You are on page 1of 3

பரவல் அடவு

பரத நாட்டிய அடவுகள் நின்று ஆடுதல், அமர்ந்து ஆடுதல், நகர்ந்து ஆடுதல்


என்று மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.

அப்படி நின்று ஆடுதல் வகையில் அரைமண்டி நிலையில் காலை தட்டி


ஆடுவது தட்டடவு என்றும் , காலை நாட்டி ஆடுவது நாட்டடவு
என்றும் நாம் பார்த்தோம்.

இப்பொழுது நாம் பார்க்க போகிற அடவு பரவல் அடவு.

பரவல் அடவு நகர்ந்து ஆடுதல் வகையை சார்ந்தது.

அதாவது ஒரு இடத்திலிருந்து பக்கவாட்டிலோ அல்லது முன்


பின்னாகவோ நகர்ந்து ஆடுவதால் இது பரவல் அடவு என
அழைக்கப்படுகிறது. அதாவது பரவி ஆடுவதால் பரவல் அடவு என
பெயர்பெற்றது.

பரவல் அடவு எவ்வாறு ஆடப்படுகிறது?

பரவல் அடவு முதல் அடியை ஒரு இடத்தில் அடித்து அடுத்த அடியை


பக்கவாட்டிலோ அல்லது முன் பின்னாகவோ அடித்து அடவின் இறுதி
அடியை பழைய நிலையிலே அடித்து ஆடப்படுகிறது.

இதற்க்கு எவ்வாறு சொற்கட்டுப் பயன்படுத்தப்படுகிறது. ஆமாம், பரவல்


அடவிற்கு தா தை தை தா | தித் தை தை தா என்ற சொற்கட்டு
பயன்படுத்தப்படுகிறது.

குதித்த மெட்டடவு

இந்த அடவு பெயரிலே , இந்த அடவு எவ்வாறு ஆடப்படுகிறது என்பது


நாம் புரிந்துகொள்ள முடியும்.

முதலில் இரண்டு கால்களையும் அரைமண்டி நிலையில் வைத்து குதித்து


ஸ்வதிக நிலையில் காலை தரையில் ஊன்ற வேண்டும்.
அடுத்து கால்களை அடித்து அரைமண்டி நிலைக்கு வராமல் மென்மையாக
கால்களை அழுத்தி அரைமண்டி நிலைக்கு இரு கால்களையும் கொண்டு
வர வேண்டும்.

முதல் அடியை நன்கு அழுத்தத்துடன் குதித்து அடுத்த அடியை


மென்மையாக மெட்டி அரை மண்டல நிலைக்கு கொண்டு வருவதால் இது
குதித்த மெட்டடவு என்று அழைக்கப்படுகிறது.

இதன் சொற்கட்டு தை ஹா தை ஹீ என்பதாகும். {இந்த அடவு பொதுவாக


சதுஸ்ர ஜாதியிலே ஆடப்படுவது வழக்கம்.}

தட்டி மெட்டடவு

தட்டி மெட்டடவு எவ்வாறு ஆடப்படுகிறது?

பரத நாட்டிய அடவுகளில் முக்கிய அடவுகளில் ஒன்றாக கருதப்படும்


அடவு இந்த தட்டிமெட்டடவு.

அரைமண்டி நிலையில் ஒரு காலை அழுத்தமுடன் தட்டியும் அடுத்த


காலை மென்மையாக மெட்டி தட்டுவதால் இது தட்டி மெட்டடவு என
அழைக்கப்படுகிறது.

தட்டி மெட்டடவு பொதுவாக பஞ்ச ஜாதி அடிப்படையில் ஆடப்படுகிறது.

பஞ்ச ஜாதி என்றால் என்ன? ஒரு தாள அமைப்பின் கால அளவு மற்றும்
அதன் வேகத்தை குறித்து அது ஐந்து ஜாதிகளாக பிரிக்கப்படுகிறது. இதுவே
பஞ்ச ஜாதி எனப்படும்.

பஞ்ச ஜாதி என்னனென்ன?

திஸ்ரம்

சதுஸ்ரம்

கண்டம்

மிஸ்ரம்
சங்கீ ர்ணம்.

திஸ்ரம் கால அளவு - மூன்று அக்ஷரம்.


அதன் சொற்கட்டு - த கி ட

சதுஸ்ரம் கால அளவு - நான்கு அக்ஷரம்.


அதன் சொற்கட்டு - த க தி மி

கண்டம் கால அளவு - ஐந்து அக்ஷரம்.


அதன் சொற்கட்டு - த க த கி ட

மிஸ்ரம் கால அளவு - ஏழு அக்ஷரம்.


அதன் சொற்கட்டு - த கி ட தக தி மி (அ) தக தி மி த கி ட

சங்கீ ர்ணம் கால அளவு - ஒன்பது அக்ஷரம்.


அதன் சொற்கட்டு - த க தி மி த க த கி ட

எடுத்துக்காட்டாக திஸ்ர ஜாதி தட்டி மெட்டில் முதல் அடியை வலது


காலால் அழுத்தமுடன் தட்டி இரண்டாவது அடியை இடது காலால்
ஸ்வஸ்த்திக நிலையில் அழுத்தி ஊன்றி மூன்றாவது அடியை இடது
காலின் பாத நுனியை மென்மையாக தரையில் அழுத்தி வைத்து
ஆடப்படுகிறது.

You might also like