You are on page 1of 1

சமகால சிக்கல் என்பது நடைமுறையில் சமுதாயத்திற்க்கு கேடு விளைவித்து நெடுங்காலமாக தீர்வற்ற

ஒரு சிக்கலை குறிக்கின்றது. தற்போதைய சூழலில் குடும்ப வன்முறை சார்ந்த சிக்கல்கள் நாளுக்கு நாள்
அதிகரித்தும் பரவலாக பேசப்பட்டும் வருகின்றன. ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காலத்தில்தான்
குடும்ப வன்முறை சார்ந்த புகார்கள் அதிகம் பெறப்பட்டுள்ளதை நமது நாட்டின் குடும்பத்துறை
அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த சிக்கலால் சீனர், மலாய்க்காரர், தமிழர்கள் உட்பட பெண்கள்
மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இம்மாதிரியான சமுதாய சிக்கல்களை களைவதற்கு
அரசு பல சட்டங்களை முன்மொழிந்தாலும் குடும்ப வன்முறை தொடர்பான பிரச்சனைகளுக்கு
முற்றான தீர்வு வந்தபாடில்லை. உடலாளும் உள்ளத்தாளும் காயப்பட்ட பெண்கள் தங்களது முகநூல்
பக்கங்களில் தங்களின் கண்ணீர் கதைகளை பகிர்ந்து கொள்வதை பார்க்கும்பொழுது குடும்ப வன்முறை
தொடர்பான சிக்கல் இன்னும் வளர்ந்துகொண்டுதான் வருகிறது என்பதை அறிய முடிகின்றது.
இதனால்தன் தற்போது விவாகரத்து தொடர்பான வழக்குகளும் நாட்டில் அதிகரித்து வருகின்றன.
சமுதாய காரணிகளை அடிப்படையாக கொண்டே இம்மாதிரியான வன்கொடுமைகள் வளர்ந்த
வண்ணம் உள்ளன. குடும்ப பின்னனி, மதுப்பழக்கம், மன அழுத்தம், குடும்ப பொருளாதாரம்,
ஒழுக்கமின்மை இன்னும் பல காரணங்கள் குடும்ப வன்முறை சம்பவங்களுக்கு முக்கிய காரணியாக
விளங்குகின்றன.

You might also like