You are on page 1of 3

செல்லப்பன் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து

வந்தான்.அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.ரவி என்று பெயரிட்டு மிகவும்


செல்லமாக வளர்த்து வந்தான்.அவனுக்கு பத்து வயதுதான் இருக்கும்.
செல்லப்பனுக்கு தன மகன் மீ து கொள்ளை பிரியம்.தினமும் அருகில்
இருக்கும் ரொட்டிக் கடையில் ரொட்டி வாங்கிக்கொடுத்து அவன் தின்ற
பிறகே வேலைக்குச் செல்வான். ரவியும் அப்பாவின் மடியில் அமர்ந்து
கொண்டு ரொட்டி தின்றுவிட்டுப் பள்ளிக்குச் செல்வான்.

ஒருநாள் தொழிற்சாலைக்குச் சென்ற செல்லப்பன் விபத்தில்


அடிபட்டு இறந்துவிட்டார். அவன் அம்மாவோ ராணிமாதிரி வாழ்ந்தவள்
இப்போது கணவன் செய்த கூலிவேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.
சிலநாட்கள் வரை தன கணவன் செய்தது போல் மகனுக்கு ரொட்டி
வாங்கிக் கொடுத்தாள். அவளுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டதால்
வேலைக்குச் செல்ல முடியவில்லை.அதனால் ரொட்டி வாங்கிக் கொடுக்க
இயலவில்லை.ஆனால் சிறுவனான ரவிக்கு இதெல்லாம் புரியாது. அவன்
தினமும் ரொட்டிக் கடைமுன் சென்று நின்று அழுதுகொண்டு இருப்பான்.

ஒருநாள் அந்த ரொட்டிக் கடை முதலாளி அவனிடம் ஒரு


ரொட்டியைக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு பெற்றுக்
கொண்டான்.மறுநாளும் அங்கு வந்து நின்றான்.அந்த முதலாளி அவன்
கையைப் பிடித்து அருகே அமர்த்திக் கொண்டார்.
"தம்பி ரவி, நான் தினமும் உனக்கு ரொட்டி தாரேன்.தின்னுட்டு நீ
பள்ளிக்கூடம் போகணும்.அங்கே உனக்கு மதியச் சாப்பாடு போடுறாங்க
இல்லே அதைச் சாப்பிட்டுட்டு நல்லாப் படிக்கோணும். உனக்குப் பதினெட்டு
வயசானப்புறம் நீ ப்ளஸ் டூ முடிச்சப்புறம் என் கடையிலேயே வேலை
செய்யணும்.செய்வியா?"என்றார். தினமும் ரொட்டி கிடைக்கும் என்ற
மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான் ரவி.
ரொட்டியை வாங்கித் தின்றுவிட்டு பரபரப்புடன் வட்டுக்குள்

நுழைந்தான். தன் நீலக் கால்சட்டையையும் வெள்ளைச் சட்டையையும்
தேடிப்  போட்டுக் கொண்டான். நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு
கையால் தலையை ஒதுக்கிக் கொண்டான்.மூலையில் கிடந்த தன
பையையும் புத்தகங்களையும்  தேடி எடுத்துக் கொண்டவன் 'அம்மா, நான்
இஸ்கூலுக்குப் போய்வாறேன்"  என்றபடியே ஓடினான். அவன் செயலைப்
பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மாவுக்கு மனம் மகிழ்ச்சியடைந்தது.
வருடங்கள் செல்லச் செல்ல ரவிக்குக் கல்வி அறிவோடு நல்ல
ஒழுக்கமும் வளர்ந்தது.இப்போது அவன் பத்தாவது படிக்கும் மாணவன்.
மாலைநேரத்தில் பள்ளிவிட்டபின் ரொட்டிக்கடை முதலாளிக்கு உதவியாக
இருக்கத் தொடங்கினான்.ஏனென்றால் தினமு ஓசியில் ரொட்டி வாங்கித் தின்ன
அவன் மனம் இடம் கொடுக்க வில்ல.அவன் தன்மானத்தைப் பார்த்த அந்த
முதலாளிக்கு அவன்மீ து மிகுந்த மதிப்பு  ஏற்பட்டது.
நல்ல முறையில் பத்தாம் வகுப்புத் தேறிய ரவிக்கு அந்த முதலாளி
பாராட்டுத் தெரிவித்ததோடு மேலே படிக்க உதவுவதாகக் கூறினார்.ஆனால் தன
அம்மாவை நல்ல முறையில் காப்பாற்றவேண்டுமானால் வேலை செய்துதான்
ஆகவேண்டும் என்ற ரவி அந்தக் கடையிலேயே வேலை செய்வதாகக்
கூறிவிட்டான்.
அதை ஏற்றுக் கொண்ட கடை முதலாளி அவனுக்கு ஒரு சிறிய ரொட்டிக்
கடை வைத்துக் கொடுத்தார். ஐந்தாண்டுகளில் ரவி நல்ல நிலைக்கு
உயர்ந்தான்.அவனது அயராத உழைப்பும் நாணயமும்தான் அவனை உயர்த்தின.
அன்று ரவியின் கடை திறந்த ஐந்தாம் ஆண்டு விழா.கடை அலங்கரிக்கப்பட்டு
வந்தவர்களுக்கு அமர இருக்கைகள் போடப்பட்டிருந்தன தனக்கு உதவி செய்து
தன்னை உயர்த்திய முதலாளியை வணங்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை
செய்தான் ரவி.
மிகவும் கூச்சத்துடன் அந்த முதலாளி,"ரவி இதென்னப்பா, எனக்குப் போயி
மாலையெல்லாம்..." என்று கூறினார். ரவியோ அவர் கால்களில் விழுந்து
வணங்கினான்.
"ஐயா, நீங்க இல்லேன்னா இன்னைக்கி நான் இல்லே."
"என்னப்பா ரவி,உன்னோட உழைப்பாலே நீ முன்னுக்கு வந்தே.என்னை எதுக்கு
இப்படி உயர்த்தி வைக்கிறே?"
"ஐயா, நான் சின்னப் பையனா இருந்தப்போ நீங்க ரொட்டித் துண்டைக்
குடுத்து பள்ளிக்கூடம் போன்னு  சொன்னதாலே நான் படிச்சேன்.
நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.உங்ககிட்டேருந்து உழைப்பையும்
கத்துகிட்டேன்.நீங்க என்னை அன்னிக்கி விரட்டி விட்டிருந்தா,ஒரு
ரொட்டித்துண்டாலே நான் திருடனா ஆகியிருப்பேன்.இன்னைக்கி நான் உயர்ந்து
நிக்க நீங்கதான் ஐயா காரணம்.""என்னப்பா இது, ஒரு சின்ன உதவி செய்ததையா
நீ இவ்வளவு புகழ்கிறே?"
"ஐயா, 
                   "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் 
                     ஞாலத்தின் மாணப் பெரிது."     அப்படீன்னு
படிச்சிருகேனய்யா. என்னுடைய சின்ன வயசுல நீங்க செஞ்ச உதவி இந்த
உலகத்தை விடப் பெருசுங்கய்யா."என்று கண்களில் நன்றிக் கண்ணருடன்

பேசினான் ரவி.
ரவியின் நன்றி பாராட்டும் பண்பையும் அவன் முதலாளியின் தகுந்த காலத்தில்
உதவி செய்யும் குணத்தையும் மறவாமல் அவர்களைப் போல வாழ்ந்தால்
வாழ்க்கை சிறப்பாக அமையுமல்லவா?

You might also like