You are on page 1of 8

காற்று உள்ளே புகுந்து வெளியேறக்கூட வாய்ப்பு இல்லாத

அளவிற்கு பேருந்திலே ஆட்களின் கூட்டம். உட்கார இடமில்லாமல்

பலர் நின்று கொண்டு வந்தனர்.

ஆனால் பாலுவுக்கும் மாறனுக்கும் உட்கார இருக்கை

கிடத்தமையால், அவர்கள் சாலையை நோட்டமிட்டு வந்தனர். “டிரிங்”

என்ற மணியோசையைக் கேட்டவுடன் பேருந்து பேரிரைச்சலுடன்

ஓரத்திலே நின்றது. பேருந்திலிருந்து சில பயணிகள் கீ ழே இறங்கினர்.

அப்பொழுது ஒரு மூதாட்டி கையில் கூடை நிறைய

காய்கறிகளுடன் பேருந்தில் ஏறினார். அவரின் தள்ளாடும் வயது

பேருந்துக்கு ஈடுக கொடுக்க இயலாமல் தள்ளாடியது. அவரின்

சுருங்கிய கண்கள் உட்கார இடம் கிடைக்குமா என்று தேடி அலையும்

போது தான் பாலுவையும் மாறனையும் சந்தித்தன. பேருந்தில்

உட்கார இடமே இல்லையே! இந்தப் பையன்களிடம் உதவி

கேட்கலாமா? என எண்ணி பாலுவை ஏக்கத்துடன் பார்த்தார்.

அவரின் முகக் குறிப்பை உணர்ந்து கொண்ட பாலு பாட்டியைப்

பார்க்க பாவமாக உள்ளது. நம் இடத்தை இவருக்குத் தந்தால் என்ன?

என எண்ணிக் கொண்டிருக்கையில், “அந்தப் பாட்டியைப்

பார்க்காததுப் போல இருப்போம். நம்முடைய இடத்தைக் கேட்டுவிடப்

போகிறார்.” என மாறன் கிசுகிசுத்தான்.

மாறனை ஒரு கணம் தீர்க்கமாக பார்த்த பாலு, “ நீ உன்

இடத்தைத் தர வேண்டாம். நான் அவருக்கு என் இருக்கையைத்

தருகிறேன். அறம் செய விரும்பு என்று படித்தால் மட்டும் போதாது.

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் மாறன்.” என தன் நண்பனைக்


கடிந்து கொண்டான். “இங்கே உட்காருங்கள் பாட்டி” என தன்

இருக்கையையும் அவருக்கு வழங்கினான்.

“ரொம்ப நன்றி பசங்களா” என தளுதளுத்தக் குரலில் நன்றி

சொன்ன மூதாட்டியின் கைகளைப் பிடித்து அமரச் செய்தமாறனைக்

கண்டு பாலுவின் இதழ்கள் புன்னகை பூத்தன.

பயிற்சி 6
“யாழினி” புத்தகக் கட்டணத்தைச் செலுத்திவிட்டாயா?” என

அம்மா கேட்கும் போதுதான் அந்த ரிங்கிட் மலேசியா நூறு அவள்

நினைவுக்கு வந்தது. அப்பணத்தைக் கதைப்புத்தகத்தில் வைத்தேன்.

ஆனால் அந்த கதைப் புத்தகத்தை இன்று நூல்நிலையத்தில்


ஒப்படைத்துவிட்டேனே. அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என

தெரியாமல் திகைத்தாள்.

“ என்ன கேட்ட கேள்விக்குப் பதிலே காணோம்” என மீ ண்டும்

அம்மாவின் குரல் அவளை நினைவுலகிற்குக் கொண்டுவந்தது.

தாமதியாமல் “கொடுத்துட்டேன்மா.” என்றாள்.

தன் அறைக்குச் சென்று மீ ண்டும் புத்தகப்பையை ஒரு முறை

பரிசோதித்தாள் .பணம் அங்கு இல்லை. கண்டிப்பாக அந்த

புத்தகத்தில்தான் இருக்கும். என்ன அலட்சியம் எனக்கு. அம்மா தந்த

பணத்தைப் புத்தகத்தில் வைத்ததைக் கூடமறந்து விட்டுதன் சகத்

தோழியுடன் குழு வேலையில் ஈடுபட்டிருந்த தன் நிலையை

நினைத்து நொந்து கொண்டாள்.

நாளை காலையில் முதல் வேலையாக நூல் நிலையத்திற்குச்

சென்று அந்தக் கதைப் புத்தகத்தைத் தேடி விட வேண்டும்.

இல்லையேல் அம்மாவிடம் திட்டு வாங்க நேரிடும் என

எண்ணியவாறு மெத்தையில் சாய்ந்தாள்.

அவள் கண்களை உறக்கம் வெகு நேரம் தழுவ வேயில்லை.

புத்தகத்தில் வைத்த நூறு ரிங்கிட் இருக்குமோ, அல்லது அந்த

புத்தகத்தை யாரேனும் இரவல் வாங்கி இருந்தால் என்ன செய்வது

என மனதிற்குள் பல கேள்விக் கணைகளைக் தொடுத்துக் கொண்டு

உறங்கியும் போனாள்.

சேவல் கூவும் ஓசையில் எழுந்த அவள் காலைக் கடன்களை

மளமளவென முடித்துவிட்டு பள்ளிக்குச் செல்ல தயாரானாள்.


அவள் பெருநடை வராங்கனையைப்
ீ போல் நடக்க

ஆரம்பித்தமையால் விரைவாக பள்ளியை வந்தடைந்தாள் .கால்கள்

நேரே பள்ளியின் நூல்நிலையத்திற்குத் தான் சென்றன.

புத்தகப்பையை வெளியே வைத்துவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள்.

சில மாணவர்களின் வருகையை மட்டுமே பள்ளி பதிவு

செய்திருந்தது. காலத்தைத் தாழ்த்தாமல் தன் தேடுதல் வேட்டையை

ஆரம்பித்தாள்.

அவள் அவசர அவசரமாக புத்தகத்தைத் தேடியதால் புத்தக

அலமாரியிலிருந்து புத்தகங்கள் களைந்துபோயின. சில புத்தகங்களும்

கீ ழே விழுந்தன.

“யாழினி, ஏன் நூலகப் புத்தகங்கள் இப்படி களைந்து

கிடக்கின்றன?” என்ற தமிழ் மணி ஆசிரியரின் குரல் அவளை அதிர

வைத்தது. செய்வதறியாது திருதிருவென விழித்தாள்.

“அது வந்துசார். அது வந்து” என ஏதோ சொல்ல நினைத்தவளின்

குரல்வளைக்குள் காற்று புகுந்து கொண்டு அவளைப் பேச முடியாமல்

திணர வைத்தது.அவள் மனதிற்குள்ளே“ ஐயா கேட்கிறாரே,

உண்மையைச் சொல்லிவிடலாமா?” என எண்ணுவதற்குள் ஆசிரியர்

“என்ன யாழினி திருதிருவென விழிக்கிறாய்?” என்றார்.

“அது வந்து சார் நேத்து அம்மா தந்த புத்தகக் கட்டணத்தை

கதைப்புத்தகத்தில் வைத்திருந்தேன். அதை என் வகுப்பாசிரியரிடம்

செலுத்தாமல் மறந்தாப்படி புத்தகத்தை நூல்நிலையத்தில்

ஒப்படைத்துவிட்டேன். அதனால் தான் புத்தகத்தைத் தேடுகிறேன்

சார்” என்றாள்.
“ஓ..அப்படியா! நூலக ஆசிரியரான என்னிடம் கூறியிருந்தால்

நானும் உனக்கு உதவி செய்திருப்பேனே” என்று மெல்ல கடிந்தவாறு

ஆசிரியரும் அவளுக்குப் புத்தகத்தைத் தேட உதவினார்.

“ கதை புத்தகத்தின் தலைப்பென்ன?” என ஆசிரியர் கேட்க“ பணம்

என்றால் பிணமும் வாயைப் பிளக்குமாம்” என்று கூறிவிட்டு

தேடுவதில் முழுமூச்சாக நின்ற தன் மாணவியின் நிலையை

எண்ணிச் சிரித்தவாறு “ இந்த புத்தகமா யாழினி?” என்ற வரை

நோக்கினாள்.

ஆம்,அது தான் சார்.... இந்தப் புத்தகம்தான் என கூறிக் கொண்டே

கையிலிருந்த புத்தகத்தைப் பெற்று அதைத் திறந்தாள். நூறு ரிங்கிட்

அவளைப் பார்த்து கண்சிமிட்டியது. ஆசிரியரின் கண்களோ களைந்த

புத்தகத்தில் நிலை குத்தியிருந்தன. அவரின் பார்வைக்குப் பதில்

சொல்வது போல யாழினியின் கைகள் புத்தகங்களை அடுக்கத்

தொடங்கின....

கமுண்டிங்

தமிழ்ப்பள்ளி

You might also like