You are on page 1of 7

ஹாய் மக்களே!!!!

எனது 2 வது ud உடன் வந்துட்டேன் பிழை இருந்தால் மன்னித்து


குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி உங்களின் கருத்துக்களை
தெரியப்படுத்துமாறுக் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி

உங்கள்,

Nesha

புன்னகை மொட்டு 2

அஷ்வின் தன் பி யம் டபுள்யூ காரில் சிக்னலில் நின்றுக் கொண்டு இருந்தான்.


காரின் ப்ளயரில் என்னமோ ஏதோ பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..


வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..


வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..


ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..


அண்டி அகலுது வழியில்..
சிந்திச் சிதறுது விழியில்!!
என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
றெக்கை விரிக்குது கனவில்..
விட்டுப் பறக்குது தொலைவில்!!

தனக்கு பிடித்த வரிகளான

நீயும் நானும் யந்திரமா?


யாரோ செய்யும் மந்திரமா?
பூவே..

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்..


பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்..

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..


அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்!

கேட்டுக்கொண்டு சாலையில் பார்வையிட்டான் அஷ்வின். அப்போது அவன்


கண்டக்காட்சியில் முகம் சுனுங்க ச்ச டீசென்ஸியே தெரியாத ஜென்மங்க என்று
திட்டிக்கொண்டு பார்வையை திருப்ப பச்சையும் விழுந்தது. அதே கோபத்தோடு
அவன் கையில் கார் சீறிப்பாய்ந்து. தன் முதலாளியின் கார் சாலையில்
வரும்போதே கவனித்துவிட்ட காவலாளி அதன் வேகத்தை வைத்தே
முதலாளியின் மனநிலையை அறிந்துக்கொண்டார். பிறகு அவன் தந்தையின்
விசுவாசி அல்லவா. பின்ன இவனின் குடும்பத்தின் வளர்ச்சிக்கு காரணம்
அவரல்லவோ. பெரிய மகனை படிக்க வைத்து பெங்குலுருவில் தனது
கம்பெனியில் வேலையும் போட்டுக்கொடுத்து, மகளின் திருமணத்தையும்
முடித்து, தருதலையாக சுற்றி திரிந்த இளயமகனுக்கும் வாட்ச் மேன்
வேலைக்கொடுத்து தான் செய்ய வேண்டிய செய்ய முடியாத குடும்ப
பொறுப்புகளை நல்ல உள்ளத்தோடும் கருணையோடும் செய்தவர் அல்லவா.
டேய் கொமாரு ஐயா கோபமா வராரு சீக்கிரம் கதவ தொறப்போம் வா என்று
அழைத்தார் அந்த விசுவாசி குழந்தையப்பன். கார் கம்பெனியின் வாயிலில் படு
வேகமாக நுழைந்தது. காரை விட்டு இறங்கி புயல் வேகத்தில் லிப்ட்டில்
புகுந்தான். வேகமாக பத்து என்ற பொத்தானை அழுத்திவிட்டு
பொறுமையின்றி நின்றுக்கொண்டான். லிப்ட் பத்தாம் தலத்தில் நின்றவுடன்
கோபமாக வெளியே வந்து நடக்க ஒருவர் மேல் மோதி நின்றான். ஹே ஹே
பார்த்து டா என்ன இவ்வளவு அவசரம் என்ற குரலில் சற்று
பொறுமையானான். தன் நண்பன் சாய் சரண் குரலில் சற்று நிதானித்து
ஒன்னும் இல்ல டா ஜஸ்ட் ஸம் அன்வான்டெட் டென்ஷன் என்றான்
அஷ்வின். நீயே அன்வான்டெட் னு சொல்லுற தன் ஒய் டென்ஷன் மேன்
ச்சியர் அப் என்றான் சரண். ம்ம்ம் எப், கம் டா லெட்ஸ் கோ என்று
சொல்லிக்கொண்டு தனது அறைக்கு சென்றான் அஷ்வின். விஜய அஸ்வின்
எம்பிஏ சேர்மன்/எம்டி வாசகம் அவனை வரவேற்றது கதவை தள்ளிக்கொண்டு
உள்ளே சென்றான். அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து
தண்ணர்ீ பாட்டிலை எடுத்து வந்து தன் உயிர் நண்பனுக்குக் கொடுத்தான்
சரண். தன் நண்பன் நீட்டிய பாட்டிலைப் பெற்றுக்கொண்டு தேங்க்ஸ் டா ஐ
நீடெட் திஸ் என்று சிறு முறுவலித்துவிட்டு நீ ரைக் குடித்தான் அஷ்வின்.
நண்பனின் சிறு தேவையைக்கூட அறிந்து நடக்கும் நண்பன் அமையவும்
கொடுத்துவைக்க வேண்டும் அப்படி ஒரு கொடுப்பினை அஷ்வினுக்கு கடவுள்
தாராளமாக வழங்கியிருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் அஷ்வின் கோபம்
கொண்டாலும். அவனிடம் தன்மையும், மென்மையையும், பாசத்தையும்,
நட்பையையும், மட்டும் தருவான் சரண். அவனுடனான நட்பின் ஆழம்
அவ்வாறானதாகும். அது மட்டும் இல்லாமல் அவனின் பாசம் கோபமாகவும்
கொடுஞ்சொலாகவும் தான் அதிகம் வெளிப்படும் என்ற உண்மையை
அறிந்தவன் சரண் மட்டுமே. இந்த உண்மையை தெரிந்தும் சொல்லாமல்
விட்டதினால் தன் நண்பனின் வாழ்வில் தன்னையும் அறியாமல் பிழை
செய்ய போகிறான் என்று அவன் அறியான்.

அட இந்த கலவரத்தில் சரணை பற்றி சொல்ல மறந்துட்டேன்


மன்னிக்கவேண்டுகிறேன் மக்களே. இதோ… சாய் சரண் 29 வயது
பள்ளிப்பருவத்திலிருந்தே அஷ்வினின் நண்பன் சிறுவயதினிலேயே
பெற்றோரை ஒரு விபத்தில் இழந்தவன். தன் தந்தை வழி தாத்தா
சுப்ரமணியனால் வளர்க்கப்பட்டவன். சற்று வசதியுடையவன் தான். கோவை
கணபதி புதூரில் வடும்,
ீ தாத்தாவின் சில சொத்துக்களும் உள்ளன. கல்லூரி
இறுதியாண்டில் தாத்தாவும் காலமாக அஷ்வின் அவனை தனித்துவிடாமல்
தன்னுடனே இருத்திக்கொண்டான். அதன்படி மேற்படிப்புக்கும், படித்து
முடித்தவுடன் தான் துடங்கிய வேளையிலும் தன்னுடனே
இருத்திக்கொண்டான். நண்பனே ஆனாலும் தன் சுயமரியாதையை
காப்பாற்றிக்கொள்ளும் வகையில் வெறும் ஒர்கிங் பாட்னராக இருக்க மட்டும்
செய்துக்கொண்டு அதற்கு நியாயமான லாபப்பங்கை மட்டும் பிரித்து
ஒப்பந்தம்மிட்டுக் கொண்டான் இந்த ஏயஸ் நிர்வனத்தின்
செகரட்டரி/அட்வைஸர் சரண். நண்பனின் துணையுடனும் தனது நேர்மையான
கடின உழைப்பாலும் இன்று மேலும் நல்ல நிலையில் இருக்கிறான். ரொம்ப
நல்லவன் எதிலும் தெளிவான பார்வையும் அறிந்து ஆராந்து செய்யும் குணம்
கொண்டவன். கலகலப்பும் மிக்கவன்.

தேங்க்ஸ் டா என்று சொல்லிக்கொண்டு பாட்டிலை டேபிள் மேல்


வைத்துவிட்டு சிறு முறுவலுடன் குட் மார்னிங் டா மச்சி என்றான் அஷ்வின்.
சரண் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏன்டா என்றான். அஷ்வின் -
என்ன டா. சரண் - இல்ல இவ்ளோ சீக்கிரம் சொல்லிட்டாயே நாளைக்கு
சொல்லி இருந்தா இந்த குட் மார்னிங்க சேவ் பண்ணி இருக்கலாம்னு
யோசித்தேன். அதுக்கு தான் ஆஸ் எ அட்வைஸரா சொல்லலாமானு
பார்த்தேன் என்றான். தனது தவறை உணர்ந்தாளும் ஸாரி கேட்க மாட்டானே
நாம் அஷ்வின் சோ விடு டா அதுவா முக்கியம் க்லைன்ட்ஸ்
வந்துட்டாங்களா அப்பா ஷார்ப் லவன் க்கு வந்துடுவார் பபெர்ஸ் எல்லாம்
ரெடி தானே என்றுக் கேட்டான். நண்பனின் குணம் தெரிந்ததால் அவனும் தன்
பேச்சை மீ ட்டிங் தொடர்பாக மாற்றினான். சரி டா ப்ராஜெக்ட்
ப்ரெசென்ட்டேஷன் ரெடி டா ஒரு முறை நீ எல்லாம் பார்த்துட்டாய் என்றால்
ஓகே ஏன்னா மீ ட்டிங் ல எந்த கன்பியூசனும் வரக்கூடாது பாரு அதனால்
தான் சொல்றேன் என்றான் சரண். ஓகேடா ஐ ஆல்ரெடி டன் இட் பட் ஸ்டில்
ஃபார் யுவர் சாடிஸ்பாக்ஷன் ஐ வில் கோ த்ரௌ இட் அகைன் என்று
முறுவலுடன் கூறினான் அஷ்வின். சரி டா ஐ அம் மூவிங் டோன்ட்
போர்கேட் டு செக் தி டாக்குமெண்ட்ஸ் டூ என்றான் சரண்.
அம்மா டைம் ஆயிடுச்சுமா சீக்கிரம் மா என்று உணவு மேஜையில்
ஆர்ப்பாட்டம் செய்தவள் சூடான இட்லிகளை சுவாஹா செய்துக்கொண்டு
இருந்தால். அதில் தாயின் அர்ச்சனையும் சேர்ந்தது. எத்தனை தடவை
சொன்னாலும் நேரத்திற்கு எழுவதில்லை அப்புறம் டைம் ஆயிடுச்சுனு
என்னை படுத்த வேண்டியது என்றார் தாய் கற்பகம். லக்ஷு நான் எழுந்து
ரெடி ஆனேன் தான் பட் அப்புறம் தான் தெரிஞ்சுது அது கனவு னு என்றாள்
அந்த வடு
ீ சுட்டி திவ்யா ஹர்ஷிதா. மகளின் பேச்சைக் கேட்டு, போதும்
சிரிப்பே வரல போ போயி இன்டர்வியூ ற்கு கிளம்பு டைம் ஆகுது என்று
சொல்லி பெண்ணை கிளப்பினார் பொறுப்பான தாய் கற்பகம். லட்சுமி அவ
சின்ன பொண்ணு தானே மா ஏன் திட்டுற விடு வேலை விஷயமா வேற
போற பாரு அவளை வாழ்த்தித்தான் அனுப்பேன் மா என்றார் தந்தை
வேலுசாமி அப்படி சொல்லுங்க வேலு என்று துள்ளி தந்தையின் அருகில்
அமர்ந்து செல்லம் கொஞ்சினாள் திவ்யா தாய் தந்தையிடம் விடைபெற்று
தன் காரில் பயணமானாள். என்ன நீங்க அவ என்ன சின்ன பொண்ணா
இன்னும் செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்கீ ங்க. நீக்க செல்லம் கொடுத்துதான்
அவளை இப்படி கெடுத்து வெச்சியிருக்கிங்க. நான் சொல்லுறதை அவ
கேட்ட்குறதே இல்ல என்று முறைத்துக்கொண்டார் லட்சுமி. அதை கேட்டு
சிரித்த வேலு அவ எப்பொழுதும் எனக்கு சின்னபொண்ணுதான் என்றார். சரி
மா நான் ஆபீஸ் கு கெளம்புறேன் லட்சுமி லுன்ச்சுக்கு வட்டுக்கு

வந்துருவேன் என்று எழுந்து சென்றார்.

ஈசிஆர் ரோட்டில் இருக்கும் பெரிய மென்பொருள் நிறுவனம் பார்க்கிங்கில்


ஸ்கூட்டியை நிறுத்தினாள் மலர். பின்பக்கத்திலிருந்து இறங்கிய நிருபா
என்னடி அவள இன்னும் காணொம் என்றாள். அது தாண்டி நானும்
யோசிக்கிறேன். இருடி அவளுக்கு போன் பண்ணி கேக்குறேன் என்றாள் மலர்.
சீக்கிரம் கேளுடி டைம் ஆகுது என்றாள் நிருபா. மலர் கேட்ப்பதுக்குள் நாம்
நிருபாவை பற்றி பார்த்து விடுவோம் வாங்க.

நிருபா 23 வயது MBA படித்து முடித்து 2 மாதம் ஆகிறது. அப்பா


ராமகிருஷ்ணன், அம்மா அம்பிகா, அண்ணண் ப்ரணவ்கிரி, அப்பா – தாசில்தார்,
அம்மா – ஹௌஸ்வைப், அண்ணண் எம்பிஏ முடித்துவிட்டு ஹோம்
ஆஃப்லையன்சஸ் கடையை சொந்தமாக வைத்து வெற்றிகரமாக நடத்தி
வருகிறான். அப்பர் மிடில் கிளாஸ் வர்கத்தை சேர்ந்த குடும்பம். நிருபா
எதையும் எளிதாக நம்பும் குணம் கொண்டவள் இக்குணமே தோழிகளின்
வாழ்க்கையில் சிக்கல் உண்டாக்க போகிறது என்று அவள் அறியாள்.
ப்ரணவ்கிரி அழகும் அறிவும் கொண்டவன். மிகவும் நல்லவன். தன் பேச்சின்
பலம் கொண்டே எளிதில் மற்றவர்களை கையாளுபவன். மலர், நிருபா,
திவ்யா, மூவரும் பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல இணைபிரியாத
தோழிகள். ஒரே கல்லூரியில் பீஈ படித்துவிட்ட மூவருக்கும் வெவ்வேறு
கல்லூரிகளில் இடம் கிடைத்தும் செல்லாமல் மூவரும் வேறு ஒரு
கல்லூரியை தேர்ந்து எடுத்து படித்து முடித்தனர். இன்று ஒரே கம்பனிக்கு
இன்டெர்வியூற்கு வந்துள்ளனர் வெவ்வேறு பணியிடங்களுக்காக. சரி
வாருங்கள் உங்களுடன் நானும் வருகிறேன் நடப்பிற்கு செல்வோம்.
திவ்யாவும் உள்ளே வந்ததை பார்த்து கையசைத்த நிருபா, மலர்யிடம்
இதைக்கூறினாள். அதை கண்ட மலர் கைபேசியை பையில் வைத்துவிட்டு
தானும் கையசைத்தாள். இவர்ளை நோக்கி வந்த திவ்யா. தானும்
கையசைத்து, சாரிடி லேட் ஆயிடுச்சு என்றாள். சரி டைம் ஆயிடுச்சு வாங்கடி
போகலாம் என்றாள் மலர். மூவரும் தங்கள் வழியில் சென்றனர்
(வாழ்க்கையிலும்).

காலை 12.30 வெற்றிகரமாக மீ ட்டிங்கை முடித்துவிட்டு தந்தையின் ஆசியும்


நண்பனின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு தன் அறைக்கு வந்தான்
அஷ்வின். தன் வெற்றியின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல்
காலையில் கண்ட காட்சி அவன் மனதில் ஒரு கவலையை ஆழ்த்தியது.
அவன் இன்னும் மாறவில்லையா ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம்
நடக்கிறது யாரை நான் பார்க்கக் கூடாது என்று இருந்தேனோ அவனையே
பார்த்தேனே என்று கோபத்தோடு சிந்தித்துக்கொண்டு இருந்தான். அவனை
நினைத்தாலே கண்ணென்று தோன்றும் கோபத்தை கட்டுக்குள் வைக்க
முடியவில்லையே என்று தவித்தான். நான் இன்னும் அவனை நினைத்து
நொடியொரு பொழுது தவிக்கிறேனே அவன் என்னை நினைத்துக்கூட
பார்ப்பானா என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். எதற்கும் இனி அவனை
நினைக்க கூடாது அஷ்வின், நீ அஷ்வின் என்று அவன் உணரும்படி செய்
என்று தனக்குத் தானே அறிவுறுத்திக்கொண்டான். அதன் பிறகு அவன் சற்று
தேறி வேளையில் மூழிகிப்போனான்.

புன்னகை பூக்கும்…………

You might also like