங்கே பத்தில் ஒரு மடங்குதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
புத்தகப் படிப்பிலும், தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்ததிலும், என்ன பாட்டு கேட்கலாம் என்று
தேடியதிலும் நான்கு மணி நேரம் ஓடி விட்டது.  மஸ்கட் சேர்ந்த பிறகு விமான நிலையத்தில் அபிநயாவைத்
தேடினேன்.  தென்படவில்லை.  பிறகு விமான நிலையத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தேன்.  பலவிதமான
கடைகளும் அதிலிருந்த பொருட்களும் கண்ணைப் பறிப்பதாக இருந்தன.  எத்தனையோ விதமான பொருட்கள். 
பீங்கான் கிண்ணங்கள்.  விதவிதமான தேயிலைகள்.  வாசனைத் திரவியங்கள்.  விளையாட்டுச் சாமான்கள். 
ஒவ்வொரு கடையாகப் பார்த்து விட்டுக் கடைசியில் மதுபானக் கடைகளுக்குச் சென்றேன்.  ஒவ்வொரு
போத்தலாக ஆசையுடன் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன்.  இங்கே நம்மூர் டாஸ்மாக்கில் இருக்கும் பொருளின்
பெயரும் மது, சர்வதேச விமான நிலையங்களின் சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்ட கடைகளில் கிடைப்பதும்
மது என்றால் சொர்க்கமும் நரகமும் ஒன்று என சொல்வதற்குச் சமம்.  அந்த மதுபானக் கடைகளில்
விற்பனையாளர்கள் பெண்களாக இருப்பதையும் கவனித்தேன்.  அனைவரும் ஹிஜாப் (முகத்திரை)
அணிந்திருந்தனர்.  நள்ளிரவிலும் அவர்கள் எந்தப் பயமும் இன்றி மதுபானம் விற்றுக் கொண்டிருந்தனர். 
 
ஒரு இடத்தில் ஸப்வே உணவகத்தைப் பார்த்தேன்.  நம் ஊரில் உள்ளது போல் ஸப்வேயில் சைவ உணவே
இல்லை.  மேலும், மாட்டிறைச்சியும் இருந்தது.  பொதுவாகவே உணவகங்கள் அந்தந்த நாட்டுக்
கலாச்சாரத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதை கவனித்திருக்கிறேன்.  மலேஷியாவில் உள்ள
’பவன்’களில் மாமிச உணவும் கிடைக்கும்.  அதே ‘பவன்’களில் இந்தியாவில் அசைவத்தைத் தேடினால், மூச்…
கேட்டாலே விபரீதமாகப் பார்ப்பார்கள்.  
 
அறிவிப்பாளர்களின் அரபி மொழியைக் கவனித்த போது அதில் பல உருது வார்த்தைகள் இருப்பதைக்
கண்டேன்.  நன்றி என்பதற்கு ஷுக்ரன் என்றார்கள்.  ஷுக்ரியா என்றால் உருதுவில் நன்றி. 
 
வயிறு பசித்தது.  ஒரு தமிழ் உணவகத்தில் கூட்டம் அள்ளிக் கொண்டு போனது.  பலருடைய தட்டுகளில்
இட்லி.  மஸ்கட்டுக்கு வந்து இட்லி சாப்பிட வேண்டுமா என்று எண்ணி உணவகங்கள் இருக்கும் வரிசைக்குப்
போனேன்.  ஒரு மேற்கத்திய பாணி உணவகத்தில் அமர்ந்து ஸாண்ட்விச் சாப்பிட்டு ஜூஸ் குடித்தேன்.
சாப்பிடுவதற்கு முன்பே விலைப் பட்டியலைப் பார்த்து விட்டுத்தான் அமர்ந்தேன்.  எல்லாம் சேர்த்து 19
ரியால்தான்.  கணக்குப் போட்டுப் பார்த்தேன்.  ஒரு ரியாலுக்கு சுமார் 20 ரூபாய் இருக்கும்.  400 ரூ.  ம்,
பரவாயில்லை.  திருப்தியாக சாப்பிட்டேன்.  (இதில் ஒரு விபரீதம் இருந்தது.  பத்து நாள் கழித்துத் திரும்பவும்
மஸ்கட் விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் காத்திருந்த போதுதான் அந்த விபரீதம் தெரிய வந்தது!)
 
ராம் கொடுத்திருந்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வேலை செய்கிறதா என்று பார்ப்பதற்காக அதைக் கொடுத்தேன். 
வேலை செய்தது.   கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு காஃபி கடையில் போய் கப்பூச்சினோ குடித்தேன்.  3
ரியால்.  என்னுடைய டெபிட் கார்டைக் கொடுத்தேன்.  வேலை செய்தது.  நிம்மதி.  இனிமேல் பத்து
நாட்களுக்குப் பணத்துக்குக் கவலை இல்லை. 
 
அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்த போது சினிமா நடிகை போல் படு கவர்ச்சியாக
ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணை ஒரு விமான நிலையக் காவலாளி வெகு விமரிசையாக அழைத்துப்
போய்க் கொண்டிருந்தார்.  அது பற்றி இன்னொரு காவலாளி சைகையால் ’ம்… நடக்கட்டும், நடக்கட்டும்… 
உனக்கு இன்று அதிர்ஷ்டம்தான்’ என்று சொல்வது போல் அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் கிண்டல் செய்தார். 
முதல் காவலாளி சிரித்துக் கொண்டே முன்னால் போனார்.  உலகம் பூராவும் ஆண்கள் ஆண்கள்தான் என்று
நினைத்துக் கொண்டேன். 
 
இவ்வளவு சுற்றியும் அபிநயாவைக் காணவில்லையே என்று தோன்றியது.  பிறகு அந்தக் கவலை நமக்கெதற்கு
என்று நினைத்தபடி ஒரு இடத்தில் அமர்ந்து மனிதர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.  அதுவரை அராபியர்களை
இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில்லை என்பதால் அவர்களுடைய நடையுடை பாவனைகளை ஆச்சரியத்துடன்
பார்த்தேன்.  பெண்கள் ஹிஜாப் அணிந்து தலையை மறைத்திருந்தாலும் மிகவும் கவர்ச்சியாக ஆடை
அணிந்திருந்தார்கள்.  சில பெண்கள் மூக்கை மூடியபடி ஒரு உலோகத் தகட்டை அணிந்திருந்தார்கள். 

இதன் பெயர் batoola என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  பாலைவனப் பிரதேசங்களில் காற்றிலிருந்தும்


மண்ணிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பெண்கள் இதை அணியத் துவங்கினர்.  நம் ஊரில் மெட்டி
திருமணமான பெண்ணுக்கு அடையாளமாக இருப்பது போல் பட்டூலா அங்கே திருமணமான பெண்களின்
அடையாளமாக இருக்கிறது.  ஆனால் சில நாடுகளில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே பட்டூலா
அணிகிறார்கள். ஓமனில் எப்படி என்று தெரியவில்லை. 
 
அந்த விமான நிலையத்தில் ஒரு விஷயம் பெரிய ஆச்சரியத்தை அளித்தது.  எந்தப் பெண்ணுமே தன்
குழந்தையைத் தூக்கிச் செல்லவில்லை.  ஆண்கள்தான் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.  பெண்கள்
தங்களுடைய டம்பப் பையை ஆட்டிக் கொண்டு டாம்பீகமாகச் செல்ல ஆண்கள்தான் ஒரு கையில் குழந்தையும்
ஒரு கையில் பையுமாக ஏதோ வேலைக்காரனைப் போல் போய்க் கொண்டிருந்தார்கள்.  ஒருத்தர் கூட
விதிவிலக்கு இல்லை.  ஒரு ஜோடிக்குக் குழந்தை இல்லை.  புதிதாகத் திருமணமான ஜோடி போல் தெரிந்தது.
அந்த ஆடவன் மூன்று பெரிய பைகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போனான்.  அது பற்றிய எந்தக்
கவலையும் இல்லாமல் முன்னே போய்க் கொண்டிருந்தாள் மனைவி.  ஹிஜாப் எல்லாம் போட்டுக்
கொண்டிருந்தார்கள்.  ஆனால் இங்கே நாம் நினைக்கிறாற்போல் வெளியில் பார்க்கும் போது
பெண்ணடிமைத்தனம் இல்லை. அதன் பிறகு துபாய், கத்தர் போன்ற அரபு நாடுகளில் வசிக்கும் என்
நண்பர்களிடம் விசாரித்த போது பல புதிய விஷயங்கள் புலப்பட்டன. 
 
அரபு நாடுகளில் பெண்ணடிமைத்தனம் என்பது அமெரிக்க ஊடகங்கள் உண்டுபண்ணிய கற்பிதங்களே.  அரபு
சமூகம் வட்டைப்
ீ பொறுத்தவரை தாய்வழிச் சமூகமாகவே இருந்து வருகிறது. மனைவி வெளியே
சென்றிருக்கும் போது தனது மூன்று நான்கு குழந்தைகளை கணவன் வட்டில்
ீ தனியே வைத்துப்
பராமரிப்பதெல்லாம் சர்வ சகஜம்.  பெண்கள் எங்கே செல்வார்கள்?  உதாரணமாக, திருமண வைபவங்களில்
பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும்.  அப்போது அந்தப் பெண்கள் அணியும் உடைகள்
அதிகவர்ச்சிகரமாக இருக்கும்.  ஆனால் ஆண்கள் பார்க்க முடியாது.  அலைபேசிகளுக்கோ புகைப்படக்
கருவிகளுக்கோ அங்கே அனுமதி இல்லை.  பெண்களின் பிரதான பொழுதுபோக்கு ஷாப்பிங்.  வாராவாரம்
டிஸைனர் ஆடைகள், முகப்பூச்சு, உதட்டுச் சாயம், செருப்பு, நகைகள், டம்பப் பை என்று வாங்கிக் குவிப்பார்கள். 
ஒரு டிஸைனர் ஆடையின் விலை 10,000 டாலர் கூட இருக்கும்.  இதெல்லாம் மத்தியதர வர்க்கப் பெண்கள்
செய்வது.   
 
இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாலும் ஒரு
பெண்ணை சமாளிப்பதற்குள்ளேயே அவனுக்கு விழி பிதுங்கி விடுகிறது.  அவனிடம் பணம் சேருவதைப்
பெண்கள் அனுமதிப்பதே இல்லை.  சேர்ந்தால் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து விடுவானே?
மட்டுமல்லாமல் ஆண்கள்தான் திருமணத்தின் போது பெண்ணுக்குப் பணம் தர வேண்டும்.  (தாய்லாந்திலும்
இந்தப் பழக்கம் உண்டு.)
 
பெண்கள் சிகரெட் புகைப்பதும் மிகவும் சகஜமானது.  Marlbrows Lights-ஏ இந்தப் பெண்களுக்காகத்தான்
தயாரிக்கப்படுகிறது என்று அங்கே கிண்டலாகச் சொல்வதுண்டு.  பெண்கள் புகைப்பதை நான் ஈரானிய
சினிமாக்களில் அதிகம் பார்த்திருக்கிறேன்.  டெஹ்ரானின் பூங்காக்களில் பெண்கள் சிகரெட் புகைத்துக்
கொண்டிருப்பதை நீங்கள் சர்வசகஜமாகப் பார்க்க முடியும்.   
 
அரபு சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தாலும் பெண்களின் நிலையில் ஒரு முரண் உள்ளது.  ஒரு வட்டில்

பெண்களுக்கென்றும் ஆண்களுக்கென்றும் தனித்தனி நிலைவாசல்கள் உள்ளன.  மேலும், பெண் சுதந்திரம்
என்றால் உடம்பைக் காண்பிப்பது, குடிப்பது, கண்டவர்களோடு உடலுறவு கொள்வது என்று இல்லாமல் குடும்ப
அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்துக் கொள்வது என்ற வகையில் அரபுப் பெண்கள் வலுவான ஸ்தானத்தில்
இருக்கிறார்கள். 
 
நள்ளிரவு இரண்டு மணிக்கு இஸ்தாம்பூல் செல்லும் விமானம் பற்றிய அறிவிப்பு வந்தது.  பையை இழுத்துக்
கொண்டு கீ ழ்த்தளத்துக்கு இறங்கினேன்.  அங்கே பார்த்தால் அபிநயா ஒரு நாற்காலியில் குத்துக்காலிட்டு
அமர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.  பயணிகள் வரிசையில் நிற்க ஆரம்பித்ததும் அவர் அருகில் சென்று
பெயர் சொல்லி அழைத்தேன்.  ம்ஹும்.  பயனில்லை.  லேசாகத் தொட்டு எழுப்பியதும் திடுக்கிட்டு எழுந்தார். 
வரிசையைக் காண்பித்தேன்.
 
இஸ்தாம்பூல் விமான நிலையத்தை அடைந்ததும் துருக்கி என்னதான் ஐரோப்பாவோடு ஒட்டிக்
கொண்டிருந்தாலும் ஐரோப்பிய மனோபாவத்தைப் பெறவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 
இமிக்ரேஷனில் அதிகாரிகள் டீ குடித்தபடியும், ஜோக் அடித்து சிரித்துக் கொண்டும் எவ்வளவு காலம் தாழ்த்த
முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தினார்கள்.  ஒரு கட்டத்தில் பயணிகள் பொறுமையிழந்து கத்திய பிறகே
கொஞ்சம் சுறுசுறுப்பாய் நகர்ந்தது வரிசை. 
 
விமான நிலையத்துக்கு வெளியே எங்கள் பெயர் தாங்கிய அட்டையைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்
பயண நிறுவனத்தின் ஆள். ஆஸ்குர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அபிநயாவின் பெயரை எல்லா
ஐரோப்பியர்களையும் போலவே அபிநாயா என்று உச்சரித்தார்.  காரில் ஏறும் போது ஒரு நுணுக்கமான
விஷயத்தைக் கவனித்தேன்.  அபிநயா காரின் முன்னே அமர்வதற்காக கார்க் கதவைத் திறந்து
அபிநயாவுக்காகக் காத்திருந்தார் ஆஸ்குர்.  ஆனால் அபிநயா அதைக் கவனிக்காதது போல் பின் கதவைத்
திறந்து உள்ளே நுழைந்தார்.  பிறகு நான் முன்னே உட்கார்வதைத் தவிர வேறு வழியில்லை.  ஆஸ்குரின்
முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.  இருக்கையில் அமர்ந்ததும் எங்கள் இருவருக்கும் ’டர்க்கிஷ்
டிலைட்’ கொடுத்தார். 
 
நாம் எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் ஒரு இடத்துக்கு நேரில் போய்ப் பார்ப்பதைப் போல் வராது.  மேலே
உள்ள பத்தியின் கடைசி வாக்கியம் ஆங்கிலத்தில் இருந்து அதைத் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்
எப்படியெல்லாம் மொழிபெயர்ப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.  கூகிளில் போய்க்
கூட தேடிப் பார்க்கும் பொறுமை இல்லாமல் டர்க்கிஷ் டிலைட் என்பதைத் தங்கள் மனம் போனபடி
அர்த்தப்படுத்திக் கொள்வார்கள்.  ஐரோப்பியர்கள் கொடுக்கும் ஐரோப்பிய பாணி முத்தம் என்று
மொழிபெயர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  டர்க்கிஷ் டிலைட் என்பது ஜெல் மாதிரி இருக்கும் ஒரு
இனிப்பு.  எந்தத் துருக்கியரைச் சந்தித்தாலும் முதலில் நமக்கு ஒரு கட்டி டர்க்கிஷ் டிலைட் கொடுத்துத்தான்
வரவேற்கிறார்கள்.  பேரிச்சை, பிஸ்தாப் பருப்பு, வால்நட், hazelnut எல்லாம் சேர்த்து சதுரம் சதுரமாக
இருக்கிறது.  இதன் சுவைக்கு ஈடாக நாகூரில் கிடைக்கும் தம்ரூட்டையும், திருநெல்வேலி இருட்டுக் கடை
அல்வாவையும்தான் சொல்ல முடியும்.  
 
பொதுவாக துருக்கியில் யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.  தாய்லாந்து அளவு மோசம் இல்லை.  அங்கே
உணவகங்களில் ஆர்டர் கொடுக்க வேண்டியிருந்தாலும் நாம் அந்தப் பொருளுக்குரிய பெயரைத் ‘தாய்’
பாஷையில் தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும்.  உங்களுக்கு மீ ன் வேண்டுமானால் ’ப்ளா’ என்று சொல்ல
வேண்டியதில்லை.  மீ னின் படத்தைக் காண்பித்துத் தப்பி விடலாம்.  ஆனால் எல்லாவற்றுக்கும் படம்
காண்பிக்க முடியாதே?  உணவில் பச்சை மிளகாய் வேண்டாம் என்பதை பச்சை மிளகாய்க்கு தாய்- பாஷையில்
என்ன என்று தெரிந்து கொள்ளாமால் முடியாது.  சொல்லாவிட்டால் குறைந்த பட்சம் 25 பச்சை மிளகாயைப்
போட்டு உங்களைக் கொன்று விடுவார்கள்.  இப்படி ஒருமுறை நான் சாகப் பார்த்தேன்.  பச்சை மிளகாய்
சாப்பிட்டு உயிர் போகுமா என்று சந்தேகப்படுபவர்கள் தாய்லாந்தில் பாங்காக், பட்டாயா என்ற ஊர்களுக்குப்
போய் பெண்களைப் பார்த்துக் கொண்டு நிற்காமல், எங்காவது சிற்றூருக்குச் சென்று அங்கே உள்ள
வட்டுக்கடையில்
ீ சாப்பிட்டுப் பாருங்கள்.  அங்கே கிடைப்பதுதான் அசலான ’தாய்’ உணவு.  ஆனால் குறைந்த
பட்சம் 25 பச்சை மிளகாய்.  அதுவும் பச்சையாக இடித்து.  அப்படி நான் தாய்லாந்தின் வடகிழக்கு மூலையில்
லாவோ எல்லையில் உள்ள ’நோங்க்காய்’ என்ற சிற்றூருக்குச் சென்று அங்கே உள்ள வட்டுக்கடையில்

சாப்பிட்டு சாகப் பார்த்தேன்.  பெரிய நாகரீக உணவகங்களில் இப்படிச் செய்ய மாட்டார்கள்;
வட்டுக்கடையில்தான்
ீ இந்த பாக்கியம் கிடைக்கும்.  வட்டுக்கடை
ீ என்பது வட்டுக்கு
ீ முன்னால் உள்ள இடத்தில்
அந்த வட்டின்
ீ பெண் நடத்தும் உணவகம்.  ஆண்கள் (கணவன் உட்பட) எடுபிடி வேலை செய்து
கொண்டிருப்பார்கள். 
 
கிராமங்களிலோ சிற்றூர்களிலோ ஆங்கிலம் தெரியாவிட்டால் பரவாயில்லை; பாங்காக் சர்வதேச விமான
நிலையத்தின் கவுண்ட்டர்களில் இருக்கும் அழகிய பெண்களுக்கே ஆங்கிலம் தெரியவில்லை.  துருக்கியில்
அந்த அளவு மோசம் கிடையாது என்றாலும் அதிக வித்தியாசம் இல்லை.  நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு
இஸ்தாம்பூல்காரருக்கும் ஆங்கிலத்தில் பத்து இருபது வார்த்தைகளே தெரிந்திருக்கின்றன.  அதுவும்
இஸ்தாம்பூல் முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளின் ஊர் என்பதால் கற்றுக் கொண்டதே அந்தப் பத்திருபது
வார்த்தைகளும்.  மற்றபடி துருக்கியின் உள்ளே பயணம் செய்து போனால் சிற்றூர்களிலோ கிராமங்களிலோ
நாம் பேசுவது ஆங்கிலம் என்று கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.  மொழி விஷயத்தில் துருக்கிக்கும்
தாய்லாந்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம், துருக்கியில் உள்ள அரசு ஊழியர்கள், ஓட்டல் வரவேற்பாளர்கள்
போன்றவர்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள். 
 
ஆஸ்குர் இலக்கணச் சுத்தமாக ஆங்கிலம் பேசினார்.  30 வயது இருக்கும்.  பயண நிறுவனத்தின் மேனேஜர்
என்றும், இந்தியாவிலிருந்து விருந்தாளிகள் வருவதால் தானே வந்ததாகவும் சொன்னார்.  உங்களை ஓட்டலில்
கொண்டு போய் விட்டு விட்டு உடனே போய் அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்றார்.  துருக்கியின்
அரசியல் நிலைமை பற்றியும் பேசினோம்.  (அது பற்றிப் பிறகு.)  ஓட்டலில் விட்டு விட்டுக் கிளம்பும்போது
“துருக்கியில் உங்கள் பயணம் இனிதாக இருக்க ஒரே ஒரு அறிவுரை.  டாக்ஸிக்காரர்களை நம்பாதீர்கள்.”
 
இஸ்தாம்பூலில் கலாட்டா பாலத்திலிருந்து ஒரு கிலோமீ ட்டர் தொலைவில்தான் எங்கள் குழுவினர்
தங்குவதற்கான ஓட்டல் இருந்தது.  குழு என்பது ஒவ்வொரு ஊருக்கும் மாறிக் கொண்டு இருக்கும்.
இஸ்தாம்பூலில் எனக்கு மூன்று நாட்கள்.  அபிநயாவுக்கு நான்கு நாட்கள்.  பிறகு நான் அங்கிருந்து விமானத்தில்
இஸ்மீ ர் போக வேண்டும்.
 
ஓட்டலில் சிரமபரிகாரம் செய்து கொள்ள ஒரு மணி நேரமே கிடைத்தது.  உடனே ஊர் சுற்ற எங்கள் குழுவின்
மற்ற ஆட்கள் வண்டியோடு வந்து விடுவார்கள்.  ஊர் சுற்றி முடித்து, மாலை நான்கு மணி அளவில்
ஓட்டலுக்குத் திரும்பினோம்.  அறையில் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு கலாட்டா டவர் வரை
நடக்கலாம் என்று கிளம்பினேன்.  ரிஸப்ஷனில் அபிநயா இருந்தார்.  கலாட்டா டவர் வரை நடை என்றேன். 
நான் கேட்காமலேயே நானும் வரலாமா என்றார். 
 
கலாட்டா டவரில் நான் கண்ட காட்சி ஒன்று போதும்.  துருக்கியின் கலாச்சாரம் பற்றி முழுசாகத் தெரிந்து
விட்டது. 
(மேலே இருப்பது மாலை ஆறு மணி அளவில் கலாட்டா டவர்.)

====

நிலவு தேயாத தேசம் - 4 சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   06 , 2015  02:01:44 IST
Latest Novels at Attractive Price

பயணக் கட்டுரைகளை உடனுக்குடன் எழுதி விட வேண்டும்.  இல்லாவிட்டால் பல சிறிய, நுணுக்கமான


விபரங்கள் மறந்து விடும். சென்ற அத்தியாயத்தில் அப்படி ஒரு நுணுக்கத்தைத் தவற விட்டுவிட்டேன். 
இப்போது ஞாபகம் வருகிறது. அதுவாவது பரவாயில்லை. வேறொரு தவறும் செய்து விட்டேன். ஆனந்த்
எனக்குக் கொடுத்தது 200 திர்ஹாம் அல்ல; 1000 ரியால்.  சுமார் 18000 ரூ.  அதை நான் 3500 ரூபாயாக எழுதி
விட்டேன். எப்பேர்ப்பட்ட பிழை!  நானாக இருந்தால், ‘அடப் பாவி, இதற்கு நான் பணமே கொடுத்திருக்க
மாட்டேனே’ என்று நினைத்திருப்பேன்.  ஆனால் என் நண்பர்களிடம் உள்ள நல்ல குணம் என்னவென்றால், இது
போன்ற என்னுடைய பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள்.  ஆனந்த் சென்ற அத்தியாயத்தைப் பற்றி
என்னிடம் பேசிய போது கூட அந்தப் பிழையைக் குறிப்பிடவில்லை.           

இன்னொரு விடுபட்ட விஷயம், ஜூஸ்.  ஆனந்த் ”ஜூஸ் சாப்பிடுகிறீர்களா?” என்றார்.  சற்றும் யோசிக்காமல் சரி
என்றேன்.  பக்கத்திலிருந்த அபிநயாவைக் கேட்டேன்.  அவரும் உடனேயே சரி என்றார்.  பொதுவாக அவ்வளவு
பழக்கமில்லாத பெண்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் முகத்தில் அடித்தாற்போல் மறுத்து விடுவார்கள். 
அபிநயாவோ வெகு சகஜமாக சரி என்றதும் அவர் மீ து எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது.  மட்டுமல்லாமல்
என்ன ஜூஸ் என்று கேட்ட போதும் உடனே ஆரஞ்ச் என்றார்.  
***
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் க்ராண்ட் ஹாலிஜுக்கு (Grand Haliç) எதிரே தான் Bosphorous கடல்.  C-க்குக்
கீ ழே கமாவைப் போல் உள்ளதுக்குப் பெயர் செதில்.  அப்படி செதில் இருந்தால் அதை ’ச்’ என்றோ, ‘க்’ என்றோ
உச்சரிக்கக் கூடாது;  ‘ஜ்’ என்றே உச்சரிக்க வேண்டும்.  

சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் – அதாவது, கி.மு. 18,000 இலிருந்து கி.மு. 16,000 க்கு இடைப்பட்ட
காலத்தில் உலகின் வடக்குப் பகுதி பனிக்கட்டிகளால் மூடியிருந்தது.  மர்மரா கடலும் கருங்கடலும் அப்போது
ஏரிகளாக இருந்தன.  பாஸ்ஃபரஸ் ஒரு சமவெளியாக இருந்தது.  கி.மு.14,000-இல் பனி உருக ஆரம்பித்து
மர்மராவும் கருப்பு ஏரியும் கடல்களாயின.  கி.மு.7500 வாக்கில் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும்
பாஸ்ஃபரஸ் ஜலசந்தி உருவானது.  
சரி, பாஸ்ஃபரஸ் என்றால் என்ன?  ஏன் அந்தப் பெயர் வந்தது?  கிரேக்கக் கடவுள் ஸீயஸ் (Zeus) இயோ (Io) என்ற
இளம்பெண்ணின் மீ து காதல் கொண்டான்.  இதை அறிந்த ஸீயஸின் மனைவி ஹீரா கடும் கோபம்
அடைந்தாள்.  அவளுடைய கோபத்திலிருந்து இயோவைக் காப்பாற்ற எண்ணிய ஸீயஸ் அவளை ஒரு பசுவாக
மாற்றினான்.  இதை அறிந்து கொண்ட ஹீரா மாட்டைக் கடித்துக் கொல்லும் ஈக்களை அனுப்பினாள். 
அவற்றிலிருந்து தப்பிக்க இயோ வந்து சேர்ந்த இடமே பாஸ்ஃபரஸ்.  பாஸ்ஃபரஸ் என்றால் ’பசுவின் ஓடை’
என்று பொருள்.  

ஓட்டலின் வாசலிலிருந்து பார்த்தால் பாஸ்ஃபரஸ் கடலின் எதிர்க் கரையில் இஸ்தாம்பூல் நகரின் ஐரோப்பியப்
பகுதி.  அழகான பிக்சர் கார்ட் போல் தோற்றமளித்த அந்தக் காட்சியில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் 
தெரிந்தது.  அதுதான் இஸ்தாம்பூலின் புகழ்பெற்ற  ஹயா ஸோஃபியா (Hagia Sophia) மசூதி.  (ஒரு காலத்தில் அது
தேவாலயமாக இருந்தது).  ஓட்டலிலிருந்து கலாட்டா டவர் ஒரு கிலோமீ ட்டர் இருக்கும்.  கிளம்பும் தருணத்தில்
“எக்ஸ்க்யூஸ் மீ , மிஸ் அபிநாயா” என்று அழைத்தார் ஓட்டலின் வரவேற்பாளர்.  

தென்னிந்தியாவைத் தவிர உலகில் வேறு எங்கே போனாலும் முதல் எழுத்தைக் குறுக்கியும் அடுத்த எழுத்தை
நீட்டியும்தான் உச்சரிக்கிறார்கள் என்று அப்போது எனக்குத் தோன்றியது.  நான் இங்கே மைலாப்பூரில்
ஸ்பானிஷ் படித்த காலத்தில் எங்கள் ஸ்பானிஷ் ஆசிரியர் இப்படித்தான் எல்லா பெயர்களையும் அடித்துக்
கிழித்துக் கொண்டிருப்பார்.  ராமன் – ரமான், ராமசாமி – ரமாசமி, ஆனந்த் – அனாந்த், ஜானகி – ஹனாகி
(ஸ்பானிஷில் ’ஜ’வின் உச்சரிப்பு ’ஹ’)… ஐரோப்பாவில் மட்டுமல்ல; வட இந்தியாவிலும் இப்படித்தான். முதல்
எழுத்து குறில்; இரண்டாம் எழுத்து நெடில்.   

ஓட்டலை விட்டுக் கீ ழே இறங்கியவுடனேயே பசித்தது.  மதியம் ஒரு மணிக்கு ஹயா சோஃபியாவில் சாப்பிட்ட
மீ ன் உணவு ஐந்தே நிமிடத்தில் பஸ்பமாகி விட்டது.  நாங்கள் எல்லோரும் ஒரு குழுவாகச் சென்றிருந்தோம். 
மூன்று வேளை உணவும் பயண நிறுவனமே ஏற்பாடு செய்திருந்தது.  ஹயா சோஃபியாவைப் பார்த்து விட்டு
அதற்கு வெளியே உள்ள ஒரு அருமையான உணவகத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  நாங்கள்
சுமார் 15 பேர் இருப்போம்.  அதில் ஒரு வட இந்தியக் குடும்பமும் இருந்தது.   சாப்பிடுவதற்கு நான் சற்றுத்
தாமதமாகச் சென்றதால் ஒரு வயதான அமெரிக்கத் தம்பதி அமர்ந்திருந்த மேஜையில் இடம் கொடுத்தார்கள். 
அவருக்கு வயது 80-க்கு மேல் இருக்கும் போலிருந்தது.  பெண்மணிக்கு 80 இருக்கலாம்.  தோலெல்லாம் சுருங்கி,
சூரிய வெப்பத்தில் கரும்புள்ளிகள் வந்த ஒரு உதாரண அமெரிக்கக் கிழவி. உடம்பில் துளி சதை இல்லை.  
கிழவர் அதற்கு நேர் எதிராக இருந்தார்.   வாட்டசாட்டமாக, தொந்தியும் தொப்பையுமாக ஹாலிவுட் படங்களில்
பார்க்கக் கூடிய தாத்தாவைப் போல் இருந்தார்.  
உணவு பயண நிறுவனத்தின் ஏற்பாடு.  குடியெல்லாம் நம் காசு.  நான் குடிப்பதை நிறுத்தி விட்டதால் அந்தச்
செலவு இல்லை.  இந்த இடத்தில் நான் ஏன் குடியை நிறுத்தினேன் என்று சொல்லியாக வேண்டும்.  தமிழர்களும்
மலையாளிகளும் குடிக்கும் குடிக்கும் நான் குடித்த குடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  நான் குடித்த
அனைத்தும் மூலிகை மதுவகைகள்.  சீனத்து Wenjun, ஃப்ரெஞ்ச் அனிஸ் (அனிஸ் என்றால் ஜீரகம்; ஜீரகத்தில்
செய்யப்படுவதே அனிஸ் மது), 56 மூலிகைகளால் தயாரிக்கப்படும் ஹெகர்மீ ஸ்டர் (Jägermeister), மற்றும்
விதவிதமான வைன் வகைகள் – இதில் ஹெகர்மீ ஸ்டரைத் தவிர வேறு எதுவும் எளிதில் கிடைக்கக் கூடியவை
அல்ல.  வெஞ்ஜுனை பல தேசத்து விமான நிலையங்களில் தேடியாகி விட்டது.  சீனாவிலும் பாங்காக் விமான
நிலையத்திலும் மட்டுமே கிடைக்கிறது.  இது எதுவும் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே ரெமி மார்ட்டின். 
இதற்கும் டாஸ்மாக்குகளில் விற்கும் விஷத்துக்கும் சம்பந்தமே இல்லை.  

ஆனாலும் நான் குடியை நிறுத்தியதற்கு ஒரே காரணம், பயணத்தில் ஆர்வம் உள்ள எந்த இந்தியரும் குடிக்கக்
கூடாது.  ஏன் இந்தியர் மட்டும் என்றால், இந்தியர் அனைவருமே குடித்தால் மொடாக்குடிதான்.   இரண்டு
பெக்கோடு நிறுத்துவோம் என்ற பேச்சே இல்லை.  ஏழு எட்டுதான்.  மேலும், மேல்நாட்டினர் பொதுவாக
உயர்தரமான வைன் தான் குடிக்கிறார்கள்.  நாம் சாப்பிடும் போது தண்ணர்ீ குடிப்பது போல் அவர்கள் வைன்
குடிக்கிறார்கள்.  நான் என்னதான் ஐரோப்பியனைப் போல் வாழ்கிறேன் என்று பீற்றிக் கொண்டாலும்
வெளிநாடுகளுக்குப் போனால் இந்தியனாக மாறி விடுகிறேன்.  போடு எட்டு ரவுண்டு.  மறுநாள் வெளியில்
கிளம்பவே மதியம் ஒரு மணிக்கு மேல் ஆகி விடும்.  சில ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தாய்லாந்து
பயணத்திலும் அப்படியே நடந்தது.  அங்கே இருந்த 15 நாட்களின் எல்லா இரவுகளுமே மதுபான இரவுகளாக
மாறி மறுநாள் ஊர் சுற்றக் கிளம்பும்போது மதியமாகி விடும்.  

இப்படி இருந்தால் தென்னமெரிக்கப் பயணம் போனால் என்ன ஆவது என்ற ஒரு கிலி பிடித்து ஆட்டியது.  அந்த
க்ஷணமே குடியை நிறுத்தினேன்.  எல்லாவற்றுக்கும் மன உறுதியே காரணம்.  மனம் மூளையை ஆட்டுவிக்கக்
கூடாது.  மூளை என்ன சொல்கிறதோ அதைக் கேட்க வேண்டும் மனம்.  

குடியை விட்டதால் துருக்கியில் கழித்த பத்து நாட்களும் இருபது நாட்களுக்குச் சமமாக இருந்தன.  காலையில்
ஆறரை மணிக்குக் கூட வண்டி வந்து விடும்.  அதில் சக பயணிகளும் தயாராக இருப்பார்கள்.  ஒருநாள்
கப்படோச்சியாவில் (Cappadocia) ஹாட் ஏர் பலூனில் ஏறுவதற்காக அதிகாலை ஐந்து மணிக்கே கிளம்ப
வேண்டியிருந்தது.  படுத்தது பதினோரு மணி.  நாலரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளிக்காமல் கூட
ஓடினேன்.  சொன்னது போல் சரியாக ஐந்து மணிக்கு ஓட்டல் வாசலில் வண்டி வந்து நின்றது.  குடித்துக்
கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தால் இப்படியெல்லாம் முடியுமா?  பயணங்களில் இரண்டு வகை உண்டு. 
ஜாலியாக விடுமுறையைக் கழிப்பதற்காகச் செல்லும் பயணம்.  அந்த உல்லாசப் பயணத்தை நிஜமான
பயணிகள் யாரும் பயணமாகவே கருதுவதில்லை.  
கிழவரின் பெயர் டேவிட்.  இரண்டு கிளாஸ் சிவப்பு வைன் அருந்தினார்.  85 வயதில் அமெரிக்காவிலிருந்து
துருக்கிப் பயணம்.  கையில் வைன்.  கிழவியின் பெயரில்தான் ஒரு மேஜிக் இருந்தது.  லிண்டா ஸ்ட்ரீப். 
என்னது ஸ்ட்ரீப்பா?  மை காட்.  எனக்கு ரொம்பப் பிடித்த அமெரிக்க நடிகை.  Kramer vs Kramer (1979) என்ற புகழ்
பெற்ற படத்தில் நடித்ததால் அல்ல; உண்மையில் ஹாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான அவர்
நடிப்பு பற்றிக் கூட எனக்கு மறந்தே விட்டது.  ஆனால் அவருடைய இணையதளத்தை அடிக்கடி நான் எட்டிப்
பார்ப்பது வழக்கம்.  அதன் முகப்பிலேயே José Micard Teixeira என்பவரின் மேற்கோள் ஒன்று இருக்கும்.  உலகம்
முழுவதும் வைரஸைப் போல் பரவிய மேற்கோள் அது.
”இனிமேலும் சில விஷயங்களில் நான் பொறுமையாக இருக்கப் போவதில்லை.  எனக்குப் பிடிக்காத, என்னைக்
காயப்படுத்தும் விஷயங்களில் நான் நேரத்தை விரயம் செய்யப் போவதில்லை.  திட்டுவது, விமர்சிப்பது
போன்ற விஷயங்களின் பக்கமும் போகப் போவதில்லை.  என்னைப் பிடிக்காதவர்கள், என்னை
நேசிக்காதவர்கள் ஆகியோர் மீ து பிரியமாக நடந்து கொள்ளும் மனப்பக்குவத்தையும் நான் இழந்து விட்டேன்.  
என்னைக் கண்டு புன்முறுவல் செய்யாதவர்களிடம் நானும் இனிமேல் புன்முறுவல் செய்யப் போவதில்லை”
என்று ஆரம்பித்து இன்னும் நிறைய போகும்.  இதை இந்த ஸ்ட்ரீப்பிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவர்
திறந்த வாயை மூடவே இல்லை.  சாப்பிட்டு முடிக்கும் வரை பேசிக் கொண்டே இருந்தார். தன்னைப் பற்றி, தன்
குடும்பத்தைப் பற்றி, ஐரோப்பாவில் வாழும் தன் குழந்தைகளைப் பற்றி, இப்போது டெக்ஸஸில் தன்
கணவரோடு தனியாக வாழ்வது பற்றி, ஆண்டு தோறும் அவரும் கணவரும் செல்லும் உலகப் பயணங்கள்
பற்றி… நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தார்.  டேவிட் வாயே திறக்கவில்லை.  இடையில் நீங்கள் என்ன
வேலை செய்கிறீர்கள் என்று மட்டும் கேட்டார்.  எழுத்தாளன் என்றதும் உங்களுக்குப் பிடித்த அமெரிக்க
எழுத்தாளர் யார் யார் என்று ஒரு கேள்வி.  டொனால்ட் பார்த்தெல்மே, வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர்
என்று நான் சொல்ல ஆரம்பித்ததுமே அதை அமுத்தி விட்டு வேறு ஏதோ பேச ஆரம்பித்தார் ஸ்ட்ரீப்.  செவிகளே
இல்லாத பெண்மணி.  
அப்போது அந்த மேஜையில் ஒரு சம்பவம் நடந்தது.  சாப்பிடும் போது டேவிட்டுக்கு லேசாகப் புரை ஏறியது. 
அவ்வளவுதான்.  என்னோடு வாய் சலிக்காமல் பேசிக் கொண்டிருந்த ஸ்ட்ரீப் க்ஷணப் பொழுதில் இருக்கையை
விட்டு எழுந்து டேவிட்டிடம் சென்று சிசுருக்ஷை செய்ய ஆரம்பித்து விட்டார்.  ஆனால் இங்கே இந்தியாவில்
மேற்கத்தியக் குடும்பம், மேற்கத்திய வாழ்க்கை பற்றி என்னென்னவோ குப்பைக் கற்பனைகளைக்
கொண்டிருக்கிறோம்.   
நான் மீ ன் உணவு என்று சொன்னதும் கோலா மீ ன் அளவு உள்ள ஒரு மீ னை முழுசாக வறுத்துக் கொண்டு வந்து
வைத்தார்கள்.  அவ்வளவுதான் உணவு.  சே, ஏமாந்து போனோமே, வேறு உணவு சொல்லியிருக்கலாமே என்று
நினைத்துக் கொண்டேன்.  ஆனால் எல்லோரும் கிளம்பிய பிறகுதான் தெரிந்தது, நீள நீள ப்ரெட்டுகளும் சூப்
வகைகளும் கூட இருந்தன என்பது.   

டேவிட், ஸ்ட்ரீப் தம்பதியோடு உணவருந்திய அந்த மதிய நேரத்தில் நான் நினைத்துக் கொண்டேன்,
நம்முடைய இந்திய வாழ்க்கையில் 85 வயதில் இப்படி வெளிநாட்டுப் பயணம் செய்யவும் வைன் அருந்தவும்
சாத்தியம் இருக்கிறதா என்று.  ஏனென்றால், உண்டு முடித்து விட்டு டேவிட் மூன்றாவது கோப்பை சிவப்பு
வைன் அருந்திய போது நான் இதயத்தின் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு (கொழுப்பு) நீங்குவதற்கான
மாத்திரைகளை ரொம்பக் கடமையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  இந்திய வாழ்க்கை மாத்திரைகளையும்
அமெரிக்க வாழ்க்கை வைனையும் தருகிறது என்று தோன்றியது.    இவ்வளவுக்கும் நான் மிகவும் ராணுவ
ஒழுங்கோடு வாழ்ந்து வருபவன்.  ஆனாலும் என்ன?  சமீ பத்தில் வந்த ஒரு செய்தி.  ”மேட்டுக்குடியினர் பயணம்
செய்யும் ராஜதானி ரயில்களில் கொடுக்கப்படும் ரயில்நீர் சுத்திகரிக்கப்பட்டது அல்ல; அதை காண்ட்ராக்ட்
எடுத்தவர்கள் சாதாரண குழாய்த் தண்ண ீரை எடுத்து ரொப்பி அனுப்பி விடுகிறார்கள்; இந்த விஷயத்தைக்
கண்டும் காணாமல் இருப்பதற்கு ரயில்வே அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்கப்படுகிறது.”  இப்படிப்பட்ட
சமூகச் சூழலில் நாம் எவ்வளவு ஒழுங்காக இருந்துதான் என்ன பயன்?   

பொதுவாக துருக்கி உணவில் நிறைய சூப், நறுக்கிய காய்கள் என்று இருப்பதாலும் குளிர் காரணமாகவும்
அதிகம் பசிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். ”எல்லோரும் எப்போதும் எதையாவது தின்று கொண்டே
இருக்கிறார்கள்” என்று சொல்லியிருந்தார் ராம்.  ஏப்ரல், மே, ஜூன் மூன்று மாதமும் துருக்கி செல்லத் தோதான
சமயம்.  அதுதான் அங்கே வசந்த காலம்.  பகலில் 15 டிகிரி இருந்ததால் அதிகக் குளிரும் இல்லாமல் அதிக
வெயிலும் இல்லாமல் பாந்தமாக இருந்தது.  ஆனால் இரவில் கடும் குளிராக இருந்ததைப் போகப் போகத்
தெரிந்து கொண்டேன்.  

ஓட்டல் க்ராண்ட் ஹாலிஜை அடுத்து ஒரு பேக்கரி இருந்தது.  ஆனால் எனக்கு கேக் பிடிக்காதாகையால்
வழியில் வேறு உணவகங்கள் தென்பட்டால் சாப்பிடலாம் என்று முடிவு செய்தேன்.  கலாட்டா டவருக்குச்
செல்லும் வழி ஒரு குறுகலான தெரு.  தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை.  ஆனாலும் பயம் இல்லை. 
துருக்கியைப் பற்றிக் கேள்விப்பட்ட கதைகள் எதுவுமே உண்மை இல்லை என்பதை அங்கே போன சில மணி
நேரங்களிலேயே புரிந்து கொள்ள முடிந்தது.  மக்கள் அவ்வளவு சிநேகபூர்வமாகவும் வெகுளியாகவும்
இருந்தார்கள்.  பொதுவாக உலகில் எந்தப் பெருநகரத்திலும் மக்களை வெகுளியாகப் பார்க்க முடியாது.  நகர
வாழ்வின் நெருக்கடிகள் மனிதர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து கொண்டு வந்த வெகுளித்தன்மையைப்
பறித்து விடும்.  ஆனால் இஸ்தாம்பூல் அப்படி இல்லை.    
 
அந்தத் தெருவில் எதுவும் பழக்கடைகளோ உணவகங்களோ இருப்பது போல் தெரியவில்லை.  பசி அதிகமாக
இருந்தது.  “எனக்குமே பசிக்கிறது” என்றார் அபிநயா.  ”மதியம் என்ன சாப்பிட்டீர்கள்?” என்று கேட்டேன்.  எனக்கு
அவருடைய சாப்பாட்டைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.  அவர் நிச்சயம் சைவமாகத்தான்
இருக்க வேண்டும்.  ஆமாம், சைவம்தான்.  ஆனால் அவர் சொன்ன விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 
இந்தியாவில்தான் சைவ உணவு சிரமம்.  ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சுலபம் என்றார்.  

உண்மைதான்.  சீஸ் என்று எடுத்துக் கொண்டால் நம் ஊரில் பன ீர் மட்டும்தான் இருக்கிறது. ஆனால்
ஃப்ரான்ஸில் மட்டுமே 200 வகை சீஸ் உள்ளது.  மொத்த ஐரோப்பாவிலும் ஆயிரத்துக்கும் அதிகமான சீஸ்
வகைகள் உள்ளன.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்; ஒவ்வொரு ருசி.  துருக்கியிலும் சுமார் 50 வகை சீஸ்
உள்ளது.  அதில் எனக்குப் பிடித்தது கஸேரி என்றார் அபிநயா.  அது ஆட்டுப் பாலில் செய்வதாம்.  “ஏற்கனவே
துருக்கி வந்திருக்கிறீர்களா?”  “இல்லை; கஸேரி க்ரீஸிலும் உண்டு.  சென்ற ஆண்டு க்ரீஸ் வந்தேன்.”   

மேலே நடந்து போனதில் ஒரு சிறிய உணவகம் இருக்கக் கண்டோம்.  இரண்டே பேர்.  ஒரு கிழவியும்
கிழவரும்.  இரண்டு பேருக்கும் எழுபது வயதுக்கு மேல் இருக்கும்.  கிழவி சமையலில் நிற்க, கிழவர் காய்கறி
நறுக்கிக் கொண்டிருந்தார்.  உள்ளே ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சிறிய மேஜைகள்; இரண்டு சிறிய
நாற்காலிகள்.  மொத்தம் நான்கு பேர் சாப்பிடலாம். இருவருக்கும் ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரிந்தாலும் அது
உலக அதிசயம்.  அதிசயம் நடக்கவில்லை.  மென்யுவைப் பார்த்து ஓரளவு புரிந்து கொண்டு நான் சிக்கனும்
அபிநயா க்ருவாஸோ(ங்)-உம் (croissant)  கேட்டுச் சாப்பிட்டோம்.  கிழவன் கிழவி இருவரும் ஒரு வார்த்தை
பேசிக் கொள்ளவில்லை.  பேசி அலுத்துப் போயிருக்கும்.  
அந்தச் சிறிய உணவகத்தில் கலாட்டா டவருக்குச் செல்லும் அந்தத் தெருவின் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய
தோற்றம் ஒரு புகைப்படமாகக் காட்சியளித்தது.  

 
கலாட்டா டவருக்குச் செல்லும் வழியில் ஒருவர் தள்ளுவண்டியில் பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார்.  இரவு
உணவுக்குப் பழம் போதும்; திரும்பி வரும் போது இருக்கிறாரோ இல்லையோ, இப்போதே வாங்கி விடுகிறேன்
என்று கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி வாங்கினார் அபிநயா.  விலை எல்லாம் சைகை பாஷைதான்.  இஸ்லாமிய
நாடுகளில் பெண்களுக்கு இருக்கும் மரியாதையை அந்தத் தெருவில் மீ ண்டும் ஒருமுறை கண்டேன்.   அந்தத்
தள்ளுவண்டிக்காரர் அபிநயாவிடம் மீ திச் சில்லறையைக் கொடுக்கும் போது அபிநயாவின் கைகளுக்கு மேலே
அரை அடி தன் கையைத் தூக்கி காசைக் கொடுத்தார்.  தவறுதலாகக் கூட தன் கை அந்நியப் பெண் மீ து பட்டு
விடக் கூடாது என்ற கவனம்.    

1348-இல் கட்டப்பட்ட கலாட்டா டவரின் மேலே ஒரு நைட் க்ளப்பும் உணவு விடுதியும் உள்ளது.  219 அடி
உயரமுள்ள இந்த டவரிலிருந்து இஸ்தாம்பூலைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம்.  நைட் க்ளப்பில் அமர்ந்து
குடித்தால் காசு அதிகம் என்பதால் கல்லூரி மாணவர்கள் டவரின் கீ ழே அமர்ந்து பியர் குடித்துக்
கொண்டிருந்தார்கள்.  சுமார் 30 ஜோடி இருக்கும்.  எல்லாம் உள்ளூர் மாணவர்கள்.  சரிசமமாகப் பெண்கள். 
ஒருத்தர் பாக்கி இல்லாமல் அத்தனை பேர் கையிலும் பியர் போத்தல்கள்.   இந்தியாவை விட கலாச்சார
சுதந்திரம் அதிகம் உள்ள நாடாகத் தோன்றியது துருக்கி.

=====

நிலவு தேயாத தேசம் - 5 சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : சனிக்கிழமை,   நவம்பர்   14 , 2015  02:38:52 IST
Latest Novels at Attractive Price

ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் தலைநகர் இஸ்தாம்பூல்.  காலைத் தொழுகையை முடித்து தந்தையை


அரண்மனைக்கு அனுப்பி விட்டு அந்த மாபெரும் ’கொனாக்’கின்* சாளரத்தின் அருகே வருகிறாள் தில்ரூபா. 
தந்தை, சுல்தான் அப்துல் அஸீஸின் பாஷா*க்களில் ஒருவர்.  கண்ணெதிரே மனதைக் கொள்ளை கொண்டு
போகும் பாஸ்ஃபரஸ் கடல்.  ஒரே ஒரு மார்த்தி* பறவை மேலே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.  "மார்த்தி தான்
என்ன அழகு!” என்று பக்கத்தில் அமர்ந்து எம்ப்ராய்ட்ரி வேலையில் மூழ்கியிருந்த தன் தாயிடம் சொல்கிறாள்
தில்ரூபா.  ஒருக்கணம் தலையை உயர்த்திப் பார்த்து விட்டு சிறு புன்னகையுடன் மீ ண்டும் பின்ன
ஆரம்பிக்கிறாள் பாஷாவின் மனைவி.    

கொஞ்ச நேரம் தக்விம்-இ வெகாயி (Takvim-i Vekayi) செய்தித்தாளை எடுத்துப் புரட்டுகிறாள் தில்ரூபா.  அரபி,
கிரேக்கம், ஃப்ரெஞ்ச் ஆகிய மூன்று மொழிகளில் வந்து கொண்டிருந்தாலும் அவள் படிப்பது ஃப்ரெஞ்ச் தான். 
சுல்தான் பாரிஸ் போய் வந்ததிலிருந்து அவளையொத்த மேட்டுக்குடியினர் ஃப்ரெஞ்ச்சில் பேசுவதை ஒரு
அந்தஸ்தாக நினைக்க ஆரம்பித்திருந்தனர்.   
    
தந்தை அரண்மனைக்குக் கிளம்பியவுடன் அவளுக்குப் பிடித்த சுல்தான் அப்துல் அஸீஸ்* உருவாக்கிய
பாடல்களைப் பியானோவில் வாசிக்க ஆரம்பித்து விடுவாள் தில்ரூபா.  அப்துல் அஸீஸ் தான் ஆட்டமன்
சுல்தான்களில் மேற்கு ஐரோப்பாவுக்குப் பயணம் செய்த முதல் சுல்தான்.  ஐரோப்பிய இலக்கியமும் ஐரோப்பிய
சாஸ்த்ரீய சங்கீ தமும் கற்ற முதல் சுல்தான்.  ஐரோப்பிய சங்கீ தத்தின் ரசிகர் மட்டும் அல்லாமல் அவரே
கம்போஸராகவும் இருந்தார்.*  
தில்ரூபாவின் நாட்குறிப்பில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் தக்விம்-இ வெகாயி.  1831-ஆம் ஆண்டு
ஆட்டமன் சுல்தான் இரண்டாம் மெஹ்மூதினால் துவங்கப்பட்டது அந்த செய்தித்தாள்.  
கப்படோச்சியாவில்
 
2015 மே மாதம் 16-தேதி மதியம் ஹயா சோஃபியாவைச் சுற்றியுள்ள ஒவ்வொரு தெருவிலும் அதற்குப் பிறகு
இஸ்தாம்பூலிலும் ஒரு செய்தித்தாளுக்காகச் சுற்றி அலைந்து கொண்டிருந்தபோது எனக்கு  தில்ரூபாவின் அந்த
நாட்குறிப்பு ஞாபகம் வந்தது.  ”அதோ அங்கே ஒரு பேப்பர் கடை உள்ளது” என்று கை காட்டுவார்கள்.  போய்ப்
பார்த்தால் நியூயார்க் டைம்ஸும் சில ஆங்கில ஃபாஷன் பத்திரிகைகளும் தொங்கும்.  நான் எந்த ஊருக்குப்
போனாலும் அங்கே உள்ள உள்ளூர் செய்தித்தாள்களைப் பார்த்து விடுவது வழக்கம்.  பாரிஸ் தமிழ்
செய்தித்தாள்களில் செமத்தியான விஷயங்கள் கிடைக்கும். 1950-உம் 2015-உம் ஒரே காலத்தில் நம் கண்
முன்னே இயங்கும் விபரீதக் காட்சியையெல்லாம் அங்கே காணலாம்.  ஜாதியிலேயே உபஜாதியெல்லாம்
கொடுத்து அந்த உபஜாதிக்குள்ளேயே தான் பெண்ணோ பையனோ வேண்டும் என்பார்கள். உதாரணமாக பையன்
செங்குந்த முதலியார் என்றால் பெண்ணும் செங்குந்த முதலியாராக இருக்க வேண்டும்.  வேறு முதலியாராக
இருக்கக் கூடாது.  எங்கே? பாரிஸில்!  இதில் 2015 எங்கே வந்தது என்கிறீர்களா?  பெண், ஃபேஸ்புக்
பயன்படுத்துபவராக இருக்கக் கூடாது!   அது ஒரு முக்கிய நிபந்தனை!

துருக்கியில் உள்ள செய்தித்தாள்கள் பற்றி ஏற்கனவே கொஞ்சம் குறிப்புகள் எடுத்து வைத்திருந்ததால் ”ஸமான்
இருக்கிறதா?” என்று கேட்டேன்.  பல கடைகளிலும் ’ஸமான்’ பெயரைச் சொன்னால் மேலும் கீ ழும்
பார்த்தார்கள்.  ’ஸமான்’ தான் இஸ்தாம்பூலிலிருந்து வரும் தினசரி.  சர்க்குலேஷன் 10 லட்சம்.  ஆனால்
யாருக்கும் தெரியவில்லை.  யாருமே தினசரிகள் படிப்பதாகவும் தெரியவில்லை.  டீக்கடைகளிலும்
தினசரிகளையே பார்க்க முடியவில்லை.   குறுக்குச் சந்துகளில் டீக்கடைகள் இருக்கின்றன.  வட இந்தியாவைப்
போல் மோடா மாதிரியான குட்டை நாற்காலிகளைப் போட்டு டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆப்பிள் டீ,
டர்க்கிஷ் டீ இரண்டும்தான் ரொம்பப் பிரபலம்.  இரண்டிலுமே பால் இல்லை.  

இங்கே ஒரு விஷயம்.  இந்தியர்கள் மட்டுமே தேநீரில் பால் கலந்து குடிக்கிறார்கள்.  பெரியவர்கள் ’டீ காப்பி
குடிப்பது கெட்ட பழக்கம்’ என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  தேநீரில் பால் கலந்து குடிப்பதுதான்
கெடுதலே தவிர வெறும் தேநீர் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.  ஜப்பானியர்களும் சீனர்களும்
ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணமே அவர்கள் அதிக அளவில் க்ரீன் டீ குடிப்பதுதான்.  

எனக்கு இருதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் 50 சதவிகித அடைப்பு உள்ளது.  அதனால் மதியத்துக்கு மேல்
ஐந்து நிமிடம் நடந்தால் கூட நெஞ்சு வலிக்கும்.  மாடிப்படி ஏறினாலும் வலிக்கும்.  மருத்துவரிடம் கேட்டேன்.  
காலையில் நடக்கிறீர்களா?   
நடக்கிறேன்.  
எவ்வளவு நேரம்?  
ஒரு மணி நேரம்.
வலிக்கிறதா?
இல்லை.   
உங்களைப் போல் அடைப்பு உள்ளவர்களுக்குக் காலையில் நடந்தாலே வலி வரும்.  உங்களுக்கு அப்படி
இல்லை என்பதால் சந்தோஷமாக இருக்கலாம்.  மாலையில் நடக்காதீர்கள். எப்போதுமே மாடிப்படி ஏறாதீர்கள்.
இந்த உடல் உபாதையோடுதான் துருக்கி கிளம்பினேன்.  கப்படோச்சியாவில் மலையைக் குடைந்து கட்டப்பட்ட
இயற்கையான குடவறை விடுதியில்தான் தங்கியிருந்தேன்.  மூன்றாவது தளம்.  கல்படிக்கட்டுகளில்தான் ஏற
வேண்டும். ஆனால் நெஞ்சு வலிக்கவில்லை.  எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.  துருக்கியில் இருந்த
பத்து நாட்களும் கடும் அலைச்சல்.  ஏகப்பட்ட நடை.  நெஞ்சு வலி என்ற பேச்சே இல்லை.  காரணம் என்ன என்று
இப்போதும் யோசித்துப் பார்க்கிறேன்.  அங்கே உள்ள உணவு முறை ஒரு காரணமாக இருக்கலாம். அது பற்றிப்
பின்னர் விரிவாகப் பார்ப்போம்.  இன்னொரு காரணம், சீதோஷ்ண நிலை.  அடுத்த முக்கியமான காரணம்,
தண்ண ீருக்குப் பதிலாகக் குடிக்கும் டர்க்கிஷ் டீ.  உயர்ந்த ரக தேயிலையை வெந்நீரில் போட்டு அப்படியே
குடிக்கிறார்கள்.  சர்க்கரை போடாமல் குடித்தால் தேயிலையின் ருசி இன்னும் நன்றாகத் தெரிகிறது. இப்படி ஒரு
நாளில் பத்துப் பதினைந்து டீ குடிக்கிறார்கள்.   சொல்லி வைத்தாற்போல் எல்லா பெண்களும் ஆப்பிள் டீ தான்
குடிக்கிறார்கள்.  அது டர்க்கிஷ் டீ அளவுக்குக் காட்டம் இல்லாமல் மிதமாகவும் ருசியாகவும் இருக்கிறது.   

கலாட்டா டவரிலிருந்து க்ராண்ட் ஹாலிஜ் ஹோட்டலை நோக்கி – அதாவது பாஸ்ஃபரஸ் கடலை நோக்கி
வரும் போது இடதுகைப் பக்கத்தில் உள்ள சந்தில் ஒரு டீக்கடை உள்ளது.  இஸ்தாம்பூலில் இருந்த
முதல்நாளும் இரண்டாம் நாளும் மாலை நேரத்தில் கலாட்டா டவருக்குப் போன போது திரும்பி வரும் வழியில்
அபிநயாவும் நானும் அந்த டீக்கடைக்குப் போனோம்.  அங்கே நான் என்ன பார்த்தேனோ அதையேதான் துருக்கி
முழுவதும் பார்த்தேன்.  துருக்கியில் பெண்களின் சமூகப் பங்கேற்பும் உழைப்பும் ஆண்களை விட அதிகமாக
இருக்கிறது.   கிராமங்களில் கம்பளம் நெய்வது பூராவும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.  விவசாயமும்
பெண்கள்தான்.  விற்பனை செய்வதுதான் ஆண்கள்.  நகரத் தெருக்களில் மூலைக்கு மூலை ஆண்கள் நாலைந்து
பேராக எந்த வேலையும் செய்யாமல் சிகரெட்டும் டீயுமாக அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 
பெண்கள் கடையை நடத்துகிறார்கள்.  

கலாட்டா டவர் தெருவின் குறுக்குச் சந்தில் உள்ள டீக்கடையிலும் அதே காட்சிதான்.  நாலைந்து பூனைகள் ஒரு
மூலையில் விளையாடிக் கொண்டிருந்தன.  நம் நாட்டில் தெருவில் நாய்கள் அலைவது போல் துருக்கியில்
பூனைகள்.  ஐரோப்பியர்கள் இதை படு ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.  ஏனென்றால் ஐரோப்பாவில் பூனை நாய்
எல்லாம் வட்டில்
ீ வளர்பவை.  இந்தியர்களாகிய நமக்கு மனிதர்களையே தெருவில் அனாதைகளாகப் பார்த்துப்
பழக்கமாகி விட்டபடியால் பூனைகள் தெருவில் திரிவது ஆச்சரியமாக இல்லை. ஆனால் நம் தெரு
நாய்களுக்கும் துருக்கியின் தெருப்பூனைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அவைகள் தெருவில்
வாழ்ந்தாலும் அனாதை இல்லை.  ஒவ்வொரு பூனையையும் அந்தந்தத் தெருக்காரர்கள் உணவு கொடுத்து
போஷிக்கிறார்கள்.  பூனைகள் கொழுகொழு என்று இருக்கின்றன.  

இரண்டு நாட்களிலும் அதே காட்சி.  35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தான் கடையை நிர்வகித்துக்
கொண்டிருக்கிறாள்.  நாலைந்து ஆண்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  கையில் தேன் நிற
டர்க்கிஷ் டீ.  எல்லார் கையிலும் சிகரெட்.  இரண்டாவது நாள் சென்ற போது அப்படி அரட்டை அடித்துக்
கொண்டிருந்த ஒருவனை கடையின் முதலாளியம்மாள் வார்த்தைகளால் பின்னியெடுத்துக் கொண்டிருந்தாள். 
அவன் வாயே திறக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான்.  சத்தம் தெரு முழுக்கக் கேட்டது.  அவனைச் சுற்றி
அமர்ந்திருந்தவர்கள் எதுவுமே நடக்காதது போல் புகையை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  கணவனாகத்தான்
இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.    
இரண்டு நாட்களுமே அபிநயா ஆப்பிள் டீ குடித்ததை கவனித்தேன்.  கடையில் இருந்த பூனைகள் இரண்டும்
என்னிடம் சௌஜன்யமாக வந்து ஒட்டிக் கொண்டன.  நீண்ட நேரம் அபிநயா அந்தப் பூனைகளிடம் விளையாடிக்
கொண்டிருந்தார்.  விளையாடி முடித்து விட்டு என்னிடம் “பூனைகளை நேசிக்கத் தெரியாத பெண்ணால் எந்த
ஆணையும் சந்தோஷப்படுத்த முடியாது” என்றார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  ”பயந்து விட்டீர்களா?  Orhan
Pamuk in The Museum of Innocence” என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தார்.  ”ஜி. குப்புசாமி இன்னும் அதை
மொழிபெயர்க்கவில்லை” என்றேன்.  அவருக்குப் புரியவில்லை.  பிறகுதான் பாமுக்கின் ஒவ்வொரு
நாவலையும் சூட்டோடு சூடாக மொழிபெயர்ப்பவர் ஜி.குப்புசாமி என்று விளக்கினேன்.  "அவர்
மொழிபெயர்த்ததும் படித்து விடுவேன்.  ஆங்கிலத்தை விட தமிழில் சீக்கிரம் படிக்க முடிகிறது.  அதற்கு
குப்புசாமியின் சரளமான மொழியும் காரணம்” என்று இன்னும் விளக்கமாகச் சொன்னேன்.      

அங்கேயும் சரி, எங்கேயும் சரி, செய்தித்தாள் என்ற பேச்சே கிடையாது.   பிறகு ஒருநாள் இஸ்தாம்பூலில் ஒரு
பேப்பர் கடையைப் பார்த்தேன்.  ஆவலுடன் சென்றால் அங்கேயும் ஆங்கில ஃபாஷன் பத்திரிகைகள் மற்றும்
நியூயார்க் டைம்ஸ்.  ஒரு துருக்கி தினசரி கூடக் கிடைக்கவில்லை.  ’ஸமான்’ பெயரைச் சொன்னால் மேலும்
கீ ழும் பார்க்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த இன்னொரு தினசரி, ’ஹுரியத்’.  சர்க்குலேஷன் மூன்று லட்சம். 
அதுவும் கிடைக்கவில்லை.  இரண்டும் துருக்கி மொழி செய்தித்தாள்கள்.  
 

இஸ்தாம்பூலில் ஒரு தெரு


 
 இருந்த இரண்டாம் நாள் நீல மசூதிக்குச் சென்ற போது பிலால் என்பவர் வழிகாட்டியாக வந்தார்.  அவர் நன்றாக
ஆங்கிலம் பேசியதோடு நன்கு விபரம் தெரிந்தவராகவும் இருந்தார். அவரிடம் இஸ்தாம்பூலில் செய்தித்தாள்
கிடைக்காததையும் ’ஸமான்’ பற்றியும் கேட்டேன்.  அவர் சொன்னது: ”துருக்கியில் இஸ்லாமியர் 98 சதவிகிதம்.
இருந்தாலும் இதை இஸ்லாமிய நாடு என்று சொல்வதில்லை.  கிட்டத்தட்ட ஒட்டு மொத்த மக்களுமே
இஸ்லாமியராக இருந்தும் மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டிருப்பதே துருக்கியின் ஆகப் பெரிய சிறப்பு. 
இதற்கு நாங்கள் கெமால் அதாதுர்க்குக்கே கடமைப்பட்டிருக்கிறோம்.  இதன் பயன் என்னவென்றால், எங்களால்
இன்னமும் ஐரோப்பிய யூனியனுடன் சேர முடியாவிட்டாலும் நாங்கள் ஆசிய நாடு இல்லை.  ஒரே மதம்
என்றாலும் பலவிதமான கலாச்சாரங்களை உள்ளடக்கியது துருக்கி.  இஸ்தாம்பூலும் அனடோலியாவும் ஒன்று
அல்ல.  இந்தப் பன்முகத்தன்மையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அதாதுர்க் கட்டியமைத்த
மதச்சார்பற்ற சமூக அமைப்பு எங்களுக்கு உதவுகிறது.   

பணம் ஒரு பெரிய பிரச்சினைதான்.  நகரத்துக்குள் வடு


ீ கிடைக்கவில்லை.  நகரத்தில் வேலை செய்து கொண்டு
நகரத்துக்கு வெளியேதான் வாழ வேண்டியிருக்கிறது.  கணவன் மனைவி இரண்டு பேருமே பெரிய வேலையில்
இருந்தால்தான் நகரத்துக்குள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு சாத்தியம்.  ஒரு ஜெர்மானிய அல்லது ஃப்ரெஞ்சுக்
குடிமகனுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் எங்களுக்கு இல்லைதான்.  மிகக் கடுமையாக உழைத்தால்தான்
ஏதோ கொஞ்சம் சொகுசாக இருக்க முடிகிறது.  இதோ நான் என்னுடைய கேர்ள் ஃப்ரெண்டுடன் வாழ்வதால்,
அவளும் வேலைக்குப் போவதால் நகரத்துக்குள் வாழ்கிறோம்.  ஆனால் இன்னமும் எங்களுக்கு ஒரு குழந்தை
என்பது கனவாகத்தான் இருக்கிறது.  தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அதாதுர்க்கின் காலத்துக்குப் பிறகு நாங்கள் மதச் சார்பின்மையிலிருந்து நகர்ந்திருந்தால் இப்போதைய வசதி


எங்களுக்குக் கிடைத்திருக்காது;  இப்போதைய அமைதி எங்களுக்குக் கிடைத்திருக்காது.  இஸ்தாம்பூலில்
ஒவ்வொரு அடுத்த மனிதனும் சுற்றுலாப் பயணியாகத்தான் இருக்கிறார் என்பதை இதற்குள் நீங்கள்
கவனித்திருக்க முடியும்.  அதிலும் உங்கள் நாட்டிலிருந்து ஏராளமான பேர் இங்கே வருகிறார்கள்.  பாருங்கள், 
நம்முடைய குழுவிலேயே நான்கு பேர் இந்தியர்.   ஆனால் இஸ்லாமியவாதம் இதை ஒப்புக் கொள்வதில்லை. 
அவர்களுடைய தினசரிதான் ’ஸமான்’…”
“பத்து லட்சம் சர்க்குலேஷன் இருக்கிறதே?” என்று குறுக்கிட்டேன்.

”ஃபெத்துல்லா குய்லென் என்று ஒருவர் இருக்கிறார்.  அவர் தீவிரவாதி அல்ல; மிதவாதி.  பல கட்சி
ஜனநாயகம்தான் அவர் பேசுவதும்.  ஆனாலும் இப்போது இருக்கும் மதச் சார்பின்மை கூடாது என்கிறார் அவர். 
இப்போது துருக்கிக்கு வர விருப்பமில்லாமல் அமெரிக்காவில் இருக்கிறார்.  இங்கே அவருக்கு எக்கச்சக்கமான
ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுடைய பத்திரிகைதான் ’ஸமான்’.  அதனால்தான் அதன்
சர்க்குலேஷன் 10 லட்சம்.  மற்றபடி ஹுரியத்தை எடுத்துக் கொண்டால் நாலு லட்சம்தான்.  தேசம்
முழுவதற்கும் நாலு லட்சம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  எனக்குத் தெரிந்து இஸ்தாம்பூலில் பேப்பர்
படிக்கும் ஒருவரைக் கூட உங்களால் பார்க்க முடியாது.  இவ்வளவுக்கும் துருக்கியின் பெரிய நகரம் இதுதான்… 
அங்க்காராவில் பார்க்கலாம்.  அது குமாஸ்தாக்களின் நகரம்.”
அப்படி அவர் சொன்ன போதுதான் துருக்கியின் தலைநகர் அங்க்காரா என்பதே எனக்கு ஞாபகம் வந்தது.
***
1850 களில் இஸ்தாம்பூலில் வாழ்ந்த ஒரு பாஷாவின் அழகிய மகளான தில்ரூபாவுக்குப் பிடித்த ஃப்ரெஞ்ச்
எழுத்தாளர் ஜெரார் தெ நெர்வால் (Gerard de Nerval).  அவர் ஒரு வித்தியாசமான ஆள்.  எல்லோரும் நாய்
வளர்த்தார்கள் என்றால் அவர் ஒரு லாப்ஸ்டரை வளர்த்தார்.  வெறுமனே வட்டில்
ீ வைத்து வளர்ப்பதோடு
மட்டும் அல்லாமல் மற்றவர்கள் நாயை வாக்கிங் அழைத்துக் கொண்டு போவது போல் அவர் தன் லாப்ஸ்டரை
வாக்கிங் அழைத்துக் கொண்டு போவார்.  இது பற்றி ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்
என்ன தெரியுமா?  ”லாப்ஸ்டர் ஒரு சாதுப் பிராணி.  அதற்குக் கடலின் அத்தனை ரகசியங்களும் அத்துப்படி. 
நாயைப் போல் யாரையும் பார்த்துக் குரைக்காது, கடிக்காது.  நம்முடைய அந்தரங்கத்தில் குறுக்கிடாது. 
இன்னொரு முக்கியமான விஷயம், ஆனானப்பட்ட கதேவுக்கே நாய் பிடிக்காது தெரியுமா?”

தில்ரூபா தான் படித்துக் கொண்டிருந்த Le Voyage en Orient என்ற பயண நூல் பற்றித் தன்னுடைய
நாட்குறிப்புகளில் எழுதியிருக்கிறாள்.  பரந்து விரிந்திருந்த ஆட்டமன் சாம்ராஜ்யத்தில் ஜெரார் தெ நெர்வால்
செய்த பயணம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு அது.  கெய்ரோவுக்கு வரும் நெர்வால் அங்கே ஒரு பெண்
துணையைத் தேடுகிறார்.   கெய்ரோவில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணை அறைக்கு
அழைத்துச் செல்ல முடியாது.  ஆனால் அடிமைகளை விலைக்கு வாங்கலாம்.  அதனால் ஜாவாவிலிருந்து
(”அது எங்கே இருக்கிறது ஜாவா?”  என்று தன் நாட்குறிப்பில் எழுதுகிறார் தில்ரூபா) கொண்டு வரப்பட்ட ஒரு
அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்குகிறார்.  

”அதிலேயே நான் கொண்டு போயிருந்த பணமெல்லாம் காலி.  என்னைப் போன்ற பயணிகளை நம்பித்தானே
அடிமை வியாபாரமே நடைபெறுகிறது?  ஆனால் என்னதான் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கினாலும்
ஒரு பெண்ணின் தோள் மீ து கை போட்டு அணைத்தபடி சாலையில் நடக்க முடியாது என்று ஒரு நாடு இருக்கும்
என்பதை இதுவரை நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. அது மட்டும் அல்ல.  இரவு உணவின் போது
கூட அவளோடு மேஜையில் அமரும் போது அவள் தன் முகத்திரையை அணிந்திருக்க வேண்டியிருக்கிறது. 
காரணம், என் வேலைக்காரன் முஸ்தஃபா அங்கே இருப்பான்!

அவளோடு எப்படிப் பேசுவது என்பதுதான் என்னுடைய முக்கியமான கவலையாக இருந்தது.  நான் சொல்வதை
அவள் எப்படிப் புரிந்து கொள்வாள்?  மேஜையில் என்னோடு அமர்ந்து சாப்பிடு என்று சைகை காட்டுகிறேன். 
மாட்டேன் என்கிறாள்.  ”குழந்தாய், நீ பட்டினி கிடந்து சாகப் போகிறாயா?” என்று கேட்டேன்.  அவளுக்குப்
புரியாது என்றாலும் கூடப் பேசி விட வேண்டியதுதான்.  நான் சொல்வது புரியவில்லை என்பது போல்
தலையாட்டினாள்.  அரபியில் ”தய்யிப்” (ஓகே) என்றேன்.  லார்ட் பைரன் சொல்கிறார், ஒரு மொழியைக் கற்றுக்
கொள்வதற்கான ஆகச் சிறந்த வழி, அந்த மொழியைப் பேசும் பெண்ணோடு தனியாக வாழ்வதுதான்.
ஜாவா என்பதால் இவள் ஒரு இந்துவாகத்தான் இருக்க வேண்டும்.  இந்து என்றால் வெறும் பழங்களும்
காய்களும்தானே உணவு?  ”ப்ரம்மா?” என்று கேட்டேன்.  அவளுக்கு நான் சொன்னது விளங்கவில்லை.  மேலும்
நான் பிரபஞ்சத்தைக் குறிப்பிடும் பல வார்த்தைகளைச் சொன்னேன்.  அவளுக்கு விளங்கவே இல்லை. 
ஒருவேளை என்னுடைய உச்சரிப்பு பிரச்சினையாக இருக்கலாம்.  என்னிடம் இவளை விற்ற அடிமை
வணிகனின் மீ து கோபம் வந்தது.  இவளுக்கு நான் எந்த உணவைக் கொடுப்பது என்று ஏன்அவன்
சொல்லவில்லை?  பிறகு நான் அவளுக்கு ஆகச் சிறந்த ஒரு ஃப்ரெஞ்ச் ப்ரெட்டைக் கொடுத்தேன்.  மஃபிஷ்ச்
என்றாள்.  கடவுளே, இவள் என்ன சொல்கிறாள்?  சில ஆண்டுகளுக்கு முன் சாம்ப்ஸ் லீஸேவுக்கு (Champs-
Elysees) வந்த சில இந்தியப் பெண்களைப் பார்த்தது ஞாபகம் வந்தது.  அவர்கள் தங்கள் உணவைத்
தாங்களேதான் சமைத்து உண்பார்களாம்.

ஜெரார் தெ நெர்வால் அந்தப் பெண்ணை பிறகு என்ன செய்தார் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.
***      
 
*கொனாக் – மாளிகை
*பாஷா – ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் உயர் அதிகாரி, இப்போதைய
கவர்னருக்கு சமம்.
 
*மார்த்தி - Seagull
 
*அப்துல் அஸீஸ் ஆட்சிக் காலம்: 1861 – 1876
 
*அப்துல் அஸீஸ் உருவாக்கிய பாடல் ஒன்று:
====

நிலவு தேயாத தேசம் - 6 - சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : சனிக்கிழமை,   நவம்பர்   21 , 2015  03:27:30 IST
Latest Novels at Attractive Price

 
1391-ஆம் ஆண்டு இஸ்தாம்பூல் முதல்முதலாக ஆட்டமன்களால் முற்றுகையிடப்பட்டது.  பல ஆண்டுகள்
தொடர்ந்த இந்த முற்றுகையில் 1936-ஆம் ஆண்டு முதலாம் பயஸித் (Bayezid I) கருங்கடலின் வழியாக
இஸ்தாம்பூலுக்கு உணவும் யுத்தத் தளவாடங்களும் வருவதைத் தடுப்பதற்காக பாஸ்ஃபரஸ் ஜலசந்தியின்
ஆசியக் கரையில் ஒரு கோட்டையைக் கட்டினான். கீ ழே உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.  மேலே
கருங்கடலையும் கீ ழே உள்ள மர்மரா கடலையும் இணைப்பதுதான் பாஸ்ஃபரஸ் ஜலசந்தி. இதன் நீளம் 31 கி.மீ .
இஸ்தாம்பூல் நகரம் கால்வாசி ஐரோப்பாவிலும் முக்கால்பாகம் ஆசியாவிலும் உள்ளது.  இரண்டு
நிலப்பகுதிகளையும் இணைக்க பாஸ்ஃபரஸ் ஜலசந்திப்பின் மீ து இரண்டு தொங்கு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதே சமயத்தில் இஸ்தாம்பூலைக் கொம்பு போல் துளைத்தப்படி செல்லும் ஒரு சிறிய கடற்பகுதியையும்
படத்தில் பார்க்கலாம்.  அதன் பெயர் தங்கக் கொம்பு.  அந்த இரண்டு நிலப்பரப்பையும் இணைக்கும் பாலம்தான்
வரலாற்றுப் புகழ் பெற்ற கலாட்டா பாலம்.  அது பற்றிப் பிறகு பார்ப்போம். இப்போது இஸ்தாம்பூலில் ஆட்டமன்
சுல்தான்கள் நுழைந்த வரலாறு.   

  
பின்வரும் இணைப்பில் இஸ்தாம்பூலின் ஐரோப்பிய, ஆசியப் பகுதிகளின் சில நல்ல புகைப்படங்கள் உள்ளன.
http://www.amusingplanet.com/2014/10/istanbul-city-that-lies-in-two.html
 
57 ஆண்டுகள் கழித்து – 1453-ஆம் ஆண்டு – பயஸித்தின் பேரனனான இரண்டாம் மெஹ்மத் இஸ்தாம்பூலை
மீ ண்டும்  முற்றுகையிட்டு பாஸ்ஃபரஸின் மற்றொரு பக்கத்தில் – அதாவது முன்பு கட்டப்பட்ட கோட்டையின்
எதிர்ப்புறத்தில் இன்னொரு கோட்டையைக் கட்டினான். அதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலிருந்து
வரவழைத்திருந்த பீரங்கிகளைக் கொண்டு மர்மரா கடலின் பக்கமாக இருந்த இஸ்தாம்பூல் நகரத்து
மதில்சுவர்களைத் தகர்க்கத் தொடங்கினான்.   அந்த இடத்தில் இயற்கையாக அமைத்திருந்த தங்கக் கொம்பு
ஒரு அரண் போல் இருந்ததால் போர்க்கப்பல்கள் எதுவும் அந்தக் குறுகிய நீர்வழியில் வர வாய்ப்பில்லை என்று
தைரியமாக இருந்தது பைஸாண்டைன் சாம்ராஜ்யத்தின் ஆளும் வர்க்கம்.  ஆனால் அதற்கும் ஒரு உபாயம்
வைத்திருந்தான் இரண்டாம் மெஹ்மத்.  தன்னுடைய கடற்படையிலிருந்து 50 தட்டையான சிறிய கப்பல்களை
(Galleys) பாஸ்ஃபரஸின் கரையிலிருந்த தொல்மாபாஹ்ஷி அரண்மனைக்கும் தங்கக் கொம்பின் கரையிலிருந்த
காஸிம்பாஷா குவார்ட்டருக்கும் இடையில் உள்ள தரை வழியாகக் கொண்டு வந்தான்.  இதைக் கொஞ்சமும்
எதிர்பார்க்காத பைஸாண்டைன் படைகள் நிர்மூலமாயின.   
1453 மே 29.  மெஹ்மத் இஸ்தாம்பூல் நகருக்குள் தன் குதிரையுடன் நுழைந்தான்.  ஐரோப்பாவின் மிகப் பெரிய
தேவாலயங்களில் ஒன்று எனப் புகழ்பெற்றிருந்த ஹயா ஸோஃபியாவுக்குள்ளே (Haghia Sophia) சென்று
தொழுகை செய்தான்.  அன்றைய தினத்திலிருந்து ஹயா ஸோஃபியா மசூதியாக மாற்றம் அடைந்தது.
ஆனாலும் அதன் உள்ளேயிருந்த விவிலிய ஓவியங்கள் யாவும் சிதைக்கப்படாமல் இன்றளவும் அப்படியே
இருக்கின்றன.
 
     

கி.பி.622-ஆம் ஆண்டு நபிகள் நாயகம் மெதினா நகருக்குள் வந்த போது அந்த நகரவாசிகள் அனைவருமே
நாயகத்தைத் தங்கள் வட்டில்
ீ வைத்துக் கொள்ள விரும்பினார்கள்.  அப்போது நாயகத்தின் குதிரையைத் தனியே
விட்டு அது எந்த வட்டில்
ீ நிற்கிறதோ அங்கே தங்குவார் என்று முடிவு செய்யப்பட்டது.  குதிரை அயூப் அல்
அன்சாரி என்பவரின் வட்டின்
ீ முன்னே போய் நின்றது.  இஸ்தாம்பூல் நகரை முதல் முதலாக
முற்றுகையிட்டவர் இந்த அயூப் தான்.  ஆண்டு 668.  அந்தப் போரில் மரணமடைந்த அயூப் இஸ்தாம்பூல்
நகரிலேயே தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.   அவர் அடக்கமான இடத்தில் ஒரு
மசூதியை எழுப்பினான் ஆட்டமன் சுல்தான் இரண்டாம் மெஹ்மத்.  இவரது நினைவாகவே இஸ்தாம்பூலின்
தங்கக் கொம்பிலிருந்து கருங்கடலின் கரை வரை உள்ள மாவட்டம் அயூப் (Eyüp) என்று வழங்கப்படுகிறது.  
 
பயண நிறுவனத்தின் வழிகாட்டலில் ஒரு குழுவாகச் சென்றால் அதிகமாகப் பார்க்க முடியாது; மேலும் நாம்
விரும்பிய இடங்களுக்குச் சுதந்திரமாகப் போக முடியாது என்ற எண்ணம் எனக்கு இருந்தது.  இருந்தாலும் பத்தே
நாட்களில் துருக்கியில் பல ஊர்களுக்கும் செல்ல வேண்டியிருந்ததால் குழுவில் இணைந்தேன்.  இருந்தாலும்
எங்கள் பயண நிறுவனம் மதியம் இரண்டு மணிக்கே எங்களைச் சுதந்திரமாக விட்டுவிட்டதால் அதற்கு மேல்
நம் இஷ்டத்துக்கு ஊரைச் சுற்ற முடிந்தது.  குழுப் பயணம் என்பது நான் நினைத்த அளவுக்குக் கறாராக இல்லை.
 
ஹயா ஸோஃபியா ஒரு பிரம்மாண்டம்.  ஆனால் அதற்குப் பிறகு இந்தப் பிரம்மாண்டத்தையே சிறிதாக்கக்
கூடிய மகா பெரிய பிரம்மாண்டங்களையெல்லாம் பார்க்க நேர்ந்தது. ஆனால் அதையெல்லாம் பார்த்த போது
எனக்கு ஒருவித மனச்சுமையே ஏற்பட்டது.  ஒருபக்கம் மாடமாளிகையும் கோபுர வாசமும்,  இன்னொரு பக்கம்
மிகப் பயங்கரமான மனிதச் சுரண்டலும் படுகொலைகளுமாகத்தான் வரலாறு முழுக்கவுமே காட்சியளிக்கிறது.
அந்த வரலாற்று உண்மைதான் எனக்கு மனச் சோர்வை அளித்தது.  
 
“அயூப் சுல்தான் மசூதிக்குப் போகலாம் என்று பார்க்கிறேன்; வருகிறீர்களா?” என்று அபிநயாவைக் கேட்டேன்.
சம்மதித்தார்.  டாக்ஸியில்தான் போகவேண்டும்.  டாக்ஸிக்காரர்களை நம்பாதீர்கள் என்று காலையில் ஆஸ்குர்
சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.  அதை மனதில் வைத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு டாக்ஸிக்காரரை
அணுகினேன்.  ஹயா ஸோஃபியாவிலிருந்து  அயூப் சுல்தான் மசூதிக்கு எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை.
பிலாலிடமும் கேட்கவில்லை.  
60 லீரா கேட்டார் டாக்ஸிக்காரர்.  ஆங்கிலத்தில் அவருக்குத் எண்ணி பத்து வார்த்தைகள்தான் கூடத் தெரியாது
என்று தோன்றியது.  ஐந்து நிமிடம் பேசியதில் அவர் பயன்படுத்திய ஆங்கில வார்த்தைகள் யெஸ், நோ, கம்.
அவ்வளவுதான்.  எண்கள் கூடத் தெரியவில்லை.  எல்லாம் சைகைதான்.  அறுபது என்பதற்கு ஆறு விரல்களைக்
காண்பித்து காற்றில் பூஜ்யம் போட்டுக் காண்பித்தார்.  வெளிநாட்டுக்குப் போனால் நாம் செய்யக்கூடாத பிக்காரி
வேலை அந்தப் பணத்தோடு நம் ரூபாயைக் கொண்டு பெருக்கிப் பார்க்கக் கூடாது.  
 
பார்க்கலாம்; அமெரிக்கா ஐரோப்பா மாதிரி இருந்தால் பார்க்கலாம்.  பிச்சைக்காரர்களுக்கு அந்த
ஆடம்பரமெல்லாம் கூடாது.  உதாரணமாக, இஸ்தாம்பூலில் கழிப்பிடத்தில் சிறுநீர் போக ஒரு லீரா.  23 ரூ.  
ஐரோப்பா முழுவதுமே கிட்டத்தட்ட இப்படித்தான் என்று நினைக்கிறேன்.  இதைப் பார்த்தால் நம்மால்
நிம்மதியாக ‘ஸூஸூ’ போக முடியுமா?  பலரும் இதை வெளிநாட்டில் எல்லாம் விலை அதிகம் என்றே புரிந்து
கொள்கிறார்கள்.  நம்முடைய ரூபாய்க்கு எந்த ஊரிலும் மதிப்பு இல்லை என்பதுதான் அதன் பொருள்.  எனவே
டாக்ஸிக்காரர் கேட்ட 60 லீராவை ரூபாயால் பெருக்கிப் பார்க்கும் காரியத்தில் ஈடுபடாமல் வேறு
விஷயத்தைத்தான் யோசிக்க ஆரம்பித்தேன்.  20 லீரா தூரத்துக்கு 60 லீரா கேட்கிறாரா?  ஆஸ்குர் சொன்ன ஆள்
இவர்தானா?  50 லீரா என்று சைகை காண்பித்தேன்.  ம்ஹும்.  ஒத்துக் கொள்ளவில்லை.  பிறகு வேறொரு
டாக்ஸியை அணுகினோம்.  ஆறு அடி உயரம்.  கனத்த குரல்.  இவர் அவரை விடப் பரவாயில்லை.  பத்துப்
பதினைந்து ஆங்கில வார்த்தைகள் தெரிந்திருந்தது.  இவர் 70 லீரா கேட்டார்.  அவர் 60 தானே கேட்டார் என்றேன்.
யார் அந்த மடையன் என்பது போல் ஏதோ கேட்டார்.  கை காண்பித்தேன்.  உடனே அவருக்கும் இவருக்கும்
ஏதோ தகராறு போல் சத்தமாகப் பேசிக் கொண்டார்கள்.  சரி, யாரும் வேண்டாம்; நடந்து பார்க்கலாம் என்று
அபிநயாவும் நானும் நடந்தோம்.   ஐந்து நிமிடம் நடந்த பிறகு ஒரு டாக்ஸி மாட்டியது.  சொல்லி
வைத்தாற்போல் 60 லீரா கேட்டார்.  ஆனால் டாக்ஸியில் முன்னிருக்கையில் இன்னொரு ஆள் இருந்தார்.
அவரும் டிரைவரும் சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.  நாங்கள் ஏறியதும் முன்னால் இருந்தவர்
இறங்கி விடுவார் என்று நினைத்தேன்.  இறங்கவில்லை.  இருவருக்கும் 35 வயது இருக்கும்.  ஆறு அடி
உயரமும் கட்டுமஸ்தான உடலுமாக பார்க்கவே பயமாக இருந்தது.  இருந்தாலும் துணிந்து ஏறி விட்டோம்.
எனக்குள் பயம் சுரந்தது.  எங்கேயாவது அழைத்துப் போய் என்னை அடித்துப் போட்டு விட்டு அபிநயாவை
ஏதாவது… சே சே… இது என்ன டெல்லியா… என்று பயத்தை விரட்ட முயன்றேன்.  பத்து வார்த்தைகளைக்
கொண்டே இஹ்சான் (சாரதியின் பெயர்) தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களுடன் உரையாட
முயன்றார்.  எங்கிருந்து வருகிறீர்கள்?  இந்தியா.  உடனேயே ”அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்” என்றார்.
இதேபோல் மறுநாளும் நடந்தது.  அன்றைய தினம் தொல்மாபாஹ்ஷி அரண்மனைக்குச் சென்றது எங்கள் குழு.
குழுவில் ஒரு ஈரானியக் குடும்பமும் இருந்தது.  (என்னால் ஓரளவுக்கு இவர் இன்ன நாட்டினர் என்று
அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதால் அப்படி அனுமானித்துச் சொல்வதை ஒரு விளையாட்டாகவே
கொண்டிருந்தேன். ஐரோப்பா, ஆசிய கண்டத்துக்குள் என் அனுமானம் சரியாக இருக்கும்.  ஆனால் ஆஃப்ரிக்கா,
தென்னமெரிக்கா என்றால் முடியாது.  ஒருவேளை ஒரு மெக்ஸிகன் முகத்தைச் சொல்லி விடலாம்; ஆனால்
பெரூ மற்றும் பொலிவிய முகங்களை வித்தியாசப்படுத்துவது எனக்குக் கடினம். அதேபோல் எத்தியோப்பிய
முகத்தையும் கின்ய முகத்தையும் வித்தியாசப்படுத்த முடியுமா? தெரியவில்லை.)  
 
நீங்கள் ஈரானா என்று அவர்களில் இளைஞனாக இருந்தவனிடம் கேட்டேன்.  அவன் ஆமாம் என்று
சொல்வதற்குள், எங்களோடு பேசுவதற்காகவே காத்திருந்தவரைப் போல் அந்த இளைஞனின் தாயார்
அபிநயாவிடம் ”நீங்கள் பாகிஸ்தானா?” என்றார்.  இந்தியா என்றதும் அந்தப் பெண்மணி ”அமிதாப் பச்சன்…
ஐஸ்வர்யா…” என்றார்.  பிறகு உடனே, “யூ ஃபாதர் டாட்டர்?  ஹஸ்பண்ட் வைஃப்?” என்றும் அடுத்த கேள்வியை
வசிய
ீ போது உலகம் பூராவும் மனிதர்கள் ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
அபிநயா ”ஃப்ரெண்ட்ஸ்” என்று சொல்லி விட்டு மேலும் என்னைப் பற்றி பெரிய ரைட்டர் என்று என்னென்னவோ
விளக்கிச் சொன்னார்.  
 
எனக்கு யாரிடமும் என்னை ரைட்டர் என்று அறிமுகம் செய்வது பிடிக்காதே என்று அபிநயாவிடம் பிறகு
சொன்னேன்.  அதற்கு அபிநயா சொன்ன பதில் என்னைப் பலவாறு சிந்திக்க வைத்தது.  அந்தப் பெண்மணிக்கு
நாம் யார் என்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று இருந்தது.  ஏனென்றால், குழுவில் இருந்த அத்தனை
பேருமே ஜோடிகள் அல்லது குடும்பம்.  அந்தப் பெண்மணியிடம் நான் உங்களை விமான நிலையத்தில்
சந்தித்தேன் என்று சொன்னால் புரியப் போவதில்லை.  நண்பர்கள் என்றாலும் புரியாது.  அது எப்படி இவ்வளவு
வயது வித்தியாசத்தோடு நண்பர்களாக இருக்க முடியும் என்ற சந்தேகமெல்லாம் வரும்.  நீங்கள் கதை
எழுதுபவர் என்றால் முடிந்தது கதை.  எழுத்தாளன் கடவுளைப் போல.  பால் வித்தியாசம், வயது வித்தியாசம்
எதுவுமே கிடையாது. அதனால்தான் நீங்கள் எழுத்தாளர் என்று சொன்னேன். 
 
டாக்ஸியில் கொஞ்ச நேரம் போனதுமே இஹ்சானையும் அவர் நண்பரையும் பற்றிப் பயந்ததற்காக என்னையே
கடிந்து கொண்டேன்.  துருக்கியைப் பற்றி எப்படியெல்லாம் கட்டுக்கதைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்
என்று தோன்றியது.  கையிலிருந்த இஸ்தாம்பூல் சாலைப் போக்குவரத்து வரைபடத்தை வைத்துப் பார்த்துக்
கொண்டே வந்தேன்.  ஹயா ஸோஃபியாவிலிருந்து சரியான வழியில்தான் போய்க் கொண்டிருந்தார் இஹ்சான்.
அயூப் சுல்தான் மசூதியை அடைந்த போது மீ ட்டர் 65 லீரா காட்டியது.  ஏற்கனவே 60 லீராவுக்கே ஒரு டிரைவர்
வருவதாக இருந்தார் என்று சொல்லியிருந்ததால் நான் 65 லீரா கொடுத்தும் அவர் 60 தான் வாங்கிக் கொண்டார்.
நீங்கள் யார் என்று எங்களைப் பற்றிக் கேட்கவில்லை.  என்னிடம் இஹ்சான் ”சில்ரன்?” என்று சொல்லி
’எத்தனை’ என்பதை சைகையில் கேட்டார்.  நான் ஒன்று என்றேன்.  முகத்தைச் சுளித்தபடி ”கேர்ள்?” என்றார்.
”இல்லை… பாய்.”  ”வேஸ்ட் வேஸ்ட்” என்று சொல்லியபடி  தனது தடித்த வலது கையை மார்பின் நடுவே
வலுவாகக் குத்தி ”மீ !” என்று சொல்லி சல்யூட் அடிப்பது போல் வலது கையை முன்னே தூக்கி மூன்று
விரல்களை என் முகத்துக்கு முன்னே காண்பித்தார்.  அதோடு மீ சையையும் முறுக்கிக் காட்டினார்.  ”பாய்ஸ்?”
என்று கேட்டேன். அதற்கு மிக நீண்ட யெஸ் சொன்னார்.  பிறகு துருக்கி மொழியிலேயே ஏதோ சொன்னார்.
என்னை ஆசீர்வதிப்பது போல் இருந்தது அவரது உடல்மொழி.  ”இன்னும் நிறைய பெற்றுக் கொள்” என்று
சொல்கிறார் போலிருக்கிறது.  
 
ரயில் சிநேகிதம் என்பார்கள் அல்லவா, அது போல்தான் ஆகிவிட்டது அபிநயா சிநேகிதம்.  மூன்று நாள்
இஸ்தாம்பூலில் இருந்து விட்டு நான் இஸ்மீ ர் கிளம்பும் போது அவர் ஸோங்குல்டாக் (Zonguldak) கிளம்பினார்.
இஸ்தாம்பூலில் இருந்த மூன்று நாட்களிலும் அதிகம் டாக்ஸியில் சுற்றினோம்.  ஒருவர் கூட பிரச்சினை
செய்யவில்லை.  மீ ட்டர் போட மாட்டேன் என்று சொன்னாலும் மீ ட்டருக்கு ஆகும் லீரா தான் கேட்கிறார்கள்.
பொதுவாகவே துருக்கியர்கள் நம் இந்திய கிராமவாசிகளைப் போல் வெகுளியாக இருக்கிறார்கள்.  இதில்
நகரவாசி, கிராமவாசி என்ற வித்தியாசம் இல்லை.  அதிலும் இஹ்சான் போன்றவர்களோடு பேசிய போது ஒரு
சிறுவனோடு பேசுவது போல் இருந்தது.  அவ்வளவு வெகுளி.  
 
மறுநாளும் எங்கள் கைடாக வந்தவர் பிலால்தான்.  அவர் தொல்மாபாஹ்ஷியைச் சுற்றிக் காட்டி விட்டு ஒரு
ஓரத்தில் சாவகாசமாக நின்று கொண்டிருந்த போது முந்தைய தினம் இஹ்சான் பேசியதைச் சொன்னேன்.
எனக்கு இந்த ஊர் டாக்ஸி டிரைவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.  நீங்கள் இவ்வளவு நன்றாக
ஆங்கிலம் பேசும் போது டாக்ஸி டிரைவர்களுக்கு ஏன் ஒரு வார்த்தை கூடத் தெரியவில்லை?  அவர்களின்
படிப்பு என்ன?  பள்ளிக்கூடங்களில் ஆங்கிலமோ மற்ற ஐரோப்பிய மொழிகளோ கற்பிக்கப்படுகிறதா?  பிலால்
சொன்ன பதிலை அடுத்த வாரம் சொல்கிறேன்.  இப்போது நாம் தில்ரூபா படித்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ஜெரார்
தெ நெர்வாலுக்கு வருவோம்.
 
நெர்வால் கெய்ரோவில் வாங்கிய அடிமை ஜாவாவைச் சேர்ந்தவள் என்று பார்த்தோம்.  ஜாவாவிலிருந்து
வளைகுடா நாடுகளுக்கு வந்தவள் மெக்காவில் உள்ள ஒரு  ஷேக்குக்கு விற்கப்பட்டாள்; அந்த ஷேக் இறந்ததும்
கெய்ரோ வந்தாள்.  அங்கே ஒரு அந்நியப் பெண்ணாகவே கருதப்பட்டாள்.  ஏனென்றால்,   துருக்கியர்கள்
பழக்கத்துக்கு அடிமையானவர்கள்.  (அப்போது எகிப்தும் ஆட்டமன் துருக்கியர் வசமே இருந்ததால் எகிப்தியரும்
துருக்கியர் என்றே அழைக்கப்பட்டனர்.)  துருக்கியருக்கு அபிசீனிய அல்லது கறுப்பின அடிமைகள்தான்
வேண்டும்.  இவளோ ஜாவாவிலிருந்து வந்தவள்.  எனவே யாரும் இவளை வாங்க முன்வரவில்லை.
நெர்வாலுக்கு இந்துக்கள் மீ து கொஞ்சம் ஆர்வம் இருந்தது.  அவர்கள் கால்நடைகளைப் போல் இலைதழைகளை
மட்டுமே உண்பதால் அவருக்கு அவர்களைப் பிடித்திருந்தது.  அப்படி நினைத்து அந்த ஜாவா அடிமையை
வாங்கி விட்டார்.  ஆனால் அவளோ ஒரு முஸல்மான்.  நெர்வால் அவளை வற்புறுத்தி சாப்பிடச்  சொன்ன
அன்றைய தினம் அவள் நோன்பு பிடித்திருந்தாள்.  மாலை வரை நீர் கூட அருந்த மாட்டாள்.  ஒருநாள்
சமையல்காரன் வேலைக்கு வரவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் வரவில்லை என்றால் வேலையிலிருந்து
நின்று விட்டான் என்று பொருள்.  அதற்காகவே வேலைக்காரர்கள் தங்கள் சம்பளத்தை அன்றைன்றைக்கு
வாங்கிக் கொள்வது வழக்கமாக இருந்தது.   
 
சமையல்காரன் வேலையை விட்டு நின்று விட்டதால் ஃப்ரெஞ்ச் தெரிந்த தன்னுடைய உதவியாளன் மன்ஸூர்
மூலமாக அடிமைப் பெண்ணிடம் சமைக்கச் சொல்கிறார் நெர்வால்.  அதற்கு அவள் சொன்ன பதில்: ”ஸிதியிடம்
(ஸிதி = சார்) சொல்…  நான் ஒரு பெண்; வேலைக்காரி அல்ல. எனக்கு உரிய மரியாதையை அவர்
கொடுக்காவிட்டால் பாஷாவுக்கு எழுதி விடுவேன்.” 
 
“என்னது, பாஷாவா?  இதற்கும் பாஷாவுக்கும் என்ன சம்பந்தம்?  என்னுடைய சமையல்காரன் ஓடி விட்டான்.
இன்னொரு சமையல்காரன் வைத்துக் கொள்ள என்னிடம் காசு இல்லை.  ஏன் இந்தப் பெண் சமைக்கக் கூடாது?
உலகம் பூராவும் பெண்கள்தானே சமைக்கிறார்கள்?” 
 
“மன்ஸூர்… ஸிதியிடம் சொல்.  பாஷாவுக்கு எழுதுவதன் மூலம் ஒரு அடிமை தன்னுடைய எஜமானரை
மாற்றிக் கொள்ள முடியும். என்னால் இவர் நஷ்டமடைய வேண்டாம்.  வேறொருவரிடம் விற்று விடலாம்.
நான் ஒரு அடிமையாக இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு முஸல்மான்.  என்னால் சமையல்
வேலையெல்லாம் செய்து என்னைத் தாழ்த்திக் கொள்ள முடியாது.  ஒரு முஸல்மான் பெண் அப்படிச்
செய்யவே மாட்டாள்.”
 
ஆக, ஒரு வேலைக்காரரை விட அடிமையின் நிலை பரவாயில்லை என்று ஆகிறது.  இது எகிப்து.  1850-ஆம்
ஆண்டு.  
“என்னால் உன்னை வேறொருவரிடம் விற்க முடியாது.  எல்லா மனிதர்களையும் சமமாகப் பார்க்கும் ஒரு
ஐரோப்பியன் ஒருபோதும் அப்படி ஒரு காரியத்தைச் செய்ய மாட்டான்.  என்னால் அது முடியவே முடியாது.
உனக்கு நான் சுதந்திரம் கொடுத்து விடுகிறேன்.  நீ உன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
எங்கே வேண்டுமானாலும் போகலாம்.”
 
”என்னது, சுதந்திரமா?  உங்கள் சுதந்திரம் எனக்கு வேண்டிய ரொட்டியைத் தருமா?  நான் எங்கே தங்குவேன்?”  
 
சுதந்திரத்தையே தனது தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் பாரிஸைச் சேர்ந்த நெர்வால் கடைசியில் எகிப்தை
விட்டுக் கிளம்பும் போது ஒரு அடிமைப் பெண்ணையும் தன்னோடு அழைத்துக் கொண்டே செல்கிறார்.  

 
Haghia Sophia.  Photograph: James Roberston, 1850.

 
 
புகைப்படம் எடுத்தவர் பெயர் தெரியவில்லை.  எடுத்த ஆண்டு: 1900
 
 

அயூப் சுல்தான் மசூதி.  புகைப்படம்: Pascal Sebah, 1870.    

=====

நிலவு தேயாத தேசம் - 7 - சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : சனிக்கிழமை,   நவம்பர்   28 , 2015  23:06:16 IST
Latest Novels at Attractive Price
துருக்கியின் பள்ளிப் படிப்பு ஆறு வயதில் துவங்குகிறது.  பதினான்கு வயது வரை எட்டு ஆண்டுகள் ஆரம்பப்
பள்ளி.  பிறகு இரண்டு இரண்டு ஆண்டுகளாக பள்ளிப் படிப்பு முடிகிறது.  8+2+2.  ஆனால் கடந்த இரண்டு
ஆண்டுகளாக இந்த முறை 4+4+4 என்று மாற்றப்பட்டு இருக்கிறது.  பனிரண்டாம் வகுப்பு வரை எந்தக்
கட்டணமும் இல்லை.  அரசுப் பள்ளிகள்.  கட்டணம் கட்டிப் படிக்கும் தனியார் பள்ளிகள் இந்தியாவைப் போல்
தெருவுக்கு நான்கு இல்லை.  ஒரு ஊருக்கே ஒன்றிரண்டுதான் உள்ளன.  அந்தத் தனியார் பள்ளிகளில்
ஐரோப்பிய மொழிகள் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன. 
அரசுப் பள்ளிகளின் ஆங்கிலம் மிகவும் மோசம்.  அதிலும் டாக்ஸி ஓட்ட வருபவர்கள் அதிக பட்சம் எட்டாம்
வகுப்பு வரைதான் படித்திருக்கிறார்கள். 
 
துருக்கி முழுவதும் பயணிகளுக்கான வழிகாட்டிகள் மிக நன்றாக ஆங்கிலம் பேசுவதன் காரணம், அவர்கள்
தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்; கூடவே டூரிஸ்ட் கைடுக்கான படிப்பையும் முடித்திருக்கிறார்கள்.   பிலால்
வேறொரு சுவாரசியமான விஷயமும் சொன்னார்.   
 
உலகத்தில் உள்ள தேர்வுகளிலேயே ஆகக் கடினமானது லண்டனின் டாக்ஸி டிரைவர் தேர்வுதான்.   லண்டனின்
25000 தெருக்களையும் மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.  வெறுமனே நெட்டுருப் போட்டிருந்தால்
போதாது.  நேரடியாகக் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று காண்பிக்க வேண்டும்.  அதாவது, டாக்ஸியில் ஏறி
இன்ன இடத்தில் இன்ன தெரு என்று சொல்லி விட்டால் போதும்.  ஒரு கேள்வி கேட்காமல் அந்த இடத்தில்
கொண்டு போய் விட்டு விடுவார் டிரைவர்.  நம் ஊரைப் போல் எங்கே இருக்கிறது, எப்படிப் போக வேண்டும்
என்று கேட்டு நொக்கியெடுக்க மாட்டார்.  சென்னை ஆட்டோ டிரைவர்களிடம் நான் இந்த விஷயத்தில் படாத
பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஏதோ கண் தெரியாதவர்களுக்கு வழி சொல்வது போல் சொல்லிக் கொண்டு
போக வேண்டும்.  அப்படியும் தவறான பாதையில் போய் வதை பண்ணி விடுவார்கள். 
 
சரி, லண்டனில்தான் எல்லா இடத்துக்கும் மெட்ரோ ரயிலும் பஸ்ஸும் வசதியாக இருக்கிறதே? டாக்ஸி
எதற்கு? என்று கேட்டேன்.  அதற்கு பிலால் சொன்னார்.  லண்டனில் நீங்கள் ஸௌத் ஆலிலிருந்து
ரிச்மாண்டுக்கு ரயிலிலோ பஸ்ஸிலோ போய் விடலாம்.  ஆனால்  ரிச்மாண்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட
தெருவுக்குப் போக வேண்டும்; லண்டனுக்கு நீங்கள் புதியவர் என்றால் டாக்ஸியில் தானே போக வேண்டும்?  
 
அந்தத் தேர்வுக்கு Knowledge என்று பெயர்.  லண்டனில் உள்ள தெருக்கள் அத்தனையும் அத்துப்படியாகி இருக்க
வேண்டும்.  வெறுமனே தெருப் பெயர்களை நெட்டுருப் போட்டு விட்டு பாஸ் பண்ணி விட முடியாது.  நேரடியாக
டாக்ஸியில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போய் காண்பிக்க வேண்டும்.  இதற்காக Knowledge School என்ற பெயரில்
பயிற்சிப் பள்ளிகள் பல இருக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் 7000 பேர் தேர்வு எழுதி 700 பேர் தேறுகிறார்கள். 
பிலால் மேலும் ஒரு உதாரணம் சொன்னார்.  லண்டனின் மையப் பகுதியில் உள்ள Charing Cross ஆறு மைல்
சுற்றளவு உள்ளது.  இதில் 25000 சாலைகளும், தெருக்களும், சந்துகளும் வந்தடைகின்றன.  இத்தனை
தெருக்களும் ஒரு லண்டன் டாக்ஸி டிரைவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  ”இந்த விபரமெல்லாம்
உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றேன்.  அவர் தம்பி லண்டனில் ’நாலட்ஜ்’ தேர்வில் தேர்ச்சி பெற்று
டிரைவராக இருக்கிறாராம்.  என்னை விட பத்து மடங்கு அதிகம் சம்பாதிக்கிறான் என்று முடித்தார். 
என்னுடைய லண்டன் நண்பர்களிடம் விசாரித்த போது அங்கே சாதாரணமாக ஓட்டுநர் உரிமம் பெறுவது கூட
மிகவும் கடினம் என்றார்கள்.  முதலில் எழுத்துத் தேர்வு, பிறகு நேரடித் தேர்வு என்று இருக்கின்றன.  பல முறை
எழுதித் தோற்று பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் உரிமம் பெற முடிகிறது என்றார்கள்.  நம் நாட்டின் நிலையை
யோசித்துப் பார்த்தேன்.  நேரடியாகப் போகாமலே டிரைவிங் பள்ளிகளில் பணம் கட்டிக் கூட ஓட்டுநர் உரிமம்
பெற்று விடலாம்.  சட்டப்படி அல்ல; காசு கொடுத்தால் சட்டம் இங்கே தகரம் மாதிரி வளையும்.  இங்கே பல
வாகன ஓட்டிகளுக்கு எழுதப் படிக்கவே தெரியாது.  இந்தக் காரணங்களால்தான் இந்தியாவில் பெருமளவுக்கு
விபத்துகள் நடக்கின்றன. 

 
Lady Mary Wortley Montagu என்பது அவர் பெயர்.  இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மிக நெருக்கமாக இருந்த பிரபு
ஒர்ட்லி மாண்டேகுவின் மனைவி.   அதீதமான அழகு, விசாலமான படிப்பு ஆகிய காரணங்களால் அரச
குடும்பத்தினரிடையே பிரபலமான சீமாட்டியாக விளங்கினார் மேரி.  அவரது நட்புக்காகப் பெரும் 
கனவான்களெல்லாம் காத்துக் கிடந்தார்கள். Rape of the Lock என்ற புகழ் பெற்ற குறுங்காவியத்தை
இயற்றியவரும், ஹோமரின் காவியங்களான இலியத் மற்றும் ஒடிசியை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவருமான அலெக்ஸாண்டர் போப்பும் இவரது நண்பராக இருந்தார்.  ஆனால் போப் இவரிடம் தன்
காதலைத் தெரிவித்ததும் அந்த நட்பு முடிவுக்கு வந்தது.  அதன் பிறகு  மேரியைக் கடுமையாகத் திட்டி போப் பல
கவிதைகள் எழுதினார். 
1716-ஆம் ஆண்டு மாண்டேகு இஸ்தாம்பூலின் இங்கிலாந்து தூதராக அனுப்பப்பட்டார்.  அப்போது மேரி
எழுதியிருந்த ஒரு கதாபாத்திரம் இங்கிலாந்து இளவரசியைக் கேலி செய்வது போல் இருந்ததாக அரச
வட்டாரங்களில் வதந்தி பரவியிருந்ததால்  மேரியும் லண்டனில் இருக்க முடியாமல் கணவருடன்
இஸ்தாம்பூல் சென்றார்.  1718 வரை மூன்று ஆண்டுகள் அவர்கள் துருக்கியில் இருந்தார்கள்.  அந்தக்
காலக்கட்டத்தில் மேரி தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எழுதிய நீண்ட கடிதங்கள் இப்போதும் துருக்கி
பற்றிய மிக முக்கியமான வரலாற்று ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.  அந்தக் கடிதங்களே இஸ்லாமிய
சமுதாயம் பற்றி மேற்கத்தியர் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளில் முதலாவதாகவும் விளங்குகின்றன. 
 
மேரியின் துருக்கி கடிதங்களை இஸ்லாமிய சமுதாயம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களும்
அச்சமுதாயம் பற்றிய பலவிதமான கற்பனைகளைக் கொண்டிருப்பவர்களும் அவசியம் படித்துப் பார்க்க
வேண்டும்.  இஸ்லாம், பெண்கள் மீ து கடும் அடக்குமுறை செலுத்துகிறது என்பது இன்றைய மேற்கத்திய
ஊடகங்களின் செய்தி.  தாலிபான் போன்ற ஒரு சிறிய பிரிவினரின் அடக்குமுறையை வைத்து உலகம்
முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மீ து பொய்களை அவிழ்த்து விடுகிறது மேற்கத்திய ஊடகம். 
மேரி, ”துருக்கிப் பெண்களைப் போல் சுதந்திரமான பெண்களை உலகத்திலேயே எங்கும் பார்க்க முடியாது”
என்று தன் கடிதங்களில் எழுதுகிறார்.  17-ஆம் நூற்றாண்டில்தான் அப்படி இருந்தது என்றும் சொல்ல முடியாது. 
நான் பார்த்த இன்றைய துருக்கியிலும் பெண்கள் தான் ஆண்களை விட சுதந்திரமாகவும் அதிகாரம்
கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.  மேலும் ஒரு விஷயம்.  மேரி இஸ்தாம்பூல் வருவதற்கு முன்பாக
அவருக்கு ஒருமுறை பெரியம்மை போட்டது.  அப்போதெல்லாம் அம்மை வந்தால் மரணம்தான்.  ஆனால் மேரி
பிழைத்துக் கொண்டார்.  (ஆனாலும் முதிய வயதில் பழைய அம்மைத் தழும்புகளால் தோல் வியாதி வந்து
மிகுந்த சிரமப்பட்டே இறந்தார்.)  பிறகு அவர் இஸ்தாம்பூலில் இருக்கும் போது அங்கே வழக்கத்தில் இருந்த
அம்மைத் தடுப்பு முறை ஒன்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.  உடம்பில் உள்ள ரத்தக் குழாயில் ஊசி மூலம்
துளை செய்து அந்தத் துளையில் அம்மைக் கிருமியின் ஒரு பகுதியை ரத்தத்துக்குள் செலுத்திவிட்டு தோலில்
ஏற்பட்டுள்ள காயத்தை மூடி விடுவதே அந்த முறை. Shell-இன் ஒரு பகுதியால் மூடுவார்கள் என்று எழுதுகிறார்
மேரி.  என்ன ‘ஷெல்’ என்று தெரியவில்லை.  இதையெல்லாம் ஐரோப்பியர்கள் மூட நம்பிக்கை என்று பரிகாசம்
செய்தார்கள் என்கிறார் மேரி.  இங்கிலாந்து திரும்பிய பிறகு இந்தத் தடுப்பூசி முறையை அவர் அங்கே
அறிமுகப்படுத்தினார்.  அதன்பிறகுதான், அவர் சொன்னதை வைத்தே அம்மைத் தடுப்பூசி எட்வர்ட் ஜென்னரால்
கண்டு பிடிக்கப்பட்டது.  எனவே, எட்வர்ட் ஜென்னெர் தான் அம்மைத் தடுப்பூசியைக் கண்டு பிடித்தார் என்பது
தவறு.  அவர் அதைக் கண்டு பிடிப்பதற்கே காரணமாக இருந்தது, மேரி துருக்கியில் இருந்த அம்மைத் தடுப்பு
முறையைப் பற்றி இங்கிலாந்தில் அறிமுகம் செய்ததுதான்.  ஆக, நவன
ீ விஞ்ஞானம் பெரியம்மைத்
தடுப்பூசியைக் கண்டு பிடிப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே துருக்கியின் பாரம்பரிய
மருத்துவமாக பெரியம்மைத் தடுப்பூசி முறை வழக்கத்தில் இருந்திருக்கிறது.  அது மட்டுமல்ல; இந்த வழக்கம்
சூடான் போன்ற ஆஃப்ரிக்க நாடுகளிலும், சீனாவிலும் பழக்கத்தில் இருந்தது.  இந்த மருத்துவத்தைச்
செய்தவர்கள், பெண்கள்.  ஆதாரம், லேடி மேரியின் கடிதங்கள்.   (கடிதத் தேதி 1.4.1717)
 
நம்முடைய முகலாய சுல்தான்கள் பற்றி எவ்வளவோ படித்திருக்கிறோம்.  ஆனால் ஆட்டமன் சுல்தான்கள்
பற்றி மேரி கொடுக்கும் சித்திரம் வித்தியாசமாக இருக்கிறது.  தப்பு செய்யும் மந்திரிகளைப் பிடித்து தலை வேறு
முண்டம் வேறாக வெட்டிப் போட்டு விடுவார்களாம் சுல்தானின் மெய்க்காவலர்கள் (Janissaries).  சுல்தான்
அதைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பார் என்று எழுதுகிறார்.  அந்த சுல்தானின் பெயர்
மூன்றாம் அஹ்மத்.  ஆட்சியில் இருந்த ஆண்டுகள்: 1703 இலிருந்து 1730.  அதே தேதியிட்ட கடிதத்தில் உள்ள
இன்னொரு விஷயம்: ஒருநாள் மேரி தன் பரிவாரங்களோடு கிராமங்களுக்குச் செல்கிறார்.  பரிவாரம் என்றால்
மெய்க்காப்பாளர்கள்.  (தன்னைப் பார்ப்பதற்கு வரும் ஃப்ரெஞ்ச் தூதரின் மனைவி எப்போது வந்தாலும் 24
பாதுகாவலர்களுடன்தான் வருகிறாள் என்று கிண்டலாக எழுதுகிறார் மேரி.)  சுற்றுப் பயணத்தின் போது
அவருக்கு இரவு உணவாக புறாக் கறி சாப்பிடலாம் என்ற ஆசை ஏற்படுகிறது.  தலைமைக் காவலனிடம்
சொல்ல அதை அவன் அந்த கிராமத்து ‘காதி’யிடம் (ஊர்த் தலைவர்) சொல்கிறான்.  அவர் தலையைச் சொறிந்து
கொண்டே காவலனிடம், காலையிலேயே மெய்க்காவலர்களுக்காகப் பல நூறு புறாக்களைக் கொடுத்து
விட்டதால் ஊரில் ஒரு புறா கூட இல்லை என்று சொல்கிறார்.  உடனே காவலன் லேடி மேரியைத் தனியே
சந்தித்து, காதியின் தலையைக் கொய்து விடவா என்று கேட்கிறான்.  ”பொதுவாக மெய்க்காவலர்கள் இது
போன்ற விஷயங்களில் யாருடைய அனுமதியும் இல்லாமல் தலையை வெட்டி விடுவார்கள்.  நான்
வெளிநாட்டைச் சேர்ந்த பெண் என்பதால் என் அனுமதி கேட்டார்கள்” என்று எழுதுகிறார் மேரி. 
 
மேலும் அவரது குறிப்புகள்: துருக்கிப் பெண்களைப் போன்ற அழகிகளை உலகிலேயே காண்பதரிது.  நம்முடைய
இங்கிலாந்து அரண்மனைப் பெண்களெல்லாம் இந்தத் துருக்கி அழகிகளின் அருகே கூட வர முடியாது.
 
லேடி மேரியின் இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.  வெனிஸுவலா, கொலம்பியா, அர்ஜெண்டினா,
மெக்ஸிகோ, ப்ரஸீல், ஸ்காண்டிநேவிய நாட்டுப் பெண்கள்தான் பேரழகிகள்.  பொதுவாக ட்ராவல்
கம்பெனியைச் சேர்ந்தவர்கள் நன்கு விபரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.  நான் இஸ்தாம்பூலிலிருந்து
இஸ்மீ ர் என்ற ஊருக்குக் கிளம்பிய போது என்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்ற முஸ்தஃபா
இஸ்மீ ரில் இரண்டு விஷயங்கள் முக்கியம் என்றார்.  ஒன்று, இஸ்மீ ர் வைன்.  இரண்டு, பெண்கள்.  இஸ்மீ ர்
பெண்களைப் போன்ற அழகிகளை உலகிலேயே காண முடியாது என்றார் முஸ்தஃபா.  அது பற்றி நாம் இஸ்மீ ர்
பற்றிய அத்தியாயத்தில் காண்போம்.  இப்போது துருக்கி சமூகத்தில் பெண்கள்.  லேடி மேரி எழுதுகிறார்: 
”துருக்கிப் பெண்கள் பற்றி நம்மவர்கள் எழுதியதெல்லாம் முட்டாள்தனமான கற்பனைகள்.  இவர்கள் நம்மைப்
போன்ற ஐரோப்பியப் பெண்களை விட சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள்.  ஆடை விஷயத்தில் மட்டுமே
வித்தியாசம்.  உடம்பு பூராவும் மூடியிருப்பதால் யார் எஜமானி, யார் அடிமை என்பதைக் கண்டு பிடிக்க
முடியவில்லை.  ஆண்கள் எந்தப் பெண்ணையும் ஏறிட்டுக் கூட பார்ப்பதில்லை.  அதனால் தெருக்களில்
பெண்களை ஆண்கள் தொடர்ந்து செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.  அப்புறம், முஸ்லீம் ஆண்கள் நான்கு
பெண்களைத் திருமணம் செய்து கொள்வது பற்றி நாம் ஏராளமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நடைமுறையில்
நான் பார்ப்பதெல்லாம் வேறு மாதிரி இருக்கிறது.” 
 
இதே விஷயத்தைத்தான் நாம் முன்பு பார்த்த ஜெரார் தெ நெர்வாலும் தன் புத்தகத்தில் கூறுகிறார்.  ”ஒரு
முஸ்லீம் ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வது பற்றியும் பெண்களின் ஹேரம் பற்றியும்
நாம் கேள்விப்பட்ட விஷயம் எல்லாமே வெறும் கட்டுக் கதைகள்.  ஹேரம் உள்ளே பெண் வேடம் இட்டு
நுழையும் ஆண்கள் ஹேரத்திற்குள் செய்யும் லீலைகள் பற்றி எவ்வளவு கதைகளைக் கேட்டிருக்கிறேன்! 
எல்லாமே பாரிஸின் மதுபான விடுதிகளில் குடிகாரப்பயல்கள் பேசும் கற்பனைக் கதைகள்.  மற்றபடி ஒரு ஆண்
கூட ஹேரத்தின் உள்ளே நுழைந்து விட முடியாது.”
 
 

தோல்காப்பி அரண்மனையில் உள்ள ஹேரம்.


ஹேரம் என்ற துருக்கிய வார்த்தையின் பொருள், தடுக்கப்பட்டது.  அதாவது, ஹேரம் என்பது பெண்களுக்கான
இடம்; அங்கே ஆண்கள் அண்டக் கூடாது.  அதே சமயம், ஹராம் என்ற அரபி வார்த்தைக்கும் தடுக்கப்பட்டது
என்றுதான் பொருள் என்பதால் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை நண்பர்கள்
எனக்குச் சொல்ல வேண்டும்.  இனி நெர்வாலின் நூலுக்குள் செல்வோம்:
”நான் இங்கே ஒரு பெண்ணை வைத்துக் கொண்டே திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.  இவ்வளவுக்கும் அவள்
ஒரு அடிமை.  சமைக்கச் சொன்னால் கவர்னருக்கு எழுதி விடுவேன் என்று மிரட்டுகிறாள்.  இந்த நிலையில்
எவன் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வான்?  பெரும் கோடீஸ்வரர்களால் மட்டுமே அது
சாத்தியம்.  ஆனாலும் இங்கே உள்ள பெண்களுக்கு வசதியான சட்டதிட்டங்களைப் பார்க்கும் போது அந்தக்
கோடீஸ்வரனால் கூட நிம்மதியாக வாழ முடியாது என்றே தோன்றுகிறது.    
 
திருமணம் செய்து கொண்டால் மனைவிக்குத் தனி வடு
ீ கொடுக்க வேண்டும்.  பணிப்பெண்கள் கொடுக்க
வேண்டும். அந்தப் பணிப்பெண்களிடம் ஒரு வார்த்தை பேசக் கூடாது.  மாதாமாதம் பணம் கொடுக்க வேண்டும். 
என்ன செலவு செய்தாய் என்று கேட்க உரிமை இல்லை.  மனைவி வெளியே போனால் எங்கே போனாய் என்று
கேட்க முடியாது.  இன்னொரு முக்கியமான விஷயம், ஒரே பெண்ணிடமே விழுந்து கிடந்து விட்டு மற்ற
பெண்களின் வட்டுக்குப்
ீ போகாமல் இருந்து விட முடியாது.  ஒவ்வொருவர் வட்டுக்கும்
ீ வாரத்தில் ஒருநாள்
போயே ஆக வேண்டும்.  இது மட்டுமல்லாமல், பெண் விரும்பினால் தன்னுடைய திருமண
உடன்படிக்கையிலேயே தன் கணவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று
ஒரு ஷரத்தைச் சேர்க்கலாம்.  அதற்கு அவளுக்கு உரிமை இருக்கிறது. 
 
கணவன், மனைவி வட்டுக்குப்
ீ போவதே ஒரு பெரிய சடங்கு போல் இருக்கும்.  முன்கூட்டியே மனைவிக்குத்
தான் வருவதைத் தெரிவித்து விட வேண்டும்.  அனுமதியும் பெற வேண்டும்.  வட்டு
ீ வாசலில் புதியவர்களின்
செருப்பு இருந்தால் திரும்பி விட வேண்டும்.  மனைவியின் உறவினர்கள் வந்திருக்கிறார்கள் என்று பொருள். 
 
முஸ்லீம்களின் சட்டத்தில் பெண்கள் அடிமைகளைப் போல் நடத்தப்படுவதாக ஐரோப்பாவில் சொல்கிறார்கள். 
அது பொய்.  முஸ்லீம் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு.  அதுவும் கணவனின் தலையீடு இல்லாமலேயே
சொத்து வைத்துக் கொள்ள முடியும்.  விருப்பப்பட்டால் பெண்கள் தன் கணவனை விவாகரத்தும் செய்யலாம்.”
 
இதெல்லாம் ஜெரார் தெ நெர்வால் 1842-ஆம் ஆண்டு எழுதியது.   
 
தோப்காப்பி அரண்மனையில் உள்ள ஹேரம்: https://www.youtube.com/watch?v=MxduJ2h7fog
 
ஒரு ஹேரத்துக்கு முதல்முதலாகச் சென்ற அனுபவத்தைத் தன் கடிதத்தில் எழுதுகிறார் மேரி.  ”ஹேரத்தின்
வாயிலில் இரண்டு அலிகள் நின்று கொண்டிருந்தார்கள்.  உள்ளே இருந்த ஃபாத்திமாவுக்கு வணக்கம்
சொன்னேன்.   பதிலுக்கு ஃபாத்திமா அவர்கள் வழக்கப்படி வலது கையை மார்பகத்தில் வைத்து வணக்கம்
சொன்னார்.  அவர்கள் வணக்கம் சொல்லும் முறையே நம் மனதைத் தொடுகிறது.   ஃபாத்திமாவின் அழகுக்கு
நிகராக உலகில் எதையுமே சொல்ல முடியாது;  தலைமுடி பாதத்தைத் தொடும் போல் இருக்கிறது;
காவியங்களில் கூட இப்படிப்பட்ட அழகை நான் படித்ததில்லை; நம் ஐரோப்பாவின் புகழ்பெற்ற
அழகிகளெல்லாம் ஃபாத்திமாவுக்கு முன்னால் காணாமல் போய் விடுவார்கள்.  ஹேரத்தில் சுமார் இருபது
பெண்கள் – சொர்க்கத்திலிருந்து வந்த தேவதைகளைப் போல் இருந்தார்கள் - ஃபாத்திமாவின் உத்தரவை
எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள்.  ஃபாத்திமா தலை அசைத்ததும் பாடலும் ஆடலும் ஆரம்பித்தன…
 

இந்தப் புகைப்படம் தொல்மாபாஹ்ஷி அரண்மனையில் உள்ள ஹேரத்தின்


வரவேற்பறை.
 

கலாட்டா டவர் தெருவின் சந்து ஒன்றில் உள்ள டீக்கடையில் டர்க்கிஷ் டீ.       
=====

நிலவு தேயாத தேசம் - 8 - சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   11 , 2015  04:28:12 IST
Latest Novels at Attractive Price

இஸ்தாம்பூலிலிருந்து 20 கி.மீ . தூரத்தில் இருக்கிறது யரிம்புர்காஸ் (Yarimburgaz) குகை.  (இஸ்தாம்பூல்


செல்பவர்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய இடம் இது).  இதன் சிறப்பு என்னவென்றால், மூன்று லட்சம்
ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் குடியேறிய குகை இது.  காரணம், இந்த குகை Küçükçekmece என்ற
ஏரியின் கரையில் இருக்கிறது.  
கால எந்திரத்தில் இந்த மூன்று லட்சம் ஆண்டுகளையும் கடந்து வந்தால் கி.மு. 660-இல் கிரேக்கர்கள் அந்த
குகை இருந்த இடத்தில் பைஸாண்டியம் என்ற நகரை நிறுவியதைக் காணலாம்.  அதுதான் பின்னர்
கான்ஸ்டாண்டிநோப்பிள் என்றும் பிறகு இஸ்தாம்பூல் என்றும் மாறியது.  ஆக, துருக்கியின் முதல் அரசாங்கமே
கிரேக்கர்களால் நிறுவப்பட்டதுதான்.  இந்த கிரேக்க அரசியல் மற்றும் கலாச்சார ஆதிக்கத்தின் காரணமாக
துருக்கிப் பயணம் என்பதே கிரேக்கர்களின் வரலாற்றிற்குள்ளும் பயணிப்பதாகத்தான் இருக்கிறது.  உள்ளே
நுழைந்ததுமே அந்த தீபகற்பத்தைச் சுற்றிலும் மதில் சுவர்களை அமைத்தார்கள் கிரேக்கர்கள்.  மூன்று பக்கமும்
கடல், ஒரு பக்கத்தில் நிலத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் தங்கக் கொம்பு என்ற பாதுகாப்பான பகுதி,
செழிப்பான விவசாய நிலம், ஏராளமான மீ ன் என்று வளமான பகுதியாக இருந்ததால் பைஸாண்டியம் நகரம்
மிக விரைவில் வளர்ச்சி அடைந்தது.  இந்த வளமை காரணமாகவே அந்நியர்களின் படையெடுப்புகளும் அதிகம்
நடந்தன.  நகரம் நிர்மூலமாவதும் நகரவாசிகள் கொள்ளையடிக்கப்படுவதும் பைஸாண்டியம் மக்களின்
வாழ்வில் ஒரு பகுதியாக மாறின.  கி.பி. 73-ஆம் ஆண்டு பைஸாண்டியம் ரோமப் பேரரசோடு
இணைக்கப்பட்டது.  கி.பி. 193-இல் பைஸாண்டியம் பார்த்தியர்களோடு கை கோர்க்க முனைந்த போது ரோமப்
பேரரசன் Septimus Severus பைஸாண்டியத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றி நகரத்தை அழித்தான். அவன் படை
வரர்கள்
ீ நகரைக் கொள்ளையடித்தனர்.  பிறகு அதே அரசன் பைஸாண்டியத்தை மீ ண்டும் நிர்மாணித்தான். 
இப்படித் தொடர்ந்து பைஸாண்டியம் அந்நியப் படையெடுப்புக்கு ஆளாகிக் கொண்டே இருந்தது.  
கி.பி. நான்காம் நூற்றாண்டில் ரோமாபுரிப் பேரரசு மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து கிழக்கே
டைக்ரிஸ் வரை பரவியிருந்ததால் முதலாம் கான்ஸ்டாண்டின் (324-337) ரோமுக்கு அடுத்தபடியாக
பைஸாண்டியம் நகரை இரண்டாவது தலைநகராக அறிவித்து அதற்குத் தன்னுடைய பெயரையே
(கான்ஸ்டாண்டின்) சூட்டினான்.  (நம்முடைய அரசியல்வாதிகளுக்கு 16 நூற்றாண்டுகளுக்கு முன்பே
முன்னோடிகள் இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.)  நகரத்தில் 1550 அடி நீளமும் 375 அடி அகலமும்
கொண்ட  ஹிப்போட்ரோம் என்ற விளையாட்டு அரங்கையும் நிர்மாணித்தான்.   இப்போது சுல்தானாமெட்
(சுல்தான் அஹ்மத் சதுக்கம்) என்று அழைக்கப்படும் அந்த இடத்தில்தான் நீல மசூதி இருக்கிறது.  (ஞாபகம்
இருக்கிறதா, நான் துருக்கிக்குச் சென்ற காரணமே இந்த நீல மசூதியைப் பார்க்க வேண்டும் என்றுதான்.  இங்கே
அமர்ந்து பாங்கு சொல்வதைக் கேட்பது ஓர் அற்புதமான அனுபவம்.)
பைஸாண்டியம் என்று அழைக்கப்பட்ட நகர்ப்பகுதி இப்போது பழைய இஸ்தாம்பூல் என்றும் Walled City என்றும்
அழைக்கப்படுகிறது.  இதன் வடக்கே இருப்பது தங்கக் கொம்பு, கிழக்கே பாஸ்ஃபரஸ், தெற்கே மர்மரா கடல்.  
நீல மசூதியிலிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் முதலாம் கான்ஸ்டாண்டின் கட்டிய மில்லியன் என்ற ஒரு கல்
இருக்கிறது.  எல்லா சாலைகளும் ரோமை நோக்கிச் செல்கின்றன என்பதைப் போல் உலகத்தின் மையப் புள்ளி
என்று இதை அழைத்தான் கான்ஸ்டாண்டின் பேரரசன்.  ரஷ்யா, பெர்ஷியா, எகிப்து, மற்றும் ஐரோப்பாவிலிருந்து
வரும் பாதைகள் அனைத்தும் இந்தப் புள்ளியில்தான் வந்து முடிகின்றன.   

புகைப்படம்: நான் தங்கியிருந்த ஹோட்டலின் மொட்டை மாடியிலிருந்து நீல மசூதியும் பாஸ்ஃபரஸ் கடலும்.
 

 ஒரு இடத்துக்குச் சென்றால் அந்த இடத்தில் நான் நின்று கொண்டிருக்கும் காலத்திலிருந்து அந்த இடம்
உருவான காலத்துக்குச் சென்று விடுவது என் வழக்கம்.  நீல மசூதியின் வெளியே ஹிப்போட்ரோம் சதுக்கத்தில்
அமைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்தூபியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த போது முதலாம் கான்ஸ்டாண்டின்
பேரரசனின் காலத்தில் அந்த அரங்கத்தில் நடந்த வரீ விளையாட்டுச் சண்டைகளும், குதிரைப் பந்தயங்களும்,
கொண்டாட்டங்களும், கோலாகலங்களும், விளையாட்டுப் போட்டிகளும் என் கண்களின் முன்னே விரிந்தன.
நீல மசூதி இப்போது மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக விளங்கினாலும், உள்ளே நூற்றுக் கணக்கான சுற்றுலாப்
பயணிகள் சுற்றிக் கொண்டிருந்தாலும் அங்கே மிக ஆச்சரியமான அமைதி நிலவுகிறது.  யாருமே
பேசுவதில்லை.  ஏனென்றால், அங்கே ஒரு இடத்தில் தொழுகையும் நடந்து கொண்டிருக்கிறது.  அந்தக் காட்சி:
 

      

நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், கடவுள் நம்பிக்கையே இல்லாதவராக இருந்தாலும் கீ ழ்


வரும் தொழுகை அழைப்பை (பாங்கு) ஒருசில நிமிடங்கள் கேட்டுப் பாருங்கள்.  உங்களால் மறக்கவே முடியாத
அனுபவமாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=wv9jGeJIK_M

***
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான பயண நூல்கள் கிப்ளிங் எழுதிய The Jungle Book (1894),
ஹென்றி ஹக்கார்ட் எழுதிய King Solomon’s Mines (1885) மற்றும் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய Around the World in Eighty
Days (1873).   அந்த நூற்றாண்டின் மறக்கவே முடியாத பயண எழுத்தாளர் சர் ரிச்சர்ட் பர்ட்டன் (1821-1890). 
பர்ட்டன் அளவுக்கு உலகம் சுற்றிய, பயணங்களை எழுதிய ஒரு பயணி இருக்க முடியுமா என்பது
ஆச்சரியம்தான்.  அதே சமயம் பெண்களும் கூட 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் பயணம் செய்து தங்கள்
அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள்.  ஏற்கனவே நாம் லேடி மேரி மாண்டேகு (1689–1762) பற்றிப் பார்த்தோம். 
அதேபோல் மற்றொரு பயண எழுத்தாளர் Zeynab Hanoum.  
பியர் லோத்தி (Pierre Loti) (1850- 1923) என்பவர் ஒரு பிரபலமான ஃப்ரெஞ்சுக் கடல்படை அதிகாரி.  அவருடைய
பிராபல்யத்துக்குக் காரணம், அவர் தனது கடற்பயணங்களின் அடிப்படையில் சுவாரசியமான, சாகசத் தன்மை
வாய்ந்த நாவல்களை எழுதினார். அதற்காகவே பியர் லோத்தி என்ற புனைப்பெயரையும் வைத்துக் கொண்டார். 
புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களெல்லாம் கற்பனையானவை; ஒன்று கூட உண்மையில்லை; தயவுசெய்து
யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் என்று முதல் பக்கத்திலேயே கதறிக் கதறி அறிவிப்பு தருவது அவர்
பழக்கம்.   1904-ஆம் ஆண்டில் அவருடைய கப்பல் கான்ஸ்டாண்டிநோப்பிளுக்கு  வந்தது.  பியர் லோத்தி தான்
கப்பலின் கேப்டன்.  அப்போது அவருக்கு அந்நகரின் அரண்மனையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து வந்து
கொடுத்தான் ஒரு சேவகன்.  லோத்தியின் எழுத்தால் கவரப்பட்ட ஒரு ரசிகையிடமிருந்து வந்த கடிதம் அது. 
ரசிகையின் பெயர் ஸேனாப் ஹனூம்.  ஆட்டமன் சுல்தானின் பாஷாவின் மகள்.  கடிதம் ஃப்ரெஞ்சிலேயே
இருந்தது.  காரணம், முற்போக்கு சிந்தனை கொண்ட ஸேனாபின் தந்தை தன்னுடைய இரண்டு
புதல்விகளுக்கும் மேற்கத்திய கல்வியைக் கற்பித்திருந்தார்.  
கடிதத்தின் முக்கியப் பகுதி, உங்களைச் சந்திக்க வேண்டும். பொதுவாகவே பெண்கள் மீ து அளப்பரிய காதல்
கொண்ட லோத்திக்குக் கேட்கவா வேண்டும்?  ஸேனாப், ஸேனாபின் சகோதரி மெலக், அவர்களின் தோழி
லைலா மூவரும் கப்பலுக்கு வந்து லோத்தியைச் சந்தித்தார்கள்.  விளைவு, லோத்திக்கும் அந்த மூன்று
பெண்களுக்கும் காதல் ஏற்பட்டது.  ஆனால் நாளடைவில் லைலாவின் குடும்பம் லைலாவை
லோத்தியிடமிருந்து பிரித்து அவரைத் தனியான ஒரு இடத்தில் வைத்தது.  லைலா தற்கொலை செய்து
கொண்டார்.  பிறகு 1906-ஆம் ஆண்டு லோத்தி ஃப்ரான்ஸ் திரும்பினார்.  சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு
ஒரு ஆச்சரியம்.  ஸேனாபும் மெலக்கும் தங்களின் கான்ஸ்டாண்டிநோப்பிள் ஹேரத்திலிருந்து மாறுவேடத்தில்
தப்பி ஃப்ரான்ஸ் வந்து விட்டனர்.  ஸேனாபின் கடிதங்களிலிருந்து இதையெல்லாம் படிக்கும் போது சாகசக்
கதைகளையும் மிஞ்சும் வண்ணம் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.  ஆனால் ஸேனாப் ஃப்ரான்ஸ்
கிளம்பியதற்குக் காரணம் வெறும் காதல் அல்ல.  துருக்கிப் பெண்களின் அடிமைத்தனத்தை உலகுக்குத்
தெரியப்படுத்த வேண்டும்; துருக்கிய சமூகத்தில் பெண் விடுதலையை ஏற்படுத்த வேண்டும் என்ற இரண்டு
நோக்கங்களே அவருக்குப் பிரதானமாக இருந்தன.    
தனது கான்ஸ்டாண்டிநோப்பிள் அனுபவங்களை வைத்து The Disenchanted என்ற நாவலை எழுதினார் லோத்தி. 
நாவல் ஃப்ரான்ஸில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.  அந்த நாவலின் நாயகி ஸேனாப் ஹனூம்.   பின்னர்
ஸேனாப் ஹனூமின் ஃப்ரெஞ்ச் அனுபவங்கள் தொகுக்கப்பட்டு A TURKISH WOMAN'S EUROPEAN IMPRESSIONS
என்ற தலைப்பில் Grace Ellison என்ற பெண்ணியவாதியால் 1913-இல் பிரசுரிக்கப்பட்டது.  ஸேனாப், க்ரேஸுக்கு
எழுதிய கடிதங்களின் தொகுப்பே அந்நூல்.  கீ ழை தேசக் கலாச்சாரம், இஸ்லாம், இஸ்லாமிய நாடுகளில்
பெண்கள், ஹேரம் போன்றவை குறித்த மேற்கத்திய நாடுகளின் கட்டுக்கதைகளைப் பொய்யாக்குபவை
ஸேனாபின் கடிதங்கள்.   
ஒன்றல்ல, இரண்டல்ல; ஹேரம் பற்றி மேலை நாடுகளில் பல கட்டுக்கதைகள் உலவிக் கொண்டிருந்தன. 
ஹேரம் என்றாலே ஆபாச வார்த்தை என்ற அளவுக்குப் பரவியிருந்தன அவை.  அதற்கெல்லாம் காரணமாக
இருந்தது தலைப்பிலேயே கிளுகிளுப்பை வைத்துக் கொண்டிருந்த ஆயிரத்தோரு அராபிய இரவுகள் என்ற
கதைகள்தாம்.  ஷேக்ஸ்பியரை விடவும் நேசிக்கப்பட்ட புத்தகம் அது என்கிறார் ஆர்.எல். ஸ்டீவன்ஸன்.  
ஆயிரத்தோரு அராபிய இரவுகள் ஆங்கிலத்தில் வருவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஃப்ரெஞ்சில்
வெளிவந்து விட்டது.  அந்த்வான் காலா(ங்) (Antoine Galland) 1707-இலிருந்து 1714 வரை பனிரண்டு தொகுதிகளாக
அதை அரபியிலிருந்து ஃப்ரெஞ்சுக்கு மொழிபெயர்த்தார்.  உண்மையில் இதற்குப் பிறகுதான் முழுமையாகத்
தொகுக்கப்பட்ட அரபி மொழிபெயர்ப்பே வெளிவந்தது.  முழுக்கவும் கற்பனையான, எதார்த்தத்தின் நிழல் கூட
அண்டாத தொகுதியான அராபிய இரவுகளே இஸ்லாமியப் பெண்களைப் பற்றிய மேலைநாட்டினரின்
அபிப்பிராயத்துக்கு அடிப்படையாக இருந்தது என்பது ஒரு வரலாற்று சோகம்.   உதாரணமாக, ஆயிரத்தோரு
அராபிய இரவுகளில் வரும் ’போர்ட்டரும் மூன்று பெண்களும்’ என்ற கதையில் ஒரு பெண் கடைத்தெருவுக்குப்
போய் பல பொருட்களை வாங்குகிறாள்.  அதை ஒரு போர்ட்டர் கூடையில் தூக்கி வருகிறான்.  வட்டை

அடைந்ததும் சாமானை வைத்து விட்டுக் கூலியை வாங்கிக் கொண்டு திரும்புவதில்லை.  அங்கேயே
நிற்கிறான்.  உள்ளே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்.  அவர்களில் ஒருத்தியின் உடல் அழகை
வர்ணிக்கிறான்.  நாபியில் தேனை விட்டுச் சுவைக்கலாமா என்று யோசிக்கிறான்.  ரொம்ப காலத்துக்கு
முன்னால் படித்தது.  தேனா, ஆலிவ் எண்ணெயா என்று ஞாபகம் இல்லை.  அவர்கள் அவனை உள்ளே
அழைக்கிறார்கள்.  எல்லோரும் சேர்ந்து மது அருந்துகிறார்கள்.  ஆடல் பாடல் கொண்டாட்டம்.  பெண்களின்
குரல் தெரு முழுதும் கேட்கிறது.  (ஒரு பெண்ணின் குரல் அவள் வட்டை
ீ விட்டு வெளியே கேட்டால் அந்த வடு

சபிக்கப்பட்டதாகும் என நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார்.)  வட்டுக்குள்
ீ என்ன இவ்வளவு சத்தம் என்று
கேட்டுக் கொண்டே காலிஃப் வருகிறார்.  அவரோடு இன்னும் இரண்டு பேர் கூடவே வருகிறார்கள்.  அதற்குப்
பிறகு அந்த ஊரில் இரவு தங்க இடம் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு மூன்று வெளியூர்
வணிகர்கள் வருகிறார்கள். அவர்கள் மூன்று பேருக்குமே ஒரு கண் இல்லை.   மொத்தம் ஏழு ஆண்கள்.  மூன்று
பெண்கள்.  எல்லோரும் குடித்துக் கும்மாளம் போடுகிறார்கள். பிறகு ஒவ்வொருவராகத் தங்கள் கதையைச்
சொல்கிறார்கள்.  இப்படிப் போகிறது அந்தக் கதை.  இதற்கும் அரபி வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும்
இல்லை.  உண்மையில் சிருங்காரத்தைக் கொண்டாடிய நாடு இந்தியாதான்.  ஆகவே ஆயிரத்தோரு அராபிய
இரவுகளின் மூலம் சம்ஸ்கிருதமாகவே இருக்க வேண்டும் என்பது இப்போதைய அறிஞர்களின் முடிவு. 
ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அரபிப் பெண்களின் ஹேரம் வாழ்க்கை ஆயிரத்தோரு இரவுகளில்
சொல்லப்படும் கட்டுக்கதைகளில் வர்ணிக்கப்படுவதைப் போல் இருந்தது என்றுதான் நம்பிக்
கொண்டிருந்தார்கள் ஐரோப்பியர்கள்.  உண்மையில் ஹேரத்தின் உள்ளே ஒரு பெண்ணின் சகோதரன் கூட
சென்று விட முடியாது என்று எழுதுகிறார் க்ரேஸ் எலிசான்.   மேலும், ”ஐரோப்பாவில் ஒரு அறிஞர்களின்
கூட்டத்தில் ’நான் சில காலம் ஹேரத்தில் தங்கியிருக்கிறேன்’ என்று சொன்ன போது அவர்களில் சிலர்
ஒருவருக்கொருவர் கண் அடித்துச் சிரித்துக் கொண்டனர்” என்கிறார் எலிசான்.  ஆனால் சில தருணங்களில்
ஐரோப்பிய சமூகத்தை விட அராபிய சமூகம் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.  
(துருக்கி, ஈராக், எகிப்து போன்ற நாடுகளே எலிசானின் அராபிய சமூகம்; இன்றைய வளைகுடா நாடுகள் அல்ல.)
ஒருநாள் ஸேனபின் இல்லத்துக்கு மாலையில் போகிறார் எலிசான்.  மதிய உணவுக்கே வந்திருக்கலாமே
என்கிறார் ஸேனப்.  
”நான் அழைக்கப்படவில்லையே?”
”அழைக்காமல் வருவதுதானே நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் கௌரவம்?  நீங்கள் வருவது எங்களுக்கு
எவ்வளவு பெரிய பரிசு தெரியுமா? அதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் என்பது எத்தனை
சந்தோஷமான விஷயம்!”
இப்படியும் ஒரு கலாச்சாரமா என வியக்கிறார் எலிசான்.
கீ ழைத் தேச வாழ்க்கை பற்றி ஸேனபின் கடிதங்கள் அற்புதமாக விளக்குகின்றன.  அவற்றில் சில தருணங்கள்:
”எங்கள் நாட்டில் தோழிகளுக்கு இடையேயான அதிக பட்ச நட்பின் வெளிப்பாடு என்பது மௌனமே.  மிக
நெருங்கிய தோழிகளாக இருந்தால் மணிக்கணக்கில் நாங்கள் பேசிக் கொள்ளாமலேயே இருப்போம்.”
இப்படிச் சொல்லும் ஸேனப் துருக்கியின் ஆட்டமன் சுல்தானாக இருந்த ஹமீ த் பற்றி மிகக் கடுமையாகப்
பேசுகிறார்.  ”நாங்கள் பெல்கிரேடில் இருக்கும் போது நள்ளிரவில் எங்களைக் கைது செய்ய ஏற்பாடு செய்தார்
சுல்தான் ஹமீ த்.  ஆனால் அது நடக்கவில்லை.  பெல்கிரேடையும் துருக்கி என்று நினைத்து விட்டார் போலும்! 
என் தங்கை 18 வயது நிரம்பாதவள் என்றும் அவளையும் என்னையும் சில ‘கெட்ட’ காரணங்களுக்காக ஒரு
முதிய ஐரோப்பிய மாது கடத்திச் சென்றிருக்கிறாள் என்றும் அவர் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். 
அவரால் பெண்களின் சுதந்திரம் பற்றிப் புரிந்து கொள்ள முடியாது.  அவர் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. 
இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எங்களைப் பற்றி ஐரோப்பியப் பத்திரிகைகள் வெகுவாகப்
பாராட்டி எழுதுகின்றன.  அந்தப் பத்திரிகைகளைத் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ரகசியமாக வாங்கிப்
படிக்கிறார்கள் கான்ஸ்டாண்டிநோப்பிள் மக்கள்.  அவர்களைப் பொறுத்த வரை சுல்தானின் அடக்குமுறை
ஆட்சியில் இரண்டு பெண்கள் அரண்மனையை விட்டுத் தப்பி ஐரோப்பா செல்வதெல்லாம் நினைத்துப் பார்க்க
முடியாத விஷயம்.  
சுல்தான் எங்களை வெறுக்கக் காரணமாக இருந்த சம்பவம் எங்களைப் பொறுத்தவரை மிகச் சாதாரணமானது. 
அரண்மனையில் வெட்டியாக உட்கார்ந்து உட்கார்ந்து எங்களுக்கு சலித்து விட்டது.  எனவே அரண்மனைக்கு
வெளியே போய் ஏழை எளிய மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய நினைத்தோம்.  சுல்தான்
எங்கள் மீ து பகைமை பாராட்ட இந்த ஒரு விஷயமே காரணமாகி விட்டது.  பகைமை மட்டும் அல்ல; நாங்கள்
அரசாங்கத்துக்கே எதிரான ’ஆபத்தான பெண்களாக’ கருதப்பட்டு விட்டோம்.  எங்களுடைய ஒவ்வொரு
நடவடிக்கையையும் கண்காணிக்க ஏகப்பட்ட உளவாளிகளை அனுப்பி வைத்தார் சுல்தான். 
அவர்களையெல்லாம் ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பியதை நினைத்தால் இப்போதும் என் தேகம்
நடுங்குகிறது…”

இஸ்தாம்பூலில் உள்ள தொல்மாபாஹ்ஷி அரண்மனையின் ஹேரத்தின் உள்ளே நின்று கொண்டிருந்த போது


ஸேனாப் ஹனூமையும் அவருடைய கடிதங்களையும்தான் நினைத்துக் கொண்டேன்.  அரண்மனை என்பது
வெறும் சலவைக்கல் தூண்களா?  இந்தத் தூண்களையும் பிரம்மாண்டமான விதானங்களையும் பார்ப்பதற்கா
இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தோம்?  
ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணர்த்
ீ துளிகளையும் சிரிப்பின்
அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு
நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக் கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக்
காத்துக் கொண்டிருக்கின்றன.  
அந்தத் தூண்களும் விதானங்களும் ஓய்வறைகளும் சொன்ன கதைகளைத்தான் இங்கே நான் எழுதிக்
கொண்டிருக்கிறேன்.     

=====

நிலவு தேயாத தேசம் -9 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   18 , 2015  02:46:50 IST
Latest Novels at Attractive Price

பாரிஸிலிருந்து 411 கி.மீ . தூரத்தில் உள்ள ஒரதூர் சூர் க்ளான் (Oradour-sur-Glane) என்ற
ஊரில்.  ஆண்டு 2001.

 
பாரிஸின் மிகப் பெரிய கல்லறைத் தோட்டத்தின் பெயர் பியர் லாச்செஸ் (Pere Lachaise).      பல்ஸாக், ஆஸ்கார்
ஒயில்ட் போன்ற இலக்கிய மேதைகள், சோப்பின் போன்ற இசைக்கலைஞர்களின் கல்லறை இங்கேதான்
உள்ளன.  1906 இலிருந்து 1912 வரை மேற்கு ஐரோப்பாவில் பல இடங்களைச் சுற்றிய ஸேனாப்,  தன்
அனுபவங்களையெல்லாம் கடிதங்களாக எழுதினார்.  அந்தக் கடிதங்களிலிருந்து நாம் மூன்று முக்கியமான
விஷயங்களை அறிந்து கொள்கிறோம்.  ஒன்று, மேற்கு ஐரோப்பிய நிலம்.  இரண்டு, கீ ழைத் தேச
கலாச்சாரத்துக்கும் மேலைக் கலாச்சாரத்துக்கும் உள்ள வித்தியாசம்.  மூன்று - இதுதான் மிக முக்கியமானது –
இஸ்லாம் பற்றியும் இஸ்லாமியப் பெண்கள் பற்றியும் மேலைநாட்டினரின் கருத்துக்கள் யாவும் தவறானவை;
கற்பிதமானவை.  இதனால்தான் ஸேனாபின் கடிதங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. 
அவருடைய கடிதங்களை வைத்துக் கொண்டு மேற்கு ஐரோப்பாவின் பல நூறு கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்
நாம் செல்லலாம் என்று தோன்றுகிறது.  உதாரணமாக, Hendaye என்ற நகரைப் பற்றிச் சொல்கிறார் ஸேனாப். 
அது ஃப்ரான்ஸின் தென்மேற்குக் கோடியில் பிஸ்கே விரிகுடாவில் ஃப்ரான்ஸ் – ஸ்பெயின் எல்லையில் உள்ள
ஒரு துறைமுக நகரம்.  நாம் ஃப்ரான்ஸ் சென்றால் பாரிஸ் போகாமல் ஹோந்தாயி சென்றால் அது ஒரு தனி
அனுபவமாக இருக்கும்.  
ஏழு ஆண்டு ஐரோப்பிய வாழ்வில் ஸேனாபின் ஐரோப்பா பற்றிய கனவுகள் யாவும் கலைந்து விட்டன.  
”ஐரோப்பியப் பெண்களை விட நாங்கள் மிகவும் முன்னேற்றமடைந்திருக்கிறோம்.  ஆனால் இதை ஐரோப்பியப்
பெண்கள் அறிய மாட்டார்கள்.  அவர்கள் எங்களை இன்னும் எழுதப் படிக்கத் தெரியாத மூடப் பெண்களாகவே
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நாங்களோ இப்போது ஐரோப்பிய இலக்கியத்தைப் படித்துக்
கொண்டிருக்கிறோம்.  எங்களிடம் இருந்த பலதார மணமெல்லாம் எப்போதோ ஒழிந்து விட்டது.  அதன்
விளைவாக ஹேரமும் இப்பொது இல்லை.  எனக்குத் தெரிந்து நான்கோ ஐந்தோதான்
கான்ஸ்டாண்டிநோப்பிளில் இப்போது இருக்கின்றன.  எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமான நாற்பது வயதான
பாஷா ஒருவருக்குப் பல அடிமை-மனைவிகள் உண்டு.  அதனால் அவரது அரண்மனையில் ஹேரம் இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த அடிமை-மனைவிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.   என்றாலும்
அவருடைய ஹேரம் ஒரு விதிவிலக்கு தான்.  பாஷாவின் மனைவி என் அம்மாவின் தோழி என்பதால் அடிக்கடி
அவரைப் பார்க்க அம்மாவோடு நானும் போவேன்.  அற்புதமான பெண்மணி அவர்.  பேரழகியும் கூட.  15 வயதில்
அவருக்கு ஒரு மகன் இருந்தான்.  ஆனாலும் அந்தப் பெண்மணி பாஷாவின் அடிமை-மனைவிகளுக்குப் பிறந்த
மற்ற 14 குழந்தைகளையும் தன்னுடைய சொந்தக் குழந்தைகளைப் போலவே வளர்த்து வந்தார்.  என்
குழந்தைகள் என்றுதான் சொல்வார்.  ஒருபோதும் பிரித்துப் பேசியதே இல்லை.  
அந்தப் பெண்மணியை பாஷா கண்டு கொள்வதே இல்லை.  இதெல்லாம் என் தலைவிதி என்றே சொல்லிக்
கொள்வார் அந்தப் பெண்.  அதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை.
நூற்றாண்டு நூற்றாண்டுகளாக எங்கள் தாய்மார்களும் பாட்டிமார்களும் இந்தத் தலைவிதியைச் சுமந்து
கொண்டிருந்தார்கள்.  அநீதியையும் அநியாயத்தையும் கொடுமையையும் தவிர வேறு என்ன இருக்கிறது அந்த
வாழ்க்கையில்?  எனவே அந்தத் தலைவிதியை நானும் என் தங்கையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று
முடிவு செய்தோம்.  எங்கள் மூதாதையர் இதை அமைதியாகப் பொறுத்துக் கொண்டார்கள்.  பொறுமையும்
கலாச்சாரமும் ஒரே பல்லக்கில் பயணம் செய்ய முடியாது.  துருக்கி அழிந்து போனதற்குக் காரணமே அந்தப்
பொறுமைதான், அந்த சகிப்புத்தன்மைதான்.    அந்தப் பொறுமை மட்டும் இல்லாதிருந்தால் இத்தனை
வேதனையும் அநீதியும் இருந்திருக்காது.  உங்களுக்குத் தெரியுமா, எங்கள் வட்டுக்கு
ீ எந்த விருந்தினர்
வந்தாலும் அவர்களின் பெயர்ப் பட்டியலையும் அவர்களைப் பற்றிய விபரங்களையும் எங்கள் தாயார்
சுல்தானுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.  உடனே சுல்தான் அந்தச் சந்திப்புக்குக் காரணம் என்ன என்று
விசாரிப்பார்.  ஏன் இத்தனை பேரைச் சந்திக்கிறீர்கள் என்பார்.  உணவு விடுதிகளில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து
பேசிக் கொண்டிருக்கக் கூடாது.  பேசினால் தகவல் சுல்தானுக்குப் போய் விடும்.  அதனால் ஆண்கள் வெளியே
போகாமல் வட்டிலேயே
ீ தங்க ஆரம்பித்தனர்.  உங்கள் வட்டை
ீ இரவும் பகலும் உளவாளிகள் சுற்றிச் சுற்றி வந்து
கொண்டிருக்கும் அனுபவத்தையும்,  உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரே ஒரு ஆளின்
தயவில்தான் இருக்கிறது என்பதையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?  சுல்தானின் வேலை என்பது
தன் குடிமக்களைக் கண்காணிப்பதும் தண்டிப்பதும்தான்.  விசாரணையெல்லாம் கிடையாது.  சுல்தானின்
மனநிலை அந்த நேரத்தில் எப்படி இருக்கிறதோ அதற்குத் தகுந்த தண்டனை கிடைக்கும்.  விஷம்; அல்லது,
எங்கேயாவது அரேபியப் பாலைவனத்துக்கு நாடு கடத்தப்படுவார். இத்தனைக்கும் குற்றவாளிக்குத் தன் குற்றம்
என்ன என்றே தெரிந்திருக்காது.  
(ஆட்டமன் அரசின் வழ்ச்சிக்கு
ீ இந்த அடக்குமுறை ஆட்சிதான் அடிப்படையான காரணமாக அமைந்தது. 
இந்தியாவின் எமர்ஜென்ஸி காலத்தை நினைவு கூரவும்.)

 (துருக்கியில் எல்லா ஊர்களுமே மேலேயிருந்து பார்க்கும் போது இது போன்ற தோற்றத்தையே தருகின்றன.)

எனக்குத் தெரிந்த பல குடும்பங்களே இப்படிக் காணாமல் போயிருக்கின்றன.  என் வட்டுக்கு


ீ அடுத்த வட்டில்

ஒரு குடும்பம் – அம்மா, அப்பா, மகள், மகன்.  அவர் பெயர் பே.  கவிஞர்.  ஒருநாள் காலையில் பார்த்தால்
வட்டில்
ீ ஆட்களே இல்லை.  என்னுடைய அலியை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டேன்.  அவர்களைப்
பற்றி விசாரித்தால் கூட நம்மையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்றான் அவன்.   பிறகுதான்
என்னுடைய வெளிநாட்டு நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன், ஒருநாள் இரவு கவிஞரின் வட்டில்

நடந்த சோதனையில் பல கவிதை ஏடுகள் அகப்பட்டிருக்கின்றன.  அவர் கவிதை எழுதுவதை சுல்தான் தடை
செய்திருந்தார்.  அந்தத் தடையையும் மீ றிக் கவிதை எழுதியிருந்தார் பே.  விளைவு, பத்தாண்டுகள் தனிமைச்
சிறையில் அடைக்கப்பட்டார்.  ஆட்டமன் சுல்தானின் அரசு எப்படி இருந்தது என்பதற்கு இது ஒரு சிறிய
உதாரணம்.  
 

   
எதிர்காலம் பற்றி எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.  என்ன வாழ்க்கை இது?     இதை விட மரணம்
பரவாயில்லை என்று தோன்றியது.   எப்போதும் கைத்துப்பாக்கியை வைத்துக் கொள்ள ஆரம்பித்தோம். 
எந்நேரமும் எங்களை சுட்டுக் கொள்ளத் தயாராக இருந்தோம்.  வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லாத இந்த
ஊரில் வாழ்க்கையைப் பணயம் வைப்பதில் என்ன தவறு?  அதிர்ஷ்டம் இருந்தால் ஐரோப்பா சென்று விடலாம். 
மாட்டினால் சுட்டுக் கொண்டு சாகலாம்.  பல சமயங்களில், குடிக்கின்ற காஃபியில் ஒருதுளி விஷத்தைக் கலந்து
குடித்து விடலாமா என்று கூடத் தோன்றும்.  மரணம் இந்த வாழ்வை விட மோசமாக இருக்காது அல்லவா?”
துருக்கி வாழ்க்கையை இப்படியெல்லாம் வருணிக்கும் ஸேனாபுக்கு ஐரோப்பா மிகுந்த ஏமாற்றத்தையே
அளித்தது.  பல நூறு சம்பவங்களைச் சொல்கிறார்.
“பாரிஸில் ஒரு பெண் என்னிடம்  உங்கள் தந்தைக்கு எத்தனை மனைவிகள் என்று கேட்டார்.   உங்கள்
கணவருக்கு எத்தனையோ அத்தனை என்று சொன்னேன்.  எவ்வளவு முட்டாள்தனமான
கேள்விகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது தெரியுமா?  ”துருக்கியிலிருந்து நீங்கள் ஓடி வந்ததற்கு
என்ன காரணம்?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். விட்டால், ’நான் உங்களை கான்ஸ்டாண்டிநோப்பிளில்
பார்த்த போது ஒரு நீலநிறை ஆடை அணிந்திருந்தீர்களே, அதை ஏன் இன்று அணியவில்லை?’ என்று கூடக்
கேட்பார்கள் போலிருக்கிறது.  
”உங்கள் பெற்றோரைப் பிரிந்து வந்தது வருத்தமாக இருக்கிறதா?”  நாங்கள் துருக்கியர் என்பதால் எங்கள்
இதயம் கல்லாக இருக்கும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?  தந்தை சொன்னார், ”எங்களைப் பார்க்க
சீக்கிரமே வந்து விடுங்கள். அடுத்த வாரமே கூட எதிர்பார்க்கிறேன்.”   அவர் அப்படிச் சொன்ன போது ஓடிப் போய்
அவரது தோள்களில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது.   ஆனால் ஆண்டாண்டுக் காலமாக இந்த
சமூகத்தில் நாங்கள் அனுபவித்து வரும் சித்ரவதை ஞாபகம் வந்தது.  கண்ண ீரை அடக்கிக் கொண்டு  முயற்சி
செய்கிறேன் என்று மட்டுமே சொன்னேன்.”  
***
பாரிஸுக்கு அருகில் உள்ள Fontainebleau என்ற ஊரிலிருந்து 1906-ஆம் ஆண்டு இப்படி எழுதுகிறார் ஸேனாப்:
ஃப்ரான்ஸ் பற்றிய என்னுடைய முதல் மனப்பதிவை எழுதச் சொல்லியிருக்கிறீர்கள்.  என்னவென்று
சொல்வது?  ஃப்ரான்ஸ் பற்றி எழுதுவதை விட நான் உணர்ந்த சுதந்திரமான மனநிலை பற்றி நிறைய
எழுதலாம்.  ஆனால் இந்த நகரில் சில மணி நேரங்கள் தங்குவதற்குக் கூட எங்களுக்கு அறைகள்
கிடைக்கவில்லை.  கிறிஸ்தவர்களின் கருணை எங்கு போயிற்றோ தெரியவில்லை.  நான் உடல்நலமின்றி
இருந்தேன்.  அறை கிடைக்காததற்கு அதுதான் காரணம்.  அறையிலேயே செத்து விடுவேன் என்று பயந்தார்கள். 
செத்தால் என்ன?  ஓ… அவர்களுக்கு அது நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயம்.  சில நாட்களுக்கு அந்த
ஓட்டல் பக்கமே யாரும் வர மாட்டார்கள்.  கிறிஸ்தவர்கள் ஏன் இப்படி மரணத்துக்கு அஞ்சுகிறார்கள்? 
மரணத்தைக் கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை.  பௌத்தர்களைப் போலவே மரணத்தையும் வாழ்வின் ஒரு
அங்கமாகவே கருதுகிறோம்.  இறந்தவர்கள் குறித்து நாங்கள் அழுது புலம்புவதில்லை.  
’சாகும் நிலையில்’ உள்ள ஒரு பெண்ணுக்கு இடம் தருவதற்கு ஃப்ரெஞ்சுக்காரர்கள் தயாராக இல்லை.  இப்படியே
ரோட்டில் கிடந்து சாக வேண்டியதுதானா?  அப்போதுதான் எங்கள் நண்பர்கள் கொடுத்திருந்த ஒரு விலாசம்
ஞாபகம் வந்தது.  அவர் ஒரு மருத்துவர்.   அவரிடம் போய் விடலாம்.  அவர் எங்களை மறுதலிக்க முடியாது. 
உண்மையில் உடல்நலம் குன்றியிருப்பதே அவரிடம் செல்வதற்கு ஒரு தகுதியாகி விட்டது அல்லவா?  
ஃப்ரான்ஸில் இறங்கியதும் என் அனுபவம் மோசமாகவே இருந்தாலும் நான் அனுபவித்த சுதந்திரமான
உணர்வை எப்படிச் சொல்லுவேன்? கான்ஸ்டாண்ட்டிநோப்பிளில் என் அறையிலிருந்த இரும்பு ஜன்னல்
கம்பிகள் இங்கே இல்லை.  எனக்கும் வானத்துக்கும் இடையே, எனக்கும் ஆரஞ்சு மரங்களுக்கும் இடையே,
எனக்கும் மலைகளுக்கும் இடையே, எனக்கும் சைப்ரஸ் மற்றும் ஆலிவ் மரங்களுக்கும் இடையே எந்தத்
தடைகளும் இல்லை.  
எங்கள் வாழ்விலேயெ முதல்முறையாக இரும்புக் கம்பிகளும் முகத்திரையும் குறுக்கிடாமல் வானவெளியைப்
பார்க்கிறோம்.  கம்பிகள் இல்லாத ஜன்னல் திறந்தே இருக்கிறது…   
***
வெனிஸின் புகழைப் பலரும் எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் நான் பிராமணர்கள் தங்கள் கடவுள்களை
அமைதியாக துதி செய்வது போல துதி செய்ய விரும்புகிறேன்.  எனக்கு கான்ஸ்டாண்டிநோப்பிளின் அருமை
தெரியாதது போலவே வெனிஸ் மக்களுக்கு வெனிஸின் அருமை தெரியவில்லை.  அவர்கள் வெனிஸை விட
பகலில் சுற்றுலாவாசிகளின் கூச்சலும் இரவில் கொசுக்களின் சத்தமும் கொண்ட லிதோவையே
விரும்புகிறார்கள்.  (லிதோ வெனிஸுக்கு அருகில் 11 கி.மீ . நீளமுள்ள ஒரு தீவு.)
திருமண வாழ்க்கை சந்தோஷத்தைக் கொடுக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்தாலும் இந்த
ஃப்ரெஞ்ச் பெண்கள் திருமணம் செய்து கொள்வது பற்றியே பேசிப் பொழுதைக் கழிக்கிறார்கள்.  அதேபோல்
விவாகரத்து பற்றியும்.  தான் மட்டும் விதிவிலக்காக இருப்போம் என்றே ஒவ்வொரு பெண்ணும் நம்புகிறாள். 
துருக்கியப் பெண்களுக்குத் திருமணத்தின் மேல் இத்தனை நம்பிக்கை கிடையாது.   ரிச்சர்ட் ஸ்ட்ராஸின்
சலோமி பற்றியும் இன்னும் இசை பற்றி எத்தனையோ விஷயங்கள் பற்றியும் ஃப்ரான்ஸில் யாரிடமாவது
பேசலாம் என்று நினைத்திருந்தேன்.  நானே ஒரு துருக்கிய ஃபிலிஸ்டைன்.  ஆனால் பாரிஸ் பெண்களோ
என்னை விட ஃபிலிஸ்டைனாக இருந்தார்கள்.   

***
டிசம்பர் 1906-இல் ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள Territet என்ற ஊரிலிருந்து எழுதுகிறார் ஸேனாப்.  லெமான்
ஏரியில் அமைந்துள்ள அந்த ஊர் பூலோக சொர்க்கம் என்று சொல்லத் தகுந்தது.  
”என் முன்னே பரந்து விரிந்திருக்கும் லெமான் ஏரி எனக்கு பாஸ்ஃபரஸை நினைவூட்டுகிறது.  பாஸ்ஃபரஸின்
எதிர்க்கரையில் தெரியும் ஸ்தூபிகளும் மினாராக்களும் எங்கே?  
பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக அதன் கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒருமுறை என்
தோழி சொன்னாள்.  பாஸ்ஃபரஸில் கல் எறியாதே.  அதற்கு வலிக்கும்.  இந்த நேரத்தில்தானே மோதினார்
(Muezzin) பாங்கு சொல்லி எல்லோரையும் பிரார்த்தனைக்கு அழைப்பார்?  
இந்த மாலை நேரத்தில் மலையடிவாரத்தில் வானளாவிய மரங்களுக்கிடையே தனியாக நடந்து
கொண்டிருக்கிறேன்.  சூரியனின் சிவந்த அந்திமக் கிரணங்கள் அடர்த்தியான மரங்களுக்கு இடையே வெளியேற
வழி தேடிக் கொண்டிருக்கின்றன.  துருக்கியில் இந்த நேரத்தில் இப்படி ஒரு பெண் தனியாக நடந்து செல்வதைக்
கற்பனை செய்து பார்க்க முடியுமா?  
இங்கே ஸ்விட்ஸர்லாந்தில் கூட என்னுடைய கடிதங்கள் பிரித்துப் படிக்கப்பட்ட பிறகே உங்களுக்குக்
கிடைக்கும்.  ஸ்விட்ஸர்லாந்தில் இருந்து கொண்டு சுல்தானுக்கு எதிராக நான் ’பயங்கரமான’ ’புரட்சிகர’
நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அவர் நினைக்கக் கூடும்.  இங்கே உள்ள மனிதர்கள் இந்தக்
காற்றை சுதந்திரமாக சுவாசித்துக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.  எந்த அரசாங்கமும் அவர்களுடைய
நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கவில்லை.  ஏன் நான் ஒரு ஐரோப்பிய தேசத்தில் பிறக்காமல்
துருக்கியில் பிறந்தேன்?
***
1906-இல் இப்படி எழுதிய ஸேனாப் 1912-இல் ”என் கனவு முடிந்து விட்டது.  கனவுக்கும் எதார்த்தத்துக்கும் அதிக
தூரம் இருக்கிறது. ஐரோப்பா ஒரு கானல் நீர்.  நான் துருக்கிக்கே திரும்புகிறேன்” என்று எழுதி விட்டு
கான்ஸ்டாண்டிநோப்பிள் திரும்புகிறார்.  முதலாம் உலக யுத்தம் தொடங்கியிருந்த நேரம் அது.  இத்தாலியும்
துருக்கியும் எதிரிகள்.  ஸேனாப் இத்தாலியில் இருந்தார்…

=====

நிலவு தேயாத தேசம் -10 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   25 , 2015  02:47:24 IST
Latest Novels at Attractive Price

தீப்ஸ் நகரம் ப்ளேக் நோயினால் தாக்கப்படுகிறது.  அப்போது நிமித்திகர்கள் லாயியஸ் மன்னனைக்


கொன்றவனைக் கண்டு பிடித்துத் தண்டித்து விட்டால் பிளேக் நீங்கி விடும் என்கிறார்கள்.  கண் தெரியாத ஞானி
தெரேஸியாஸை அழைக்கிறான் மன்னன் ஈடிபஸ்.  என்னிடம் எதுவும் கேட்காதே என்று சொல்லும்
தெரேஸியாஸிடம் உண்மையைக் கூறுமாறு வேண்டுகிறான் ஈடிபஸ்.  தெரேஸியாஸ் சொல்கிறார். 
லாயியஸ் மன்னனைக் கொன்றது ஈடிபஸ்தான்.  ஈடிபஸ் மணம் செய்து கொண்டிருக்கும் லாயியஸின்
மனைவியான ஜகோஸ்தா தான் ஈடிபஸின் தாய்.

பூர்வகக்
ீ கதை என்னவென்றால், லாயியஸ் மன்னனுக்கும் அவன் மனைவி ஜகோஸ்தாவுக்கும் ஒரு ஆண்
மகவு பிறக்கிறது.  அந்தக் குழந்தை தந்தையைக் கொன்று விட்டுத் தன் தாயை மணந்து கொள்ளும் என்று
நிமித்திகர்கள் சொல்ல, குழந்தையைக் கொன்று விடுமாறு சொல்லி ஒரு சேவகனிடம் கொடுக்கிறான்
லாயியஸ்.  ஆனால் அந்தக் குழந்தை வேறொரு மன்னனிடம் போய்ச் சேர்ந்து விடுகிறது.  அவன் தான் ஈடிபஸ். 
இளைஞனாக வளர்ந்த பிறகு ஈடிபஸ் ஒரு சண்டையின் போது ஒருவனைக் கொன்று விடுகிறான்.  அவன் தான்
லாயியஸ் என்று பிறகுதான் தெரிகிறது.    மகனையே மணந்தேனா என்ற அதிர்ச்சியில் தூக்குப் போட்டுக்
கொள்கிறாள் ஜகோஸ்தா.  இப்படி ஒரு பாவத்தைச் செய்த நான் இனி இந்த உலகைப் பார்க்கக் கூடாது என்று
தன் கண்களைக் குருடாக்கிக் கொள்கிறான் ஈடிபஸ்.
கி.மு. 429-ஆம் ஆண்டு கிரேக்கத்தில் ஸோஃபாக்ளிஸ் எழுதிய இந்த நாடகத்தை கான்ஸ்டாண்டிநோப்பிள்
நகரில் தன் இளம் வயதில் பார்த்ததாக எழுதுகிறார் ஸேனாப்.  இது மட்டும் அல்ல; பல்வேறு ஃப்ரெஞ்ச்
நாடகங்களும் அந்நாளில் துருக்கியின் தலைநகரில் மேடையேறி இருக்கின்றன.

அவை பற்றியெல்லாம் விரிவாகத் தன் கடிதங்களில் எழுதும் ஸேனாப் அவற்றோடு ஒப்பிட்டால் ஃப்ரெஞ்ச்
நாடக மேடை மிகச் சாதாரணம் என்கிறார்.  

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்த காளைச் சண்டை பற்றியும் தன் வெறுப்பை எழுதுகிறார்.  ”ஒரு
மாட்டைக் கொல்வது கேளிக்கையா?  அந்த மாடு ஒரு மனிதனின் குடலை உருவிப் போடுவது கேளிக்கையா? 
இதையெல்லாம் நாகரீகமடைந்த சமூகம் என்று எப்படி நான் சொல்ல முடியும்?   ‘எவ்வளவு பிரமாதமான
நிகழ்ச்சி’ என்று வேறு ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள்!  ஆனால் என்னால் இந்தக்
காட்டுமிராண்டி நிகழ்ச்சியைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.”

ஒரு ஐரோப்பிய நாட்டின் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி ஸேனாபிடம் கேட்கிறார்: ”Have you anything
to declare?”   அதற்கு ஸேனாபின் பதில்: “Yes”, I hate your western ‘customs’ and my delight at being alive.”

1908-ஆம் ஆண்டு லண்டனுக்குச் செல்கிறார் ஸேனாப்.  லண்டன் போலீஸ்காரர்கள் துருக்கியைப் போல்


லஞ்சம் வாங்குவதில்லை என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.   துருக்கியில் அவருக்குப் போலீஸைப்
பார்த்தாலே அச்சமாக இருக்கும்.  லஞ்சமாக இல்லாவிட்டாலும் பக்ஷீஸாக (இனாம்) வாங்காமல் நகர
மாட்டார்கள்.

“மற்றபடி லண்டன் வாழ்க்கை மிகவும் சலிப்பூட்டுகிறது.  யாரும் யாருடனும் பேசிக் கொள்வதில்லை.  எங்கு
பார்த்தாலும் அமைதி.  அது ஒன்றும் ஆரோக்கியமான அமைதியாகத் தெரியவில்லை.  மயான அமைதி என்றே
சொல்ல வேண்டும்.  சராசரிகள் மட்டுமே இங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள்.  ஏனென்றால் அவர்களுக்கு
மட்டுமே நதியின் போக்கோடு நீச்சலடிக்கத் தெரிகிறது.

நேற்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு முக்கியமான இரவு விருந்துக்குச்


சென்றிருந்தேன்.   அங்கே ஒவ்வொருவரும் தங்கள் பேச்சை எழுதிக் கொண்டு வந்து பேசினார்கள். 
ஆச்சரியமாக இருந்தது.   ஆனால் அதை விட ஆச்சரியம் என்னவென்றால், இந்த தேசத்தையே மாற்றப்
போவதாக சபதம் எடுத்திருந்த பெண்கள் சிகரெட் குடிப்பதற்கு மற்றவர்களின் அனுமதியை எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.  துருக்கி எவ்வளவோ தேவலாம்.  நாங்கள் முகத்திரை அணிந்திருந்தாலும் நாங்கள்
புகைப்பதற்கு அங்கே யாருடைய அனுமதியும் தேவையில்லை.

ஒரு பெண், பெண்களின் வாக்குரிமை பற்றிப் பேசினார்.  உடனே என் பக்கத்தில் இருந்தவர் ”இவள் முதலில்
இன்று குளித்தாளா என்று தெரியவில்லையே, ஒரே நாற்றம் எடுக்கிறதே?” என்று கிண்டல் செய்தார். 
எப்பேர்ப்பட்ட போக்கிரிகள் பாருங்கள்.”

பிறகு அதிகார வர்க்கத்தின் போக்கு பற்றி பல பக்கங்கள் வர்ணிக்கிறார் ஸேனாப்.  எல்லாம் இன்றைய இந்தியா
போல் இருக்கின்றன.  மேலும் எழுதுகிறார்:

”இங்குள்ள தேவாலயங்களுக்குப் போனால் அதற்கும் ஆன்மீ கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை
ஒருவர் எளிதில் கண்டு கொள்ளலாம்.  கல்லூரி விரிவுரையாளரைப் போல் ஒரு பாதிரியார் விரிவுரை ஆற்றிக்
கொண்டிருக்கிறார்.  எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்பதாக பாவனை செய்து கொண்டிருந்தார்கள். 
திடீரென்று அவர் ஏ பாவிகளே ஏ பாவிகளே என்று கத்த ஆரம்பித்தார்.  அதுவரை பொம்மை போல் நின்று
கொண்டிருந்த அனைவரும் நடுக்கத்துடன் அவரைப் பார்த்தார்கள்.  ’ஏ பாவிகளே! ஏ பாவிகளே!’  

நாம் என்ன பாவம் செய்தோம் என்று அவர் இப்படி நம்மைப் பார்த்து பாவிகளே பாவிகளே என்று கூவுகிறார்? 
நாம் ஏன் நம்மைப் படைத்தவன் முன்னே நின்று நடுங்கிக் கொண்டிருக்க வேண்டும்?  ஏன் நம்மை நாமே பார்த்து
அவமானம் அடைய வேண்டும்?  ஏன் இந்தப் பொய்யான அடக்கம்?  ஏன் இந்த நிரந்தர பயம்?

பிறகு நான் தேவாலயத்திலிருந்து கிளம்பிய போது அங்கே வந்திருந்த ஒரு பெண்ணும் என்னோடு கிளம்பினார். 
இரண்டு பேரும் தெருவில் நடக்க ஆரம்பித்தோம்.  சிறிது நேரத்தில் நான் அவருடைய மதத்தைச் சேர்ந்தவள்
அல்ல என்ற விஷயம் தெரிந்தவுடன் அவருடைய தெய்வத்தின் மகிமைகளையும் அவருடைய மதம் வழங்கும்
அனுகூலங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டார்.  இயேசு கிறிஸ்து பற்றி எனக்குத் தெரியாததையா
அந்தப் பெண் சொல்லப் போகிறார்?  ஆனால் அந்தப் பெண்ணுக்கு முகம்மது பற்றி எதுவுமே
தெரிந்திருக்கவில்லை.

லண்டனில் உள்ள லேடீஸ் கிளப்!   என்ன சொல்ல?  இதை விட எங்களுடைய ஹேரமே தேவலாம் என்று
தோன்றுகிறது.  இந்தப் பெண்களா விடுதலை அடைந்தவர்கள்?  இன்னொரு முக்கியமான அதிர்ச்சி,
மேலைநாட்டினராகிய நீங்கள் எவ்வளவு வேகமாகத் திருமணம் செய்து கொள்கிறீர்களோ அதை விட வேகமாக
விவாகரத்தும் செய்து கொள்கிறீர்கள்.  அதிலும், ரத்து செய்து கொள்ளும் போது கணவனும் மனைவியும்
ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் குற்றச்சாட்டுகளைப் பார்க்கும் போது இது ஒரு நாகரீகமான
தேசம்தானா என்றே எனக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.   

”துருக்கி பற்றிய உங்கள் பயணக் கட்டுரையில் துருக்கியைச் சேர்ந்த ஒரு பெண் 120 ஆண்டுகளுக்கு முன்பு
ஐரோப்பிய நாடுகளைப் பற்றி எழுதிய பயணக் குறிப்புகளைச் சேர்க்க வேண்டியதன் அவசியம் என்ன?  இந்தப்
பயணக் குறிப்புகள் இணையத்திலேயே ஆங்கிலத்தில் கிடைக்கிறதே?” என்று கேட்டார் நண்பர் ஒருவர்.  நான்
துருக்கி சென்றது ஊர் சுற்றிப் பார்க்க மட்டும் அல்ல.  ஊர் சுற்றிப் பார்ப்பதும் – முக்கியமாக கலாட்டா
பாலத்தையும் அதை விட முக்கியமாக நீல மசூதியையும் பார்க்க வேண்டும் என்ற தீரா ஆசை கொண்டிருந்தேன்
– என் பயணத்துக்கான காரணங்களில் ஒன்று என்றாலும் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பாலமாக இருக்கும்
அந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதில்தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன்.  புத்த மதத்தைச் சேர்ந்த
ஒருவர் கயாவைப் பார்க்க எவ்வளவு ஆர்வம் கொண்டிருப்பாரோ அதே போன்றதுதான் துருக்கி பற்றிய
என்னுடைய ஆர்வமும்.  மேலும், கீ ழை நாடுகள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் மேலை நாட்டினரின்
அபிப்பிராயங்கள் யாவும் கற்பிதமானவை என்ற என்னுடைய கருத்துக்கு ஸேனாபின் பயணக் குறிப்புகள்
யாவும் ஆதாரமாக அமைந்திருக்கின்றன. அதனால்தான் அக்குறிப்புகளைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன். 
’இவையெல்லாம் இணையத்திலேயே கிடைக்கின்றன’ என்றால் உண்மைதான்.  இணையம் என்பது இதுவரை
நாம் பார்த்து வந்த நூலகங்களையெல்லாம் விட பெரிய, பிரம்மாண்டமான நூலகம்.  பல முக்கியமான
நூலகங்களெல்லாம் இணைய நூலகத்தில் இணைந்து விட்டன.  இதில் நமக்குத் தேவையான நூலை எளிதில்
எடுத்து விடலாம்.  ஆனால் ஸேனாப் என்ற பெயரைத் தெரிந்து கொள்ள நான் துருக்கிக்குத்தான் செல்ல
வேண்டியிருந்தது.   அந்தப் பெயரை இணையம் என் செவிகளில் வந்து ஓதாது.

இங்கிலாந்தைச் சேர்ந்த W.T. Stead (1849-1912) என்பவர் புலனாய்வுப் பத்திரிகைகளின் தந்தையாகக்


கருதப்படுபவர்.  இவர் ஸேனாபின் தந்தையின் நண்பர்.  ஸேனாபும் ஸ்டீடின் நூல்களைப் படித்திருக்கிறார். 
லண்டனில் இருந்த போது ஒருநாள் ஸேனாப் ஸ்டீடைப் பார்த்து வரலாம் என்று கிளம்புகிறார்.   ஸ்டீடுக்கு ஒரே
ஆச்சரியம்.  இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  பிறகு ஸேனாப் தான் தங்கியிருந்த லேடீஸ்
கிளப்புக்குக் கிளம்புகிறார்.  அப்போது ஸ்டீட் ”வேறு எதுவும் உங்களுக்கு நான் செய்ய வேண்டுமா?” என்று
கேட்கிறார்.

“இல்லையே…” என்று நட்பான குரலில் சொல்கிறார் ஸேனாப்.


”இல்லையா?  சும்மா வெறுமனே என்னைப் பார்ப்பதற்காகவா வந்தீர்கள்?”

“ஆமாம்.  சும்மா உங்களைப் பார்த்துப் பேசி விட்டுப் போகத்தான் வந்தேன்” என்கிறார் ஸேனாப் சிரித்துக்
கொண்டே.

“உங்களுக்கு ஒன்று தெரியுமா?  இப்படி ஒருவர் என்னைப் பார்த்துப் பேசுவதற்காக மட்டுமே வருவது என்
வாழ்க்கையில் இதுதான் முதல் முறை.”

பிறகு ஸ்டீட் தன் பயணங்களின் போது சேகரித்த ஒரு பொருளில் ”துருக்கியைச் சேர்ந்த என்னுடைய ஒரே ஒரு
தோழிக்கு…” என்று எழுதி அதில் தன் கையெழுத்தைப் போட்டு ஸேனாபிடம் கொடுக்கிறார்.

மேலைநாட்டினரின் வாழ்க்கை எந்த அளவுக்கு லௌகீ கம் சார்ந்ததாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த ஒரே
சம்பவம் போதும்.  சொந்தக் காரியம் இல்லாமல் நட்பு ரீதியாகத் தன்னைப் பார்க்க வந்த ஒரே நபர் ஸேனாப்
தான்; இப்படி ஒரு சம்பவம் தன் வாழ்வில் நடந்ததே இல்லை என்கிறார் ஸ்டீட்.  இன்றும் கூட
மேலைநாட்டினரின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கிறது.

வெனிஸுக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது ’பெண்களுக்கு மட்டும்’ என்று எழுதப்பட்ட பெட்டியில்
ஏறுகிறார் ஸேனாப்.  அவர் ஒன்றும் இந்த ‘ஹேரம்’ கம்பார்ட்மெண்ட்டில் பிரியப்பட்டு  ஏறவில்லை; மற்ற
பெட்டிகளில் இடம் கிடைக்கவில்லை என்பதால் ஏறினார்.  ஏறியதிலிருந்தே அந்தப் பெட்டியில் இருந்த மத்திய
வயது மதிக்கத்தக்க ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் ஸேனாபுடன் வளவள என்று பேசிக் கொண்டிருந்தார். 
திருமணம் ஆகாத பெண் என்று தெரிகிறது.  ஒரு சராசரி ஐரோப்பிய ஃபிலிஸ்டைன்.  அவ்வளவுதான்.  ரயில்
வெனிஸை நெருங்கிக் கொண்டிருந்த போது அந்தப் பெட்டிக்குள் நுழைந்த இரண்டு இத்தாலிய அதிகாரிகள்
மிலனிலிருந்து தாங்கள் நின்று கொண்டே வருவதாகவும் வெனிஸில் இறங்கும் வரை கால் மணி நேரம் மட்டும்
அமர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்கிறார்கள்.  உடனே அந்த ஆங்கிலேய
மாது மிக மோசமாகத் திட்ட ஆரம்பித்து விடுகிறார்.  அதோடு மட்டும் இல்லாமல் தான் சொல்வதை அந்த
இத்தாலிய அதிகாரிகளிடம் ஸேனாப் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் என்றும் சொல்கிறார்.  ”இவ்வளவு
இரக்கமற்ற வார்த்தைகளையெல்லாம் நான் மொழிபெயர்க்க மாட்டேன்” என்கிறார் ஸேனாப்.

அதிகாரிகளில் ஒருவர் ஸேனாபைப் பார்த்து “நீங்களும் ஆங்கிலேயர் தான் என்று நினைக்கிறேன்.  தயவுசெய்து
அந்தப் பெண்மணியிடம் சொல்லுங்கள்.  வெறும் கால் மணி நேரம்தான்.  அதற்குள் வெனிஸ் வந்து விடும். 
எங்களால் அந்தப் பெண்மணிக்கு எந்த ஆபத்தும் நேராது” என்கிறார்.  அதற்குள்ளாகவே அந்தப் பெண் எழுந்து
போய் அபாயச் சங்கிலி இருக்கிறதா என்று தேடுகிறார்.  பிறகு ரயில்வே அதிகாரி யாராவது இருக்கிறார்களா
என்று அங்குமிங்கும் போய்த் தேடுகிறார்.  அதற்குள் வெனிஸ் வந்து விடுகிறது.  அதிகாரிகள் “கால் மணி நேரம்
ஓய்வு எடுத்து விட்டோம்.  அந்தப் பெண்மணியிடம் எங்கள் நன்றியைத் தெரிவித்து விடுங்கள்” என்று
ஸேனாபிடம் சொல்லி விட்டு இறங்குகிறார்கள்.

***

Strabo என்பவர் ஒரு கிரேக்கத் தத்துவ ஞானி.  ஆனால் தத்துவத்தை விடவும் அவர் வரலாறு மற்றும்
நிலவியலில்தான் அதிகம் கவனம் செலுத்தினார்.  ரோமாபுரிப் பேரரசன் அகஸ்டஸ் காலத்தில் வாழ்ந்தவர். 
பிறப்பு கி.மு. 63.  இறப்பு கி.பி. 24.  அவர் Geographika என்ற தலைப்பில் 12 தொகுதிகளாலான புத்தகம் ஒன்றை
எழுதினார்.  அந்த அரிய புத்தகமும் இப்போது இணையத்தில் பிடிஎஃப் வடிவத்தில் கிடைக்கிறது.  அதில் அவர்
கப்படோச்சியா (Cappadocia) பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அவர் காலத்தில் கப்படோச்சியா இன்னும்
பெரிதாக விரிந்திருந்தது.  நூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள மலைகள் 
எரிமலைகளாக இருந்தன.  அதன் வெடிப்புகளே (லாவா) இப்போது காளான் குன்றுகளாக வடிவம் எடுத்துள்ளன.

     
    
 
 

 
மேலே உள்ள புகைப்படங்கள் நானும் என் பயணக்குழுவினரும் எடுத்தவை.  கீ ழே உள்ளது இணையத்தில்
கிடைக்கிறது. 

    
கைஸேரி என்ற ஒரு பெரிய மாவட்டமே மேலே கண்ட குன்றுகளாக நிரம்பியுள்ளது.  ஒரு கோடி இருக்கலாம்;
பத்து கோடி இருக்கலாம்.  எனக்கு சரியாகத் தெரியவில்லை.

மேலே ஒரு புகைப்படத்தில் வடு


ீ போல் தெரிகிறது அல்லவா?  எரிமலைக் குழம்பு லட்சக் கணக்கில் கோடிக்
கணக்கில் காளான்களைப் போல் வடிந்து விட்டன.   மனிதர்கள் அதையெல்லாம் குகை வடுகளாக
ீ மாற்றி
விட்டார்கள்.  கைஸேரியில் அப்படிப்பட்ட ஒரு குகை வட்டில்தான்
ீ இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். 
குகையின் உள்ளேயே மேல் அடுக்குக்குச் செல்ல படிக்கட்டுகளை வெட்டிக் குடைந்திருந்தார்கள்.  சில
இடங்களில் தவழ்ந்துதான் ஏற வேண்டியிருந்தது.  அறையும் அந்தக் காலத்து குகை மனிதன் வாழ்ந்த குகை
தான்.  அதிலேயே வெஸ்டர்ன் டாய்லட் போன்ற வசதிகளை வைத்திருக்கிறார்கள்.  நின்றால் மேலே தளம்
இடிக்கும்.  நூறு குகைகளைக் கொண்டிருந்தது நான் தங்கியிருந்த ‘ஓட்டல்’.

ஒருநாள் சூடான காற்றினால் இயங்கும் பலூனில் ஏறினேன்.  ஹார்ட் அட்டாக் வந்து ஐந்து மாதங்களே
ஆகியிருந்தன.  ஒரு மாடி ஏறினாலே நெஞ்சு வலி.  ஆனாலும் கைஸேரியில் நான்கு மாடிகளை செங்குத்துப்
படிகளில் ஏறினாலும் நெஞ்சு வலி வரவில்லை.  இதில் எந்த சைக்காலஜியும் இல்லை.  நெஞ்சு நிறைய பயம்
இருந்தது.  துருக்கியில் இருந்த மிதமான குளிரும் அதற்கும் மேல் அந்த ஆரோக்கியமான உணவும்தான் நான்
சுறுசுறுப்பாக இயங்கியதற்கும் நெஞ்சு வலி வராமல் இருந்ததற்கும் காரணம் என்று நினைக்கிறேன்.

நாங்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த ஹாட் ஏர் பலூன் ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறினால் தரை
இறங்கும் போது பிரச்சினை ஆகி விட்டது.  பிறகு அதைச் செலுத்தியவர் – விமானி என்று சொல்லக் கூடாது;
வேறு என்ன வார்த்தையால் சொல்ல? – சமயோஜிதமாகச் செயல்பட்டு பலூனை ஒரு மரத்தில் இறக்கினார்.

=====

நிலவு தேயாத தேசம் – 11 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : புதன்கிழமை,   ஜனவரி   06 , 2016  03:47:45 IST
Latest Novels at Attractive Price

தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக ஆகாயத்திலேயே ப்ரேக் டௌன் ஆகி காற்றின் திசையில் சென்று
கொண்டிருந்த போது எனக்கு பழனியின் ரோப் கார் அறுந்து விழுந்து இறந்து போன மனிதர்களின் ஞாபகம்
வந்தது.  இந்தியாவில் நடக்கும் ராட்சசக் குடை ராட்டின விபத்துகளெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக மனதில்
ஓடியது.  உலகிலேயே மனித உயிருக்குக் கொஞ்சம் கூட மதிப்பில்லாத நாடு இந்தியா.  மற்ற நாடுகள் அப்படி
அல்ல.  அதிலும் துருக்கி, சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகம் மதிப்பளிக்கும் தேசம்.   பலூனின் தொழில்நுட்பக்
கோளாறு சரி செய்யப்படவில்லை என்றாலும் பலூன் சமயோஜிதமாக ஒரு மரத்தில் இறக்கப்பட்டு, உடனே
ஏணியும் வரவழைக்கப்பட்டது. ஏணியின் வழியே தரை இறங்குவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.  இந்த
விபத்தில் நான் கவனித்த ஒரு ஆச்சரியமான விஷயம், தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக பலூனின்
போக்கு அதன் நடத்துனரின் கையை விட்டுப் போனாலும் அதிலிருந்த இருபது பயணிகளும் பதற்றம்
கொள்ளவில்லை.  இந்தியாவாக இருந்தால் பயத்திலேயே ஒன்றிரண்டு பேர் கிழே குதித்திருப்பார்கள் என்று
நினைத்துக் கொண்டேன்.  
***
ஆதிகால மனித வரலாற்றை வரலாற்றாசிரியர்கள் Stone Age, Bronze Age, Iron Age என்று மூன்று பிரிவுகளாகப்
பிரிப்பதை நாம் அறிவோம்.  அதில் ப்ரான்ஸ் ஏஜைச் சேர்ந்த பல நூறு நகரங்களை இப்போது பூமிக்கடியில்
கண்டு பிடித்திருக்கிறார்கள்.  இங்கே கிடைத்திருக்கும் களிமண் வில்லைகளில் உள்ள எழுத்துக்களின் மூலம்
அந்தக் காலகட்டத்தைப் பற்றிய பல தகவல்களை – குறிப்பாக, வரி வசூல் விபரங்கள், திருமண ஒப்பந்தம்,
வர்த்தகம் - நாம் அறிந்து கொள்ள முடிகிறது.  
கப்படோச்சிய நாகரீகம் கி.மு. 25-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஸிரிய நாகரீகத்தின் தாக்கம்
கொண்டிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கணிக்கிறார்கள்.  

 
பூமிக்கு அடியில் உள்ள நகரங்களின் பாதைகள்.

கப்படோச்சியாவின் மூலம் கட்பட்டுகா என்ற பெர்ஷிய வார்த்தை.  இதன் பொருள் கம்பீரமான குதிரைகளின்
பூமி.  கி.மு. 525-இல் பெர்ஷியர்கள் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார்கள்.  பிறகு கி.மு. 332-இல் மாஸிடோனிய
அரசன் அலெக்ஸாண்டர் கப்படோச்சியாவைக் கைப்பற்றித் தனது பேரரசை நிறுவினான். ஆனால் அதை
கப்படோச்சிய மக்கள் விரும்பாததால் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. பின்னர் கி.பி. 17-ஆம் ஆண்டு திபேரியஸ்
என்ற ரோம அரசனால் ரோமப் பேரரசு ஏற்பட்டது.  அதிலிருந்துதான் கைஸேரி (Kayseri – Caesera) என்ற பெயரும்
புழக்கத்துக்கு வந்தது.  
ரோமப் பேரரசின் காரணமாக கப்படோச்சியா முழுவதும் கிறித்தவ ஓவியங்களாகவே காணப்படுகின்றன. 
குறிப்பாக Deesis என்ற காட்சி.  தீஸீஸ் என்பது பைஸாண்டியன் ஓவியக் கலையில் பிரார்த்தனையைக்
குறிக்கும் ஓவியம்.  அந்த ஓவியத்தில் கிறிஸ்துவின் கையில் ஒரு புத்தகம் இருக்கிறது.  வலது புறம் கன்னி
மேரியும் இடது புறம் யோவானும் கிறிஸ்துவை நோக்கியபடி நிற்கிறார்கள்.  கப்படோச்சியாவில் நூற்றுக்
கணக்கான தேவாலயங்கள் உள்ளன.  ஆனால் நான் இதுகாறும் பார்த்த தேவாலயங்களுக்கும் அங்கே
பார்த்தவைகளுக்கும் பெருத்த  வித்தியாசம் இருந்தது. காரணம், அவை நிலத்துக்கு அடியில்
அமைக்கப்பட்டிருந்தன.  இது போன்ற நிலவறை ஊர்களிலேயே மிகப் பழமையானது இயேசு பிறப்பதற்கு 800
ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குக் கீ ழே 200 அடியில் 18 அடுக்குகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட தெரிங்கூயூ
என்ற நிலவறை நகரம். தெரிங்கூயூ பற்றிய ஒரு ஆவணப் படத்தை இந்த இணைப்பில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=CxZKV8lCvzs
கப்படோச்சியா பகுதிக்கு முதலில் வந்த பயணி பால் லூகாஸ்.  ஆண்டு 1744.  ஃப்ரான்ஸின் பதினான்காம் லூயி
மன்னன் தான் அவரை துருக்கிக்கு அனுப்பினான்.  பிரமிட் போன்ற ஆயிரக் கணக்கான வடுகளைப்
ீ பார்த்து
பிரமித்த லூகாஸ், அந்தப் பிரமிட் வடுகளின்
ீ உள்ளே நுழைந்தார்.  ஒவ்வொரு வட்டிலும்
ீ காற்றும் வெளிச்சமும்
நுழைவதற்காக பல பெரிய சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  
நான் பார்த்த கப்படோச்சிய குகை வடுகளை
ீ எப்படியெல்லாம்  விவரிக்க முயன்றாலும் அதை நேரில்
பார்க்காமல் கற்பனை செய்வது கடினம் என்றே தோன்றுகிறது.  பிரமிட் வடுகளின்
ீ வெளிப்புறத்தில் சாளரங்கள்
இருந்தாலும் உள்ளே இருட்டாகத்தான் இருக்கின்றன.  இருட்டை நீக்க ஆங்காங்கே சிம்னி விளக்குகள்
வைக்கப்பட்டிருக்கின்றன.  வெளியே பார்ப்பதற்கு சிறிதாகத் தோன்றினாலும் உள்ளே பிரமாண்டமாக
இருக்கின்றன.  நிலவறை வடுகளோ
ீ சாகசக் கதைகளில் வரும் பாதாள லோகத்தை ஞாபகப்படுத்துகின்றன. 
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கே வந்த முதல் பயணியான பால் லூகாஸ் இதையெல்லாம் பார்த்து என்ன
நினைத்திருப்பார் என்று இப்போது யூகித்துப் பார்க்கவே கிளர்ச்சியாக இருக்கிறது.   பார்த்தவுடன் அவருக்கு
ஏற்பட்ட மனப்பதிவு ‘இதெல்லாம் சீஸர் காலத்திய கல்லறைகள்’ என்பதே.  அவர் நினைத்தது போலவே ஒரு
வடு
ீ முழுவதும் மனித உடல்களாக இருந்தன.   எத்தனையோ ஆண்டுகளாக மக்கிப் போன மனித ’மம்மி’கள். 
உலர்ந்து போன மரக்கட்டைகளைப் போலிருந்தன என்று எழுதுகிறார் லூகாஸ்.  
தென்தாய்லாந்தில் உள்ள Yao Noi என்ற தீவுக் கூட்டத்தில் அமர்ந்திருந்த போது அந்த இடத்தை பூலோக
சொர்க்கம் என்று நினைத்தேன்.

 
அது நீரினால் அமைந்த சொர்க்கம் என்றால் கப்படோச்சியா எரிமலைகள் வடிவமைத்த சொர்க்கம்.  பால்
லூகாஸ் கப்படோச்சியாவில் பல வழிபாட்டு ஸ்தலங்களையும் கண்டார்.  அங்கிருந்த ஓவியங்கள் அவருக்குப்
பல கதைகளைக் கூறின.  அவர் கண்ட ஒரு ஓவியத்தை விவரிக்கிறார்:  கீ ழே தரையில் நெருப்புக் கங்குகள்
தகதகவென கனிந்து நிறைந்து கிடக்கின்றன.  ஒரு பெண் வெறும் காலால் அந்த நெருப்பைக் கடந்து போகிறாள். 
இன்னொரு ஓவியத்தில் ஒரு பெரிய பெண் கடவுளின் சிலை.  அதற்கு முன்னே ஆண்களும் பெண்களும்
தீக்குளிக்கிறார்கள்.  (கப்படோச்சியாவுக்குத் தமிழர்கள் சென்றிருக்கிறார்களா என்ன?)
பால் லூகாஸுக்குப் பிறகு கப்படோச்சியாவுக்குச் சென்ற முக்கியமான பயணி C. Texier.  இவர் அங்கே இருந்த
காலம் 1833 இலிருந்து 1844 வரை.   உலகில் எந்த இடத்திலும் இப்படிப்பட்ட இயற்கையின் வினோத
உருவங்களைப் பார்க்க முடியாது என்று எழுதுகிறார் டெக்ஸியர். அவர் கப்படோச்சியாவில் பார்த்த காட்சிகளை
ஓவியமாகத் தீட்டியிருக்கிறார்.  அந்த ஓவியங்களில் ஒன்று இது.  1944 ஆம் ஆண்டு வரைந்த ஓவியம்:

 
 
கப்படோச்சியா 20000 சதுர கி.மீ . நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது.   இது தமிழ்நாட்டின் பரப்பளவில் ஆறில்
ஒரு மடங்கு.  கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே கிரேக்கர்களின் ஆளுகையில் இருந்ததால்
கப்படோச்சியாவுக்கு கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கிறித்தவம் நுழைந்து விட்டது.  ஆனாலும் மத்திய
காலகட்டத்தில்தான் - பத்தாம், பதினொன்றாம் நூற்றாண்டுகளில் தேவாலயங்கள் கட்டப்பட்டன. 
நிலவறைகளிலும், இயற்கையாக நெருப்புக் குழம்பினால் உருவான பிரமிட் வடுகளிலும்
ீ நூற்றுக் கணக்கான
சிறிய, பெரிய தேவாலயங்களைப் பார்த்தேன்.  அவற்றில் இருந்த ஓவியங்களைப் பற்றி ஒருவர் ஆயிரம்
ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்.  
ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட Karanlik Church (இருண்ட தேவாலயம்)-இல் ஒரு அற்புதமான
ஓவியத்தைக் கண்டேன்.  தேவாலயத்தின் உள்ளே வெளிச்சம் இல்லாததால் அந்தப் பெயர்.    

அந்த ஓவியம் இயேசுவின் ’கடைசி விருந்து’.  ஏப்ரல் ஏழாம் தேதியிலிருந்து பதினான்காம் தேதி வரை யூதர்கள்
ரொட்டியை மட்டும் உண்பார்கள்.  பதினான்காம் தேதி மாலை ஆட்டு விருந்து நடைபெறும்.  அந்த விருந்துக்கு
முன்பாக இயேசு தனது சீடர்களின் கால்களைக் கழுவுகிறார்.  பின்னர் இயேசுவும் பனிரண்டு சீடர்களும்
இருக்கைகளில் அமர்கிறார்கள்.  யூதாஸ் முப்பது வெள்ளிப் பணத்துக்கு இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்கு
ஒப்புக் கொண்டிருக்கிறான்.  இருக்கையில் அமரும் போது இயேசு “இந்த மேஜையில் என்னோடு
அமர்ந்திருக்கும் உங்களில் ஒருவன் என்னை வஞ்சிக்கப் போகிறான்” (லூக்கா 22:21) என்றார்.  யாரைப் பற்றி
இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் ஒருவரையொருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டார்கள்.  
இயேசுவின் சீடர்களில் அவருக்கு அன்பானவராக இருந்த சீடர் ஒருவர் அவரது நெஞ்சருகே
உட்கார்ந்திருந்தார்.   அவரிடம் சீமோன் பேதுரு, “யாரைப் பற்றிச் சொல்கிறார்?” என்று சைகையால் கேட்டார்.  
அப்போது அவர் இயேசுவின் நெஞ்சிலே சாய்ந்து, “எஜமானே, அது யார்?” என்று கேட்டார்.   அதற்கு இயேசு,
“நான் யாருக்கு ரொட்டித் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” என்றார். பின்பு, ரொட்டித்
துண்டைத் தோய்த்து, சீமோன் இஸ்காரியோத்தின் மகனான யூதாஸிடம் கொடுத்தார்.   அவன் ரொட்டித்
துண்டைப் பெற்றதும் சாத்தான் அவன் உள்ளத்தில் புகுந்தான். அதனால் இயேசு அவனிடம், “நீ
செய்யப்போவதைச் சீக்கிரமாகச் செய்” என்றார்.   ஆனால், எதற்காக அவனிடம் இப்படிச் சொன்னாரென அங்கு
உட்கார்ந்திருந்த ஒருவருக்கும் புரியவில்லை. (யோவான் 13:22-28)  இயேசுவின் வாழ்க்கையில் நடந்த மிக
முக்கியமான இந்தச் சம்பவம் – கடைசி விருந்து – பற்றி பல சினிமாக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 
கூபாவின் புகழ் பெற்ற இயக்குனர் தொமாஸ் ஆலியாவின் ’கடைசி விருந்து’ என்ற படம் அதில் ஒன்று.          
***
பயணங்களை ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களின் மூலம் செல்லும் குழுப் பயணம் (Chartered Tour) பற்றி எனக்கு
அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.  ஆனால் துருக்கி பயணம் அந்த எண்ணத்தை மாற்றி
விட்டது.  ஒரு பயண நிறுவனத்தின் உதவி இல்லாமல் கப்படோச்சியாவுக்கு என்னால் சென்றிருக்கவே
முடியாது.  நான்கைந்து நண்பர்களாகவே துருக்கி சென்றிருந்தால் கூட பயண நிறுவனத்தின் துணையின்றி
கப்படோச்சியா செல்வது அசாத்தியமே.  இல்லாவிட்டால் லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டி வரும். 
பயணத்துக்கு பயண நிறுவனம் நம்முடன் அனுப்பும் வழிகாட்டிகள் பெரும் உதவியாக இருந்தார்கள். 
உண்மையிலேயே நாங்கள் செல்லும் இடங்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் தெரிந்து
வைத்திருந்தார்கள்.  அப்படிச் சொல்வது கூடத் தவறு.  ஆய்வாளர்கள் அளவுக்கு அறிந்து வைத்திருந்தார்கள்
என்று சொல்வதே பொருந்தும்.  ஹாட் ஏர் பலூன் பயணத்துக்குச் செல்ல காலையில் ஐந்து மணிக்கு வண்டி
வரும் என்று சொல்லியிருந்தார்கள்.  நான் சென்றது வசந்த காலமாக இருந்தாலும் இரவில் குளிர் நடுக்கி
எடுத்தது.  நாள் பூராவும் அலைச்சல் வேறு.  தூங்கி விட்டால் என்ன செய்வது?  நான்கு மணிக்கே அலாரம்
வைத்து எழுந்து ஓடினேன்.  குகை அறையிலிருந்து வாசலுக்கு வரவே பத்து நிமிடம் ஆயிற்று.  மிகச் சரியாக
ஐந்து மணிக்கு வண்டி வந்தது.  வண்டியில் ஏற்கனவே எங்கள் குழுவைச் சேர்ந்த ஆட்கள் இருந்தார்கள்.    
இன்னொரு முக்கியமான விஷயம், குடி.  ஏற்கனவே எழுதியதுதான்.  பயணம் செல்லும் போது குடித்தால்
பயணத்தில் பல விஷயங்களை விட்டு விட வேண்டியிருக்கும்.  காலை ஏழு மணியிலிருந்து இரவு பத்து வரை
ஊர் சுற்றி விட்டு அதற்கு மேல் வந்து படுத்து, காலையில் ஐந்து மணிக்குத் தயாராக ஓட்டல் வாசலில்
நின்றால்தான் கப்படோச்சியாவை ஆகாயத்திலிருந்து பார்க்க முடியும்.  சாதாரண காட்சியா அது?  பல்லாயிரக்
கணக்கான பிரமிட் வடுகளை
ீ ஆகாயத்திலிருந்து பார்க்கக் கிடைக்கும் அனுபவம் என்றால் சும்மாவா?   குடித்துக்
கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தால் இந்த அனுபவத்தைப் பெற முடியுமா?    

 
 

என் குழுவில் உள்ள ஒரு நண்பர் எடுத்த புகைப்படங்கள்.     

=====

நிலவு தேயாத தேசம் – 12 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   11 , 2016  05:27:34 IST
Latest Novels at Attractive Price

ஹாட் ஏர் பலூன் எரிவாயு மூலம்தான் இயங்குகிறது.  என் பலூனிலிருந்து மற்ற பலூன்களைப் பார்க்கும் போது
பலூனின் அடியில் நெருப்பு எரிவதைப் பார்க்க முடிகிறது.  ஒவ்வொரு பலூனிலும் இருபது பேர்.  சதுரம்
சதுரமாக ஐந்து ஐந்து பேர்.  நடுவில் பைலட்.  எங்கள் பலூனின் பைலட் கத்ரீனா கைஃப் போலவே இருந்தார். 
புகைப்படம் எடுக்கலாம் என்று பார்த்தால் என் ஃபோனில் சார்ஜ் இல்லை.  
***
கீ ழே உள்ள இரண்டு புகைப்படங்களும் நாங்கள் இருந்த பலூனிலிருந்து என் சக பயணி ஒருவர் எடுத்தவை.   
     

 
குழுப் பயணத்தில் இன்னொரு அனுகூலம், பல தேசத்தவர்களையும் சந்தித்துப் பேசவும் பழகவும் கிடைக்கும்
வாய்ப்பு.  அப்படி நான் கப்படோச்சியாவில் சந்தித்த ஒரு இளைஞன் லார்பி.  மொராக்கோவைச் சேர்ந்தவன். 
தென்னமெரிக்காவில் சீலே எப்படி எனக்கு ஒரு தாய்நாட்டைப் போன்றதோ அதே போல் ஆஃப்ரிக்காவில்
மொராக்கோ.  கிட்டத்தட்ட எல்லா மொராக்கோ எழுத்தாளர்களையும் வாசித்திருக்கிறேன்.  அறுபதுகளில்
புகழ்பெற்றிருந்த பீட் எழுத்தாளர்களின் சொர்க்கமாக இருந்ததும் மொராக்கோதான்.  என்னுடைய ஐரோப்பிய
ஆசான்களில் ஒருவரான ஜான் ஜெனே ஃப்ரான்ஸை விட மொராக்கோவையே என் தாய்நாடு என்று
சொல்லுவேன் என்று சொல்லி மொராக்கோவிலேயே வாழ்ந்தார்.  தன்னுடைய மரணத்துக்குப் பிறகு தன்
பிரேதம் மொராக்கோவிலேயே புதைக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்.  ஒருமுறை அவர் தன்னுடைய
பதிப்பாளரைப் பார்ப்பதற்காக பாரிஸ் சென்றிருந்த போது அங்கேயே இறந்து போனார்.  அப்போது ஜெனேயின்
நண்பர்கள் அவருடைய பிரேதத்தை மொராக்காவுக்குக் கொண்டு வந்து அங்கே Larache என்ற ஊரில் தான்
புதைத்தார்கள்.  மொராக்கோவைப் போலவே ஜிப்ரால்டரும் உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களின் கனவு
பூமியாக இருந்து கொண்டிருக்கிறது.  ஜான் லெனன் தன் காதலி யோகோ ஓனோவைத் திருமணம் செய்து
கொண்டது ஜிப்ரால்டரில்தான்.  நான் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் லார்பி.

 
கொஞ்ச நேரத்திலேயே நான் எழுத்தாளன் என்று தெரிந்து கொண்டு தன்னுடைய கதையை மிக ஆர்வமாகச்
சொல்ல ஆரம்பித்தான்.  ஆரம்பத்தில் ஜிப்ரால்டர் ஜலசந்தியின் மூலம் ஹஷீஷ் கடத்தி பிறகு அந்தத் தொழில்
கொகேய்ன் கடத்தலுக்கு மாறிய போது அதை விட்டு விட்டு இப்போது தாஞ்ஜியரில் ஒரு டிபார்ட்மெண்டல்
ஸ்டோர் வைத்துக் கொண்டு வாழ்வதாகச் சொன்னான்.  அவனுடைய கதை எனக்கு El Nino என்ற ஸ்பானிஷ்
திரைப்படத்தை ஞாபகப்படுத்தியது.  கிட்டத்தட்ட எல்லா தாஞ்ஜியர் சிறுவர்களின் கதையும் ஒரே கதைதான். 
அதுதான் எல் நீஞோவின் கதை.  எல் நீஞோ Daniel Monzón இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படம். 
ஹேஸூஸ் (Jesus) என்ற போலீஸ்காரன், எல் நீஞோ என்ற கடத்தல்கார இளைஞன் மற்றும் அவனுடைய
நண்பர்கள் ஆகியோரைச் சுற்றி நிகழும் கதை.  கடத்தல்காரர்கள் மட்டுமல்லாமல் போலீஸ்காரர்களின்
அவலத்தையும் சொல்கிறது எல் நீஞோ.  கடத்தல் படகைத் தொடர்ந்து விரட்டி வரும் ஹெலிகாப்டரை எல்
நீஞோவின் நண்பன் சுட்டு விடுவதால் ஹெலிகாப்டர் நீரில் மூழ்கி அதிலிருந்த பைலட் பிழைப்பாரா என்ற
நிலைக்குப் போய் விடுகிறது.  படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ஜிப்ரால்டர் குன்று.  

 
பின்வரும் காணொளியில் ஜிப்ரால்டர் குன்று பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ளலாம்.   
நிலவியல் ரீதியாக இஸ்தாம்பூலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதை விட அதிக முக்கியத்துவம்
கொண்டது ஜிப்ரால்டர் தீபகற்பம்.  28000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் ஜிப்ரால்டர்
குகைகளில் வசித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.
இப்போது ஜிப்ரால்டரில் வசிக்கும் 30000 பேரும் கலாச்சார ரீதியாக ஸ்பெய்னோடு உறவு கொண்டிருந்தாலும்
பிரிட்டனோடு இருப்பதையே விரும்புகிறார்கள்.  காரணம் வெளிப்படை.  ஸ்பெய்னே ஏழை நாடு;  அதோடு
எப்படிச் சேர்வது என்பதுதான் ஜிப்ரால்டர்வாசிகளின் மனநிலை.  ஆனால் உயிரே போனாலும் பரவாயில்லை;
ஸ்பெய்ன் மண்ணை மிதித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள் தாஞ்ஜியரில் வசிக்கும் இளைஞர்கள்.  
 

 
மேலே உள்ள இரண்டு வரைபடங்களையும் பாருங்கள்.  மொராக்கோவின் இடது பக்கம் அட்லாண்டிக்
பெருங்கடல்.  வலது பக்கம் மத்திய தரைக்கடல்.   இந்த நீர்ப்பரப்பைத் தடுப்பது போல் இரண்டு நாடுகள். 
வடமேற்கு ஆஃப்ரிக்காவின் மொராக்கோ;  ஐரோப்பாவின் தென்மூலையில் ஸ்பெய்ன்.  வரைபடத்தில் இரண்டு
நாடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது அல்லவா?  இரண்டு நாடுகளுக்கும்
இடையே உள்ள ஜிப்ரால்டர் ஜலசந்தியின் நீளம் வெறும் ஒன்பது மைல்கள்தான்.  இந்த ஒன்பது மைல்
தூரம்தான் ஐரோப்பாவுக்கு ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்து போதை மருந்துகள் செல்வதற்கு வாசலாக இருந்து
வருகிறது.  மொராக்கோவின் கொடூரமான வறுமையிலிருந்து தப்புவதற்காக பல நூறு மொராக்கோ
தேசத்தவர்கள் இந்த ஜலசந்தியைப் படகுகளில் கடந்து போகிறார்கள்.  இவர்களைப் பிடிப்பதற்காக ஸ்பானிஷ்
போலீஸும் இரவு பகலாக ரோந்து சுற்றுக் கொண்டிருக்கிறது.  உள்நாட்டில் நிலவும் கடுமையான
சுரண்டலையும் வறுமையையும் தடுக்க முடியாத மொராக்கோ அரசு ஐரோப்பிய யூனியனின் சேவகனாக
விளங்குவதால் மொராக்கோவிலிருந்து ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடும் ஆட்களைப் பிடிப்பதில் ஐரோப்பியர்களை
விட மொராக்கோ போலீஸ் இன்னும் தீவிரமாக இருக்கிறது.  அந்த எஜமான விசுவாசத்திற்காக ஐரோப்பிய
கம்பெனிகளும் மொராக்கோவில் அவ்வப்போது தங்கள் மூலதனத்தை முதலீடு செய்வதுண்டு.  சமீ பத்தில்
ஃப்ரெஞ்ச் கார் நிறுவனம் Renault மொராக்கோவின் தாஞ்ஜியரின் (Tangier) துறைமுகத்தை நவனமயமாக்கிக்

கொடுத்தது.  இருந்தாலும் மொராக்கோவின்  போதை உலக மாஃபியா ஆட்கள் லத்தீன் அமெரிக்க போதை
மாஃபியாவோடு கை கோர்த்துக் கொண்டு பெரும் செல்வாக்கோடு இருக்கின்றனர்.  போதைப் பொருட்கள்
மட்டுமல்லாமல் பயங்கரவாதத்துக்கும் இந்த ஜிப்ரால்டர் ஜலசந்திதான் வாசலாக இருக்கிறது.   
மொராக்கோவிலிருந்து கிளம்பி ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக ஸ்பெய்ன் சென்று அங்கிருந்து ஃப்ரான்ஸுக்குப்
போய்ச் சேரும் அகதிகளைப் பற்றி The Blinding Absence of Light என்ற உலகப் புகழ்பெற்ற நாவலை எழுதிய தாஹர்
பென் ஜெலோன் Leaving Tangier என்ற அருமையான நாவலை எழுதியிருக்கிறார்.  இணையத்தைத் தவிரவும்
நீங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அந்த நாவலை படித்துப் பாருங்கள்.அவசியம்
சீலே செல்வது எப்படி என் கனவுகளில் ஒன்றாக இருக்கிறதோ அதே போன்றதொரு கனவாகவே இருக்கிறது
மொராக்கோவும்..  அதிலும் குறிப்பாக தாஞ்ஜியர் நகரம்.   காரணம், இஸ்தாம்பூல் போலவே தாஞ்ஜியரின்
ஐரோப்பியத் தொடர்பும் அதிகம்.  இவ்விஷயத்தில் இஸ்தாம்பூலுக்கும் தாஞ்ஜியருக்கும் உள்ள ஒரே
வித்தியாசம், இஸ்தாம்பூல் நகரின் ஒரு பகுதி ஐரோப்பாவிலும் மற்றொரு பகுதி ஆசியாவிலும் இருக்கிறது;
தாஞ்ஜியர் ஆஃப்ரிக்காவின் விளிம்பில் ஐரோப்பாவைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது.  

 
 

புகைப்படம் நன்றி: Eloise Schieferdecker/Al Jazeera


மொராக்கோவின் தாஞ்ஜியர் கடற்கரையிலிருந்து ஒன்பது மைல் தூரத்தில் உள்ள ஸ்பெய்னுக்குத் தப்பிச்
செல்வதையே தங்கள் வாழ்க்கைக் கனவாகக் கொண்டுள்ள சிறார்களின் புகைப்படங்களையே மேலே
காண்கிறீர்கள்.  இடது ஓரத்தில் அமர்ந்திருப்பவனின் பெயர் சாபிர்.  வயது 13.  பத்து வயதிலிருந்து
தாஞ்ஜியரிலிருந்து ஸ்பெய்னுக்குச் செல்லும் ஏதாவது ஒரு படகு மூலம் தப்பிச் சென்று விட முயற்சி செய்து
கொண்டிருக்கிறான்.  கடவுள் உனக்கு உதவி புரியட்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் அவனுடைய
பெற்றோர்.  இப்படி தாஞ்ஜியரிலிருந்து தப்பிய 5000 சிறார்கள் ஸ்பெய்னில் பெற்றோர் இல்லாமல்
அனாதைகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்றான் லார்பி. 11 வயதிலிருந்து 17 வயதுள்ள சிறார்களே
இப்படி மொராக்கோவிலிருந்து ஸ்பெய்னுக்குத் தப்பி ஓடுகிறார்கள்.  காரணம்?  மொராக்கோவில் பிழைப்புக்கு
வழியில்லை.  அப்படியே ஏதாவது எடுபிடி வேலை கிடைத்தாலும் திருமணம் ஒரு நிறைவேறாக் கனவு. அந்த
அளவுக்கு யாரிடமும் இங்கே பணம் இல்லை.  லார்பி சொல்லிக் கொண்டிருக்கும் போதே எனக்கு Leaving Tangier
ஞாபகம் வந்தது.  “எங்களுடைய அருமையான தேசத்தில் பெண்கள் அரிதானவர்களாகப் போய் விட்டார்கள். 
ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டுமென்றால் அவளைத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும். 
திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ஆடம்பரமான வடு
ீ வேண்டும்.  நிலையான மாத வருமானம்
வேண்டும்.  அவ்வப்போது அவளுக்கு விலையுயர்ந்த நகைகளும், பரிசுப் பொருட்களும் வாங்கிக் கொடுத்துக்
கொண்டே இருக்க வேண்டும். இதெல்லாம் இந்தப் பொடியன்களுக்கும் தெரியும்.  அதனால்தான்
மொராக்கோவை விட்டு ஓடுகிறார்கள்.  பிடிபட்டுப் பிடிபட்டு மீ ண்டும் மீ ண்டும் தாஞ்ஜியரின் கரைக்கு வந்து
சேர்கிறார்கள்.  சிலர் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.  சிலர் போலீஸாரால் வன்கலவி செய்யப்பட்டு ரத்தம்
கொட்டக் கொட்ட கடற்கரையில் வசியெறியப்
ீ படுகிறார்கள்.   
Leaving Tangier நாவலில் மொராக்கோவிலிருந்து ஸ்பெய்னுக்குத் தப்பிச் சென்ற பிறகும் அங்கே எந்தத் தீர்வும்
கிடைக்காமல் அநாதையாக அலையும் சிலரது கதைகளைச் சொல்கிறார் தாஹர் பென் ஜெலோன்.
இந்தப் பிரச்சினை குறித்து அல் ஜஸீரா வெளியிட்டுள்ள கட்டுரையையும் மேலே உள்ள புகைப்படத்தையும்
காண்பித்தான் லார்பி.  ஆனால் நகைமுரண் என்னவென்றால், இந்தச் சிறார்கள் தப்பியோடும் அதே படகில்தான்
ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் மொராக்கோவைப் பார்க்கவும், தங்கள் வாழ்நாள் முழுவதும்
மொராக்கோவிலேயே தங்கி விடவும் வந்து கொண்டிருக்கிறார்கள்.  வில்லியம் பர்ரோஸிடம் நீங்கள் ஏன்
உங்கள் தாய்நாடான அமெரிக்காவையும், உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட்டு விட்டு இங்கே
மொராக்கோவுக்கு வந்தீர்கள் என்று கேட்ட போது பர்ரோஸ் சொன்னார்:  ”மற்ற எல்லா நாடுகளையும் விட
மொராக்கோவின் சட்ட திட்டங்கள்தான் லகுவாகவும் சுதந்திரமாகவும் இருக்கின்றன.”   பர்ரோஸுக்கு இந்தியா
பற்றித் தெரியாது போல் இருக்கிறது.  இங்கே ஒருவர் ஹெல்மட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டலாம். 
ஐந்தடி உயரம் உள்ள கிரேட் டேன் நாயையே மோட்டார்பைக்கில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு நடு ரோட்டில்
போகலாம்.  இந்தியா முழுவதும் எங்கே வேண்டுமானாலும் நட்ட நடு ரோட்டில் ஜிப்பை அவிழ்த்து மூத்திரம்
போகலாம்.  பெண்களை எல்லார் முன்னிலையில் கிண்டல் பண்ணலாம்.  கூட்டமாக இருந்தால் கிட்டே போய்த்
தேய்க்கலாம்.  லஞ்சம் கொடுக்கலாம்.  காசு நிறைய இருந்தால் கொலை கூட செய்து விட்டுத் தப்பி விடலாம். 
எதற்குமே இங்கே தண்டனை கிடையாது.  பர்ரோஸின் நண்பர் ஆலன் கின்ஸ்பர்க் கல்கத்தாவில் பல
ஆண்டுகள் இருந்தவர்.  இருந்தாலும் இந்தியா பற்றி பர்ரோஸிடம் சொல்லவில்லை போல் தெரிகிறது.  
 பர்ரோஸ் மொராக்கோ பற்றிக் கூறியது ஒரு அமெரிக்கர் என்ற முறையில் சரியே தவிர அங்கே உள்ள
நடைமுறை வேறு.  அவர் தாஞ்ஜியரில் செய்த காரியங்களை ஒரு மொரோக்கோகாரர் செய்தால் நிச்சயம்
தண்டனை கிடைக்கும்.  உ-ம்.  சிறுவர்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது.  அமெரிக்காவில் அதற்கு ஆயுள்
தண்டனை.  ஆயுள் தண்டனை என்றால் நம் ஊரைப் போல் ஏழு வருடம் எட்டு வருடம் அல்ல; இருநூறு
ஆண்டுகள், முந்நூறு ஆண்டுகள் என்று போட்டுத் தள்ளி விடுவார்கள்.  மொராக்கோவிலும் ஓரினச்
சேர்க்கைக்கு எதிராக சட்டங்கள் இருக்கின்றன.  இருந்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.  அப்படியே
யாராவது கண்டு கொண்டால் அம்பது நூறு கொடுத்து விட்டுப் போய் விடலாம்.    அதிலும், வெள்ளைத் தோல்
என்றால் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு பெரிதாக இளித்தபடி சலூட் அடித்து ஒரு சிகரெட் இருக்கிறதா என்று
கேட்டு வாங்கிக் கொண்டு அனுப்புவார்கள் என்றான் லார்பி.  
எங்கள் தேசமும் அப்படித்தான் நண்பனே என்றேன்.  சமீ பத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள வர்கலா
கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.   

 
கோவாவை ஒத்த அந்தக் கடற்கரையின் மேலே உள்ள விளிம்புப் பகுதிக்குச் செல்ல ஒரு தெரு இருக்கிறது. 
அங்கே பல பப்-களும் பார்களும் உள்ளன.  அந்தத் தெருவுக்குச் செல்ல இந்தியர்களுக்கு அனுமதி இல்லை. 
வெளிநாட்டுக்காரர்கள் மட்டுமே செல்ல முடியும்.  தெருவின் முனையிலேயே போலீஸ்காரர்கள் நின்று
கொண்டு பழுப்பு நிறத் தோலுள்ளவர்களை அடித்து விரட்டுகிறார்கள்.  நானும் நண்பர்களும் கடற்கரையின்
கீ ழேயிருந்து இருட்டில் படிக்கட்டு வழியாக மேலே போய் ஒரு பப்-புக்குப் போனோம்.  வெள்ளைக்காரர்கள்
நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.  என் நண்பர் பாஸ்கர் நடன தளத்துக்குச் சென்று ஒரு ஓரமாக நின்று ஆடினார். 
உடனேயே தளத்தில் ஆடிக் கொண்டிருந்த இருபது வெள்ளைக்கார மிருகங்களும் அப்படியே நடனத்தளத்தை
விட்டு இறங்கி ஒரு ஓரமாக நின்று ஆட ஆரம்பித்து விட்டனர்.   பப்-பின் சொந்தக்காரர் ஓடி வந்து பாஸ்கரையும்
என்னையும் மற்ற நண்பர்களையும் வெளியே போகச் சொன்னார்.  இருந்தால் பிரச்சினை ஆகும் என்று பயந்து
வெளியே வந்தோம். மொராக்கோவின் வெள்ளை அடிமை மோகம் இந்த அளவுக்கு இருக்காது என்றே
நினைக்கிறேன். நேரில்தான் பார்க்க வேண்டும்.
தாஞ்ஜியரில் உள்ள கஃபே ஹஃபாவுக்கு ஒருமுறை சென்று புதினா தேநீர் அருந்த வேண்டும் என்பது என் தீராக்
கனவுகளில் ஒன்று. உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் பால் பௌல்ஸ் இந்தக் கஃபேவில்தான்
தன்னுடைய 85-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.   இந்தக் கஃபே பற்றிய ஒரு சிறிய படம் இது:
https://www.youtube.com/watch?v=d4hA2upeidU    

 
 
Leaving Tangier நாவலின் முதல் பக்கமே கஃபே ஹஃபாவிலிருந்துதான் துவங்குகிறது.  

நாகூரின் இஸ்லாமியப் பின்னணியில் வளர்ந்ததன் காரணமாக நான் பல சமயங்களில் பல சூழ்நிலைகளில்


ஒரு அந்நியனாக உணர்வது வழக்கம்.  சில மாதங்களுக்கு முன் தஞ்சை ப்ரகாஷ் பற்றி ஒரு கட்டுரை
எழுதியபோது அதற்கு வந்த எதிர்வினைகளைக் கண்டபோது அப்படி உணர்ந்தேன்.  தஞ்சை மாவட்டத்து
இஸ்லாமிய வாழ்க்கையைப் பற்றி பல உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார் தஞ்சை
ப்ரகாஷ்.   அது பற்றிய என் கட்டுரை வெளிவந்ததும் ஜெயமோகன் ப்ரகாஷின் கதைகள் போர்னோ என்று
எழுதினார்.  எனக்கு அது ஆச்சரியமாக இல்லை.  தஞ்சாவூர் இஸ்லாமிய வாழ்க்கைக்கு முற்றிலும்
அந்நியமான ஒருவருக்கு அப்படித்தான் தோன்றும்.  லார்பி என்னோடு பேசிக் கொண்டிருந்த போது தொடர்ந்து
ஒருவருடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்.  நானும் அவர் பாடல்களை ஏற்கனவே 
கேட்டிருக்கிறேன்.  அவர் பெயர் இப்ராஹீம் தத்லிஸஸ்.  இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து
கொண்டு துருக்கியின் மிகப் புகழ் பெற்ற இப்ராஹீமை ஒற்றை ஆளாகக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த நான்,
துருக்கியின் கப்படோச்சியா என்ற பகுதியில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எரிமலைக் குழம்பினால்
ஆன பிரமிட் வடுகளின்
ீ முன்பு மொராக்கோவைச் சேர்ந்த ஒருவன் அதே இப்ராஹீமைக் கேட்கும் தருணத்தில்
எப்படிப்பட்ட உணர்வுகளுக்கு ஆட்பட்டிருப்பேன் என்று யூகித்துப் பாருங்கள்.
அப்போது எனக்கு தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள் ஞாபகம் வந்தன.  ஏனென்று சொல்ல வேண்டும். 
இந்தியாவில் கிஷோர் குமார் எப்படியோ அப்படித்தான் துருக்கியின் இப்ராஹீம் தத்லிஸஸ்.  இது போன்ற
பாடகர்களைப் பற்றியெல்லாம் உங்களுக்கு எப்படி அறிமுகம் கிடைக்கிறது என்று பல நண்பர்கள் என்னைக்
கேட்பதுண்டு.  எப்போதுமே அதற்கு என் பதில், வாசிப்பு. இப்ராஹீம் தத்லிஸஸ் பற்றி ஐந்தாறு ஆண்டுகளுக்கு
முன்பு நான் படித்த Leaving Tangier  என்ற நாவலின் மூலம் தெரிந்து கொண்டேன்.  
சரி, இப்ராஹீம் தத்லிஸஸைக் கேட்டுக் கொண்டிருந்த போது தஞ்சை ப்ரகாஷும் அவரை போர்னோ என்று
எழுதிய ஜெயமோகனும் ஏன் ஞாபகம் வர வேண்டும்?  லார்பி சொன்ன தகவல்தான் காரணம்.  இப்ராஹீம்
சமீ பத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லிக் கண்ணடித்தான் லார்பி.  திருமணம் செய்து
கொள்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்டேன்.  திருமணம் செய்து கொண்ட போது அவர் வயது
அறுபதாம்!   துருக்கி, மொராக்கோ போன்ற நாடுகளில் எந்தக் கணவனும் தன் மனைவி இப்ராஹீமைக்
கேட்பதை விரும்புவதில்லை.  ஏனென்றால்-

=====

நிலவு தேயாத தேசம் – 13 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   18 , 2016  03:03:48 IST
Latest Novels at Attractive Price

ஒரு தேசத்தைக் காண்பது என்றால் அந்த தேசத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வரலாற்றையும்


நிலத்தையும் அரசியலையும் அறிய முயல்வதே ஆகும்.  பயணத்துக்கும் சுற்றுலாவுக்கும் அதுதான் வேறுபாடு. 
நான் வளர்ந்த இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியே துருக்கியை நோக்கி என்னைச் செலுத்தியது எனலாம். 
என்னுடைய இசை ஆர்வத்தைப் பற்றி பல நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்பதுண்டு.  நாகூரில் வளர்ந்ததுதான்
அதற்குக் காரணம்.  இன்னொன்று, தஞ்சாவூர் மாவட்டம்.  அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின்
குருதியிலேயே இசை கலந்திருக்கிறதாகத் தோன்றுகிறது எனக்கு.  

உங்களுக்கு எம்.கே.டி. பாகவதரைப் பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் துருக்கியில் உள்ள
கப்படோச்சியா என்ற பகுதிக்குப்  போயிருக்கும் போது அந்த பாகவதரை துருக்கியைச் சேர்ந்த ஒரு ஆள் கேட்டு
ரசித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?  “எனக்கு மிகப் பிடித்த பாடகர் இப்ரஹீம் தத்லிஸஸ்” என்று நான்
சொன்னபோது லார்பிக்கு அப்படித்தான் இருந்தது.  என்னதான் இப்ரஹீம் துருக்கியின் சூப்பர் ஸ்டாராக
இருந்தாலும் ஏதோ ஒரு ஆசிய நாட்டிலிருந்து வந்த ஒரு பயணி அவரது பாடல்களைப் பற்றி
மயிர்க்கூச்செறியப் பேசும் போது அது ஒரு மறக்க முடியாத தருணம் தானே?  

இப்ரஹீமை துருக்கியில் எந்த அளவுக்கு வெறி பிடித்தாற்போல் ரசிக்கிறார்கள் என்பதற்கு இந்த

காணொளி ஒரு உதாரணம்.  

இது 1987-ஆம் ஆண்டு இப்ரஹீம் கலந்து கொண்ட நிகழ்ச்சி.  எனக்கு இப்ரஹீமைக் கேட்கும் போதெல்லாம்

கண்கள் கலங்கி விடுகின்றன.  இப்ரஹீம் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இது:

’பேரரசன்’ என்று அழைக்கப்படும் இப்ரஹிம் தத்லிஸஸ் மீ து 1990-இல் ஒரு கொலை முயற்சி நடந்தது.  காலில்
காயமடைந்ததோடு பிழைத்துக் கொண்டார்.  பிறகு 1998-இல் மீ ண்டும் ஒரு கொலை முயற்சி.  அதன் பிறகும்
மூன்றாவது முறையாக  மார்ச் 2011-இல் கலாஷ்னிகோவ் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டதில் குண்டு
தலையில் பாய்ந்தது.  ஆனாலும் உயிர் போகவில்லை.  நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.   ஐந்து
நாட்கள் கழித்தே அவருக்கு நினைவு திரும்பியது.  பின்னர் அரசு விமானத்தில் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டு
அஜீத் சாமே என்ற உலகப் புகழ் பெற்ற நியூரோசர்ஜனிடம் சிகிச்சை பெற்ற பிறகே அவர் உயிருக்கு உத்தரவாதம்
தரப்பட்டது.  அதை இப்ரஹீமின்  மறுபிழைப்பு என்றே சொல்ல வேண்டும்.  ஆனாலும் தலையில் குண்டு
பாய்ந்ததால் இடது கால் இடது கை இரண்டும் ஓரளவு செயலிழந்து விட்டது.  மற்றொருவர் துணையின்றி
அவரால் நடக்க இயலவில்லை.  பெர்லினில் அஜித் சாமேயிடம் அவர் சிகிச்சை பெற்று மரணத்துடன் போராடிக்
கொண்டிருந்த போது மருத்துவமனையிலேயே இல்திஸ் என்ற பெண்ணோடு காதல் ஏற்பட்டு செப்டம்பர் 2011-
இல் அவரை மணந்து கொண்டார்.  அப்போது இப்ராஹிமின் வயது 60.  இதற்காகத்தான் என்னைப் பார்த்துக்
கண்ணடித்தான் லார்பி.   

இப்ரஹீம் துருக்கி மொழிப் பாடகர்; நடிகர், சூப்பர் ஸ்டார். நாற்பது படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். 
அவர் பாடலைக் கேட்டால் பெண்கள் ஆவேசத்தில் மயங்கி விழுகிறார்கள்.  அதனால்தான் தாஹர் பென்
ஜெலோன் Leaving Tangier நாவலில் இப்ரஹீம் பற்றி அப்படி எழுதினார்.  அந்த மேற்கோள்:
“His name’s Ibrahim Tatlises,” which means ‘sweet voice’!  He’s from Urfa, southeastern Turkey, not for from the Syrian border. 
He’s a lady-killer.  Wherever he sings, husbands hide their wives.  Touria cries at the very sound of his voice.”
துருக்கி மொழியில் பாடினாலும் இப்ரஹீம் குர்து இனத்தைச் சேர்ந்தவர்.  பள்ளிப் படிப்பு இல்லாததால்
இப்ரஹீமுக்கு எழுதப் படிக்க தெரியாது.  எண்பதுகளில் துருக்கி அரசு குர்து மொழியைத் தடை செய்த பிறகு
இப்ராஹீம் குர்து மொழியில் பாடுவதில்லை.  ஆனாலும் ஒருமுறை ஸ்வடனில்
ீ நடந்த இசை நிகழ்ச்சியில்
குர்து மொழியில் பாடியதால் அவர் மீ து தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. அதிலிருந்து அவர் எக்காரணம்
கொண்டும் குர்து மொழியில் பாடுவதில்லை.
குர்திஸ்தானின் வரலாறு காஷ்மீ ர் வரலாறு போன்றதுதான்.  துருக்கியின் சுதந்திரப் போரின் போது
பெருமளவில் ஈடுபட்ட குர்துகளுக்குத் தனிநாடு உண்டு என்று வாக்களித்து விட்டு சுதந்திரம் கிடைத்ததும்
அவர்களை ஏமாற்றி விட்டனர் துருக்கிய தேசாபிமானிகள்.  பின்னர் 1923-இல் துருக்கி, ஈராக், சிரிய அரசுகள்
உருவானபோது குர்திஸ்தான் மட்டும் உருவாக்கப்படவில்லை.  வாக்குறுதி காற்றில் விடப்பட்டது. 
அப்போதிருந்து இன்று வரை குர்துகள் துருக்கியில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  1924-
இல் குர்து என்ற வார்த்தையை உச்சரித்தாலே தண்டனை என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  
கலகம், காதல், இசை என்ற நூலில் அல்ஜீரியாவின் வடகிழக்கில் உள்ள கபீலியா என்ற பிரதேசத்தில் கபீலிய
மொழி பேசினாலே அபராதம் என்று அல்ஜீரிய அரசு சட்டம் போட்டது பற்றியும் (அரசாங்க மொழி அரபி), கபீலிய
விடுதலைப் போராட்டத்துக்காகப் பாடிய ரய் இசைப் பாடகர் ஷாப் ஹாஸ்னி பற்றியும் எழுதியிருக்கிறேன். 
அதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்தல் நலம்.   
ஒருமுறை இப்ரஹீமை பிரபலமான ஒரு வர்த்தகர் குர்து மொழியில் பாடச் சொன்ன போது ”நான் குர்து தான்;
ஆனாலும் குர்துவில் பாட அரசாங்கத் தடை இருப்பதால் பாட மாட்டேன்” என்று சொன்னதற்காகவே அவர் மீ து
வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் இறுதியில் அவர் மீ து குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால்
தண்டனையிலிருந்து தப்பினார்.   
துருக்கியில் 1925-இலிருந்து 1939 வரை பதினைந்து லட்சம் குர்துக்கள் அரசுப் படையினரால் கொல்லப்பட்டனர். 
ஆயுதப் போராட்டத்தின் மூலம் துருக்கியரிடமிருந்து  குர்து இனத்தை விடுதலை செய்வோம் என்ற
பிரகடனத்துடன் 1974-இல் குர்திஷ் தொழிலாளர் கட்சி (பி.கே.கே.) தொடங்கப்பட்டது.   அக்கட்சியைச் சேர்ந்த
மஸ்லூம் தோகன் என்பவர் 1982-இல் சிறையிலேயே தீக்குளித்து இறந்தார்.  அவரைத் தொடர்ந்து மேலும்
நான்கு பிகேகே போராளிகள் தீக்குளித்து இறந்தனர்.  அதே ஆண்டு மேலும் நான்கு போராளிகள் பட்டினிப்
போராட்டம் நடத்தி சிறையில் இறந்தனர்.  

    
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில்தான் குர்துக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள்.  (படத்தில் ஆரஞ்சு
நிறமெல்லாம் குர்து இனத்தினர் வசிக்கும் பகுதிகள்.)
குர்திஷ் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்ட 1974-இலிருந்து இன்று வரை அந்தக் கட்சியினருக்கும் துருக்கி
ராணுவத்துக்கும் தொடர்ந்த ஆயுத யுத்தம் நடந்து வந்து கொண்டிருக்கிறது.  இந்த நூற்றாண்டில் யுத்தம்
என்பதன் பொருள் மாறி விட்டதை நாம் உணர்ந்திருக்கிறோம்.  இரண்டு தேசங்களுக்கு இடையே யுத்தம்
என்றால் முன்பு இரு தேசத்து ராணுவத்தினரும் போர் முனையில் பொருதுவார்கள்.  ஆனால் இன்றைய யுத்தம்
அப்படியல்ல.  அமெரிக்காவைத் தாக்க வேண்டுமானால் அங்கே ஒரு நகரத்தில் உள்ள வானளாவிய
கட்டிடத்தின் மீ து ஒரு விமானத்தைக் கொண்டு போய் மோதினால் ஒருசில நிமிடங்களில் 3000 பேரைக்
கொன்று விடலாம்.  மும்பை குண்டு வெடிப்பு மற்றொரு உதாரணம்.  இப்போதைய போர்முறையில் சாவது
அப்பாவிப் பொதுமக்களே.  குர்திஷ் தொழிலாளர் கட்சியை ஒடுக்குவதற்காக தொண்ணூறுகளில் துருக்கி
ராணுவம் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காடுகளை அழித்தது; 3000 குர்திய கிராமங்களை அழித்தது. 
இந்த வாக்கியத்தை மீ ண்டும் ஒருமுறை வாசிக்கவும்.
துருக்கி ராணுவம் 3000 குர்திய கிராமங்களை அழித்தது என்றால் அதன் பொருள் என்ன?  ஒரு மாபெரும் மானுட
அவலம் அது.  குர்திய கிராமங்கள் எரிக்கப்பட்டன;  அவற்றின் மீ து குண்டுகள் வசப்பட்டன. 
ீ ஒரு நாட்டின்
ராணுவம் தன் சொந்த நாட்டின் மீ தே போர் தொடுத்து தன் நாட்டு மக்களையே அகதிகளாக்கிய கொடுமை
அங்கே நடந்தது.  இப்படியாக மொத்தம் 20 லட்சம் குர்தியர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.  இதனால் குர்திஷ்
தொழிலாளர் கட்சியினரின் ஆவேசம் அதிகமாயிற்று.  அதற்கிடையில் ’குர்திஷ் விடுதலை வல்லூறுகள்’ என்ற
புதிய கட்சி தொடங்கப்பட்டது.  இந்தக் கட்சியின் நோக்கம், துருக்கியை நரகமாக்குவோம் என்பதுதான். 
ஒருமுறை இஸ்தாம்பூலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கூட குண்டு வெடித்தது என்றால் குர்திய விடுதலைப்
போராட்டத்தின் தீவிரத்தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.  மாற்றி மாற்றி ராணுவமும் விடுதலைப்
போராட்ட ஆயுதக் குழுக்களும் துருக்கியை ரத்தக் களரியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.   கடந்த நாற்பது
ஆண்டுக் கால தென்கிழக்குத் துருக்கியின் வரலாறு என்னவென்றால் –
ராணுவம் பிகேகே போராளிக் குழுக்களின் தளங்களைத் தாக்கியது.  230 போராளிகள் கொல்லப்பட்டனர்.
இஸ்தாம்பூலில் இரண்டு இடங்களில் ஒரே சமயத்தில் குண்டு வெடித்தது.  17 பேர் மரணம்; 154 பேர் படுகாயம்.
இப்படியே ஆண்டுக்கு நான்கைந்து முறை நடந்து கொண்டே இருக்கிறது.  நாற்பது ஆண்டுகளாக மாற்றி மாற்றி
இதே செய்திதான்.  இந்த யுத்தத்தில் சிரியாவில் இருக்கும் ஐ.எஸ்.ஸும் சேர்ந்து கொண்டதால் நிலைமை
இன்னும் மோசமாகி விட்டது.  குர்து இனப் போராட்டத்தைப் பற்றி யோசிக்கும் போது இன்னும் பல ஆண்டுகள்
ஆனாலும் ஆயுதங்களின் மூலம் விடுதலையும் தனிநாடும் சாத்தியமா என்றே சந்தேகமாக இருக்கிறது. 
இங்கேதான் மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.   
துருக்கி மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே சிறுபான்மையினர் மொழி, மதம், இனம் போன்றவற்றின் பேரால்
ஒடுக்கப்படுகிறார்கள்; அழித்தொழிக்கப்படுகிறார்கள்.  அதேதான் குர்து மக்களுக்கும் நடந்து வருகிறது.  ஆனால்
ஆயுதத்துக்கு ஆயுதம், வன்முறைக்கு வன்முறை என்று உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட இனங்கள் ஆயுதப்
போராட்டத்தில் இறங்கினால் உலகமே ஒரு மாபெரும் படுகொலைக் களமாக மாறி விடாதா என்ற ஐயமும்
ஏற்படுகிறது.
இப்ரஹீம் தத்லிஸஸ் மீ து ஏன் இத்தனை கொலை முயற்சிகள் நடந்தன என்பதற்கும் மேலே விவரித்த குர்திஷ்
இனப் போராட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  இப்ரஹீம் ஏன் துருக்கி அரசை ஆதரிக்கிறார், அவர்
ஏன் குர்து மக்களின் போராட்டத்தின் பக்கம் நிற்கவில்லை என்ற ஆத்திரத்தில்தான் குர்திஷ் தொழிலாளர்
கட்சியினர் அவரைக் கொல்ல முயற்சித்தனர்.  
உலக அளவில் தீவிரவாத இயக்கங்கள் ஒரு காலகட்டத்தில் அரசின் உதவியால்தான் வளர்கின்றன. 
அமெரிக்கா ரஷ்யாவை அடக்குவதற்காக தாலிபானை வளர்த்தது.  இப்போது தாலிபான் உலக அமைதிக்கு
அச்சுறுத்தல்.   இந்தியாவில் இந்திரா காந்தி பஞ்சாப் மாநிலத்தின் அகாலி தளத்தை ஒடுக்குவதற்காக
பிந்த்ரான்வாலே என்ற தீவிரவாதியை வளர்த்து விட்டார்.  அது ஒரு காலகட்டத்தில் பஞ்சாபையே ரத்த
பூமியாக்கியது. இந்திராவின் உயிருக்கும் ஹானியாயிற்று.  இதே நடைமுறையின்படி குர்திஷ் விடுதலை
இயக்கங்களை ஒடுக்குவதற்காக துருக்கி அரசு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குத் தன் எல்லையைத் திறந்து விட்டது. 
அதன் மூலம் அவர்கள் குர்திஷ் இயக்கங்களின் தலைமையகம் இருந்த கொபானி என்ற நகரை
நிர்மூலமாக்கினர்.  கொபானி சிரியா - துருக்கி எல்லைப் பகுதியில் சிரியாவில் உள்ள ஒரு நகரம்.  
சென்ற ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி தென்கிழக்குத் துருக்கியில் உள்ள சுருச் என்ற ஊரில் நூற்றுக் கணக்கான
மாணவர்கள் கூடியிருந்தனர்.  போரில் சீரழிந்து விட்ட கொபானி நகரை சீரமைப்பது அவர்களின் திட்டம்.
அப்போது அந்தக் கூட்டத்தில் நுழைந்த 20 வயது குர்து இளைஞன் ஒருவன் தன் உடம்பில் கட்டியிருந்த
வெடிகுண்டை வெடிக்கச் செய்து 32 மாணவர்களைக் கொன்றான்.  நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்
அடைந்தனர்.  இந்தப் படுகொலையை நடத்தியதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டது ஐ.எஸ். அமைப்பு.  அதன்
காணொளி இது:
https://www.youtube.com/watch?v=drg-jJFGVK0
சுருச் என்ற ஊர் உர்ஃபா மாநிலத்தில் கொபானியிலிருந்து பத்து கிலோமீ ட்டரில் உள்ளது.  உர்ஃபா இப்ரஹீம்
பிறந்த ஊர்.   
சுருச் படுகொலை நடந்த இரண்டு தினங்களில் மற்றொரு முக்கியமான சம்பவம் உர்ஃபா மாநிலத்தில் உள்ள
செலான்பினார் என்ற ஊரில் நடந்தது.  குர்திஷ் தொழிலாளர் கட்சி இரண்டு போலீஸ்காரர்களைக் கொன்றது. 
இதன் விளைவாக துருக்கி முழுவதும் வன்முறை பரவியது.  
செலான்பினாரில்தான் சிரியாவிலிருந்து வரும் அகதிகளுக்கான முகாம் உள்ளது.  
 
செலான்பினார் அகதி முகாம்.  
 

சிரியாவிலிருந்து செலான்பினாருக்குத் தப்பி வரும் அகதிகள்:

 இந்த இரண்டு சம்பவங்களும் நான் துருக்கி சென்று வந்த பிறகு நடந்தவை.  அந்தச் சம்பவங்களின் விளைவாக
துருக்கி முழுவதும் ஏற்பட்ட வன்முறையில் குர்து இனத்தினரின் வியாபார ஸ்தலங்கள், வடுகள்
ீ எல்லாம்
தாக்கப்பட்டன.  நூற்றுக் கணக்கான குர்து இனத்தினர் பொதுமக்களால் கொல்லப்பட்டனர்.  போலீஸ் அந்தப்
படுகொலைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.  சில இடங்களில் போலீஸாரும்
பொதுமக்களோடு சேர்ந்து குர்து இனத்தினரைத் தாக்கினார்கள்.  

இதையெல்லாம் இங்கே நினைவு கூர்வதற்குக் காரணம், சில தினங்களுக்கு முன் – சரியாகச் சொன்னால்
ஜனவரி 12 அன்று நீலமசூதியில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம்…

=====

நிலவு தேயாத தேசம் – 14 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   22 , 2016  06:13:12 IST
Latest Novels at Attractive Price

கடையநல்லூர் நண்பர் ரியாஸ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.  ஜனவரி 12-ஆம் தேதி அன்று
நீலமசூதிக்கு வெளியே நடந்த ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதல்தான் அந்தச் செய்தி.  சம்பவத்தில் பதினோரு
பேர் உடனடியாக மரணமடைந்தனர்.  கீ ழ்வரும் புகைப்படங்களோடு நான் நீலமசூதியில் எடுத்திருந்த
புகைப்படங்களையும் சேர்த்துக் காணவும்.  ரியாஸ் அனுப்பாதிருந்தால் மறுநாள் தினசரியில் ஏதோ ஒரு
மூலையில் வந்திருந்த அந்தச் செய்தியை எல்லோரையும் போலவே நானும் கடந்து போயிருப்பேன்.  இன்றைய
வாழ்க்கையில் ஏதோ ஒரு தேசத்தில் ஏதோ ஒரு ஊரில் குண்டு வெடித்துப் பதினோரு பேர் மரணமடைவது ஒரு
விஷயமா என்ன?  அமெரிக்காவில் நடந்திருந்தாலாவது எல்லோரையும் போல் கவலைப்படலாம்.  துருக்கியில்
நடப்பதெல்லாம் ஒரு செய்தியா?  ஆனால் இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலின் நோக்கம் பத்துப் பனிரண்டு
பேரைக் கொல்வது அல்ல.  துருக்கியின் பொருளாதாரத்தையே நிர்மூலமாக்குவதுதான் அவர்களின் முதல்
நோக்கம்.  ’துருக்கிக்குச் செல்லாதீர்கள்; அங்கே எந்தக் கணமும் குண்டு வெடிக்கும்’ என்ற செய்தியை
உலகத்தினருக்குத் தெரிவிக்கவே ஐ.எஸ். அமைப்பு இதைச் செய்திருக்கிறது.  கொல்லப்பட்டவர்களில் பத்து
பேர் ஜெர்மன் தேசத்தவர்.  

சென்ற ஆண்டு மட்டும் இஸ்தாம்பூலுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே
இருபது லட்சம்.   இவர்களில் ஜெர்மானியர்களே அதிகம்.  2014-ஆம் ஆண்டு துருக்கிக்கு வந்த வெளிநாட்டுப்
பயணிகளின் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சம்.  இதில் ஜெர்மானியர்கள் மட்டும் 51 லட்சம்.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குர்து இனத்தைச் சேர்ந்த இப்ரஹீம் தத்லிஸஸ் துருக்கி அரசு ஆதரவாளராக இருப்பதால் அவருக்கு ஐ.எஸ்.
அமைப்பினால் நேர்ந்த மரணத் தாக்குதல்களைப் பற்றி சென்ற வாரம் படித்தோம்.  அதே போன்ற நிலைக்கு
ஆளாகியிருக்கும் இன்னொரு பாடகர் இருபத்தேழு வயதான ஹெல்லி லவ்.  ஈரானைச் சேர்ந்த குர்து இனப்
பாடகி.  ஹெலன் அப்துல்லா என்ற பெயரை ஹெல்லி லவ் என்று மாற்றிக் கொண்டார்.  வளைகுடாப் போரின்
போது ஈரானை விட்டுக் கிளம்பிய அவரது பெற்றோர் அகதிகளாக துருக்கியில் அலைந்து பின்னர் ஃபின்லாந்தில்
குடியேறினர்.  ஹெல்லி லவ் படித்ததும் இசை கற்றுக் கொண்டதும் அங்கேதான்.  உயிரைப் பற்றித் துளியும்
கவலைப்படாத ஹெல்லி லவ் மிகத் துணிச்சலாக பல போர்க்களங்களுக்குச் சென்று அங்கே தனது பாடல்களின்
மூலம் குர்து இன விடுதலைக்கான உத்வேகத்தை அளித்திருக்கிறார்.  குர்திஸ்தான் தேசம் அமைவதற்காக
ஆயுதம் ஏந்தாத களப் போராளி என அவரைச் சொல்லலாம்.  (புகைப்படம்)

 
 
 
இப்ரஹீமை விட இவர் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாகி இருப்பதற்குக் காரணம், இப்ரஹீமைப் போல்
இவர் ’கலை கலைக்காகவே’ என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் ஐ.எஸ். அமைப்புக்கு வெளிப்படையாக சவால்
விட்டுக் கொண்டிருக்கிறார்.  ”என்னை நீங்கள் கொன்றாலும் பரவாயில்லை; நான் பாடுவேன்.  ஏனென்றால் என்
பாடலே என் ஆயுதம்” என்கிறார் ஹெல்லி லவ்.  ஹெல்லி லவ்வின் நேர்காணல்களைக் காணும் போது
இவ்வளவு துணிச்சலாகவும் ஒரு பெண் – அதுவும் இவ்வளவு சிறிய வயதில் – அதிலும்  மிகக் கவர்ச்சியாக
புகைப்படங்களில் தோன்றும் ஒரு பாடகி – இருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது.  இவரது Risk It
All, Revolution  என்ற இரண்டு பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்.   

ஹெல்லி லவ்வின் கவர்ச்சிகரமான தோற்றம், வயது, பாடல்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது ஆரம்பத்தில்
இவர் ஏதோ பரபரப்புக்காகவும் விளம்பரத்துக்காகவும் செய்கிறார் என்று நினைத்தேன்.  ஆனால்
உண்மையிலேயே இவர் போர்க்களங்களில் உயிரைத் துச்சமாக எண்ணிச் செயல்படுகிறார்.  அதை விட
முக்கியமாக ஐ.எஸ். அமைப்புக்கு மிக மூர்க்கமான அளவில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.  எந்த
நேரத்திலும் இவர் கொல்லப்படலாம் என்று நெஞ்சம் பதைபதைக்கிறது.
https://www.youtube.com/watch?v=R21rehkNhtc
https://www.youtube.com/watch?v=1euSi4L53zY

மேலே உள்ள நேர்காணல்களைப் பாருங்கள்.  இவரது நேர்காணல்களையும்  பாடல்களையும் யூட்யூபில் 40


லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் தினந்தோறும் கொலை மிரட்டல்
வந்து கொண்டிருக்கிறது.
 
சென்ற வாரம் கொபானி என்ற ஊரைப் பற்றிக் குறிப்பிட்டேன்.  அந்த ஊரே ஐ.எஸ். தாக்குதலில் நாசமாகிக்
கிடக்கிறது.  சிரியாவின் எல்லையில் இருக்கும் ஊர்.  அங்கே வாழ முடியாமல் மக்கள் துருக்கிக்குத் தப்பி
வருகிறார்கள்.   ஒரே ஒரு கம்பி வேலியைத் தாண்டி விட்டால் துருக்கியின் Suruc என்ற ஊருக்கு வந்து
விடலாம்.  துருக்கியின் தென்கிழக்கு மாநிலமான உர்ஃபாவில் உள்ள ஊர் சுருச்.  புகைப்படத்தில் கொபானியில்
குர்து இன மக்கள் கம்பி வேலியைத் தாண்ட முடியாமல் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள்.    

 
 

சிரியாவில் அன்றாடம் கொல்லப்படும் குர்து இன மக்கள்.  


சென்ற வாரத்தில் (ஜனவரி 18) கூட சிரியாவில் ஐ.எஸ். அமைப்பு முன்னூறு பொதுமக்களைக்
கொன்றிருக்கிறது.  குண்டு போட்டு அல்ல.  ஒவ்வொருவரும் தலை வேறு முண்டம் வேறாக அறுக்கப்பட்டனர். 
சிரியா என்ற தேசமே இன்று அழிந்து கொண்டிருக்கிறது.  ஹிட்லர் யூதர்களை அழித்தது போல் குர்து இனம்
இன்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  குர்துகளுக்கு சிரியாவின் ஐ.எஸ்.ஸும் எதிரி; துருக்கி அரசும் எதிரி;
துருக்கியர்களும் எதிரி.  
***

இஸ்தாம்பூலிலிருந்து தெற்கே நேர் கீ ழாக வந்தால் இஸ்மீ ர் என்ற ஊர் வருகிறது.  அங்கிருந்து 100 கி.மீ . பயணம்
செய்தால் வரும் ஒரு சொர்க்க பூமி குஷாதாஸி.  அங்கே எங்கள் குழுவுக்கு வழிகாட்டியாக வந்த இளைஞனின்
பெயர் அப்துல் மாலிக்.  அவன் கொபானியிலிருந்து தப்பி வந்து தனக்குத் ’தெரிந்தவர்கள்’ மூலம்
பயணிகளுக்கான வழிகாட்டித் தேர்வை எழுதி குஷாதாஸி வந்திருக்கிறான்.  அவன் சிரியா பற்றியும்
தென்கிழக்குத் துருக்கி பற்றியும் ஏராளமான கதைகளைச் சொன்னான்.  

***

இஸ்தாம்பூலிலிருந்து 500 கி.மீ . தூரத்தில் இருக்கிறது இஸ்மீ ர்.  ஒரு மணி நேரப் பயணம்.  மாலை ஏழு மணிக்கு
இஸ்மீ ர் விமானத்தைப் பிடிக்க வேண்டும்.  எங்கள் குழுவில் இஸ்தாம்பூலிலிருந்து இஸ்மீ ர் செல்ல
இருந்தவர்கள் நான்கு பேர்.  ஞாபகம் இருக்கிறதா, எண்பத்தைந்து வயதான டேவிட், அவர் மனைவி லிண்டா
என்ற அமெரிக்கத் தம்பதி?  அவர்கள் எங்களுக்கு முதல் நாளே குஷாதாஸி சென்று விட்டார்கள்.  என்னோடு
வருவது எமிரா என்ற லெபனான் நாட்டுப் பெண்.  பேராசிரியை.  பொருளாதாரம்.  விமானத்தில்
தொலைதூரத்தில் அமர்ந்திருந்தவர் என்னிடம் வந்து ”இஸ்மீ ர் விமானநிலையத்தில் பார்க்கலாம்; நமக்காக ஒரு
கைடு காத்திருப்பார்.  ஒன்றாகத்தான் குஷாதாஸி போக வேண்டும்.  ஓட்டலும் ஒன்றுதான்” என்றார்.  அதோடு
முடித்து விட்டாரே என்று இருந்தது எனக்கு.  
 
புத்தகமும் சினிமாவும் உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்து வந்தால் உலகில் எந்த மூலைக்குப் போனாலும்
அங்கே உங்களுடன் பேசுவதற்கு ஆட்கள் இருப்பார்கள்.  இந்த விதி தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது.
உதாரணமாக, எனக்கு ஒரு ஃப்ரெஞ்ச் நண்பர் இருந்தார்.  அதிகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்.  கவிஞரும் கூட. 
உலக நாடுகள் பலவற்றில் பயணம் செய்திருக்கிறார்.  தமிழில் ஆதவன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,
இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களை ஆங்கிலத்தில் படித்திருக்கிறார்.  ஒரு சமயம் அவர் தமிழ்நாட்டில் ஒரு
பல்கலைக்கழகத் துணைவேந்தருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்குத் தெரிந்த மேலே குறிப்பிட்ட
எழுத்தாளர்கள் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறார்.  அந்தத் துணைவேந்தர் அவரிடம், ”நீங்கள் தவறாகச்
சொல்கிறீர்கள்.  அப்படியெல்லாம் யாரும் இங்கே எழுத்தாளர்கள் இல்லை” என்று அடித்துச்
சொல்லியிருக்கிறார்.   என் நண்பருக்குப் பெருத்த ஆச்சரியம்.  இவர் மறுத்துச் சொல்ல, தமிழ்த் துறைப்
பேராசிரியரை அழைக்கிறார் துணைவேந்தர்.  தமிழ்த் துறைப் பேராசிரியர் சமகால இலக்கியத்தில் ஆதவன்,
அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகிய பெயர்களே கிடையாது என்று அடித்துச் சொல்லி
விட்டார்.  பேராசிரியர் சொன்ன சமகால இலக்கியவாதிகள்:  ஜெயகாந்தன், இந்திரா சௌந்தரராஜன்,
பட்டுக்கோட்டை பிரபாகர், வைரமுத்து.  இவர்களுக்குச் சற்று முந்தியவர்கள்: டாக்டர் மு. வரதராசனார்,
அகிலன், கல்கி.  என் ஃப்ரெஞ்ச் நண்பருக்கு விஷயம் புரிந்து விட்டது.  என்னிடம் வந்து தலையில் அடித்துக்
கொண்டார்.  உலகில் எந்த இடத்திலும் இப்படி நடக்க வாய்ப்பில்லை.  அமெரிக்காவில் ஒரு டாக்ஸி
டிரைவரைக் கேட்டாலும் ஹெமிங்வே பெயர் அவனுக்குத் தெரிந்திருக்கும்.  ஃப்ரான்ஸில் ஒரு துப்புரவுத்
தொழிலாளி சார்த்தரையும் ஆல்பெர் கம்யுவையும் படித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் நிச்சயம் பெயர்
தெரிந்திருக்கும்.  பத்திரிகைகளில் அவர்களது ஓரிரு கதைகளைப் படித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.  தங்கள்
தேசத்தின் மொழியை வளப்படுத்திய இலக்கிய ஆசான்களைத் தெரிந்திராத ஒரே தேசம் தமிழ்நாடாகத்தான்
இருக்க வேண்டும் என்று சொன்னார்.  எல்லாவற்றையும் விடக் கொடுமை, பிரியும் போது என் நண்பரைப்
பார்த்து துணைவேந்தர் சொன்ன அறிவுரை:  திருவள்ளுவரைப் படியுங்கள்!
 
நான் சொன்னேன்: ”பல்கலைக்கழகமே இப்படி என்றால் மற்ற பகுதிகளை எண்ணிப் பாருங்கள்.  ஒரு குமாஸ்தா,
ஒரு ஆட்டோ டிரைவர்,  ஒரு மருத்துவர், ஒரு எஞ்ஜினியர் - இவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது.  
தமிழில் அவர்களுக்கு ஒரே ஒரு இலக்கியவாதியின் பெயரைக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.”  
 
துருக்கியையும் தாய்லாந்தையும் வேண்டுமானால் தமிழ்நாட்டோடு ஒப்பிடலாமே தவிர உலகில் வேறு எந்த
நாடும் இப்படி இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.  இந்தத் தொடரின் ஆரம்பத்தில்  A Prophet என்ற
ஃப்ரெஞ்ச் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் வரும் ஒரு கைதி – கொலைக் குற்றத்துக்காக ஆயுள்
தண்டனை அனுபவித்து வருபவன் – அவனுடைய அறையில் ஏதோ ஒரு எழுத்தாளனின் அறையைப் போல்
அடுக்கடுக்காகப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.  
 
சரியாக எட்டே கால் மணிக்கு எமிராவும் நானும் இஸ்மீ ர் வந்து இறங்கினோம்.  நாங்கள் வந்தது சர்வதேச
விமானம் என்பதால் சர்வதேச டெர்மினலில் நின்றோம்.  எங்கள் பெட்டிகளை எடுத்து வரும் கன்வேயர் பெல்ட்
எங்கே இருக்கும் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  வெளியே செல்வதற்கான வழியில் பல
பயணிகளும் சென்று கொண்டிருந்தார்கள்.  ஆனால் எங்கள் பெட்டியை எங்கே தேடுவது?  பொதுவாகவே நான்
வழி தவறிக் குழம்புவேன்.  எமிராவோ என்னை விட மோசமாக இருந்தார்.  அங்கே நாலைந்து மாணவர்கள்
எல்லோருக்கும் வழிகாட்டிக் கொண்டிருந்தனர்.  எங்கிருந்து வருகிறீர்கள் என்றனர்.  இஸ்தாம்பூல் என்றோம். 
அவர்களுக்குக் கொஞ்சம் குழப்பம்.  எங்களைப் பார்த்தால் இஸ்தாம்பூல்வாசிகள் போல் தெரியவில்லையே? 
எந்த நாட்டிலிருந்து?  லெபனான் மற்றும் இந்தியா.  நேரே செல்லுங்கள்.  கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீ ட்டர்
தூரம் நேரே சென்றோம்.   விமானத்திலேயே பேச எண்ணிய லெபனான் எழுத்தாளர் Ghada Samman பற்றித்
தெரியுமா, அவருடைய Beirut Nightmares படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன்.  படித்திருந்தார்.   பேசிக்
கொண்டே நடந்தோம்.  
 
1975 நவம்பரில் லெபனானில் நடந்த போரின் போது சில நாட்கள் வெளியிலேயே வர முடியாமல்
வட்டுக்குள்ளேயே
ீ முடங்கிக் கிடந்தார் ஸம்மான்.  உடன் இருந்தவர்கள் சிறிய தந்தை, அவருடைய மகன், ஒரு
வேலைக்காரன்.  பக்கத்து வட்டில்
ீ குண்டு விழுந்ததும் சிறிய தந்தை அதிர்ச்சியில் இறந்து விடுகிறார்.  
வேலைக்காரன் மீ து குண்டு பாய்ந்து அவனும் சாகிறான்.   அந்த அனுபவங்களைத்தான் காதா பெய்ரூட்
நைட்மேர்ஸ் என்ற நாவலில் எழுதியிருக்கிறார்.  அதன் ஒரு பகுதியை நான் என்னுடைய மொழியில் மொழி
பெயர்த்திருக்கிறேன் என்றேன்.  
 
எமிராவின் அழகிய பெரிய கண்கள் ஆச்சரியத்தில் மேலும் அழகைக் கொட்டியது.  அப்போது எனக்கு மற்றோர்
ஆச்சரியம் ஏற்பட்டது.  நாங்கள் வந்து சேர்ந்திருந்த இடத்தில் மனித நடமாட்டமே இல்லை.  அதோடு அந்த
இடம் எங்களை விமான நிலையத்தின் வெளியே கொண்டு வந்து விட்டிருந்தது!  அது மட்டும் அல்லாமல் ஒரு
பெரிய சுவர் வேறு எங்கள் முன்னால் நின்று கொண்டிருந்தது.  அப்போது எங்களுக்கு இரண்டு வழிகளே
இருந்தன.  ஒன்று, வந்த வழியே திரும்ப நடப்பது.  இரண்டு, U turn எடுத்து வெளியே உள்ள வழியில் நடப்பது. 
இருவர் கையிலும் அலைபேசி இருந்தும் வெளிநாட்டில் பேசக் கூடிய வசதி இல்லை.  இண்டர்நெட் இருந்தால்
வாட்ஸ் அப்பில் பேசலாம்.  எங்களுக்காக எட்டு மணிக்கே கைடு வந்து காத்துக் கொண்டிருப்பார்.  அப்போது
மணி ஒன்பதே கால்.  ஒரு மணி நேரம் நடந்திருக்கிறோம்.  
 
கேட்பதற்கு ஒரு மனித உருவத்தையும் காணவில்லை.  குழப்பத்துடன் விமான நிலையத்தின்
வெளிப்பாதையில் நடந்தோம்.  அந்தப் பாதை எப்போது எங்கே முடியும் என்று தெரியவில்லை.  எமிராவும்
ஊருக்குப் புதியவர்.  மீ ண்டும் காதா ஸம்மானை ஆரம்பித்தேன்.  

=====

நிலவு தேயாத தேசம் – 15 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   01 , 2016  02:21:43 IST
Latest Novels at Attractive Price

விமான நிலையத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் மாட்டிக்
கொள்வோம்.  இஸ்மீ ர் விமான நிலைய அனுபவம் அப்படித்தான் ஆனது.  இடைவழியில் எங்களுக்கு வழி
சொன்ன மாணவர்கள் நாங்கள் அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து வருகிறோம் என்று நினைத்துக் கொண்டு
தவறான வழியைக் காட்டி விட்டார்கள்.  நாங்கள் இஸ்தாம்பூலிலிருந்து வருகிறோம் என்று சொல்லியும்
அவர்கள் புரிந்து கொள்ளாமல் சற்று விழித்த போது நாங்கள் உஷாராகியிருக்க வேண்டும்.  நான் எமிராவிடம்
பேசுவதில் ஆர்வமாக இருந்தேன்.  எமிராவோ தன் நாட்டின் முக்கியமான எழுத்தாளர் பற்றி ஒரு இந்தியர்
பேசுவதில் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்.  வழியை விட்டு விட்டோம்.  வெளியே இருந்த பாதையில்
திரும்பவும் நடந்தோம்.  கைடு ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்துக் கொண்டிருப்பாரே என்ற பதற்றத்தில்
கொஞ்சம் வேகமாகவே நடந்ததால் அரை மணி நேரத்தில் நாங்கள் கிளம்பிய இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.
ஆனால் அது விமான நிலையத்தின் வெளிப்புறம்.
 
 
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்.  அது என் உடல்நிலை.  உடல்நிலை
என்பதை விட இதயச் செயல்பாடு என்று சொல்வதே பொருந்தும்.  வாழ்நாள் பூராவும் ஆரோக்கியமாகவே
இருந்தேன், இருக்கிறேன்.  ஜுரம், தலைவலி, வயிற்றுவலி, ஜலதோஷம் போன்ற சில்லறை நோய்களோ நீண்ட
நாள் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய பெரிய நோய்களோ எதுவும் எனக்கு வந்ததில்லை.  சென்னை
பூராவும் மக்கள் மெட்ராஸ் ஐ என்றும், சிக்கன்குனியா என்றும், டெங்கு என்றும் அல்லலுறும் போதும் என்
ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதில்லை.  பொதுவாகவே பாராசிட்டமால் போன்ற ஆங்கில மருந்துகளை அதிகம்
உட்கொண்டதில்லை.  இதற்காக அடிக்கடி கடவுளுக்கு நன்றி சொல்வதும் உண்டு.  அப்படி நன்றி சொல்லும்
போதே ஆரோக்கியத்தைக் கொடுத்து விட்டு கூடவே வறுமையையும் கொடுத்து விட்டாயே என்று
குறைப்பட்டுக் கொள்வதும் உண்டு.   ஆனாலும் பொன்னையும் பொருளையும் விட ஆரோக்கியம்தான் மிகப்
பெரிய சொத்து என்பது என் கருத்து.
 
 
ஆரோக்கியம் என்பது ஓரளவுக்கு மேலேயிருந்து கொடுக்கப்படும் பரிசு என்றாலும் அதைக் காப்பாற்ற வேண்டிய
பொறுப்பு நம்முடையது என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.  அதற்கான வாழ்முறையைத்தான்
எப்போதும் நான் பின்பற்றி வருகிறேன்.   டீ காப்பி குடிப்பது கெடுதல் என்று பொதுவான ஒரு கருத்து உண்டு.
ஒருவர் காப்பி பிரியராக இருந்தால் தினம் இரண்டு காப்பி குடிப்பதால் பெரிய கெடுதல் ஒன்றும் வந்து விடப்
போவதில்லை.  ஆனால் சரியானபடி டீ குடித்தால் அது மிகப் பெரிய ஆரோக்கியத்தையும் ஆயுளையும் நல்கும்.
சீனர்களும், ஜப்பானியர்களும் இதற்கு எடுத்துக்காட்டு.  அவர்களும் தமிழர்களைப் போல் அதிகம் மது
அருந்துபவர்கள்தான்.  ஆனால் அவர்களின் சராசரி வயது 95-ஆக இருக்கிறது.  அதை விட முக்கியமான
விஷயம், வாழும் காலத்தில் அவர்கள் நம்மைப் போல் நோயாளிகளாக இல்லை.  காரணம், அவர்கள்
இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட மதுவை அருந்துகிறார்கள்.  சீனாவில் அரிசியில் தயாரிக்கப்பட்ட வெள்ளை
ஒய்ன்.  ஜப்பானில் சாக்கே.  இது தவிர அவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம், நாள் முழுதும் பத்துப்
பனிரண்டு முறை அருந்தும் க்ரீன் டீ தான்.  சாப்பாட்டுக்கு முன்னும், சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் (இது
மிகவும் அவசியம்) ஒருநாளில் பனிரண்டு டீ குடித்து விடுகிறார்கள்.  பால் சேர்ப்பதில்லை.  உலக நாடுகள்
பலவற்றிலும் தேநீரில் பால் சேர்க்கும் வழக்கம் இல்லை.  சர்க்கரையும் சேர்ப்பதில்லை.  தேயிலையையும்
புதினாவையும் கொதிநீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து அருந்துகிறார்கள்.  துருக்கி முழுவதும் இதே
போன்ற தேநீரைத்தான் நாள் முழுதும் அருந்துகிறார்கள் என்று முன்பே குறிப்பிட்டேன்.  மொராக்கோவிலும்
இப்படித்தான்.  இந்தியாவில் இந்தப் பழக்கம் மேட்டுக்குடி வர்க்கத்தில் உண்டு.  என்னுடைய பழக்க வழக்கங்கள்
பெரும்பாலும் அந்த வர்க்கத்தைச் சார்ந்ததாகவே இருப்பதைக் கண்டு ’பிச்சைக்காரனுக்கும் மேட்டுக்குடிக்கும்
என்ன சம்பந்தம்?’ என வியந்திருக்கிறேன்.  குடிக்கும் தேநீரிலிருந்து எல்லாவற்றையுமே ஆரோக்கியத்தை
மனதில் கொண்டே வாழ்ந்தாலும் ஊழிற் பெருவலி யாவுள என வள்ளுவரும், ஊழ்வினை உறுத்து வந்து
ஊட்டும் என இளங்கோவும் சொன்னது போல் எனக்கு 2005-இல் ஒரு பெரிய மாரடைப்பும்,  2014-இல் அதைவிடப்
பெரிய மாரடைப்பும் வந்தது.   இதயத்தில் கடும் வலியுடன் உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்ட நானே நடந்து
போய் ஆட்டோ பிடித்து நண்பரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை போனேன்.  
 
 
இப்போதைக்கு இதயத்தின் ரத்தக் குழாயில் 50 சதவிகித அடைப்பு உள்ளது.  அதற்குரிய மாத்திரைகளை
உட்கொண்டு வருகிறேன்.  ஆனால் பிரச்சினை என்னவென்றால், மாலை நான்கு மணிக்கு மேல் எந்தக் கடின
வேலையும் செய்ய முடியாது.  பத்து நிமிடம் நடந்தாலே கடுமையான நெஞ்சு வலி உண்டாகும்.  மாடிப்படி கூட
ஏற முடியாது.  ஆனால் ஆச்சரியகரமாக துருக்கியில் நான் என்ன அலைந்தும் நடந்தும் நெஞ்சு வலியே
வரவில்லை.  கப்படோச்சியாவில் ’குகை ஓட்டலில்’ எனக்குக் கிடைத்தது நான்காவது மாடி.  படிகளும்
குகையின் படிகளே.  கொஞ்சமும் நெஞ்சு வலி வரவில்லை.  எந்த உளவியல் காரணங்களும் இல்லை.  வலி
வரும் என்று பயந்து கொண்டுதான் இருந்தேன்.  வரவில்லை.  அங்குள்ள உணவு ஒரு காரணமாக இருக்கலாம்
என்று நினைக்கிறேன்.
 
 
பன்றிக் கறி,  மாட்டுக் கறி, பாலாடைக்கட்டி போன்ற கொழுப்பு உணவுகளைக் கன்னாபின்னாவென்று தின்னும்
ஐரோப்பியர்களுக்கு ஏன் மாரடைப்பு வருவதில்லை? ஆனால் பயந்து பயந்து வாரத்துக்கு ஒருமுறை கால்
கிலோ இறைச்சி எடுத்து (குடும்ப உறுப்பினர் ஐந்து பேர்!) சாப்பிடும் பாவாத்மாவான இந்தியர்களுக்கு ஏன் 50
வயதிலேயே மாரடைப்பு வந்து விடுகிறது?  நீண்ட காலமாக எனக்குள் இருந்து வரும் சந்தேகம் இது.  இதற்கு
என் நண்பர் ஞான பாஸ்கர் ஒரு பதில் சொன்னார்.  ஐரோப்பியர்கள் தெரிந்தோ தெரியாமலோ Paleo Food
உண்கிறார்கள்.  கொழுப்பே உணவு.  சொன்னதோடு மட்டுமல்ல; வெறும் கொழுப்பையே உண்டு அவர்
இப்போது ஒரு ஹாலிவுட் வில்லன் போன்ற தோற்றத்தைப் பெற்று விட்டார்.  அரிசி, கோதுமை, பழம் எதுவும்
தொடுவதில்லை.  வெறும் மாமிசம்.  பச்சை மாமிசம் என்று நினைத்து விடாதீர்கள்!  சமைத்ததுதான்.
சைவர்களுக்கும் பேலியோ உணவு முறை இருக்கிறது என்கிறார்கள்.  உடம்பில் இருந்த அத்தனை கறியும்
கரைந்து இப்போது ‘கிண்’ணென்று இருக்கிறார் ஞான பாஸ்கர்.  இது தொடர்பாக நியாண்டர் செல்வனின்
கட்டுரைகளை நீங்கள் படித்துப் பார்க்கலாம்.  ஆனால் நான் இந்தத் தொடரில் அந்த ஆராய்ச்சிக்கெல்லாம்
செல்ல விரும்பவில்லை.  எனக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே பிச்சைக்காரனை விட கேவலமாக
இருப்பதால் பேலியோ உணவையெல்லாம் பரிசோதித்துப் பார்க்கும் நிலைமையில் இல்லை.   இப்படிப்பட்ட
எனக்கு துருக்கியில் மாலை நான்கு மணிக்கு மேல் வரும் இதயவலிப் பிரச்சினை வரவே இல்லை. உணவுதான்
காரணம்.  அது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  ஆனால் மேற்கிலிருந்து கிழக்கே செல்லச் செல்ல
ஐரோப்பிய உணவு மெல்ல மெல்ல மறைந்து நம் ஊரைப் போல் காரமும் எண்ணெயும் சேர்ந்து கொள்கிறது.
கப்படோச்சியாவிலேயே அந்த மாற்றத்தை உணர முடிந்தது.  
 
 
இவ்வளவும் எதற்குச் சொல்கிறேன் என்றால், இஸ்மீ ரின் விமானநிலையத்தில் இரவு எட்டு மணியிலிருந்து
ஒன்பதே முக்கால் மணி வரை நடந்தும் ஒரு வலியும் தெரியவில்லை.  கைடாக வந்த பெண் கடும் கோபத்தில்
இருந்தார்.  இருபது வயதுதான் இருக்கும்.  எதுவும் பேசவில்லை.  தவறு எங்களுடைய அல்ல என்று சொல்லி
என்ன நடந்தது என்றும் விளக்கினோம்.  அந்தப் பெண் எதுவும் பதில் சொல்லவில்லை.   எங்கள் சாமான்கள்
விமானநிலையத்தின் உள்ளே இருந்தன.  நாங்கள் வெளியே இருந்தோம்.   மீ ண்டும் உள்ளே போக முடியாது.
அந்தப் பெண்ணே விமானநிலைய அதிகாரியிடம் பேசி நான் மட்டும் உள்ளே போக அனுமதி வாங்கினார்.
நான் நினைத்தது போல் இஸ்மீ ரிலேயே தங்கவில்லை.  இன்னும் போக வேண்டுமா என்று எமிராவிடம்
கேட்டேன்.  ”முன்பே சொன்னேனே, நாம் தங்கப் போவது குஷாதாஸி” என்றார்.  இஸ்மீ ரிலிருந்து காரில்
ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து குஷாதாஸி வந்து சேர்ந்த போது மணி கிட்டத்தட்ட பனிரண்டை
நெருங்கியது.  அந்த நேரத்திலும் நாங்கள் தங்கவிருந்த ஓட்டலின் உணவகம் திறந்தே இருந்தது.  ஓட்டலுக்கு
ஐம்பதடி தூரத்தில் இஜீயன் கடல்.  எப்போது படுத்தாலும் எனக்கு அதிகாலையில் விழிப்பு வந்து விடும்.  எழுந்து
பல் துலக்கி விட்டு அறையிலேயே க்ரீன் டீ போட்டு எடுத்துக் கொண்டு வெளியே எட்டிப் பார்த்தால் கடலில்
ஒருவர் தூண்டில் போட்டு மீ ன் பிடித்துக் கொண்டிருந்தார்.  (புகைப்படம்)
 

தேநீர்க் கோப்பையுடன் கீ ழே இறங்கிப் போய் அங்கே இருந்த உணவகத்தில் அமர்ந்தேன்.  நீண்ட நேரம்
ஒன்றுமே செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.  பெரும் பரவச உணர்வு மனதை ஆட்கொண்டது.  கடலின்
மேலே ஒரு ஸீகல் பறந்து கொண்டிருந்தது.  ஒருக்கணம் அந்தப் பறவைக்கும் தூண்டில்காரரருக்கும் எனக்கும்
ஒரு உறவு ஏற்பட்டது போல் தோன்றிற்று.  அந்த எண்ணமே ஒருவேளை என்னுடைய ஆணவத்தைக்
காட்டுகிறதோ எனத் துணுக்குற்றேன்.  ஸீகல் தன்னிச்சையாகப் பறந்து கொண்டிருக்கிறது.  தூண்டில்காரர்
தன்னிச்சையாக அமர்ந்திருக்கிறார்.  நான் தான் அந்த இருவரையும் என்னையும் இணைத்து ஏதேதோ வலை
பின்னிக் கொண்டிருக்கிறேன்.  தெருவில் ஒரு சந்தடி இல்லை.  சுற்றுலாப் பயணிகளின் ஊர்.   ஜனத்தொகை
60000 தான் என்றாலும் பயணிகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தையும் தாண்டும் என்று படித்திருந்தேன்.
எல்லோரும் மது அருந்தி விட்டு உறங்கிக் கொண்டிருப்பார்கள்.  மீ ண்டும் அந்த ஸீகல் பறவையைப் பார்த்ததும்
எனக்கு முராகாமியின் ’மனிதனைத் தின்னும் பூனைகள்’ கதை ஞாபகம் வந்தது.  அதிலும் இதே இஜீயன் கடல்.
ஒரு ஸீகல்.  துருக்கிக்குப் பதிலாக கிரேக்கத் தீவு ஒன்று.  முராகாமி தீவின் பெயரைச் சொல்லவில்லை.
ஆனால் தீவிலிருந்து பார்த்தால் துருக்கி தெரிகிறது.
 
 
நேற்று நள்ளிரவில் உணவு அருந்தும் போது பணியாளர் உலகின் மிகச் சிறந்த வைன் இஸ்மீ ர் வைன் என்று
சொல்லி ஒரு வைன் போத்தலை மேஜையில் வைத்தார்.  எமிராவுக்குக் குடிக்கும் பழக்கம் இல்லையாம்.
 
 
அப்போது நான் “Obviously” என்று சொல்லி விட்டேன்.  அவர் ஒரு முஸ்லீம் பெண் என்பதால் அப்படிச்
சொன்னேன்.  ஆனால் அவருடைய பதிலிலிருந்து அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாது என்று தோன்றியது.
சிரித்துக் கொண்டே “பெய்ரூட்டில் எல்லா உணவகங்களிலும் வைனும் பியரும் மற்ற ஆல்கஹால்
ஐட்டங்களும் உண்டு.  எந்தத் தடையும் இல்லை.  சாலைகளிலும் நிறைய மது விளம்பரப் பலகைகளைப்
பார்க்கலாம்.  லெபனிய முஸ்லீம்கள் மற்ற அரபி முஸ்லீம்களைப் போல் அல்ல.  எங்கள் நாட்டில் 60
சதவிகிதம்தான் முஸ்லீம்கள்; மீ தி கிறிஸ்தவர்கள்” என்றார்.
“ஓ… பிறகு ஏன் நீங்கள் குடிப்பதில்லை?”
 
 
“ஓரிரண்டு முறை வைன் குடித்துப் பார்த்தேன்.  ஒரேயடியாகத் தூக்கம் வருகிறது.  ஏற்கனவே நான் ஒரு
Sleepyhead.  அதோடு வைனை வேறு குடித்து விட்டுத் தூங்க வேண்டுமா என்றுதான்…”
 
 
இருந்தாலும் உலகின் மிகச் சிறந்த வைன் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்று ஒரு கோப்பை
அருந்தினார்.  ”எந்த வைனுமே குடிக்காத போது சிறந்த வைனை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்? எப்படி
இருக்கிறது?” என்றேன்.  ஒன்றும் சொல்லாமல் சிரித்தார்.  நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றேன்.
 
 
”இன்று ஒருநாள் விதிவிலக்கு கொடுங்கள்; உலகின் மிகச் சிறந்த வைனுக்காக.”
 
 
எப்பேர்ப்பட்ட நிலை பாருங்கள் எனக்கு.  எதிரே பத்தடி தூரத்தில் இஜீயன் கடல்.  குஷாதாஸி என்று
அழைக்கப்படும் இந்தச் சிறிய ஊர் இஜீயன் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய சொர்க்கம்.  என் எதிரே ஒரு
லெபனியப் பெண்.  மென்மையாகப் பேசுவதிலும் பழகுவதிலும் உலகிலேயே ஈடு இணையற்றவர்கள்
லெபனியர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  இவ்வளவுக்கும் சிகரம் வைத்தாற்போல் உலகின் மிகச் சிறந்த
வைன்.
 
 
அப்பேர்ப்பட்ட வைனை வேண்டாம் என்று மறுத்தேன்.  அந்தக் கணத்தில் என்னையே கொஞ்சம் பாராட்டிக்
கொள்ளவும் செய்தேன். ஆம்… கொஞ்சம் கூட அந்த வைனின் மீ து எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை.  ஏன் என்று
கேட்டார் எமிரா.
 
 
 
“குடித்தால் நான் வெளியூர் போகும் போதெல்லாம் குடிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.  அப்படிச் செய்தால்
பயணமே கெட்டு விடுகிறது.  இமயமலைக்கு நண்பர்களுடன் போனேன்.  எப்படிப்பட்ட இடம் அது!  அங்கே
போய் இரவில் குடித்தேன்.  அதிலிருந்துதான் குடியை அறவே விட வேண்டும் என்று தோன்றி விட்டது.
இப்போது ஒரு கோப்பை குடித்தால் இன்னொரு இடத்தில் இன்னொரு கோப்பை குடிக்க வேண்டும் என்று
தோன்றும்.  இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒரு ஐரோப்பியனைப் போல் வாழ்ந்து
கொண்டிருக்கும் நான் இந்த மது விஷயத்தில் மட்டும் இந்தியனாகவே இருக்கிறேன்…”
 
 
”அப்படியென்றால்…?”
 
 
“சுயநினைவை இழக்கும் வரை குடித்துக் கொண்டே இருப்பது…”
 
 
சிறிது நேரம் சென்ற பிறகு ஒரு ஸ்பூனை எடுத்து காப்பிக்கு எவ்வளவு டிகாக்ஷன் போட்டுக் கொள்வோமோ
அத்தனை அளவு எடுத்து - இரண்டு ஸ்பூன் - ஒரு கோப்பையில் ஊற்றி நாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஒற்றிக்
கொண்டேன்.  தேன்.  அமிர்தம்.  காதலியின் இதழ்நீர்.  ம்ஹூம்.  அந்தச் சுவைக்கு ஈடாக எதையுமே சொல்ல
முடியாது.  ஆனாலும் குடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.  நான் சொல்வதை நம்புங்கள்.  இந்தக்
கட்டுரைக்காக இதை எழுதவில்லை.  அந்த வைனைக் குடிக்க வேண்டும் என்று இம்மியளவு கூட
தோன்றவில்லை.
 
 
முந்தைய இரவு பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே தூண்டில்காரருக்கு மீ ன் சிக்கி விட்டதைப்
பார்த்தேன். அப்போது இரண்டு முதியவர்கள் அவரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
(குஷாதாஸி என்றால் பறவைகளின் தீவு.  ஆகாயத்திலிருந்து பார்த்தால் குஷாதாஸி பறவையின் தலை போல்
இருப்பதால் அந்தப் பெயர்.)
 
 
ஹாய் சாரு என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே எமிராவும் உணவகத்துக்கு வந்து சேர்ந்தார்.  அப்பாடா,
காலையிலேயே எழும் பழக்கம் உள்ளவர் போலும்.  நிம்மதியாக இருந்தது.   அப்போது நேற்றே கேட்க
வேண்டும் என்று நினைத்த அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டேன்.  ”உலகிலேயே லெபனியர்கள்தான் மிகவும்
மென்மையாகப் பேசுபவர்கள்; பழகுவதற்கும் இனியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் பார்த்த வரை
அது உண்மையாகவும் இருக்கிறது.  இது பற்றி உங்களுக்குத் தெரியுமா?”
 
 
”உண்மைதான்.  லெபனியர்களே அதை அடிக்கடி சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள்.  ஆனால் சற்றே கருப்பு
நிறத்தில் இருக்கும் சிரியர்களை (Syrians) அவர்கள் தங்களை விட மட்டமாக நினைக்கிறார்கள்.  அதை என்னால்
ஒப்புக் கொள்ள முடியவில்லை.  மென்மை, இனிமை என்பதெல்லாம் தங்களை மேலே வைத்துக் கொண்டு
வரக் கூடாது.  கீ ழேயிருந்து வர வேண்டும்.  ’நீங்கள்தான் பெரியவர்கள்.  நான் உங்களை விடச் சிறிய மனிதன்’
என்ற மனோபாவம்தான் உண்மையிலேயே இனிமையும் மென்மையும் கொண்டது.  அப்படி நினைக்கும்
மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா சாரு?”
 
 
எனக்கு உடனே ஆண்டாளின் திருப்பாவை ஞாபகம் வந்தது.  எப்போதும் என் நினைவிலிருந்து நீங்காதிருக்கும்
அந்தப் பாடலை தமிழிலேயே பாடிக் காண்பித்தேன்.
 
 
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீ ர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
 
 
அதில் குறிப்பாக ’வல்லீர்கள் நீங்களே, நானே தானாயிடுக’ என்ற பகுதி.  ’நீங்களே வல்லவர்கள்; நல்லவர்கள்;
நான் தான் பலஹீனமானவள்; வாயாடி எல்லாம்’ என்பதை எமிராவிடம் விளக்கினேன்…

=====

நிலவு தேயாத தேசம் – 16 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   08 , 2016  04:48:42 IST
Latest Novels at Attractive Price

குஷாதாஸியில் தங்கியிருந்த இரண்டு தினங்களும் எமிராவும் நானும் பேசிக் கொண்டதையெல்லாம்


எழுதினால் அது லெபனான் பற்றிய தனிப் புத்தகமாகத்தான் வரும்.  அதனால் அந்த உரையாடல்களிலிருந்து
சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.  அதற்கு முன்னால் ஒரு விஷயம்.  நம்முடைய எல்லா
செயல்பாடுகளிலும் ஒரு அரசியல் தேர்வு இருக்கும்.  அரசியல் என்றால் தேர்தல் அரசியல் அல்ல என்பதை
விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.  ’எனக்கு அரசியல் வேண்டாம்; நான் நடுநிலையானவன்’
என்று சொன்னால் அதுவுமே ஒரு அரசியல் நிலைப்பாடுதான். 
 
இலக்கியம், சினிமா, குடும்பம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. 
சமகால இலக்கியத்தில் ஆரம்ப காலத்தில் ரஷ்ய இலக்கியமும் அதன் பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியமும்
அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.  இரண்டாவதில் நானும் தீவிரமாகப்
பங்காற்றியிருக்கிறேன்.  அதன் பிறகு என் ஈடுபாடு அரபி இலக்கியத்தின் பக்கம் திரும்பி விட்டது.  இதுதான்
என்னுடைய அரசியல்.  இஸ்லாமியக் கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்ததால் எனக்கு அது இயல்பாகவும்
ஆனது.  அந்த அரசியல் என்னை வேறோர் முக்கியமான இடத்துக்கு இட்டுச் சென்றது.  பன்மைத்துவத்தைத்
தனது சிறப்பாகக் கொண்ட இந்தியக் கலாச்சாரத்தை இந்துத்துவம் என்ற கருத்தாக்கம் எப்படி ஒற்றைப்
பரிமாணமாகக் குறுக்குகிறதோ அதேபோல் மேற்கத்திய ஊடகங்களும் இஸ்லாமை ஒற்றைப் பரிமாணத்தில்
பார்க்கிறது.  இதை ஒரு மாபெரும் வரலாற்று மோசடி என்றே சொல்லலாம்.  ஒரு பங்களாதேஷி முஸ்லீமும்
துன ீஷிய முஸ்லீமும் ஒன்று அல்ல.  அவர்களின் கலாச்சாரம் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு
வேறுவேறானது.
 
2007-க்கு முன்னால் இரானில் தெருக்களிலேயே பெண்கள் புகை பிடிப்பதைக் காண முடிந்தது.  2007-இல் யாரும்
பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று சட்டம் போட்டார்கள்.  இந்தியா போலவே இரானிலும் மக்கள்
சட்டத்தை மதிப்பதில்லை என்றாலும் பெண்கள் இப்போது சாலைகளில் புகை பிடிப்பதில்லை.  ஆனாலும்
பூங்காக்களிலும் தனிப்பட்ட பார்ட்டிகளிலும் புகை பிடிப்பதைக் காணலாம்.  இதே இரானில்தான்
திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவு கொள்ளும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லும்
தண்டனையும் அமுலில் இருக்கிறது.  எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் நான் அங்கே உள்ள சினிமா
அரங்கத்துக்குச் சென்று விடுவேன்.  சினிமா அரங்கம், பள்ளிக்கூடம், மருத்துவமனை, மார்க்கெட், கீ ழ்த்தட்டு
மக்களுக்கான மதுபான விடுதிகள் போன்ற இடங்கள்தான் ஒரு தேசத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு
உகந்த இடங்கள்.
 
இரான் பற்றிய இரண்டு ஆவணப் படங்களை எனக்கு சிபாரிசு செய்தார் எமிரா.  முதலாவது படத்தில் ஒரு
ஆச்சரியமான விஷயம் மாட்டியது.  இரானில் சினிமா தியேட்டர்களில் படம் ஓடும் போதே எல்லா
விளக்குகளும் எரிகின்றன!  காரணம்?  இருட்டாக இருந்தால் ஆண்களும் பெண்களும் ’தப்புக்’ காரியத்தில்
ஈடுபட்டு விடுகிறார்களாம்!  அடுத்த படம், இரானில் விபச்சாரம்.  விபச்சாரத்துக்கு அங்கே கடுமையான
சட்டங்கள் இருந்தாலும் சட்டத்தை மீ றி விபச்சாரம் வெகுவாகப் பரவியிருக்கிறது.  14, 15 வயது
சிறுமிகளெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.  காரணம்: வறுமை, கல்வியறிவு இன்மை,
வேலையில்லாத் திண்டாட்டம், வேலை கிடைத்தாலும் மிகக் குறைவான சம்பளம்.  இதையெல்லாம் விட
முக்கியமான காரணம், விவாகரத்து.  விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை தேசத்துக்குத்
தேவையில்லாதவர்களைப் போலவே நடத்துகிறது இரானிய சமூகம்.  அவர்கள் வெறும் நடமாடும் பிணங்கள். 
அவர்கள்தான் அதிகமாக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.  மாட்டினால் சிறை என்று தெரியும்.  தெரிந்தாலும்
வேறு என்ன செய்வது?  அவர்களுக்கு எல்லா வழிகளும் மூடப்பட்டிருக்கின்றன. 
 
அந்த ஆவணப் படத்தில் வரும் பெண்களின் பேச்சுக்கள் இவை:
 
பெண் 1: ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் நான் ஆசிரியர் பணிக்குச் சென்றால் அந்த வேலையோடு
சேர்த்து நான் அவரது வைப்பாட்டியாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.  மாதச் சம்பளம்: 50 டாலர்.  அதே
சமயம் ஒரு கம்பெனியில் செக்ரடரியாகச் சேர்ந்தால் அந்த வேலைக்கான எல்லா தகுதிகளும் எனக்கு
இருந்தாலும் அந்த செக்ரடரி வேலையோடு கூட என் அதிகாரிக்குக் காதலியாகவும் இருக்க
வேண்டியிருக்கிறது.  மாதச் சம்பளம்: 35 டாலர். ஆக, செக்ஸ் ஒர்க்கருக்கும் இந்த வேலைகளுக்கும் என்ன
வித்தியாசம் இருக்கிறது?  இந்த நாகரீக வேலைகளில் முன்பின் தெரியாத ஒருத்தரோடு படுக்க வேண்டும்;
செக்ஸ் தொழிலில் முன்பின் தெரியாத பல பேர்.  பதினைந்துக்குப் பதினைந்து உள்ள சிறிய அறையில்
வாழ்வதற்கே சட்டத்துக்குப் புறம்பான பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.  ஆனால் நான் ஏன்
இவ்வளவு சிறிய அறையில் வாழ வேண்டும்?  ஏன் ஒரு அபார்ட்மெண்ட்டில் வாழக் கூடாது? என்ன கேட்டீர்கள்,
வாடகைக்குத்தான்.  சொந்த வடெல்லாம்
ீ கற்பனைக்கும் எட்டாத விஷயம்.  நான் தனியாக இருக்கும் போது
கவிதை எழுதுகிறேன்.  வாழ்க்கை ஜாலியாக இருக்கிறது.  என் மனதுக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கிறதோ
அதைச் செய்கிறேன்.  ஆனால் உங்களிடம் நான் மிக நிச்சயமாகச் சொல்லுவேன், நான் சந்தோஷமாக இல்லை. 
என்னுடைய உடலை ஒரு அந்நிய மனிதனுக்கு விற்று பணத்தைப் பெறுவதா சந்தோஷம்?  இந்தத் தொழில் என்
மனதை ரணமாக்குகிறது.  இருந்தாலும், வாழ்வின் எதார்த்தங்களை நான் எதிர்கொண்டாக வேண்டும்;
வாழ்ந்தாக வேண்டும்.  கிராமங்களில் வசிக்கும் பல பெண்கள் ஏதேதோ காரணங்களால் சிறைக்குச்
செல்கிறார்கள்.  சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு திரும்பவும் அவர்கள் தங்கள் வடுகளுக்குச்
ீ செல்ல
முடியாது.  அவர்களின் ஒரே இலக்கு டெஹ்ரான் தான்.  டெஹ்ரானுக்கு எப்படி வருவது?  லாரி டிரைவர்களோடு
படுத்தால்தான் டெஹ்ரானுக்கு வர முடியும்.  இப்படித்தான் டெஹ்ரான் வரும் ஒவ்வொரு பெண்ணின்
வாழ்க்கையும் துவங்குகிறது.
 
இந்தச் சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது.  செக்ஸ் என்பது மனிதனின் அற்புதமான ஒரு அடிப்படை
உணர்வு.  நீங்கள் காதலிக்கும் நபரோடு அதை மிகவும் இனிமையாக அனுபவிக்க வேண்டும்; பகிர்ந்து கொள்ள
வேண்டும்.  ஆனால் எங்கள் தேசத்தில் செக்ஸ் என்பது மிக அருவருப்பான விஷயமாகக் கருதப்படுகிறது. 
இங்கே அது வருமானத்துக்குரிய ஒரு தொழிலாக மாறி விட்டது.   ஒரு மனிதனிடம் பணம் வாங்கிக் கொண்டு
என் உடம்பை அவன் பயன்படுத்திக் கொள்வதற்காகக் கொடுக்கும் போது அதை எப்படி செக்ஸ் என்று சொல்ல
முடியும்?  பசிக்கு உணவைப் போல, சுவாசிக்கக் காற்றைப் போல செக்ஸ் எனக்குத் தேவைப்பட வேண்டும். 
ஆனால் இந்த நாட்டில் செக்ஸ் ஒரு ரகசியம்; பெண்களை விற்கும் சந்தை.
 
செக்ஸ் மீ தான தடைகள்தான் இதற்கெல்லாம் காரணம்.  செக்ஸ் என்பது இங்கே அசிங்கம்.  இந்தப் பார்வைதான்
எங்களுடைய அன்பையும் பாசத்தையும் நுண்ணுணர்வுகளையும் தீர்த்துக் கட்டுகிறது;  உடல், ஆன்மா
இரண்டையும் அவமானப்படுத்துகிறது.  இப்படிப்பட்ட வாழ்வில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது? 
யாருக்குமே இங்கே மனரீதியான திருப்தி ஏற்படுவதில்லை சார்.  யாருக்குமே ஏற்படுவதில்லை.  என்னோடு
படுத்து பத்து நிமிடங்களில் அவர்களின் உடம்பை திருப்திப்படுத்திக் கொள்ளலாம்.  ஆனால் என்
போன்றவர்களோடு படுத்து மனரீதியான திருப்தியை ஒருவர் அடைய முடியுமா?  எல்லாவற்றுக்கும் காரணம்,
நீங்கள் இந்த தேசத்தில் சுதந்திரத்தையே அனுபவிப்பதில்லை.  ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது
நீங்கள் மனம் விட்டுப் பேச முடியாது.  என் மனதில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும்.  ஆனால் பேச முடியாது. 
அந்த விஷயங்களே உங்களுக்கு அச்சத்தைத் தருவதாக இருக்கும்.  அதனால் எல்லாவற்றையும் மனதில்
போட்டு சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.  பிறகு மனதுக்குள் தணிக்கை செய்தபடி பேச வேண்டும்.
 
ஒரு சந்துக்குள் நின்று கொண்டு நீங்கள் எது சாதாரண வடு,
ீ எது ’தொழில்’ நடக்கும் வடு
ீ என்றே வித்தியாசம்
கண்டு பிடிக்க முடியாது.  எனக்குத் தெரிந்த ஒரு பெண் மதிய உணவுக்காகத் தன் உடலை விற்கிறாள்.  பசி
வந்தால் என்ன செய்ய முடியும்?  பெற்றோர் தங்கள் குழந்தைகளை விற்கிறார்கள்; தங்கள் உடலை
விற்கிறார்கள்.  ஏன்?  ஒரு குழந்தையை பிராத்தலுக்கு அனுப்பினால் ஐந்து குழந்தைகளுக்கு உணவு தர
முடியும்.  அதுதான் காரணம்.  ஏகப்பட்ட இளம் பெண்கள் இந்தத் ’தொழிலில்’ சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். 
அவர்களை நீங்கள் குற்றம் சொல்ல முடியாது.  சூழ்நிலை அப்படி.  எல்லா வேலைகளையும் முயன்று பார்த்து
விட்டுக் கடைசி கடைசியாகத்தான் அவர்கள் இங்கே வருகிறார்கள்.
 
பெண் 2: என் குழந்தைக்குப் பால் பவுடர் வாங்குவதற்காகத்தான் இந்தத் தொழிலில் இறங்கினேன்.  ஆரம்பத்தில்
ஆஸாதி சதுக்கத்தில் அமர்ந்து பிச்சை எடுத்தேன்.  பிறகு எல்லோரும் சொன்னார்கள், நீ அழகாக இருக்கிறாய்,
பிச்சை எடுக்கக் கூடாது என்று. (அழுகிறாள்) ஒருத்தர் சொன்னார், என்னோடு படு, பத்து டாலர் தருகிறேன்
என்று.  இன்னொருவர் இருபது டாலர் தருவதாகச் சொன்னார்.  அவர்களின் கார்களில் ஏறிக் கொண்டேன்.  என்
குழந்தையின் மீ து ஆணையிட்டுச் சொல்கிறேன்.  இப்படிச் செய்வதை நான் விரும்பவே இல்லை.  ஆனால் என்
குழந்தைக்குப் பால் பவுடர் வாங்குவதற்காகத்தான் நான் இதில் இறங்கினேன்.  இந்தத் தொழிலை நான்
வெறுக்கிறேன்.  வெறுக்கிறேன்.  (கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார்.)
 

 
ஒரு குறிப்பு:  இரானில் மூன்றில் ஒரு பங்கு பிச்சைக்காரர்கள் – 37 சதவிகிதம் -  பெண்கள்.  இரானில் வடு

இல்லாதவர்களில் 15 சதவிகிதம் பெண்கள். 
 
பெண் 3: எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  என் குழந்தைகளின் மீ து ஆணையிட்டுச்
சொல்கிறேன்.     ஒருநாள் இந்த இடத்துக்கு வந்து சேருவேன் என்று நான் நினைத்ததே இல்லை.  மிகச் சிறிய
வயதிலேயே எனக்குத் திருமணம் ஆகி விட்டது.  அப்போது என் வயது 14. பிறகு எனக்கு விவாகரத்து ஆனது. 
வாழ வேறு வழி தெரியவில்லை.  அதனால்தான் இங்கே வந்து சேர்ந்தேன்.  முதல் தடவை என் வட்டு

வாடகைக்காக இதைச் செய்ய வேண்டியிருந்தது.  வட்டு
ீ சொந்தக்காரர் தினந்தோறும் வந்து கதவைத்
தட்டினார்.  என்ன செய்வதென்றே தெரியவில்லை. 
 
பெண் 4: இந்தச் சமூகத்தில் ஒரு பெரிய குடும்பத்தையே பாதுகாக்க வேண்டியிருக்கும் என்னைப் போன்ற
பெண்களுக்கு இதுதான் சிறந்த தொழில்.  பெரிய படிப்பு இல்லாததால் நல்ல ஊதியம் கிடைக்கும்
வேலைகளுக்கும் போக முடியவில்லை.  அப்படியே போனாலும் அங்கேயும் நாங்கள் எங்களைக் கொடுத்தாக
வேண்டும்.  இல்லாவிட்டால் மிகக் குறைந்த சம்பளம்தான் கிடைக்கும். 
 
பெண்  5:  இந்த நாட்டில் கௌரவமாக வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியும் என்று எனக்குத்
தோன்றவில்லை.  வேலைக்குப் போனால் அங்கேயும் நம் உடம்பைத்தான் அளக்கிறார்கள்.  எனக்கு
மதமெல்லாம் தேவையில்லை; நான் ஒரு சாதாரணமான பெண்ணின் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ
விரும்புகிறேன்.  ஆனால் வேலை எங்கே கிடைக்கிறது?  என்னை யார் காப்பாற்றுவார்?  சமூகமா, சட்டமா,
குடும்பமா?  எனக்கு இந்த எதுவுமே இல்லை.  எனவே என் உடலை விற்க முடிவு செய்தேன். 
 
மற்ற வேலைகளுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை சார்.  எல்லாம் ஒன்றுதான்.  என் குழந்தையின்
பராமரிப்புப் பொறுப்பை ஏற்பதில் எனக்கு சில சிக்கல்கள் இருந்தன.  குடும்ப நீதிமன்றத்துக்குப் போனேன். 
நீதிபதியிடம் கெஞ்சினேன்.  என் ஆதரவற்ற நிலையை விளக்கினேன்.  குழந்தையை என்னிடம் கொடுப்பதற்கு
உத்தரவிட்டால் அவர் என்ன கேட்டாலும் தருகிறேன் என்றேன்.  அந்த நீதிபதி என்ன கேட்டார் தெரியுமா?  ”நீ
எனக்குக் கொடுக்கக் கூடியது ஒன்றே ஒன்றுதான்.  என் வைப்பாட்டியாக இரு.”  நீதிபதி என்றால் இந்த நாட்டில்
மதகுரு என்று பொருள்.  மதகுருவை விடப் பெரியவர் இந்த நாட்டில் வேறு எவரும் உண்டா?  அவர்தான்
என்னிடம் அப்படிக் கேட்கிறார்.  “உங்களுக்கு மனைவி இல்லையா?” என்று அவரைக் கேட்டேன்.  அதற்கு அவர்
”எத்தனை மனைவிகளைக் காண்பிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” என்றார். 
 
விவாகரத்து பெறச் சென்ற போது அங்கேயிருந்த நோட்டரி பப்ளிக் (அவரும் ஒரு மதகுருதான்) ”நீ மிகவும்
இளமையாக இருக்கிறாய்.  நீ விவாகரத்து பெறத் தேவையில்லை.  திருமணமான ஆண்களுக்குப்
பெண்களையும் திருமணமான பெண்களுக்கு ஆண்களையும் நான் திருமணம் செய்து வைக்கிறேன்.  உன்
அடையாள அட்டையில் உன் கணவனின் பெயரே இருக்கட்டும்.  அவரிடமிருந்து விவாகரத்து வாங்காமலேயே
உன்னை இன்னொரு திருமணமான ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்” என்றார்.  எனக்கு
ஆச்சரியமாகப் போய் விட்டது.  ”ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர்கள் இருக்க முடியுமா?” என்றேன். அவர்
”முடியும், பணத்தை எடு” என்றார்.  இந்த தேசத்தில் நீங்கள் எந்த மூலைக்குப் போனாலும் அங்கே நாற்றத்தை
மட்டுமே பார்க்க முடியும்.  எந்த மூலைக்குப் போனாலும்…  (அழுகிறார்)  நான் ஒரு சிகரெட் குடித்துக்
கொள்ளலாமா சார்?  (சிகரெட்டைப் பற்ற வைத்துக் குடித்துக் கொண்டே தொடர்கிறார்…) இந்தத் தொழில் ஒரு
பெண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று விடும்.  சீக்கிரமே தோலெல்லாம் சுருங்கி விடும்.  மனதளவில்
இது ஏற்படுத்தும் காயங்களைப் பற்றிப் பேச வார்த்தைகள் இல்லை.  கொடுமை.  பெரும் கொடுமை.  அடிக்கடி
எனக்கு உளவியல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.  அப்போது கைகள் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன. 
இந்த நரகத்திலிருந்து விடுதலை அடைவதற்காக இறைவனை வேண்டினேன்.   
 
இரானில் நெடுஞ்சாலைகளில் பள்ளிச் சிறுமிகளைப் போல் தோற்றம் தரும் சிறு பெண்கள் உடம்பு பூராவையும்,
தலைமுடியையும் மறைத்த ஆடையை அணிந்து நின்று கொண்டிருப்பார்கள்.  வேகவேகமாகச் செல்லும்
கார்களில் சில அவர்களைக் கண்டதும் நிற்கும்.  அந்தப் பெண்கள் அதில் ஏறிக் கொள்வார்கள்.  கார் தான்
அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் இடம். 
 
இந்த ஆவணப் படம் இரானிய வாழ்க்கையைக் கொச்சைப்படுத்துவதற்காக அமெரிக்கர்களால்
தயாரிக்கப்பட்டதல்ல.  இதில் வரும் அத்தனை காட்சிகளையும் வசனங்களையும் உலகப் புகழ்பெற்ற  இரானிய
இயக்குனர்களின் சினிமாவில் பார்க்கலாம்.  இந்தப் பிரச்சினைகளையெல்லாம் எதார்த்தமாகப் பேசுவதால்தான்
இரானிய சினிமா இன்று உலக அரங்கில் மிகப் பரவலான அங்கீ காரத்தைப் பெற்றிருக்கிறது.   
 
ஆனால் துருக்கியில் பெண்களின் நிலை இப்படி இல்லை என்பது மட்டுமல்ல; அங்கே பெண்களுக்கு ஆண்களை
விட அதிக முக்கியத்துவம் இருக்கிறது.  இதைத்தான் இஸ்லாமிய நாடுகளின் பன்முகத்தன்மை என்று
குறிப்பிட்டேன்.   மேற்கத்திய ஊடகங்களும் மற்றவர்களும் சொல்லும் ஒற்றைப் பரிமாணத்தில் இஸ்லாமிய
கலாச்சாரத்தை அடக்க முடியாது.  உதாரணமாக, இஸ்லாமிய நாடான துருக்கியில் விபச்சாரம் சட்ட ரீதியாக
அங்கீ கரிக்கப்பட்ட தொழில்.  முதலில் இதை அறிந்த போது என்னால் நம்பவே முடியவில்லை.  அநேகமாக
உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.  இஸ்தாம்பூலில் இரண்டு தினங்கள் இரவில் அலைந்த போது தெரிந்து
கொண்ட உண்மை அது.  ஆனால் விபச்சாரம் சட்டரீதியாக அங்கீ கரிக்கப்பட்ட தொழில் என்றால் அது ஒரு
இந்தியனின் மனதில் என்னென்ன யூகங்களையும் கற்பனைகளையும் எழுப்புமோ அது எதுவுமே துருக்கியில்
இல்லை.  மிகவும் சிரமப்பட்டுத்தான் செக்ஸ் தொழில் நடக்கும் இடங்களைக் கண்டு பிடிக்க
வேண்டியிருக்கிறது.  மேலும், துருக்கிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கே அங்கே செக்ஸ் தொழில்
சட்டரீதியாக அங்கீ கரிக்கப்பட்டிருப்பது தெரியாது என்று நினைக்கிறேன்.  மேலும், துருக்கியில் செக்ஸ்
தொழிலில் ஈடுபட்டிருப்போர் யாரும் துருக்கியர் அல்ல!  இந்த விஷயம் பற்றி நாம் பிறகு பார்க்கலாம்.
***
லெபனான் பற்றி எமிரா சொன்ன விஷயங்களில் என்னை ஆச்சரியப்படுத்திய ஒன்று, லெபனானில் 80 லட்சம்
பாட்டில் ஒயின் தயாரிக்கப்படுகிறது என்ற புள்ளி விபரம்.  ஆனால் அது பெரிய விஷயம் இல்லை; துருக்கியில்
800 லட்சம் (எட்டு கோடி) பாட்டில் ஒயின் தயாரிக்கப்படுகிறது.  எது ஆச்சரியம் என்றால், லெபனானின்
சாலைகளில் காணப்படும் பிரம்மாண்டமான மது விளம்பரப் பலகைகள் என்று சொல்லி புகைப்படங்களைக்
காண்பித்தார் எமிரா.  துருக்கியில் இது போன்ற விளம்பரங்கள் கிடையாது.  மற்றபடி மளிகைக்கடைகளில் கூட
மது வகைகள் கிடைக்கின்றன.  உணவகங்களில் மது பானங்கள் தருகிறார்கள்.  ஆனால் நம் நாட்டைப் போல்
யாரும் குடித்து விட்டு சாலையோரத்து சாக்கடையில் விழுந்து கிடப்பதைக் காண முடியவில்லை.  மதுபானக்
கடைகளும் அதிகமாகத் தென்படவில்லை.  ஐரோப்பிய நாடுகளைப் போலவே லெபனானிலும் துருக்கியிலும்
மது ஒரு உணவுப் பொருளாகவே கருதப்படுகிறது.  இரண்டு நாடுகளுக்கும் இதில் உள்ள வித்தியாசம்,
லெபனானில் உள்ள மது விளம்பரம்.  கீ ழே உள்ளவை அரபி மொழியில் லெபனான் தொலைக்காட்சிகளில்
வரும் பெய்ரூட் பியரின் விளம்பரங்கள்:
 
https://www.youtube.com/watch?v=hkjL1Kano8M
 
https://www.youtube.com/watch?v=uQb-27_Febw
 
 
பெய்ரூட் நகரத்தைப் பற்றிய இந்த அழகான ஆவணப் படத்தைப் பாருங்கள்.  இதன் அடுத்த பக்கத்தைப் பற்றி
அடுத்த வாரம் சொல்கிறேன்.
 
https://www.youtube.com/watch?v=ArZ_7LtwGUY
 
 
=====

நிலவு தேயாத தேசம் -17 சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   16 , 2016  06:08:59 IST
Latest Novels at Attractive Price

”உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அரபி இலக்கியத்தைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாகத்
தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, எப்படி?” என்று கேட்டார் எமிரா.  இதே கேள்வியை பல நண்பர்கள்
பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறார்கள்.  எமிராவிடம் ஏதோ சொல்லி சமாளித்தேன்.  ஆனால் அப்படி
ஒருவர் தெரிந்து வைத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  பல ஆண்டுகளாக நான் Banipal என்ற
பத்திரிகையின் வாசகனாக இருந்து வருகிறேன். சமகால அரபி இலக்கியத்துக்காகவே லண்டனிலிருந்து
நடத்தப்படும் ஆங்கிலப் பத்திரிகை.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிராத அரபி இலக்கியப்
படைப்புகளிலிருந்து கூட சில பகுதிகளை மொழிபெயர்த்து வெளியிடுவது பானிபாலின் வழக்கம்.  அதேபோல்
இன்னொரு பத்திரிகை அல் ஜஸீரா.  இது அமெரிக்காவிலிருந்து வெளிவருவது.  இது ஒரு அரபி இலக்கிய,
அரசியல் விமர்சனப் பத்திரிகை.  இது தவிர 12 ஆண்டுகளுக்கு முன்பு டெக்கான் கிரானிகிள் தினசரியில் Modern
Arabic Fiction என்ற புத்தகத்துக்கான மதிப்புரை வந்திருந்தது.  அந்தப் புத்தகத்தை அமெரிக்காவில் வசிக்கும் திரு
என்ற நண்பர் வாங்கிக் கொடுத்தார்.  சமகால அரபி இலக்கியம் பற்றிய ஒரு பொக்கிஷம் அது.  பெரிய
தலையணை சைஸ் புத்தகம்.   
 
அந்தத் தொகுப்பு நூலில் சிரிய எழுத்தாளர் காதா ஸம்மானின் ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவலிலிருந்து சில
பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.  அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சில பகுதிகள் ’ஊரின் மிக அழகான
பெண்’ என்ற என்னுடைய உலகச் சிறுகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. 
இப்போது என் ஆச்சரியம் என்னவென்றால், ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவலிலிருந்து மாடர்ன் அராபிக்
ஃபிக்‌ஷனில் வெளிவராத பகுதிகளிலிருந்தும் சில கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  ஆனால்
’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவல் பிரதி என்னிடம் இல்லை.  பிறகு எதிலிருந்து இந்தப் பகுதிகள் கிடைத்தன
என்று புரியவில்லை.
***
ஐரோப்பியக் கலை இலக்கியத்தின் மையம் பாரிஸ் என்பதைப் போல லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை
அரபி கலை இலக்கியத்தின் மையம் என்று கூறலாம்.  மேலும், அந்த நகரம் 1975 முதல் 1990 வரை 15 ஆண்டுகள்
உள்நாட்டுப் போரைச் சந்தித்திருக்கிறது.  யோசித்துப் பாருங்கள், தொடர்ந்தாற்போல் மூன்று நாள் ஊரடங்கு
உத்தரவு அமுலில் இருந்தாலே நம் வாழ்க்கை நரகமாகி விடுகிறது.  ஆனால் பெய்ரூட் மக்கள் 15 ஆண்டுகள்
அத்தகைய சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள். 
 
பெய்ரூட்டில் கிறித்தவர்கள் வசிக்கும் கிழக்குப் பகுதியும் இஸ்லாமியர் வசிக்கும் மேற்குப் பகுதியும் சந்திக்கும்
இடம்தான் அந்நகரின் மையம்.  போருக்குப் பின்னர் அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் குண்டுகளுக்கு
இரையாயின.  மக்கள் யாருமே நகரின் மற்ற பகுதிக்குச் செல்ல முடியவில்லை.  பெய்ரூட்டின் தெருக்களில்,
வடுகளில்,
ீ மருத்துவமனைகளில், மசூதிகளில், தேவாலயங்களில், வணிக வளாகங்களில், திரையரங்குகளில்,
மார்க்கெட்டுகளில், நீச்சல் குளங்களில், பல்கலைக்கழக வளாகங்களில், கடற்கரையில் என்று எங்கு
பார்த்தாலும் கார் வெடிகுண்டுகள் வெடித்தன.  கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளைப் போல் பெய்ரூட்
நகரவாசிகள் 15 ஆண்டுகள் வாழ்ந்தனர். 
 
உணவு, மின்சாரம், தண்ண ீர், குழந்தைகளின் படிப்பு என்று எல்லா தேவைகளையும் பெய்ரூட் நகரவாசிகள் 15
ஆண்டுகளாக எப்படிச் சமாளித்திருக்க முடியும்?  ”மக்கள் அனைவரும் ஒரு பொய்யான எதார்த்தத்தில்
வாழ்ந்தனர்” என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்.   கதவை வேகமாகச் சாத்தினால் கூட குண்டு வெடித்து
விட்டது போல் நடுங்கிய பெய்ரூட் நகரவாசிகல் தூக்கத்தில் நடப்பவர்களைப் போலவே 15 ஆண்டுகள்
வாழ்ந்தனர்.  இரவில் குண்டு வசப்படும்
ீ போது ஏதோ ’லைட் அண்ட் சௌண்ட்’  நிகழ்ச்சியைப் பார்ப்பது போல்
இருக்கும் என்று எழுதுகிறார் ஒருவர்.
 
 
 
 
 
 
போர்க்கால பெய்ரூட் பற்றி அரபி மொழியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன.  அவற்றில்
உலக அளவில் பிரசித்தி பெற்றவை:
Hanan al-Shaykh   :  Story of Zahra (1986), Beirut Blues (1995)
Hoda Barakat         :  Stone of Laughter (1994)
Emily Nasrallah      :  Fight Against Time (1997)
Mai Ghousoub        :  Leaving Beirut (1998)
 
இவர்கள் நால்வருமே பெண் எழுத்தாளர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.  இதில் ’ஸஹ்ராவின் கதை’ தவிர மற்ற
நான்கு நாவல்களையும் படித்திருக்கிறேன்.  இந்த நால்வரோடு சேர்க்கப்பட வேண்டிய மற்றொரு லெபனிய
பெண் எழுத்தாளர் எத்தெல் அத்னான் (Etel Adnan).  90 வயதாகும் இவர் தற்போது ஃப்ரான்ஸில் வசிக்கிறார்.  
பெய்ரூட்டின் போர்க்கால அனுபவங்களை இவர் Sitt Marie Rose (1978) என்ற தலைப்பில் ஃப்ரெஞ்சில் எழுதினார். 
பின்னர் அது அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. 
 
கடந்த பனிரண்டு ஆண்டுகளாக அரபி இலக்கியத்தின் தீவிர வாசகன் என்ற முறையில் என்னால் ஒரு
விஷயத்தை அனுமானிக்க முடிகிறது.  இன்று உலக மொழிகளில் எழுதப்படும் இலக்கியப் படைப்புகளில் அரபி
மொழியில் எழுதப்படுவதுதான் ஆகச் சிறந்ததாக இருக்கிறது.  இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்; ஆனால்
முக்கியமாக அரபி மொழி பேசப்படும் நாடுகளில் போரினால் மனித வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மாபெரும்
இழப்புகளும் துயரமும் மிகவும் கலாபூர்வமாக இவர்களின் இலக்கியத்தில் பதிவு செய்யப்படுவதால் அரபி
இலக்கியம் மற்ற மொழி இலக்கியத்தை விட உயர்ந்ததாக இருக்கிறது என்று தோன்றுகிறது.  ஆனால் லத்தீன்
அமெரிக்க இலக்கியத்தைப் பேசும் சர்வதேச இலக்கியப் பரப்பில் அரபி இலக்கியம் பேசப்படாமல் இருப்பதற்குக்
காரணம், இதை உருவாக்குபவர்கள் இஸ்லாமியர் என்பதனால் இருக்கலாம்.  வேறு எந்தக் காரணத்தையும்
என்னால் யூகிக்க முடியவில்லை. 
 
1975-இலிருந்து 1990 வரை பெய்ரூட் அனுபவித்ததைத்தான் இன்று சிரியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 
இதையெல்லாம் குறித்துத்தான் எமிராவும் நானும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்போது
அவரிடம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன்.  மஹ்மூத் தௌலத்தாபாதி (Mahmoud Dowlatabadi)  என்ற புகழ்
பெற்ற இரானிய எழுத்தாளருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு உண்டு.  2013-ஆம் ஆண்டு என்னுடைய
நாவல் ’ஸீரோ டிகிரி’ சுவிட்ஸர்லாந்தின் Jan Michalski சர்வதேசப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போது அந்தப்
பட்டியலில் இருந்த மற்றொரு நாவல் தௌலத்தாபாதி எழுதியது.  இந்த இரண்டோடு கூட இன்னும் எட்டு
நாவல்களும் போட்டியிட்டன.  இறுதியில் தௌலத்தாபாதியின் ’கர்னல்’ என்ற நாவலே வென்றது. 
 
’கர்னலை’ நான் இன்னும் படிக்கவில்லை.  ஆனால் மஹ்மூத் தௌலத்தாபாதியின் இலக்கியச் சாதனை என்று
அவருடைய கெலிதாரைத்தான் (Kelidar) சொல்கிறார்கள்.  இது குர்து இனத்தைச் சேர்ந்த ஒரு நாடோடிக்
குடும்பத்தின் கதையைச் சொல்கிறது.  3000 பக்கங்களில் பத்து புத்தகங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் கிடைப்பது அரிதாக இருக்கிறது.  இதை எழுத 15 ஆண்டுகள்
பிடித்ததாகச் சொல்கிறார் தௌலத்தாபாதி.  இதன் ஜெர்மன் மொழிபெயர்ப்பே இணையப் புத்தகச் சந்தையில்
விற்பனைக்குக் கிடைக்கிறது.  இந்த நாவலைப் படிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  ஆனால்
கிடைக்கும் இடம்தான் தெரியவில்லை.
 
லெபனானின் உள்நாட்டுப் போர் ஏன் நிகழ்ந்தது?  காரணங்கள் என்ன? 
 
1975-க்கு முந்தைய லெபனானில் அதன் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனங்கள் யாவும்
சிறுபான்மையினரான கிறித்தவர்கள் வசம் இருந்தன.  அதிக அளவில் அந்நிய மூலதனமும் முதலீடு
செய்யப்பட்டிருந்தது.  இதனால் பெய்ரூட்டிலும் அதன் சுற்றுப்புறப் பிராந்தியங்களிலும் வசித்தவர்கள் மட்டுமே
பயனடைந்தனர்.  லெபனானின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லீம்கள் மிகப் பின்தங்கிய
நிலையில் இருந்தனர்.  மேலும், 1967 பாலஸ்தீனியப் போரின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான
முஸ்லீம்கள் பாலஸ்தீனத்திலிருந்து லெபனானுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.  இத்தகைய சூழலில்தான்
கிறித்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.  1982-இல் இஸ்ரேல்
லெபனானுக்குள் நுழைந்ததும் போர் சிக்கலானதற்கு மற்றொரு காரணமாக அமைந்தது.  இரான் சில முஸ்லீம்
குழுக்களை ஆதரிக்க, இஸ்ரேல் கிறித்தவக் குழுக்களை ஆதரிக்க போர் மேலும் வலுவடைந்தது.
 
இந்தப் பின்னணியில்தான் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து லெபனிய பெண் எழுத்தாளர்களும் பெய்ரூட்டில்
வாழ்ந்த சிரிய எழுத்தாளர் காதா ஸம்மானும் தங்கள் நாவல்களை எழுதினார்கள்.  இலங்கையில் நடந்த
உள்நாட்டுப் போர், இனப்படுகொலை போன்றவற்றை இங்கே நாம் நினைவு கூர வேண்டும்.  ஷோபா சக்தி
போன்ற ஓரிருவரைத் தவிர ஈழத்தின் அனுபவங்களை எழுத இங்கே வேறு யாரும் இல்லாமல் போனதற்கான
காரணம் பற்றியும் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். 
 

தௌலத்தாபாதி.
 
மேலே குறிப்பிட்ட அரபிப் பெண் எழுத்தாளர்களின் நாவல்களில் நாம் காணும் ஒரு பொதுத்தன்மை, பெண்
பாத்திரங்களெல்லாம் போர் முடிவுற வேண்டும் என்று நினைக்க, ஆண் பாத்திரங்கள் போர் தொடர வேண்டும்
என்று நினைக்கின்றனர்.  காரணம், போர்தான் சமூக வெளியில் ஆண்கள் தங்களின் மேலாண்மையை
நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. 
 
காதா ஸம்மான் 1942-ஆம் ஆண்டு சிரியாவில் பிறந்தவர்.  டமாஸ்கஸில் ஃப்ரெஞ்ச் பள்ளியில் பயின்று,
கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.  1966-ஆம் ஆண்டு அரசுக்கு
எதிரான கருத்துக்களைக் கூறியதற்காக மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார்.  பிறகு சிரியாவிலிருந்து
ரகசியமாக வெளியேறி பெய்ரூட் வந்தார்.  அதிலிருந்து இன்று வரை பெய்ரூட்டில் ஒரு அகதியாகவே வாழ்ந்து
வரும் ஸம்மான் தன் சொந்த ஊரான டமாஸ்கஸைப் பற்றிய ஏக்கத்துடன் எழுதிய கவிதைகள் Letters to Jasmine
என்ற தலைப்பில் தொகுதியாக வெளிவந்துள்ளது. 
 

காதா ஸம்மான்
 
இன்றைய செய்தித்தாளில் ’சிரியப் படைகள் மீ து துருக்கி தாக்குதல்’ என்று படித்த போது எனக்கு காதா
ஸம்மானின் டமாஸ்கஸ் தான் ஞாபகம் வந்தது.  இரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளின் மக்கள் போரையும்
வெடிகுண்டுகளையுமே தங்கள் தினசரி வாழ்வின் எதார்த்தமாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
 
மாடர்ன் அராபிக் ஃபிக்‌ஷன் தொகுதியிலிருந்து காதா ஸம்மானின் ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவலின்
கொடுங்கனவு 22-ஐ இங்கே மொழிபெயர்த்துத் தருகிறேன். 
 
“அவர்கள் அந்த இளைஞனை நடைபாதைக்குக் கொண்டு வந்தார்கள்.  அவன் செய்த ஒரே தவறு,
வட்டிற்குள்ளேயே
ீ இருக்காமல் காரில் வந்து கொண்டிருந்த ஆயுதம் ஏந்திய கும்பலின் கண்ணில் பட்டதுதான். 
அவர்களில் ஒருவனின் சகோதரன் கொல்லப்பட்டிருந்தான்.  அந்தக் கொலைக்குப் பழிக்குப்பழி
வாங்குவதற்காகவே அவன் ஆயுதத்தை எடுத்திருக்கிறான்.  யாரைக் கொல்வது என்ற திட்டமெல்லாம்
அவனுக்கு இல்லை; எந்த மதம் என்பதுதான் முக்கியம். 
 
அவர்கள் அவனை நடைபாதைக்கு இழுத்துக் கொண்டு வந்தார்கள்.  ”நான் ஒரு தப்பும் செய்யவில்லையே”
என்று அவன் கதறினான்.  கொல்லப்பட்டவனின் சகோதரன் அவனை அசிங்கமான வார்த்தைகளால்
திட்டினான்.  காரில் இருந்தவர்களுக்குள் அவனை வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.  அவனை அங்கேயே
கொல்வதா அல்லது அவனைத் தங்களோடு  அழைத்துக் கொண்டு செல்வதா?  அதுதான் சச்சரவுக்குக் காரணம். 
யார் அவனைக் கொல்வது?  எப்படிக் கொல்வது? “நீ எப்படிச் சாக வேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று
ஒருவன் கேட்டான்.  “என்னைக் கொன்று விடாதீர்கள்; நான் சாக விரும்பவில்லை” என்று அழுதான் அவன். 
”ஆட்கள் வருவதற்குள் தலையில் சுட்டுத் தூக்கிப்  போட்டு விட்டுப் போய் விடுவோம்” என்றான் ஒருவன். 
”என்னைக் கொன்று விடாதீர்கள்; நான் ஒரு தப்பும் செய்யவில்லை” என்று மீ ண்டும் சொன்னான் அவன்.  
சகோதரனைப் பறி கொடுத்தவன், ”இவனை நான்தான் கொல்லுவேன்” என்று கத்தினான். இளைஞனோ
“என்னைக் கொன்று விடாதீர்கள்” என்று கதறினான்.
 
இவனை இப்போதே கொல்வதா அல்லது தங்களுடன் அழைத்துக் கொண்டு செல்வதா என்று காரில்
இருந்தவர்களிடையே வாக்குவாதம் தொடர்ந்தது.   வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர்
கொலை செய்ய ஆயத்தமாவது போல் ஆயுதங்களை உயர்த்தினார்கள்.  கிடைத்த சந்தர்ப்பத்தில் இளைஞன்
அவர்களிடமிருந்து தப்பி ஓடினான். 
 
நடைபாதையில் அவன் ஒரு பைத்தியக்காரனைப் போல் ஓடினான்.  முடிவே இல்லாமல் ஓடிக் கொண்டே
இருப்பது போல் தோன்றியது.  ஆனால் அவனைத் துரத்தி வருபவர்களின் காலடி ஓசையும் கேட்டுக் கொண்டே
இருந்தது… ஒரே கணம். தடுமாறி விழுந்தான்.  அதோடு ஓடி வரும் காலடி ஓசை நின்றது.  அவனைக் கொல்லப்
போகிறேன் என்று கத்தியவனின் முகம் அவன் முகத்தருகே தெரிந்தது… ஆச்சரியப்படும் விதத்தில் அவ்வளவு
தெளிவாகத் தெரிந்தது அவன் முகம்… இவனைப் போலவே அவனும் அழுது கொண்டிருந்தான்.  “என் சகோதரன்
ஒரு தீயணைப்பு வரன். 
ீ தீப்பற்றிய ஒரு கட்டிடத்தை அணைக்கச் சென்ற போது அவர்கள் அவனைக்
கொன்றார்கள்.  எங்களுக்கு அவன் பிணமாகத்தான் கிடைத்தான்.”  ’தன் துயரத்தை அவன் என்னிடம் இறக்கி
வைக்கிறான்’ என்று நினைத்தான் இளைஞன்.  அவன் மனம் இளக ஆரம்பித்தது.  இன்னும் கொஞ்சம்
விபரங்களை அவனிடம் அந்த இளைஞன் கேட்க நினைத்த போது திடீரென்று அவன் முகம் ஒரு
கொலைகாரனின் முகமாக மாறியது.  “என் சகோதரனுக்காக நீயும் சாக வேண்டும்.  உன் மதத்தைச்
சேர்ந்தவர்கள்தான் அவனைக் கொன்றார்கள்.”
 
இளைஞன் நடைபாதையில் எந்த இடத்தில் விழுந்தானோ அங்கேயேதான் இன்னமும் கிடந்தான்.  பேசிக்
கொண்டிருந்தவனின் வலுவான பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பெருமுயற்சி எடுத்துக்
கொண்டு எழுந்தான் இளைஞன்.  அது ஒரு பளிங்குச் சுவர்.  பக்கத்தில் செயற்கை நீரூற்று.    தண்ணரின்
ீ சுவடே
இல்லாமல் வற்றிக் கிடந்தது.  பளிங்குக் கல்லின் மேல் “இறைவனின் திருநாமத்தால் அமைக்கப்பட்ட
செயற்கை நீரூற்று.  நன்கொடை: சலீம் அல்-ஃபக்கூரி, 1955” என்று பொறிக்கப்பட்டிருந்தது.  இளைஞனின்
கழுத்தில் கையை வைத்து அந்தப் பளிங்குச் சுவரில் மோதினான் அவன். அடுத்த கணமே அவன் கத்தி
இளைஞனின் தமனியில் இறங்கியது… இளைஞன் மூச்சு விடத் திணறினான்.  அவ்வளவுதான்.  அவன் கதை
முடிந்தது.  இளைஞனின் உடல் கீ ழே விழுந்த பிறகும் கத்தியால் அவன் கழுத்தை வெட்டிக் கொண்டே
இருந்தான் சகோதரனைப் பறி கொடுத்தவன்.  ரத்தம் தடையில்லாமல் பீறிட்டு அடித்துக் கொண்டிருந்தது. 
ரத்தம்… ரத்தம்… ரத்தம்… எங்கு பார்த்தாலும் ரத்தம்… செயற்கை நீரூற்றிலிருந்து ரத்தம் பீறிட்டு அடித்து அந்த
இடமே ரத்தத்தால் நிரம்பியது.  அறையெங்கும் ரத்தம்.  என் முழங்கால் வரை ரத்தம் ஏறி விட்டது.  இப்போது
என் இடுப்பு வரை ஏறி விட்டது ரத்தம்.  மேலும் மேலும் ரத்தம் பெருகி என் மார்பு வரை ஏறி விட்டது.  இப்போது
என் கழுத்து வரை.  ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாதபடி ரத்தம் என்னை மூழ்கடிக்கத் தொடங்கியது.  
அலறியபடி உறக்கத்திலிருந்து கண் விழித்தேன் நான். 
***         
=====

நிலவு தேயாத தேசம் – 18 சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   29 , 2016  05:26:11 IST
Latest Novels at Attractive Price

”நீங்கள் எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் அங்கே உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களைப் பற்றி
எழுதுவதை விட அங்கே உள்ள மனிதர்களைப் பற்றியே அதிகம் எழுதுகிறீர்கள்.  இதை ஒன்றும் குறையாகச்
சொல்லவில்லை.  குறிப்பாகக் கவனித்தேன்” என்று ஒருமுறை என்னிடம் சொன்னார் மனுஷ்யபுத்திரன். 
உதாரணமாக, பாரிஸ் நகரில் உள்ள லூவ்ர் மியூஸியத்தைப் பார்க்கப் போனால் அதன் வாசலில் நின்று பிச்சை
எடுத்துக் கொண்டிருக்கும் பல்கேரிய அகதியைப் பற்றித் தெரிந்து கொள்ளவே நான் அதிக ஆர்வம்
கொள்ளுவேன்.  இப்படி நான் Ephesus என்ற வரலாற்றுப் புகழ் மிக்க ஒரு இடத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த
போது வழிகாட்டியான அப்துல் மாலிக் தன்னுடைய குர்து நண்பனை அறிமுகப்படுத்தி வைத்தான்.  பெயர்
ஹைதர்.  நான் ஒரு எழுத்தாளன் என்று சொன்னதும் தெரியும் என்றான்.  மாலிக் ஏற்கனவே
சொல்லியிருக்கிறான்.  இந்த ஹைதர் மூலம்தான் குர்து இனப் போராட்டம் பற்றி விரிவாக அறிந்து
கொண்டேன்.   அவன் அறிமுகப்படுத்திய பெயர்களில் முக்கியமானது தியார்பக்கிர் (Diyarbakir) என்ற ஊரில்
உள்ள ராணுவ சிறைச்சாலை.   
 
சந்தேகப்படும் குர்தியர்களைப் பிடித்து சிறையில் போட்டு அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துப்
போகாமலேயே விசாரணை என்ற பெயரில் மாதக் கணக்கில் சித்ரவதை செய்கிறது துருக்கி போலீஸும்,
ராணுவமும். தியார்பக்கிர் சிறையில்தான் இது அதிகம் நடக்கிறது.  15 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட
தியார்பக்கிர் துருக்கியில் எங்கே இருக்கிறது என்று பின்வரும் வரைபடத்தில் காணலாம்.  துருக்கியின்
தென்கிழக்கில்தான் அதிகம் குர்துக்கள் வாழ்கிறார்கள் என்று ஏற்கனவே நாம் பார்த்தோம்.  தியார்பக்கிர் உலகின்
மிக இருண்ட சிறைகளில் ஒன்று.  அங்கே நடக்கும் சித்ரவதைகள் கற்பனையும் செய்து பார்க்க
முடியாதவையாக இருக்கின்றன.  
 

  
 
ஹைதர் எனக்கு தாக்கர் என்பவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையைக் காண்பித்தான்.  தாக்கர் 1980-ஆம் ஆண்டு
அவருடைய 18-ஆவது வயதில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.  ஆனால் மரண தண்டனை
நிறைவேற்றப்படாமலேயே 20 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  சக கைதிகளுக்கும்
அவருக்கும் எக்கச்சக்கமான முறைகள் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டது.  வேறு சில கொடூரமான
தண்டனை முறைகளும் உண்டு.  அதில் ஒன்று, Strappado என்றும் Palestinian hanging என்றும் அழைக்கப்படும்
தண்டனை முறை.  கைகளைப் பின்னால் கட்டித் தொங்க விடுதல்.  அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகளில்
தேசத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இப்போதும் இந்த முறையில் தண்டிக்கப்படுகிறார்கள்.   
 

 
இது போன்ற உடல் வதைகளை விட உளவியல் சித்ரவதைதான் பயங்கரமானது என்கிறார் தாக்கர்.
உதாரணமாக, குர்து மொழி பேசக் கூடாது என்பது ஒரு சிறை விதி.  மீ றினால் கடுமையான தண்டனை.  இந்த
விதியின் காரணமாக, தாக்கரின் தாயார் மகனைப் பார்க்க சிறைக்கு வரும் போது இருவரும் பேசிக் கொள்ள
முடியாது.  தாக்கரின் அம்மாவுக்கு துருக்கி மொழி தெரியாது.  சிறைக்கு வருவதற்கு சற்று முன்புதான்
அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது.  ஆனால் அவரால் தன் மனைவிக்குக் கடிதம் எழுத முடியாது.  ”அவர்கள்
எல்லாவற்றையும் துப்பாக்கியாக மாற்றி விடுகிறார்கள்.  குடும்பம் கூட அவர்களுக்குத் துப்பாக்கி தான்”
என்கிறார் தாக்கர்.  18 வயதில் சிறைக்குச் சென்ற தாக்கர் 38 வயதில் சிறையிலிருந்து விடுதலை அடைந்தவுடன்
செய்த முதல் காரியம், தான் 18 வயதில் செய்து கொண்டிருந்ததைத் தொடர்ந்ததுதான்.  குர்திய
விடுதலைக்கான போராட்டச் செயல்பாடுகளில் உடனடியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் தாக்கர். 
 

2011-இல் தியார்பக்கிரில் குர்துகள் நடத்திய ஒரு போராட்டம். 


 
குர்து மொழி பேசினால் தண்டனை என்று துருக்கி நிர்வாகம் சொன்னது அல்லவா?  அதற்கு எதிராக ஒருவர்
”நான் இனிமேல் டர்க்கிஷ் மொழியே பேச மாட்டேன், என் தாய்மொழியான குர்து மொழியே பேசுவேன்” என்று
அறிவித்தார். அவர் பெயர் மெஹ்தி ஸானா (Mehdi Zana).
 
“நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக நான் 18 மாதங்கள் சிறையிலேயே இருந்தேன். 
நீதிமன்றத்தில் நீதிபதி என்னை அழைப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது காவலாளிகளிடம் ’நான்
கழிப்பறைக்குச் செல்ல வேண்டும்’ என்று சொன்னேன்.  ஏனென்றால் அப்போது கண்ணாடியில் என் முகத்தைப்
பார்க்க விரும்பினேன்.  கண்ணாடியில் தெரிந்த முகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  இதுவா நான்? 
நான் இப்படியா இருந்தேன்?  முகத்தில் வெறும் எலும்புதான் தெரிந்தது.  முன் பற்கள் நான்கை காவலாளிகள்
உடைத்து விட்டார்கள்.  என்னைப் பார்க்க எனக்கே பயங்கரமாக இருந்தது.  ஆனால் எல்லாவற்றையும் விட
மோசம் என்னவென்றால், ஞாபக சக்தியை இழந்திருந்தேன்.”
 
1967-இல் ஒரு ஆண்டு தியார்பக்கிரில் உள்ள ராணுவ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் மெஹ்தி ஸானா.
1971-1974 இல் மூன்று ஆண்டுகள், பிறகு  1980-இலிருந்து 1991 வரை பதினோடு ஆண்டுகள், 1994-இல் ஒன்றரை
ஆண்டுகள் என்று மொத்தம் 15 ஆண்டுகளை தியார்பக்கிர் ராணுவச் சிறையில் கழித்திருந்தார். ஆனால் 1977-
ஆம் ஆண்டு தியார்பக்கிர் நகர மக்கள் பெரும் ஆதரவுடன் அவரை மேயராகத் தேர்ந்தெடுத்தனர்.  பள்ளிக்குச்
சென்றிராத ஸானா சிறையிலேயே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு தன் சிறை அனுபவங்களை ஐந்து
புத்தகங்களாக எழுதினார்.  அவை:
 
Wait for me, Diyarbekir
The Day of Barbary
My Heart’s Beloved
To Dear Leyla
Clarity.
 
ஸானா சொல்கிறார்: “என்னைப் போல் ஆயிரக் கணக்கான குர்துகள் அந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு
சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்.  கைகளைப் பின்னால் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டு என்
பிறப்புறுப்பிலும் குதத்திலும் மின்சார ஒயர்களை வைப்பதற்கு முன்பு காவலாளி சொல்லுவான், ’ஏய் வேசி
மகனே, கடவுளே நினைத்தாலும் உன்னை இப்போது காப்பாற்ற முடியாது.’  அவர்கள் எங்களைக் கொல்ல
விரும்பவில்லை.  உச்சக்கட்ட சித்ரவதைகளைச் செய்து எங்கள் மனதைக் கொல்ல விரும்பினார்கள்.  எங்கள்
சிந்தனையைக் கொல்ல விரும்பினார்கள்.  எங்கள் உடல்களை அல்ல; எங்கள் ஆத்மாவைக் கொல்ல
விரும்பினார்கள்.  அப்படிச் செய்வதன் மூலம் ‘இனிமேல் குர்து மொழியே பேச மாட்டோம்; குர்திஸ்தானுக்காக
எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபட மாட்டோம்’ என்று கையெழுத்துப் போட்டு விடுவோம் என்று நினைத்தார்கள். 
சித்ரவதை செய்யும் போது எங்கள் அலறல் சத்தத்திலிருந்து தப்புவதற்காக பாடல்களைப் போடுவார்கள். 
ஆனால் சில சமயங்களில் எங்களை அச்சுறுத்துவதற்காக பாடலை நிறுத்தி விட்டு சித்ரவதை
செய்யப்படுபவரின் அலறலை எங்களைக் கேட்கச் செய்வதும் உண்டு. 
 
சித்ரவதைகளில் இன்னொரு ஏற்பாடு என்னவென்றால், ஏழு அடி நீளம் ஏழு அடி அகலம் உள்ள கூண்டு போன்ற
பொந்து அறைகளில் 40 கைதிகளைப் போட்டு அடைப்பார்கள்.  மீ ன் கூடைகளில் உயிருள்ள மீ ன்கள் துடிப்பதைப்
பார்த்திருக்கிறீர்களா, அது போல் அந்த அறையில் இரவு முழுவதும் ஒருவர் மீ து ஒருவராக விழுந்து
கிடப்போம்.  நள்ளிரவு இரண்டு மணிக்கு இரும்புக் கதவைத் திறக்கும் காவலாளி எங்களில் ஒருவரை வெளியே
இழுத்து, ’நீ துருக்கியனா, குர்தா?’ என்று கேட்பான்.  குர்து என்று சொல்பவர்களை மயக்கமடித்து விழும் வரை
அடிப்பார்கள்; மாதக் கணக்கில் வெளிச்சமே இல்லாத இருட்டுக் கிடங்கில் தனிமைச் சிறையில் அடைப்பார்கள்; 
பயிற்சி அளிக்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை ஏவி விட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட கைதியின்
பிறப்புறுப்பைக் கடிக்கச் செய்வார்கள்;  நாங்களெல்லாம் கேப்டனின் நாயைப் பார்த்தால் கூட அதற்கு சல்யூட்
அடிக்க வேண்டும்; தவறினால் கழுத்து வரை மலம் நிரப்பப்பட்ட பீப்பாய்களில் போடுவார்கள்.  ஃபலாக்கா அடி
என்ற ஒன்று இருக்கிறது.  கால் பாதங்களில் பிரம்பினால் அடிப்பது…”
 

 
(இந்தப் புகைப்படம் செர்பியாவில் எடுக்கப்பட்டது.  பள்ளிகளில் கூட ஃபலாக்கா பிரம்படி வழக்கத்தில்
இருந்துள்ளது.  இந்தியாவில் இன்னமும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ‘உண்மை’யை
வரவழைக்க இந்தத் தண்டனை முறை பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. லாடம் கட்டுவது என்று
சொல்கிறார்கள்.  ஆனால் ’விசாரணை’ என்ற தமிழ்ப் படத்தில் காண்பிக்கப்படுவது போல் திருட்டுக்
குற்றங்களுக்கு லாடம் கட்ட மாட்டார்கள்.  அது சும்மா சினிமா.)
 

 
(இந்தப் படம் செர்பியாவில் உள்ள Leskovac என்ற ஊரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்டது. 
அடிப்பவர் தலைமை ஆசிரியர்.  குறும்பு செய்யும் மாணவர்கள் இப்படித்தான் ஃபலாக்கா அடி வாங்கினார்கள். 
தலைப்பில் எழுதப்பட்டுள்ள வார்த்தை ’faloge.’)
 
”தியார்பெக்கிரின் ராணுவ சிறைச்சாலையில் கொடுக்கப்பட்ட பல்வேறு சித்ரவதைகளால் பல கைதிகளுக்குப்
பைத்தியம் பிடித்திருக்கிறது.  பல  கைதிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இது போன்ற
தருணங்களில் மரணம் ஒரு விடுதலையாகவே இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.” 
(ஒரு இடைச்செருகல்.  ’விசாரணை’ படத்தை ஏன் போலி என்று சொல்கிறேன் என மேற்கண்ட
விவரணைகளிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.   மானுட வாழ்வில் நிகழும் ஒரு வரலாற்று அவலம்
தமிழ் சினிமாவில் வெறும் கேலிச் சித்திரமாக மாறி விட்டது.)
 

    
 
மேலே உள்ளது கேலிச் சித்திரம். கீ ழே உள்ளது நிஜம். 
 

(Abu Ghraib)
 
துரதிர்ஷ்டம் என்னவென்றால், மெஹ்தி ஸானாவின் ஐந்து நூல்களில் ஒன்றுதான் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது, Prison No. 5: Eleven Years in the Turkish Jail.
 
1980 செப்டம்பர் 12-ஆம் தேதி ராணுவம் ‘நாட்டில் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் நிலவுகிறோம்’ என்று
சொல்லி ஆட்சியைப் பிடித்தது.  பாராளுமன்றம் கலைக்கப்பட்டது; ராணுவத்தை எதிர்த்தவர்கள் அத்தனை
பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  மந்திரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், யூனியன் தலைவர்கள்,
தீவிரவாதிகள், பத்திரிகையாளர்கள் என்று யாரும் தப்பவில்லை.  ராணுவம் ஆட்சியைப் பிடித்த பனிரண்டாம்
நாள் மெஹ்தி ஸானா கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
 
ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் மனித உரிமைக் கமிட்டியில் அவர் சாட்சியம் அளித்தார் என்ற
குற்றத்திற்காகவும் அவருடைய கவிதைத் தொகுதிக்காகவும் மெஹ்தி ஸானாவுக்கு 1997-இல் பத்து மாதங்கள்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 
மெஹ்தியின் மனைவி பெயர் லைலா  (Leyla Zana). நோபல் அமைதிப் பரிசுக்காக இவர் பெயர் சிபாரிசு
செய்யப்பட்டது.  மனித சுதந்திரத்துக்கான சகாரோவ் பரிசையும் பெற்றிருக்கிறார் லைலா.  இவர்
பிரிவினைவாதத்தைத் தூண்டியதற்காகக் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டார்.  அவர் செய்த பிரிவினைவாதக் குற்றம் என்ன தெரியுமா?  1991-ஆம் ஆண்டு துருக்கி
பாராளுமன்றத்தில் (லைலா அப்போது பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்) குர்து
மொழியில் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.  அவ்வளவுதான். அவரது  15 ஆண்டு சிறை அனுபவங்கள் புத்தகமாக

வெளிவந்துள்ளது.  அந்தப் பேச்சை பின்வரும் காணொளியில் காணலாம்.


 
இந்தப் பின்னணியில்தான் ஓரான் பாமுக் மீ து சுமத்தப்பட்ட தேசத் துரோகக் குற்றத்தையும் பார்க்க வேண்டும்.
 

 
=====

நிலவு தேயாத தேசம் – 19, சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : திங்கட்கிழமை,   மார்ச்   07 , 2016  02:01:05 IST
Latest Novels at Attractive Price
 "1915-இல் துருக்கியில் பத்து லட்சம் ஆர்மீ னியர்களும் 30000 குர்துகளும் கொல்லப்பட்டார்கள்.  துருக்கியில்
இது ஒரு பேசக் கூடாத விஷயமாக இருந்து வருகிறது” என்று 2005-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் தெரிவித்தார்
ஓரான் பாமுக்.  இதற்காக அவர் மீ து தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டது.  ஆனால் அதற்காக பாமுக்
அச்சமடையவில்லை.  திரும்பவும் அதே கருத்தையே வலியுறுத்திப் பேசினார்.  கருத்துச் சுதந்திரத்துக்கு
துருக்கியில் கொடுக்கப்படும் ’மதிப்பை’யும் துருக்கியின் கடந்த கால வரலாற்றையும் அறிந்த பலரும் பாமுக்
கைது செய்யப்படுவார் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை.  உலகம் முழுவதும் உள்ள
புத்திஜீவிகளிடமிருந்து துருக்கி அரசுக்கு எதிர்ப்பு எழுந்தது.  உலகின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எட்டு பேர்
துருக்கி அரசைக் கண்டித்து கூட்டறிக்கை விட்டார்கள்.  அவர்கள்: நோபல் பரிசு பெற்ற ஹோஸே சரமாகோ
(போர்த்துகல்), காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ் (கொலம்பியா - நோபல்), மரியோ பர்கஸ் யோசா (பெரூ -
நோபல்), குந்த்தர் க்ராஸ் (ஜெர்மன் – நோபல்), உம்பர்த்தோ எக்கோ (இத்தாலி), நோபல் பரிசுக்குப் பலமுறை
பரிந்துரை செய்யப்பட்ட, மெக்ஸிகோவைச் சேர்ந்த கார்லோஸ் ஃபுவெந்தெஸ், ஜான் அப்டைக் (யு.எஸ்.),
ஹுவான் கைத்திஸோலோ (Juan Goytisolo - ஸ்பெய்ன்).  
 
இது தவிர ஐரோப்பிய யூனியனும் துருக்கி அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.  பாமுக்கைக் கைது செய்தால்
ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று அஞ்சிய துருக்கி அரசு பாமுக் மீ து தொடுத்த
வழக்கை மேற்கொண்டு தொடராமல் அப்படியே கைவிட்டது. மேற்படி விவகாரம் நடந்தது 2005-இல்.  அதற்கு
அடுத்த ஆண்டுதான் பாமுக்குக்கு நோபல் விருது வழங்கப்பட்டது. 
 
பாராளுமன்றத்தில் குர்து மொழியில் ஒரே ஒரு வாக்கியத்தைப் பேசியதற்காக ஒரு பாராளுமன்ற
உறுப்பினரையே 15 ஆண்டுகள் சிறையில் தள்ளிய துருக்கி அரசு ஏன் ஓரான் பாமுக்கை சிறையில் அடைக்க
அஞ்சியது?  இங்கேதான், ஒரு சமூகத்தில் எழுத்தாளனுக்கு இருக்கும் இடம் பற்றி நாம் யோசிக்க வேண்டும். 
பாமுக்கை சிறையில் தள்ளினால் உலகம் முழுவதிலிருந்தும் அரசுக்கு நெருக்கடி வருகிறது.  இப்படிப்பட்ட
நிலை ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு – ஏன், ஒரு இந்திய எழுத்தாளனுக்கே கூட – இருக்கிறதா என்று துருக்கியில்
இருந்த போது எனக்குள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். 
 
தன் தேசத்துக்கு விரோதமாகப் பேசியதால் பாமுக்கை துருக்கியர்கள் யாரும் விரும்புவதில்லை.  எந்தத்
துருக்கியரோடு நான் பேச நேர்ந்தாலும் என் முதல் கேள்வி  ஓரான் பாமுக்கைப் படித்திருக்கிறீர்களா என்பதும்,
இரண்டாவது கேள்வி, ஓரான் பாமுக் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதுமாகத்தான் இருந்தது.  நான் சந்தித்த
அத்தனை பேரும் சராசரி மனிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  கம்பளம் நெய்யும் தொழிலாளிகள், டீக்கடை
வைத்திருப்பவர்கள், கல்லூரியில் படித்த கைடுகள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், உணவக ஊழியர்கள்,
வரவேற்பாளர்கள், அரசு ஊழியர்கள், டாக்ஸி டிரைவர்கள் போன்றவர்களே அவர்கள்.  பேராசிரியர்கள்,
எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் யாரையும் நான் சந்திக்க முடியவில்லை.  ஓரிரு குர்து இனப் போராளிகள் தவிர
நான் சந்தித்த அத்தனை சராசரி மனிதர்களும் தாங்கள் ஓரான் பாமுக்கைப் படித்ததில்லை என்றே
சொன்னார்கள்.  அதேபோல் எல்லோரும் ஒருசேர பாமுக்கைத் தங்களுக்குப் பிடிக்காது என்றும் சொல்லத்
தவறவில்லை.  காரணம், ஊடகங்களில் வரும் அவரைப் பற்றிய சர்ச்சைக்குரிய செய்திகள்.  பாமுக்கின்
முகநூல் பக்கத்தைப் பார்த்தாலும் படு ஆபாசமான பின்னூட்டங்கள் நூற்றுக் கணக்கில் எழுதப்படுகின்றன. 
அதையெல்லாம் பார்த்த பிறகுதான் எனக்குக் கொஞ்சம் தெம்பும் தைரியமும் வந்தன என்று சொல்லலாம். 
 
ஆசியாவும் ஐரோப்பாவும் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் தாங்கள் மேட்டிமை தாங்கிய ஒரு ஐரோப்பிய நாடு
என்றே துருக்கி அரசு சொல்ல விரும்பினாலும், ஐரோப்பிய யூனியனில் சேர்வதற்குப் பெரு விருப்பம்
கொண்டிருந்தாலும் தேசியவாதம் (Nationalism) என்ற கருத்தைப் பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் போன்ற
பிற்போக்கான ஆசிய நாடுகளையே ஒத்திருக்கிறது துருக்கி.  இன்று ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதத்தை
தேச நலனுக்கு எதிரானதாகக் கருதுகிறார்கள்.   சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வது எப்படி இங்கே
பிற்போக்குத்தனமாகக் கருதப்படுகிறதோ அவ்வாறே ஐரோப்பாவில் தேசியவாதமும், இனவாதமும்
பிற்போக்கான கருத்துக்களாகக் கருதப்படுகின்றன.  தேசியவாதத்தினால்தான் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு
ஐரோப்பாவே ரத்தக் களரி ஆயிற்று என்பதை ஒரு ஐரோப்பியன் கூட மறக்கவில்லை.  இன்னும் பல
நூற்றாண்டுகளுக்கு ஒவ்வொரு ஐரோப்பியனின் குருதியிலும் அந்த ஞாபகம் படிந்திருக்கும் என்பதில்
ஐயமில்லை.  அந்தக் காரணத்தினால்தான் இன்று 28 நாடுகள் ஒன்றிணைந்து ஐரோப்பிய யூனியன் என்ற பொது
அமைப்பை உருவாக்க முடிந்திருக்கிறது.  இந்த 28 நாடுகளில் 19 நாடுகள் யூரோ என்ற ஒரே கரன்ஸியைப்
பயன்படுத்துகின்றன.  26 ஐரோப்பிய நாடுகளில் பயணம் செல்வதற்கு வசா
ீ அனுமதி
பொதுவாக்கப்பட்டிருக்கிறது.  ஷெங்கன் வசா
ீ என்று பெயர்.  உதாரணமாக, ஃப்ரான்ஸ் செல்வதற்கு நாம்
ஷெங்கன் வசா
ீ வாங்கிக் கொண்டோம் என்றால் பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா,
ஃபின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கெரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவானியா, லக்ஸம்பெர்க்,
மால்ட்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்த்துகல், ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன்,
ஸ்வடன்,
ீ ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு தனித்தனியே வசா
ீ வாங்க வேண்டிய அவசியமில்லை.  ஒரே
வசாவில்
ீ இத்தனை நாடுகளுக்கும் செல்லலாம்.  அப்படியானால் இந்த நாடுகளில் வசிக்கும் மக்களின்
வசதியைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.  நாம் இப்போது ஆந்திராவுக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் சென்று
வருவது போல் அவர்கள் இத்தனை நாடுகளுக்கும் வசா
ீ இல்லாமல் போய் வர முடிகிறது. 
 
கீ ழே காணும் வரைபடத்தில் ஜெர்மனி, பெல்ஜியம், ஃப்ரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளையும் தொட்டுக் கொண்டு
இருக்கும் ஒரு சிறிய புள்ளிதான் லக்ஸம்பர்க்.  லீஷ்டன்ஸ்டைன் என்பது ஜெர்மனியின் தென் திசையில்
ஜெர்மனி, ஸ்விட்ஸர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளையும் தொட்டுக் கொண்டு இருக்கும் ஒரு
சிறிய ஊர்.  அதுதான் லீஷ்டன்ஸ்டைன் தேசமும் கூட. லீஷ் தேசத்தின் பரப்பளவு வெறும் 60 சதுர மைல்தான். 
லக்ஸம்பர்கின் பரப்பளவு 1000 சதுர மைல்.  சென்னையின் பரப்பளவு 460 சதுர மைல் என்பதை இந்த
‘நாடுகளோடு’ பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.  ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால், ஐரோப்பா
என்றதும் பொதுவாக நம் சிந்தனையில் படிவது ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற பிரபலமான நாடுகள்தான். 
அதற்குப் பதிலாக லக்ஸம்பர்க், லீஷ்டன்ஸ்டைன் போன்ற குட்டி தேசங்களுக்குச் செல்லும் போது நமக்கு
வேறுபல வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும்.   
 

·       
 
 
பூலோக சொர்க்கம் என்று சொல்லத்தக்க லக்ஸம்பர்க் நகரம் பற்றிய இரண்டு காணொளிகள்:
 
https://www.youtube.com/watch?v=8Iv4hje2rKo
 
https://www.youtube.com/watch?v=3hcxOKIhQRc
 
இப்போது நாம் திரும்பவும் தேசியவாதத்துக்குத் திரும்புவோம்.  தேசியவாதம் என்ற கருத்தாக்கம் ஐரோப்பிய
நாடுகளில் இன்று தேசிய நலனுக்கு எதிரானதாகக் கருதப்படுவதற்குக் காரணம், இரண்டாம் உலகப் போர். 
ஐரோப்பாவையே அழித்த அந்தப் போர் ஹிட்லர் போன்றவர்களின் தேசியவாதக் கொள்கையினால்தான்
ஏற்பட்டது என்பதை ஐரோப்பியர் உணர்ந்து விட்டனர்.  அதனால்தான் ஒரே நாணயம், ஒரே வசா
ீ என்ற
’ஒருங்கிணைந்த ஐரோப்பா’ என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடிந்தது.  யோசித்துப் பார்ப்போம். 
இலங்கை, இந்தியா, பர்மா, பங்களா தேஷ், பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், திபெத் ஆகிய ஏழு நாடுகளுக்கும்
ஒரே நாணயம், ஒரே வசா
ீ என்பது சாத்தியமா?
 
ஐரோப்பியரிடையே சாத்தியமான தேசியவாதத்துக்கு எதிரான ’ஒருங்கிணைந்த ஐரோப்பிய’ சிந்தனை
துருக்கியில் வளராத வரை துருக்கி ஐரோப்பாவோடு இணையவே முடியாது என்பதுதான் இந்தத் துருக்கிப்
பயணத்தில் நான் அறிந்து கொண்ட முக்கியமான பாடம். துருக்கியின் பிற்போக்குத்தன்மைக்குக் காரணம்,
படிப்பறிவு இன்மை, வறுமை.  (இங்கே வறுமை என்பதை இந்திய வறுமையோடு ஒப்பிடவே கூடாது.  துருக்கி
போன்ற ஆசிய/ஐரோப்பிய நாடுகளின் வறுமையை நாம் நேரில் காணும் போதுதான் புரிந்து கொள்ள முடியும். 
உத்தரப் பிரதேசத்திலும், பிஹாரிலும் மற்றும் பல வட இந்திய மாநிலங்களிலும் சென்னை, மும்பை போன்ற
பெருநகரங்களிலும் காணப்படும் விளிம்புநிலை மக்களை துருக்கியில் காண முடியவில்லை.  இஸ்தாம்பூலின்
சேரிகள் என்ற இந்தக் காணொளியைப் பாருங்கள்:
 
https://www.youtube.com/watch?v=mUv5QLMH_Ks
 
 

 
 
ஓரான் பாமுக்கின் ‘A Strangeness in My Mind’ என்ற நாவலில் துருக்கியின் ஏழ்மை பற்றி மிக விரிவாகப் பதிவு
செய்திருக்கிறார்.  அது பற்றிப் பிறகு பார்ப்போம். 
 
மேற்கு ஐரோப்பிய நாடுகள் புலம் பெயர்ந்து வருபவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்கள் கௌரவமாக
வாழ்வதற்குரிய வசதிகளைச் செய்து தருகின்றன என்பதை நாம் அறிவோம்.  பாரிஸ் நகரின் சில பகுதிகள்
முழுமையாக ஈழத் தமிழர்களாலும் சில பகுதிகள் மெக்ரிப் நாடுகள் என்று சொல்லப்படும் மொராக்கோ,
அல்ஜீரிய தேசத்தவர்களாலும் நிரம்பியிருக்கின்றன.  அப்படிப் புலம்பெயர்பவர்களில் துருக்கியர்களும் அடக்கம்
என்பதை முந்தைய அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறேன்.  இப்படிப் புலம் பெயர்ந்து ஐரோப்பா செல்பவர்கள்
அங்கே எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு துருக்கியரும் குர்துகளும் அடிக்கடி போடும் தெருச் சண்டைகளே
உதாரணம்.  
 
ஃப்ராங்க்பர்ட் நகரில் துருக்கியரும் குர்துகளும் அடித்துக் கொள்ளும் காட்சி இந்தக் காணொளியில்: 
 
https://www.youtube.com/watch?v=jlm2YGuKfcg
 
பின்வரும் காணொளியில் பெர்லின் நகரில் துருக்கியரும் குர்துகளும் மோதும் காட்சி:
 
https://www.youtube.com/watch?v=7yGvUjiMNjc
 
1961-ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்குப் பகுதியில் பிறந்த லைலா ஸானா பள்ளிக்கூடம் போகாதவர்.  15
வயதிலேயே மெஹ்தி ஸானாவுடன் திருமணம் ஆயிற்று.  மெஹ்தி சிறை பிடிக்கப்பட்டதும் தன்னைப் போல்
கணவனை சிறைக்குக் கொடுத்து விட்ட பெண்களோடு இணைந்தார்.  லைலாவைப் போலவே பல்லாயிரக்
கணக்கான பெண்களின் கணவன்மார்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.  அந்தப் பெண்களுக்கெல்லாம்
லைலா தலைமைப் பொறுப்பு ஏற்று ராணுவத்துக்கு எதிரான மக்கள் சக்தியைத் திரட்டினார்.  கூடவே கணவன்
இல்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது.  1991-இல் பாராளுமன்றத்துக்கு
நடந்த தேர்தலில் அவரது தியார்பக்கிர் மாவட்டத்தில் அவருக்கு 84 சதவிகித வாக்குகள் விழுந்தன.  துருக்கிப்
பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குர்து பெண்மணி என்ற அடையாளத்தையும் பெற்றார்
லைலா. லைலா குர்துகளுக்காகத் தனி நாடு கேட்கவில்லை.  குர்துகள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு
துருக்கியில் தங்கள் தாய்மொழியான குர்து மொழியைப் பேசவும் பயிலவும் அனுமதி தாருங்கள் என்று
மட்டுமே கேட்டார்.  துருக்கியரும் குர்துகளும் சமாதானமாக வாழ்வோம் என்று மட்டுமே பொதுக்கூட்டங்களில்
பேசினார்.  அதற்காகவே அவர் மீ து தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1994-இல் 15 ஆண்டுகள்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.  அவர் மீ து சாட்டப்பட்ட தேசத் துரோக குற்றங்களில் ஒன்று, அவர் பச்சை,
மஞ்சள், சிவப்பு நிறத்திலான பட்டியைத் தலையில் அணிந்திருந்தார் என்பது.  அந்த மூன்று நிறங்களும் குர்து
மக்களின் கலாச்சாரத்தைக் குறிக்கும் பாரம்பரிய நிறங்கள்!
 
1995-இலும் பிறகு 1998-இல் இரண்டாவது முறையாவும் அவரது பெயர் நோபல் சமாதானப் பரிசுக்காகப்
பரிந்துரைக்கப்பட்டது.  அதே ஆண்டில் அவர் சிறையில் இருந்தபடியே ஒரு குர்திஷ் பத்திரிகையில் எழுதிய
கட்டுரைக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டது.  
 
விடுதலைக்குப் பிறகு 2009-இல் அவருக்கு மீ ண்டும் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  காரணம்,
லண்டன் பல்கலைக்கழகத்தில் குர்துகள் பற்றிப் பேசினார் என்பதுதான். பின்னர் 2010-இல் பயங்கரவாதத்தைத்
தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் லைலா.  ஆனால்
பிறகு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு 2011 பொதுத் தேர்தலில் மீ ண்டும் பாராளுமன்றத்துக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
 

1960-இல் மெஹ்தி ஸானா.


 

மெஹ்தி ஸானா 2002-இல். 


 
மெஹ்தி ஸானா பற்றி Seeing Life Differently, லைலா ஸானா பற்றி A Cry From Jail என்ற இரண்டு ஆவணப்
படங்கள் Kudret Gunes என்ற குர்து இயக்குனரால் எடுக்கப்பட்டுள்ளன.  பின்வருவது குத்ரெத் குனேஸின்
புகைப்படம்.
 

 
ஹைதரோடு பேசி முடிக்கும் போது மாலை ஆகி விட்டது.  அதற்குள் எஃபெஸூஸ் சென்ற குழுவும் திரும்பி
வந்து விட்டது.  நானும் ஹைதரும் அமர்ந்திருந்த மேஜைக்குப் பக்கத்தில் அமெரிக்கத் தம்பதியான டேவிட்டும்
லிண்டாவும் அமர்ந்தனர்.  டேவிட்டிடம் ”எஃபெஸூஸ் எப்படி இருந்தது?” என்று ஆர்வத்துடன் கேட்டேன்.  “Just
some old rocks” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார் டேவிட்.  3000 ஆண்டுகளுக்கு முன்னே நிர்மாணிக்கப்பட்ட
மகத்தான கிரேக்க நாகரீகத்தின் சின்னமான எஃபெஸூஸ் அந்த அமெரிக்கக் கிழவருக்கு வெறும் பாறைகளாகத்
தெரிந்ததை எண்ணி அதிர்ச்சி அடைந்தேன்.
 

 
 
Ephesus
 

நிலவு தேயாத தேசம் – 20, சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : வியாழக்கிழமை,   மார்ச்   10 , 2016  04:48:21 IST
Latest Novels at Attractive Price

நிகழ்கால வரலாற்றிலிருந்து கொஞ்சம் பின்னே போகலாம்.  பின்னே என்றால் நியோலித்திக் காலம். 


நியோலித்திக் காலம்தான் கற்காலத்தின் கடைசிப் பகுதி.  இது கி.மு. 10000-இலிருந்து தொடங்கி கி.மு.4000-இல்
முடிகிறது.  இந்த நியோலித்திக் காலம் முடியும் தறுவாயில் – அதாவது, 6000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய
துருக்கியில் எஃபேசஸ் என்று அழைக்கப்படும் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்த ஒரு மனிதக் கூட்டம் அங்குள்ள
மலைப்பகுதிகளிலும் குன்றுகளிலும் கற்களை அடுக்கி வடு
ீ கட்டி வாழ ஆரம்பித்தது.    பின்னர் 3000
ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் வாழ்ந்த மக்களை விரட்டி விட்டு எஃபேசஸ் என்ற மாபெரும் நகரத்தை
நிர்மாணித்தான் ஏதென்ஸ் நகரத்து இளவரசனான ஆந்த்ரக்ளாஸ். 

 
மேலே காண்பது எஃபேசஸ் நகரத்தின் வரைபடம்.  இந்நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்று இதன் நூலகம்.
கீ ழே உள்ள புகைப்படத்தில் தெரிவது அந்த நூலகம்.   
 

 
நூலகத்தின் இன்னொரு தோற்றம் கீ ழே:
 

 
 
 

 
 
மேலே: 60,000 பேர் வாழ்ந்த பிரம்மாண்டமான நகரமான எஃபெசஸில் ஒரு வதி.  
ீ ரோமானியப் பேரரசின் ஆசியா
மைனர் பகுதியில் எஃபேசஸ் தான் மூன்றாவது பெருநகராக இருந்திருக்கிறது.
 
மேலே மனிதர்கள் இல்லாமல் தெரியும் வதி
ீ நான் சென்றிருந்த போது ஆயிரக் கணக்கான சுற்றுலாப்
பயணிகளால் நிரம்பியிருந்தது.
 
 

 
 

 
 

 
 
 
மேலே உள்ள புகைப்படம்:  தூரத்திலிருந்து நூலகம்.  கீ ழே : நகரத்தின் இன்னொரு பகுதி.  தூரத்தில் நூலகம்
தெரிகிறது.
 
 

 
 
 
 

 
மேலே: ஒரு சீரான வதி.
ீ பூமியிலிருந்து இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
 
நூலகத்திற்கு அடுத்தபடியாக எஃபேசஸ் நகரின் சிறப்பு, அங்குள்ள நாடக அரங்கம் (amphitheatre). 
 
 
 

 
 
இந்தப் புகைப்படங்களில் ஒரு பெண் கருப்புக் குடை பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.  காரணம்,
எஃபெசஸில் மே மாதம் வெயில் கொளுத்தியது.  கடும் பாலையில் நிற்பது போல் உடலெல்லாம் காந்தியது. 
(ஆனால் இரவில் குளிராக இருந்தது.)  வெள்ளைக்காரர்களின் தோலெல்லாம் தீய்ந்து போனதைக் காண
முடிந்தது.  சிலருடைய தோல் பட்டை பட்டையாகக் கருப்பாகவும் ரத்த நிறமாகவும் மாறிக் கொண்டிருந்தது.  
 
 

 
 
 

 
 
 
 
 
அனடோலியா (Anatolia) என்று அழைக்கப்படும் ஆசியா மைனர் அல்லது துருக்கியின் ஆசியப் பகுதியில் உள்ள
மிகப் பெரிய ஆம்ப்பிதியேட்டர் இதுதான்.  கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரங்கில்  25000 பேர்
அமரலாம்.  66 வரிசைகள்.  வரிசைகளுக்கு நடுவில் இரண்டு பகுதிகளில் நடைபாதைகள்.  இருக்கைகளில்
மூன்று வகுப்புகள் காணப்படுகின்றன.  அரங்க மேடைக்கு அருகில் உள்ளது அரசனும் மந்திரிகளும் அமரக்
கூடியதாக பளிங்கில் அமைக்கப்பட்டுள்ளது.  மற்றபடி பார்வையாளர்கள் அரங்கின் மேல் பகுதியிலிருந்து
வந்தார்கள்.  மேடை 43 அடி உயரம்.  ஆர்க்கெஸ்ட்ரா பகுதி உள்ள இடத்திற்குச் செல்ல ஐந்து கதவுகள்
இருக்கின்றன.  அரங்கத்தில் நாடகத்தைத் தவிர அரசியல் கூட்டங்களும், விவாதங்களும், மிருகங்களுக்கு
இடையிலான சண்டைகளும், க்ளாடியேட்டரும் நடந்தன.   இன்னொரு பெரிய ஆச்சரியம், கீ ழே உள்ள
மேடையிலிருந்து பேசினால் அது மேலே 63-ஆவது வரிசையில் உள்ளவர்களுக்கும் கேட்பது போன்ற ஒலி
அமைப்பையும் கணக்கில் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது அந்தத் திறந்த வெளி அரங்கம். 
 
அரங்கத்தில் மூன்று வகுப்புகள் இருந்தது போல் எஃபேசஸ் நகர மக்களே பல்வேறு படிநிலைகளில் (வர்க்கம்)
இருந்தனர்.  அரசனும் அவனைச் சார்ந்த அதிகார வர்க்கமும் மேல்நிலை.  அடுத்து வருவது,
வணிகர்கள்/படித்தவர்கள், போர் வரர்கள்,
ீ கீ ழ்நிலை உழைப்பாளிகள். இப்படியாக அங்கே நான்கு வர்க்கங்கள்
இருந்தன.  தீண்டத்தகாதவர்கள் என்று இந்தியாவில் இருந்ததைப் போல் அங்கே அடிமைகள் இருந்தனர். 
எனவே சாதிப் படிநிலை, தீண்டாமை போன்ற இழிவுகள் இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானதல்ல என்று
எஃபேசஸ் நகரக் கட்டுமானத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் தெரிகிறது.  அடித்தட்டு உழைப்பாளிகளின்
இருப்பிடங்கள் வசதியற்றதாகவும் பொந்து போன்ற வடுகளாகவும்
ீ காணப்படுகின்றன.  2300 ஆண்டுகளுக்குப்
பிறகும் கூட மக்களின் வர்க்க வேறுபாடு எஃபேசஸ் நகரின் இடிபாடுகளிடையே தூலமாகத் தெரிகிறது. 
அடித்தட்டு மக்கள் வாழ்ந்த குடில்கள்:
 
 

 
 
எஃபேசஸின் இன்னொரு அற்புதம், இங்கே இருந்த ஆர்த்தமிஸ் கோவில்.   ஆனால் இன்று அந்தக் கோவிலின்
ஓரிரு தூண்கள் மட்டுமே நமக்குக் காணக் கிடைக்கின்றன.  கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வந்த வெள்ளம் இந்தக்
கோவிலை அழித்து விட்டது.  பின்னர், கி.மு. 550-ஆம் ஆண்டு இது மீ ண்டும் கட்டப்பட்டது.  அந்தக் காலத்தில்
ஆர்த்தமிஸ் கோவில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.  கோவிலின் தோற்றம் இப்படியாக
இருந்திருக்கலாம் என்று அனுமானித்து இஸ்தாம்பூலில் இப்போது ஒரு மாதிரி வடிவத்தை
நிர்மாணித்திருக்கிறார்கள்.  அதன் புகைப்படம்:
 
 
 

 
 
கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்ட்டிபேட்டர் சொல்கிறார்: ”நான் பாபிலானைப் பார்த்திருக்கிறேன்;
சீயஸ் கோவிலையும் பிரமிடுகளையும் பார்த்திருக்கிறேன்.  ஆனால் ஆர்த்தமிஸ் கோவிலுக்கு நிகராக எதுவுமே
வர முடியாது.
 
கி.மு. 356-ஆம் ஆண்டு Herostratus என்பவன் இந்தக் கோவிலுக்குத் தீவைத்து விட்டான்.  ”இந்தக் காரியத்தின்
மூலம் வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறேன்” என்பதுதான் கோவிலை அழித்ததற்கு அவன் கூறிய காரணம். 
ஹிரோஸ்ட்ரேடஸுக்கு மரண தண்டனை வழங்கிய எஃபேசஸ் நியாயமன்றம் இனிமேல் யாரும் அவன்
பெயரையே உச்சரிக்கக் கூடாது என்று சட்டம் போட்டது.  மக்களும் அவன் பெயரையே உச்சரிக்காமல்
இருந்தனர். கோவில் அழிந்த அதே நாளில்தான் அலெக்ஸாந்தர் பிறந்தார்.  இதுபற்றி ப்ளூடார்க் கூறினார்: 
”ஆர்த்தமிஸ் தேவி அலெக்ஸாந்தரின் பிறப்பில் மும்முரமாக இருந்ததால் தன் கோவிலின் அழிவைப் பற்றி
கவனிக்க முடியாமல் போய் விட்டது.”
 
கோவிலைத் திரும்பக் கட்டுவதற்கு ஆகும் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன அலெக்ஸாந்தரின்
வேண்டுகோளை எஃபேசஸ் மக்கள் ஏற்கவில்லை.  கடவுளின் கோவிலை இன்னொரு கடவுள் கட்டுவதா என்று
தந்திரமாகச் சொல்லி அவனை ஏமாற்றி விட்டு,  அவனுடைய மரணத்துக்குப் பிறகு கி.மு. 323-இல் அவர்களே
அந்தக் கோவிலைத் திரும்பக் கட்டத் தொடங்கினார்கள். 450 அடி நீளமும் 225 அடி அகலமும் 60 அடி உயரமும்
127 தூண்களையும் கொண்டிருந்தது கோவில்.
 
 
ஆர்த்தமிஸ் கோவிலின் ஒரு வளைவு:
 
 

 
 
எஃபேசஸ் நகரத்தின் கட்டிடங்களில் பிரமிப்பை ஏற்படுத்திய மற்றொரு அம்சம், அங்கே இருந்த மொஸைக்
தரைகள்:
 
 

 
 
 

 
 
ஒரு காலத்தில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருந்த ஆர்த்தமிஸ் கோவிலில் இப்போது
எஞ்சியிருப்பது இந்தத் தூணும் மேலே கண்ட அந்த அலங்கார வளைவும்தான்.  சிவப்பு நிறப் பூக்களை ஒரு
பெண் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதன் காரணம், அது கஞ்சா செடி.  துருக்கியின் கிராமப்புறங்களெங்கும்
கஞ்சா செடிகள் மானாவாரியாக முளைத்துக் கிடக்கின்றன. 
 
வெயில் கடுமையாக இருந்ததால் ஒரு மரத்தின் நிழலில் தனியாக நின்று கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு
தமிழ்த் தம்பதி (பார்த்ததுமே தெரிந்து விடுகிறதே!) என்னை நெருங்கியது.  அவருக்கு 60 வயது இருக்கும். 
தமிழா என்று தமிழில் கேட்டார்.  ஆமாம் என்றேன் மகிழ்ச்சியுடன்.  அவரும் தன்னை அறிமுகப்படுத்திக்
கொண்டார்.  நியூஜெர்ஸியில் வசிக்கிறார்.  எந்த ஊர் என்று கேட்டார்.  மெட்ராஸ் என்றேன். 
 
மெட்ராஸில் எங்கே? 
 
மைலாப்பூர். 
 
ஓ, மைலாப்பூரா?  ப்ராமினா?
 
ஆமாம்.
 
இன்று வரை ஏன் ப்ராமின் என்று தவறான பதிலைச் சொன்னேன் என்று புரியவில்லை.  எனக்கு ஒரு பழக்கம்
உண்டு.  பொதுவாக அந்நியர்களின் கேள்விகளுக்கு எதிர்மறையான பதில் கொடுக்க மாட்டேன்.  உதாரணமாக,
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நாகூரில் நான் வசித்த சேரித்தெருவுக்குச் சென்றிருந்தேன்.  என் அம்மாவின்
தோழி ஒருவர் என்னை நலம் விசாரித்து, அம்மா எப்டி இருக்காங்க என்றார்.  நான் நல்லா இருக்காங்க
என்றேன்.  பிறகு அந்தப் பக்கம் அவந்திகா வந்தாள்.  எப்படிம்மா இருக்கே என்றார்கள் அந்த அம்மா
அவந்திகாவைப் பார்த்து.  நல்லா இருக்கேம்மா, சாருவோட அம்மாதான் இறந்து போய்ட்டாங்க என்றாள்
அவந்திகா.  இந்தப் புள்ள அம்மா நல்லா இருக்காங்கன்னு சொல்லிச்சே என்றார் அந்த அம்மாள்.  நான் ஏதோ
சொல்லி சமாளித்தேன்.  அந்த ரீதியில்தான் அந்த அமெரிக்கத் தமிழரிடமும் ப்ராமினா என்று கேட்டதற்கு
ஆமாம் சாமி போட்டேனோ என்னவோ!  
 
’சந்திரமுகி’ படத்தில் வரும் ’கொஞ்ச நேரம்’ பாடலில் எஃபேசஸ் நகரம் வருகிறது. 
 
 
பைபிளில் ஒரு இடத்தில் எஃபேசஸ் பற்றிய குறிப்பு வருகிறது.  அப்போஸ்தலர் 19:

 
பவுல் சில காலம் ஆசியாவிலே தங்கினார்.  அப்போது அந்த மார்க்கத்தைக் குறித்து ஒரு பெரிய கலகம் உண்டாயிற்று.  எப்படியென்றால் தெமெத்திரியஸ்

என்ற பெயர் கொண்ட தட்டான் ஆர்த்தேமியஸ் கோவிலைப் போல் வெள்ளியில் செய்து தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் செய்து கொண்டிருந்தான். 

ஒருநாள் அவன் அந்தத் தொழிலாளிகளையும் அப்படிப்பட்ட தொழில் செய்கிற மற்ற வேலையாட்களையும் அழைத்து, “நண்பர்களே, இந்தத் தொழிலினால்

நமக்கு நல்ல வருமானம் வருகிறது.  இப்படியிருக்க, பவுல் என்பவன் மனிதனின் கரங்களால் செய்யப்பட்ட கடவுள்கள்  கடவுள்கள் அல்ல என்று சொல்லி

எஃபெசூஸில் மட்டுமல்ல, ஆசியா முழுவதிலும் அநேக ஜனங்களுக்குப் போதித்து அவர்களை வசப்படுத்திக் கொண்டிருக்கிறான்.  இதனால் நம்முடைய

தொழில் அற்றுப் போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல் மகாதேவியாகிய ஆர்த்தமிஸ் கோவிலும் தன் மகிமையிழந்து போகிறதற்கும்,

ஆசியா முழுமையும் உலகம் முழுமையும் சேவிக்கின்ற அவளுடைய மகத்துவம் அழிந்து போகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான். அவர்கள் அதைக்

கேட்டு, கோபத்தால் நிறைந்து, எஃபேசியர்களின் ஆர்த்தமிஸே பெரியவள் என்று கோஷமிட்டார்கள்.  பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. 

பவுலுக்கு வழித்துணையாக வந்த மக்கெதோனியராகிய காயஸையும் அரிஸ்தர்க்குஸையும் இழுத்துக் கொண்டு அவர்கள் நாடக அரங்கத்திற்கு

ஓடினார்கள்.  பவுல் அந்தக் கூட்டத்துக்குள்ளே போக சித்தமாகயிருந்தபோது சீடர்கள் அவரைப் போகவிடவில்லை.  அந்தப் பகுதியில்

அதிகாரிகளாகயிருந்த பவுலின் சிநேகிதர் சிலரும் அவரிடத்தில் ஆள் அனுப்பி நாடக அரங்கத்துக்குப் போக வேண்டாம் என எச்சரித்தார்கள்.

 
 கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம்
இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. அப்பொழுது யூதர்கள் அலெக்சாந்தர் என்பவனை முன்னிற்குத்
தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி,
ஜனங்களுக்கு உத்தரவு சொல்ல மனதாயிருந்தான். அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது,
எஃபேசியருடைய ஆர்த்தமிஸே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச்
சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எஃபேசியரே,
எஃபேசியருடைய பட்டணம் மகாதேவியாகிய ஆர்த்தமிஸுக்கும் சொர்க்கத்திலிருந்து விழுந்த மகாதேவியின்
சிலைக்கும் கோவிற் பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவர் இந்த உலகிலே எவரும் உண்டோ? இது
எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும். இந்த
மனுஷரை இங்கே கொண்டு வந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத்
தூஷிக்கிறவர்களுமல்ல. தெமேத்திரியுவுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு
காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்
பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து
விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும். இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து
நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள்
விசாரிக்கப்படும்போது, கலகத்தை உண்டாக்கியவர்கள் என்ற குற்றத்திற்கு ஏதுவாகி விடுவோம் என்று
சொல்லி, பின்பு கூட்டத்தைக் கலைந்து போகச் சொன்னான்.” 
 
அந்தக் காலத்திலேயே தாம் வழிபடும் தெய்வம் சார்ந்த விஷயத்தில் மக்கள் எவ்வளவு உணர்ச்சிக்
கொந்தளிப்பை அடைந்தார்கள் என்பதற்கு பைபிளில் வரும் இந்தப் பகுதி ஒரு உதாரணம்.
 
எஃபெசூஸில் ஒரு மதக் கலவரமே நடக்க இருந்ததற்குக் காரணமாக இருந்த ஆர்த்தமிஸ் யார்?
 
பல முலைகளைக் கொண்ட ஒரு மகாதேவி அவள்…  
=====

   நிலவு தேயாத தேசம் – 21 சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : சனிக்கிழமை,   மார்ச்   19 , 2016  04:48:21 IST
Latest Novels at Attractive Price
ஆர்த்தமிஸ் ஒரு புராதன கிரேக்கக் கடவுள்.  ஸீயஸின் (Zeus) மகள்.  ரோமப் பழங்கதைகளில் அவள் பெயர்
டயானா.  அப்பல்லோவின் சகோதரி.  வேட்டையின் கடவுள்.  ஓவியங்களிலும் சிற்பங்களிலும் இவள் வில்லும்
அம்புமாகவும், வேட்டையாடப் பட்ட விலங்குகளோடும் சித்தரிக்கப்படுகிறாள்.  ஆர்த்தமிஸை இந்தியாவில்
வணங்கப்படும் காளிக்குச் சமமாக சொல்லலாம்.  கிரேக்க, ரோம புராணங்களில், மக்களின் வழிபாடுகளில்
ஆதித்தாய்க் கடவுளாகக் கருதப்படுபவள் ஆர்த்தமிஸ்.  இன்று அர்த்தமிஸ் கோவிலின் ஒரே ஒரு தூண் தான்
காணக் கிடைக்கிறது.  அவளுடைய மார்பில் தொங்கும் முலைகள் கருவுறுதல் மற்றும் செழிப்பின் குறியீடாகக்
கருதப்படுகிறது.  
 

***
உலக சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்றவளும் சராசரி மனிதர்களுக்கும் கூட பரிச்சயமான ஓர் அரசி
கிளியோபாட்ரா.  எகிப்தில் ஃபேரோக்களின் ஆட்சியில் டாலமி வம்சத்தின் கடைசியாக வந்த அரசி.  கி.மு. 51-
ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது அவள் வயது 18 தான். ஆட்சியை அவளது தகப்பன் 12-ஆம் டாலமியோடு
பகிர்ந்து கொண்டாள்.  தந்தை இறந்த பிறகு 13-ஆம் டாலமி, 14-ஆம் டாலமி என்று அழைக்கப்பட்ட தனது
சகோதரர்களுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டாள்.  இதற்காக அப்போதைய எகிப்திய வழக்கப்படி  அவர்களை
மணமும் செய்து கொண்டாள்.  இந்த சகோதரர்களுக்கும் கிளியோபாட்ராவுக்கும் இடையில் நடந்த அதிகாரப்
போட்டி மிகவும் சுவாரசியமானது. இப்போது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நடந்து வரும் அதிகாரப்
போட்டிக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல அப்போதைய நிலை.  கிளியோபாட்ரா தன் உருவத்தை
நாணயத்தில் பதித்தாள்.  கணவனும் சகோதரனுமான டாலமியின் படம் அதில் இல்லை.  சகோதரனை விட
கிளியோபாட்ராவுக்கே மக்களிடையே செல்வாக்கு இருந்தது.  காரணம், டாலமி அரசர்கள் தாங்கள் ஆளும்
தேசத்தின் எகிப்திய மொழியை ஒதுக்கித் தள்ளி விட்டு கிரேக்க மொழியையே அரசு மொழியாக பாவித்து
வந்தனர்.  கிளியோபாட்ராவுக்குப் பல மொழிகள் தெரியும்.  அவள் கிரேக்க,  எகிப்திய மொழி இரண்டையும் அரச
மொழியாக்கினாள்.  இப்படிப்பட்ட செயல்களால் எகிப்திய மக்கள் கிளியோபாட்ராவை கடவுளாகவே போற்ற
ஆரம்பித்தனர். 
 
கிளியோபாட்ரா பல்வேறு முறைகளில் தன்னுடைய முக்கியத்துவத்தைக் குறைப்பதைப் பார்த்து 13-ஆம்
டாலமி போத்தினஸ் என்ற திருநங்கையோடு சேர்ந்து கொண்டு அவளை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்சி
செய்தான்.  அதில் வெற்றி பெறவும் செய்தான்.  கிளியோபாட்ரா எகிப்திலிருந்து தப்பி சிரியாவுக்கு ஓடினாள். 
அங்கே ஒரு தனிப்படையையும் திரட்டினாள். 
 
Pompey என்பவன் ஒரு புகழ் பெற்ற ரோமானியத் தளபதி.  ரோமின் ஆட்சிக்காக ஜூலியஸ் சீஸருடன்
பாம்ப்பீயும் போட்டியிட்டு அதற்காக நடந்த போரில் தோற்று எகிப்து வந்து சேர்ந்தான்.  13-ஆம் டாலமி முதலில்
அடைக்கலம் கொடுப்பது போல் நடித்து ஜூலியஸ் சீஸர் எகிப்துக்கு வந்து சேர்ந்ததும் கிளியோபாட்ராவுக்கு
எதிராக அவனுக்கு சீஸரின் ஆதரவு தேவைப்பட்டதால் சீஸரை சந்தோஷப்படுத்துவதற்காக பாம்ப்பீயைக்
கொன்று அவனுடைய தலையைத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தான்.  ஆனால் சீஸர் இதைச் சற்றும்
ரசிக்கவில்லை.  பாம்ப்பீயின் உடலைத் தேடி எடுத்து அவனுக்கு ரோமானிய முறைப்படி அடக்கம் செய்ய
வேண்டும் என்று உத்தரவிட்டான்.  இதற்கிடையில் சீஸருக்கும் கிளியோபாட்ராவுக்கும் காதல் ஏற்பட்டது.
சீஸர் கிளியோபாட்ராவை மீ ண்டும் எகிப்தின் ராணியாக்கினான்.  அப்போது சீஸரின் படைகளுக்கும் 13-ஆம்
டாலமியின் படைகளுக்கும் நடந்த போரின் போது டாலமி நைல் நதியில் மூழ்கி இறந்தான். 
 
கிளியோபாட்ராவைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் அவள் கதை ஒரு பிரம்மாண்டமான நாவலுக்கான
களனாக இருக்கும் என்று தோன்றும்.  ஏனென்றால், அவளுடைய சகோதரன் 13-ஆம் டாலமி போரில் இறந்ததும்
அவள் தன்னுடைய இளைய சகோதரனான 14-ஆம் டாலமியைத் திருமணம் செய்து கொண்டாள்.  இது நடந்தது
கி.மு. 47, ஜனவரி 13.  (வரலாற்றை எவ்வளவு துல்லியமாக வைத்திருக்கிறார்கள்!) ஆனால் கிளியோபாட்ரா
காதல் புரிந்ததெல்லாம் ஜூலியஸ் சீஸருடன்.  இரண்டையுமே அவள் பகிரங்கமாகச் செய்தாள். இந்த
நிலையில் கி.மு. 44, மார்ச் 15-ஆம் தேதி சீஸர் கொல்லப்பட்டான்.  சீஸர் இறந்ததுமே கிளியோபாத்ரா தன்
தம்பியும் கணவனுமான 14-ஆம் டாலமிக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டு, ஜூலியஸ் சீஸருக்கும்
தனக்கும் பிறந்த புதல்வன் சிஸேரியனை அரசனாக்கினாள்.  அதோடு, மார்க் ஆண்டனியைக் காதலித்து
அவனுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.  அவளுக்கும் அவளுடைய சகோதரர்களுக்கும் நடந்த
திருமணத்தில் அவளுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை.  சீஸருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆக்டேவியனோடு
நடந்த சண்டையில் தோற்று மார்க் ஆண்டனி தற்கொலை செய்து கொண்டான்.  அதைத் தொடர்ந்து
கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொண்டாள்.       
 
கி.மு. 30-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி இறந்தாள் கிளியோபாட்ரா.  அதன் பிறகு எகிப்து ரோமப் பேரரசின்
ஒரு பகுதியாக ஆனது.
 

   
 
கிளியோபாட்ரா என்ற பெயரில் 1963-இல் எலிஸபத் டெய்லரும் ரிச்சர்ட் பர்ட்டனும் நடித்த ஒரு
பிரம்மாண்டமான திரைக்காவியம் வந்திருக்கிறது.  மற்றொரு காவியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஆண்டனி
அண்ட் கிளியோபாட்ரா.  அதன் முதல் காட்சியே நம் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கும்.  ஆண்டனி
கிளியோபாட்ராவுடன் அலக்ஸாண்ட்ரியா நகரில் இருக்கிறான். 
 
கிளியோபாட்ரா கேட்கிறாள், நீ என் மீ து கொண்டுள்ளது உண்மையிலேயே காதல் என்றால் அது எவ்வளவு
ஆழமானது?
 
ஆண்டனி: அதை அளவிடுவது ரொம்பவும் கீ ழ்மைப்படுத்துவதாக இருக்கும்.
 
கிளி: எவ்வளவு என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  அது எவ்வளவு ஆழம்?  எவ்வளவு நீளம்? 
 
ஆண்டனி: அப்படி நீ அளந்துதான் பார்க்க விரும்பினால் பூமியையே தாண்டி, சொர்க்கத்தையும் தாண்டிப் போக
வேண்டியிருக்கும்.
 
அப்போது ஒரு சேவகம் ரோமிலிருந்து கடிதம் கொண்டு வருகிறான்.  காதல் மயக்கத்தில் ஆண்டனிக்கு அதைப்
படிக்க மனமில்லை.  படித்துப் பார், ஏதாவது முக்கிய செய்தி இருக்கப் போகிறது என்கிறாள் கிளியோபாட்ரா. 
 
”உன் மனைவி ஃபுல்வியா உன் மீ து கோபமாக இருக்கப் போகிறாள்;  அந்தப் பச்சைக் குழந்தை சீஸர், ‘அதைச்
செய், இதைச் செய், அந்த நாட்டைப் பிடி, இந்த நாட்டை விடுதலை செய், உடனே போ, இல்லாவிட்டால் நீ
அவ்வளவுதான்’ என்று ஏதாவது உத்தரவு அனுப்பியிருக்கப் போகிறான்; படித்துப் பார் ஆண்டனி.”
 
அதற்கு ஆண்டனி சொல்லும் பதில் - என் கல்லூரிப் பருவத்தில் படித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
 
Let Rome be washed away in the Tiber and let the great empire fall.  My place is here.  Kingdoms are only dirt.
 
ரோம் திபர் நதியில் அடித்துக் கொண்டு போகட்டும்; ரோம் சாம்ராஜ்யம் வழட்டும்.  ீ எனக்குக் கவலையில்லை. 
என் இடம் இதுதான்.  சாம்ராஜ்யமெல்லாம் குப்பை.  நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ
அதுதான் இந்த உலகிலேயே உன்னதமான காரியம்.
***
 

 
 
எஃபெசூஸில் மேலும் சில சுவாரசியங்களைப் பார்த்தேன்.  நகரில் பிராத்தல் என்று ஒரு இடம் இருக்கிறது. 
விபச்சார விடுதி.   அதன் நுழைவாயிலில் ஒரு காலடித் தடம் காணப்படுகிறது.  அந்தக் காலடி அளவுக்குக்
குறைந்த அளவுள்ள பாதத்தைக் கொண்டவர்கள் விடுதிக்குள்ளே செல்ல முடியாது.  2500 ஆண்டுகளுக்கு
முன்னே எவ்வளவு தீர்க்கமாக யோசித்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். 
 
இன்னொரு ஆச்சரியம்.  இதுவரை எந்தப் புராதன வரலாற்றுச் சின்னங்களிலும் கழிப்பறையைப்
பார்த்ததில்லை.  இந்தியாவில் பிரம்மாண்டமான அரண்மனைகள், கோட்டைகள் எல்லாம் பார்த்திருக்கிறேன். 
ஆக்ராவின் ஃபதேபூர் சிக்ரியின் கோட்டையில் அரச குமாரிகள் சேடிகளோடு கண்ணாமூச்சி விளையாடும்
இடமெல்லாம் இருக்கும்.  ஆனால் கழிப்பறை எங்கே இருந்தது என்பதற்கு எந்த அடையாளமும் தெரியாது. 
ஆனால் எஃபெசூஸ் நகரில் western closet என்று சொல்லப்படும் கழிப்பறைகள் கற்களால் வரிசையாகக்
கட்டப்பட்டுள்ளன.  
 
 

 
 
எஃபெசூஸில் கிளியோபாட்ரா குளித்த நீச்சல் குளம் உள்ளது.  இங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றால்
உலகின் பெரும் அதிசயங்களில் ஒன்றான ’பாமுக்கலே’யைப் பார்க்கலாம். 
 
 

 
 
மேலே உள்ள படங்களைப் பாருங்கள்.  மேலிருந்து கீ ழே அடுக்கு அடுக்காக இயற்கையாக உண்டாகியிருக்கும்
குளங்களில் நீல நிறத் தண்ண ீர் தேங்கியிருக்கிறது.  அந்த மண் கொழகொழவென்று மாவைப் போல் வெள்ளை
வெளேரென்று பரவியிருக்கிறது.  அதில் 17 வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன.  அவை அந்த ஸ்படிக மண்ணில்
சிறு சிறு குளங்களாகத் தேங்கியிருக்கின்றன.   இந்த மண்ணில் கால்ஷியம் கார்பொனேட் இருப்பதாக
அறிந்தேன்.    
 
 

 
 

 
இங்கே காலணி அணிந்து செல்ல அனுமதி இல்லை.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நீரிலும்
மண்ணிலும் மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.  மேலே தெரிவதெல்லாம் வெண்ணிற உறை பனி அல்ல. 
கால்ஷியம் கார்பொனேட் கலந்த மண்.  பல நூறாண்டுகளாகப் படிந்த படிவுகள். 
 

 
 
எஃபெசூஸில் நான் பார்த்த மற்றொரு முக்கிய இடம், கன்னி மேரி வாழ்ந்த வடு…

=====
  

நிலவு தேயாத தேசம் – 22 சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   29 , 2016  00:47:00 IST
Latest Novels at Attractive Price

ஆகஸ்ட் 13, 1822 அன்று காலை கண் விழித்ததும் காதரீன் எமரிச் என்ற ஜெர்மானிய கன்னிகாஸ்த்ரீக்கு
முந்தின இரவில் கண்ட கனவு ஞாபகம் வந்தது.  அந்தக் கனவில் கன்னி மேரி ஏதோ ஒரு மலைப்பகுதியில்
கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு சிறிய குடிசை போன்ற இடத்தில் வசிக்கிறார்.  கன்னி மேரியின் வயது
அப்போது 64 வயதும் 23 தினங்களும் ஆகியிருக்கின்றன.  அன்றைய தினம் கன்னி மேரி இந்த உலக
வாழ்க்கையை முடித்துக் கொண்டு மேலுலகம் செல்கிறார்.
காதரீன் எமரிச் 1774-ஆம் ஆண்டு பிறந்து 50 ஆண்டுகள் வாழ்ந்து 1824-இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 
எமரிச்சுக்கு சிறு வயதிலிருந்தே கனவில் பல காட்சிகள் தோன்றுவதுண்டு.  அவற்றின் தனித்தன்மை
என்னவென்றால், அந்தக் கனவுலகத் தோற்றங்கள் யாவும் நிஜ வாழ்வில் சோதனை செய்து பார்க்கும் போது
அப்படியே நிஜமாக இருக்கும்.  அப்படியாகத்தான் கன்னி மேரி முதுமையடைந்து மலைப்பாங்கான பகுதியில்
ஒரு சிறிய கல்குடிலில் வசித்து வருவது இவர் கனவில் தோன்றியது.  அந்தக் காட்சிகளை Clemens Brentano
என்ற ஜெர்மானியக் கவிஞரிடம் விவரித்தார் எமரிச். 
எமரிச் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த போது அவரைப் பார்ப்பதற்காகச் சென்ற நண்பர்கள் குழுவில்
ஒருமுறை ப்ரெந்த்தானோவும் இருந்தார்.  அவரைப் பார்த்த
 

(காதரீன் எமரிச்)
 
மாத்திரத்தில் எமரிச், ”இவரையும் நான் கனவில் கண்டேன்; இவரிடம்தான் கன்னி மேரியின் பிற்கால
வாழ்வைப் பற்றிச் சொல்லுமாறு நான் பணிக்கப்பட்டேன்” என்றார்.  அது நடந்தது 1819.  அதன் பிறகு அவர் உயிர்
பிரியும் தருணம் வரை ஆறு ஆண்டுகள் அவர் சொல்லச் சொல்ல அவரது கனவுக் காட்சிகளை நோட்டுப்
புத்தகங்களில் எழுதிக் கொண்டார் ப்ரெந்த்தானோ.  அந்தக் குறிப்புகள் ப்ரெந்த்தானோவின் மரணத்துக்குப் பிறகு
The Life of The Blessed Virgin Mary From the Visions of Anne Catherine Emmerich என்ற தலைப்பில் வெளிவந்தது.  அந்த

நூலின் மின்நூல் வடிவம்:
 
கிறித்தவ வரலாற்றிலும் அது தவிர மதங்களின் வரலாற்றிலும் ஈடுபாடுள்ள நண்பர்கள் அவசியம் வாசிக்க
வேண்டிய நூல் இது. பைபிளிலும் யூதர்களின் புனித நூலான ’தோரா’விலும் வரும் நூற்றுக் கணக்கான கதைகள்
இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 
 

 
’தோரா’வில் விவரிக்கப்படும் தீர்க்கதரிசி பலாம் கழுதையில் வருகிறான்.  அவன் முன்னே வரும்
தேவதையிடம் பேசுகிறான்.  எமரிச்சின் கனவிலும் இந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது.
காதரீன் எமரிச்சின் இன்னொரு நூலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.  The Dolorous Passion of Our Lord
Jesus Christ என்ற அந்தப் புத்தகம்தான் தனது The Passion of The Christ படத்தின் ஆதாரம் என்று கூறுகிறார் மெல்
கிப்ஸன்.
 
அந்த நூலின் மின்நூல் வடிவம்:
 
மேலே குறிப்பிட்ட இரண்டு நூல்களும் கிறித்தவ இலக்கியத்தின் பொக்கிஷங்கள் மட்டுமல்ல; காவிய வகை
இலக்கியமாகவும் கருதத் தக்கவை.      
 
இன்று வரை மெல் கிப்ஸனின் படத்தை என்னால் முழுமையாகப் பார்க்க முடிந்ததில்லை.   எமரிச்சின் நூலைப்
படித்த பிறகு இன்னொரு முறை முயற்சித்த போதும் அது சாத்தியமாகவில்லை.  சினிமாவில் எத்தனையோ
வன்முறைக் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம்.  ஆனால் இயேசு என்ற அந்த மகத்தான புருஷன்
சாட்டையாலும் சங்கிலியாலும் இரும்பு ஆணிகள் பூட்டப்பட்ட வாரினாலும் அடிபட்டு சதை கிழிந்து தொங்கும்
போது அதைப் பார்க்கும் அளவுக்கு மனதில் திடமில்லாமல் போகிறது.  காரணம், அந்தக் காட்சி நேராக என்னை
கி.பி. 33-ஆம் ஆண்டுக்குக் கொண்டு சென்று விடுகிறது. 
*** 
இயேசுவின் மரணத்துக்குப் பிறகு கன்னி மேரி, சீயோன் மலையில் மூன்று ஆண்டுகளும் பெத்தானி மலையில்
மூன்று ஆண்டுகளும் கடைசியாக எஃபசஸில் ஒன்பது ஆண்டுகளும் வாழ்ந்தார்.  பவுல்தான் கன்னி மேரியை
எஃபசஸ் அழைத்து வந்தவர்.
“அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீடனையும் கண்டு,
தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
பின்பு அந்தச் சீடனை நோக்கி, அதோ, உன் தாய் என்றார். அந்நேர முதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாய்
ஏற்றுக் கொண்டான்.”  யோவான் 19: 26,27.   
 
”அப்பல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய்
எஃபசஸுக்கு வந்தான்.”
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு ஜெருசலேமில் நடந்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயந்து சிலர்
மலைப்பாங்கான எஃபசஸுக்கு வந்தார்கள். அப்படியாகத்தான் பவுல் கன்னி மேரியையும் எஃபசஸ் அழைத்து
வந்திருக்க வேண்டும்.   
 
கன்னி மேரி தன்னுடைய இறுதி நாள் வரை வசித்த  கல்வடு
ீ இப்போது ஒரு புனித ஸ்தலமாக
கிறிஸ்தவர்களால் கருதப்படுகிறது.  ஏராளமான முஸ்லீம்களும் இங்கே வருகிறார்கள்.  சராசரியாக ஒரு
ஆண்டில் பத்து லட்சம் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வருகிறார்கள் என்கிறது புள்ளி விபரம்.  ஆனால் 1811
வரை - காதரீன் எமரிச்சின் கனவில் வரும் வரை - இப்படி ஒரு இடம் இருந்ததே யாருக்கும் தெரியாது. 
இதுவரை மூன்று போப்பாண்டவர்கள் இங்கே வந்து போயிருக்கிறார்கள். 
 

 
 

 
என்னைப் பொறுத்தவரை பயணம் என்பது வரலாற்றின் முன்னும் பின்னுமாக ஊடாடுவதுதான்.  மேலே உள்ள
படத்தில் தெரியும் கற்களால் ஆன கட்டிடம் வரலாறு தெரியாத ஒருவருக்கு ஒரு பழைய, இடிந்து போன
வடாகத்தான்
ீ தெரியும்.  அதனால்தான் அந்த அமெரிக்கக் கிழவர் எஃபெசஸை ’கல் குவியல்’ என்று வர்ணித்தார்.
ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குடிலில்தான் மேரி மாதா தனது இறுதிக் காலத்தைக்
கழித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது நம் மனக்கண்முன் தோன்றும் காட்சிகளும்
வசனங்களும் அதி அற்புதமானவை. 
 
அந்தக் குடிலின் எதிரே நான் பல மணி நேரம் அமர்ந்திருந்தேன். 
 
யூதர்களுடைய பஸ்கா பண்டிகை சமீ பத்திருந்த வேளையில் யேசு ஜெருசலேம் செல்கிறார்.  தேவாலயத்தில்
ஆடுகளையும் மாடுகளையும் புறாக்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  அப்போது கயிற்றினால் ஒரு
சவுக்கை உண்டுபண்ணி அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்தி விட்டு,
காசுக்காரர்களின் காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, புறா விற்கிறவர்களை நோக்கி,
இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போங்கள், என் பிதாவின் வட்டை
ீ வியாபார
ஸ்தலமாக்காதீர்கள் என்றார். 
 
நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
 
சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.
 
யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?
 
யேசு தாமஸிடம் சொன்னார்: நீ என்னைக் கண்டதினாலே விசுவாசிக்கிறாய்.  காணாதிருந்தும்
விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
 
அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து, உன்னை அடித்தவன் யார், அதை
ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, அநேக தூஷண வார்த்தைகளையும்
சொன்னார்கள். 
 
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒரு ஸ்த்ரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில்
அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.
 
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்.
 
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்.  ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால்,
அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
 
உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்.
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். 
உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். 
 
என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம்
என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஆகாரத்தைப்
பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரரும் விசேஷித்தவைகள் அல்லவா?
 
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை,
களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பிதா பிழைப்பூட்டுகிறார். 
அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் இல்லையா?
 
காட்டுப் புஷ்பங்களைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை; நூற்கிறதுமில்லை.
 
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப்
பார்க்கிறதென்ன?
 
இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி, நான் உன் கண்ணிலிருக்கும்
துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
 
மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு; பின்பு உன் சகோதரன்
கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போட வகை பார்ப்பாய்.
 
மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச்
செய்யுங்கள்; இதுவே நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாகும். 
 
இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இறை வசனங்களை தியானித்தபடி அன்னையின் ஆலயத்தில் நீண்ட
நேரம் அமர்ந்திருந்தேன். 
 

கன்னி மேரியின் வட்டின்


ீ உட்புறம். 
 
அங்கிருந்து கிளம்பும் போது சுவாரசியமான ஒரு விஷயத்தைப் பார்த்தேன்.  ஒரு சுவரில் ஆயிரக் கணக்கான
காகிதங்கள் கயிற்றில் கட்டப்பட்டிருந்தன.  அங்கே நம்முடைய பிரார்த்தனையை எழுதி வைத்தால் பலிக்கும்
என்றார்கள்.  ஒன்றுதான் எழுதலாமா, நிறைய எழுதலாமா என்று பக்கத்திலிருந்து பெண்ணிடம் கேட்டேன். 
நிறைய எழுதுங்கள்; ஏதாவது ஒன்று நடக்கும் என்றார் சிரித்துக் கொண்டே.  கேளுங்கள், கொடுக்கப்படும் என்ற
வசனம் வேறு நினைவு வந்தது.  ரெண்டு மூணு விஷயங்களை எழுதி வைத்தேன். 
 

=====

நிலவு தேயாத தேசம் – 23 சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   02 , 2016  05:30:16 IST
Latest Novels at Attractive Price
 

Pamukkale தடாகம் ஒன்றில்…


 
வளைகுடா நாடுகளில் வசிக்கும் என் நண்பர்களிடம் நீங்கள் வசிக்கும் நாட்டை சுற்றிப் பார்த்தீர்களா என்று
கேட்கும் போது எல்லோரும் ஒரே பதிலைத் தருவதையே பார்த்திருக்கிறேன்.  இங்கே பாலைவனத்தில் பார்க்க
என்ன இருக்கிறது? 
 
நண்பர்களின் இந்தக் கேள்வியைப் பற்றி இஸ்தாம்பூலில் அபிநயாவை மீ ண்டும் எதேச்சையாகப் பார்த்த போது
யோசிக்க நேர்ந்தது.  ஒரே நிறுவனம், ஒரே இடத்துக்குப் பயணம் என்பதால் முதலில் சந்தித்த பயணிகளையே
மீ ண்டும் மீ ண்டும் வெவ்வேறு ஊர்களில் சந்தித்துக் கொண்டிருந்தோம்.  என் பயணக் குழுவைச் சேர்ந்தவர்கள்
வேறு திசையில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு கடைசியாக இஸ்தாம்பூல் வந்து சேர்ந்திருந்தார்கள். 
எனக்கும் அபிநயாவுக்கும் மீ ண்டும் மூன்று தினங்கள் இஸ்தாம்பூலில் தங்கக் கிடைத்தன.  இந்தியாவுக்கும்
ஒரே விமானத்தில் கிளம்புகிறோம் என்பதால் மீ ண்டும் மஸ்கட் (ஓமன் தலைநகர்) விமான நிலையத்தில் எட்டு
மணி நேரம் தங்க வேண்டியிருந்தது பற்றி யோசித்தோம்.  பேசாமல் ஓமனுக்கு வஸா
ீ எடுத்துக் கொண்டு
நாலைந்து நாள் ஓமனைச் சுற்றி விட்டு ஊர் திரும்பலாமா என்று கேட்டேன். 
 
மஸ்கட்டில் அபிநயாவின் உறவினர்கள் வேறு இருப்பதாகச் சொன்னார்.  அப்போது நான், ”நீங்கள் தவறாக
நினைக்காவிட்டால் ஒன்று சொல்லலாமா?” என்றேன். 
 
”சொல்லுங்கள்.” 
 
“பிராமணர்களுக்கு உலகம் பூராவும் உறவினர்கள் இருக்கிறார்கள்.”
 
“உண்மைதான்.  நியூ ஜெர்ஸியிலேயே நூறு பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  இன்னும் நீங்கள்
என்னென்ன ஊர் சொல்கிறீர்களோ அங்கெல்லாம் ஒரு உறவு இருக்கிறது.  எங்கள் குடும்பமே உலகத்தை ஒரு
க்ளோபல் வில்லேஜாக மாற்றி விட்டது என்று என் அப்பா அடிக்கடி சொல்வார்.  ஆஃப்ரிக்காவின் Djibouti-யில்
கூட என் கஸின் ஒருத்தன் இருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…”
 
”ஆஹா…  என்ன ஒரு குடும்பம்.  ஆனால் என் உறவினர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் செங்கல்பட்டைக்
கூடத் தாண்டியிருக்க மாட்டார்கள். என் கஸின் ஒருத்தன் திஹார் ஜெயிலில் இருக்கிறான்.” 
 
யோசித்துப் பார்த்த பிறகு ஓமன் பயணம் கைவிடப் பட்டது.   விடுப்பு கிடையாது; அதனால்  திரும்பியாக
வேண்டும் என்றார் அபிநயா.  ஆனால் மஸ்கட் விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் இருக்க வேண்டுமே,
விமான நிலையத்துக்கு வர முடியுமா என்று என் கஸினைக் கேட்கிறேன் என்று சொல்லி விட்டு
தொலைபேசியில் பேசினார்.  பேச்சின் இடையே “என் நண்பர் ஓமனைச் சுற்றிப் பார்க்கப் பிரியப்படுகிறார்” என்று
நான் சொன்னதையும் சொன்னார்.  அதைக் கேட்டு அந்த கஸின் மிரண்டு விட்டதாக அபிநயா பிறகு சொன்னார். 
அவர் அங்கே ஏழெட்டு வருடமாக இருக்கிறார்.  பணம் எக்கச்சக்கமாகக் கிடைக்கிறது.  ஆனால் சுற்றிப்
பார்க்கத்தான் ஒன்றுமே இல்லை. அந்தப் பாலைவனத்தில் பார்க்க என்ன இருக்கிறது என்று பலமுறை
ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார். 
 
நான் அப்போது டேவிட் சொன்னதை அபிநயாவிடம் சொன்னேன். ரோமானியப் பேரரசின் இரண்டாவது
தலைநகராக இருந்த இடம், க்ளியோபாட்ரா தங்கிய இடம், அப்படிப்பட்ட எஃபசூஸை வெறும் கற்குவியல்
என்றாரே அந்த அமெரிக்கக் கிழவர்!  என்னுடைய இன்னொரு நண்பர் இஸ்தாம்பூலை ’வெறும் பழைய காலக்
கட்டிடங்களைத் தவிர இந்த ஊரில் வேறு ஒன்றுமேயில்லை’ என்று சொல்லவில்லையா? 
 
ஒரு இடத்துக்கும் உங்களுக்கும் உள்ள உறவு என்பது என்ன?  இந்தக் கட்டுரையை இப்போது நான் எழுதிக்
கொண்டிருக்கும் போது சி.சு. செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம் என்ற 2000 பக்க நாவலைப் படித்துக்
கொண்டிருக்கிறேன்.  அது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையை விவரிக்கிறது.  நூற்றுக் கணக்கான
இடங்கள் வருகின்றன.  அதெல்லாம் இப்போது எப்படி இருக்கின்றன என்று பார்க்க வேண்டும் போல் எனக்குத்
தோன்றுகிறது.  உதாரணமாக, செல்லப்பாவுக்கு அப்போது (1928) வயது 16.  இண்டர் படிப்பின் இரண்டாம்
ஆண்டு.  இப்போதைய பனிரண்டாம் வகுப்பு.  மதுரை மேலகோபுரத் தெருவை நோக்கி வடக்குப் பார்த்து
இருக்கும் மதுரை லாட்ஜில்தான் அவர் தங்கிப் படித்திருக்கிறார்.  அவர் விவரிக்கும் இடத்தில் இப்போது அந்த
லாட்ஜ் இருக்கிறதா, இல்லையென்றால் அது இப்போது என்னவாக ஆகியிருக்கிறது என்று பார்க்க வேண்டும்
என்ற ஆவல் மேலிடுகிறது எனக்கு. 
 
இப்படியாகத்தான் இடத்துக்கும் நமக்குமான உறவு உண்டாகிறது.  சே குவேரா பற்றி இப்போது எல்லோருக்கும்
தெரியும்.  ஃபாஷன் உலகில் அவர் முகம் ஒரு அலங்கார மோஸ்தர்.  ஆனால் உலகின் இடதுசாரிப் புரட்சிகர
இயக்கங்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு சே குவேராவின் பெயர் புரட்சியின் குறியீடு.  சே பொலிவியாவில்
தனது தோழர்களுடன் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததையும் பின்னர் அவர் அங்கே பிடிபட்டு
சி.ஐ.ஏ.வினால் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம்.  சே தனது தோழர்களுடன் பொலிவியாவில் சென்ற
பாதை இப்போது ’சே குவேரா பாதை’ என அழைக்கப்பட்டு உலகெங்கிலும் இருந்து சே’யின் ஆர்வலர்கள்
இப்போது அந்தப் பாதையில் பயணிக்கிறார்கள். 
 
இன்று சாதாரண நோட்டுப் புத்தகத்தைப் போல் கிடைக்கும் சே குவேராவின் ’பொலிவிய நாட்குறிப்புகள்’ பற்றி
1970 களின் இறுதியில் இடதுசாரிகளைத் தவிர அநேகமாக வேறு யாருக்கும் தெரியாது.  அப்போது அது
எங்கேயும் கிடைப்பதாகவும் தெரியவில்லை.  உலகில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு சே குவேராவின்
நூல்கள் பாடத் திட்டமாக இருந்ததால் தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக நூலகத்தில் அது கிடைத்தது. 
அங்கே பணி புரிந்த என் நண்பர் ஒருவர் மூலம் பொலிவிய நாட்குறிப்புகள் கிடைத்தது. 
 
சே பயணித்த பாதையில் ஒரு பயணம்:
 
சே பற்றித் தெரியாத ஒருவருக்கு Cochabamba, La Higuera போன்ற ஊர்களெல்லாம் வெறும் பெயர்கள்.  ஆனால்
சே’வைத் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் புனித ஸ்தலங்கள்.  6500 அடி உயரத்தில் உள்ள சின்னஞ்சிறிய
கிராமமான லா இகுவேராவில்தான் சே அமெரிக்க சிஐஏ ஆட்களின் உதவியுடன் பொலிவிய ராணுவத்தால்
பிடிக்கப்பட்டார். 
 
இதைப் போலவேதான் அரபி மொழி பேசப்படும் நாடுகளும், இஸ்லாமியர் வாழும் நாடுகளும் என்னை ஈர்த்தபடி
இருக்கின்றன.  தொடர்ந்து பல ஆண்டுகளாக அரபி இலக்கியத்தை வாசித்து வருவதால் ஒவ்வொரு அரபு
தேசமும் எனக்குரிய கதைகளைத் தன்னில் கொண்டிருக்கின்றன.  ஆனால் இலக்கியமோ அரசியலோ சமூக
வரலாறோ தெரியாத, பணம் ஈட்டுவதை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு நடமாடும் மனிதர்களுக்கு எல்லா
ஊர்களுமே வெறும் இடங்கள்தான்.  அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?  வெறும் பாலைவனம். 
 
அதையேதான் கேட்டார் அபிநயாவின் உறவுக்கார பெண்ணும்.  ஓமனில் என்ன இருக்கிறது பார்க்க?
 
Jokha Al-Harthi என்று ஒரு ஓமன் தேசத்து எழுத்தாளர் இருக்கிறார்.  அவரது Women of the Moon என்ற நாவலின்
ஒருசில பகுதிகளை Banipal பத்திரிகையில் படித்திருக்கிறேன். 
 

ஜோக்கா அல்-ஹார்த்தி
 
மூன்று தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்லும் நாவல் அது.  ஓமனில் ஒரு கிராமம்.  கம்பளி
நூற்பதுதான் அங்கே உள்ள பெண்களின் பிரதான தொழில்.  அங்கே மய்யா என்ற இளம் பெண்ணுக்குத்
திருமணம் செய்து வைக்கிறாள் அவள் அம்மா.  ஆனால் மய்யாவோ வேறு ஒருவனைக் காதலிக்கிறாள். அலி
பின் கலாஃப் என்ற பெயருள்ள அவன் நீண்ட காலம் லண்டனில் படித்தவன்.  ஆனால் மய்யாவின் காதல் கை
கூடவில்லை. அவளுடைய தங்கைகள் இருவரும் மணமாக இருக்கும் தங்கள் தமக்கையைக் கிண்டல்
செய்கிறார்கள். அப்போது மய்யா சொல்கிறாள்:  ”இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது? அவன் சிரிக்கும்
போது சிரித்து, அழும்போது அழுது, அவன் கொஞ்சும் போது கொஞ்சிக் கொண்டிருப்பது ஒரு வாழ்க்கையா?”
 
“நீ சொல்வது புதிதாக இருக்கிறதே?  பெதோயின் (Bedouin) பெண்கள் அப்படிச் சொல்ல மாட்டார்களே?  அவன்
சந்தோஷம்தான் நம்முடைய சந்தோஷம்.  அவன் துக்கம்தான் நம்முடைய துக்கம்” என்கிறார்கள் இரண்டு
சகோதரிகளும்.
 
“அப்படியானால் என் துக்கத்தைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?” என்று ஆவேசமாகக் கேட்கிறாள்
மய்யா. 
 
மய்யாவுக்குத் திருமணம் நடந்து கர்ப்பமாகிறாள்.  அப்போது அவள் ஒரு முடிவு செய்கிறாள்.  தன் தாயைப்
போல் வட்டிலேயே
ீ குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது. மஸ்கத்திலுள்ள மருத்துவமனையில்தான் பெற்றுக்
கொள்ள வேண்டும். 
 
அவள் பேசும் போது குறுக்கிடுகிறான் கணவன்.  “உனக்கு ஆயிரம் முறை சொல்லி விட்டேன்.  அது மஸ்கத்
அல்ல; மஸ்கட் என்று…”
 
அவள் அவன் சொன்னதைக் கண்டு கொள்ளவே இல்லை.  அவனிடம் தீர்மானமாகச் சொல்லி விடுகிறாள். 
”மருத்துவமனையில்தான் பெற்றுக் கொள்வேன்.”
 
”கடவுளே, என் குழந்தை முதல் முதலில் கிறித்தவர்களின் கைகளிலா தவழ வேண்டும்?” என்று கேட்கிறான்
கணவன் அப்துல்லா. 
 
கடைசியில் குழந்தை மய்யா நினைத்தபடி மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில்தான் பிறக்கிறது.  ஏன்
மய்யா இப்படி ஒரு முடிவு எடுத்தாள்?  அப்போதெல்லாம் வட்டில்
ீ பிரசவம் பார்த்துக் கொள்வதுதான்
வழக்கமாக இருந்தது.  மய்யா அதற்கு மாறாக முடிவெடுத்ததற்குக் காரணம், அவள் அம்மா தன் பிள்ளைப்
பேறுகளைப் பற்றி அவ்வப்போது பெருமையாக சொல்லிக் கொண்டதுதான்.
 
”திடீரென்று ஒருநாள் யாரும் எதிர்பாராத விதமாக என் மாமா வந்து விட்டார்.  அவருக்கு நல்லபடியாக
சமைத்துப் போட வேண்டுமென்று கோழியைத் துரத்திக் கொண்டிருந்தேன்.  அப்போது சட்டென்று என் வயிறு
வெடித்து விடும் போல் ஒரு உணர்வு.  வலியில் துடித்தபடி தரையில் விழுந்து புரண்டேன்.  உன் தந்தை
மரியாவை அழைத்து வந்தார்.  பார்த்ததுமே அவள் சொல்லி விட்டாள், சமயம் வந்து விட்டது என்று.  உடனே
என்னை அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடி விட்டாள்.  பிறகு என்ன செய்தாள் தெரியுமா?  சுவர்
அருகே நிற்கச் சொல்லி என் கைகளை எடுத்து சுவரிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கட்டைகளைப் பிடித்துக்
கொள்ளச் செய்தாள்.  அந்தக் கட்டைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கால்களை அகற்றினேன்.  ஆனால் நிற்க
முடியவில்லை. வலியில் கால்கள் தளர்ந்தன. உடனே மரியா கத்தினாள்.  ”அவமானம், அவமானம், ஷேக்
மஸூதின் மகளா நிற்க முடியாமல் தரையில் படுத்துக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்வது?” உடனே
மூச்சைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றேன்.  கட்டைகளை என் பலம் கொண்ட மட்டும் இறுகப் பிடித்துக்
கொண்டேன்.   மரியா மட்டும் என் கைகளைக் கொஞ்சம் தளர்த்தி உன்னை வெளியே எடுத்திருக்காவிட்டால் நீ
செத்துத்தான் பிறந்திருப்பாய்.  கடவுள் புண்ணியத்தில் யாருக்கும் அது தெரியாது.  அவள் உன்னை எடுத்துக்
கொண்டிருக்கும் போது என்னிடம் சொன்னாள்.  ’ஒரு சத்தம் வரக் கூடாது.  உலகம் பூராவும் பெண்கள்தான்
பிள்ளை பெறுகிறார்கள்.  ஒரு சத்தம் வந்தது, உன் மானமே போயிற்று.  ஷேக்கின் மகள் நீ…’
 
என் வாயிலிருந்து வந்த ஒரே வார்த்தை “யா அல்லாஹ்…”  ஆனால் இப்போதெல்லாம் மய்யா, பெண்கள்
மருத்துவமனையில் ’படுத்துக் கொண்டு’ பிள்ளை பெறுகிறார்கள்.  என்ன கேவலம் இது…அவர்கள் கத்துகிற
கத்தல் மருத்துவமனையின் வெளியே நிற்கிற ஆண்களுக்குக் கேட்கிறது.  வெட்கம் மானம் என்று எதுவுமே
இல்லாமல் போய் விட்டது இந்தக் காலத்தில்…” 
 
மய்யாவுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது.  அதற்கு அவள் லண்டன் என்று பெயர் வைக்கிறாள்.  இஸ்லாமிய
சமூகங்களில் பெண்ணடிமைத்தனம் என்று சொல்கிறார்கள் அல்லவா?  மய்யாவின் முடிவை அவள்
கணவனாலும் மாற்ற முடியவில்லை.  அந்த ஊர் வழக்கப்படி பிள்ளை பெற்ற பெண் தன் தாய் வட்டில்

ஒவ்வொரு நாளும் ஒரு கோழி என்று நாற்பது நாட்கள் விசேஷ விருந்து சாப்பிட வேண்டும்.  அதற்காக அவளை
அப்துல்லாவின் வட்டிலிருந்து
ீ தன் வட்டுக்கு
ீ அழைத்துச் செல்கிறாள் அவள் தாய். அவள் வடு
ீ இருப்பது அல்
அவாபி என்ற ஊரில்.  அது ஓமனில் உள்ள ஒரு மாவட்டத் தலைநகர். 
 
ஆக, ஓமனில் உள்ள அல் அவாபி என்பது என்னோடு உறவு கொண்டுள்ள ஊர்.  அல் அவாபி பற்றி ஒரு
அமெரிக்க நாடோடிப் பயணி இப்படிக் குறிப்பிடுகிறார்:
 
ஓமனின் வடகிழக்கில் உள்ள ஒரு ஊர் இப்ரா. அதன் அருகே உள்ள கிராமம் அல் முனிசிஃபே. 
 

  

 
 

Pictures: Claire Robinson


 
க்ளேர் ராபின்ஸனின் இணையதளம்:
 
ரண்வர்ீ சிங்கும், ப்ரியங்கா சோப்ராவும் நடனமாடும் ஜியா என்ற பாடல் காட்சியைப் பாருங்கள்.  படம்: Gunday. 
இந்தப் பாடல் முழுவதும் நாம் மேலே கண்ட அல் முனிசிஃபே அழிவுச் சின்னங்களில் எடுக்கப்பட்டது. 

=====

நிலவு தேயாத தேசம் – 24 சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   08 , 2016  02:28:11 IST
Latest Novels at Attractive Price

 
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதி பற்றி எழுதியிருந்தேன்.  அங்கே கேட்கும்
’பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) அற்புதமாக இருக்கும் என்று அறிந்து அதைக் கேட்பதற்காகவே
சென்னையிலிருந்து இஸ்தாம்பூல் சென்றேன் என்று சொல்லலாம். 
 
உலகின் மிக அற்புதமான ’பாங்கு’களில் ஒன்று இது.  இஸ்லாத்தில் தொழுகைக்கான அழைப்பை ’அதான்’

என்கிறார்கள்.  எங்கள் ஊர்ப் பக்கத்தில் ‘பாங்கு’ என்பார்கள். 


 
என்னுடைய 25 வயது வரை இதே போன்ற ‘பாங்கு’களால் சூழப்பட்டே வளர்ந்தேன்.  என்னுடைய இசை

ரசனைக்கு இதுவே ஆதாரம்.  இன்னொரு அற்புத ’பாங்கு’ :


 
இன்னொரு அதியற்புதமான ‘அதான்’-ஐ அமெரிக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தில் வாசிக்கிறார் ஒரு

இஸ்லாமியர்.  ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த ‘அதான்’-ஐக் கேட்டால் நீங்கள் மனச்
சோர்வு, அச்சம், பீதி, தனிமையுணர்வு, பலகீ னம், கவலை, துக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். 
 
ஓமனில் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் Wadi Bani Kharous.  ’வாதி’ என்றால் சமவெளி என்று

பொருள்.  வாதி பானி கரூஸ் பற்றிய ஒரு காணொளி இது:


 
முட்செடிகளும், மரங்களே இல்லாத சாம்பல் நிற மலைகளும் எனக்கு ஷிம்லாவிலிருந்து லே வரை சென்ற
இமயமலைப் பாதையை நினைவூட்டுகிறது.  அந்த வழியிலுள்ள மலைப்பகுதிகள் இப்படித்தான் சாம்பல்
நிறமாக இருக்கும்.  பச்சை நிறத்தையே பார்க்க முடியாது.
 
ஓமனிலிருந்து சென்னை திரும்பும் போது விமானத்தில் பல ஓமன் நாட்டு நோயாளிகளையும் அவர்களுக்குப்
பணிவிடை செய்யும் உறவினர்களையும் பார்க்க முடிந்தது.  நோயாளிகள் என்றால் நடமாடக் கூடியவர்கள்
அல்ல; படுக்கையிலேயே மலஜலம் கழிக்க வேண்டிய அளவுக்கு மோசமான, ஆக்ஸிஜனும் சலைன் நீரும்
குழாய் வழியே உடலுக்குள் செலுத்தப்படும் நிலையில் இருக்கும், சுய பிரக்ஞையே அற்று விட்ட நோயாளிகள். 
சென்னை அளவுக்கு ஓமனில் மருத்துவ வசதிகள் இல்லாமல் இருக்கலாம்; அல்லது, இங்கே மருத்துவ செலவு
மிகவும் குறைவாக இருக்கலாம்.  மேலும், தமிழ்நாட்டைப் போலவே ஓமனிலும் பொதுஜனம் யாரும்
இலக்கியம் படிப்பதில்லை.  துருக்கியிலும் அப்படியே. நான் சந்தித்த அனைவருக்கும் ஓரான் பாமுக்கை
நன்றாகத் தெரிந்திருந்ததே தவிர யாருமே அவரைப் படித்ததில்லை.  இஸ்தாம்பூலில் உள்ளூர்
செய்தித்தாள்களே கிடைக்கவில்லை என்று எழுதியிருந்தேன்.  இருந்தாலும் பாமுக்கின் நூல்கள் எப்படி லட்சக்
கணக்கில் அவரது சொந்த நாட்டிலேயே விற்கின்றன?  பாமுக் எப்படி ஒரு ’பாப்’ பாடகர் அளவுக்குப் பிரபலமாக
இருக்கிறார்?  ஓமனைச் சேர்ந்த ஜோக்கா அல்-ஹார்த்தி என்ற இளம் பெண் எழுத்தாளர் எப்படி ஒரே நாவலில்
உலகப் புகழ் அடைகிறார்? 
 
ஒரே காரணம்தான். 
 
அந்தந்த நாட்டின் Intelligentia (படித்த வர்க்கம்) அவர்களது நாட்டின் எழுத்தாளர்களையும்
சிந்தனையாளர்களையும் இனம் கண்டு கொள்கிறது;  உலகம் முழுவதற்கும் அவர்களைத் தெரியப்படுத்துகிறது. 
உதாரணமாக, இங்கிலாந்தில் வாழும் புலம் பெயர்ந்த அரபி மொழி பேசுபவர்கள் Banipal என்ற இலக்கிய
சஞ்சிகையை அரபியில் அல்ல, ஆங்கிலத்தில் நடத்தி அரபி மொழியில் வெளியாகும் அனைத்து இலக்கியப்
படைப்புகளையும் நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள்.  அமெரிக்காவில் வாழும் அரபி மொழியினர்
அல்-ஜதீத் (Al-Jadid) என்ற பத்திரிகையை நடத்தி அரபி மொழி இலக்கியம் மட்டுமல்லாது அரபி மொழி பேசும்
நாடுகளின் கலாச்சார செயல்பாடுகள் அனைத்தையும் ஆங்கில மொழிக்கு அறிமுகம் செய்கிறார்கள்.  (கடந்த
பதினைந்து ஆண்டுகளாக இப்பத்திரிகைகளை வாசித்து வருவதால்தான் எனக்கு அரபி மொழி இலக்கியம்
பரிச்சயம் ஆயிற்று.)
 
அது மட்டுமல்லாமல், பரந்து பட்ட அளவில் தங்கள் அரபி மொழி இலக்கியத்தை ’பானிபால்’ குழு
ஐரோப்பாவிலும் ’அல்-ஜதீத்’ குழு அமெரிக்கா முழுவதும்  பிரபலப்படுத்துகிறார்கள். தங்கள் மொழியின்
இலக்கியவாதிகளை ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அழைத்து அங்கே உள்ள இலக்கியவாதிகளுக்கு
அறிமுகம் செய்கிறார்கள்.  மிகப் பரவலாகத் தெரியும் அளவுக்கு பரிசுகள் அளித்து ஊக்குவிக்கிறார்கள். 
ஊக்குவிப்பது கூட பெரிதல்ல; அந்தப் பரிசுகள் மூலம் பரிசு பெற்ற எழுத்தாளர் ஐரோப்பா முழுவதும் அமெரிக்கா
முழுவதும் பிரபலமடைய காரணமாக இருக்கிறார்கள். 
 
தமிழில் என்ன நடக்கிறது?  ஐரோப்பிய நகரங்களில் உள்ள தமிழர்கள் இன்னமும் கம்பனையும்
வள்ளுவனையும் தாண்டி வரவில்லை.  ஆண்டு தவறாமல் கம்பன் விழா நடத்துகிறார்கள்.  மற்றபடி தமிழ்த்
தொலைக்காட்சி சேனல்களும் தமிழ் சினிமாவும்தான் ஐரோப்பியத் தமிழர்களின் ஒரே கலாச்சாரச் செயல்பாடு. 
அவர்கள் வாழ்கின்ற நாட்டின் இலக்கியம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை.  அமெரிக்கத் தமிழர்கள் பாவம்,
தமிழே தெரியாது.  பணம் சம்பாதிப்பதைத் தவிர அவர்கள் வேறு எதையும் அறியாதவர்கள். 
 
நம் தமிழ்நாட்டு நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கே எதுவும்
தெரியவில்லை.  ஒரு துணைவேந்தர் என்னைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பதாகச் சொன்னார்.  அவரைப்
பொறுத்தவரை என்னுடைய அடையாளம் அவ்வளவுதான். துணைவேந்தராவது பரவாயில்லை; தமிழ்த் துறைப்
பேராசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபகரமானது.  பாரதிக்கு அடுத்தாற்போல் அவர்களுக்கு யாரையும்
தெரியவில்லை.  சமகாலத் தமிழ் இல்லகியவாதிகள் என்று கேட்டால் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,
டாக்டர் மு.வ., நா. பார்த்தசாரதி, அகிலன், வைரமுத்து என்கிறார்கள்.  (இப்படிப் பதில் சொல்லும் கோஷ்டியில்
வருபவர்தான் நம்முடைய காலஞ்சென்ற அப்துல் கலாமும்.) அதாவது, சமகால இலக்கியத்தை
அறிந்தவர்களிடமிருந்து, அறிஞர்களிடமிருந்து இந்தப் பதில்.  அறியாதவர்களுக்கு பாரதிக்குப் பிறகு
யாருமில்லை.   
 
துருக்கியில் யாரோடு பேச சந்தர்ப்பம் கிடைத்தாலும் என் முதல் கேள்வி: ஓரான் பாமுக்கைத் தெரியுமா?
 
தெரியும்.  எழுத்தாளர்தானே?
 
ஆமாம்.  அவரைப் படித்திருக்கிறீர்களா?
 
கேள்விப்பட்டிருக்கிறேன்.  படித்ததில்லை.
 
எப்படிக் கேள்விப்பட்டீர்கள்?
 
அவர் குர்துகளை ஆதரித்துப் பேசுபவர்.  துருக்கிக்காரராக இருந்தாலும் தேசபக்தி இல்லாதவர். 
ஆர்மீ னியர்களுக்கும் ஆதரவாகப் பேசியவர்.  தேசத் துரோகி.
 
இதெல்லாம் இந்தப் பாமர மக்களுக்குத் தெரிந்தது தொலைக்காட்சி மூலமாக.  ஆனாலும் அந்தத் தேசத்
துரோகியின் நூல்கள் துருக்கியிலேயே ஒரு லட்சம் பிரதிகள் விற்கின்றன.  காரணம், பல்கலைக்கழகங்களும்
படித்தவர்களும்.  ஏற்கனவே எழுதினேன்.  அங்கே மிக உயர்தரமான, சர்வதேசத் தரத்தில் அமைந்த பள்ளிகளும்,
பதினோரு வகுப்பு வரை ஆங்கிலம் கற்பித்தும் யெஸ் நோ தவிர வேறு எந்த ஆங்கில வார்த்தையும் தெரியாத
மாணவர்களைக் கொண்ட பள்ளிகளும் உள்ளன.  பாமுக் படித்த ராபர்ட் ஸ்கூல் பிரிட்டனில் உள்ள உயர்தரமான
பள்ளியை ஒத்தது.  கீ ழே உள்ள படத்தைப் பாருங்கள்.

 
 
இதுதான் ராபர்ட் பள்ளி.  இப்படிப்பட்ட பள்ளிகள் நம் நாட்டிலும் உள்ளன.  ஆனால் இங்கே படிக்கும்
மாணாக்கர்களுக்குத் தமிழ் தெரியாது.  ஆனால் அங்கே துருக்கி மொழி கட்டாயம்.  அவர்கள் அனைவருக்கும்
பாமுக் ஹீரோ. 
 
ஆனால் தமிழ்நாட்டில், படித்தவர்களுக்கு இலக்கியம் தெரியாது.  தெரிந்தாலும் வைரமுத்துவோடு சரி. 
துருக்கியில் வழக்கறிஞர், மருத்துவர், பேராசிரியர் போன்ற படித்த வர்க்கத்தினர் ஓரான் பாமுக்கைப்
படித்திருக்கிறார்கள்.  அதனால்தான் ஒரு லட்சம் பிரதி.  இதேதான் ஓமானிய எழுத்தாளர் ஜோக்கா அல்-
ஹார்த்தி விஷயத்திலும்.   பழங்குடி சமூகமான ஓமனில் அல்-ஹார்த்திக்கு எப்படி உலகளாவிய கவனம்
கிடைக்கிறது என்றால் மேலே கூறிய இரண்டு காரணங்கள்தான்.  மொழிபெயர்ப்பும், படித்தவர்களின்
கவனிப்பும்.
 
தில்லியைச் சுற்றி ஏராளமான நுழைவாயில்கள் (Gates) இருக்கின்றன.   முதல் வாயில் கி.பி. எட்டாம்
நூற்றாண்டில்  ராஜபுதன மன்னன் முதலாம் அனங்க்பாலால் கட்டப்பட்டது  வாயில் என்றால் கோட்டையின்
பிரதான வாயில்.  அந்தக் கோட்டையை 12-ஆம் நூற்றாண்டில் திரும்பக் கட்டினான் பிரித்விராஜ் சௌஹான். 
அதன் சிதிலங்களை நாம் இன்னமும் சாகேத், மெஹ்ரோலி, வசந்த் குஞ்ஜ் போன்ற தெற்கு தில்லிப் பகுதிகளில்
காணலாம். இதேபோல் காஷ்மீ ரி கேட், அஜ்மீ ரி கேட், துர்க்மான் கேட், தில்லி கேட், ஷேர் ஷா கேட், லஹோரி
கேட், காபூலி கேட், நிகம்போத் கேட், மோரி கேட் என்று தில்லியைச் சுற்றிலும் ஏராளமான வாயில்களை நாம்
இன்றும் காணலாம். 
 
நான் தில்லியில் இருந்த போது இந்த வாயில்களையெல்லாம் ஏராளமான முறை சுற்றியிருக்கிறேன்.  ஒரு
கேட்டில் ஆரம்பித்து அதே கேட்டுக்கு வர ஒரு நாள் போதாது.  இந்த நுழைவாயில்களும் கோட்டைச்
சிதிலங்களும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுக்குப் பெயர் ஹூசுன்.  ஹூசுன் என்றால் துயரம்.  அல் குரானில்
பயன்படுத்தப்படும் வார்த்தை அது.

 
மேலே உள்ள புகைப்படத்தில் தெரிவது மோரி கேட்.     
 
உலகின் எல்லா நகரங்களும் கொண்டாட்டங்களையே தமது குணாம்சமாகக் கொண்டிருப்பதில்லை.  துயரத்தை
மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் பல நகரங்களை நான் பார்த்திருக்கிறேன்.  இந்தியாவின் அதி துயரமான நகரம்
என்று தில்லியைச் சொல்லலாம்.  அதன் ஒவ்வொரு கல்லும் அந்நகரில் சிந்தப்பட்ட குருதித் துளிகளின்
கதைகளைச் சொல்லும்.   முகமது பின் துக்ளக் போன்ற கொடுங்கோல் மன்னர்களால் ஆளப்பட்ட நகரம் அது. 
தில்லி அனுபவித்த கொடுமையை உலகில் எந்த ஒரு நகரமும் அனுபவித்திருக்காது.  துக்ளக் தலைநகரை
தில்லியிலிருந்து 1300 கிலோமீ ட்டர் தூரத்தில் உள்ள தௌலத்தாபாதுக்கு (இப்போது அந்த ஊர்
மகாராஷ்ட்ராவில் உள்ளது) மாற்றிய போது ஊரில் ஒரு ஈ காக்கை இருக்கக் கூடாது என்று சட்டம் போட்டான். 
நகர முடியாத கூன் குருடு முதியவர்களை துக்ளக்கின் சிப்பாய்கள் கொன்று உடலைத் தெருவில் வசினார்கள். 

சில குருடர்களை வண்டிக் கால்களில் கட்டி இழுத்துக் கொண்டு போனார்கள். தில்லியே ஆள் இல்லாத
பிசாசுகளின் நகரமாக இருந்தது.  இது நடந்தது 1327-இல்.  பின்னர் 1335-இல் மீ ண்டும் தில்லியைத் தலைநகராக்கி
மக்களையெல்லாம் திரும்பவும் தௌலத்தாபாதிலிருந்து தில்லிக்கு அழைத்துக் கொண்டு போனான்.  இந்த
இடைப்பட்ட காலமான எட்டு ஆண்டுகளில் தில்லி எப்படி இருந்தது?  எட்டு ஆண்டுகள் தன் வாழ்வைப்
பிசாசுகளிடம் கொடுத்து விட்டு இருந்த ஒரு நகரம் உலகில் இருக்கிறதா? 
 
இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தமக்கேயுரிய துயரார்ந்த கதைகளைக் கொண்ட பல நகரங்கள்
இருக்கின்றன.   லிஸ்பன் நகரத்தின் துயர் Saudade.  Burgos நகரின் துயர் Tristeza.  புவனோஸ் அய்ரஸின் துயரம்
mufa. Turin நகரத்தின் துயர் Meztizia.  ப்ராக் நகரின் துயர் பேய்களின் துயரத்தை ஒத்தது.  அலெக்ஸாண்ட்ரியாவின்
துயரத்துக்குப் பெயர் Ennui. இந்த வரிசையில் இஸ்தாம்பூலின் துயரத்துக்குப் பெயர் ஹூசுன் என்கிறார் ஓரான்
பாமுக். 

 
ஐம்பதுகளின் இஸ்தாம்பூல்…

 
கலாட்டா பாலத்தில் மீ ன் விற்கிறார்கள்.  ஐம்பதுகள்.  புகைப்படங்கள் Hilmi Sahenk.
 
ஹூசுனுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.  ஒன்று, லௌகீ க இன்பங்களில் அபரிமிதமாக ஈடுபட்டிருப்பதால்
ஏற்படும் ஆன்மீ க இழப்பு.  இரண்டாவது சற்று தத்துவரீதியானது.  அல்லாஹ்வை இன்னும் ஆழ்ந்து
அனுபவிக்க முடியவில்லையே, அல்லாஹ்வை இன்னும் நெருங்க முடியவில்லையே என்கின்ற ஆன்மீ க
வேதனை.  இது சூஃபிகளின் பாரம்பரியம்.  இந்த ஹூசுனின் பொருள், இன்னும் நான் அதிக அளவு ஹூசுனை
அனுபவிக்கவில்லையே என்பது.  என் துயரத்துக்குக் காரணம், நான் இன்னும் அதிக துயரத்தை
அனுபவிக்கவில்லையே.  இதே இதழில் சென்ற ஆண்டு வெளிவந்த கேள்வி பதில் பகுதியில் Saint John of the
Cross பற்றி எழுதியிருக்கிறேன்.  பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெய்னில் வாழ்ந்த ஞானி.  ஞானத்தை போதிக்க
அல்ல; ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக இவர் பல்லாயிரம் மைல்களை கால்நடையாகவே நடந்து
சென்றிருக்கிறார்.  எத்தனையோ ஞானிகள் அப்படி வாழ்ந்திருக்கலாம்.  ஆனால் ஜான் அத்தனை ஆயிரம்
மைல்களையும் காலில் செருப்பு அணியாமல் வெறும் காலுடனே நடந்தார்.  ஏன் என்ற கேள்வியைப் பின்
தொடர்ந்தால் நமக்கு ஹூசுன் என்ற வார்த்தைக்குப் பொருள் கிடைக்கும்.  மைனஸ் 5 டிகிரி அளவுக்குப் போகும்
தில்லி குளிரில் சட்டை அணிய மறுத்து வெறும் துண்டைப் போர்த்தியிருந்த மகாத்மாவின் வாழ்வும் அவர்
மேற்கொண்ட உண்ணாவிரதங்களும் கூட ஹூசுன் என்ற தத்துவத்தில் அடங்கக் கூடியதுதான். 
 
ஹூசுனின் உக்கிரத்தை நாம் ’திவான்’ கவிதைகளில் காணலாம்.  பாரசீகப் பாரம்பரியத்தில் ’திவான்’ என்பது
அரசவையில் பாடப்படும் ஒரு கவிஞனின் பாடல்களின் தொகுப்பு.  உருதுவில் ’கஜல்’ என்று
அழைக்கப்படுவதுதான் பாரசீகத்தில் ’திவான்’.  ’திவான்’ கவிஞர்களில் முக்கியமானவர்கள் என மூன்று பேரைச்
சொல்லலாம்.  Fuzûlî (1483 –1556) Bâkî  (1526–1600); Nef‘î (1570 –1635). நேஃபியின் இயற்பெயர் ஓமர். இவரது
கவிதைகள் அரசு நடவடிக்கைகளைப் பகடி செய்ததால் ஆட்டமன் சுல்தான்களான முதலாம் அஹ்மத்துக்கும்
(ஆட்சிக் காலம்: 1603–1617) அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் உஸ்மானுக்கும் (1618–1622)
நெஃபியைப் பிடிக்கவில்லை.  ஆனாலும் உஸ்மானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நான்காம் முராதுக்கு (1623-1640)
நெஃபியைப் பிடித்தது.  ஆனாலும் நெஃபி முராத் சுல்தானின் ஆட்சியைப் பாராட்டி எழுதி அரசனின் நற்பெயரைச்
சம்பாதிக்க முயற்சி செய்யவில்லை. 
 
ஒருநாள் தன்னுடைய ’ஸிஹாம்-இ காஜா’ (Arrows of Misfortune) என்ற கவிதைத் தொகுதியை எடுத்துக் கொண்டு
சுல்தானைப் பார்க்க தோப்காப்பி அரண்மனைக்குச் சென்றார் நெஃபி.  (தோப்காப்பி ஞாபகம் இருக்கிறதா?)
அரசனின் கையில் புத்தகத்தைக் கொடுத்த அடுத்த கணம் தோப்காப்பியின் ஒரு கோபுரத்தில் இடி விழுந்தது. 
அவ்வளவுதான்.  “ஏய் சைத்தானே! ஓடிப் போ இங்கிருந்து!  பாஷா, இவன் தலையைக் கொய்து எறியுங்கள்”
என்று ஆவேசமாகக் கட்டளையிட்டான் சுல்தான். 

=====

நிலவு தேயாத தேசம் – 25 சாரு நிவேதிதா எழுதும் தொடர்


Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   18 , 2016  01:18:37 IST
Latest Novels at Attractive Price

வெறுமனே இடி விழுந்ததால் மட்டும் நெஃபிக்கு மரண தண்டனை விதிக்கவில்லை அரசன்.  நெஃபி தொடர்ந்து
தன் கவிதைகளின் மூலம் அரசு நிர்வாகத்தைக் கிண்டல் செய்து கொண்டே இருந்தார்.  அதுதான் அவரது மரண
தண்டனைக்குக் காரணமாக இருந்தது.  மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவருடைய
கிண்டல் அவரை விட்டுப் போகவில்லை.    அதற்கு உதாரணமாக இந்தச் சம்பவம் சொல்லப்படுகிறது. 
 
அரசனின் அறையை விட்டு வெளியே வந்த நெஃபி அங்கேயிருந்த அரண்மனை அதிகாரியிடம் அரசனுக்கு ஒரு
மன்னிப்புக் கடிதம் எழுதித் தருமாறு கேட்டார்.  அதிகாரியும் எழுத அமர்ந்தார்.  அந்த அதிகாரி ஆஃப்ரிக்காவைப்
பூர்வகமாகக்
ீ கொண்ட கறுப்பின மனிதர்.  அவர் நெஃபி கேட்டுக் கொண்டபடி விண்ணப்பத்தை எழுத
ஆரம்பித்தார்.  அப்போது அவருடைய பேனாவிலிருந்து ஒரு துளி கறுப்பு மை கிழே சிந்தியது.  உடனே நெஃபி,
ஐயா உங்கள் வியர்வை கீ ழே சிந்துகிறது என்றாராம்.  அந்த அதிகாரி உடனடியாக விண்ணப்பப் படிவத்தைக்
கிழித்துப் போட்டு விட்டு நெஃபியை மரண தண்டனையை நிறைவேற்றும் காவலனிடம் கொடுத்திருக்கிறார்.
 
 
ஹூசுன் பற்றி நண்பர் ரியாஸ் ஒரு கேள்வியை அனுப்பியிருந்தார்.  “அரபியில் ஹூசுன் (Husun) என்றால் அழகு
என்றல்லவா பொருள்?  துருக்கியில்தான் ஹுசுன் என்றால் துயரமா?  அப்படியானால் குரானில் எப்படி துயரம்
என்ற அர்த்தத்தில் ஹுசுன் பயன்படுத்தப்பட்டிருக்கும்?”
 
ரியாஸின் கேள்வியைக் கண்டு ஓரான் பாமுக்கின் இஸ்தாம்பூல் நூலை மீ ண்டும் புரட்டினேன். அதில் ஹூசுன்
பற்றிய அத்தியாயத்தில் பாமுக் தெளிவாக எழுதியிருக்கிறார். 
 
“துயரம் என்பதற்கான துருக்கியச் சொல் ஹூசுனுக்கு ஒரு அராபிய மூலம் உண்டு.  குரானில் இச்சொல்
இடம்பெறும் போது இரண்டு செய்யுட்களில் ஹூஸ்ன் என்றும் மூன்றில் ஹசென் என்றும் தற்காலத்
துருக்கியச் சொல் உணர்த்தும் அதே பொருளைத்தான் குறிப்பதாக உள்ளது.  இறைத்தூதர் முகம்மது ஒரே
வருடத்தில் தன் மனைவியையும் மாமாவையும் இழந்ததைக் குறிப்பிடும் போது ‘ஸெனத்துல் ஹூஸ்ன்’ –
துயரார்ந்த வருடம் – என்கிறார்.  ஆழமான ஆன்மீ க இழப்பு ஒன்றைக் குறிப்பிடும் சொல் என்பது இதன் மூலம்
உறுதிப்படுகிறது.”
 
(இஸ்தாம்பூல் – ஓரான் பாமுக்: ஜி. குப்புசாமி மொழிபெயர்ப்பு.  பக்கம் 111)
 
பிறகு குரானில் பாண்டித்யம் கொண்ட அறிஞர்களைக் கேட்டு ரியாஸ் எழுதினார்.  Husun என்றால் அழகு (குரான்
41:33); Huzun என்றால் துயரம் (குரான் 9:40). ஆரம்பத்திலேயே நான் ஹூஸுன் என்று எழுதியிருக்க வேண்டும். 
 
ஆனால் பாமுக்கைப் போல் நான் ஹூசுனை இஸ்தாம்பூல் நகரில் மட்டும் உணரவில்லை.  ஐரோப்பா
முழுவதுமே உணர்ந்தேன். எப்படி என்று விவரிப்பதற்கு முன்பு நாம் இரண்டு துருக்கியக் கவிகளைப் பற்றித்
தெரிந்து கொள்ள வேண்டும்.   
 

ஒருவர், உலகப் புகழ் பெற்ற நஸீம் ஹிக்மத் (1902 – 1963).  இப்போதைய ஓரான்
பாமுக் அளவுக்கு உலகம் முழுவதும் கவனிக்கப்பட்ட கவிஞர் அவர். 
மார்க்ஸீயவாதி.  பாமுக்கைப் போலவே துருக்கியரின் ஆர்மீ னியப்
படுகொலைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசியவர்.  ”நஸீம் ஹிக்மத்தை
உலகம் அறியும்; ஆனால் துருக்கி அறியாது” என்று எழுதினார் நஸீமின்
வாரிசாகக் கருதப்படும் மற்றொரு துருக்கியக் கவி அத்தோல் பெராமோக்ளு
Ataol Behramoğlu (பிறப்பு: 1942).

நஸீம் ஹிக்மத்

ஓரான் பாமுக் மீ து தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு துருக்கி அரசு


வழக்குத் தொடர்ந்த போது உலகமே அதை எதிர்த்ததையும் ஐரோப்பிய
யூனியன் நாடுகள் துருக்கி அரசுக்குக் கொடுத்த நெருக்கடிக்குப் பிறகு பாமுக்
மீ தான வழக்கை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதையும் நாம் அறிவோம். 
ஆனால் துருக்கியின் அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதிது அல்ல. 
எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் எதிரான துருக்கிய அரசு
நடவடிக்கைகளுக்கு முதல்முதலில் ஆளானவர் நஸீம் ஹிக்மத்.  

ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நஸீம்


தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைகளிலும்  
நாடுகடத்தப்பட்டவராகவுமே கழித்தார்.  1920 களில் அவர் ரஷ்யாவில் இருந்த
போது மாயகாவ்ஸ்கியின் தாக்கம் அவரிடம் அதிகம் ஏற்பட்டது.   அதன்
விளைவாக உருவான நஸீம் ஹிக்மத்தின் கவிதைகள் அதுவரையிலான
துருக்கியக் கவிதையின் போக்கையே மாற்றின.  நவன
ீ துருக்கியக்
கவிதையின் பிதாமகர் எனப் போற்றப்படும் நஸீம் மார்க்ஸீயவாதியாக
இருந்ததும் ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல.  முப்பதுகளில் உலகம்
முழுவதுமே கவிஞர்கள் மார்க்ஸீயத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்களாக
இருந்தனர்.  உதாரணம், பாப்லோ நெரூதா.

ஜான் பால் சார்த்ர், ஸிமோன் தி போவா, பாப்லோ நெரூதா


போன்றவர்களுக்கெல்லாம் நெருங்கிய நண்பராக இருந்த நஸீம் ஹிக்மத்
ஒரு ஆட்டமன் குடும்பத்தில் பிறந்தவர்.  இவருடைய பாட்டனார் ஆட்டமன்
அரண்மனையில் பாஷாவாக இருந்தவர்.  அதேபோல் தந்தையும் ஆட்டமன்
அரசின் உயர் அதிகாரி.  தாயார் ஓவியர்.  இப்படிப்பட்ட மேட்டுக்குடியில்
பிறந்ததால் பாஷாக்களின் குடும்பத்தினர் படிக்கும் பள்ளியிலேயே படித்தார்
நஸீம்.  ஆனால் மற்ற மேட்டுக்குடியினரைப் போல் அல்லாமல் மனிதனை
மனிதன் சுரண்டுவதையும் மத அடிப்படைவாதத்தையும் சிறு வயதிலேயே
வெறுத்தார்.  அதனாலேயே வாழ்வின் வசதி வாய்ப்புகளையும்
அதிகாரத்தையும் புறக்கணித்து விட்டு புரட்சியின் பாதையைத்
தேர்ந்தெடுத்தார்.    

ஆரம்பத்தில் கமால் அதாதுர்க்கின் நண்பராகவும் இருந்த நஸீம், அவரது


கம்யூனிசச் சிந்தனைகளால் அதாதுர்க்கோடு ஒத்துப் போக முடியவில்லை. 
சோவியத் ரஷ்யாவின் புத்துலகக் கனவினால் ஈர்க்கப்பட்டு மாஸ்கோ
சென்று உயர்படிப்பைத் தொடர்ந்தார்.  மாயகோவ்ஸ்கியைச் சந்தித்தார்.  அது
அவருடைய கவிதையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.  துருக்கியின்
பாரம்பரிய செய்யுள் மற்றும் பாடல் வடிவத்தைக் கைவிட்டு வசன
கவிதையிலும் புதுக் கவிதையிலும் ஈடுபட்டார்.  அந்த வகையில் நஸீம்
ஹிக்மத் துருக்கிய நவகவிதையின் பிதா என்றே கருதப்படுகிறார்.

Lisa del Gioconda என்பவள் 1542-இல் இத்தாலியில் உள்ள ஃப்ளாரன்ஸ் என்ற ஊரில்
பிறந்து ஒரு வணிகனைத் திருமணம் செய்து ஐந்து குழந்தைகளைப் பெற்று
வளர்த்த ஒரு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்.  அவளுடைய கணவன்
அந்த ஊரின் புகழ்பெற்ற ஒரு ஓவியனை அழைத்துத் தன் மனைவியை
ஓவியமாக வரையச் சொன்னான்.  ஓவியனும் வரைந்தான்.  ஆண்டுகள்
கடந்தன.  மங்கையும் மடிந்தாள்.  ஓவியனும் மடிந்தான்.  இன்று அந்த
ஓவியத்தைப் பற்றித் தெரியாத ஒரு மனித உயிர் இந்த உலகில் கிடையாது. 
பாரிஸ் நகரில் உள்ள லூவ்ர் அருங்காட்சியகத்தில் உள்ள அந்த
ஓவியம்தான் இந்த உலகிலேயே அதிக எண்ணிக்கையில் புகைப்படம்
எடுக்கப்பட்ட ஓவியம் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது.  அந்த
ஓவியத்தில் உள்ள மங்கையின் பெயரே லிஸா தெல் ஜியோகோண்டா. 
இன்னொரு பெயர் மோனா லிஸா.  ஓவியனின் பெயரைச் சொல்ல
வேண்டியதில்லை. 

இந்த மோனா லிஸா பற்றி 1924-ஆம் ஆண்டு பாரிஸில் நஸீம் ’லா ஜியோகோண்டாவின் டயரியிலிருந்து சில
குறிப்புகள்’ என்ற ஒரு நீண்ட கவிதை எழுதினார்.  இந்தக் கவிதையை வைத்தே துருக்கியின் பாரம்பரியக்
கவிதை மரபிலிருந்து நஸீம் எவ்வளவு தூரம் விலகி விட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
 
அந்தக் கவிதைக்கு முன்னால் 1928-இல் அவர் எழுதிய “A Claim” என்ற கவிதையை வாசித்துக் கொள்வோம்.  
 
A CLAIM
to the memory of my friend SI-YA-U,
whose head was cut of in Shanghai.
 
Renowned Leonardo's
world-famous
"La Gioconda"
has disappeared.
And in the space
vacated by the fugitive
a copy has been placed.
The poet inscribing
the present treatise
knows more than a little
about the fate
of the real Gioconda.
She fell in love
with a seductive
graceful youth;
a honey-tongued
almond-eyed Chinese
named Si-Ya-U.
Gioconda ran off
after her lover;
Gioconda was burned
in a Chinese city.
I, Nazim Hikmet,
authority
on this matter,
thumbing my nose at friend and foe
five times a day,
undaunted
claim
I can prove it;
if I can't,
I'll be ruined and banished
forever from the realm of poesy.
 
(இந்தக் கவிதையை நண்பர்கள் யாரேனும் தமிழில் மொழிபெயர்த்து எனக்கு அனுப்பினால்
நலம். charu.niviedita.india@gmail.com)    
 
”மோனா லிஸாவின் டயரிக் குறிப்புகள்”
 
15, மார்ச், 1924, பாரிஸ், லூவ்ர் மியூசியம்.
 
ஆகக் கடைசியில்
 
எனக்கு
 
இந்த லூவ்ர் மியூசியம் அலுத்து விட்டது.
 
மியூசியத்தைப் பார்க்க வரலாம். பிரச்சினை இல்லை.  ஆனால் மியூசியத்திலேயே
 
ஒரு பொருளாக வாழ்வது பயங்கரம். 
 
இந்த இடத்தில்
 
கடந்த காலத்தைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  என் முகத்தில் உள்ள சாயம் கூட வெடித்துப் போகும்
அளவுக்குக் கொடுமையான தனிமைச் சிறை இது.  கொஞ்சம் கூட ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாமல்
எந்நேரமும் புன்னகை புரியக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறேன். 
 
ஏனென்றால்,
 
நான்தான் ஃப்ளாரன்ஸின் ஜியோகோண்டா.
 
எனக்கு இந்த லூவ்ர் மியூசியம் அலுத்து விட்டது.
 
கடந்த காலத்துடன் உரையாடுவது சீக்கிரமே
 
அலுத்து விடும் என்பதால்
நான் முடிவெடுத்து விட்டேன்
 
இந்த நிமிஷத்திலிருந்து
 
நான் டயரி எழுதப் போகிறேன்.
 
இன்றைய தினத்தை எழுதுவது
 
நேற்றைய தினத்தை மறப்பதற்குக் கொஞ்சம் உதவக் கூடும்.
 
இருந்தாலும் இந்த லூவ்ர் ஒரு அதிசயமான இடம்தான்.
 
மகா அலெக்ஸாண்டர் அணிந்திருந்த வாட்ச் எல்லாம் இருக்கிறது; ஆனால் எழுதுவதற்கு ஒரு நோட்டுப்
புத்தகமோ காகிதமோ சல்லிக் காசு பெறாத ஒரு பென்ஸிலோ இங்கே கிடையாது.
 
நான் இந்த டயரியை என் ஓவியத்தின் பின்பகுதியில்தான் எழுதப் போகிறேன்;
 
எனவே,
 
என்னுடைய ஸ்கர்ட்டுக்குள் தன் சிவந்த முகத்தை வைத்துத் தேய்த்துக் கொண்டு எதையோ தேடும் ஒரு
அமெரிக்கனின் பாக்கெட்டில் இருந்த பேனாவைத் திருடிக் கொண்டேன். சே, அவனுடைய தலைமுடியெல்லாம்
ஒரே ஒயின் நாற்றம்.
 
சரி, என்னுடைய நாட்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விட்டேன்.  என் முதுகில்தான் எழுதுகிறேன் என்னுடைய
உலகப் புகழ்பெற்ற புன்னகையின் துயரத்தை…
 
”18 மார்ச் இரவு”
 
லூவ்ர் உறங்கி விட்டது
 
இருளில், கை இல்லாத வனஸ்

 
உலக யுத்தத்தில் கலந்து கொண்டு திரும்பிய போர் வரனைப்
ீ போல் தோற்றமளிக்கிறது
 
-இப்படியாக நீண்டு செல்கிறது நஸீம் ஹிக்மத்தின் அந்த அற்புதமான கவிதை.
 

 
மேற்கண்ட A Claim என்ற கவிதை நஸீம் ஹிக்மத்தின் நண்பரான Hsiao San என்ற கவிஞருக்கு சமர்ப்பணம்
செய்யப்பட்டது.  அடுத்த ’மோனா லிஸாவின் நாட்குறிப்புகள்’ கவிதையிலும் ஸியாவோ ஒரு கதாபாத்திரமாக
வருகிறார்.  இந்த ஸியாவோ மா சே துங்கின் பள்ளிக்கூடத்து நண்பர்.  மாவோவை விட மூன்று வயது
இளையவரானாலும் மாவோவின் பள்ளி நாட்களிலும் அதற்குப் பிறகான புரட்சிகரப் போராட்ட காலத்திலும்
மாவோவின் நெருக்கமான நண்பராக இருந்தார்.  ஃப்ரெஞ்ச், ருஷ்யன், ஜெர்மன், ஆங்கிலம் போன்ற பல
மொழிகள் தெரிந்தவராக இருந்ததால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில உலகத் தொடர்பாளராகவும்,
பிரபலமான கவிஞராகவும் விளங்கினார்.  சோவியத்துக்கு சென்று படித்த காலத்தில் அங்கே சக மாணவராக
இருந்த நஸீம் ஹிக்மத்தின் நெருங்கிய நண்பரானார்.  பிறகு சீனா திரும்பியதும் ஷாங்காயில் நடந்த புரட்சியில்
(1924) அவர் கொல்லப்பட்டதாக ரஷ்யாவுக்கு செய்தி வந்ததால் அந்தத் துயரத்தில் நஸீம் A Claim கவிதையை
எழுதினார்.  ஸியாவோ மோனா லிஸா ஓவியத்தின் மீ து பைத்தியமாக இருந்தது நஸீமுக்குத் தெரியும். 
 
ஆனால் ஸியாவோ அந்தப் புரட்சியில் இறக்கவில்லை.  பிறகு அவர் ஐம்பதுகளில் ரஷ்யா சென்ற போது நஸீம்
ஹிக்மத்தைச் சந்தித்தார்.  அப்போது நஸீம் துருக்கியிலிருந்து தப்பி வந்து ரஷ்யாவில் வாழ்ந்து
கொண்டிருந்தார்.  ஸியாவோவின் புனைப் பெயர் எமி.  ஸியாவோவின் மண வாழ்க்கை ஒரு பெரிய நாவல்
அளவுக்கு நீளக் கூடிய திருப்பங்களும் சுவாரசியமும் நிறைந்தது.  47 வயதில் 21 வயதான ஒரு சீனப் பெண்ணை
மூன்றாவது மனைவியாக மணந்தார்.  பிறகு அவரை ரத்து செய்து விட்டு ஈவா என்ற முன்னாள்
மனைவியுடனேயே வாழத் தொடங்கினார்.  எல்லா மனைவிகளோடும் அவருக்கு இரண்டு மூன்று குழந்தைகள்
இருந்தன.  ஸியாவோ எழுதிய மாவோவின் இளமைக்காலம் பற்றிய புத்தகம் மாவோ பற்றி அறிந்து கொள்ள
விரும்புகிறவர்களுக்கு வெகு சுவாரசியமாக இருக்கும்.  1967-ஆம் ஆண்டு ஸியாவோவும் அவர் மனைவி
ஈவாவும் மாவோவின் உத்தரவின் பேரில் செஞ்சேனைப் படையினரால் கைது செய்யப்பட்டு தனிமைச்
சிறையில் ஏழு ஆண்டுகள் அடைக்கப்பட்டார்கள்.  பின்னர் விடுதலை செய்யப்பட்ட பிறகும் வட்டுச்
ீ சிறையில்
வைக்கப்பட்டனர்.  ஸியாவோ செய்த குற்றம், சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் பகை மூண்டு விட்ட நிலையிலும்
அவரது ரஷ்ய நண்பர்களின் (எல்லோரும் இலக்கியவாதிகள், கவிஞர்கள்) தொடர்பை விடாமல் வைத்திருந்தார்
என்பதுதான்.  1983-இல் தன்னுடைய 86-ஆவது வயதில் இறந்தார் எமி ஸியாவோ.  உலகின் மிகப் புகழ்பெற்ற
கவிஞனால் உயிரோடு இருக்கும் போதே இரங்கற்பா எழுதப்பட்ட கவிஞன் என்ற அரிதான புகழைப் பெற்றவர்
ஸியாவோ. 
 

ஸியாவோ, ஈவா
1928-ஆம் ஆண்டு நஸீம் இஸ்தாம்பூல் திரும்பினார்.  துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. 
நஸீமின் கம்யூனிஸக் கருத்துக்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.  ஐந்து ஆண்டுகள் சிறை வாழ்க்கை.  ஆனால்
அப்போதும் விடாமல் எழுதினார்.  அந்தக் காலக்கட்டத்தில் அவருடைய ஒன்பது கவிதைத் தொகுதிகள்
வெளிவந்தன. 
 
அவர் எழுதிய ஒரு கவிதையின் காரணமாக 1933-ஆம் ஆண்டு மீ ண்டும் கைது செய்யப்பட்டார்.  அந்தக் கவிதை
பதினைந்தாம் நூற்றாண்டில் மேற்கு அனடோலியாவில் நடந்த ஒரு விவசாயிகள் புரட்சி பற்றியும் அந்த
விவசாயிகள் எப்படி ஆட்டமன் அரசு எந்திரத்தினால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் பேசியது. 
அந்தக் கவிதை: The Epic of Sheik Bedreddin.  இந்தக் கவிதை ராணுவ வரர்களிடையேயும்
ீ பிரபலமாக இருந்ததால்
அரசாங்கம் இதை வேறு விதமாகப் பார்த்தது.  ராணுவப் புரட்சியைத் தூண்டுவதற்காகவும் அரசுக்கு எதிரான
ஆயுதப் புரட்சியைத் தூண்டுவதாகவும் நினைத்தது அரசு.  நஸீம் ஹிக்மத்துக்கு 25 ஆண்டுகள் சிறைத்
தண்டனை விதித்தது ராணுவ நீதிமன்றம். 
 
சிறையில் இருந்த போது அவர் எழுதிய கவிதைகள் உலக இலக்கியத்தில் மிக மேன்மையான இடத்தில் இடம்
பெறத் தக்கவை; பாப்லோ நெரூதா போன்றவர்களுக்கு நிகரானவை.  ஆனாலும் இஸ்லாமியப் பின்னணி
காரணமாக நஸீம் ஹிக்மத் பாப்லோ நெரூதா அளவுக்குப் பேசப்படவில்லை.  1945 செப்டம்பர் 23-ஆம் தேதி
(அதற்குள் அவர் சிறையில் பத்தாண்டுகளைக் கழித்திருந்தார்) தன் மனைவியை நினைத்து சிறையில் எழுதிய
ஒரு கவிதையிலிருந்து:
 
What is she doing now, at this very moment? 
Is she at home, or outside,
working or resting on her feet?
She might be lifting her arm,
O, my rose, that movement of your white, firm wrist 
Strips you so naked 
 
On Living என்ற கவிதையிலிருந்து:
Life’s no joke,
You must live it in earnest like a squirrel,
for example,
expecting nothing outside your life or beyond, 
you must concentrate wholly on living.
 
மற்றொரு கவிதையிலிருந்து:
 
She kissed me.
’These lips are as real as the universe, she said.‘
This musky perfume flying from my hair is no invention,’ she said.
’Look into the skies or into my eyes:
even if the blind cannot see them, still there are stars,’ 
she said.
 
நஸீம் ஹிக்மத் சிறையில் அடைக்கப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அவரை வெளியில் கொண்டு வருவதற்காக
ஜான் பால் சார்த்தரும், பிக்காஸோவும் இணைந்து ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்கினார்கள்.  ஆனால்
துருக்கி அரசு அவரை வெளியே விடவில்லை.  நஸீமுக்கு சிறையிலேயே மாரடைப்பு வந்தது.  அதற்குப் பிறகு
அவர் ஒரு பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார்…

=====

நிலவு தேயாத தேசம் – 26 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   23 , 2016  04:56:00 IST
Latest Novels at Attractive Price

 
சிறைவாசத்தின் போது நஸீம் ஹிக்மத் எழுதிய சில கவிதைகளைப் பார்ப்போம். 
 
ஆஞ்ஜைனா பெக்டோரிஸ்
பத்தாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு
பரிதாபத்துக்குரிய என் நாட்டு மக்களுக்குக் கொடுக்க
என்னிடம் ஒரு ஆப்பிள் மட்டுமே இருக்கிறது, டாக்டர்,
ஒரு சிவப்பு நிற ஆப்பிள்:
அது என் இதயம்தான். 
அதேதான் இந்த ஆஞ்ஜைனா பெக்டோரிஸுக்கும் காரணம் டாக்டர்
நிகோடினோ சிறைச்சாலையோ தமனிப் பிரச்சினையோ அல்ல.
சிறைக் கம்பிகளுக்கு வெளியே இரவைப் பார்க்கிறேன்.
தாளமுடியாத வலியையும் மீ றி
தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களைப் போலவே
என் இதயமும்
துடித்துக் கொண்டிருக்கிறது.
(ஆஞ்ஜைனா பெக்டோரிஸ்: இதயத்துக்கு ரத்த ஓட்டம் கம்மியாவதால் ஏற்படும் இதய வலி.)
***
சுயசரிதை
நான் 1902-இல் பிறந்தேன்
அதற்குப் பிறகு பிறந்த ஊருக்குப் போனதேயில்லை
எதையும் திரும்பிப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை
மூன்று வயதில் பாஷாவின் பேரனாக இருந்தேன்
பத்தொன்பதாம் வயதில் மாஸ்கோவின் கம்யூனிஸப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தேன்
நாற்பத்தொன்பதாம் வயதில் திரும்பவும் மாஸ்கோவில் இருந்தேன் விருந்தாளியாக
பதினான்கு வயதிலிருந்து கவிஞனாக இருக்கிறேன்
சிலருக்குத் தாவரங்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது
சிலருக்கு மீ ன்கள் பற்றித் தெரிந்திருக்கிறது
சிலர் நட்சத்திரங்களின் பெயர்களை மனப்பாடமாகச் சொல்கிறார்கள்
எனக்கு பிரிவு பற்றித் தெரியும்
இழப்புகளைப் பற்றி கவிதையே எழுதுவேன்
சிறைச்சாலைகளிலும் பிரம்மாண்டமான ஓட்டல்களிலும்
உறங்கியிருக்கிறேன்
பட்டினி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும்
ஏன், பட்டினிப் போராட்டமே நடத்தியிருக்கிறேன்
ஆனாலும் நான் ருசி பார்க்காத உணவுப் பண்டமே இல்லை
என் முப்பதாவது வயதில் அவர்கள் என்னைத் தூக்கிலிட விரும்பினார்கள்
நாற்பத்தெட்டாவது வயதில் சர்வதேச சமாதானப் பரிசைக் கொடுக்க விரும்பினார்கள்; கொடுக்கவும்
செய்தார்கள்.
நாற்பத்தொன்பதாவது வயதில் ஒரு நண்பரோடு மரணத்தின் விளிம்பைத் தொட்டேன்.
ஐம்பதில் இதயம் பழுதடைந்த நிலையில் நான்கு மாதங்கள் புரளக் கூட முடியாமல் மல்லாந்த நிலையிலேயே
படுத்திருந்தேன், மரணத்தை எதிர்பார்த்தபடி.
நான் காதலித்த பெண்கள் மீ து பொறாமை கொண்டிருக்கிறேன்.
என் காதலிகளை ஏமாற்றியிருக்கிறேன்.
ஆனால் நண்பர்களுக்குத் துரோகம் செய்ததில்லை.
குடிப்பேன், ஆனால் தினமும் அல்ல.
பொய் சொல்லியிருக்கிறேன், மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக.
பொய் சொல்லியிருக்கிறேன், எந்தக் காரணமும் இல்லாமலேயே.
எனது எழுத்துக்கள் முப்பது நாற்பது மொழிகளில் வெளியாகியிருக்கின்றன.
ஆனால் என் துருக்கியில் என் துருக்கி மொழியில் அவை தடை செய்யப்பட்டிருக்கின்றன.
இதுவரை புற்றுநோய் வரவில்லை;
வராது என்பதற்கான நிச்சயமும் இல்லை.
என்றைக்குமே நான் ஒரு பிரதம மந்திரியாக மாட்டேன்;
அப்படிப்பட்ட வாழ்க்கையும் எனக்கு வேண்டாம்.
போருக்குச் சென்றதில்லை.
இரவின் தனிமையில் பதுங்கு குழியிலும் பதுங்கியதில்லை.
கிட்டத்தட்ட அறுபது வயதில் காதலில் விழுந்தேன்.
இன்று இந்த பெர்லின் நகரில் துயரத்தின் கரகரப்புடன் சொல்கிறேன் -  
நான் ஒரு மனிதனைப் போல் வாழ்ந்திருக்கிறேன்.
யாருக்குத் தெரியும், இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறேனென்று… இன்னும் எனக்கு என்னவாகப்
போகிறதென்று…
11 செப்டம்பர் 1961 அன்று கிழக்கு பெர்லினில் எழுதப்பட்ட கவிதை. 
 
 
என் மனைவிக்கு எழுதிய கடிதம்
11.11.1933
Bursa சிறைச்சாலையிலிருந்து
ஆருயிரே,
சென்ற கடிதத்தில் எழுதியிருந்தாய்,
”அவர்கள் உங்களைக் கொன்று விட்டால்,
உங்களை நான் இழந்து விட்டால்
நான் இறந்து விடுவேன்!” என்று.
நீ வாழ்வாய் என் அன்பே…
என் நினைவு காற்றில் கரும்புகை மறைவது போல் மறைந்து விடும்.
நிச்சயம் நீ வாழ்வாய், என் அன்பே!
இந்த இருபதாம் நூற்றாண்டில் துயரத்தின் காலம்
ஒரு ஆண்டுதான்.
கயிற்றில் ஒரு உடல் தொங்குகிறது -
அதுவே மரணம்.
அப்படி ஒரு மரணத்தை என் இதயம் ஏற்றுக் கொள்ளாது.
ஆனால் பந்தயமே கட்டுவேன் -
பாவப்பட்ட ஒரு ஜிப்ஸியின்
மெலிந்த கருநிறக் கை
என் கழுத்தைச் சுற்றி கயிறை மாட்டும் போது
நஸீமின் நீலநிறக் கண்களில் பயத்தைப் பார்க்க நினைக்கும்
அவர்கள் ஏமாந்து போவார்கள்.
எனது கடைசி காலை நேரத்தின் மங்கலில்
நான்
எனது நண்பர்களையும் உன்னையும் காண்பேன்
பிறகு
என் மயானக் குழியை நோக்கிச் செல்வேன்
எவ்வித வருத்தமுமில்லாமல்
ஆனால் 
ஒரு முடிக்கப்படாத கவிதையோடு…
அன்பே!
தேனினுமினிய கண்களைக் கொண்டவளே!
அவர்கள் என்னைத் தூக்கிலிடப் போகிறார்கள் என்று
உனக்கு நான் ஏன் எழுதினேன்?
இன்னும் வழக்கு விசாரணையே துவங்கவில்லை.
டர்னிப் மலரைப் பறிப்பது போலெல்லாம்
அவர்களால்
ஒரு மனிதனின் தலையைக் கொய்து விட முடியாது.
இதோ பார் கண்ணே,
இது எல்லாவற்றையும் மறந்து விடு.
உன்னிடம் கொஞ்சம் பணம் இருந்தால்
எனக்கு ஒன்றிரண்டு மெல்லிய அண்டர்வேர் வாங்கி வா.
Sciatic வலி மீ ண்டும் ஆரம்பித்து விட்டது.
இன்னொரு விஷயம் கண்ணே,
ஒரு கைதியின் மனைவி
எப்போதும் நல்ல விஷயங்களையே நினைக்க வேண்டும்.
***
 
அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நடவடிக்கையின் காரணமாகப் பல ஆண்டுகள் சிறையில் இருக்கும்
கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் சட்டத்தைத் துருக்கிப் பாராளுமன்றம் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு
தெரிவித்து  நிஸாம் ஹிக்மத் தனது சிறைவாசத்தின் பனிரண்டாவது ஆண்டில் 1950, ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று
பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்தார். அதன் காரணமாக புர்ஸா சிறையிலிருந்து இஸ்தாம்பூல்
சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.  ஏப்ரல் 23-ஆம் தேதி அவர் உடல்நிலை மோசமானது.  அதனால்
உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  மருத்துவமனைக்குக் கொண்டு
செல்ல வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையைக் கூட அரசு நிராகரித்து விட்டது.  அதனால் மே 2-ஆம்
தேதி திரும்பவும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் நஸீம்.   
நஸீம் ஹிக்மத்துக்கு எதிரான அரசின் மனிதாபிமானமற்ற போக்குக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. 
எல்லா பத்திரிகைகளும் நஸீமின் புகைப்படங்களைத் தாங்கி வெளிவந்தன.  நஸீமின் தாயாரும்
உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.  அதற்குப் பிறகுதான் நஸீம் சிறையிலிருந்து விடுதலை
செய்யப்பட்டார்.  உடனேயே அவர் துருக்கியிலிருந்து தப்பி ருமானியா சென்று அங்கிருந்து மாஸ்கோ சென்று
விட்டார்.
அடுத்த 13 ஆண்டுகள், அதாவது 1963-இல் மாரடைப்பினால் இறக்கும் வரை அவர் மாஸ்கோவில்தான்
வாழ்ந்தார்.  அங்கேயேதான் அடக்கம் செய்யப்பட்டார்.  Novodevichy-இல்  உள்ள அவரது கல்லறைக்கு இன்றும்
துருக்கியர்கள் வந்து மரியாதை செலுத்திய வண்ணம் உள்ளனர்.
 

 
ஆனால் அனடோலியாவில் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நஸீம்
ஹிக்மத்தின் கடைசி விருப்பம் நிறைவேறாமலேயே போனது. 
 

  
 ’நஸீம் ஹிக்மத்துடன் சிறைச்சாலையில்’ என்ற புத்தகத்தை எழுதிய ஓரான் கமால், நஸீமுடன்.
 
1940-இல் நஸீம் ஹிக்மத் புர்ஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போது துருக்கியின் மிகப் புகழ்பெற்ற கவியான
நஸீம் ஹிக்மத் அவர்தான் என்று அங்குள்ள சிறைவாசிகளுக்கு ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.  தெரிந்த
பின்னர் சிறைச்சாலையில் அவரை எல்லோரும் மாஸ்டர் என்றே அழைத்து மிகுந்த மரியாதையுடன்
பழகினார்கள்.  நஸீமின் கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்காத பழமைவாதிகள் கூட அவரது கவிதைகளை
வெகுவாக ரசித்தார்கள் என்பதாலும், அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்
என்பதாலும் அவர் புகழ் தேசமெங்கும் பரவியிருந்தது.   நஸீம் சிறைப்படுத்தப்பட்ட போது கமால் அதாதுர்க்
உயிரோடு இல்லை என்பதையும் இங்கே நாம் நினைவு கூர வேண்டும்.  ஏனென்றால், கமால் ஒரு மிதவாதி.
எதிர்க் கருத்து உள்ளவர்களை எதிரிகளாக நினைக்காமல் அவர்களோடு விவாதிக்கக் கூடியவர்.  அதைவிட
இன்னொரு முக்கியமான காரணம், அவர் மனைவி லத்தீஃபே ஹனிம்.  அவர் ஃப்ரான்ஸில் உள்ள ஸோர்போன்
பல்கலைக்கழகத்தில் பயின்றவர்; மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம் கொண்டவர்.  இன்றைய தினம் துருக்கி
மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போல் இல்லாமல் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டைப் போல் இருப்பதற்கு
முக்கியமான காரணமாக விளங்கியவர் கமால் அதாதுர்க்கின் குறுகியகால மனைவியான லத்தீஃபே
ஹனிம்தான்.  (லத்தீஃபே பற்றி பிறகு விரிவாகப் பார்ப்போம்.) 

                                                                               ஓரான் கமால்
புர்ஸா சிறைச்சாலையில் மூன்று ஆண்டுகள் நஸீம் ஹிக்மத்துடன் ஒரே செல்லில் இருந்தார் ஓரான் கமால்
என்ற இளைஞர்.  இஸ்தாம்பூல், அங்காரா, இஸ்மீ ர் மூன்று ஊர்களையும் இணைத்தால் ஒரு முக்கோணம்
போல் வரும்.  அதன் மத்தியில் உள்ள ஊர் புர்ஸா.
 

(படம்: இன்றைய புர்ஸா.  கொடியைப் பார்த்து ஏதோ கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி என்று நினைத்து
விடாதீர்கள்.  துருக்கியின் தேசியக் கொடியே அது. கீ ழே உள்ள படம், புர்ஸா 1890-இல்.)

  
 
பின்னாளில் துருக்கியே கொண்டாடிய எதார்த்த பாணி எழுத்தாளரான ஓரான் கமாலுக்கு அப்போது நஸீம்
ஹிக்மத் ஒரு கடவுளைப் போல் தோன்றினார்.   1943-இல் சிறையிலிருந்து வெளியே வந்து ’நஸீம்
ஹிக்மத்துடன் சிறைச்சாலையில்’ என்ற புத்தகத்தை எழுதினார்.  அதில் ஓரிடத்தில் ”ஒரு எழுத்தாளனாக நஸீம்
ஹிக்மத்தின் ஷூக்களுக்குப் பாலிஷ் போடுவதற்குக் கூடத் தகுதியற்றவனாக இருந்தும் அந்த மகத்தான
கவிஞர் என்னைத் தன் தோழனாகவே ஏற்றுக் கொண்டிருந்தார்” என்கிறார் ஓரான் கமால்.
 

 
Biket Ilhan இயக்கிய The Blue Eyed Giant (2007) என்ற படம் நஸீம் ஹிக்மத் பற்றியது.  (நஸீமின் நீலநிறக் கண்கள்
மிகவும் பிரபலமானவை.)
புர்ஸா சிறைச்சாலை.  1941.  சிறைச்சாலைக்கு வரும் புதியவன் ஒருவன் அங்கே இருக்கும் ஒரு கவிஞனைப்
பற்றிக் கேள்விப்படுகிறான்.  சிறையில் உள்ள தச்சுப் பட்டறையில் ஒருவன் அந்தப் புதியவனிடம் சொல்கிறான். 
”அவர் பெயர் நிஸாம் ஹிக்மத்.  அரசியல் கைதி.  அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதனை இதுவரை நான்
பார்த்ததில்லை.  எங்களுக்கெல்லாம் பெட்டிஷன் எழுதிக் கொடுக்கிறார்.  பள்ளிக்கூடம் போகாத எங்களுக்கு
எழுதப் படிக்கக் கற்றுத் தருகிறார்.  கவிதை பாடுகிறார்.  ஓவியமும் வரைகிறார்.” 
அப்போது ஒருவன் பழைய தினசரி ஒன்றை எடுத்து வந்து காட்டுகிறான்.  அதில் நிஸாமின் புகைப்படமும் ”28
ஆண்டுகள் சிறைத் தண்டனை” என்ற தலைப்புச் செய்தியும் காணப்படுகிறது.    
”என்னது, 28 ஆண்டுகளா?” என்று மலைக்கிறான் புதியவன். 
“இது கூடப் பரவாயில்லை.  முன்பு அவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தார்கள்!”
அடுத்த காட்சி:
சிறைச்சாலையின் இரண்டு கட்டிடங்களுக்கு இடையேயுள்ள ஒரு சிறிய இடைவெளி.  அதில் தனியாக நஸீம். 
தூரத்தில் அவருக்குக் காவலாக ஒரு சிப்பாய். 
”இன்று ஞாயிற்றுக் கிழமை.  இன்றுதான் முதல் முதலாக வெட்ட வெளியைப் பார்க்கிறேன்” என்கிறார் நஸீம்.
புதிதாக வந்த இளைஞன் ஒரு கைதியிடம் நான் நஸீமைப் பார்க்க வேண்டும் என்கிறான். 
கைதி: அவ்வளவு பெரிய ஆளைப் பார்க்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?
நான் பணம் தருகிறேன்.
இளைஞனை நஸீமின் செல்லுக்கு அழைத்துச் செல்கிறான் கைதி. அங்கேயிருக்கும் காவலன் நஸீமைப் பார்க்க
அனுமதித்ததற்கு லஞ்சமாக இவன் காதில் செருகியிருக்கும் பாதி குடித்து விட்டு வைத்திருந்த சிகரெட்டை
எடுத்துக் கொள்கிறான். 
நஸீமின் செல்லில் அவர் ஒரு கைதியைப் பார்த்து ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார்.  ஓவியம் தத்ரூபமாக
அந்தக் கைதி போலவே இருக்கிறது. என் குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும் அனுப்பி வைப்பேன், மிக்க நன்றி
என்று சொல்லிவிட்டு ஓவியத்தை எடுத்துக் கொண்டு போகிறார் கைதி.  இளைஞனும் தன்னை அவர் வரைய
வேண்டும் என்கிறான். 
நஸீமின் சக கைதி: நஸீம் பாய், வரைந்து வரைந்து நீங்கள் களைப்பாயிருக்கிறீர்கள்; இப்போது ஓய்வெடுங்கள்.
நஸீம்: நான் வேலை செய்யாமல் இருக்கும் போதுதான் களைத்துப் போகிறேன்.
அவருக்கு Sciatica என்ற பிரச்சினை இருக்கிறது. தொடை நரம்பில் வலி ஏற்பட்டு அது இடுப்புக்கும் முதுகுக்கும்
பரவும் நோய் அது.  மனைவியிடமிருந்து கடிதம் இல்லை; ஃபோனும் இல்லை.  நேரிலும் வந்து பார்க்கவில்லை
என்று யூசுஃபிடம் கவலையுடன் சொல்கிறார் நஸீம். 
பிறகு யூசுஃப் வெளியேறி விட அவர் பைப்பில் புகை பிடித்தபடி மீ ண்டும் ஓவியம் வரைய ஆரம்பிக்கிறார். 
அந்தச் சிறிய அறையில் ஒரு கட்டிலும் ஓவியம் வரைவதற்கான போர்டும் மட்டுமே காணப்படுகின்றன.
சுவரில் மனைவியின் புகைப்படம்.  
பனி பொழிவதைப் போல் கவிதை கொட்டுகிறது அவர் மனதில். திடீர் திடீரென்று கவிதை வரிகள்
உதிக்கின்றன.  பக்கத்தில் இருப்பவர்களிடம் பேனாவை வாங்கிக் கிடைக்கும் காகிதத்தில் குறித்துக்
கொள்கிறார்.  அந்தப் பனிரண்டு ஆண்டு சிறை வாழ்க்கையில் அவர் உடல்நலம் வெகுவாகக் குன்றியது. 
ஆனால் அந்தக் காலகட்டத்தில் அவர் கவிதைகளை எழுதிக் குவித்தார்.  அவரது மகத்தான காவியமான ‘Human
Landscapes of My Country’-ஐ சிறையில்தான் எழுதி முடித்தார்.  தல்ஸ்தோயின் ’போரும் அமைதியும்’ நாவலை
துருக்கி மொழியில் மொழிபெயர்த்தார்.  இப்படியாக அந்தப் பனிரண்டு ஆண்டுக் காலமும் எழுதிக் கொண்டே
இருந்தார்.  
இரண்டாம் உலகப் போர், ஹிட்லர், நாஜிக் கட்சி எல்லாம் வெறும் செய்திகளாகவே அந்தக் கைதிகளை
வந்தடைகின்றன… 

=====

நிலவு தேயாத தேசம் – 27 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : செவ்வாய்க்கிழமை,   மே   03 , 2016  23:35:36 IST
Latest Novels at Attractive Price

 
சென்ற கட்டுரையில் நஸீம் ஹிக்மத் என்று இருப்பதை நாஸிம் ஹிக்மத் என்று மாற்றி வாசித்துக்
கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஆரம்பத்தில் நெடில் வருவதே ஐரோப்பியர்களின் பாணியாக உள்ளது. 
துருக்கியிலும் அவ்விதமாகவே பயன்படுத்துகின்றனர்.  
 
***
தன்னுடைய கருத்துக்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனையின்
பதினோராவது ஆண்டில் – 1937-ஆம் ஆண்டு – சிறையிலேயே இறந்து போன அந்த்தோனியோ க்ராம்ஸிக்கும்
நாஸிம் ஹிக்மத்துக்கும் அதிக ஒற்றுமை இருக்கிறது.  நாஸிமும் தன்னுடைய கம்யூனிஸக்
கருத்துக்களுக்காகவே சிறையில் அடைக்கப்பட்டார்.  அந்தச் சிறைவாசமே அவருடைய உடல்நிலை
கெட்டதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது.  
 
Mavi Gözlü Dev என்பது படத்தின் பெயர்.  ஆங்கிலத்தில் The Blue Eyed Giant.  திரும்பத் திரும்ப
எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ண ீரை வரவழைத்து விடும் அந்தப்
படம் வெறும் சினிமா அல்ல; நாஸிம் ஹிக்மத் என்ற மகா கவிஞனின் வாழ்க்கை. 
என்னுடைய சினிமா அனுபவத்தில் இப்படி ஒரு அற்புதமான படைப்பைப்
பார்த்ததில்லை என்றே சொல்லலாம்.  துருக்கி பற்றி அறிந்து கொள்ள விரும்பும்
ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய ஒரு படம் இது.  மட்டுமல்லாமல்
எழுத்து என்பது எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதையும் சமூகத்தில்
எழுத்தாளனின் இடம் என்ன என்பதையும் இப்படத்திலிருந்து நாம் புரிந்து
கொள்ளலாம்.    
 
ஜனவரி 1941-இல் புர்ஸா சிறையிலிருந்து படம் துவங்குகிறது.  நாஸிம் ஹிக்மத்
என்ற மகா கவிஞனை அந்தச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அப்போது அவர்
வயது 39.  ”என் இதயத்தின் தீச்சுடர் உனது கைகளுக்குக் குளிரூட்டட்டும்” என்ற
நாஸிமின் கவிதை வரிகள் திரையில் ஓடுகின்றன. 
 
நாஸிமைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தன்னை அவர் ஓவியம் வரைய
வேண்டும் என்று சிறை அதிகாரியிடம் சொல்லி விசேஷ அனுமதி பெற்றுக்
கொண்டு நாஸிமின் அறைக்கு வருகிறான் ஒரு இளம் எழுத்தாளன்.  என் அறை
ஓவியச் சந்தையாகவே ஆகி விடும் போலிருக்கிறதே என்று இளைஞனை
அழைத்து வரும் சக கைதியான யூசுஃபிடம் சொல்லிச் சிரிக்கிறார் நாஸிம்.  என்ன
செய்வது நாஸிம் பாய், ஆர்டர்கள் குவிகின்றன என்று சிரிக்கிறார் யூசுஃப். 
அப்போது நாஸிமுக்கு ஒரு கடிதம் வருகிறது.  நாஸிம் தன் மனைவி
பிராயேவிடமிருந்து கடிதம் வருமா என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறார்.  ஆனால் கடிதம் கமால் தாஹிர் எழுதியதாக இருக்கிறது. 
(துருக்கியின் முக்கியமான படைப்பாளியான தாஹிரும் அவருடைய
கம்யூனிஸக் கருத்துக்களுக்காகவே நாஸிமைப் போல் ராணுவத்தால்
சிறைப்பட்டிருக்கிறார்.)  வழக்கமாக பிராயேவிடமிருந்து வரும் தொலைபேசி
அழைப்பும் இல்லை;  நேரில் வர வேண்டிய நாளும் வந்து போய் விட்டது
என்பதால் கவலையுடன் இருக்கிறார் நாஸிம்.   
 
யூசுஃப்: நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள் நாஸிம் பாய், ஓய்வெடுங்கள்.
நாஸிம்: வேலை செய்வதுதான் எனக்கு ஓய்வு யூசுஃப்.  அந்த ஸ்டூலில் உட்கார்
இளைஞனே. 
இளைஞன் தான் எழுதிய சில கவிதைகளை எடுத்து வருகிறான்.  நேரம் இருக்கும்
போது படித்துப் பார்க்கச் சொல்கிறான். 
 
அடுத்த காட்சியில் கைதிகள் அனைவரும் மைதானத்தில் நின்று
கொண்டிருக்கிறார்கள்.  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் குப்பைக்
கூடையிலிருந்து எதையோ எடுத்துத் தின்கிறார்.   அதைப் பார்த்த கைதிகள்
”மார்ஷல் விருந்து சாப்பிடுகிறார்” என்று சொல்லிச் சிரித்து கோரஸாக மார்ஷல்
மார்ஷல் மார்ஷல் என்று கத்துகிறார்கள்.  அப்போது நாஸிம் “மண்ணில்
எத்தனை எறும்புகள் இருக்கின்றனவோ அத்தனை பேர் இவரைப் போல்
இருக்கிறார்கள்;  கடலில் எத்தனை மீ ன்கள் இருக்கின்றனவோ அத்தனை பேர்
இவரைப் போல் இருக்கிறார்கள்; வானில் எத்தனை பறவைகள் பறக்கின்றனவோ
அத்தனை பேர் இவரைப் போல் இருக்கிறார்கள்; இவர்களில் கோழைகள்
இருக்கிறார்கள்; வரர்கள்
ீ இருக்கிறார்கள்; அறிஞர்கள் இருக்கிறார்கள்;
குழந்தைகளும் இருக்கிறார்கள்.  இவர்கள் பூக்களைப் போல் சிரிப்பார்கள்; துக்கம்
இல்லாமலே அழுவார்கள்.  இவர்கள்தான் எனது அடுத்த காவியத்தின் நாயகர்கள்;
இவர்களின் சாகசங்களைத்தான் அதில் நான் எழுதப் போகிறேன்” என்கிறார். 
எல்லோரும் நாஸிமின் கவித்துவமான பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்து
நிற்கிறார்கள். 
 
ரேடியோவிலிருந்து யுத்தம் பற்றிய செய்தியை எல்லோரும் உன்னிப்பாகக்
கேட்கிறார்கள்.  ஹிட்லரின் நாஜிப் படைகள் பற்றிய செய்திகள்.  கடைசியில்
ஹிட்லர் அழிந்து போவான் என்றாலும் போர் என்பது துக்கத்தை மட்டும்தானே
கொடுக்கும் என்கிறார் நாஸிம். 
 
இளம் கவிஞனின் கவிதைகளைப் படிக்கிறார் நாஸிம்.  ”இதெல்லாம் அர்த்தமற்ற
சொற்கூட்டமாக இருக்கிறதே;  தப்பாக நினைத்துக் கொள்ளாதே.  கலை
இலக்கியம் என்று வந்து விட்டால் நான் இரக்கமற்றவனாக மாறி விடுவேன். 
இதெல்லாம் கவிதைகள் அல்ல; தூக்கிப் போட்டு விடு” என்கிறார். அவனும்
அதையெல்லாம் நெருப்பில் போட்டு விடுகிறான்.
 
சிறை அதிகாரி நாஸிம் ஹிக்மத்தின் கவிதைகளின் மீ து பெரும் மதிப்பு
கொண்டவர்.  மேலும், நாஸிம் சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றம்
எதுவும் செய்யவில்லை என்று தீவிரமாக நம்புகிறார். அதனால் நாஸிமுக்கு
அந்தச் சிறையில் சில விசேஷ சலுகைகளைக் கொடுத்திருக்கிறார்.  உங்கள்
ஸயாட்டிகா வலி எப்படி இருக்கிறது என விசாரிக்கிறார் வார்டன்.  அதிகமாகப்
போய் விட்டது.  என்ன செய்வது?  என் வாழ்நாள் முழுவதுமே இந்தச் சிறையில்
கழிந்து விடும் போலிருக்கிறதே என்கிறார் நாஸிம். 
 
உடலில் அவ்வளவு பிரச்சினை இருந்தும் மருத்துவமனைக்குப் போகும்
சலுகையை அரசு அவருக்கு மறுக்கிறது.  மீ ண்டும் மீ ண்டும் அவர் மீ தான பொய்க்
குற்றச்சாட்டையே சொல்லிக் கொண்டிருக்கிறது அரசு.  ”நாஸிம் ஹிக்மத் ஒரு
தேசத் துரோகி.  தனது கவிதைகளின் மூலம் ராணுவத்தை அரசுக்கு எதிராகத்
தூண்டி விட்டார்.” இதைத் தவிர அவரைக் குறித்து அரசாங்கம் வேறு எதையுமே
சொல்லவோ கேட்கவோ தயாராக இல்லை.
 
நாஸிம் சிறையில் இருந்த காலகட்டத்தில் துருக்கியின் அதிபராக இருந்தவர்
இஸ்மத் இனோனு.  கமால் அதாதுர்க்குக்கு அடுத்தபடியாக பதவிக்கு வந்த
இஸ்மத்தின் ஆட்சி துருக்கியின் இருண்ட காலங்களில் ஒன்று. 
அரசாங்கத்தினால் துன்புறுத்தப்பட்ட நாஸிம் ஹிக்மத்துக்கு கம்யூனிஸ்ட்
கட்சியிலும்   எதிரிகள் இருந்தனர்.  அவர்கள் அவரை கமாலின் ஆதரவாளர்
(கமாலிஸ்ட்) என்று அழைத்தனர். 
 

 
படத்தின் இடையிடையே நாஸிம் தன் கடந்த கால வாழ்க்கையை நினைவு
கூர்கிறார்.  அவர் எங்கே சென்றாலும் அவர் பின்னே ஒற்றர்கள் தொடர்கிறார்கள். 
வட்டைச்
ீ சுற்றிலும் ஒற்றர்கள் கண்காணிக்கிறார்கள்.   ஒருநாள் அவரை அடித்து
அழைத்துக் கொண்டு செல்கிறார்கள் சிப்பாய்கள்.  அதிகாரி, நாஸிமிடம் “உன்
கவிதையில் ஒரு இடத்தில் Heraclitus என்று வருகிறதே, அவனும் கம்யூனிஸ்டா? 
அவன் முகவரி என்ன?” என்று கேட்கிறான்.  கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில்
கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவவாதி என்கிறார் நாஸிம். 
 
கோபம் கொள்ளும் அதிகாரி நாஸிமைப் படுக்கச் செய்து உள்ளங்கால்களில்
லத்தியால் அடிக்கிறான்.  நீதிமன்றத்தில் நீதிபதியிடம் நாஸிம் நெஞ்சு நிமிர்த்திக்
கூறுகிறார்.  ஆம், நான் ஒரு கவிஞன்.  ஒரு கம்யூனிஸ்ட்.  ராணுவத்தை அரசுக்கு
எதிராகக் கிளர்ச்சி செய்யத் தூண்டுவதாகக் கூறுவது சுத்தப் பொய்.  அரசியல்
சட்டப்படி நான் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது குற்றமல்ல.  கம்யூனிஸ்டாக
இருப்பது ஒரு மனோபாவம்; அவ்வளவுதான்.  மேலும், என் கவிதைகளில்
ஃப்ரெஞ்ச், ஜெர்மன் எதேச்சாதிகாரத்தைத்தான் தாக்கியிருக்கிறேன்.  சொல்லப்
போனால் அவர்கள்தான் என் மீ து வழக்குப் போட்டிருக்க வேண்டும். 
(பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்.)
 
சிறையில் ஒரு கைதி நாஸிமுக்கு ஒரு முயல் குட்டியைப் பரிசாகக்
கொடுக்கிறான்.  அந்த முயல் குட்டிக்கும் நாஸிமுக்கும் இடையேயான காட்சிகள்
மறக்கவே முடியாதவை.   ஆனால் சில தினங்களிலேயே அவரால் அந்த
சிறைச்சாலையில் அதற்கு வேண்டிய உணவைக் கொடுக்க முடியாததால்
தன்னைப் பார்க்க வந்த நண்பர் ஒருவரின் வட்டுக்கு
ீ அனுப்பி விடுகிறார். 
 
நாஸிமுக்கு பிராயே மூலம் சூஸன் என்ற மகளும் மெமத் என்ற மகனும்
இருக்கிறார்கள்.  பிராயே அவ்வப்போது சிறைக்கு வந்து நாஸிமை சந்திக்கிறார். 
இருவரும் தனிமையில் பேசுவதற்கு ஏதுவாக சிறை அதிகாரி தன் அறையைக்
கொடுத்து விட்டுப் போகிறார்.  அந்த அளவுக்கு அவர் நாஸிம் மீ து மதிப்பு
வைத்திருக்கிறார்.
 
உன்னைப் பற்றி நினைக்காத ஒரு கணம் கூட இல்லை கண்ணே.
 
எனக்கும் அப்படித்தான் நாஸிம்.  உங்கள் கவிதைகளும் கடிதங்களும்தான்
எனக்கிருக்கும் ஒரே ஆறுதல். 
 
காதல் இல்லாதவன் எதற்குமே தகுதி இல்லாதவன்.  அப்படித்தான் கமால்
தாஹிருக்கு எழுதினேன்.  ஒரு கவிஞன் என்பதை விடவும் காதலன் என்பதுதான்
எனக்குப் பெருமைக்குரியதாக இருக்கிறது. 
 
என் கண்களின் ஒளியே! என் அருமை சுல்தான்!
 
பிராயே ஹனிம்… ஐ லவ் யூ…
 
அடுத்த காட்சியில் நாஸிம் பிராயேவுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்
கொண்டிருந்த ஒரு இரவை நினைவு கூர்கிறார்.  நாஸிம் ஒரு காகிதத்தைப்
படித்துக் கொண்டிருக்கிறார். 
 
என்ன படிக்கிறீர்கள்?
 
உன் கணவனைப் பற்றி ஏதேதோ எழுதியிருக்கிறார்கள்.  இந்தக் கம்யூனிஸ்ட்
நாயை அடித்துக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது. 
 
பிராயேவின் உடல் நடுங்குகிறது.
 
பயமா உனக்கு?
 
ஆமாம்.
உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியாது பிராயே.
 
அப்படிப் புரிந்து கொள்ளாதீர்கள்.  நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. 
நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதையிலிருந்து விலகாதீர்கள்.  ஆனால்…
 
நீ என் அம்மாவிடம் பேசியிருக்கிறாய்.
 
அந்தக் கலகக்காரனை உன்னால் மட்டும்தான் சமாளிக்க முடியும் என்றார்
உங்கள் அம்மா. 
 
அந்தத் தருணத்தில் ஒரு துப்பாக்கிச் சத்தமும் ஒருவனின் அலறலும் கேட்க
கத்திக் கொண்டே தூக்கத்திலிருந்து எழுகிறார் நாஸிம்.  அவரது சிறை நண்பர்கள்
அவர் அறையை நோக்கி ஓடுகிறார்கள்.  நாஸிமின் இதயம் மிகவும் பலவனமாக

இருக்கிறது. 
 
சிறையில் முதியவர் ஒருவர் நோய்வாய்ப்படுகிறார்.  அவரைப் போய்ப்
பார்க்கிறார் நாஸிம்.  அப்போது நாஸிமின் இளம் தோழன் கேட்கிறான். 
அவருடைய கருத்துக்களுக்கும் உங்களுக்கும் ஒத்துப் போகாதே?  நீங்கள் எப்படி
அவரைச் சந்திக்கிறீர்கள்?
 
அவர் ஒரு தேசியவாதி.  மதிப்புக்குரியவர்.  அவர் கருத்தை அவர் நம்புகிறார். 
அதில் நமக்கென்ன பிரச்சினை?  அதனால்தான் அவரைச் சந்தித்தேன். 
இவர்களெல்லாம் நம் மக்கள். 
 
நீங்கள் சாதாரண மனிதன் அல்ல நாஸிம் பாய்.  சாய்ர் பாபா!
 
(நாஸிமை பலரும் சாய்ர் பாபா என்றே அழைக்கிறார்கள்.  சாய்ர் என்றால் துருக்கி
மொழியில் கவிஞர் என்று பொருள்.  பாபாவுக்கு நம்மூர் அர்த்தம்தான்.) 
 
நீ ஒரு அருமையான பையன்.  ஆனால் என் சீடனாக இருப்பது ரொம்பவும்
கடினமான விஷயம். தெரியுமா உனக்கு?
 
நீங்கள் மட்டுமே எனக்கு குருவாக இருக்க முடியும்.  நான் நிறைய கற்றுக்
கொள்ள விரும்புகிறேன்.  உங்களால் இந்த சிறைச்சாலையே ஒரு
பள்ளிக்கூடமாக மாறி விட்டது. 
 
அடுத்த காட்சியில், நாஸிமின் தாயார் அவரை அமரச் செய்து வரைந்து
கொண்டிருக்கிறார். 
 
ஆடாதே நாஸிம்.  ஆடாமல் அசையாமல் உட்கார்.  நாளை உன் மாமா அலி
பாஷா வருகிறார்.  (ஏற்கனவே நாம் பார்த்திருந்தபடி பாஷா என்பவர் துருக்கி
அரசின் உயர் அதிகாரி.)
 
என் பாஷா மாமாவிடம் சொல்லுங்கள், நான் எந்தத் தேசத் துரோக
வேலையையும் செய்து விடவில்லை என்று.  நான் ஒரு சராசரி கிரிமினலைப்
போல் வாழ விரும்பவில்லை.   துருக்கி மொழியின் மகத்தான கவிஞன் நான். 
இதற்காக என் வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டிருக்கிறேன்.  மேலும்,
சட்டத்துக்குப் புறம்பாக நான் ஒரு காரியமும் செய்ததில்லை.  இதை அந்த பாஷா
மாமாவிடம் சொல்லுங்கள் அம்மா.
 
சொல்லியிருக்கிறேன் கண்ணே.  அவருக்கும் அது தெரியும்.
 
இன்னும் ஒருமுறை சொல்லுங்கள் அம்மா.  நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன். 
இந்த தேசத்துக்காகவே பாடுபடுகிறேன்.  அப்படியிருக்கும் போது என்
வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்துக் கொண்டிருப்பது
என்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்கிறது. 
 
சிறையில் நாஸிமுக்கு பாலபான் என்று ஒரு இளம் சீடன் இருக்கிறான். 
நாஸிமிடமிருந்து ஓவியம் கற்றுக் கொள்ளும் மாணவன்.  அவனுக்கு சிறையில்
நாஸிமின் அறைக்குப் பக்கத்து அறை கிடைக்கிறது. 
 
கடைசியில் அவர்கள் என்னையும் கம்யூனிஸ்ட் என்று சொல்லி விட்டார்கள்.
 
அது உனக்குப் பிரச்சினை ஆயிற்றே?
 
பிரச்சினை இல்லை.  அது எனக்கு நன்மைதான்.  நான் உங்களுடனேயே இருக்க
முடியும் இல்லையா?  உங்களை மட்டும் நான் பார்க்காமல் இருந்திருந்தால் ஒரு
சராசரி மனிதனாகத்தானே இருந்திருப்பேன்?
 
துருக்கியில் சில பட்டினிச் சாவுகள் பற்றிய செய்திகள் வானொலி மூலம் வந்து
சேர்கிறது.  சிறைச்சாலையிலும் இரண்டு பேர் பட்டினியால் மடிகின்றனர். 
(சிறையில் கைதிகள் தாங்களே உழைத்துப் பொருள ீட்டித்தான் சாப்பிட
வேண்டும்.  இதனால் பலர் சூதாட்டத்தில் இறங்குகிறார்கள்.)  நாஸிம் தனக்குக்
கிடைத்த ஒரு தறியைக் கொண்டு துணி நெய்து சம்பாதிக்கிறார்.  ஓவியத்திலும்
கொஞ்சம் காசு கிடைக்கிறது. 
 
இதற்கிடையில் சிறையில் நாஸிமைப் பார்க்க வரும் ஒரு பெண் நாஸிமின் மீ து
காதல் கொள்கிறாள்.  அவள் ஏற்கனவே திருமணமானவள்.  தன் கணவனை
விவாகரத்து செய்து விட்டு நாஸிமை மணந்து கொள்கிறேன் என்கிறாள். 
நாஸிமும் அவள் மீ து காதல் கொள்கிறார்.  இது நாஸிமுடனான மண வாழ்வில்
இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிராயேவுக்குத் தெரிய வருகிறது.  ஒருநாள்
பிராயேவும் குழந்தைகளும் நாஸிமைச் சந்திக்க சிறைக்கும் வரும் அதே நாளில்
அந்தப் பெண்ணும் வந்து விடுகிறாள்.
 
அந்தத் தருணம் நாஸிமின் குடும்ப வாழ்வையே திசை திருப்பி விடுகிறது.
 
=====

நிலவு தேயாத தேசம் – 28 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : புதன்கிழமை,   மே   11 , 2016  04:05:33 IST
Latest Novels at Attractive Price

நாஸிமின் காதலி முனவரை சிறையில் பார்த்த அந்தத் தருணத்தில் பிராயே ஹனிம் நாஸிமின்
வாழ்விலிருந்து விடை பெறுகிறார். 
 
என்னை அவர்கள் உயிரோடேயே புதைத்து விட்டனர். 
சிந்திப்பதென்பதே குற்றம் என்றும் தேசத் துரோகமென்றும் கருதாத இடம் ஏதாவது இருக்கிறதா?
நான் இறப்பதற்குள் இந்த நரகக் குழியிலிருந்து வெளியேற முடியுமா?
அச்சத்துக்கு பலியாகாதிருக்க ஒரே வழி கனவு காண்பதுதான். கனவு காணும் வரை நீங்கள் உயிரோடு
இருக்கிறீர்கள்.
 
இதெல்லாம் நாஸிம் ஹிக்மத்தின் முக்கியமான சிறை வசனங்களில் சில. 
 
படத்தின் மற்றொரு உணர்வுபூர்வமான இடம், ஓரான் கமால் சிறையிலிருந்து விடுதலையாகும் நாள்.  நான்கு
ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு நாஸிமிடம் விடைபெற வருகிறார் கமால்.  அவரால் நாஸிமை
விட்டுவிட்டு சிறையிலிருந்து போக முடியவில்லை.  நான் சிறைக்கு வரும் போது என் குழந்தைக்கு ஒரு
வயது.  இப்போது ஐந்து வயது.  இருந்தாலும் உங்களைப் பிரிந்து விடுதலையாகிச் செல்வதை வெறுக்கிறேன். 
உங்களுக்குக் கிடைக்காத சுதந்திரம் எனக்கும் தேவையில்லை என்று தோன்றுகிறது. 
 

சென்று வா ஓரான், உன்னிடமிருந்து நான் மிகச் சிறந்த நாவல்களை


எதிர்பார்க்கிறேன்.  அதுதான் நீ எனக்குச் செய்யும் நன்றியறிதலாக இருக்கும். 
மறந்து விடாதே.
 
மறக்க மாட்டேன் நாஸிம் பாய்.  அதோடு செல் நம்பர் 72-இன் கதையையும் எழுதுவேன்.
 
நாஸிம் ஹிக்மத் பற்றிய இந்த சினிமாவிலிருந்து சற்றே விலகி முகம் தெரியாத உங்களிடம் ஒன்றைச் சொல்ல
விரும்புகிறேன்.  சிறைச்சாலைகளிலேயே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த ஒரு மகா கவிஞனின்
சிறை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நாம் இங்கே மறு உருவாக்கம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என்பதை உங்களால் உணர முடிகிறதா?  ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டம் அது.  அதைப்
புரிந்து கொள்ள Mavi Gözlü Dev (Blue Eyed Giant) என்ற
இந்தத் திரைப்படத்தைக் காண்பதும் நாஸிம் ஹிக்மத்தின் கவிதைகளை வாசிப்பதும்தான் ஒரே வழி.
 
துருக்கிக்கு நான் சுற்றுலா செல்லவில்லை.  லத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம், இசை, பண்பாடு
ஆகியவை பற்றி 40 ஆண்டுக் காலமாக ஆய்வு செய்து கொண்டிருந்தும் திடுதிப்பென்று துருக்கி நோக்கி நான்
சென்றதன் ஒரே காரணம் ஓரான் பாமுக்கின் எழுத்துதான்.   ஓரான் பாமுக் மற்ற எழுத்தாளர்களைப் போல்
ஏதோ சில சுவாரசியமான கதைகளை எழுதிச் செல்லவில்லை.   தன் தேசத்தின் துயரத்தை (ஹூசுன்)
எழுதினார்.  அவருடைய உலகப் புகழ் பெற்ற ’என் பெயர் சிவப்பு’ என்ற நாவலின் நாயகன் யார் தெரியுமா?  நாம்
இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோமே, அந்த நாஸிம் ஹிக்மத் தான். 
 
இப்போது திரும்பவும் திரைப்படத்துக்குச் செல்வோம்.   சிறையில் நாஸிமின் ஓவிய மாணவர்களில் ஒருவன்
பாலபான்.  அவனுடைய தந்தை கொல்லப்பட்ட செய்தி பாலபானுக்குக் கிடைக்கிறது.  பாலபான் நொறுங்கிப்
போகிறான்.  நாஸிமிடம் கூடப் பேச மறுத்து ஓடுகிறான்.  அப்போது அவனைத் தொடர்ந்து செல்லும் நாஸிம், நீ
அந்தக் கொலைகாரர்களைத் தண்டிப்பதன் மூலம் உன் தந்தையைத் திரும்பக் கொண்டு வந்து விட முடியாது. 
பழி வாங்குவதன் மூலம் உன் வாழ்க்கைதான் அழிந்து போகும்.  அதற்குப் பதிலாக நீ உன் தந்தைக்கு
மரணமற்றதொரு பெருவாழ்வைக் கொடு என்கிறார்.  பாலபான் திகைக்கிறான்.  அவர் சொல்வதை அவனால்
புரிந்து கொள்ள முடியவில்லை.
 
உன் தந்தையை ஒரு ஓவியமாகத் தீட்டு.
 
அவர் முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லையே நாஸிம் பாய்.
 
கண்ணாடியைப் பார். தெரியும். 
 
இதற்கிடையில் நாஸிமுக்குப் பெரிதும் உதவிக் கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் அவர் நாஸிமுக்கு
உதவுகிறார் என்ற காரணத்தினாலேயே அங்கிருந்து மாற்றப்படுகிறார்.  அடுத்து வரும் அதிகாரி நாஸிமை ஒரு
கிரிமினலைப் போல் நடத்த ஆரம்பிக்கிறார்.  முனவர் நாஸிம் மீ து கொண்ட காதலால் தன் கணவனை
விவாகரத்து செய்து விடுகிறார்.  
 
நான் வாழ்க்கையில் எந்தத் தவறுமே செய்ததில்லை; ஆனால் என் மனைவி பிராயேவுக்கு துரோகம் செய்து
விட்டேன் என்று தனக்குள் சொல்லிச் சொல்லி வருந்துகிறார்.  விவாகரத்துக்காக பிராயே நாஸிமைச் சந்திக்க
சிறைக்கு வரும்போது விவாக ரத்து செய்ய வேண்டாம் என்று சொல்லி, தான் அவளைக் காதலிப்பதாகச்
சொல்கிறார் நாஸிம்.  அப்போது பிராயே, நாடக மேடையில் ஒரு நடிகன் செய்வதையெல்லாம் செய்யாதீர்கள்
என்கிறார்.
 
படத்தின் இறுதிக் காட்சி.  ரமலான் மாதத்தில் கூட நான் பட்டினி கிடந்ததில்லை; இப்போது கிடக்கப் போகிறேன்
என்று சொல்லி விட்டுத் தன் பட்டினிப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார் நாஸிம். தொடர்ந்த பட்டினியால்
உடல்நிலை மோசமடைகிறது.  நாஸிமின் தாயார் சிறையில் அவரைச் சந்தித்து ஃப்ரான்ஸில் உள்ள அத்தனை
புத்திஜீவிகளும் எழுத்தாளர்களும் அவருக்காக துருக்கி அரசை நிர்ப்பந்திப்பதாகக் கூறுகிறார்.  (பிக்காஸோ கூட
அந்தக் குழுவில் இருக்கிறார் மகனே!)  
இறுதியில் நாஸிமின் கவிதையோடு படம் முடிகிறது.  பனிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் சிறையில்
இருந்தார் நாஸிம்.  1950 ஜூலை 15-ஆம் தேதி நாஸிம் விடுதலை செய்யப்பட்டார்.  அடுத்த ஆண்டு ஜூலை 17-
ஆம் தேதி அவர் மாஸ்கோ சென்றார்.  25 ஜூலை 1951 அன்று துருக்கி மந்திரி சபை கூடி அவருடைய துருக்கிக்
குடியுரிமை ரத்து செய்யப்பட்டது.  1963 ஜூன் 3-ஆம் தேதி மாஸ்கோவில் இறந்தார் நாஸிம்.
 
கமால் அதாதுர்க்கைப் போல் ஒரு தேசத் தந்தையாகப் போற்றிக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ஒரு மகா
கவிஞனை துருக்கி அவன் வாழ்நாள் பூராவும் சிறையில் அடைத்து மாஸ்கோவுக்கு விரட்டியது.  மாஸ்கோவில்
அவர் வாழ்ந்த 12 ஆண்டுகள் பற்றி எனக்கு எந்தக் குறிப்புகளும் கிடைக்கவில்லை.  நாஸிமின் வாழ்க்கையைப்
பற்றி எழுதும் போது வரலாற்றின் மிகப் பெரிய நகைமுரணைப் பற்றியும் யோசிக்காமல் இருக்க
முடியவில்லை.  நாஸிமின் கம்யூனிஸக் கொள்கைகளுக்காக துருக்கியில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 
ஆனால் சோவியத் யூனியனில் மத நம்பிக்கை கொண்டிருந்த பலரும் கம்யூனிஸ்டுகளால்
கொல்லப்பட்டார்கள்.  பலர் என்றால் எவ்வளவு தெரியுமா?  சுமார் 2 கோடி பேர். பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். 
அஸர்பெய்ஜான் போன்ற பகுதிகளில் முஸ்லீம்கள்.  அந்த மக்கள் அரசை எதிர்க்கக் கூட இல்லை.  அவர்களின்
மத நம்பிக்கைகளுக்காக மட்டுமே கொல்லப்பட்டார்கள்.  தேவாலயங்களும் மசூதிகளும் சூறையாடப்பட்டு
வணிக வளாகங்களாக மாறின.  இதையெல்லாம் நாஸிம் எப்படி எதிர்கொண்டார் என அறிந்து கொள்ள
விரும்புகிறேன்.  மற்றபடி அவரது ரஷ்ய வாழ்க்கை பற்றி அதிகம் தெரியவில்லை.  Vera Tulyakov என்ற ரஷ்யப்
பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார் என்ற விபரத்தை மட்டுமே அறிந்து கொள்ள முடிந்தது. 
 
இங்கேதான் அதிகாரம் பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது.  அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்ஸன் 1945-ஆம்
ஆண்டு தன் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினார்.  அதில் ஸ்டாலினைப் பற்றி விமர்சன ரீதியாக எழுதியதற்காக -
எல்லா கடிதங்களும் போலீஸால் படிக்கப்பட்ட பிறகே விலாசதாரருக்குக் கொடுக்கப்பட்டன; ஆனால் அப்படி
போலீசால் படிக்கப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது - எட்டு ஆண்டுகள் வதை முகாமுக்கு
அனுப்பப்பட்டார் ஸோல்ஷெனிட்ஸன்.  வதை முகாமில் கைதிகள் ஒரு நாளில் பத்து மணி நேரம் கடும்
உழைப்பில் (ஆஸ்கார் வைல்ட் அப்படிப்பட்ட கடும் உழைப்பினால்தான் இறந்தார்) ஈடுபடுத்தப்படுவார்கள்.
அந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஸோல்ஷெனிட்ஸன் விடுதலை செய்யப்படவில்லை. அவரது
வாழ்நாள் முழுமைக்குமாக கஸாக்ஸ்தானின் தென்பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார்.  அங்கேதான்
தஸ்தயேவ்ஸ்கி, லியோன் ட்ராட்ஸ்கி போன்றவர்களும் நாடு கடத்தப்பட்டிருந்தார்கள்.  துருக்கியில் நாஸிம்
என்றால் ரஷ்யாவில் ஸோல்ஷெனிட்ஸன்.  ஸோல்ஷெனிட்ஸனின் Gulag Archipelago மனித மனதில்
படிந்துள்ள அதிகார வெறி குறித்த மகத்தான நாவல்.
 
 

 
 
    அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்ஸன்
நாம் இப்போது திரும்பவும் ஹூசுன் என்ற துயரத்தின் கதைக்குத் திரும்புவோம்.   நாஸிம் ஹிக்மத் என்ற
கவியின் வாழ்வு முழுதும் ஹூசுன் தான்.   சிந்திப்பவர்களின் சிறகை வெட்டி விட்டு ஒட்டு மொத்த சமுதாயமே
ஹூசுனில் மூழ்கிய கதைதான் துருக்கியின் கதை. 
 
Ataol  Behramo (பிறப்பு 1942) என்பது அவர் பெயர்.  நாஸிம் ஹிக்மத்தின் வாரிசாகக் கருதப்படுபவர். 
மாஸ்கோவில் பயின்றவர்.  1982-இல் அவர் துருக்கி ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.  எட்டு மாத காலம்
ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்ரவதைகளை அனுபவித்தார்.  முடிவில் எட்டு ஆண்டு கடும்
வதைத் தண்டனை (hard labour) அளிக்கப்பட்டது.  தண்டனை அதோடு முடியவில்லை.  எட்டு ஆண்டு முடிவில்
32 மாதங்கள் வட்டுச்
ீ சிறையில் இருக்க வேண்டும் என்பது தண்டனையின் இரண்டாவது ஷரத்து.  இவரது
கவிதைகளும் ஹூசுனின் வெளிப்பாடுகளாகத்தான் இருக்கின்றன.  'துருக்கி, எனது துயரகரமான, அழகிய
தேசம்' என்ற அவரது கவிதை ஒரு உதாரணம்.
 
நான் கப்படோச்சியாவில் பஸ் மூலமாகப் பயணம் செய்த போது பல கிராமங்களுக்குச் செல்ல நேர்ந்தது.  சில
கிராமங்களில் ஸ்ட்ராபரி பயிரிட்டிருந்தார்கள்.  இதுவரை நான் சாப்பிட்ட ஸ்ட்ராபரியெல்லாம் ஸ்ட்ராபரியே
இல்லை என்று சொல்லத்தக்க விதத்தில் இருந்தன அங்கே விளைந்த ஸ்ட்ராபரி.  அவ்வளவு சுவை.  பை
நிறைய ஸ்ட்ராபரியை வாங்கி வைத்துக் கொண்டு காலை மற்றும் மதிய உணவாகவே உட்கொண்டேன். 
விவசாயத்துக்கு அடுத்தபடியாக அங்கே நான் கண்டது கம்பளி நெசவு.  எங்கு பார்த்தாலும் கம்பளி நெய்யும்
தறிகளைத்தான் காண முடிந்தது.  தறி போடுவதெல்லாம் முழுக்க முழுக்க பெண்கள்.  ஒரு ஆணைக் கூட காண
முடியவில்லை.  ஒரு கோடி ரூபாய்க்குக் கூட கம்பளங்கள் விற்கின்றன.  கம்பளத்துக்கும் வைனுக்கும் ஒரு
ஒற்றுமையைக் கண்டேன்.  நெய்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றனவோ அவ்வளவுக்கு விலை கூடுதல். 
வருடம் ஆக ஆக விலை அதிகமாகும்.  இன்னொரு விஷயம், இஸ்தாம்பூலில் 10000 டாலருக்கு விற்கும்
கம்பளம் கப்படோச்சியாவில் 3000 டாலருக்குக் கிடைக்கிறது.  
 
இதற்கும் ஹூசுனுக்கும் என்ன சம்பந்தம்?  துருக்கி மட்டும் அல்ல; துருக்கியில் உள்ள அனடோலியா,
கப்படோச்சியா பகுதிகள் மட்டும் அல்ல; ஐரோப்பாவில் நான் சென்ற நாடுகளில் உள்ள கிராம மக்கள் அத்தனை
பேர் முகங்களிலும் என்னால் துயரத்தை மட்டுமே காண முடிகிறது.  போதுமான அளவுக்கு ஐரோப்பிய சினிமா
பார்த்திருக்கிறேன்.  நான் கவனம் கொள்ளும் துறையே ஐரோப்பிய சினிமா தான்.  அவற்றில் நாம் காணும்
கிராம மக்களெல்லாம் தங்கள் முகங்களில் இன்னதென்று விவரிக்க முடியாத துயரத்தையே தாங்கிக்
கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.  யோசித்துப் பாருங்கள்; ஒரு கண்டம் முழுவதும் உள்ள ஆண்
பெண் இருபாலரும் துயரத்தின் நிழல் படிந்த முகங்களைக் கொண்டவர்களாகவே இருப்பதென்பது எவ்வளவு
விசித்திரமானது!  அந்த முகங்களைக் கொண்டு அவர் எந்த தேசத்தவர் என்று கண்டு பிடிக்க முடியாது.  எந்த
மதம் என்றும் தெரியாது.  எக்கச்சக்கமான சுருக்கங்களைக் கொண்ட ஒரே மாதிரியான முகங்கள்.  பெண்ணாக
இருந்தால் தலையில் ஒரு துணியால் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  யூதர், கிறித்தவர், முஸ்லீம் அனைவருமே. 
எல்லோருடைய முகங்களும் நூற்றாண்டுகளின் துயர ரேகையைத் தாங்கியிருக்கும்.  
 
அது வறுமை அல்ல; வேறு என்ன என்றுதான் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.  துருக்கியைக் காட்டிலும்
இந்தியா ஏழை நாடு.  ஆனால் இந்தியாவில் அந்த ஹூசுன் இல்லை.  இங்கே எல்லாவிதமான பிரச்சினைகளும்
இருந்தன, இருக்கின்றன.  வறுமையால் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். ஆனால் ஹூசுன் இல்லை. 
ஏனென்றால், இங்கே இருக்கும் பிரச்சினைகள் தூலமானவை (physical).  எத்தனைதான் பிரச்சினை என்றாலும்
முன ீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்து விட்டு ஒரு ஆட்டத்தைப் போட்டால் மறுநாளின் துயரத்துக்கான வலு
கிடைக்கும்.  ஒன்றுமே முடியாவிட்டால் ஒரு கொலையையாவது செய்து ஒருவன் தன் துயரத்தைக்
கடக்கிறான் இங்கே.  ஆனால் ஐரோப்பா அப்படி இல்லை.  அந்த பூமியின் மீ து நூற்றாண்டுகளாய்க் கவிந்து
கொண்டிருக்கும் பனியைப் போல் கவிகிறது அவர்களின் துயரம்.  
 
அவர்களின் பனியும் ஒரு ஹூசுன் தான்.     
 
=====

நிலவு தேயாத தேசம் – 29 சாருநிவேதிதா எழுதும் தொடர்


Posted : சனிக்கிழமை,   மே   28 , 2016  01:54:10 IST
Latest Novels at Attractive Price

 
இடைவெளி விட்டதற்கு மன்னியுங்கள்.ஒவ்வொரு அத்தியாயத்திற்காகவும் பல நூறு
பக்கங்களை வாசிக்க வேண்டியிருக்கிறது. 
உதாரணமாக, நாஸிம் ஹிக்மத் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் ஓரான்
பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’
என்ற உலகப் புகழ் பெற்ற நாவலுக்கு ஆதாரமே நாஸிம் ஹிக்மத்தின்
வாழ்க்கைதான் என்று தெரிய வந்தது.
உடனே ‘என் பெயர் சிவப்பு’ நாவலைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். இப்படியாக
இன்னும் ஐந்தாறு அத்தியாயங்கள்
வரக் கூடிய இந்தத் தொடர் கொஞ்சம் இடைவெளிகளோடு வருவதை ஏற்றுக்
கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.  
***
இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகள் ஆகி விட்டன.  மேற்கு ஐரோப்பிய
நாடுகள் அந்தப் பேரழிவிலிருந்து பாடம்
கற்றுக் கொண்டு அந்த மனநிலையிலிருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டன. 
இன்றைய தினம் தேசியவாதம்,
தேசப் பற்று போன்ற வார்த்தைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மனித குலத்துக்கு
விரோதமான கருத்துருவங்களாகக் கருதப்படுகின்றன;
அவற்றை ஹிட்லரின் தேச பக்தி என்ற சித்தாந்தத்தோடு தவிர்க்க முடியாமல்
சம்பந்தப்படுத்தி மனம் நடுங்குகிறார்கள்.  ஆனால்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்  நிலைமை அப்படி இல்லை.  சில உதாரணங்களைப்
பார்ப்போம்.
 
யூகோஸ்லாவியா என்ற தேசத்தைப் பற்றி பூகோளத்தில் படித்திருக்கிறோம்.  அந்த நாடு இப்போது இல்லை. 
ஸ்லொவேனியா, க்ரோஷியா, போஸ்னியா, மாண்ட்டனெக்ரோ, கொஸாவோ, ஸெர்பியா, மாசிடோனியா
என்று தனித்தனி நாடுகளாகப் பிரிந்து விட்டன.  இவற்றில் ஸெர்பியாவும் மாண்ட்டனெக்ரோவும் ஒரே நாடாகச்
சேர்ந்து கொண்டன.  போஸ்னியாவில் பெரும்பான்மையினர் முஸ்லீம்கள்.  செர்பியா கிறிஸ்தவ நாடு. 
போஸ்னியாவின் மக்கள் தொகை வெறும் 38 லட்சம்.  பரப்பளவு என்று பார்த்தால் போஸ்னியாவை விட
தமிழ்நாடு இரண்டரை மடங்கு பெரிது.  1990 களின் முற்பகுதியில் போஸ்னியாவுக்கும் செர்பியாவுக்கும் போர்
மூண்டது.  போருக்குக் காரணம், மத வேறுபாடு.  செர்பிய ராணுவத்தினர் போஸ்னிய கிராமங்களுக்குச் சென்று
அங்குள்ள அப்பாவி மக்களைக் கொன்று குவித்தனர்.  பெண்களை வன்கலவி செய்தனர். 
 
பல ஆயிரக் கணக்கான மக்களை வேறு இடங்களை நோக்கி விரட்டினர்.  இதையெல்லாம் பதிவு செய்த
பத்திரிகையாளர்களில் ஒருவர் ஸ்லாவெங்கா த்ராகுலிச் Slavenka Drakulić என்ற பெண்.  இவர் தனக்குப் பார்க்கக்
கிடைத்த ஒரு புத்தகம் பற்றிப் பேசுகிறார்.  ’என்னைக் கொன்று விடுங்கள் என்று மன்றாடினேன்’ என்பது அந்த
நூலின் பெயர்.  செர்பிய ராணுவச் சிப்பாய்களால் வன்கலவி செய்யப்பட்ட நாற்பது பெண்களின் வாக்குமூலம்
இந்த நூலில் உள்ளது.  மற்ற பெண்களைப் போல் அல்லாமல் இந்த நாற்பது பெண்களும் தங்கள்
வாக்குமூலத்தை அவர்களே புத்தகமாகவும் எழுதிப் பதிப்பித்திருக்கிறார்கள். வன்கலவி என்றால் நாம்
இதுகாறும் அறிந்த முறை அல்ல. 
 
ஒரு கிராமத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ அத்தனை பெண்களையும் - ஐந்து வயதிலிருந்து ஐம்பது
வரை, வயது வித்தியாசம் ஏதும் இல்லாமல் எல்லா பெண்களையும் லாரிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு
போய் ஒரு இடத்தில் கொண்டு போய் அடைத்து வைப்பார்கள்.  தகரக் கொட்டகை போன்ற இடம்.  மாதக்
கணக்கில் மாற்றிக் கொள்ளவும் உடுப்பு இன்றி அந்தக் கொட்டகையிலேயே அவர்கள் சிறை
வைக்கப்படுவார்கள்.  சிலர் செத்தும் போவார்கள்.  தினந்தோறும் சிப்பாய்கள் வந்து சிலரை அழைத்துக்
கொண்டு போய் வன்கலவி செய்வார்கள்.  அதிகம் பேரைத் தாங்க முடியாமல் பத்து வயதுச் சிறுமிகள் கதறிக்
கதறி செத்துப் போகும் கதைகளை நான் புத்தகங்களாகப் படித்திருக்கிறேன்.  அந்தப் புத்தகங்கள் பின்னர்
திரைப்படங்களாகவும் வந்துள்ளன.   ஏதோ டிக்கட் வாங்கப் போவது போல் வரிசையில் நின்று
ஒவ்வொருவராகப் போய் வன்கலவி செய்வார்கள். 
 
இன ஒழிப்பு என்று சொல்லி எல்லோரையும் கர்ப்பமாக்குவார்கள்.  முஸ்லீம் பெண்களின் முதுகிலும் மார்பிலும்
கத்தியால் சிலுவைக் குறி இடுவார்கள்.  இப்படி சிலுவைக் குறி தாங்கிய ஒரு பெண்ணை இஸ்தாம்பூல்
பிராத்தலில் சந்தித்தேன்.  அவள் சொன்ன கதையையெல்லாம் தனியாக நாவலாகத்தான் எழுத வேண்டும். 
இப்போது நாம் ஹூசுன் என்ற மகத்தான துயரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். 
 
போஸ்னியா, செர்பியா எல்லாமே சொர்க்கலோகத்தை ஒத்த அழகான நாடுகள்.  கீ ழே உள்ள படங்களைப்
பாருங்கள்.  இப்படங்களை எடுத்தவர் Zahariz. 

 
 
 

இன்னும் இது போன்ற படங்களை காணலாம்.


 
இவையெல்லாம் ஏதோ ஊட்டி, சிம்லா போல் கோடை வாசஸ்தலங்கள் அல்ல.  போஸ்னியா,

செர்பியா, ஹெர்ஸகோவினாவின் எல்லா கிராமங்களுமே இப்படித்தான் இருக்கும். 


 
போஸ்னியாவின் தலைநகர் ஸராயீவோ நகர் பற்றிய ஒரு காணொளி கீ ழே.  (Sarajevo என்ற பெயரை
ஸராயீவோ என்றே அழைக்க வேண்டும்.  பல ஐரோப்பிய மொழிகளில் ’j’ என்ற எழுத்து ’ய’ என்றே
உச்சரிக்கப்படுகிறது.  ஸ்பானிஷில் ‘ஹ’ என்பார்கள்.  Jesus என்பதை நாம் யேசு என்று சொல்வது கூட 'j'வுக்கு ‘ய’
ஒலி கொடுப்பதால்தான்.)  காணொளியின் ஆரம்பத்தில் ஒற்றைக் கால் இழந்த ஒரு பெண்ணைப் பார்க்கலாம். 
ஐரோப்பிய நகரங்களில் இப்படி உடல் உறுப்பை இழந்த சிலர் இப்படி சாலைகளில் பிச்சை எடுத்துக்
கொண்டிருப்பதை சர்வசாதாரணமாகக் காணலாம். 
 
துருக்கியில் அப்படி இல்லை.  இப்படிக் கை கால் இழந்தவர்கள் போரினால்தான் இப்படி ஆகிறார்கள்.  படத்தில்
சாலைகளை கவனித்தால் பளிங்கு போல் சுத்தமாக இருப்பதைப் பார்க்கலாம்.  கற்பனை செய்து பாருங்கள். 
துருக்கி ஒரு பெரிய நாடு.  அங்கே மேற்கிலிருந்து கிழக்கு வரை சுற்றினேன்.  ஒரு குப்பையைக் கூட பார்க்க
முடியவில்லை.  ஒரு பஸ் டிக்கட், ஒரு சாக்லெட் பேப்பர், தீக்குச்சி, சிகரெட் துண்டு, தண்ணர்ீ பாட்டில், ஐஸ்
க்ரீம் டப்பா, கிழிந்த காகிதம் எதையுமே தரையில் பார்க்க முடியவில்லை.  ஒரு தேசம் முழுவதுமே கழுவித்
துடைத்தது போல் இருந்தது.   
 
போஸ்னியாவின் தலைநகர் ஸராயீவோ நகரில் ஒரு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லீம் குடும்பம். 
அம்மா, அப்பா, இரண்டு பெண் குழந்தைகள்.  மூத்த பெண் ஸமீ ரா ஆசிரியைப் பயிற்சி முடித்திருக்கிறாள்.  ஒரு
கிராமத்தில் அவளுக்கு வேலை கிடைத்திருக்கிறது.  வட்டில்
ீ எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு
கிளம்புகிறாள்.  உலகம் பூராவும் கிராமங்கள் எல்லாமே ஒன்றே போல்தான் இருக்கும் போலிருக்கிறது.  ஒரு
கிழவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் தூக்கக் கலக்கத்தில் அவள் தோள் மீ து சாய்ந்து தூங்கி
விடுகிறான்.  கிராமத்துச் சிறார்கள் பஸ் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்து அதில் உள்ளவர்களுக்கு
டாட்டா காண்பிக்கிறார்கள். 
 
நாம் மேலே புகைப்படத்தில் பார்த்த கிராமத்தை அச்சு அசலாக ஒத்திருக்கிறது ஸமீ ரா பணி செய்ய வரும்
கிராமமும்.  ஆனால் அவள் அங்கே வந்து சேர்ந்த முதல் நாளே அங்கே ஒரு செர்பிய போராளி குழு வருகிறது.   
போராளிகள் அனைவருடைய கையிலும் துப்பாக்கி.  கிராமத்தில் உள்ள எல்லா பெண்களையும் (ஸமீ ராவையும்
சேர்த்து) லாரியில் ஏற்றி ஏதோ ஒரு பெயரில்லாத இடத்துக்குக் கொண்டு  போகிறார்கள். (ஆண்கள்
அனைவரையும் சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.)  பெண்கள் அனைவரும் ஒரு கொட்டகையில்
அடைக்கப்படுகிறார்கள்.  நாய்க்கு விட்டெறிவது போல் ரொட்டித் துண்டை விட்டெறிகிறான் ஒரு போராளி. 
அந்தச் சிறிய கொட்டகையிலேயே ஒருவர் மீ து ஒருவர் கிடந்து உறங்குகிறார்கள் பெண்கள்.
 

 
பெண்கள் அனைவரும் கொட்டகையில் இருக்கும் காட்சி
 
காலையில் ஒரு போராளி வந்து எல்லோரையும் வெளியே அழைக்கிறான்.  அது ஒரு திறந்த வெளி.  ஒரு
பாலைவனத்தைப் போல் கிடக்கிறது அந்த வெளி.  எல்லோரும் அங்கேயே உட்கார்ந்து மலஜலம் கழியுங்கள்
என்று உத்தரவிடுகிறான். 
 
ஒரு கணம் திகைத்து விழிக்கும் அத்தனை பெண்களும் வேறு வழியில்லாமல் தங்கள் ஸ்கர்ட்டை
உயர்த்தியபடி குத்திட்டு அமர்கிறார்கள்.  அப்போது அவர்கள் கண்களில் தெரியும் பீதியும் அவலமும்
வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.  கேமரா அடுத்த காட்சிக்குத் தாவுகிறது. 

 
 
ஸமீ ரா எல்லா பெண்களுடனும் கொட்டகையில் அமர்ந்திருக்கிறாள்.
 

 
ஒரு போராளி ஸமீ ராவை கேப்டனிடம் அழைத்துச் செல்லும் காட்சி.
 

 
 
 
 

 
ஸமீ ராவை மேஜையின் மீ து குப்புறக் கிடத்தி ஒருவர் மாற்றி ஒருவராக வந்து புணரும் காட்சிகள்.
 
 

 
கிட்டத்தட்ட தனக்குக் கிடைத்த ஒரு செக்ஸ் பொம்மையைப் போலவே ஸமீ ராவை நடத்துகிறான் செர்பிய
கேப்டன். 

 
 
எல்லா பெண்களும் சிறை வைக்கப்பட்டிருக்கும் கொட்டகை.
 

 
பத்தே வயதான சிறுமியை போராளிக் குழுவில் உள்ள அத்தனை பேரும் மாற்றி மாற்றி வன்கலவி செய்து - பல
நாட்கள் - கடைசியில் அவள் இறந்து விடுகிறாள்.  படத்தில் அந்தச் சிறுமி...
 
படத்தில் ஸமீ ரா மட்டும் மற்றவர்களைப் போல் ஸமீ ரா மன உளைச்சலுக்கு ஆட்படுவதில்லை.  காரணம்,
அவள் அந்த இடத்தில் உள்ள செர்பியன் போராளிகளின் ஆட்ட விதிகளைப் புரிந்து கொண்டிருந்தாள்.  அந்த
கிராமத்தின் அத்தனை ஆண்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்.  தங்களிடம் அந்த செர்பியப் போராளிகளுக்குத்
தேவையான ஒரு ‘பொத்தல்’ இருப்பதாலாயே தங்களை அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.  பத்து வயது
குழந்தையைக் கூட வன்கலவி செய்தே கொன்று விட்டார்கள்.  வன்கலவி மட்டும் அல்ல; அடித்துக் கடித்துத்
துவைத்துப் போடுகிறார்கள்.  அவர்களுடைய மிருக வெறிக்கு வடிகாலாகப் பயன்படும் பெண் உடல் நாம்;
அவ்வளவுதான்.  இங்கிருந்து உயிரோடு தப்பிக்க வேண்டுமானால் அவர்களின் ஆட்டவிதிகளையே ஆடுவோம். 
ஒழுக்கம், நீதி, நேர்மை, கற்பு, மற்ற பெண்கள், கௌரவம், கடந்த காலம், எதிர்காலம் என்று எதைப் பற்றியும்
யோசிக்கக் கூடாது.  யோசித்தால் செத்தோம்.  இதுதான் அவள் அவர்களுக்கு எதிராக நகர்த்தும் காய்.  இந்த
ஆட்டத்தில் அவளுக்குத் தடங்கலாக இருக்கும் விஷயம் என்னவென்றால், அவள் மற்றவர்களை விட மிகவும்
அழகாக இருக்கிறாள். 
 
ஏனென்றால், அவள் அவர்களைப் போல் கிராமத்துப் பெண் அல்ல; ஸராயீவோ நகரைச் சேர்ந்தவள்.  எல்லா
ஆண்களும் அவளையே அழைக்கிறார்கள்.  மறுத்தால் அடியும் உதையும் பட்டு மேலும் கிழியும் உடம்பு. 
எனவே அவர்களோடு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறாள்.  தன் அழகான மேனியை  ஒப்பனைகளின் மூலம் மேலும்
அழகாக்கிக் கொள்கிறாள்.  இப்படியும் ஒரு போஸ்னியப் பெண்ணா என்று கேள்விப்பட்டு அவளை அழைத்து
வரச் செய்கிறான் கேப்டன்.  எந்தப் பிரச்சினையும் பண்ணாமல் உடனே கிளம்பிப் போகிறாள்.  அவளை வேசி
என்கிறார்கள் மற்ற பெண்கள்.  ஸமீ ரா அது பற்றிக் கவலைப்படவில்லை.  அவள் உயிரோடு இங்கிருந்து திரும்ப
வேண்டும்.  அது ஒன்றுதான் அவளுடைய கவலை.
 

 
 
 
போஸ்னிய சிறுமியைப் பல செர்பிய ஆண்கள் வன்கலவி செய்த பிறகு அவளுடைய முதுகில் கத்தியால்
சிலுவைக் குறி போட்டு அனுப்புகிறார்கள்.  சிறுமி செத்து விடுகிறாள்.  போஸ்னியா முஸ்லீம்களின் நாடு;
செர்பியா கிறிஸ்தவர்கள் வாழும் நாடு என்பதை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். 

=====

You might also like