You are on page 1of 511

வாக்கியம்

1. கட்டு = பிணித்தல் / சேர்த்துக் கட்டுதல்


என் அம்மா பழைய புத்தகங்களைக் கயிற்றால் கட்டி நிலை பேழையின்
மேல் வைத்தார்.

2. காட்டு = காண்பித்தல் / வனத்திலுள்ள


மணி முதியவரிடம் தபால் நிலையத்திற்குச் செல்லும் வழியைக்
காட்டினான்.

3. கடி = பல்லாற் கடி


அந்த நாய் தனக்கு உணவாகக் கொடுத்த எலும்பைக் கடித்துத் தின்றது.

4. காடி = புளித்த
என் அம்மா உணவு உண்ணும் போது காடித் தன்மை கொண்ட
ஊறுகாயை உணவில் சேர்த்துக் கொண்டார்.

5. கடை = கடைசி / கடைதல் / பொருள்கள் விற்கும் இடம்


தயிரை மத்தைக் கொண்டு நன்கு கடைந்தால் தரமான வெண்ணை
கிடைக்கும்.

6. காடை = ஒரு பறவை


காடையின் சிறுசிறு முட்டைகளை என் அம்மா உண்பதற்கு அவித்துக்
கொடுத்தார்.

7. கண் = விழி
முத்துவின் கண் பார்வை தெளிவில்லாததால் அவன் மூக்குக் கண்ணாடி
அணிந்தான்.

8. காண் = பார்
தேசிய தின கொண்டாட்டத்தைக் காண்பதற்கு மக்கள் அனைவரும்
“மெர்டேக்கா” சதுக்கத்தில் ஒன்று கூடினர்.
9. கணி = மதிப்பிடு
முத்து அப்புட்டியில் சுமார் இருபது மிட்டாய்கள் தான் இருக்கும் என
கணித்தான்.

10. காணி = குறிப்பிட்ட அளவுடைய நிலம்.


அந்த விவசாயி காணியை ஏர் பூட்டி உழுதார்.

11. கதலி = வாழை மரம்


கதலியின் இலையில் உணவு உண்பது தமிழர்களின் பண்பாடாகும்.

12. காதலி = அன்பு கொள் / விரும்பு


என் அக்காள் காதலித்த அந்த இளைஞரையே திருமணம் செய்து
கொண்டார்.

13. கந்தம் = வாசனை


பூசை அறையில் ஏற்றி வைத்த அகர்பத்தி மற்றும் சாம்பிராணியின்
கந்தம் வடு
ீ முழுவதும்
பரவியது.

14. காந்தம் =அழகு / கந்த சக்தியுடைய இரும்பு


இரும்புப் பொருட்களைக் காந்தம் தன் வசம் இழுத்துக் கொள்ளும்.

15. கந்தன் = முருகக் கடவுள்


தைப்பூச திருவிழாவின் போது பக்தர்கள் கந்தனுக்கு நேர்த்திக்கடனைச்
செலுத்தினர்.

16. காந்தன் = கணவன்


காந்தனை மதித்து வாழும் பல மனைவிமார்கள் இன்று இல்லற
வாழ்க்கையில் சிறந்து விளங்குகின்றனர்.

17. கப்பு = மரக்கிளை


அந்த உயர்ந்த மரத்தின் கப்புகளில் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து
வந்தன.
18. காப்பு = வளையல் / பாதுகாப்பு
என் அம்மா தங்கத்தாலான காப்புகளைத் தன் கைகளில்
அணிந்திருந்தார்.

19. கட்டி = இறுகின பொருள்


அதிக குளிரினால் தென்துருவ பகுதிகளில் நீர்நிலைகள் கட்டி,
பனிபாறைகளாக காட்சியளிக்கின்றன.

20. காட்டி = காண்பித்து


அச்சிறுவன் நோயாளி ஒருவருக்கு மருத்துவமனை செல்லும் வழியைக்
காட்டினான்.

21. கம்பு = குச்சி / ஒரு வகை தானியம்


அவ்விவசாயி தம் பயிரை நாசம் செய்த ஆடு மாடுகளைக் கம்பால்
அடித்து விரட்டினார்.

22. காம்பு = மெல்லிய தண்டு


ரோஜா மலரைப் பறிக்கும் போது அதன் காம்பில் இருந்த முட்கள் என்
கையைக் காயப்படுத்தின.

23. கயம் = நீர் நிலை / குளம்


அதிக வறட்சியின் காரணத்தால் கயத்தில் இருந்த நீர் வற்றிப் போனது.

24. காயம் = புண்


சாலை விபத்தில் பலத்தக் காயம் அடைந்த அச்சிறுவனை
மருத்துவமனையில் சேர்த்தனர்.

25. கரணம் = தலை கீ ழாகப் பாய்தல்


கேளிக்கை மையத்தில் கோமாளிகள் பல கரணங்களைப் போட்டு
மக்களின் மனதை கவர்ந்தனர்.

26. காரணம் = நோக்கம் / மூலம்


வட்டுப்
ீ பாடத்தைச் செய்யாமல் பல காரணங்களைக் கூறிய
மாணவனை ஆசிரியர்
தண்டித்தார்.

27. கரம் = கை
நாம் இரு கரங்கள் கூப்பி இறைவனை மனமுருக வணங்க வேண்டும்.

28. காரம் = உறைப்பு


மிளகாய்ச் சாந்து அதிகமாக சேர்க்கப்பட்ட குழம்பு மிகவும் காரமாக
இருந்தது.

29. கரை = நீர் நிலையின் எல்லை / ஆற்று ஓரம்


பாலன் கடலின் கரை ஓரத்தில் அமர்ந்து அழகான மணல் வடு

கட்டினான்.

30. காரை = சுண்ணாம்புச் சாந்து


கொத்தனார்கள் அவ்வட்டின்
ீ தூண் உறுதியாக இருப்பதற்குக்
காரையைப் பயன்படுத்தினர்.

31. கல் = படி / பாறை


அந்தச் சிறுவன் கல்லைக் கவணில் வைத்து அப்பறவையைக்
குறிவைத்து அடித்தான்.

32. கால் = நடக்க, ஓடச் செய்யும் உடலுறுப்பு / நான்கில் ஒரு பகுதி


அந்த நாட்டியமணி கால்களில் சலங்கைகளை அணிந்து நாட்டியம்
ஆடினாள்.

33. கலம் = பாத்திரம் / கப்பல்


கொதித்த தண்ண ீரை என் அம்மா கலத்தில் ஊற்றி ஆற வைத்தார்.

34. காலம் = நேரம் / பருவம்


அம்முதியவர் தமது இறுதி காலத்தை முதியோர் இல்லத்திலேயே
கழித்தார்.

35. கலை = குலைத்தல் / அழித்தல் / கல்வி


அறுபத்து நான்கு கலைகளுள் பரதமும் ஒன்று.

36. காலை = விடியற்காலை


காலையில் சூரியன் தோன்றியவுடன் பனி மெல்ல மறையத்
தொடங்கியது.

37. கவி = பாட்டு / செய்யுள்


பாரதியார் சமூகத்திற்குக் கருத்துள்ள பல கவிகளை இயற்றினார்.

38. காவி = பழுப்பு நிறம்


முனிவர்களும் குருமார்களும் பெரும்பாலும் காவி உடையில்
காட்சியளிப்பர்.

39. களி = மகிழ்ச்சி


நாங்கள் கேளிக்கை மையத்தில் கோமாளிகள் செய்த வித்தைகளைக்
கண்டு களித்தோம்.

40. காளி = துர்கை தெய்வம்


ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையன்றும் முத்து கோயிலுக்குச் சென்று
காளியை வணங்குவான்.

41. குகை = மலைத் துவாரம்


ஆதிகால மனிதர்கள் கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக வாழ
குகையைத் தங்களின் இருப்பிடமாக தேர்ந்தெடுத்தனர்.

42. கூகை = ஆந்தை


இரவு நேரத்தில் கூகைகள் அலறின.

43. கிரி = மலை


முருக பெருமானின் திருத்தலங்கள் பொதுவாக கிரியில்தான்
அமைந்திருக்கும்.

44. கீ ரி = கீ ரிப்பிள்ளை
கீ ரி பாம்பை சண்டையிட்டு வென்றது.

45. கனல் = நெருப்பு


என் அம்மா போகி பண்டிகையின் போது பழைய பொருட்களைக்
கனலில் இட்டு எறித்தார்.

46. கானல் = கடற்கரை / சோலை / மாயை


அச்சிறுவன் கானல் ஓரத்தில் மணல் வடு
ீ கட்டி விளையாடினான்.

47. கனம் = பளு / பெருமை


என் அப்பா கனமான இரும்புப் பெட்டியைத் தூக்குவதற்குச்
சிரமப்பட்டார்.

48. கானம் = இசைப்பாட்டு


அந்தப் பாடகர் இசை நிகழ்ச்சியில் பல இனிமையான கானங்களைப்
பாடி அனைவரின் மனதைக் கவர்ந்தார்.

49. கனகம் = தங்கம் / பொன்


அந்தப் பொற்கொள்ளர் கனகங்களைக் கொண்டு விலையுயர்ந்த
ஆபரணங்களைத் தயாரித்தார்.

50. கானகம் = காடு


அந்தக் குத்தகையாளர்கள் நெடுஞ்சாலையை அமைப்பதற்காக
கானகத்தை அழித்தனர்.

51. கற்று = படித்து


ஆசிரியர் கற்றுக் கொடுத்த பாடத்தை மாணவர்கள் கவனமாகப்
படித்தனர்.

52. காற்று = வாயு


பலத்த காற்றால் வட்டின்
ீ மேல் சாய்ந்த தென்னைமரம் கூரையைச்
சேதப்படுத்தியது.

53. களை = பயிர்களுக்கிடையே வளரும் புல் / நீக்கு


பயிர்களுக்கிடையே வளர்ந்திருந்த களைகளை விவசாயி பிடுங்கினார்.

54. காளை = எருது / இளம் பருவ ஆண் மகன்


இரத ஊர்வலத்தின் போது காளைகள் வெள்ளி இரதத்தை இழுத்துச்
செல்லும்.

55. குட்டி = விலங்கின் பிள்ளை


வெளவால் மட்டும்தான் பறவை இனத்திலேயே குட்டி போட்டுப்
பாலூட்டும்.

56. கூட்டி = சேர்த்து / துடைப்பத்தினால் பெருக்கி


என் அம்மா காய்ந்த இலைகளைத் துடைப்பத்தால் கூட்டினார்.

57. குட்டு = கை முட்டியால் தலையில் இடித்தல் / இரகசியம்


நான் விநாயகரைத் தரிசனம் செய்யும் போது என் இரு கைகாளாலும்
தலையைக் குட்டிக் கொள்வேன்.

58. கூட்டு = நட்பு / துடைப்பத்தினால் பெருக்கி


நாங்கள் கூட்டாகச் சேர்ந்து துப்புரவுப்பணியை மேற்கொண்டோம்.

ஆக்கம்.
கமூண்டிங் தமிழ்ப்பள்ளி

You might also like